| A | B | C | D | E | F | G | H | I | J | K | L | M | N | O | P | Q | R | S | T | U | V | W | X | Y | Z | AA | AB | AC | AD | AE | AF | AG | AH | |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | Category | No | Yogi Shuddhananda Reference | G.U.Pope Reference | Kalaingar Reference | முனைவர் ப. பாண்டியராஜா | Satguru Sivaya Subramuniyaswami | Yogi Shuddhananda Commentary | G.U. Pope, Rev. Drew and John Lazarus Translation | G.U. Pope, Rev. Drew and John Lazarus Commentary | Satguru Sivaya Subramuniyaswami | கலைஞர் கருணாநிதி | சாலமன் பாப்பையா | மு. வரதராசனார் | சத்குரு சுப்ரமுனியசாமி | பரிமேலழகர் | மணக்குடவர் | புலியூர்க் கேசிகன் | வ சுப மாணிக்கம் பதவுரை | maalaimalar reference | maalaimalar Commentary | ஞா.தேவநேயப் பாவாணர் | வ.உ.சி. | வீ. முனிசாமி | Dinamalar(Print) | Francis Whyte Ellis | கருத்து | Niraiyurai | Niraiyurai_Kanignan | நீச்சல்காரன் | https://tamilnation.org/literature/kural/kurale6 | |||
2 | கடவுள் வாழ்த்து | 1 | அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு | அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. | அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. | அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு | அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. | A' leads letters; the Ancient Lord Leads and lords the entire world. | A, as its first of letters, every speech maintains; The 'Primal Deity' is First through all the world's domains | As the letter A is the first of all letters, so the eternal God is first in the world. | “A” is the first and source of all the letters. Even so is God Primordial the first and source of all the world. | அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. | எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது. | எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. | "அ" என்பது ஏனை எழுத்துக்களுக்கு முதலும் மூலமும் ஆம். ஆதி பரம்பொருளும் உலகுக்கு முதலும் மூலமும் ஆனவர். | எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.) | எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து. | அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதல்; அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான். | அகரஒலி எல்லா எழுத்துக்கும் முதலாகும்;ஆதிபகவன் உலகுக்கெல்லாம் முதலாவான். | அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. | எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையானது "அ" அதுபோல உலகத்துக்கு முதன்மையானவன் கடவுள். | எழுத்து எல்லாம் அகர முதல - நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக வுடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் முதற்பகவனை முதலாகவுடையது. இது உவமத்தையும் பொருளையும் இணைக்கும் உவமையுருபின்மையால் முதன்மை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குரிய அங்காப்பின்றியும் மகரமெய் ஒலிக்கப் பெறுதலால் 'நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களெல்லாம்' என்று உரைக்கப்பட்டது. பெரும்பான்மை பற்றியென்க. பகவன் என்பது பகுத்துக்காப்பவன் அல்லது எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன் (Dispenser) என்று பொருள்படும் தென் சொல். பகு - பகவு - பகவன். பகு என்னும் வினைமுதல் வடமொழியில் பஜ் (bhaj) என்று திரியும். ஒ. நோ; புகு - புஜ் (bhuj), உகு - யுஜ். பகவன் என்னும் சொல் முதற்காலத்திற் கடவுளையே குறித்தது. ஆயின், பிற்காலத்தார் அதைப் பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் ஆரிய மத முத்திருமேனியர்க்கும் அருகன் புத்தன் என்னும் பிற மதத் தலைவர்க்கும் வழங்கிவிட்டமையால், கடவுளைக் குறிக்க முதல் என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. கடவுள் என்னும் சொல்லும் இங்ஙனமே இழிபடைந்துவிட்டமையால், முதற்கடவுள் என்றும் முழுமுதற்கடவுள் என்றும் அடைகொடுத்துச் சொல்லும் வழக்கை நோக்குக. பகம் (ஆறு) என்னுஞ் சொல்லை மூலமாகக் கொண்டு, பகவன் என்பதற்குச் செல்வம், மறம், புகழ், திரு, ஓதி (ஞானம்), அவாவின்மை என்னும் அறுகுணங்களையுடையவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது. இறைவன் கடவுள் தேவன் என்னும் பிற சொற்கள் இருக்கவும் பகவன் என்னுஞ் சொல்லை யாண்டது, அகரம் என்னும் சொற்கு எதுகையாயிருத்தல் நோக்கியே. ஆதி என்பது வடசொல்; அதாவது வடநாட்டுச்சொல். இதன் விளக்கத்தை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலுட் காண்க. ஆதிபகவன் என்னுந் தொடர்ச்சொல் தமிழியல்பிற் கேற்ப ஆதிப்பகவன் என்று வலிமிக்கும் இருக்கலாம். ஏகாரம் தேற்றம்; ஆதலால் இன்றியமையாததே. இவ்வேகாரத்தை ஈற்றசையாகக் கொண்டு, "கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்." என்னும் இடைக்காடர் பாராட்டு எங்ஙனம் பொருந்தும் என்று புலவர் ஒருவர் வினவ, அதற்கு இராமலிங்க அடிகள் "முதல் தே" எனப் பிரித்தாற் குற்றமென்ன? என்று எதிர் வினவியதாகச் சொல்லப்படுகின்றது. ஏகாரம் ஈற்றசையுமன்று; அடிகள் விடை மிகைப்படக்கூறலாகவும் உவமச் சொல்லிய (வாக்கிய) அமைப்பொடு ஒவ்வாததாகவும் இருத்தலாற் பொருந்துவது மன்று. அகரம் எல்லா எழுத்துக்கட்கும் முதலாகவும், ஏனையுயிரெழுத்துக்களோடு நுண்ணிதாகக் கலந்தும், எல்லா மெய்யெழுத்துக்களையும் இயக்கியும், நிற்றல் போல்; இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராகியும் உயிரற்ற பொருள்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன் என்னும் உண்மை, இம்முதற்குறளால் உணர்த்தப் பெற்றது. உலகம் பலவாதலின், உலகு என்பதைப் பால்பகா அஃறிணைப் பெயராகவும் முதற்று என்பதை வகுப்பொருமைக் குறிப்புவினை முற்றாகவுங் கொள்ளின், உவமத்தின் பன்மை பொருளிற்கும் ஏற்கும். [அருவிலிருந்து உருவாக ஆபவனே ஆதி என்னும் இறைவன்.அவனே ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் ஆதலினால் பகவன் எனப்படுவான்.அருவான இறைநிலையிலிருந்து உருவாகத் தானே ஆதலையுடையவன் ஆதி எனவும் அமையும் ஆதியானவனே பலவாகப் பகுபடும் நிலையில் பகவன் எனப்படுவான். எனவே, ஆதியும் பகவனுமான இறைவனிடத்திலிருந்து உலகங்கள் தோன்றுவன எனலே பொருத்தம்.(மொ.அ.துரை அரங்கனார்-'அன்பு நெறியே தமிழர் நெறி, பக்கம் 205,206) மேற்கண்ட விளக்கம் பொருந்துவதே என்பர் பெரும்புலவர் பேராசிரியர் முனைவர் இரா.சாரங்கபாணி (திருக்குறள் உரைவேற்றுமை - பக்கம்5 - அண்ணாமலைப் பதிப்பு 1989). 'ஆதல்' என்ற தொழி்ற்பெயரடியாகப் பிறந்ததே ஆதி என்ற தமிழ்ச்சொல். செய்தல் - செய்தி; உய்தல்-உய்தி. தோற்றுவிப்பாரின்றித் தானே தோன்றிய இறைவனைத் 'தான் தோன்றி' (சுயம்பு) என்பர்.ஆதி-ஆதன்-ஆதப்பன் என்ற பெயர்கள் செட்டிநாட்டில் பெருவழக்கில் உள்ளன. ஆதி என்பது முதல், மூலம், தொடக்கம், அடிப்படை, எனவும், முதல்வன், முதலி, முன்னவன், மூலவன் எனவும் பொருள்படும் தமிழ்ச் சொல்லே. இச்சொல் 543-ஆம் குறளிலும் ஆளப்பட்டிருத்தல் காண்க.அகராதி (Dictionary) என்பதும் தமிழ்ச்சொல்லே. பகவன் என்பதற்கு,மொ.அ.து.உரைத்தாங்கு ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் என்றோ, தொடக்கத்தில் ஒன்றாக நின்று, காலப்போக்கில் (பல் சமயமாகிப்) பல பெயரில் பகுபட்டவன் என்றோ கொள்ளலாம்: பதிப்பாசிரியர்.] | உலகில் வழங்கிவரும் எழுத்துக்கள் எல்லாம் ஒளிவடிவான 'அகர'மாகிய முதலை உடையன. அதுபோல, உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடையது. | As ranked in every alphabet the first, The self-same vowel stands, so in all worlds Th' eternal God is chief' | கடவுள் இந்த உலகத்தையும் உலக உயிர்களையும் இயக்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது என்றாலும் அக்கடவுள் விளக்கப்பட இயலாதவர். கடவுள் உண்மையை உணர்த்துதற்குப் பல உவமைகள் காணப்பட்டாலும் அவை எவையுமே கடவுளை முழுமையாக அளக்க முடியாது. காலிங்கர் உரையில் கண்டபடி 'உலகமும் உலகிலுள்ள பொருள்களும் இறைவன் கண்ணே விரிந்தன' என்பதே முதற்குறளில் வள்ளுவர் சொல்ல வந்த செய்தியாகும். இறைவனை முதலாகக் கொண்டே இவ்வுலகம் இயங்குகிறது என்றும் கூறுவதால், இப்பாடல் இறைவன் ஒருவன் உளன் என்பதைத் தெளிவாக்கும்; அந்த எல்லையில்லா மெய்ப்பொருளின் முதன்மையும் இச்செய்யுள்ளால் உணர்த்தப்படுகிறது. இவை முதற்குறள் கூறும் கருத்துக்கள். | ஆதிபகவன் என்று இறைமையைப் பொருள்பட உணர்த்தி வள்ளுவர் பாடும் கடவுள் வாழ்த்துப் பா. | மொழிக்கு முதன்மை அகரம்; கடவுள் உலகுக்கு முதல். | |||||||
3 | கடவுள் வாழ்த்து | 2 | கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் | கற்றதனால் ஆய பயன்என்கொல் வால்அறிவன் நல்தாள் தொழாஅர் எனின். | கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். | கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் | கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். | That lore is vain which does not fall At His good feet who knoweth all. | No Fruit have men of all their studied lore, Save they the 'Purely Wise One's' feet adore. | What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ? | What has learning profited a man, if it has not led him to worship the Good Feet of Him who is pure knowledge itself? | தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால்என்ன பயன்? ஒன்றுமில்லை. | தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?. | தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?. | முற்றறிவே வடிவான இறைவனுடைய பாதங்களை வழிபட இட்டுச் செல்லாத கல்வியால் பயனென்ன? | கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது. | மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின். சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர். | தூய அறிவு வடிவமான இறைவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால், அவர் கற்றதனால் உண்டான பயன் யாதுமில்லை. | கற்றதன் பயனென்ன? தூய அறிஞனது நல்ல திருவடியைவணங்கா விட்டால். | கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். | கடவுளின் திருவடிகளை வணங்காதவன் என்ன படித்தும் ஒரு பயனும் இல்லை. | வால் அறிவன் நல்தாள் தொழார் எனின் - தூய அறிவையுடைய இறைவனின் நல்ல திருவடிகளைத் தொழாதவராயின்; கற்றதனால் ஆய பயன் என் - நூல்களைக் கற்றவர்க்கு அக்கல்வியால் உண்டான பயன் யாதாம்? அஃறிணை யிருபாற் பொதுவான எவன் என்னும் வினாப்பெயர் 'என்' என்று தொக்கு இங்கு இன்மை குறித்தது. கொல் என்பது அசைநிலை. தூய அறிவாவது இயற்கையாகவும் முழுநிறைவாகவும் ஐயந்திரிபற்றும் இருப்பது. தமிழக மருந்துகள் பெரும்பாலும் தழையுந் தண்டு மாயிருத்தலின், பிறவிப்பிணிக்கு மருந்தாகும் குறிப்புப்பட இறைவன் திருவடிகளை நற்றாள் என்றார். 'தொழாஅர்' இசை நிறையளபெடை. கல்வியின் சிறந்த பயன் கடவுளை வழிபட்டுப் பேரின்ப வீடு பெறுவதென்பதே பண்டையறிஞர் கொள்கை. "ஆண்டவனுக்கு அஞ்சுவதே அறிவின் தொடக்கம்". என்றார் சாலொமோன் ஓதியார் (ஞானியார்.) "எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும்." என்பது பழஞ் செய்யுள். "கற்பக் கழிமடம் அஃகும் மடமஃகப் புற்கந்தீர்ந் திவ்வுலகிற் கோளுணரும் - கோளுணர்ந்தால் தத்துவ மான நெறிபடரும் அந்நெறியே இப்பால் உலகத் திசைநிறீஇ யுப்பால் உயர்ந்த வுலகம் புகும்." என்பது நாண்மணிக்கடிகை. (27) கடவுளை வணங்காவிடின் கல்வியாற் பயனில்லை என்பது இக்குறட் கருத்து. | எல்லா நூல்களையும் கற்றவனுக்கு அக்கல்வி அறிவால் உண்டான பயன் என்னவென்றால். தூய அறிவினன் - மெய்யுணர்வினன் - ஆகிய இறைவனுடைய நல்ல அடிகளைத் தொழுதல் ஆகும். | What is the fruit that human knowledge gives, If at the feet of Him who is pure knowledge Due reverence be not paid? | தூய அறிவினை உடையவனின் திருவடியைத் தொழார்எனின் கல்வி பெற்றதனால் ஆகிய பயன் என்ன? என்பது இக்குறட்கருத்து. | கல்வி ஆய்ந்தறிய உதவும்; கற்றவன் கடவுள்வாழ்த்துச் செய்தல் அவன் மெய்யுணர்வு பெற வழிப்படுத்தும். | தூய அறிவினனான கடவுளின் நல்ல அடியை ஒருவர் தொழாராயின், அவர்க்குக் கற்றதனால் ஆகும் பயன் என்ன? | |||||||
4 | கடவுள் வாழ்த்து | 3 | மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் | மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். | மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். | மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் நில மிசை நீடு வாழ்வார் | மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். | Long they live on earth who gain The feet of God in florid brain. | His Feet, 'who o'er the full- blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain. | They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds. | The Supreme dwells within the lotus of the heart. Those who reach His Splendid Feet dwell enduringly within unearthly realms. | மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும். | மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர். | அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார். | உள்ளக் கமலத்தே எழுந்தருளியுள்ள இறைவனின் புனித பாதங்களை மனத்தால் சார்வோர் பூமியில் நீடுழிவாழ்வர். | மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார். (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்). | மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். 'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர். | அன்பர் நெஞ்சமாகிய மலரின்மேல் சென்று வீற்றிருப்பவனது சிறந்த திருவடிகளைச் சேர்ந்தவர்களே, உலகில் நிலையாக வாழ்வார்கள். | நெஞ்சமலரில் இருப்பவன் அடியை நினைப்பவர் இவ்வுலகில்நெடுங்காலம் வாழ்வர் | மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். | அன்பர்களின் மனமாகிய மலரில் வீற்றிருக்கும் இறைவனது திருவடிகளைத் தம் மனத்தால் துதிக்கின்றவர் எக்காலமும் அழிவின்றி வாழ்ந்திருப்பர். | மலர் மிசை யேகினான் மாண்அடி சேர்ந்தார் - அடி யாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் நினைந்த மட்டில் விரைந்து சென்றமரும் இறைவனின் மாட்சிமைப்பட்ட அடிகளை அடைந்தவர்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா வுலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வார். மலர் என்னுஞ்சொல் தனித்துநின்று மனத்தைக் குறியாமையாலும், ஏகினான் என்னுஞ் சொல்லாட்சியாலும், மலர்மிசையேகினான் என்பது இயல்பாக இறைவன் பெயராதற்கு ஏற்காமையாலும், 'பூமேல் நடந்தான்' என்னும் அருகன் பெயரையே ஆசிரியர் இறைவனுக்குப் பொருந்துமாறு ஆண்டார் என்பது தெரிகின்றது. "மலர்மிசை நடந்தோன்" என்று இளங்கோவடிகளும் கவுந்தி யடிகள் கூற்றாகக் கூறுதல் காண்க (சிலப். 10:204.). சமணர் தம் பொய்யான சமயத்தை விட்டுவிட்டு மெய்யான கடவுளை வணங்க வேண்டுமென்பது இக்குறளின் உட்குறிப்பு. அடியாரின் உள்ளத்தாமரை நோக்கி ஏகுவானை ஏகினான் என்று இறந்தகால வாய்பாட்டாற் கூறியது, விரைவு பற்றிய கால வழுவமைதி . அடிசோர்தல் - இடைவிடாது நினைத்து அதற்கேற்ப ஒழுகுதல். | உள்ளக் கமலத்தில் - மனத்தில் - சென்றிருப்பவனான இறைவனுடைய மாட்சியமைப்பட்ட அடிகளை எப்போதும் நினைப்பவர்கள் , உலகில் அழிவின்றி வாழ்வார்கள். | நெஞ்சமாகிய மலரில் விளங்குபவனது திருவடியை மறவாமல் நினைப்பவர் இவ்வுலகின்கண் நெடிது வாழ்வர் என்பது இக்குறட்கருத்து. | நெஞ்சமலரில் இருப்பவனை நினைந்த கடவுள் வாழ்த்து. | மலர்மேல் சென்றவனது திருவடியை நினைந்து கொள்பவர்கள் நெடுங்காலம் வாழ்வர். | ||||||||
5 | கடவுள் வாழ்த்து | 4 | வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல | வேண்டுதல்வேண் டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல | வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. | வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல | வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. | Who hold His feet who likes nor loathes Are free from woes of human births. | His foot, 'Whom want affects not, irks not grief', who gain Shall not, through every time, of any woes complain. | To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come. | Draw near the Feet of Him who is free of desire and aversion, and live forever free of suffering. | விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை. | எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை. | விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை. | விருப்பு வெறுப்பற்றான் பாதம் நண்ணி உலகில் துன்பமின்றி வாழ்க. | வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.). | இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டாமையிலான்" என்று பெயரிட்டார். | விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை. | விருப்பு வெறுப்பு இல்லாதவனை நினைத்தவர்க்கு என்றும்துன்பங்கள் இல்லை. | வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. | விருப்பும் வெறுப்பும் இல்லதவராகிய இறைவனின் திருவடிகளைத் தம் மனத்தால் நினைப்பவர்களுக்கு எந்தவிதத் துன்பமும் ஏற்படாது. | வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - விருப்பு வெறுப்பில்லாத இறைவனடியைச் சேர்ந்தவர்க்கு; யாண்டும் இடும்பை இல-எங்கும் எக்காலத்தும் துன்ப மில்லை. விருப்பு வெறுப்பினாலேயே துன்பங்கள் வருவதனாலும், விருப்பு வெறுப்பில்லாத இறைவனை யடைந்தவரும் விருப்பு வெறுப்பற்றவராயிருப்பராதலாலும், இறைவன் இன்ப வடிவினனாகவும் எல்லாம் வல்லவனாகவுமிருப்பதனாலும், அவனடியடைந்தார்க்கு எங்கும் என்றும் எவ்வகைத் துன்பமும் இல்லையென்பது. | விருப்பும் வெறுப்பும் இல்லாவனான இறைவனின் அடிகளை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, எக்காலத்திலும் துன்பமே உண்டாகாது. | விருப்பும் வெறுப்புமற்ற இறைவனது அடியை மறவாமல் நினைப்பவர்க்கு எவ்விடத்தும் எப்போதும் துன்பம் இல்லை என்பது இக்குறட்கருத்து. | விருப்பும் வெறுப்பும் நீக்கி கடவுள் வாழ்த்து சொல்பவர்க்கு எந்நாளும் துன்பமில்லை. | விருப்பு, வெறுப்பு இல்லாத இறைவனின் அடியை மறவாமல் நினைப்பவர்க்கு எந்தச் சூழ்நிலையிலும் துன்பம் இல்லை. | ||||||||
6 | கடவுள் வாழ்த்து | 5 | இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு | இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. | இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. | இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு | இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. | God's praise who tell, are free from right And wrong, the twins of dreaming night. | The men, 'who on the ''King's' true praised delight to dwell, Affects not them the fruit of deeds done ill or well. | The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God. | Good and bad, delusion’s dual deeds, do not cling to those who delight in praising the Immutable, Worshipful One. | இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள். | கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை. | கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. | விகாரமற்ற இறைவனுடைய மகிமையைப் போற்றுவோர்களை மாயை வழிவரும் நல்வினை தீவினைகள் சாரமாட்டா. | இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்). | மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு. | இறைவனின் மெய்மையோடு சேர்ந்த புகழையே விரும்பினவரிடத்து, அறியாமை என்னும் இருளைச் சார்ந்த இருவகை வினைகளும் வந்து சேரா. | இறைவனது உண்மைப் புகழை விரும்புவாரை அறிவில்லாதவினைகள் நெருங்கா. | இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. | இறைவனது உண்மையான புகழை விரும்பி எப்போதும் அன்பு செலுத்துவரிடத்தில் அறியாமையால் வருகின்ற நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் சேர்வதில்லை. | இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து; இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இரு வினையும் இல்லாதனவாகும். வழிதெரியாத இருள் போலிருத்தலின் அறியாமையை இருளென்றும், நல்வினையும் பிறவிக்கேதுவாமென்பது கொண்முடிபு (சித்தாந்தம்) ஆதலின் இருவினையுஞ் சேராவென்றும் கூறினார். மக்கள் எத்துணைப் பெரியோராயிருப்பினும் அவரின் அறிவாற்றலுங் காலமுங் குறுகிய வரையறைப்பட்டிருப்பதனாலும், அவரை மகிழ்விக்கக் கூறும் புகழுரைகளெல்லாம் உயர்வுநவிற்சியும் இன்மைநவிற்சியுமேயாதலாலும், எல்லாவாற்றலும் என்றும் நிறைந்திருக்கும் இறைவன் புகழே பொருளுள்ள புகழ் எனப்பட்டது. புரிதல் - விரும்பிச் சொல்லுதல். இறைவன் - எங்குந் தங்கியிருப்பவன். இறுத்தல் - தங்குதல். நல்வினை பிறவிக்கேதுவாவது கடவுள் வழுத்தொடு கூடாத போதும் தீவினையொடு கலந்த விடத்துமாம். | அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை. | இறைவனது மெய்ம்மையான பெருமையை நினைந்து போற்றுவாரிடத்து அறியாமையால் உண்டாகும் இருவினைகளும் நெருங்கா என்பது இக்குறட்கருத்து. | எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று கடவுள் வாழ்த்து பாடுவோர்க்கு நன்மை, தீமை இரண்டினாலும் பாதிப்பு இல்லை. | இறைவன் உண்மைப் புகழை உணர்ந்தவர்களிடம் அறியாமையால் உண்டாகும் இருவினைகளும் சென்றடையமாட்டா, | ||||||||
7 | கடவுள் வாழ்த்து | 6 | பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் | பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் | பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். | பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார் | பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். | They prosper long who walk His way Who has the senses signed away. | Long live they blest, who've stood in path from falsehood freed; His, ‘Who quenched lusts that from the sense-gates five proceed. | Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses. | A long and joyous life rewards those who remain firmly on the faultless path of Him who controls the five senses. | மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப்பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும். | மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார். | ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர். | புலனைந்தும் அடக்கி ஆளுகின்ற இறைவனின் நல்வழியை உறுதியாகப் பற்றுபவர்கள் நீண்டகாலம் மகிழ்வுடன் வாழ்வர். | பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது). | மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்?.இது சாவில்லையென்றது. | ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின் பொய்ம்மை இல்லாத ஒழுக்க நெறியில் நின்றவரே நிலையான வாழ்வினர் ஆவர் | ஜம்புலனையும் அழித்தவனது மெய்ந் நெறியைக் கடைப் பிடித்தவர்நெடுங்காலம் வாழ்வர். | பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். | ஐம்புலன் ஆசைகளையும் ஒழித்த, இறைவனது மெய்யான ஒழுக்க நெறியில் நிற்பவர் பிறப்பும் இறப்பும் இல்லாமல் நிலைத்து வாழ்வர். | பொறிவாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்பொறிகளையும் வழியாகக்கொண்ட ஐவகையாசைகளையும் விட்ட இறைவனது; பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார் - மெய்யான ஒழுக்கநெறியில் ஒழுகினவர்; நீடு வாழ்வார் - வீட்டுலகில் என்றும் இன்புற்று வாழ்வார். ஊறு, சுவை, காட்சி, மணம், இசை என்பன ஐவகை ஆசைப்புலன்கள். ஊறென்பது உடம்பால் தொட்டின்புறுதல். இறைவன் இயல்பாகவே ஆசையில்லாதவனாதலால், ஐந்தவித்தான் என்னும் பெயரும் சமணரை வயப்படுத்துமாறு சமண நெறியினின்று எடுத்தாண்டதே. ஐவரை வென்றோன் என்று இளங்கோவடிகளுங் கூறுதல் காண்க (சிலப். 10:198). ஒழுக்கநெறி இறைவனாற் சொல்லப்பட்டது அல்லது அவனுக்கு ஏற்றது. இந்நான்கு குறளாலும், இறைவனை இடைவிடாது நினைப்பாரும் வழுத்துவாரும், அவனெறியொழுகுவாரும் வீடு பெறுவரென்பது கூறப்பட்டது. | மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து பொறிகளின் வழியாக வரும் ஆசைகளை அறுத்தவனுடைய மெய்யான ஒழுக்க வழியில் நின்றவர்கள், எக்காலத்திலும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள். | மக்கள் ஐந்தவித்தான் ஆகி பொய்யற்ற ஒழுக்கநெறியில் வழுவாது நிற்பாராயின் நீடுவாழ்வார் என்பது இக்குறள் கூறும் கருத்து. | நல்லொழுக்கம் பேணுதலும் கடவுள் வாழ்த்துவகையில் ஒன்று. | பொறிகளுக்கு வாயிலாகிய சுவை, ஒளி, ஓசை,ஊறு, நாற்றம், ஆகிய ஐந்தையும் பக்குவப்படுத்தியவன், மெய்யான ஒழுக்கநெறியில் நின்றார், நெடுநாள் வாழ்வர். | ||||||||
8 | கடவுள் வாழ்த்து | 7 | தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது | தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது | தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. | தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மன கவலை மாற்றல் அரிது | தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. | His feet, whose likeness none can find, Alone can ease the anxious mind. | Unless His foot, ‘to Whom none can compare,‘ men gain, ‘Tis hard for mind to find relief from anxious pain. | Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable. | They alone dispel the mind’s distress who take refuge at the Feet of the Incomparable One. | ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை. | தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம். | தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது. | ஒப்புயர்வற்ற இறைவனின் பாதங்களைச் சரண் அடைந்தவரே மனக் கவலையற்று வாழ்வர். | தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. ("உறற்பால தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.). | பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார். | தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும் | உவமை கடந்தவன் அடியை நினைந்தாலன்றி மனக் கவலையைமாற்ற முடியாது. | தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. | தனக்கு நிகர் இல்லாதவராகிய இறைவனின் திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு மனத்தில் நிகழும் துன்பங்களைப் போக்கிக் கொள்ளல் இயலாது. | தனக்கு உவமை இல்லாதான் - ஒருவகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய; தாள் சேர்ந்தார்க்கல்லால் - திருவடிகளை யடைந்தார்க்கல்லாமல்; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழுந்துன்பங்களையும் அவற்றாள் ஏற்படும் கவலையையும் நீக்குதல் இயலாது. இம்மைக்கும் மறுமைக்கும் உரிய எல்லாப் பொருள்களையும் நலங்களையும், எல்லார்க்கும் என்றும் வரையாதளிக்கக்கூடிய வள்ளல் இறைவன் ஒருவனேயாதலின், அவனையடைந்தார்க்கல்லது துன்பமுங் கவலையும் நீங்காவென்பதாம். அருமைச் சொல்லிற்குரிய சின்மை இன்மையென்னும் இரு பொருள்களுள், இங்கு வந்துள்ளது இன்மை. | தனக்கு ஈதாக எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாவனுடைய தாள்களை நினைப்பவர்களுக்கு அல்லாமல், மற்றவர்களால் மனத்தில் உண்டாகும் துன்பங்களை நீக்க முடியாது. | தனக்கு ஒப்புமை இல்லாதவனின் திருவடியை இடைவிடாது நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்களுக்கு மனக்கவலைகளை மாற்றுதல் கடினம்என்பது இக்குறட்கருத்து. | கடவுள்வாழ்த்துச் சொல்வதன் பெரும்பயன் மனக்கவலைக்கு மாற்றாவது. | தனக்கு எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாதவனுடைய தாளை நினைப்பவர்களுக்கு அன்றி மற்றவர்களுக்கு மனத்தில் உண்டாகும் துன்பங்களை மாற்ற முடியாது. | ||||||||
9 | கடவுள் வாழ்த்து | 8 | அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது | அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது | அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. | அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிற ஆழி நீந்தல் அரிது | அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தர்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. | Who swims the sea of vice is he Who clasps the feet of Virtue's sea. | Unless His feet, the Sea of Good, the Fair and Bountilful,’men gain, ‘Tis hard the further bank of being’s changeful sea to attain. | None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue. | They alone can cross life’s other oceans who take refuge at the Feet of the Gracious One, Himself an Ocean of Virtue. | அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால்,அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி,மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதானகாரியமல்ல. | அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம். | அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது. | அறக்கடலாகிய கருணைவள்ளலின் திருப்பாதங்களைச் சரணடைந்தவரே வாழ்வின் பிற துன்பக் கடல்களையும் கடக்க வல்லார். | அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.). | அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது. | அறக் கடலான அந்தணனின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல், பிறர்க்கு இன்பமும் பொருளும் ஆகிய கடல்களைக் கடத்தல் இயலாது | அறக்கடலாம் அருளாளன் அடியை நினைந் தாலன்றிப் பாவக்கடலைக் கடக்க முடியாது. | அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. | அறக்கடலாக விளங்கும் ஆண்டவனின் திருவடிகளை எண்ணாதவர், அறத்திற்கு எதிரான வேறு எந்தக் கடலையும் நீந்திக் கரை சேர முடியாது | அறவாழி அந்தணன் - அறக்கடல் வடிவினனும் அழகிய குளிர்ந்த அருளாளனுமாகிய இறைவனது; தாள் சேர்ந்தார்க் கல்லால் - திருவடியாகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது - அதனொடு சேர்ந்த பிறவாகிய பொருளின்பக் கடல்களைக் கடத்தல் இயலாததாகும். எல்லா அறங்களுந் தொக்கதொகுதி கடல்போற் பரந்ததாதலின், இறைவனை அறவாழியென்றார். பொருளின்பங்களைக் கடலாக வுருவகித்தமையால், அவற்றொடு தொடர்புள்ள அறவாழி என்பது அறக்கடலையன்றிப் புத்தனது தரும சக்கரத்தை யுணர்த்தாது, பிறவாழி கடவாமையாவது பொருளின்ப ஆசையுள் மூழ்கித் துன்புறுதல். இறைவனடி சேர்ந்தவர் அத்துன்பத்தினின்று நீங்கி என்றென்றும் பேரின்பத்தில் திளைப்பர் என்பதாம். அறம் பொருளின்பத்தை ஆழியென்றுருவகித்து இறைவன் திருவடியைப் புணையென்றுருவகியாது விட்டது, ஒருமருங்குருவகம். | அறக்கடலாகிய இறைவனுடைய அடிகளாகிய தெய்வத்தினைச் சார்ந்தவர்க்கு அல்லாமல், மற்றவர்களுக்குப் பொருள், இன்பம் ஆகிய கடல்களை நீந்திக் கடத்தல் முடியாததாகும். | அறக்கடலாகிய அருள்வடிவினையுடைய இறைவனின் தாளை இடைவிடாது நினைந்தவர்க்கல்லாமல் பாவம் என்ற கடலைக் கடத்தல் இயலாது என்பது இக்குறட்கருத்து. | கடவுள் வாழ்த்துச் சொன்னால் தீவினை ஆற்றியவர்களுக்கும் அவர் தண்ணளி செய்வார். | அறக்கடலை உடையவனும் மிகுந்த தண்ணிய இயல்பையுடையவனுமாகிய இறைவனின் தாளைச் சேர்ந்தவர்க்கல்லாமல் மற்றவர்க்கு பாவக் கடலைக் கடத்தல் இயலாது. | ||||||||
10 | கடவுள் வாழ்த்து | 9 | கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. | கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. | கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. | கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான் தாளை வணங்கா தலை | கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. | Like senses stale that head is vain Which bows not to Eight-Virtued Divine. | Before His Foot, ‘the Eight-fold Excellence,‘ with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead. | The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation. | The head which cannot bow before the Feet of the Possessor of eight infinite powers is like the senses lacking the power to perceive. | உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்றஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும்ஆகும். | எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே. | கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம். | எண்குணத்தான் திருப்பாதங்களை வணங்காதார் தலை, புலனறிவிழந்த ஐம்பொறிகளைப் போல் பயனற்றது. | கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.). | அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார். | எண் வகைக் குணங்களில் உருவான இறைவன் திருவடிகளை வணங்காத தலை, கேளாக் காதும் காணாக் கண்ணும் போலப் பயனில்லாதது | எண்குணம் உடையவன் அடியை வணங்காத்தலை பாராதகண்கேளாத செவி போலப் பயனற்றது. | கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. | பார்க்க முடியாத கண், கேட்க முடியாத காது போல எட்டுக் குணங்களை உடைய இறைவனின் திருவடிகளை வணங்காதவரின் தலை இருந்தும் பயனில்லாததே | எண் குணத்தான் - எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவனின்; தாளை வணங்காத் தலை - திருவடிகளை வணங்காத தலைகள்; கோளில் பொறியின் - தத்தம் புலன்களைக் கொள்ளாத பொறிகளைப்போல; குணம் இல - பயன் படாதனவாம். எண் குணங்களாவன தன்வயத்தம், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, கட்டின்மை, பேரருள், எல்லாம் வன்மை, வரம்பிலின்பம் என்பன. தாளை வணங்காத் தலையென்று தலையையே விதந்தோதினாரெனினும், வழுத்தாநாவும், புகழ்கேளாச் செவியும் அங்ஙனமே பயனில்லாதனவென்று கொள்க. குணமிலவே என்னும் பன்மை வினைகொண்டு முடிதலால், தலை என்பது பன்மை குறித்துவந்த பால் பகாவஃறிண்ணைப் பெயர். இறைவனுக்கு உடம்பில்லாவிடினும், அவன் என்றேனும் ஒருவடிவுகொள்ளின் அதன் அடியும் முடியும் ஒரு நிகரவாகவே தூய்மையாயிருப்பினும், அவனை வணங்கும் மக்களின் பணிவியலை மிகுத்துக்காட்டற்கே, திருவடி தொழுதல் அல்லது வணங்குதல் என்று கூறுவது மரபாகும். இறைவன் வழிபாட்டிற்குப் பயன்படுவதே மாந்தன் உடம்பின் தலையாய பயன் என்பது இக்குறட் கருத்து. | தத்தமக்குரிய புலன்களைக் கொள்ளுதல் இல்லாத மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளைப் போல அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடைய இறைவனுடைய தாள்களை வணங்காத் தலைகளும் பயன்படுத்தலுடையான் அல்லவாம். | மாந்தர் எண்ணிய குணம்கொண்ட இறைவனது திருவடியை வணங்காத தலைகள், பொறிகள் இருந்தும் புலன்கள் அற்றவை போல, உணர்வில்லாதவை என்பது இக்குறட்கருத்து. | முழுப்பணிவுடன் கடவுள் வாழ்த்துக் கூறுக. | எண்ணும் பண்புகளின் இருப்பிடமாகத் திகழும் கடவுளின் அடியை வணங்காதவர்களின் தலைகள் புலன்கள் இல்லாப் பொறிகளைப் போல் உணர்வற்றவை. | ||||||||
11 | கடவுள் வாழ்த்து | 10 | பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் | பிறவிப் பெரும்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். | பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். | பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் | பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். | The sea of births they alone swim Who clench His feet and cleave to Him. | They swim the sea of births, the 'Monarch’s’ foot who gain; None other’s reach the shore of being’s mighty main. | None can swim the great sea of births but those who are united to the feet of God. | The boundless ocean of births can be crossed, indeed, but not without intimate union with Infinity’s Holy Feet. | வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்தமுடியாமல் தவிக்க நேரிடும். | கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார். | இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. | இறைவனுடைய திருப்பாதங்களைச் சேர்ந்தவரே பிறவி எனும் பெருங் கடலை நீந்துவர், சேராதார் நீந்தார். | இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.). | பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார் | இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள்; சேராதவர்களால் கடக்க இயலாது | இறைவன் அடியை நினைந்தவர் பிறவிக்கடலைக் கடப்பர்;நினையாதவர் கடவார். | பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். | இறைவனடி சேர்ந்தாரே பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடப்பார். இறைவனின் திருவடிகளை நினைக்காதவர் பிறவியாகிய கடலை நீந்திக் கடக்க மாட்டாமல் அதனுள் ஆழ்வர். | இறைவன் அடி (சேர்ந்தார்) - இறைவன் திருவடியாகிய புணையைச் சேர்ந்தவர்; பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - பிறவியாகிய பெரியகடலைக் கடப்பர்; சேராதார் நீந்தார் - அப்புணையைச் சேராதவர் அக்கடலைக் கடவாதவராய் அதனுள் அழுந்துவர். வீடுபேறுவரை கணக்கில் கழிநெடுங்காலம் விடாது தொடர்ந்து வருவதாகக் கருதப்படுதலின், பிறவியைப் பெருங்கடல் என்றார். பிறவி வாழ்வு எல்லையில்லாது தொடர்ந்துவரும் துன்பம் மிகுந்த நிலையற்ற சிற்றின்பமேயாதலால், அதனின்று விடுதலைபெற்று நிலையான தூய பேரின்பந்துய்க்கும் பிறவாவாழ்வைப் பெறும்வழியை இக்குறள் கூறுகின்றது. சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். பிறவியைப் பெருங்கடலாக உருவகித்து இறைவனடியைப் புணையாக உருவகியாதுவிட்டது ஒருமருங்குருவகம். புணை யெனினும் கலம் எனினும் ஒக்கும். | இறைவன் அடிகள் என்னும் தொப்பத்தைச் சேர்ந்தவர்கள், பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பர். அவ்வாறு சேராதவர்கள் (நினைத்திருக்காதவர்கள்) நீந்த மாட்டார்கள்; அதனுள் அழுந்துவார்கள். | இறைவனை நினைப்பவர் பிறப்பாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர். நினையாதவர் வாழ்க்கை என்ற அக்கடலை நீந்திக் கடக்கமாட்டாதவாரவர் என்பது இக்குறட்கருத்து. | 'அவன்' அன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை உணர்ந்து கடவுள் வாழ்த்துச் செய்க. | இறைவன் அடியை நினைந்தவர் வாழ்வுக் கடலைக் கடப்பர்; நினையாதவர் அதனைக் கடக்க இயலாது. | ||||||||
12 | வான் சிறப்பு | 11 | வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று | வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுஉணரல் பாற்று. | வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று. | வான் நின்று உலகம் வழங்கி வருதலான் தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று | வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று. | The genial rain ambrosia call: The world but lasts while rain shall fall. | The World its course maintains through life that rain unfailing gives; Thus rain is known the true ambrosial food of all that lives. | By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia. | It is the unfailing fall of rain that sustains the world. Therefore, look upon rain as the nectar of life. | உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. | உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம். | மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும். | மழையினால் உலகம் அழிவின்றி வாழும். அவ்வாழ்வைத் தரும் மழையை வாழ வின் அமிர்தம் எனக் கருதுக. | வான்நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து. ('நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார்.). | மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், அம்மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது. இஃது அறம் பொரு ளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்தலானும். இம்மழையினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று. | மழை பெய்வதனாலேதான் உலக உயிர்கள் வாழ்கின்றன; ஆதலால், மழையே உயிர்களுக்கு ‘அமிழ்தம்’ என்று உணரத்தகும் | மழையால் உலகம் நிலைபெற்று வருவதால் மழையே அமிழ்தம்என்று உணரவேண்டும். | வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. | மழை இடைவிடாது பெய்வதனால்தான் உலகத்து உயிர்கள் வாழ்கின்றன. அதனால் அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று போற்றத் தகுந்ததாகும். | வான் நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை வரையறவாய் நின்றுவிடாது தொடர்ந்து பெய்துவர அதனால் உலகம் நடைபெற்று வருதலால்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை உலகிற்குச் சாவாமருந்து என்று கருதப்பெறுந்தன்மையது. உலகம் என்பது அதிலுள்ள உயிர்களைக் குறித்தலால் இங்கு இடவாகுபெயர். அமிழ்தம் என்றது சாவா மருந்தாகிய இருவகையுணவை. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத சோறும், நீரும் தொடர்ந்த பசிதகை (தாக) நோய்களால் நேரும் சாவைத் தவிர்த்தலால் இருமருந்து எனப்பெறும். "இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்" (புறம் 70). நீரும் சோறும் மழையாலேயே பெறப்படுதலால், மழை உலகிற்கு அமிழ்தமாயிற்று. ஆயினும், உயிர்கட்கெல்லாம் பிணிமூப்புச் சாக்காடிருத்தலால், சாவாமை என்பது சாக்காடு வரையுள்ள நிலைமையேயாம். மருந்தினால் நோய் நீங்கினவனைச் சாவினின்று தப்பினான் என்று கூறும் வழக்கைக் காண்க. அமிழ்தம் என்னும் சொல் சோற்றையும் பாலையுங் குறிக்கும் இருவேறு சொற்களின் திரிபாகும். அவிழ் = வெந்து மலர்ந்த சோற்றுப்பருக்கை, சோறு. அவிழ் - அவிழ்து - அவிழ்தம் - அமிழ்தம் = உணவு. "அறுசுவை நால்வகை யமிழ்தம் "(மணி. 28: 116). அவிழ்து - அமிழ்து - அமுது = சோறு, உணவு, நீர். நீரும் உணவாதலால் அமுதெனப் பெற்றது. அமிழ்தம் - அமுதம் = சோறு, நீர். மருமம் - (மம்மம்) - அம்மம் = முலை, தாய்ப்பால், குழந்தையுணவு. பாலும் ஒருவகை யுணவாதலாலும், அம்மம் அமுது என்னும் சொற்களின் ஒருபுடையொப்புமையினாலும், அமுது என்னும் சொல்லும் பாலைக் குறித்தது. அமுது = பால், அமுதம் = பால், அமிழ்து = பால். அமுதம் என்னும் தென்சொல் வடமொழியில் அம்ருத என்னும் வடிவுகொள்ளும். அவ்வடிவை அ+ம்ருத என்று பிரித்து, சாவை (மரணத்தை)த் தவிர்ப்பது என்று பொருளுறுத்தி, அதற்கேற்பத் தேவரும் அசுரரும் திருப்பாற்கடலைக் கடைந்தெடுத்த அமிர்தம் என்று கதையுங் கட்டிவிட்டனர் வடமொழியாளர். இங்ஙனங்கட்டினும், மீண்டும் அது தென்சொல் திரிபேயாதல் காண்க. அல் (எதிர்மறை முன்னெட்டு) - அ. ஒ. நோ : நல் - ந. மடி - மரி - ம்ரு (வ.) - ம்ருத, ம்ருதி, ம்ருத்யு (சாவு). தேவர் அமுதமுண்டார் என்பது கட்டுக்கதையாதலால், தேவரமுதம் என்னும் இல்பொருளை உவமையாகக் கூறுவதால் ஒரு பயனுமில்லையென உணர்க. | மழை இடைவிடாமல் பெய்வதால் உலகிலுள்ள உஉயிர்கள் நிலைபெற்று வருகின்றன. ஆதலால், மழையே அமிழ்தம் என்று அறியப்படும் தன்மை உடையதாகும். | வான்மழை நிலை நிற்க உலக வாழ்க்கை தொடர்ந்து வருவதால், அது அமிழ்தம் என்று உணரப் பெறும் தன்மையது என்பது குறட்கருத்து. | உலகத்தைச் சாகாமல் வைத்து இயக்கிவரும் வான்சிறப்பு கூறும் பாடல். | விண்ணிலிருந்து வரும் மழையால் உலகம் இயங்கி வருவதலால் அது அமிழ்தம் என்று உணரப் பெறும் தன்மையது. | ||||||||
13 | வான் சிறப்பு | 12 | துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை | துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. | துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. | துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு துப்பு ஆயதூஉம் மழை | துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. | The rain begets the food we eat And forms a food and drink concrete. | The rain makes pleasant food for eaters rise; As food itself, thirst-quenching draught supplies. | Rain produces good food, and is itself food. | Rain produces man’s wholesome food; and rain itself forms part of his food besides. | யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும்உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது. | நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே. | உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். | உண்பாருக்கு நல்லுணவை உண்டாக்கித் தானுமே உணவுகளில் ஒன்றுமாகின்றது மழை. | துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை - அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை. (தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின் அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.). | பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண்டாக்கித் தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே. இது பசியைக் கெடுக்கு மென்றது. | உண்பவர்க்குத் தகுந்த பொருள்களை விளை வித்துத் தந்து அவற்றைப் பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக (பருகும் நீராக) விளங்குவதும் மழையே ஆகும் | உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கித் தானும் குடிநீராய்ப்பயன்படுவது மழை. | துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. | உண்பவர்களுக்கு சிறந்த உணவுகளை உருவாக்கிக் கொடுத்து அவற்றை உண்பவர்களுக்குத் தானும் உணவாக இருப்பது மழையாகும். | துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி - உண்பார்க்கு நல்ல வுணவுகளை உண்டாக்கி; துப்பார்க்கு - அவற்றை உண்பவர்க்கு; துப்பாயதும் மழை - தானும் உணவாவது மழையே. இருதிணை யறுவகை யுயிர்கட்கும் உணவு இன்றியமையாததேனும், தலைமைபற்றித் துப்பார் என உயர்திணைமேல் வைத்துக் கூறினார். முந்தின குறளில் அமிழ்தம் என ஒன்றாகக் கூறியதை, இக்குறளில் நீரும் உணவும் என இருவகையாக வகுத்தார். உணவென்றது உண்பனவும் தின்பனவும் பருகுவனவும் நக்குவனவுமான நால்வகை விளைபொருட்களை, சோறுங் களியுமாகச் சமைக்கப் பெறும் நெல் புல் (கம்பு) முதலியன உண்பன; காய்கறிகள் தின்பன; பாலும் பதனீரும் (தெளிவும்) பருகுவன; தேனும் நெகிழ்நிலைப் பயினும் நக்குவன. மழை உணவுப்பொருளை விளைப்பதொடு தானும் நீராக உண்ணப்படுவது என்று அதன் சிறப்புக் கூறப்பட்டது. துத்தற்சொல் நான்முறை வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி. "துப்பாய துப்பாக்கி" என்பது சொற்பின் வருநிலையணி. துப்பாய தூஉம் என்பது இசைநிறை யளபெடை. | உண்பவர்களுக்கு நல்ல உணவுகளை உண்டாக்கிக் கொடுப்பது, தானும் உண்பவர்களுக்கு உணவாக இருப்பதும் மழையேயாகும். | உண்பார்க்கு உடற்குறுதி தரும் உணவுப் பொருள்களை உண்டாக்கி, உண்கின்ற யாவர்க்கும் தானும் உணவாய் அமைவதும் மழை என்பது இக்குறட்கருத்து. | உயிர்களின் பசி, நீர்வேட்கை போக்கும் வான்சிறப்பு. | உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கித் தானும் உணவாய் ஆவதும் மழை. | ||||||||
14 | வான் சிறப்பு | 13 | விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி | விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து உள்நின்று உடற்றும் பசி. | விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி. | விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து உள் நின்று உடற்றும் பசி | விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. | Let clouds their visits stay, and dearth Distresses all the sea-girt earth. | If clouds. The promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks o’er earth's vast ocean-girdled plain. | If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world | Though oceanic waters surround it, the world will be deluged by hunger’s hardships if the billowing clouds betray us. | கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்துவிட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும். | உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும். | மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும். | உலகினைப் பெருங் கடல் நீர் சூழினும், திரண்ட மேகங்கள் பொய்ப்பின் பசிப்பிணி எனும் வெள்ளத்தே உலகமே மூழ்கிவிடும். | விண் இன்று பொய்ப்பின் - மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்; விரி நீர் வியன் உலகத்துள் - கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்; நின்று உடற்றும் பசி - நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி. (கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், 'விரி நீர் வியன் உலகத்து' என்றார். உணவு இன்மையின் பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.). | வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினையுடைய அகன்ற வுலகத்திடத்தே பசியானது நின்று வருத்தாநிற்கும், எல்லாவுயிர்களையும். பொய்த்தல்- தன்றொழில் மறுத்தல். இது பசி என்று பொதுப்படக் கூறியவதனான் மக்களும் விலங்கும் பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்ப முறுமென்று கூறிற்று. | மழை காலத்தால் பெய்யாது, பொய்க்குமானால், கடலால் சூழப்பட்டுள்ள இப்பரந்த உலகினுள் பசி நிலைபெற்று உயிர்களை வாட்டும் | மழையில்லாது போகின் கடல்சூழ் உலகத்தில் பசி உயிர்களைவாட்டும். | விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. | பருவ காலத்தில் மழை பெய்யாது தவறுமானால் பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பசி நிலைத்து நின்று உயிர்களை வருத்தும். | விண் இன்று பொய்ப்பின் - வேண்டிய காலத்து மழை பெய்யாது நின்றுவிடுமாயின்; விரிநீர் வியன் உலகத்துள் - பரந்த கடலாற் சூழப்பட்ட அகன்ற நிலவுலகத்தின்கண்; பசிநின்று உடற்றும் - பசி நிலைத்துநின்று உயிர்களை வருத்தும். ஞாலத்தின் (பூமியின்) முக்காற் பங்கு என்றும் வற்றாக் கடலாயினும் அதனாற் பஞ்சக்காலத்திற் பயனில்லையென்பதை, விரிநீர் என்னும் அடைமொழியாற் குறிப்பாக வுணர்த்தினார், வருத்துதலாவது உணவு விளையாமையால் மீண்டும் மழை பெய்யும்வரை கொல்லுதலும் துன்புறுத்துதலும். பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது பெய்யாமை பொய்த்தது போலாயிற்று. | மழையானது வேண்டுங் காலத்தில் பெய்யாமல் இருந்துவிட்டால், கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பசியானது நின்று எல்லா உயிர்களையும் துன்புறுத்தும். | மழை பொய்த்தால் விரிந்த நீரினையுடைய அகன்ற நிலவுலகத்தின்கண் பசி உயிர்களை வாட்டி வதைக்கும் என்பது இக்குறளின் கருத்து. | பசிஆறப் பயன்படுவது மழைநீரே என்று வான்சிறப்பு கூறப்பட்டது. | நெடிய காலம் மழையில்லாது போனால், பரந்தநீர் சூழ்ந்த உலகத்தில் பசி உயிர்களை வாட்டும். | ||||||||
15 | வான் சிறப்பு | 14 | ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால் | ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளம்குன்றிக் கால். | ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். | ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும் வாரி வளம் குன்றிய-கால் | ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். | Unless the fruitful shower descend, The ploughman's sacred toil must end. | If clouds their wealth on waters fail on earth to pour, The ploughers plough with oxen’s sturdy team no more. | If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease. | When clouds withhold their watery wealth, farmers cease to ply their plows. | மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றிவிடும். | மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார். | மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார். | மழை வளங் கொழியா தாயின், உழவரும் கலப்பை கொண்டுழார். | உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.) . | ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து. இஃது உழவாரில்லை யென்றது. | மழை’ என்னும் வருவாயின் வளம் குறைந்ததனால், பயிர் செய்யும் உழவரும் (விளை பொருள்களை விளைவிக்க) ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்கள் | மழைவருத்துக் குறையின் உழவர்கள் உழுவதற்கு ஏர் பிடிக்கமாட்டார்கள். | ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். | மழை என்னும் வருவாய் வளம் குறைந்தால் உழுது பயிர் செய்யும் உழவர்கள் நிலத்தை ஏரால் உழ முடியாமல் துன்புறுவர். | புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழையென்னும் வருவாய் வரவற்றுவிடின்; உழவர் ஏரின் உழார் - உலகத்திற்கு ஆணியாகிய உழவர் தமக்கும் பிறர்க்கும் உணவு விளைவிக்குமாறு ஏரால் உழுதலைச் செய்யார். சுழல்காற்று மழையைக் குறிக்கும் புயல் (Cyclone) என்னும் சொல் இங்குப் பொதுப்பொருளில் ஆளப்பட்டது. பசி உயிர்களை வருத்துதற்குக் கரணியங் கூறியவாறு. உழாஅர் என்பது இசைநிறை யளபெடை. குன்றியக்கால் என்பது குன்றிக்கால் எனக்குறைந்து நின்றது. குன்றுதல் இங்கு இன்மையாதல். | மழை என்கின்ற வருவாய் தன்னுடைய பயனைத் தராவிட்டால் உழவர்கள் ஏரினால் உழமாட்டார்கள். | மழை என்கின்ற வருவாய் வளம் குறைந்தால் உழவர் ஏரினால் உழமாட்டார்கள் என்பது இக்குறட்கருத்து. | வான்சிறப்பு இன்றேல் ஏர் பூட்டப்படமாட்டாது. | மழை என்னும் வருவாய் தன் வளம் குன்றினால், உழவர் ஏர்பிடித்து உழமாட்டார்கள். | ||||||||
16 | வான் சிறப்பு | 15 | கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை | கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றுஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. | கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. | கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை | கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. | Destruction it may sometimes pour, But only rain can life restore. | ‘Tis rain works all: it ruin spreads, then timely aid supplies; As, in the happy days before, it bids the ruined rise. | Rain by its absence ruins men; and by its existence restores them to fortune. | It is rain that ruins, and it is rain again that raises up those it has ruined. | பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும்மழையே ஆகும். | பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான். | பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும். | அழிப்பதுவும் மழை, அழித்தவற்றை மீண்டும் கொழிக்கச் செய்வதும் மழை. | கெடுப்பதூஉம் - பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்; கெட்டார்க்குச்சார்வாய் மற்று ஆங்கேஎடுப்பதூஉம்-அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற் போல எடுப்பதூஉம்; எல்லாம் மழை - இவை எல்லாம் வல்லது மழை. ('மற்று' வினை மாற்றின்கண் வந்தது, ஆங்குஎன்பது மறுதலைத் தொழிலுவமத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், 'கெட்டார்க்கு என்றார்'. 'எல்லாம்' என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. 'வல்லது' என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.). | பெய்யாது நின்று எல்லாப் பொருளையுங் கெடுப்பதும் அவை கெடப் பட்டார்க்குத் துணையாய்த் தான் பெய்து பொருள்களெல்லாவற்றையும் அவ்விடத்தே யுண்டாக்குவதும் மழை. இஃது இரண்டினையுஞ் செய்யவற்றென்றவாறு. | காலத்தால் பெய்யாது உலகில் வாழும் உயிர்களைக் கெடுப்பதும் மழை; அப்படி கெட்டவற்றைப் பெய்து வாழச் செய்வதும் மழையே ஆகும் | உழவர்களைக் கெடுக்கவும் துணைநின்று ஆக்கவும் வல்லபேராற்றல் உடையது மழை. | கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. | பெய்யாமல் இருந்து மக்களைக் கெடுக்கவும், அவ்வாறு கெட்டவருக்குத் துணையாகி நன்மை செய்யவும் வல்லது மழை. | கெடுப்பதூஉம் - பெய்யாதுநின்று பண்பாட்டிலும் தொழிலிலும் மக்களைக் கெடுப்பதும்; கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் - அங்ஙனங் கெட்டார்க்குத் துணையாகப்பெய்து முன்பு கெடுத்தது போன்றே பின்பு அவரைத் தூக்கிவிடுவதும்; எல்லாம் மழை - ஆகிய எல்லாம் செய்வது மழையே. "தனக்குமிஞ்சித் தானம்". ஆதலால், வளமில்லாக் காலத்தில் வள்ளன்மை இல்லாதாரின் பண்பாடு கெடுவதும், விளைபொருளும் கருவிப்பொருளும் இல்லாக்காலத்தில் வணிகர் கைத்தொழிலாளர் ஆகியோரின் தொழில் கெடுவதும், இயல்பாதலாலும்; மழையில்லாப் பஞ்சக்காலம் நெடிதுங் குறிதுமாக இடையிடை நேரினும், பின்பு இறைவனருளால் மீண்டும் மழைபெய்து மக்கட்பண்பாடும் தொழிலும் முன்போல் திருந்துவதனாலும்; கெடுப்பதும் எடுப்பதுமாகிய இரு முரண்பட்ட செயலையும் மழை செய்வதாகக் கூறினார். ஆயினும், காலத்திற்கேற்ப மக்கள் நிலைமை மாறும் என்பதும், இடையிடை நிற்பினும் அறுதியாய் நின்றுவிடாது உலகம் அழியும் வரை மழைபெய்துவரும் என்பதும், மழை பெய்யாமைக்கு ஏதேனும் ஒரு கரணியம் இருத்தல்வேண்டும் என்பதும், குறிப்பாக உணர்த்தப்பெறும் உண்மைகளாகும். செல்வமிழந்தவரைக் கெட்டார் என்பது இருவகை வழக்கிலுமுண்டு. கெடுப்பதூஉம், எடுப்பதூஉம் என்பன இன்னிசையளபெடை. 'மற்று' வினைமாற்றிடைச் சொல். 'ஆங்கு' உவமையுருபு. | பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும், கெட்டார்க்குத் துணையாய் நின்று, பெய்து காப்பாற்றுவதும் ஆகிய எல்லாம் மழையே யாகும். | பொழியாது அல்லது மிகையாகப் பொழிந்து கெடுதல் செய்வதும், பிறகு வளத்தை எடுத்துக் கொடுப்பதும் மழையே என்பது இக்குறட்கருத்து. | எந்த நிலையிலும் கடைசியில் வாழவைப்பது மழைப்பேறுதான் என்பது வான்சிறப்பு | பெய்து கெடுப்பதும் கெடுத்தவர்களுக்குத் துணையாய்ப் பெய்து வாழ வைத்தலும் ஆகிய எல்லாம் செய்வது மழை. | ||||||||
17 | வான் சிறப்பு | 16 | விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது | விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. | விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது. | விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே பசும் புல் தலை காண்பு அரிது | விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. | No grassy blade its head will rear, If from the cloud no drop appear. | If from the clouds no drops of rain are shed, ‘Tis rare to see green herb lift up its head. | If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen. | Unless raindrops fall from the sky, not a blade of green grass will rise from the earth. | விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும். | மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும். | வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது. | விண்ணிலிருந்து மழைத்துளி வீழாதாயின் பூமியில் பசும்புல்லும் தலை காட்டாது. | விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது - வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது. ('விசும்பு' ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.). | வானின்று துளிவீழினல்லது அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது. ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும். இஃது ஓரறிவுயிருங் கெடுமென்றது. | வானிலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகில், பசும்புல்லின் தலையைக் காண்பதுங் கூட அருமையாகி விடும் | மேலிருந்து துளி மழை விழாவிட்டால் நிலத்தில் பசும்புல்லின்நுனியையேனும் காண முடியுமா? | விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. | மேகத்திலிருந்து மழைத்துளி விழுந்தால் அல்லது இவ்வுலகில் பசுமையான ஒரு புல்லில் நுனியையும் காண இயலாது. | விசும்பின் துளிவீழின் அல்லால் - வானத்தினின்று மழைத்துளி விழுந்தாலன்றி; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பு அரிது - பின் அப்பொழுதே பசும்புல் நுனியையும் காண்பது அரிதாகும். 'மற்று' விளைவு குறித்த பின்மைப் பொருளிடைச்சொல். ஆங்கே என்றது தேற்றமும் விரைவும் பற்றிய காலவழுவமைதி. புற்றலை என்பது புன்னிலம் என்றுமாம். ஒரு நாட்குள் முளைக்கும் புல்லும் இல்லையெனின், மற்ற மரஞ்செடி கொடிகளின் இன்மையைச் சொல்லவேண்டுவதில்லை. ஓரறிவுயிர் இல்லையெனின் மற்ற ஐவகையுயிர்களும் நாளடைவில் இராவென்பதாம். இழிவு சிறப்பும்மை செய்யுளால் தொக்கது. | மேகத்திலிருந்து மழைத்துளிகள் வீழாவிட்டால் பசும்புல்லினது தலையையும் காணுதல் அரிதாகிவிடும். | வானின்று மழைத் துளி வீழ்ந்தால் அல்லது அவ்விடத்து பச்சைப் புல்நுனியுங் காண்பது அரிது என்பது இக்குறட்கருத்து. | மழையில்லாமல் புல்கூட முளைக்காது என விண்ணையும் மண்ணையும் இணைத்து வான்சிறப்பு கூறப்பட்டது. | விசும்பிலிருந்து மழைத்துளி விழாவிட்டால் நிலத்தில் பசும்புல்லின் நுனியையும் காண முடியாது. | ||||||||
18 | வான் சிறப்பு | 17 | நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் | நெடும்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் | நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். | நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி தான் நல்காது ஆகிவிடின் | நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். | The ocean's wealth will waste away, Except the cloud its stores repay. | If clouds restrain their gifts and grant no rain, The treasures fail in ocean’s wide domain. | Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain). | The very nature of oceans, though vast, would diminish if clouds ceased to take up water and replenish rain’s gifts. | ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்துபுகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான்அந்தச் சமுதாயம் வாழும். | பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும். | மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். | முகில்கள் கடல் நீரை முகந்து மீள மழையாய் வழங்காவிடின் விரிகடலும் தன்னியல்பில் குறைவுபடும். | நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் - அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின் - மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின். (உம்மை சிறப்பு உம்மை. தன் இயல்பு குறைதலாவது நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம். ஈண்டுக் குறைத்தல் என்றது முகத்தலை. அது "கடல்குறை படுத்தநீர் கல் குறைபட வெறிந்து"(பரி.பா.20) என்பதனாலும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம். இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது. | நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறையும், மின்னி மழையானது பெய்யாவிடின். தடிந்தென்பதற்கு, கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முளர். இது நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினானும் பொருட்கேடு கூறினார், பொருள்கெட இன்பங்கெடு மென்பதனால் இன்பக்கேடு கூறிற்றிலர். | மேகமானது கடல் நீரை முகந்து சென்று மீண்டும், மழையாகப் பெய்யாவிட்டால் அப்பெரிய கடலும் தன் வளமையில் குறைந்து போகும் | மேகம் நீரைத்தாங்கத் திரும்பப் பொழியாவிடின் நெடுங்கடலும்தன்வளம் குறைந்து விடும். | நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். | மேகமானது கடல் நீரைக் கொண்டு மீண்டும் கடலில் மழையாகப் பெய்யாவிட்டால் மிகப்பெரிய கடலும் தன் இயல்பில் குறைந்து போகும். | நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் - மாபெருங்கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தடிந்துதான் நல்காதாகிவிடின் - முகில் (மேகம்) அதனைக் குறைத்துப் பின்புதான் அதன்கண் பெய்யாது விடின். தன்னியல்பு குறைதலாவது மீன் முதலியன கலியாமையும் முத்து முதலியன விளையாமையும். கடலைக் குறைத்தலென்பது அதில் நீரை முகத்தல். இது பண்டை நம் பிக்கை. 'கடல்குறை படுத்தநீர் கல்குறைபட வெறிந்து' என்று பரிபாடலும் (20), "இலங்க லாழியி னான்களிற் றீட்டம்போற் கலங்கு தெண்டிரை மேய்ந்து கனமழை". என்று சிந்தாமணியும் (32) கூறுதல் காண்க. முகப்பது முகில். முகந்தபின் மேலெழுவது எழிலி. கடல்நீர் ஆவியாக மாறி மேலெழுவது முகிலாவதால், பண்டை நம்பிக்கையும் ஒருமருங்கு உண்மை யானதே. மழைக்கு மூலமாகிய மாபெரு நீர்நிலைக்கும் மழை வேண்டும் என்று மழையின் சிறப்புக் கூறியவாறு. உம்மை சிறப்பும்மை. | மேகம் கடல் நீரைக் குறைத்து மீண்டும் அக்கடலில் மழைபெய்யாவிட்டால் பெரிய கடலும் தன்னுடைய தன்மையில் குறைந்து விடும். | இடி இடித்து மின்னல் மின்னி மழை பெய்யாவிட்டால் மாபெரும்கடலும் தன் இயல்பில் குறைவுபடும் என்பது இக்குறட்கருத்து. | உலகம் வாழத்தேவையான நீரியல்சுழற்சிக்கு இன்றியமையாத வான்சிறப்பு கூறப்பட்டது. | மேகம் மின்னி மழையைத் தான் தராவிட்டால் நெடுங்கடலும் தன் தன்மையில் குறைவுபடும். | ||||||||
19 | வான் சிறப்பு | 18 | சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு | சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. | சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. | சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு | சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. | The earth, beneath a barren sky, Would offerings for the gods deny. | If heaven grow dry, with feast and offering never more, Will men on earth the heavenly ones adore. | If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be ofered in this world, to the celestials. | Should the heavens dry up, worship here of the heavenly ones in festivals and daily rites would wither. | வானமே பொய்த்து விடும்போது, அதன் பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான்ஏது? | மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது. | மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது. | வானம் மழையின்றி வரண்டால் பூமியில் தேவர்க்குத் திருவிழாவும் தினவழிபாடும் சுருங்கிவிடும். | வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின் (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.) | சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார். | மழையானது முறையாகப் பெய்யாவிட்டால், உலகத்திலே, வானோர்க்காக நடத்தப்படும் திருவிழாக்களும், பூசனைகளும் நடைபெறமாட்டா | வானம் வறண்டால் திருவிழாவும் வழிபாடும் உலகில்வானவர்க்கும் நிகழ மாட்டா. | சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. | மழை பெய்யாது போனால், தேவர்களுக்காக இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் திருவிழாக்களோடு கூடிய நாள் வழிபாடும் நடைபெறாது. | வானம் வறக்குமேல் - மழை பெய்யாவிடின்; ஈண்டு வானோர்க்கும் பூசனைசிறப்பொடு செல்லாது - இவ்வுலகில் தேவர்க்கும் அன்றாடு பூசையும் ஆட்டைவிழாவும் நடைபெறா. அன்றாடு பூசை, கதை நிகழ்ச்சி குறியாதும் கொண்டாட்ட மின்றியும் ஒரு சிலரான அக்கம் பக்கத்தார் மட்டும் கலந்தும் கலவாமலும், வழக்கம்போற் சிற்றளவான வழிபாடாகக் கோவிற்குள் மட்டும் நடைபெறுவது; ஆட்டைவிழா ஒருகதை நிகழ்ச்சி குறித்தும் கொண்டாட்டத்துடனும் நாட்டு மக்களையெல்லாம் வரவழைத்தும், பேரளவாக ஊர்வலஞ்செய்து நடைபெறுவது. உம்மை சிறப்பும்மை. பூசுதல் = கழுவுதல், தெய்வப் படிமையை நீரால் துப்புரவாக்குதல். பூசு-பூசி. பூசித்தல்=பூச்சாத்தியும் தேங்காய் பழம் முதலியன படைத்தும் வழிபடுதல். உழவு என்பது பயிர்த்தொழிலின் பின்வினைகளையும் குறித்தல்போல், பூசித்தல் என்பதும் வழிபாட்டின் பின்வினைகளையும் குறித்தது. பூசி-பூசை. ஒ.நோ: ஆசு (பற்று) -- ஆசி (அவாவு)-ஆசை (அவா).பூசி-பூசனை,பூசனம். ஐ,அனை,அனம் என்பன தமிழ் ஈறுகளே. பூசை-பூசாரி. ஆரி தலையாரி என்பதிற்போல் ஓர் ஈறு. பூசாச்சாரி (பூசை+ஆச்சாரி) என்னும் வழக்கு வடமொழியிலுமில்லை. பூ செய் என்பது பூசை என்றாயிற்றென்று கொள்வது பொருந்தாது. பூசி-பூஜ் (வ.), பூசை-பூஜா(வ.), பூசனம்-பூஜன(வ.), பூசனை-பூஜனா(வ.). வேத ஆரியர்க்கு வேள்வி வேட்டலேயன்றிப் படிமைப்பூசையும் கோவில் வழிபாடும் இல்லை. பூஜ் என்னும் சொல்லும் வேதத்திலில்லை. பாரதம் முதலிய பிற்கால வடபனுவல்களிலேயே அது வழங்குகின்றது. | மழை பெய்யாவிட்டால் வானவர்களுக்கும் இவ்வுலகில் நடைபெறுகின்ற சிறப்பான திருவிழாவோடு கூடிய பூசையும் நடக்காது. | வானத்திலிருந்து மழை பெய்யாது இவ்வுலகம் வறண்டு விடுமானால் தெய்வங்களுக்கு எடுக்கப்படும் விழாவும் நாள்தோறும் செய்யப்படும் பூசையும் நடைபெறா என்பது இக்குறட்கருத்து. | வான்சிறப்பு குன்றினால் மனிதனின் மனவளமும் குறையும். | வானம் வறண்டால் விண்ணவர்க்கான திருவிழாவும் வழிபாடும் மண்ணுலகில் நடைபெறா. | ||||||||
20 | வான் சிறப்பு | 19 | தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். | தானம்தவம் இரண்டும் தங்கா, வியன் உலகம் வானம் வழங்கா தெனின். | தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். | தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்காது எனின் | தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். | Were heaven above to fail below Nor alms nor penance earth would show. | If heaven its watery treasures ceases to dispense, Through the wide world ceases gifts, and deeds of ’penitence’. | If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world. | Unless the heavens grant their gifts, neither the giver’s generosity nor the ascetic’s detachment will grace this wide world. | இப்பேருலகில் மழை பொய்த்துவிடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும்தடங்கலாகும். | மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது. | மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். | விண் தன் கொடையை வழங்காதாயின் வள்ளல் தம் கொடைவளனும் தவசியர் தம் துறவறமும் இப்பேருலகுக்கு அருள்புரியா. | வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின். (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.). | தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத்துக்கண் மழை பெய்யாதாயின். இது தானமும் தவமுங் கெடுமென்றது. | மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்திலே பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டுமே நிலையாமற் போய்விடும் | மேலுலகம் நீரை வழங்கா விட்டால் தானமும் தவமும் மறைந்துவிடும். | தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். | அகன்ற இப்பெரிய உலகில் பெய்யாவிட்டால் பிறருக்காகச் செய்யும் தானமும் தனக்காகச் செய்யும் தவமும் இல்லை என்று ஆகிவிடும். | வானம் வழங்காதெனின் - மழை பெய்யாவிடின்; வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா-இப் பரந்தவுலகின்கண் அறக்கொடையும் தவமும் ஆகிய இருவகை நல்வினைகளும் செய்யப்பெறா. தானம் என்பது, நல்வழியில் ஈட்டப்பட்ட பொருளை, தெய்வப் பற்றுக் கரணியமாகக் கோவிற்கும் அடியார்க்கும் , அருளுடைமை கரணியமாக இரப்போர்க்கும், ஈடின்றிக் கொடுத்தல். தவம் என்பது ஐம்புலவடக்கம் பற்றித் துறவறத்தார் கடுமையாகவும், மகப்பேறு முதலியன கருதி இல்லறத்தார் எளிமையாகவும், உடலை வருத்துதல். கடுமையாக வருத்தும் வகைகள் துறவறவியலிற் கூறப்பெறும், எளிமையாக வருத்தும் வகைகள் உண்டி சுருக்குதல், எளிய வுடையுடுத்தல், இன்பம் விலக்கல் முதலியன. "மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்." என்று திருவள்ளுவரும், "முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமந்து" என்று பட்டினத்தடிகளும் பாடியிருப்பதால், தவம் துறவறத்தின் மேலதென்று வரையறுப்பது பொருந்தாது. தானம் பிறர்க்குக்கொடுப்பது; தவம் தன்னை ஒடுக்குவது. தானம் என்பது தென்சொல்லென்பதை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலிற் கண்டு தெளிக. | மழை பெய்யாவிட்டால் அகன்ற இவ்வுலகில் தானம் செய்வதும் தவம் செய்வதும் ஆகிய இரண்டு அறங்களும் நடைபெறா. | பரந்த இவ்வுலகில் மழைபொழியாவிடில் தானமும் தவமும் ஆகிய இரண்டும் நிகழமாட்டா என்பது இப்பாடலின் பொருள். | அறம் தழைக்க மழைபெய்தல் இன்றியமையாதது என்னும் வான்சிறப்பு கூறுவது. | வானுலகம் நீரை வழங்காவிட்டால் அகன்று விரிந்த இவ்வுலகில் தானமும் தவமும் மறைந்து விடும். | ||||||||
21 | வான் சிறப்பு | 20 | நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு | நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. | நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. | நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு | நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. | Water is life that comes from rain Sans rain our duties go in vain. | When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in ‘duty’s ordered way’. | If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water. | No life on Earth can exist without water, and water’s ceaseless flow cannot exist without rain. | உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்படவேண்டும். | எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது. | எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். | நீரின்றி உலகில் ஓருயிரும் வாழாது இடையறா அந்நீரோட்டம் மழையின்றி நிலைபெறாது. | யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் - எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது. ( பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின், இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகம் எனின்' என்றார். இதனை,'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.). | நீரையின்றி யுலகம் அமையாதாயின் யாவர்க்கும் மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது. ஒழுக்கம்- விரதம். இஃது ஆசாரங்கெடுமென்றது. இவை மூன்றினானும் நான்கறமுங் கெடுமென்று கூறினார். | நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது | உலக நடப்புக்கு ஒழுக்கம் வேண்டும்; அவ்வொழுக்கம்மழையில்லா விட்டால் யாரிடமும் இருக்குமா? | நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. | நீர் இல்லையென்றால் எவ்வுயிரும் இவ்வுலகில் வாழ முடியாது. மழை இல்லையெனில் மனித வாழ்க்கையில் ஒழுக்கமும் இல்லை என்று ஆகிவிடும். | யார் யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் - எத்துணை உயர்ந்தவர்க்கும் நீரின்று உலக வாழ்வு நடவாதாயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் மழையின்றி நிகழாது. உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆளும் ஒப்புயர்வற்ற வேந்தனாயினும், மழையின்றி வாழும் வழியில்லை யென்பதாம். | எப்படிப்பட்ட மேலானவர்களுக்கும் நீரில்லாமல் உலகியல் நடைபெறாது. மழையில்லாமல், அந்நீர் இடைவிடாமல் ஒழுகும் ஒழுக்கும் அமையாது. | உலகம் நீர் இன்றி வாழ இயலாது என்பது உண்மை; அதுபோலவே ஒழுக்கவாழ்வும் மழைநீர் இன்றி இல்லை என்பதுவும் உண்மை என்பது இக்குறளின் பொருள். | மழை இன்றேல் உலகஒழுக்கமும் இல்லாமல் போகும் என்பது வான்சிறப்பு. | நீர் இல்லாமல் உலகம் இல்லை என்றால் எவர்க்கும் வான்மழையின்றி ஒழுக்கம் இல்லை. | ||||||||
22 | நீத்தார் பெருமை | 21 | ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு | ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. | ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. | ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு | ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. | No merit can be held so high As theirs who sense and self deny. | The settled rule of every code requires, as highest good, Their greatness who, renouncing all, true to their rule have stood. | The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire. | The Scriptures exalt above every other good the greatness of virtuous renunciates. | ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும். உயர்வாகவும் இடம் பெறும். | தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன. | ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும். | மற்றெல்லாவற்றிலும் மிக உயர்வாக வேத நூல்கள் கூறுவது அறவழி வாழ்ந்து துறந்தார் தம் மகிமையையே. | ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு. (தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும் ; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும் ; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன்இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது உண்டாக,மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும். ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க. 'பனுவல்' எனப் பொதுபடக் கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது.). | ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். தானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது. | ஒழுக்கத்தில் நிலையாக நின்று, பற்றுகளை விட்டவர்களின் பெருமையைப் போற்றிச் சிறப்பித்துச் சொல்வதே நூல்களின் துணிபு | ஒழுக்கம் விடாத துறவிகளின் பெருமையே நூல்கள்ஒருமுகமாகப் பாராட்டும் பெருமை. | ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. | ஒழுக்கத்தில் நிலையாக நின்று பற்று விட்டவரின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் முடிவாகும். | பனுவல் துணிவு - நூல்களது துணிவு; ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறைத்து நின்று உலகப்பற்றைத் துறந்த முனிவரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் - சிறந்த பொருள் எல்லாவற்றுள்ளும் சிறந்ததாக விரும்பும். ஆசிரியர் துணிவு அவர்நூல்மேல் ஏற்றப்பட்டது. "தொண்டரே இறைவ னுள்ளத் தொடுக்கம் தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே". என்னும் ஒளவையார் கூற்றைத் தழுவியது இக்குறள். பற்று, நான் என்று தன்னைப்பற்றிய அகப்பற்றும் எனது என்று தன் உடமைகளைப் பற்றிய புறப்பற்றும் என இருவகையாம். | சீரிய ஒழுக்கத்தில் நின்று துறந்தவர்களது பெருமையினை மேலான பொருள்கள் எல்லாவற்றுள்ளும் மேலானதொன்று விரும்புவது நூல்களினுடைய துணிவாகும். | ஒழுக்கத்திற்காக நீத்தார் பெருமையை விருப்பமான விழுப்பம் என நூல்கள் முடிவு கொள்ளும் என்பது இக்குறட்கருத்து. | நீத்தார் பெருமை மானுட மதிப்பை மிகுவிக்கும். | ஒழுக்கத்தில் நின்று நீத்தார் பெருமையை விரும்பிப் போற்றிக் கூறுவதே நூல்களின் முடிவாகும். | ||||||||
23 | நீத்தார் பெருமை | 22 | துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று | துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று | துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. | துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று | துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. | To con ascetic glory here Is to count the dead upon the sphere. | As counting those that from the earth have passed away, ‘Tis vain attempt the might of holy men to say. | To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead. | Attempting to speak of the renunciate’s magnitude is like numbering all the human multitudes who have ever died. | உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின்பெருமையையும் அளவிடவே முடியாது. | ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும். | பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது. | துறவியரின் பெருமையை எடுத்துக் கூற முயலின், அஃது இவ்வுலகில் வாழ்ந்து மடிந்தோரைக் கணக்கிடலை ஒக்கும். | துறந்தார் பெருமை துணைக் கூறின் - இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும். (முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.). | காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின் உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி யறியலுற்றாற் போலும். து பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று. | பற்றுகளை விட்டவரின் பெருமையைஅளந்து சொல்வதானால் உலகில் இதுவரை இறந்தவர்களைக் கணக்கெடுத்தாற் போன்றதாகும் | துறவிகளின் பெருமையை அளக்க முடியாது. உலகில்இறந்தவர்களை எண்ண முடியுமா? | துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. | பற்றுக்களை விட்டவரின் பெருமையை அளந்து சொல்வது என்பது உலகில் இதுவரை பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவது போன்றது (அதாவது இயலாததாகும்). | துறந்தார் பெருமை துணைக்கூறின் - இருவகைப்பற்றையும் முற்றும் விட்டுவிட்ட முனிவரது பெருமையை இவ்வளவினதென்று அளவிட்டுக் கூறப்புகின்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - அது இவ்வுலகத்தில் இதுவரை பிறந்திறந்தவரையெல்லாம் இத்தனையர் என எண்ணியறியப் புகுந்தாற் போல்வதாம். இரண்டும் முடியாதென்பது. கொண்டால் என்னும் வினையெச்சம் கொண்டு எனத்திரிந்தது. கொண்ட அற்று எனினுமாம். | முனிவர்களது பெருமையினை எண்ணிப்பார்த்து இவ்வளவென்று கூறப்புகுந்தால், அச்செயல் இவ்வுலகில் இதுவரை இறந்தவர்களை எண்ணியறிய முயன்றது போன்றதாகும். | நீத்தாரது பெருமையை அளந்து சொல்வது, உலகத்தில் இறந்து போனவர்களை எண்ணிக் கொள்வதை ஒக்கும் என்பது இக்குறட்கருத்து. | இறந்தார் எத்துணையர் என்பது எண்ணத்தொலையாது; நீத்தார் பெருமை சொல்லி மாளாது. | நீத்தார் பெருமை இவ்வளவினதென்று கூறுதல் இவ்வுலகத்திலே பிறந்து இறந்தாரை எண்ணி அளவு காணப் புகுவது போல. | ||||||||
24 | நீத்தார் பெருமை | 23 | இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு | இருமைவகை தெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. | இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு. | இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு | இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூ ண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. | No lustre can with theirs compare Who know the right and virtue wear. | Their greatness earth transcends, who, way of both worlds weighed, In this world take their stand, in virtue’s robe arrayed. | The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others). | Behold those who have weighed the dual nature of things and followed the renunciate’s way. Their greatness illumines the world. | நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக் குரியவர்களாவார்கள். | இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது. | பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது. | இயற்கையில் சேர்ந்தே நிகழும் வாழ்தலும் மாளலும் போன்ற இரு தன்மைகளையும் சீர்தூக்கி நோக்கின் துறவு மேற்கொண்டோர் பெருமையினால் இவ்வுலகம் விளக்கமுறுகின்றது. | இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.). | பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை உலகத்தில் மிக்கது. இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது. | இம்மை மறுமை என்னும் இரண்டின் கூறுகளைத் தெரிந்து இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டவரின் பெருமையே உயர்ந்ததாகும் | வாழ்வின் இருவேறு நிலைகளை ஆராய்ந்து துறந்தவர்பெருமையே உலகில் விளங்கும். | இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. | இம்மை, மறுமை இரண்டின் கூறுகளை ஆராய்ந்தறிந்து இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டவரின் பெருமையே மிக உயர்ந்ததாகும். | இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டின் துன்பவின்பக் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து; ஈண்டு அறம்பூண்டார் பெருமை - பிறப்பறுத்தற்கு இப்பிறப்பில் துறவறம் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் விளங்கித் தோன்றிற்று. படைகொண்டு பொருது பார்முழுதும் வென்றவரினும், ஐம்புலனையடக்கி ஆசையை வென்றவரே பெரியர் என்பது. பிரிநிலையேகாரம் செய்யுளில் தொக்கது. | பிறப்பு, வீடு என்னும் இரண்டின் வகைகளை அறிந்து துறவறத்தினை மேற்கொண்ட முனிவர்களின் பெருமையே உலகத்தில் சிறந்ததாகும். | இருவேறு நிலைகளை ஆராய்ந்து அறத்தைக் கடமையாக ஏற்றுக் கொண்டவர்கள் பெருமையால் உலகம் விளங்கித் தோன்றுகிறது என்பது இக்குறட்கருத்து. | நீத்தார் பெருமை உலகத்துக்கு ஒளிகாட்டும். | உலக இயற்கையின் இருவேறு நிலைகளை ஆராய்ந்து தெளிந்து அறம் மேற்கொண்டோர் பெருமையே உலகில் விளங்கித் தோன்றும். | ||||||||
25 | நீத்தார் பெருமை | 24 | உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து | உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான் வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து | உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. | உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து | உரனென்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. | With hook of firmness to restrain The senses five, is heaven to gain. | He, who with firmness’ curb the five restrains, Is seed for soil of yonder happy plains. | He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven. | He whose firm will, wisdom’s goading hook, controls his five senses is a seed that will flourish in the fields of Heaven. | உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான். | மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி,#நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான். | அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன். | புத்தி எனும் துறட்டியினால் ஐம்புலனடக்கி ஆளும் மனவுறுதியுடையவன் விண்ணுலகில் விளையும் வித்து ஆவான். | உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம். (இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந்நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.). | அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து. | அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காப்பவன் எவனோ, அவனே மேலான வீட்டுலகிற்கு ஒரு வித்து ஆவான் | அறிவுக்கோலால் ஐம்பொறிகளை அடக்கியவன் மேலானநிலத்துக்கு ஒரு வித்தாவான். | உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. | அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன் மேலான வீடுபேறு அடைவான். | உரன் என்னும் தோட்டியான் - அறிவு என்னும் துறட்டியினால், ஓரைந்தும் காப்பான் - பொறிகளாகிய யானைகள் ஐந்தையும் தன்தன் புலன்மேற் செல்லாது அடக்குபவன்; வரன் என்னும் வைப்பிற்கு - எல்லா நிலங்களுள்ளும் மேலான வீட்டு நிலத்திற்போய் முளைத்தற்குரிய; ஓர் வித்து - ஒரு விளைந்த மணி விதை போல்வான். உரனைத் துறட்டியாக உருவகித்துப் பொறிகளை யானைகளாக உருவகியாதது ஒருமருங்குருவகம். துறடு - துறட்டி - தோட்டி. புரம் = மேல், மேன்மாடம். புரம் - பரம் = மேல், மேலிடம், மேலுலகம். பரம் - வரம் = மேன்மை. வரம் - வரன் (கடைப்போலி) = மேலுலகம், வீட்டுலகம். இனி, வைப்பு என்பதற்குச் சேர்த்து வைக்கும் இடம் என்று பொருள்கொண்டு, வீட்டுலமாகிய களஞ்சியத்திற் சேர்த்துவைக்கப் பெறும் விளைந்த மணிபோல்வான் என்று உரைக்கினும் பொருந்தும். | அறிவு என்னும் அங்குசத்தினால் பொறிகளாகிய ஐந்து யானைகளையும் ஆசைகளில் சொல்லாமல் காப்பவன் எல்லாவற்றிலும் மேலான வீடு என்னும் பேரின்ப நிலத்திற்கு ஒரு வித்து ஆவான். | துறட்டியின் துணையால் யானையை அடக்கி முறைப்படுத்திச் செலுத்துவதைப் போல, உள்ள உறுதியால் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளை வரம்பு மீறிச் செல்லாமல் நெறிப்படுத்தும் நீத்தார் சிறந்த உலகம் என்ற அறுவடைப் பயன் எய்த இங்கு/இப்பொழுது ஒரு வித்து ஆகிறார் என்பது இக்குறட்கருத்து. | புலனடக்கமுடையோர்க்கு மேலான இடம் உண்டு என்ற நீத்தார் பெருமை கூறும் பாடல். | மனஉறுதி என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளையும் அடக்கியவன் மேலான உலகம் என்ற விளைபயன் எய்த ஒரு விதை ஆகிறான். | ||||||||
26 | நீத்தார் பெருமை | 25 | ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி | ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி | ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. | ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி | ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. | Indra himself has cause to say How great the power ascetics' sway. | Their might who have destroyed ‘the five,' shall soothly tell Indra, the lord of those in heaven’s wide realms that dwell. | Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses. | Such is the power of those who subdue the five senses, that even Indra, sovereign of spacious Heaven’s celestials, suffered their curse. | புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக்கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறான். | அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான். | ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான். | ஐம்புலனடக்கியோர் ஆற்றலோ மிகப் பெரிது விண்பேருலகின் வேந்தனாம் இந்திரன் தானும் அன்னார் சாபத்திற்கு ஆளாயினான். | ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று. (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார். | நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று. இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது. | ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனுடைய வலிமைக்கு அகன்ற வானுலகோர் கோமானாகிய இந்திரனே போதிய சான்று | ஐந்தும் அடக்கியவன் ஆற்றலுக்கு வானவர் தலைவனாம்இந்திரனே தக்க சான்று. | ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. | ஐம்பொறிகளின் வழியாக எழுகின்ற ஆசைகளை ஒழித்தவனுடைய வலிமைக்கு வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதிய சான்று. | ஐந்தவித்தான் ஆற்றல் - ஐம்புலனையும் அடக்கின முனிவனது வலிமைக்கு; அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ள தேவர்க்கரசனாகிய வேந்தனே (இந்திரனே) போதிய சான்றாளனாம். ஐந்து என்பது தொகைக்குறிப்பு. ஐந்தும் என்னும் முற்றும்மையும் ஆற்றற்கு என்னும் 4-ஆம் வேற்றுமையுருபும் செய்யுளால் தொக்கன. "தான் ஐந்தவியாது சாபமெய்தி நின்று அவித்தவனதாற்றல் உணர்த்தினானாதலின், 'இந்திரனே சாலுங் கரி' யென்றார்". என்று பரிமேலழகர் அகலிகை சாவிப்புக் கதையை இங்கெடுத்துக் காட்டியது பொருந்தாது, அவள் கணவனான கோதமன் ஐந்தவித்தானல்லன் ஆகலின். "இந்திரன் சான்று என்றது, இவ்வுலகின்கண் மிகத்தவஞ் செய்வார் உளரானால், அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியன் என்றவாறு". என்று மணக்குடவரும், "ஈண்டுத் தன்பதங் கருதித் தவஞ்செய்யும் நீத்தார்மாட்டுத் திலோத்தமை முதலிய தெய்வமகளிரை விடுத்து, மற்று அத்தவமழித்துந் தவம் அழியாமை நிலைநிற்கையாலும், தனது பதம் விரும்பாமையாலும், தானே சான்றாய் அமையும் என்றவாறு". என்று காளிங்கரும் கூறிய விளக்கம் ஒருவாறு பொருந்தும். ஆயினும், ஆசிரியர் கருதிய கதை ஒன்றிருத்தல்வேண்டும். அது இன்று அறியப்படவில்லை. இந்திரன் என்பது வேந்தன் என்னும் தென்சொற்கு நேரான வடநாட்டுச் சொல். வேந்தன் மருத நிலத் தமிழ்த்தெய்வம். "வேந்தன் மேய தீம்புன லுலகமும்" (தொல். 951) | புலன்களில் சொல்லுகின்ற ஐந்து ஆசைகளையும் அடக்கியவனுடைய ஆற்றலுக்கு அகன்ற வானத்தில் உள்ளவர்களின் தலைவனான இந்திரனே சான்றாவான் (சாட்சியாவான்). | ஐம்பொறிகளையும் அடக்கினவனது வல்லமைக்குப் பரந்த வானுலகத்திலுள்ளவர்களுக்குத் தலைவனாகிய இந்திரனே சான்றாக அமைவான் என்பது குறட்கருத்து. . | நீத்தார் பெருமை ஐந்தடக்கல் ஆற்றலில் பெறப்படுகிறது. | ஐம்புலன்களையும் அடக்கியவன் வலிமைக்கு பரந்த வானத்துள்ளார் தலைவனாம் இந்திரனே சான்று. | ||||||||
27 | நீத்தார் பெருமை | 26 | செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் | செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் | செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். | செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கு அரிய செய்கலாதார் | செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். | The small the paths of ease pursue The great achieve things rare to do. | Things hard in the doing will great men do; Things hard in the doing the mean eschew. | The great will do those things which is d ifficult to be done; but the mean cannot do them. | The magnificent ones are they who can dispatch the most difficult tasks; the insignificant ones are they who cannot. | பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச்செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும். | பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே. | செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர். | பெரியோர் மற்றையோர் செய்ய முடியாதவற்றையும் செய்து முடிப்பர் சிறியோர் அங்ஙனம் செய்ய வல்லாரல்லர். | செயற்கு அரிய செய்வார் பெரியர் - ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்;செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். (செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இமயம்,நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புகள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய, 'நாலிரு வழக்கின் தாபதபக்கம்'(புறப்பொருள் வெண்பாமாலை, வாகைத்திணை14) என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.). | செயற்கு அரியன செய்வாரைப் பெரியோரென்று சொல்லுவர். அவற்றை செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினுஞ் சிறியோரென்று சொல்லுவர். செயற்கரியன- இயம நியம முதலாயின. இவ்வதிகாரம் நீத்தார் பெருமையென்று கூறப்பட்டதாயினும், துறந்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார். செயற்கரியன செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவரென்று இது கூறிற்று. | செய்வதற்கு அருமையானவற்றைச் செய்பவர் பெரியோர்; சிறியோர், செய்வதற்கு அரியவற்றைச் செய்யமாட்டாதவர் ஆவர் | அரிய செயல்களைச் செய்பவர் பெரியவர் அவற்றைச் செய்யமுயலாதவர் சிறியவர். | செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். | செய்வதற்கு அருமையானவற்றைச் செய்பவரே பெரியோர்; செய்வதற்கு அரிய செயல்களை செய்ய முடியாதவர் சிறியோர். | செயற்கு அரிய செய்வார் பெரியர் - உயர்திணை எனப்படும் மக்களுள் பிறர் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்து முடிப்பவர் பெரியோர்; செயற்கு அரிய செய்கலாகாதார் சிறியர் - பிறர் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்யாது எளிய செயல்களையே செய்து முடிப்பவர் சிறியோர். "செயற்கரியவாவன இயமம் நியமம் முதலாய எண்வகை யோக வுறுப்புகள்". என்பர் பரிமேலழகர். எண்வகை ஓக உறுப்புகள் கடிவு (இமயம்), நோன்பு (நியமம்), இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராணாயாமம்), ஒருக்கம் (பிரத்தியாகாரம்), நிறை (தாரணை), ஊழ்கம் (தியானம்), ஒன்றுகை (சமாதி) என்பன. இவற்றுள் ஒருக்கமும் நிறையுமான மனவடக்கம் சிறந்ததாம். "வெந்தழலி னிரதம்வைத் தைந்துலோ கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம் வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம் விண்ணவரை யேவல்கொளலாம் சந்ததமு மிளமையோ டிருக்கலா மற்றொரு சரீரத்தினும் புகுதலாம் சலமே னடக்கலாம் கனன்மே லிருக்கலாம் தன்னிகரில் சித்திபெறலாம் சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற திறமரிது" என்றார் தாயுமான அடிகள். ஆதலால், மனமடக்குதலும் அவாவறுத்தலுமே செயற்கரிய செயல்கள் என அறிக. செயற்கெளியவாவன உலகத்தொழில் செய்தலும் பொருளீட்டுதலும் இன்பந்துய்த்தலும் எளியாரை வாட்டுதலுமாம். இல்லறம் துறவறத்தை நோக்க எளிதாயினும், அதையுஞ்செய்ய இயலாதவர் சிலர் உளர். அவரே சிறியர் என்னுங் கருத்தினர் "செயற்குரிய செய்கலாதார்" என்று பாட வேறுபாடு காட்டுவர். அவ்வேறுபாடு பெரியர் சிறியர் என்னும் இரு வகுப்பார்க்கும் இடையே வேறொரு வகுப்பாரையும் வேண்டுதலின், அது அத்துணைச் சிறந்ததன்றாம். | செய்தற்கு அருமையான செயல்களைச் செய்பவர்கள் பெரியோர்கள் ஆவார்கள். செய்வதற்கு அறிய செயல்களைச் செய்யமாட்டாமல் எளியவற்றைச் செய்பவர்கள் சிறியோர்களாவார்கள். | செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர்கள் பெரியவர்கள்; அரிய செயல்களைச் செய்ய இயலாதோர் சிறியர் என்பது இக்குறட்கருத்து. | அரிய செயல்களை ஆற்றி பெரியர் ஆகும் நீத்தார் பெருமை கூறும் பாடல். | அரிய செயல்களைச் செய்யும் நீத்தார் பெரியர்; அவற்றைச் செய்ய இயலாதாவர் சிறியவர். | ||||||||
28 | நீத்தார் பெருமை | 27 | சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு | சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின் வகை தெரிவான் கட்டே உலகு | சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. | சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் வகை தெரிவான்-கட்டே உலகு | சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. | They gain the world, who grasp and tell Of taste, sight, hearing, touch and smell. | Taste, light, touch, sound , and smell: who knows the way Of all the five, -the world submissive owns his sway. | The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell. | Touch, taste, sight, smell and hearing are the senses— he who controls these five magically controls the world. | ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும். | சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம். | சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம். | சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களையும் கட்டுப்படுத்த வல்லானே உலக இன்பங்களையும் கட்டுப்படுத்த வல்லான். | சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம். (அவற்றின் கூறுபாடு ஆவன :பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். 'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவிஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் , தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.). | சுவை முதலாகக் கூறிய வைந்து புலன்களின் வகையை யாராய்வான் கண்ணதே யுலகம். எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காணக் காரணந் தோற்றுமாதலால், காரியமான வுலகம் அறிவான் கண்ணதா மென்றவா றாயிற்று. | சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் தெரிந்து நடப்பவனிடமே உலகம் உள்ளது | சுவை ஒளி ஊறு ஓசை மணம் என்ற ஐவகைகளை அறிந்தவன்வசம் உலகம். | சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. | சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் தான் உலகம் உள்ளது. | சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் என்னும் பூதமூலங்கள் ஐந்தின் கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்ந்தறியும் ஓகியின் அறிவிற்குள் அடங்கியதே உலகம். காட்சி ஒளியினால் தோன்றுதலின் ஒளியெனப்பட்டது. உறுவது ஊறு. உறுதலாவது உடம்பின் உள்ளும் புறம்பும் படுதல் அல்லது தொடுதல். உலக வழக்கில் தீய பொருளிலேயே வழங்கும் நாற்றம் என்னும் சொல், இங்கு நறுமைக்குந் தீமைக்கும் பொதுவாய் நின்றது. உகு - யுஜ் (வ). ஓதம் - யோக (வ.g). ஓகி - யோகின் (வ.g). ஐந்தின் கூறுபாடாவன, மேற்கூறிய பூதமூலம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய நிலம், நீர், தீ, வளி, (காற்று) வெளி என்னும் பூதங்கள் ஐந்தும், அவற்றொடு தொடர்புடைய புலனைக் கொண்ட மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் அறிவுப் பொறியைந்தும், அவற்றைப்போல் உடம்பின் கூறாகிய நாவு, கை, கால், அண்டி (எருவாய்) குறி (கருவாய்), கருமப்பொறி யைந்தும் ஆக இருபதுமாம். இனி, 'வகைதெரிவான் கட்டு' என்றதினால், தெரிகின்ற ஆதனும் (புருடனும்) , அவன் தெரிதற் கருவியாகிய மதி (மான்) தன்முனைப்பு (அகங்கார) மனங்களும், அவற்றிற்கு. முதலாகிய சித்தமும் (மூலப்பகுதியும்) பெறப்படும். இவற்றை ஆராயும் வகை : - ஆதன் தான் ஒன்றினின்று தோன்றாமையாலும் பிறிதொன்றைத் தோற்றுவியாமையாலும் தனிநிலையாம். மூல முதனிலை ( சித்தம் ) தான் ஒன்றினின்று தோன்றாமையால் முதனிலையாம். மதியும் அதனின்று தன்முனைப்பும் அதனின்று பூத மூலங்களுமாக ஏழும், மூல முதனிலையினின்று முறையே தோன்றுவதனாலும் மன முதலியவற்றைத் தோற்றுவித்தலாலும் இடைநிலையாம். மனமும் அறிவுப்பொறிகளும் கருமப்பொறிகளும் பூதங்களுமாகிய பதினாறும், இடைநிலையினின்று தோன்றுவதனாலும் வேறெவற்றையுந் தோற்றுவியாமையாலும் இறுதிநிலையாம். இனி, சாங்கியத்திற்கு மாறாக, அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு என்றமையால், எல்லாவற்றொடுங் கலந்துநின்று அவற்றையியக்கி முத்தொழிற்படுத்தும் இறைவனென்னும் முழு முதனிலையொடு சேர்க்க. மெய்ப்பொருள்கள் மொத்தம் இருபத்தாறாம். ஆகவே, "சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல்" என்பது தவறாம் துண்ணிய அடிப்படைப் பாகுபாட்டில், ஆவிவடிவான உயிராதனும் (சீவாத்துமாவும்) பரவாதனும் (பரமாத்துமாவும்) காற்றுள் அடங்குதலால், ஐந்தின் வகையென்று எல்லாவற்றையும் அடக்கினார் ஆசிரியர். வெளி என்னும் இடத்தின் உண்மை நீட்சி அல்லது தொடர்ச்சியே காலம். ஐம்பூதங்களும் அவற்றொடு தொடர்புள்ள பொறிபுலன்களும் பூதம் பூதத்தன்மை பொறி புலன் நிலம் நாற்றம் மூக்கு முகர்தல் நீர் சுவை வாய் சுவைத்தல் தீ ஒளி கண் காண்டல் வளி ஊறு மெய் உறுதல்(தொடுதல்) வெளி ஒசை செவி கேட்டல் "வகை தெரிவான் கட்டு" என்றது உடம்பொடு புணர்த்தல் என்னும் உத்தி ; அதாவது, ஒர் உண்மையை அல்லது நெறியை வெளிப்படையாகக் கூறாது ஒரு சொல்லாட்சியாற் பெறவைத்தல். கண்ணது - கட்டு ( கண் + து ). மூலப்பகுதியின் சேர்க்கையாற் கட்டுற்ற ஆதன் ( புருடன் ) அதைத்தன்னின் வேறாகக் காண்டலே வீடுபேறென்பது சாங்கியக் கொள்கை. அதிற் கடவுட் கொள்கையில்லை. | சுவை, ஒளி, ஊரு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தின் கூறுபாட்டினை ஆராய்பவனின் (மனிதரின்) அறிவினிடத்தே உள்ளதாம் உலகம். | சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் இவ்வைந்தின் வகைகளை ஆராய்ந்து அறிவான் வசம் உலகம் என்பது இக்குறளின் கருத்து. | ஐம்புலன்களையும் ஆராய்ந்தாளும் நீத்தார் பெருமை கூறும் பாடல். | சுவை, ஒளி, ஊறு, ஒலி, மணம் இவற்றின் வகைகளை ஆய்ந்து அறிந்தவன் வசம் உலகம். | ||||||||
29 | நீத்தார் பெருமை | 28 | நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் | நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் | நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். | நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும் | நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். | Full-worded men by what they say, Their greatness to the world display. | The might of men whose word is never vain, The ‘Secret word’ shall to the earth proclaim. | The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world. | Their own subtle sayings reveal to the world the greatness of men whose words prove prophetic. | சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும். | நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும். | பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும். | மறைமொழி உண்மையை வெளிப்படுத்தலால் அதனைக் கூறும் முன்னுணர்வோர் பெருமையும் உணரப்படும். | நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். ('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல்! பயனான் உணர்த்துதல்.). | நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று. | நிறைவான மொழிகளையே சொல்லும் சான்றோரின் பெருமையை, உலகத்தில் நிலையாக விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும் | நிறைமொழி மாந்தரின் பெருமையை உலகுக்கு அவர்கூறியஉண்மைகளால் அறியலாம். | நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். | பயன் நிறைந்த மொழிகளையே பேசும் பற்றற்ற துறவியாரின் (சான்றோரின்) பெருமையை அவருடைய ஆணையாக வழங்கும் மந்திரங்களே உலகுக்கு உணர்த்தி விடும். | நிறைமொழி மாந்தர் பெருமை - பயன் நிறைந்த சொற்களையுடைய துறவியரின் பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தில் அவர் கட்டளையாகச் சொல்லப்பெறும் மந்திரங்களே கண்கூடாகக் காட்டிவிடும். இக்குறள், "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப". என்னும் தொல்காப்பிய நூற்பாவைத் ( 1484 ) தழுவியது. மறை மொழி அல்லது மந்திரம் என்பது, வாய்மொழியும் சாவிப்பும் என இருவகைப்படும். திருமூலரின் திருமந்திரமும், நம்மாழ்வாரின் திரு வாய்மொழியும் வாய்மொழிபோல்வன; கவுந்தியடிகள் காவிரித் தென்கரைச் சோலையொன்றில் வம்பப்பரத்தையும் வறுமொழியாளனுமான இருவரை நரிகளாக்கியது சாவிப்பு. மறை ( வேத ) த் தன்மையுடைய மொழி மறைமொழி ; மனத்திண்மையாற் கருதியது நிறை வேறும் மொழி மந்திரம் . மன் + திரம் = மந்திரம். முன்னுதல் = கருதுதல். முன் - மன். திரம் = திறம். ஒ.நோ : மன்று - மந்து - மந்தை. முரி - முறி ( வளை ). ஆரியர் வருகைக்கு முற்பட்டதும், எண்வகை வனப்பான பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்னும் எழுநிலத்திற்கும் இலக்கியமாயிருந்ததுமான முதலிரு கழகத் தூய தமிழிலக்கியம் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டதென அறிக. | பயன் நிறைந்த மறைமொழி எனப்படும் சொற்களைச் செல்லும் முனிவருடைய பெருமையினை அவர்கள் ஆணையாகக் சொல்லும் அச்சொற்களே (மறைமொழி) காட்டிவிடும். | பயன் நிறைந்த சொற்களைக் கூறும் நீத்தாரது பெருமையை நிலத்தில் அவர்கள் அருளிய மறைமொழிகளே காட்டும் என்பது இக்குறட்கருத்து. | நீத்தார் பெருமை யை நிலத்தின் கண் அவர் ஆற்றிய மெய்யறிவு மொழியே பேசும். | ஆற்றல் நிறைந்த சொற்கள் பேசும் நீத்தாரின் பெருமையை உலகுக்கு அவர் கூறிய வாய்மொழிகளால் அறியலாம். | ||||||||
30 | நீத்தார் பெருமை | 29 | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது. | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. | குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது. | குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி கணம் ஏயும் காத்தல் அரிது | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. | Their wrath, who've climb'd the mount of good, Though transient, cannot be withstood. | The wrath ‘tis hard e’en for an instant to endure, Of those who virtue’s hill have scaled, and stand secure. | The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted. | It is impossible to endure, even for a second, the wrath of those who have scaled and stand upon the mountain called virtue. | குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது. | நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம். | நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும். | குணம் எனும் மாமலையில் ஏறி நிற்கும் துறவியரின் கோபத்தைக் கணநேரமும் பொறுக்கமுடியாது. | குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி; 'கணம் ஏயும்' காத்தல் அரிது - தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது. (சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோ வழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின்,கணம் ஏயும் என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், 'காத்தல் அரிது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.). | குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார்மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது. நகுஷன் பெரும்பாம்பாயினன். இது வெகுளி பொறுத்தலரிதென்றது. | நல்ல குணம் என்கின்ற குன்றின்மேல் ஏறி நின்ற சான்றோரால், சினத்தை ஒரு கணமேனும் பேணிக் காத்தல் அருமையாகும் | குணக்குன்று போலும் சான்றோரின் சினத்தைச் சிறுபொழுதும்யாரும் தாங்க முடியாது. | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. | நல்ல பண்புகளாகிய குன்றின் மேல் ஏறி நிற்கும் சான்றோரின் சினத்தை ஒரு கணமேனும் சமாளித்தல் முடியாததாகும். | குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - நற் குணத்தொகுதி என்னும் மலையின் கொடுமுடியேறி நின்ற முனிவரின் கடுஞ்சினத்தை; கணமேயும் காத்தல் அரிது - சினக்கப்பட்டாரால் நொடி நேரமேனுந் தடுத்தல் முடியாது. குன்று சிறுமலை. இங்கு மலையென்னும் பொதுப் பொருளது எரிக்கும் நெருப்புப் போன்றது வெகுளி. வேகு - வெகுள் - வெகுளி திண்மையும் பெருமையும் வண்மையும் பற்றி நற்குணத்தொகுதியை மலையாக வுருவகித்தார், இக்குறட்கு, நற்குணமலையாகிய முனிவர் நொடிநேரமேனும் தம் உள்ளத்திற் சினத்தைப் பேணுதலில்லை யென்று பொருள் கூறுவாருமுளர்.அது உரையன்மை,முந்தின குறளாலும் "சொல்லொக்குங் கடிய வேகச் சுடுசரம்" என்னுங் கம்பர் கூற்றாலும் ( பால. தாடகை. 71) கண்டு தெளிக. உம்மை இழிவு சிறப்பு. | உயர்ந்த குணமென்னும் குன்றின்மேல் நின்ற முனிவர்களுடைய கோபம், இருப்பது கணநேரமேயானாலும் கோபிக்கப்பட்டவர்களால் அக்கோபம் தடுப்பதற்கு முடியாததாகும். | குணமாகிய மலையின் மேல் நின்றவர் ஒரு கணப்பொழுதும் சினத்தைத் தன் மாட்டு வைத்துக் காத்தல் இல்லை என்பது இக்குறட்கருத்து. | ஒருகணம் கூட சினம் கொள்ளமுடியாத நீத்தார் பெருமை கூறும் குறள். | குணம் என்னும் மலையின் மீது ஏறி நின்றவர் சினத்தை கணப்பொழுதேனும் தாங்கி நிற்க மாட்டார். | ||||||||
31 | நீத்தார் பெருமை | 30 | அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் | அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் | அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். | அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும் செம் தண்மை பூண்டு ஒழுகலான் | அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். | With gentle mercy towards all, The sage fulfils the vitue's call. | Towards all that breathe, with seemly graciousness adorned they live; And thus to virtue’s son’s the name of ‘Anthanar’ men give. | The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness. | Pious men are called the priestly ones, for they are clothed in robes of compassion for all life. | அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார். | எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர். | எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர். | எல்லா உயிரினத்திலும் கருணை காட்டி வாழ்தலால் துறவியர் அந்தணர் எனப்படுவர். | எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது. | எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது. | எவ்வகைப்பட்ட உயிருக்கும் செவ்வையான அருளை மேற்கொண்டு நடப்பதனால், அந்தணர் எனப்படுவோரே அறவோர் ஆவர் | அந்தணர் என்பவர் துறவிகளே. ஏன்? அவர் எவ்வுயிர்க்கும் அருள்செய்பவர். | அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். | எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகும் அறவோரே அந்தணர் என்பவராவர். | எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் - எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் செம்மையான குளிர்ந்த அருளைப் பூண்டொழுகுதலால்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சிறப்பித்துச் சொல்லப்படுபவர் துறவியரே. அந்தணர் என்னுஞ்சொல் அழகிய குளிர்ந்த அருளையுடைவர் என்னும் பொருளது. அருளாவது ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரைப்பட்ட எல்லாவுயிர்களிடத்தும் இரக்கங் கொண்டு அன்பு செய்தல். இது துறவியர்க்கே இயலும். அதனால், அருளுடைமையைத் துறவுநிலைக்குரிய முதலறமாகக் குறித்தார் திருவள்ளுவர். தமக்கு வாழ்வளித்துக் காக்கும் தலைநாகரிக மக்களையுந் தாழ்வாகக் கருதும் தந்நல ஆணவப் பிராமணர் அந்தணராகார் என்பது, இதனால் அறிவிக்கப்பட்டது. பூணுதல் நோன்பாக மேற்கொள்ளுதல். 'என்போர்' செயப்பாட்டுவினை செய்வினையாக நின்றது; 'மற்று' அசைநிலை. உம்மை முற்றும்மை. | எல்லா உயிர்களிடத்திலும் அருளுடன் நடந்துகொள்ளுவதால் அந்தணர் என்று சொல்லவப்படுபவர் அறவோர்களாகிய முனிவர்களே யாவார்கள். | எல்லா உயிர்களிடத்தும் அருள்கொண்டு ஒழுகுவராதலால் அந்தணர் என்போர் அறவோர் என்பது இக்குறட்கருத்து. | நீத்தார் பெருமை தண்ணளி கொண்டொழுகும் பண்பால் விளக்கமுறும். | அந்தணர் எவ்வுயிர்க்கும் கருணை காட்டுபவர்கள் ஆதலால் அவர்கள் அறவோர் ஆவர். | ||||||||
32 | அறன் வலியுறுத்தல் | 31 | சிறப்புஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தினுஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு | சிறப்புஈனும்; செல்வமும்ஈனும் அறத்தின் ஊங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு | சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. | சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு | சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. | From virtue weal and wealth outflow; What greater good can mankind know? | It yields distinction, yields prosperity: what gain Greater than virtue can a living man obtain? | Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ? | Virtue yields Heaven’s honor and Earth’s wealth. What is there then that is more fruitful for a man? | சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது? | அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?. | அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?. | அறமானது விண்ணிற் சிறப்பும் மண்ணிற் செல்வமும் தருமாதலின் மனிதனுக்கு அறத்தினும் அதிக பயன் தருவது எது? | சிறப்பு ஈனும் - வீடுபேற்றையும் தரும்; செல்வமும் ஈனும் - துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது? (எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம் : மேன் மேல் உயர்தல், ஈண்டு 'உயிர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனால் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது. | முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று கூறிற்று. | அறமானது சிறப்பைத் தரும்; செல்வத்தையும் தரும்; அதனால் அறத்தை விட உயிருக்கு ஆக்கம் தருவது வேறு யாதுமில்லை | அறம் மதிப்பும் செல்வமும் தரும்; ஆதலின் அறத்தினும்வாழ்வுக்கு நல்லது வேறில்லை. | சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. | அறம், வீடு பேற்றையும் சுவர்க்கம் முதலிய செல்வத்தையும் தரும். ஆதலால் மக்கள் உயிர்க்கு அறத்தை விட நன்மை உடையது வேறு ஒன்றுமில்லை. | சிறப்பு ஈனும் - மறுமையில் விண்ணுலக வின்பத்தையும் வீடுபேற்றையுந் தரும்; செல்வமும் ஈனும் - இம்மையிற் செல்வத்தையுந்தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவனோ - ஆதலால் மக்களுயிர்க்கு அறத்தைவிடச் சிறந்த ஆக்கம் எதுதான்? எல்லாப் பேற்றுள்ளும் சிறந்த பேரின்ப வீடும் சிற்றின்பத்துட் சிறந்த விண்ணின்பமும் சிறப்பெனப் பெற்றன. செல்வமும் விண்ணின்பமும் இல்லறத்தார்க்கும் வீடு துறவறத்தார்க்கும் உரியனவாம். ஆகுவது ஆக்கம். ஆகுதல் மேன்மேலுயர்தல் 'அறத்தினூஉங்கு' இன்னிசை யளபெடை. ஆக்கம் என்றது அகற்கேதுவை. ஓ அசைநிலை. | பொருள்: சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு ஆக்கம் ‡ வீட்டினைக் கொடுக்கும் செல்வத்தையும் கொடுக்கும் அறத்தின் மேற்பட்ட நல்வினை, உயிர்க்கு எவன் ‡ மனித உயிர்க்கு யாது? (ஒன்றும் இல்லை). அகலம்: ‘ஓகாரம் அசை. ஆக்கம் - செல்வம். அஃது ஈண்டு ஆகுபெயர், அதனைத் தரும் நல்வினைக்கு ஆயினமையால். இன்பத்தையும் புகழையும் தரும் செல்வத்தையும் தழுவி நிற்றலால், செல்வமும் என்பதன் உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. உம்மையைச் செல்வம் என்பதனோடு மாத்திரம் சேர்ந்திருத்தலானும், ஈனும் என்னும் சொல்லைச் சிறப்பு என்பதனோடும் செல்வம் என்பதனோடும் சேர்ந்திருத்தலானும், மேற்கண்டவாறு பொருள் உரைத்தலே பொருத்தம். சிறப்பீனுஞ் செல்வமாவது, ஞானம். கருத்து: இன்பமும் புகழும் தரும் செல்வத்தோடு வீட்டைத் தரும் செல்வத் தையும் அறம் கொடுக்கும். | பெருஞ்சிறப்பினையும் செல்வத்தினையும் அளிக்கின்ற அறத்தினைவிட மக்கள் உயிருக்கு மேம்பட்ட செல்வம் வேறு என்ன இருக்கின்றது?. | பெருமையைப் பெற்றுத் தரும்; செல்வத்தையும் அளிக்கும் அறத்தினும் உயிர் வாழ்வுக்கு உயர்வு தருவது எதுவோ? என்பது இக்குறட்கருத்து. | வாழ்வுக்கு உயர்வு தரும் எனக்கூறி அறன் வலியுறுத்தல் செய்யும் பாடல் | அறம் பெருமையையும் பொருளையும்கூடத் தரும். அதனைக் காட்டிலும் உயிர்க்கு மேன்மை தருவது எது? | |||||||
33 | அறன் வலியுறுத்தல் | 32 | அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்குஇல்லை கேடு | அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு | அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. | அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கு இல்லை கேடு | அறந்தினூஉங்கு ஆக்கம் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. | Virtue enhances joy and gain; Forsaking it is fall and pain. | No greater gain than virtue aught can cause; No greater loss than life oblivious of her laws. | There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it. | There is nothing more rewarding than virtue, nor anything more ruinous than its neglect. | நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தைமறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை. | அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை. | ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை. | அறத்தினும் சிறந்த பயன் தரவல்லது வேறெதுவுமில்லை அறத்தைக் கைவிடின் அழிவைத் தருவதும் வேறெதுவுமில்லை. | அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. ('அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.). | ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை. இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று. | அறநெறியோடு வாழ்வதைக் காட்டிலும் உயிருக்கு நன்மையானதும் இல்லை; அறநெறியைப் போற்றாமல் மறத்தலைக் காட்டிலும் கேடானதும் இல்லை | அறத்தைப்போல நன்மை வேறில்லை; அதனை மறத்தலைப்போலக் கேடு வேறில்லை. | அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. | ஒருவனுக்கு, அறத்தைச் செய்தலினும் மேம்பட்ட நன்மையைத் தருவதும் இல்லை. அதை மயக்கத்தால் மறந்து விடுதலினும் மேம்பட்ட கேடும் இல்லை. | அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவர்க்கு அறஞ்செய்வதிலும் சிறந்த ஆக்கவழியுமில்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதை மறந்து செய்யாது விடுவதினும் பெரிய கெடுதல்வழியு மில்லை. 'அறத்தினூஉங்கு' இன்னிசை யளபெடை. செய்யாமையாகிய எதிர்மறையொடு வேற்றுமைப் படுத்திக் காட்டற்கு, மேற்கூறிய உடன்பாட்டுச் சொல்லியத்தை (வாக்கியத்தை) வழிமொழிந்தார். | பொருள்: அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை‡ அறத்தின் மிக்க நல்வினையும் இல்லை. அதனை மறத்தலின் ஊங்கு கேடும் இல்லை ‡ அதனை மறத்தலின் மிக்க தீவினையும் இல்லை. அகலம்: கேடும் என்பதன் உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. ஆக்கம், கேடு என்பன ஆகுபெயர்கள், அவற்றைத் தரும் வினைகளுக்கு ஆயினமையால். மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘மறத்தலினூங் கில்லையாம். கருத்து:அறத்தின் மேம்பட்ட நல்வினை இல்லை; அதனைச் செய்யாது விடுதலிற் கீழ்ப்பட்ட தீவினை இல்லை. | ஆறாம் செய்வதனைவிட மேம்பட்ட செல்வமும் இல்லை; அந்த அறத்தினை அஞ்ஞானத்தால் மறைப்பதை விடப் பெரிய தீமையும் இல்லை. | அறம் செய்வதைவிட மேன்மையானது இல்லை; அதைச் செய்ய மறத்தலைவிட மிக்கக் கேடும் இல்லை என்பது இக்குறட்கருத்து | அறத்தைப் பற்றிச் சிந்திப்பதை எப்பொழுதும் நிறுத்தாதே என்னும் அறன் வலியுறுத்தல் பாடல். | அறம் செய்வதிலும் மேற்பட்ட மேன்மை இல்லை; அதனை மறத்தலைவிட மிக்கக் கேடு வேறில்லை. | |||||||
34 | அறன் வலியுறுத்தல் | 33 | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல் | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாய்எல்லாம் செயல். | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல் | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். | Perform good deeds as much you can Always and everywhere, o man! | To finish virtue’s work with ceaseless effort strive, What way thou may’st where’er thou see’st the work may thrive. | As much as possible, in every way, incessantly practise virtue. | Be unremitting in the doing of good deeds; do them with all your might and by every possible means. | செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும். | இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க. | செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். | நற்செயல்களைச் சளைக்காது செய்து விடுக, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இயலும் வகையில் ஆற்றி விடுக. | ஒல்லும் வகையான் - தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் - அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க. (இயலுந்திறம் ஆவது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.). | தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாமிடமெல்லாஞ் செய்க. இயலுந்திறமென்பது மனமொழிமெய்களும் பொருளும். செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாகிய பல விடங்களும் ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென்றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது. | நம்மாலே முடிந்த வகைகளில் எல்லாம், முடியக்கூடிய வழிகளில் எல்லாம், அறச் செயல்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும் | இயன்ற அளவு இடைவிடாது அறத்தை ஏற்கும் இடமெல்லாம்செய்க. | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். | ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவுக்கு அறச்செயல்களை இடைவிடாமல் செய்ய வேண்டும். | அறவினை - அறமாகிய நல்வினையை; ஒல்லும் வகையான் - தத்தமக் கியன்றவாறு; செல்லும்வாய் எல்லாம் ஒவாதே செயல் - அது நடை பெறக் கூடிய வழியெல்லாம் இடைவிடாது செய்க. ஒல்லும் வகையாவது, இல்லற வினையை இடம்பொருளேவற்கு ஏற்பவும், துறவறவினையை உடம்புநிலைக்கும் உளநிலைக்கும் ஏற்பவும், செய்தல். செல்லும் வாய்கள் மனம் மொழி மெய் என்னும் முக்கரணங்கள். அவற்றாற் செய்யப் பெறுவன நல்லெண்ணம் நன் சொல் நற்செயல் என்பன. வாய் என்பது வழியை மட்டுமன்று இனத்தையுங் குறித்தலால், 'செல்லும் வாய்' என்பன எல்லா அறத் துறைகளுமாம். | பொருள்: செல்லும் வாய் எல்லாம் ‡ செய்யக்கூடும் இடத்திலெல்லாம், ஒல்லும் வகையான் ‡(தனக்கு) இயலும் அளவினால், ஓவாது அறவினை செயல் ‡ (ஒருவன்) இடைவிடாது அறவினையைச் செய்க. அகலம்: ஏகாரம் அசை. அறவினை ‡ நல்வினை. ‘ஆற்றுந் துணையா லறஞ் செய்கை முன்னினிது’‡இனியவை நாற்பது. தாமத்தர் பாடம் ‘ஒல்லும் வாயயல்லாம்’. கருத்து: செய்யக்கூடிய இடங்களிலெல்லாம் அறவினையை இடைவிடாது செய்க. | தம்மால் முடியக்கூடிய வழிகளால் இடைவிடாமல் செல்லக்கூடிய இடங்களில் எல்லாம் அறத்தினைச் செய்தல் வேண்டும். | செல்லும்வாய் என்ற தொடர் செய்வதற்கு இடமாகிய வாய்ப்புக்கள் என்ற பொருள் தரும். | இயன்ற வழி வகைகளில் அறச்செயல்களை இடைவிடாமல் ஏற்கும் இடமெல்லாம் செய்க என்பது இக்குறட்கருத்து. | இயன்ற அளவு அறச்செயல்களை இடைவிடாது, செய்யத்தகும் இடமெல்லாம் செய்க. | கிடைக்கிற கேப்பில எல்லாம் கோல் போடுறீயே சிவாஜி | ||||||
35 | அறன் வலியுறுத்தல் | 34 | மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்; ஆகுல நீர பிற | மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்; அனைத்துஅறன்; ஆகுல நீர பிற | மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. | மனத்து-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற | மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற. | In spotless mind virtue is found And not in show and swelling sound. | Spotless be thou in mind! This only merits virtue’s name; All else, mere pomp of idle sound, no real worth can claim. | Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show. | Keep the mind free of impurity. That alone is the practice of virtue. All else is nothing but empty display. | மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை. | மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே. | ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை. | மனம் தூய்மையைப் பேணுதலே அறச்செயல். மற்றெல்லாம் அறச்செயலன்றி வீண் வெளி ஆடம்பரமே. | மனத்துக்கண் மாசு இலன் ஆதல் - அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அனைத்து அறன் - அவ்வளவே அறம் ஆவது; பிற ஆகுலநீர - அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா, ஆரவார நீர்மைய; (குற்றம் - தீயன சிந்தித்தல். பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், 'ஆகுல நீர' என்றார். மனத்து மாசுடையான் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.). | ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய. பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று. மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார். | தன் மனத்திடத்துக் குற்றம் இல்லாதவனாகுதல் என்னும் அவ்வளவே அறம் எனப்படும்; பிற ஆரவாரத் தன்மை கொண்டவை | மனப்பிழையின்றி நட; அதுவே அறம்; மற்றவை யெல்லாம்வெளிப்பகட்டு. | மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற. | ஒருவன் மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அதுவே அறமாகும். மனத்தூய்மை இல்லாத மற்றவை எல்லாம் ஆரவாரத் தன்மை உடையவையாகும். | மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் - ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே அறமாவது; பிற ஆகுல நீர - மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன. மனம் தூய்மையாயிருப்பின் அதன் வழிப்பட்ட முக்கரண வினைகளும் தூய்மையாயிருக்குமாதலின், மாசிலா மனமே அறத்திற்கு அடிப்படை என்றவாறு. மனம் தூயதாயிருப்பின் வெளிக்கோலம் வேண்டாததாயும், தீயதாயிருப்பின் வெளிக்கோலம் பிறரை ஏமாற்றுவதாயுமிருத்தலின், இருவழியும் பயனின்மை நோக்கி வெளிக் கோலத்தை வீண் ஆரவாரமென்றார். 'ஆதல்' வியங்கோளுமாம். | பொருள்: மனத்துக்கண் மாசு இலன் ஆவது அனைத்து(ம்) அறன் ‡ உள்ளத்தின்கண் குற்றம் இல்லாதவனாய்ச் செய்யப்படுவது அனைத்தும் அறமாம்; பிற ஆகுல நீர‡ மனத்துக்கண் குற்ற முள்ள வனாய்ச் செய்யப் படுவன துன்பம் தருவன(வாகிய மறங்களாம்). அகலம்: அனைத்தும் என்பதன் முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. தாமத்தர் பாடம் நீர்மை. மற்றை உரையாசிரியர்கள் நால்வர் பாடம் ‘மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன்’. அதற்கு அவர்களுரை, (அறஞ்செய்வான்) தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆகுக. அவ்வளவே அறம்.(ஒருவன் தன்) மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆதல் ஓர் ஒழுக்கம் ஆகுமே யன்றி அறமாகாது. என்னை? அறம் என்பது ஓர் உயிர்க்கு நன்மை பயக்கும் ஒரு செயல். அது பற்றியே, ஆசிரியர் ‘அறவினையோவாதே செல்லும் வாயயல்லாஞ் செயல்’, ‘அன்றறிவாமென்னா தறஞ் செய்க’, ‘வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின்’, ‘செயற்பால தோறும் அறனே’ என்று கூறியுள்ளார். அன்றியும், ‘மனத்தின்கண் மாசிலனாதலே அறம்’ என்று கூறின், பற்றுள்ள முடையார் ஈகை முதலிய அறங்களைச் செய்யாது விடுதற்கு அக்கூற்றை ஒரு மேற்கோளாக எடுத்துக்காட்ட முற்படுவர். நன்று புரியாமைக்கு மேற்கோளாக எடுத்துக் காட்ட உதவும் ஒரு வகை மனோ நிலையை அறம் என்று ஆசிரியர் கூறார். ஆகலான், ‘மாசில னாத லனைத்தறன்’ என்பது ஏடு பெயர்த்தெழுதியோனால், அல்லது கால அளவில் சிதைந்துபோய்ப் பின்னர் ஊகித்து எழுதப்பட்ட வற்றால் நேர்ந்த பிழை எனக் கொள்க. கருத்து: குற்றம் அற்ற மனத்தோடு செய்யப்பட்ட வினைகளெல்லாம் அறமாம். | மனத்தில் குற்றம் இல்லாமல் இருத்தல் வேண்டும். ஆறாம் என்பது அதுவேயாகும். ஆறாம் அவ்வளவே தான்; அதுவல்லாமல் செய்யப்படுவன யாவும் ஆரவாரம் என்னும் தன்மையுடையனவாகும். | மனத்தின்கண் குற்றமிலனாதலே எல்லா அறம்; மற்றவை ஆரவாரத் தன்மையுடையன என்பது இக்குறட்கருத்து. | அறத்திற்கு அரிய வரையறை கூறும் அறன் வலியுறுத்தல் பாடல். | உள்ளத்தில் குற்றம் இல்லாமலிருத்தலே எல்லா அறமுமாகும்; மற்றவை ஆர்ப்பாட்டத் தன்மையுடையவை. | |||||||
36 | அறன் வலியுறுத்தல் | 35 | அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் | அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். | அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம். | அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் | அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். | Four ills eschew and virtue reach, Lust, anger, envy, evil-speech. | ‘Tis virtue when, his footsteps sliding not through envy, wrath, Lust, evil speech-these four, man onwards moves in ordered path. | That conduct is virtue which is free from these four things, viz, malice,desire, anger and bitter speech. | Virtue is living in such a way that one does not fall into these four: envy, anger, greed and unsavory speech. | பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும். | பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம். | பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும். | பொறாமை, கோபம், பேராசை, வன்சொல் எனும் இந்நான்கும் விலக்கி வாழ்வதே அறநெறி எப்படும். | அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா - புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி - அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்- அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது. (இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.). | மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும். பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்று கூறிய அறம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது. | பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் ஒரு சிறிதும் இடம் தராமல் ஒழுகி வருவதே அறம் ஆகும் | பொறாமை ஆசை சினம் கடுஞ்சொல் வாராமல் ஒழுகுவதேஅறம். | அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். | பெறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கு குற்றங்களையும் விட்டு நடப்பதே அறமாகும். | அழுக்காறு - பிறராக்கம் பொறாமையும்; அவா - அவ்வாக்கத்தின்மேற் செல்லும் ஆசையும்; வெகுளி - அதைப் பெறாதவிடத்து எழும் சினமும்; இன்னாச் சொல் - அது பற்றிவருங் கடுஞ்சொல்லும்; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - ஆகிய இந் நான்கையும் விலக்கி நடந்ததே அறமாவது. (இழுக்கா = இழுக்கி ) | பொருள்: அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும் இழுக்கா இயன்றது ‡ பொறாமை ஆசை வெகுளி இன்னாச் சொல் (இந்) நான்கையும் நீக்கிச் செய்யப் பெற்ற வினை, அறம்‡ அறமாம். அகலம்: வெகுளி‡கோபம். இன்னாச் சொல் ‡ துன்பந்தருஞ் சொல். ‘இழுக்கா’ என்பது ‘செய்யா’ என்னும் வாய்பாட்டு இறந்தகால வினை யயச்சம். இயன்றது ‡ நிகழ்ந்தது ‡ செய்யப்பட்ட வினை. இழுக்கி ‡ நீக்கி. கருத்து: இந் நான்கு குற்றங்களோடு சேராத வினை அறமாம். | பொறாமையும், பேராசையும், கோபமும், கடுஞ்சொல்லும் ஆகிய நங்கும் விளக்கப்பட்டு நடைபெறுவதே அறமாகும். | பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் இவை நான்கையும் நீக்கி நடப்பது அறம் என்பது இக்குறட்கருத்து | நீக்கியே ஆகவேண்டிய அறமல்லாதவை எவை என்று கூறும் அறன் வலியுறுத்தல் பாடல். | பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் இவற்றைக் குற்றமாகக் கொண்டு ஒழுகுபவனிடத்தே அறமானது நடைபெற்றது. | |||||||
37 | அறன் வலியுறுத்தல் | 36 | அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை | அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. | அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. | அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது பொன்றும்-கால் பொன்றா துணை | அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. | Do good enow; defer it not A deathless aid in death if sought. | Do deeds of virtue now, Say not, 'To-morrow we’ll be wise'; Thus, when thou diest, shalt thou find a help that never dies. | Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend. | Don’t tell yourself you’ll be wise enough to practice virtue tomorrow. Do it now, for it will be your deathless companion when you die. | பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய்நிலைத்துத் துணை நிற்கும். | முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும். | இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும். | நாளை செய்வோம் எனப் பின்போடாது இக்கணமே அறம் செய்க. அதுவே உடல் அழியுங்கால் தான் அழியாது உயிர்க்கு உறுதுணையாகும். | அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது. | பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று. | ‘பின் காலத்தில் பார்ப்போம்’ என்று தள்ளி வைக்காமல், அறத்தை அன்றே செய்க; அது இறக்கும் காலத்திலே அழியாத துணையாகும் | சாகும்போது பார்த்துக்கொள்வோம் என்னாது நாளும் அறஞ்செய்க;அதுவே உயிர்த்துணை. | அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. | பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறத்தை நாள்தோறும் செய்ய வேண்டும். அதுவே உடம்பிலிருந்து உயிர் நீங்கும் காலத்து அழியாத துணையாக இருக்கும். | அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - யாம் இன்று இளைமையாயிருப்பதாற் பிந்தி முதுமையிற் செய்வே மென்று கடத்திவையாது இன்றிருந்தே அறவினையைச் செய்து வருக; மற்று அது பொன்றுங்கால் பொன்றாத் துணை.பின்பு அவ்வறம் இறக்குங் காலத்து இறவாத் துணையாம். இறத்தலாவது உடம்பினின்றும் உயிர் நீங்குதல். உயிர் நீங்கிய உடம்பு அழியவும் அதனாற் செய்யப்பட்ட அறம் அதனோடழியாது உயிரோடொன்றி நின்று உதவுவதால், பொன்றாத்துணையாயிற்று. நிலையாத உடம்பு நிலையும் பொழுதே நிலைக்கும் பயனைப் பெற்றுக் கொள்க என்பது ஆசிரியரின் அன்பார்ந்த அறிவுரை. | பொருள்: அன்று அறிவாம் என்னாது அறம் செய்க‡இறக்கும் ஞான்று செய்வாம் கருதாது (இற்றை ஞான்றே ஒவ்வொருவரும்) நல் வினையைச் செய்க ; பொன்றுங்கால் அது பொன்றா(த) துணை‡ (அவர்) இறக்குங்காலத்தில் அஃது இறவாமல் (அவருயிருடன்) செல்லும் துணையாம். அகலம்: ‘பொன்றுங்கால்’ என்று பின்னர்க் கூறியிருத்தலான். அன்று என்பதற்கு இறக்கும் ஞான்று என்று பொருள் உரைக்கப்பட்டது. ஞான்று ‡ நாள். அறிதல் என்பது ஈண்டுச் செய்தல் என்னும் பொருட்டு, உரை காண்டல் என்பது உரை செய்தல் என்னும் பொருட்டாதற் போல. ‘மற்று’ அசை. ‘தாஞ்செய் வினையல்லாற் றம்மொடு செல்வதுமற், றியாங்கணுந் தேரிற் பிறிதில்லை‡ யாங்குத்தாம், போற்றிப் புனைந்த வுடம்பும் பயமின்றே, கூற்றங்கொண்டோடும் பொழுது.’ ‡ நாலடியார். கருத்து: அறமே உயிர்க்கு உற்ற துணையாகலான், அதனை இன்று முதலே செய்க. | கடைசிக்கு காலத்தில் அறம் செய்வோம் என்று இருக்காமல் நாள்தோறும் அறம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்தல் இறக்குங் காலத்தில், உயிருக்கு அழியாத துணையாக இருக்கும். | பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கருதாது அறத்தினை இப்பொழுதே செய்க; அந்த அறம் சாகும்போது அழியாத துணையாகும் என்பது இக்குறட்கருத்து. | நிறைமனதுடன் சாவைத் தழுவ இப்போதிருந்தே நற்செயலாற்றும் அறன் வலியுறுத்தல். | பின்னர் பார்த்துக் கொள்வோம் என்று எண்ணாமல் இப்பொழுதே அறஞ்செய்க; அந்த அறம் ஒருவனுக்கு சாகுங்காலத்தில் அழியாத துணையாகும். | |||||||
38 | அறன் வலியுறுத்தல் | 37 | அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை | அறத்துஆறு இதுஎன வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.. | அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை. | அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை பொறுத்தானொடு ஊர்ந்தான்-இடை | அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. | Litter-bearer and rider say Without a word, the fortune's way. | Needs not in words to dwell on virtue’s fruits; compare The man in litter borne with them that toiling bear! | The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein. | It is utterly superfluous to inquire about virtue’s benefits, so evident in the difference between the palanquin’s rider and bearer. | அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக்கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களைஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப்போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக்கருதுவார்கள். | அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம். | பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா. | பல்லக்கில் செல்பவனுக்கும் அதனைச் சுமப்பவனுக்கும் உள்ள வேறுபாடே அறநெறியால் வரும் பலாபலனைத் தானாகவே உணர்த்தும். | அறத்து ஆறு இது என வேண்டா - அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை - சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும். (பயனை 'ஆறு' என்றார், பின்னது ஆகலின். 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது. தன்னானே உணரப்படும். (பயனை 'ஆறு' என்றார், பின்னது ஆகலின் 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தாணோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம், உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது. | நீங்கள் அறநெறி யித்தன்மைத்தென் றறிய வேண்டா, சிவிகைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காணலாம். இது பொன்றினாலுந் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று. | சிவிகையைச் (பல்லக்கு) சுமப்பவனோடு, அதனில் அமர்ந்து செல்பவன் ஆகியவரிடையே, ‘அறத்தின் வழி இதுதான்’ என்று கூற வேண்டாம் | பல்லக்கில் இருப்பவனையும் சுமப்பவனையும் பார்த்து அறத்தின்பயனை மதிப்பிடாதே. | அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. | பல்லக்கைச் சுமப்பவனிடத்தும் அதில் ஏறிச் செல்பவனிடத்தும் அறத்தினது பயன் இத்தன்மையது என்று செல்ல வேண்டியதில்லை. அது நேரில் அறியப்படும். | அறத்து ஆறு இது என வேண்டா - அறத்தின் பயன் இதுவென்று உரையளவையால் ஒருவர் அறிவிக்க வேண்டியதில்லை ; சிவிகை பொறுத்தானோடு ஊந்தான் இடை - பல்லக்கைச் சுமப்பானோடு அதில் ஏறிச் செல்வானிடைப் பட்ட காட்சியளவையாலேயே அது அறியப்படும். இதுவே ஆசிரியர் கருத்தென்பது, பின்னர் அவர் ஆங்காங்கு நூலிற் கூறும் கூற்றுக்களாலும், பல்பிறவியும் பழவினையும் பற்றி அவர்க்கிருந்த நம்பிக்கையாலும், "செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம்-வையத்து அறும்பாவ மென்னவறிந் தன்றிடார்க் கின்று வெறும்பானை பொங்குமோ மேல்". என்னும் ஒளவையார் கூற்றாலும், (நல்வழி-17) "Need not in words to dwell on virtue's fruits: compare .The man in litter borne with them that toiling bear!" என்னும் போப்பையர் மொழிபெயர்ப்பாலும், அறியப்படும். பல்லக்கைச் சுமப்பாரையும் அதில் ஏறிச் செல்வானையுங் காட்டி இதுதான் அறத்தின் பயன் என்று கூறாதே. என்பதை இக்குறளுரையாகக் கூறுவது ; இக்காலத்திற் கேற்குமேயன்றி ஆசிரியர் கருத்தாகாது. ஆறென்பது வழி, அறத்தின் வழிப்பட்ட பயனை ஆறென்றார் அறியப்படும் என்பது சொல்லெச்சம். | பொருள்: சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை‡ பல்லக்கைச் சுமந்தவனோடு (பல்லக்கிலிருந்து அதனைச்) செலுத்தியவன் (ஆகிய இருவர்) இடையில், அறத்து ஆறு இது என வேண்டா ‡ அறத்தின் பயன் இன்னது என்று (சுட்டிச்) சொல்ல வேண்டா (அது கண்கூடாகவே விளங்கும்). அகலம்: பயனை ஆறு என்றார். கருத்து: பல்லக்கில் செல்கின்றவனிடத்தில் அறத்தின் பயனை காட்சியிற் காணலாம். | அறத்தினை வழி (பயன்) இதுதான் என்று கேட்டறிய வேண்டுவதில்லை; பல்லக்கினைத் தூக்கிக் கொண்டு போகின்றவனையும் உள்ளே உட்கார்ந்து கொண்டு போகின்றவனையும் பார்க்கும் காட்சி அளவினாலேயே உணர்ந்து கொள்ளப்படும். | பல்லக்கைத் தாங்கிச் செல்வார், ஏறிச் செலுத்துபவர் இவர்களிடத்து அறவழி இது என்று கூற வேண்டாம் என்பது இக்குறட்கருத்து. | அறம் ஒரு சாரார்க்கு மட்டும் உரியதன்று; எல்லார்க்கும் உரியது என அறன்வலியுறுத்தல். | பல்லக்கு தூக்குபவன் மற்றும் அதன் மீது பயணிப்பவன் இவர்களிடம் அறத்தின் நெறி இதுதான் என்று கூற வேண்டாம். | |||||||
39 | அறன் வலியுறுத்தல் | 38 | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல் | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழிஅடைக்கும் கல் | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். | வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன் வாழ் நாள் வழி அடைக்கும் கல் | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். | Like stones that block rebirth and pain Are doing good and good again. | If no day passing idly, good to do each day toil, A Stone ’t will be to block the way of future days of moil. | If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births. | Not allowing a day to pass without doing some good is a boulder that will block your passage on the path to rebirth. | பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கிஅமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும். | அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும். | ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். | அறச்செயல் புரியா நாளே இல்லை எனும்படி நல்லனவே செய்க. அது மறுபிறவிக்குச் செல்லும் வழியை அடைக்கும் பாறாங்கல் ஆகும். | வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம். (ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன : அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது. | ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம். இது வீடு தருமென்றது. | செய்யத் தவறிய நாள் என்றில்லாமல் ஒருவன் அறம் செய்வானானால், அதுவே வாழ்நாள் முடியும் வழியை அடைக்கும் கல்லாகும் | நாள் தவறாமல் அறம் செய்க; அது ஒருவன் பிறப்பு வழியைஅடைக்கும் கல்லாகும். | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். | ஒருவன் அறத்தை ஒருநாளும் விடாமல் செய்வானாகில் அச்செயலானது மறுபடியும் பிறவி வராமல் தடுக்கும் கல்லாக அமையும். | வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - செய்யாது வீணாகக் கழியும் நாள் இல்லாவாறு ஒருவன் நாள்தோறும் அறத்தைச் செய்துவருவானாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - அச்செயல் அவன் இவ்வுலகில் உடம்போடுகூடி வாழும் நாள் வரும் வழியை அடைக்குங் கல்லாகும். 'படாஅமை' இசைநிறை யளபெடை. வாழ்நாள் வழியடைத் தலாவது பிறவியை நீக்கி வீடுபெறுவித்தல். | பொருள்: வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் ‡ தவறும் நாள் உண்டா காமல் (ஒருவன்) அறத்தைச் செய்யின், அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் ‡ அவ்வாறு அறத்தைச் செய்தல் ஒருவன் வாழும் நாளின் வழியை அடைக்கும் கல்லாம். அகலம்: வீழ், வாழ் என்பன வினைத்தொகைகள். அகர அளபெடை இசை நிறைக்க வந்தது. கருத்து: நாள்தோறும் செய்யப்படும் அறம் பிறப்பை ஒழிக்கும். | அறம் செய்யாத நாளே இல்லாமல் ஒருவன் நடந்துகொள்ளுவானானால், அது அவன் மீண்டும் உடம்போடு பிறத்தில் என்னும் வழியை வாராமல் அடைக்கும் கல்லாகும். | வாழ்நாளை வீழ்நாள் ஆக்காமல் நாளும் நல்லவற்றைச் செய்துவந்தால், அது ஒருவனது வாழ்நாளில் ஏற்படும் துன்ப இடையீடுகளை அடைக்கும் கல்லாகும் என்பது இக்குறட்கருத்து. | ஒரு நாள்கூட வீணாக்காத அறன் வலியுறுத்தல். | செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைத் தொடர்ந்து செய்வானாயின், அது வீழ்நாளாகிய இடைவெளிகளை அடைக்கும் கல். | |||||||
40 | அறன் வலியுறுத்தல் | 39 | அறத்தான் வருவதே இன்பம்:மற் றெல்லாம் புறத்த புகழும் இல | அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல. | அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல. | அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம் புறத்த புகழும் இல | அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல. | Weal flows only from virtue done The rest is rue and renown gone. | What from virtue floweth, yieldeth dear delight; All else extern, is void of glory’s light. | Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise. | Only virtuous deeds abound in true joy. All other deeds are empty and devoid of distinction. | தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவதுபுகழும் ஆகாது; இன்பமும் ஆகாது. | அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா. | அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை. | அறச் செயலால் விளைவதே உண்மை இன்பம். மற்றைய எல்லாம் போலிகளே, அவற்றால் புகழுமில்லை. | அறத்தான் வருவதே இன்பம் - இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த - அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல - அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல. ('ஆன்' உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, 'தூங்கு கையான் ஓங்கு நடைய' (புறநா.22) என்புழிப்போல. இன்பம் - காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின் 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.). | அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம். இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது. | அற வாழ்வில் வாழ்வதனால் வருவதே இன்பமாகும்; மற்றைப் பொருளும் இன்பமும் இன்பமாகா; அவற்றால் புகழும் இல்லை | அறநெறியால் வருவதே இன்பம்; பிறவழியால் வருவன் துன்பம்,பழி. | அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல. | அறத்தோடு பொருந்தி வரும் இன்பமே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாது வருவன எல்லாம் துன்பம் தருவனவாகும். அவை புகழும் இல்லாதவை ஆகும். | அறத்தான் வருவதே இன்பம் - அறவழியால் ஒருவர்க்கு வரும் இன்பமே உண்மையான இன்பமாவது; மற்று எல்லாம் புறத்த-வேறு தீயவழியில் வருவனவெல்லாம் இன்பம்போல் தோன்றினும் துன்பத்தின்பாற் படுவனவே; புகழும் இல-அதோடு அவை புகழுடையனவும் ஆகா. இங்கு இன்பமென்று பொதுப்படக் கூறியது உலகின்பமாகிய சிற்றின்பத்தை; அறவழியல்லது வேறுவழியிற் பேரின்பம் ஒருவன் பெறமுடியாதாகலின். உலக வின்பம் ஒருபுலவின்பமும் பல புலவின்பமும் ஐம்புலவின்பமாகிய முற்றின்பமும் என முத்திறப்படும். வண்ணவோவியமும் எழுவும்யாழும் இன்னடிசிலும் நறுவிரையும் மெல்லணைக் கட்டிலும் போல்வன, ஒருபுலவின்பமே தருவன; அழகிய வளமனையும் பல்வகைப் பழுமரக்காவும் போல்வன பலபுலவின்பந் தருவன; கட்டழகியான கற்புடை மனைவியெனின் ஐம்புலவின்பமும் ஒருங்கே தர வல்லாள். இனி, இன்பப் பொருள் போன்றே அதனைக்கொள்ளும் செல்வப்பேறும் உள்ளத்திற்கு இன்பந்தருவதாகும். காசு தானாக இன்பந்தராவிடினும் இன்பப் பொருள்களைக் கொள்ளுங் கருவியாதல் காண்க. விலையாகக் கூடிய எல்லாப் பொருளும் காசுபோற் பயன் படுவனவே. ஒருவன் அறவழியில் தேடிய தன்பொருளை நுகர்வதே புகழோடு கூடிய இன்பமாம்;பிறன்பொருளை நுகர்வது பழியோடு கூடிய துன்பமாம். பிரிநிலை யேகாரம் பின்னுங் கூறப்பட்டது. | பொருள்: அறத்தால் வருவதே இன்பம்‡ அறத்தின் (பயனாக) வருவதே இன்பம்; மற்று எல்லாம் புறத்த ‡மறத்தின் (பயனாக) வருவதெல்லாம் துன்பங்கள்; புகழும் இல‡ புகழும் இல்லாதவை. அகலம்: அறம் ‡ நல்வினை. மறம் ‡ தீவினை. ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. மறத்தால் வருவன புகழுமில்லாதவை என்றமையால், அறத்தால் வருவன புகழு முள்ளவை என்று கொள்க. அறத்தால் வருவதென்று கூறிப் பின்னர் ‘மற்றெல்லாம்’ என்றமையால், ‘மற்றெல்லாம்’ என்பதற்கு ‘மறத்தால் வருவதெல்லாம்’ என்று பொருள் உரைக்கப்பட்டது. ‘ஈனுலகத் தாயி னிசை பெறூஉ மஃதிறந், தேனுலகத் தாயி னினிததூஉம்’ என்றார் பழமொழி யார். ஈனுலகம் ‡ இவ் வுலகம். ‘ஏ’னுலகம் ‡ ஏனை யுலகம். கருத்து: அறத்தால் புகழும் இன்பமும் வரும்; மறத்தால் இகழும் துன்பமும் வரும். | அறச்செயல்களினால் வருவதுதான் உண்மையான இன்பமாகும். மற்ற முறைகளில் வருவன்வெல்லம் இன்பமும் அல்ல; புகழுடையனவும் ஆகா. | அறவழியில் பொருந்தி வருவதே இன்பம்; பிறவழியால் வருவன வேறாயுள்ளவை; புகழுக்குரியனவும் இல்லை என்பது இக்குறட்கருத்து. | அறநெறியே தன் வாழ்நெறியாகக் கொண்டு இன்பம் துய்க்கவேண்டும் என்னும் அறன் வலியுறுத்தல் பாடல். | அறநெறியால் வருவதே இன்பம்; மற்றவை இன்பத்துக்குப் புறம்பானதைத் தருவன. புகழும் இல்லை. | |||||||
41 | அறன் வலியுறுத்தல் | 40 | செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. | செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. | செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. | செயல்-பாலது ஓரும் அறனே ஒருவற்கு உயல்-பாலது ஓரும் பழி | செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. | Worthy act is virtue done Vice is what we ought to shun. | ‘Virtue’ sums the things that should be done; ‘Vice’ sums the things that man should shun. | That is virtue which each ought to do, and that is vice which each should shun. | Virtue is merely that which should be done in life, and vice is merely that which should be avoided. | பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும். | ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே. | ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே. | அறச்செயலே ஒருவன் வாழ்வில் செய்ய வேண்டியது. மறச்செயலே அவன் விலக்க வேண்டியது. | ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே. ( 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.). | ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது பழியே. மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார். | ஒருவன் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியது எல்லாம் அறமே; அவன் செய்யாமல் காக்க வேண்டியது எல்லாம் பழிச்செயலே | யாரும் செய்ய வேண்டுவது அறமே யாரும் விடவேண்டியதுபழியே. | செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. | ஒருவன் வாழ்நாள் முழுதும் செய்யத்தக்கது நல்வினையே; வெறுத்து ஒழிக்கத்தக்கது தீவினையே. ‘ஓரும்‘ என்பன இரண்டும் அசை நிலை. | ஒருவற்குச் செயற்பாலது அறனே-ஒருவன் என்றுஞ் செய்யத்தக்கது நல்வினையே; உயற்பாலது பழியே-செய்யாது விடத்தக்கது தீவினையே. 'ஓரும்' ஈரிடத்தும் அசைநிலை. ஆயினும், முதற்காலத்தில் 'ஆராய்ந்தறியும்' என்று பொருள்படும் ஏவற்பன்மை அல்லது பெயரெச்சமாகவே அது வழங்கியிருத்தல் வேண்டும். பிரிநிலையேகாரம் பின்னுங் கூட்டப்பட்டது. | பொருள்: ஒருவற்கு செய்யல் பாலது அறன் ‡ ஒருவனுக்குச் செய்தற் பான்மையது நல்வினை; உய்யல் பாலது பழி ‡ (செய்யாது) விடுதற் பான்மை யது தீவினை. அகலம்: செய்யல், உய்யல் என்பன செய்யுள் விகாரத்தால் யகர வொற்றுக் கெட்டு நின்றன. ஒரும் என்பன இரண்டும், ஏகாரமும் அசைகள். பழிக்கப்படும் மறத்தினைப் பழி யயன்றார். கருத்து: மக்கள் செய்தற்பாலது அறம். விடுதற்பாலது மறம். | ஒருவர்க்குச் செய்யும் தன்மையுடையன அறச்செயல்களே ஆகும், நீக்கவேண்டிய தன்மையுடையன தீயவைகளான செயல்களேயாகும். | ஒருவன் குறிக்கொண்டு செய்யத்தக்கது அறமே; ஆராய்ந்துணர்ந்து தள்ளத்தக்கது பழி என்பது இக்குறட்கருத்து. | பழி நீக்கி செயல் புரிக என்னும் அறன் வலியுறுத்தல். | ஒருவனுக்குக் கருத்துடன் செய்யத் தக்கது அறமே; ஆராய்ந்து தள்ளத்தக்கது பழி. | |||||||
42 | இல்வாழ்க்கை | 41 | இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை | இல்வாழ்வான் என்பான் இயல்புஉடைய மூவர்க்கும் நல்ஆற்றின் நின்ற துணை | இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. | இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை | இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. | The ideal householder is he Who aids the natural orders there. | The men of household virtue, firm in way of good, sustain The other orders three that rule professed maintain. | He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path. | He alone may be called a householder who supports students, elders and renunciates pursuing well their good paths. | பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர்கடமையாகும். | மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன். | இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான். | நல்வழியில் நிற்கும் மாணவர், முதியோர், துறவியர் என்ற மூவரையும் ஆதரிப்போனே இல்வாழ்வான் எனப்படுவான். | இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான்; இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை- அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை - அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம். (இல் என்பது ஆகுபெயர். என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார், ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்.). | இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை. (தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்) என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின்பாற்பட்ட விரதங் கொண்டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமலுய்த்து விடுவாரை. | இல்லறத்தில் வாழ்பவன் என்பவன், பிற அற இயல்பையுடைய முத்திறத்தார்க்கும் நல்வழியில் நிலையான துணையாவான் | இல்லறத்தான் மரபான மூவேந்தர்க்கும் நல்லாட்சிக்கு உற்றதுணையாவான். | இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. | இல்லறத்தில் வாழ்பவன் என்பவன் அறத்தின் இயல்புடைய பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணையாவான். | இல்வாழ்வான் என்பான் இல்லறத்தில் வாழ்பவன் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வேளாளன்; இயல்புடைய மூவர்க்கும்-இல்லறத்தில் வாழும் இயல்புடைய ஏனை மூவர்க்கும்; நல்லாற்றின் நின்ற துணை-அவர் செல்லும் நல்லற நெறிக்கண் நிலைபெற்ற துணையாம். ஏனை மூவராவார் இருவகை யந்தணருள் இல்லறத்தானான பார்ப்பானும் அரசனும் வணிகனுமாவர். 'இயல்புடைய' என்னும் அடைமொழி அதிகார இயைபினால் இல்லறத்தாரைக் குறிக்குமேயன்றித் துறவறத்தாரைக் குறிக்காது. அந்தணர் (பார்ப்பார்) முதலிய நால்வரும் இல்லறத்தாரா யிருப்பரேனும், அவருள் தலைசிறந்தவர் வேளாளரே யென்பது கருத்து. "உழுவா ருலகத்திற் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து." "ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்." "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல்பவர்." "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங் கைம்புலத்தா றோம்ப றலை." "இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு." "வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்." என்று திருவள்ளுவரும், "வேளாள னென்பான் விருந்திருக்க வுண்ணாதான்" என்று நல்லாதனாரும், கூறியிருத்தலையும், 'இல்வாழ்வான்' என்பதனோடொத்த 'குடியானவன்' என்னுஞ் சொல் உலக வழக்கில் உழவனையே குறித்து வருதலையும் நோக்குக. ஆரியர் வருமுன் ஐயரென்றும் பார்ப்பாரென்றும் சொல்லப்பட்ட இருவகையந்தணரும் தமிழரே. அவருள் முன்னவர் துறவியர்; பின்னவர் ஆசிரியர் புலவர் பண்டாரம் உவச்சர் குருக்கள் திருக்கள் நம்பியர் போற்றியர் எனப் பல்வேறு பெயர்பெற்ற இல்லறத்தார். ஏனை மூவகுப்பார் போன்றே அந்தணரும் இருவகுப்பார் என அறிக. திருவள்ளுவர் பிராமணீயம் என்னும் ஆரியத்தை ஓழிக்கவே நூல் செய்தாராதலின், பிரமசரியம் வானப்பிரத்தம் சந்நியாசம் என்னும் முந்நிலைப்பட்ட பிராமணரைக் காத்தலைத் தமிழ வேளாளன் கடமையெனக் கூறியிரார் என்பது தெளிவுறு தேற்றமாம். "அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை" என்று ஆசிரியர் கூறுவதால்,'நல்லாறு' என்றது இல்லறத்தையே என்பது துணியப்படும்.'என்பான்' என்னும் செய்வினை வாய்பாட்டுச் சொல் செயப்பாட்டு வினைப் பொருளது. | பொருள்: இல்வாழ்வான் - இல்லின்கண்ணே வாழ்பவன், இயல்பு உடைய மூவர்க்கும் - (அவன்) இயல்பாக உடைய தாய், தந்தை, தாரம் என்னும் மூவர்க்கும், நல் ஆற்றின் -(அவருடைய) நல்ல நெறியின் கண்ணே, நிற்கும் துணை - (அவருக்கு உதவுதற்காக) நிற்கும் துணை (யாவன்). அகலம்: இல் வாழ்வான் இயல்பாக வுடைய மூவர், அவனுடைய தாய், தந்தை, தாரம் ஆகிய மூவரே. அவருடைய நல்ல நெறியின் கண்ணே அவர் ஒழுகுதற்கு உதவி புரியும் துணை. ‘இயல்புடைய மூவர்க்கும்’ என்பதற்கு ‘அற இயல்பினை யுடைய ஏனை மூவர்க்கும்’ என்றும், அம் மூவர் பிரமசாரி, வானப்பிரத்தன், சந்நியாசி என்றும் உரைப்பாரும் உளர். ‘என்ப’ அசை. தாமத்தர் பாடம் ‘இல்வாழ்வா னென்ப’ ; ‘நிற்குந் துணை’. மற்றை உரையாசிரியர் நால்வர் பாடம் ‘இல்வாழ் னென்பான்’ ; ‘நின்ற துணை’. இவர்கள் பாடத்தினும் தாமத்தர் பாடம் சிறந்த தாகலான், அதுவே ஆசிரியர் பாடமெனக் கொள்ளப்பட்டது. கருத்து: நன் னெறியில் ஒழுகும் தாய், தந்தை, தாரமாகிய மூவர்க்கும் இல்வாழ்வான் துணை. | இல்லறத்தோடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் இயல்பாகவே தன்னைச் சார்ந்திருக்கும் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூன்று திறத்தார்க்கும் நல்லலொழுக்க நெறியில் நின்ற சிறந்த துணையாக இருப்பவனாவான். | இல்லறத்தில் வாழ்வான் இயற்கையாக உரிமை உடைய பெற்றோர், வாழ்க்கைத்துணைவி, மக்கள் ஆகிய மூவர்க்கும் நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான் என்பது இக்குறட்கருத்து. | இல்வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமை. | இல்லறத்தான் எனப்படுபவன் இயல்பினை உடைய மூவர்க்கும் நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான். | |||||||
43 | இல்வாழ்க்கை | 42 | துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை | துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை | துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. | துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை | துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. | His help the monk and retired share, And celebrate students are his care. | To anchorites, to indigent, to those who’ve passed away, The man for household virtue famed is needful help and stay. | He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead. | The virtuous householder supports the needs of renunciates, ancestors and the poor. | பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும். | மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன். | துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான். | துறவியர், மூதாதையர், வறியோர் என்னும் முத்திறத்தாரின் தேவைகளை அறவழி ஒழுகும் இல்வாழ்வான் ஆதரிப்பான். | துறந்தார்க்கும்- களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்; துவ்வாதவர்க்கும் - நல்கூர்ந்தார்க்கும்; இறந்தார்க்கும்-ஒருவருமன்றித் தன்பால்வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான் 'துணை'-இல்வாழ்வானென்று சொல்லப்படுவான் துணை (துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், துணை என்றார். இவை இரண்டு பாட்டானும் இல்நிலை எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.). | வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணை யாவான். (வறுமையாளர், கைவிடப்பட்டவர், திக்கற்றவர்). மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையாலீண்டுத் துறந்தாரென்று கூறினார். செத்தார்க் கிவன் செய்ய வேண்டிய புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கேயன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று. | துறவியர்க்கும், வறுமைப்பட்டோர்க்கும், தனக்குத் தொடர்புடைய இறந்தவர்கட்கும் இல்வாழ்வினனே துணையாவான் | துறவிக்கும் வறியவர்க்கும் நிலைதிரிந்தவர்க்கும் இல்லறத்தானேதுணைவன். | துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. | துறவிகளுக்கும் வறுமையாளர்க்கும் தன்னிடம் வந்து இரந்தவர்களுக்கும்,(யாசித்தவர்களுக்கும்) இல்லறம் நடத்துகின்றவன் துணையாய் இருக்க வேண்டும். | துறந்தார்க்கும்-உலகப்பற்றைத் துறந்தவர்க்கும்; துவ்வாதவர்க்கும்-உண்பதற்கில்லாத வறியர்க்கும்: இறந்தார்க்கும்-ஒருவருமின்றித் தன்னிடம் வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான் துணை-இல்லறத்தான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் துணையாம். "உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம் விட்டேமென் பார்க்கு நிலை". "இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்". என்று ஆசிரியர் வேறிடத்துங் கூறுதல் காண்க. "துறந்தார் பொருமை" (22) "துறந்தாரின் தூய்மை" (159), "துறந்தார்க்குத் துப்புரவு "(263) , "துறந்தார் படிவத்தர்" (586) என வருமிடமெல்லாம், துறந்தார் என்னுஞ்சொல் செய்வினைப் பொருளே தருதலால், "களைகணானவராற்றுறக்கப் பட்டார்க்கும்" என்று பரிமேலழகர் ஈண்டு செயப்பாட்டுவினைப் பொருள் கூறுவது பொருந்தாது. முந்தின குறளுரையில் அவர் மூவகைப் போலித் துறவியரைப் பொருத்தியதினாலேயே இங்கு இவ்வாறுரைக்க நேர்ந்தது. களைகணானவரால் துறக்கப்பட்டவரும் துவ்வாதவருள் அடங்குவர். இறந்தார்க்குச் செய்யுந்துணை ஈமக்கடனும் இறுதிக் சடங்கும் தென்புலத்தார் படையலுமாம். | பொருள்: இல் வாழ்வான் என்பான் -இல் வாழ்வான் என்று சொல்லப் படுபவன், துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் - (இல் வாழ்க்கையைத்) துறந்தவர்க்கும் வறியவர்க்கும் (சுற்றம் இலராய்த் தம்பால் வந்து) இறந்தவர்க்கும், துணை- (உதவி புரியும்) துணை (யாவன்). அகலம்: துவ்வாதார் என்பது துவ்வு என்னும் பகுதியடியாகப் பிறந்த எதிர்மறை வினையாலணையும் பெயர். துவ்வு -ஐம்பொறி நுகர்ச்சி ; அதற்கு உரிய பொருள்கள் இல்லாதாரைத் துவ்வாதார் என்றார். இறந் தார்க்குச் செய்யும் உதவியாவது, அவர் உடலைத் தீயி லிடுதல் முதலியன. கருத்து: மேற் கூறிய மூவரோடு இம் மூவர்க்கும் இல்வாழ்வான் துணை. | துறந்தவர்களுக்கும், வறுமையாளர்களுக்கும், யாருமின்றித் தன்னிடம் வந்து இறந்தவர்களுக்கும் இல்வாழ்வான் என்பவன் துணையாக இருக்கக் கடவன். | துறவிகளுக்கும், வறியவர்கட்கும், ஆதரவற்றோர்க்கும் இல்லற வாழ்க்கையில் உள்ளவன் துணையாவான் என்பது இக்குறட்கருத்து. | வேறுவழியில்லாத ஆதரவற்றோர்க்கு இல்வாழ்க்கைநடத்துபவன் உதவ வேண்டும் என்பதை அறிவுறுத்தும் பாடல். | துறவியர்க்கும், வறியவர்க்கும், நிலைதிரிந்தவர்க்கும் இல்லறத்தான் துணையாவான் | |||||||
44 | இல்வாழ்க்கை | 43 | தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை | தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றுஆங்கு ஐம்புலத்துஆறு ஓம்பல் தலை | தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை. | தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை | தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. | By dutiful householder's aid God, manes, kin, self and guests are served. | The manes, God. Guest, Kindred, self, in due degree These Five to cherish well is chiefest charity. | The chi ef (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself. | The foremost duty of family life is to serve duly these five: God, guests, kindred, ancestors and oneself. | வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளைநிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகைஅறநெறிகளும் இல்வாழ்வுக் குரியனவாம். | இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு. | தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும். | பிதிரர், தெய்வம் ,விருந்தினர், உறவினர், தான் என்னும் ஐந்திறத்தாரையும் பேணுதலே இல்வாழ்வின் தலையாய கடன். | தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம். (பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார்' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.). | பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர். | தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் பேணுதல் இல்வாழ்பவனுக்குச் சிறப்பாகும் | தென்புலத்தார் நிலத்தெய்வம் விருந்து சுற்றம் தன் குடும்பம்என்ற ஐவகையையும் காக்க. | தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. | தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் அறநெறி பேணுதல் இல்லறத்தானுடைய சிறந்த கடமையாகும். | தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - இறந்த முன்னோர் வழிபடுதெய்வம் விருந்தினர் ஏழையுறவினர் தன் குடும்பம் என்று சொல்லப்படும்; ஆங்கு ஐம்புலத்து ஆறு ஒம்பல் - அவ் வைந்திடத்தும் செய்யவேண்டிய அறவினைகளைப் பேணிச் செய்தல்; தலை - இல்லறத்தானுக்குத் தலையாய கடமையாம். முதற்காலத் தமிழகமாகிய குமரிநாடு பல்வேறு கடல்கோள்களால் மூழ்கிப் போனமையால், அது இருந்த தென்றிசை கூற்றுவன்திசையாகவும் இறந்தோரின் இருப்பிடமாகவும் கொள்ளப்பட்டது. தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினையாவது, அவர் ஆவி ஆறுதலும் மகிழ்வும் அடைதற்பொருட்டு, அவர் இறந்த நாளில் தெய்வத்திற்குப் படைப்பது போல் அடையாள முறையிற் சில வுண்டிகளை அவர்க்கும் படைத்து, அவர் பெயரால் துறவியர்க்கும் இரப்போர்க்கும் சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல். தெய்வம் என்றது அவரவர் உளநிலைக் கேற்றவாறு சிறுதெய்வமும் பெருந்தேவனும் கடவுளுமாகிய மூவகைத் தேவுகளை. கோயிற்கும் அடியார்க்கும் செய்யும் தானங்களும் தெய்வ வழிபாட்டின் பாற்படும் விருந்து என்றது புதிதாக வரும் மதிப்புள்ள அயலாரை. அவரை வரவேற்றுச் சிறந்த உணவளிப்பது இக்காலத்து வழக்கற்றது. அயலுரினின்று வந்த உறவினர்க்குச் சிறந்த வுணவளிப்பது கைம்மாறு கருதிய கடமையேயன்றி அறமாகாது. தன் என்றது தன்னையுந்தன் குடும்பத்தையும் "உண்டி முதற்றே யுணவின் பிண்டம்" (புறம் - 18). "உடம்பாரழியின் உயிரா ரழிவர்" ( திருமந்திரம், 724 ). ஆதலால், பிறருக்குத் தொண்டு செய்பவன் தன்னையும் பேணிக் கொள்ளல் வேண்டும் "தனக்கு மிஞ்சித் தானம்". ஆதலால், ஒருவன் தன் குடும்பத்தைக் கவனியாது பிறரைப் பேணுதலும் அறமாகாது. இங்குக் குறிக்கப்பட்ட ஐந்திட வினைகளும் அறவினையாகவே ஆறாவது இடமாகிய அரசிற்குச் செலுத்தவேண்டிய வரி கட்டாய வினையாகிய கடமையாயிற்று. ஆறிலொரு கடமையிறுத்தல் என்னும் பண்டை வழக்கும், உழவனையே இல்லறத்தாருட் சிறந்தவனாகக் காட்டும். பிறதொழிலார் எல்லாரும் பெரும்பாலும் குறிப்பிட்ட சிறுதொகைப் பணத்தையே வரியாகச் செலுத்திவந்தனர். "பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்". என்று திருவள்ளுவரும், "இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர் பழவிற லூர்களும்". (சிலப். 10: 149.150) என்று இளங்கோவடிகளும், கூறுதல் காண்க. | பொருள்: தென்புலத்தார் - மெய்யறிவுடையார், தெய்வம் - (தான் தொழும்) தெய்வம், விருந்து-விருந்தினர், ஒக்கல்‡ உறவினர், தான்‡(இல் வாழ்வானாகிய) தான், ஐம்புலத்தார் ‡(இவ்) வைந்து இடத்தவரையும், ஓம்பல்-பேணுதல், தலை- (இல்லறங்களில்) தலையாய அறம். அகலம்: தென் - அழகிய. புலம்‡அறிவு. அழகிய அறிவாவது, மெய்யறிவு. அதனால் ‘தென்புலத்தார்’ என்பதற்கு ‘மெய்யறி வுடையார்’ எனப் பொருள் உரைக்கப்பட்டது. விருந்து - புதுமை. அஃது ஈண்டுப் புதியராய் வந்த விருந்தினரைக் குறித்து நின்றது. ‘என்று’ என்பது எண்ணிடைச் சொல். ‘ஆங்கு’ அசை. தலையாய அறத்தைத் ‘தலை என்றார். தாமத்தர், நச்சர் பாடம் ‘ஐம்புலத்தாரோம்பல்’. மற்றை மூவர் பாடம் ‘ஐம்புலத்தா றோம்பல்’. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் (என்னும்) ஐம்புலம் என்பது திணை வழு. ஆசிரியர் இக் குறளின் முதலடியில் ஐம்புலத்தாரைக் கூறினரே யன்றி ஐம்புலத்தைக் கூறிற்றிலர். ஆகலான், அவர் பின்னர் ஐம்புலத்தாரை யோம்பல் என்று கூறுவரேயன்றி ஐம்புலத்தாற்றை யோம்பல் என்று கூறார். அன்றியும், ‘ஆறு’ என்பதற்கு நெறி என்பது தானே பொருள்? ‘ஐந்திடத்து நெறி’ என்பதற்குப் பொருள் ‘ஐந்திடத்திற் சேர்க்கும் நெறி’ அல்லது ‘ஐந்திடத்திற் செல்லும் நெறி’ என்பதுதானே? அப்பொருள் ஈண்டு எவ்வாற்றானும் பொருத்த முடைய தன்று. இக் காரணங்களால் ‘ஐம்புலத்தா றோம்பல்’ என்பது ஒருவன் படிக்க மற்றொருவன் கேட்டு ஏடு பெயர்த் தெழுதியதால் நேர்ந்த பிழை என்று கொள்க. பிற நூலாசிரியர்களும் ‘ஐம்புலத்தா ரோம்பல்’ என்றே கூறியிருக் கிறார்கள். ‘தென்புலத்தார்’ என்பதற்குப் ‘பிதிரர்’ என்று உரைப்பாரும் உளர். கருத்து: இக்குறளிற் கூறிய ஐந்து இடத்தவரையும் பேணுதல் இல்லறங் களில்தலையாய அறம். | முன்னோர்கள், தெய்வம், விருந்து, சுற்றம், தான் என்ற ஐந்திடத்தும் செய்யவேண்டிய நல்வழியினைப் போற்றிக் காத்து வழுவாமல் நடந்துகொள்ளுதல் சிறப்புடைய அறமாகும். | தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐந்து இடத்தும் செய்யப்படும் நெறிச் செயல்களைப் போற்றுதல் சிறப்பான இல்வாழ்க்கையாம் என்பது இக்குறட்கருத்து. | இல்வாழ்க்கையோடு ஒன்றியுள்ள ஐவகையினர்க்கு இல்வாழ்வான் ஆற்றவேண்டிய கடன்கள். | தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐந்து இடத்தும் செய்யப்படும் அறநெறிச் செயல்களைக் காத்தல் சிறப்பான இல்வாழ்க்கையாம் | |||||||
45 | இல்வாழ்க்கை | 44 | பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் | பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்துஆயின் இல்வாழ்க்கை வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல். | பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். | பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் | பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். | Sin he shuns and food he shares His home is bright and brighter fares. | Who shares his meal with other, while all guilt he shuns, His virtuous line unbroken though the ages runs. | His descendants shall never fail who, living in the domestic state,,, <p> fears vice (in the acquisition of property) and shares his food (with others). | The posterity of householders who gather wealth without misdeeds and share meals without miserliness will never perish. | பழிக்கு அஞ்சாமல் சேர்ந்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்தபொருளைப் பகுத்து உண்ணும்பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது. | பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை. | பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை. | பழிக்குப் பயந்து பொருளீட்டியும் கஞ்சத்தனமின்றிப் பகிர்ந்தும் உண்பானுடைய செழிப்பு என்றும் குன்றாது. | பழி அஞ்சிப் பாத்து ஊண் வாழ்க்கை உடைத்தாயின் - பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்பு உடைய மூவர் முதலாயினார்க்கும் தென் புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை ஒருவன் இல்வாழ்க்கை உடைத்தாயின்; வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல் - அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றல் அல்லது இறத்தல் இல்லை. (பாவத்தான் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சி' என்றார். வாழ்வானது உடைமை வாழ்க்கை மேல் ஏற்றப்பட்டது.). | இல்வாழ்க்கையாகிய நிலை, பழியையுமஞ்சி பகுத்துண்டலையுமுடைத்தாயின், தனதொழுங்கு, இடையறுதல் எக்காலத்தினுமில்லை. மேல் பகுக்குமாறு கூறினார். பகுக்குங்காற் பழியோடு வாராத பொருளைப் பகுக்க வேண்டுமென்று கூறினார். | பழிக்குப் பயமும், உள்ளதைப் பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து உண்ணும் இயல்பும் உடையதானால், வாழ்க்கை வழிக்கு எப்போதுமே குறைவு இல்லை | பழியஞ்சிப் பகுத்துண்ணும் இல்லறத்தானுக்கு வாழ்வு குறையாது ;வழியும் நில்லாது. | பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். | பழி பாவங்களுக்கு அஞ்சி தேடிய பொருளை அனைவரோடும் கூடிப் பகுத்து உண்ணும் இல்லறத்தானுடைய வாழ்க்கை களங்கமற்றதாகும். | வாழ்க்கை - ஒருவனது இல்லறவாழ்க்கை; பழி அஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் - ஈயாத கஞ்சன் என்று பிறர் பழித்தற்கு அஞ்சித் துறந்தார் முதலிய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய ஐவர்க்கும் அவன் பொருளைப் பகுத்தளித்து உண்டலை இயல்பாகக் கொண்டிருப்பின் ; வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்-அவனது மரபுவழி ஒருபோதும் அறாது எக்காலும் தொடர்ந்து வருவதாம். இறைவனருளும் உலகோர் வாழ்த்தும் அவன் வழியை நீடிக்கச் செய்யும் என்பது கருத்து. <br> | பொருள்: வாழ்க்கை பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்தாயின் ‡ இல் வாழ்க்கை மறத்தை விடுத்து (மேலே கூறிய பலர்க்கும்) பகுந்து (கொடுத்து) உண்ணுதலை உடைத்தாயின், வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்-(தனது) நெறியில் குறை பாடுறுதல் எந்நாளும் இல்லை. அகலம்: இல் வாழ்க்கை என்பது இல் வாழ்வார்மேல் நின்றது. இல் வாழ்க்கை நெறியில் - இல்லறம் புரிதலில். பொருளின்மை, மக்களின்மை, முதலியவற்றால் இல்லறம் குறைபாடுறும். அக்குறைபாடு பழி யஞ்சிப் பாத்தூணுடையார்க்கு இல்லை என்றவாறு. தாமத்தர் பாடம் ‘பாத்த லுடைத்தாயின்’. நச்சர் பாடம் ‘உடைத்தாய வாழ்க்கை’. கருத்து: பாவஞ் செய்யாது பலர்க்கும் பகுந்து கொடுத்து உண்ணும் இல் வாழ்க்கை எஞ்ஞான்றும் இனிது நடைபெறும். | மற்றவர்கள் கூறும் பழிக்கு அஞ்சிப் பிறர்க்கும் பகுத்துக் கொடுத்து வாழ்கின்ற இல்லறத்தானுடைய பரம்பரை என்றும் குறைவின்றி இருப்பதாகும். | பழிவந்துவிடுமோ என்று அஞ்சியும் பகுத்து உண்டலையும் உடைய இல்வாழ்க்கை எக்காலத்திலும் இடரின்றிப் பயணிக்கும் என்பது இக்குறட்கருத்து. | குற்றம் தவிர்த்தும், பரந்த உள்ளத்துடனும், இல்வாழ்க்கை நடத்தப்பட வேண்டும். | பழிக்கு அஞ்சியும் பலரோடு பகுத்துண்டலை உடைத்ததுமான இல்வாழ்வு வழி என்றும் இடரின்றி அமையும். | |||||||
46 | இல்வாழ்க்கை | 45 | அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது | அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது | அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. | அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது | அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. | In grace and gain the home excels, Where love with virtue sweetly dwells. | If love and virtue in the household reign, This is of life the perfect grace and gain. | If the married life possess love and virtue, these will be both its duty and reward. | When family life possesses love and virtue, it has found both its essence and fruition. | இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை. | மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே. | இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும். | இல்வாழ்வில் அன்பும் அறனும் குழைந்திருப்பின் அதுவே அதன் சத்தும் கனியுமாகும். | இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும். (நிரல்நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.). | இல்வாழ்க்கையாகிய நிலை யாவர்மட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை தானே. பயன் வேறு வேண்டாம் :தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சி தானே யமையுமென்பது. இது பழியோடு வாராத வுணவை நுகர வேற்பார் மாட்டு அன்புசெய்யவேண்டுமென்பதும் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்பதும் கூறிற்று. | கணவன் மனைவியருக்குள் அன்புப் பிணைப்பும், அறநெறிப்படியே நிகழ்ந்து வருவதும் உடையதானால், இல்வாழ்க்கையில் பண்பும் பயனும் அந்த வாழ்வே ஆகும் | அன்பும் அறனும் உடைய குடும்பம் நாகரிகமும் நலமும் பெற்றுவிளங்கும். | அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. | இல்வாழ்க்கை அன்பும், அறமும் உடையதாக விளங்கினால் அந்த வாழ்க்கையின் பண்பும், பயனும் அதுவே ஆகும். | இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவனது இல்லறவாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத்துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்துப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ்வுடைமை அவ்வாழ்க்கைக்கு முறையே தன்மையும் பயன்விளைவுமாகும். இல்லறவாழ்க்கை இருபகட்டொருசகட் டொழுக்கம் போல்வ தாகலின், கணவன் மனைவியரிடைப்பட்ட இருதலையன்பு அதன் பண்பாயிற்று. அதனாற் செய்யப்படும் அறம் அதன் பயனாயிற்று. அன்பு பண்பும் அறம் பயனும் ஆகும் என்பது நிரனிறை. | பொருள்: இல் வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - இல் வாழ்க்கை அன்பும் அறமும் உடைத்தாயின், அது பண்பும் பயனும் - அவ்வுடைமை (இல் வாழ்க்கையின்) பண்பும் பயனு மாம். அகலம்: ஈண்டும் இல் வாழ்க்கை என்றது இல் வாழ்வாரைக் குறித்து நின்றது. பண்பு -தன்மை. பயன்- ஊதியம். நச்சர் பாடம் ‘உடைத்தாய வில்வாழ்க்கை’ ; ‘பயனுந் தரும்’. கருத்து: அன்புடைமையும் அறனுடைமையும் முறையே இல் வாழ்க்கை யின் பண்பும் பயனும் ஆம். | இல்லற வாழ்க்கையானது அன்பினையும் அறத்தினையும் உடையதாக இருக்குமேயானால் அதுவே இல்லறத்தின் பண்பும் பயனுமாகும். | இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடையதானால் அது பண்பும் பயனும் ஆகும் என்பது இக்குறட்கருத்து. | அன்பு காட்டி அறம் வளர்ப்பது இல்வாழ்க்கை. | அன்பும் அறமும் உடைய இல்வாழ்க்கை குணச்சிறப்பும் பயனும் உள்ளதாகும். | |||||||
47 | இல்வாழ்க்கை | 46 | அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவது எவன். | அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன். | அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன். | அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில் போஒய் பெறுவது எவன் | அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன். | Who turns from righteous family To be a monk, what profits he? | If man in active household life a virtuous soul retain, What fruit from other modes a virtue can he gain? | What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ? | If a man masters the duties of married life, what further merits could monkhood offer him? | அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது. | மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?. | ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?. | இல்லற கடமைகளில் தேர்ச்சி பெற்றால் ஒருவன் துறவறம் பூண்டு பெறுவதற்கு வேறு யாது உளது ? | இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் - ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன் - அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? ('அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், போஒய்ப் பெறுவது எவன் என்றார்.). | அறநெறிப்படியே இல்வாழ்க்கையை ஒருவன் நடத்தி வருவானானால், அவன் வேறு நெறியிலே போய்ப் பெறுவது என்ன? | © 2019 <a href="https://kural.pro/"><i>Thiruk</i><strong>Kural</strong> <sup>PRO</sup></a>. | அறத்தின்படி குடும்பம் நடத்தினால் அதனைத் துறந்துபோய்ப்பெறுவது என்ன? | அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவ தெவன்? | ஒருவன் அறநெறிப்படி இல்வாழ்க்கையை நடத்தினால் அதைவிட அவன் வேறு நெறியில் போய்ப் பெறத்தக்கது ஒன்றுமே இல்லை. | இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின் புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ?. மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பயனும் இதுதானே தருமென்றார். | பொருள்: அறத்து ஆற்றின் இல் வாழ்க்கை ஆற்றின் -இல் வாழ்க்கை நெறியிலே இல் வாழ்க்கையை (ஒருவன்) நடாத்தின், புறத்து ஆற்றில் போய் பெறுவது எவன் - (அவன்) துறவு நெறியிற் சென்று (இல்வாழ்வான் பெறுவதினும் மிகுதியாய்ப்) பெறும் பேறு யாது? (ஒன்றும் இல்லை). அகலம்: ‘அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை’ என்றமையால், அறம் என்பதற்கு இல் வாழ்க்கை என்று பொருள் உரைக்கப்பட்டது. ‘ஒகர’ அளபெடை இசை நிறைக்க வந்தது. தாமத்தர் பாடம் ‘இல்வாழ்க்கை யாற்றா’. கருத்து: இல்வாழ்க்கை நெறியிலே இல் வாழ்க்கையை நடாத்துகிற இல் வாழ்வானும் துறவு நெறியிலே துறவை நடாத்துகிற துறவியும் பெறும் பேறு ஒன்றே. | அறநெறியில் இல்வாழ்கையினை ஒருவன் நடத்துவானேயானால், அப்படிப் பட்டவர்கள் அதற்குப் புறம்பான வேறு வழிகளில் சென்று பெறுவது யாது? | அறவழியில் இல்லற வாழ்க்கையை நடத்துவானாயின் அதற்குப் புறம்பாகிய நெறியிலே போய்ப் பெறும் பயன் என்ன? என்பது இக்குறட்பொருள். | இல்வாழ்க்கையில் கிடைக்காத ஒன்று துறவு வாழ்க்கையில் பெறமுடியாது என்று சொல்லும் பாடல். | அறநெறியில் இல்வாழ்க்கையை நடத்துபவன், அதனைச் துறந்து வேறுநெறியில் போய்ப் பெறுவது என்ன? | |||||||
48 | இல்வாழ்க்கை | 47 | இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை | இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை | இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. | இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை | இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. | Of all who strive for bliss, the great Is he who leads the married state. | In nature's way who spends his calm domestic days, 'Mid all that strive for virtue's crown hath foremost place. | Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state. | Among those who strive for liberation, the foremost are they who live the blessed state of family life as it should be lived. | நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான். | கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன். | அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான். | இல்வாழ்க்கை வாழ்வாங்கு வாழ்வாரே வீடுபெற முயல்வாருள் தலையாயர் ஆவார். | இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் - இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் தலை - புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன். (முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பல வகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்துதலின், 'தலை' எனவும் கூறினார்.). | நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான். முயறல்- பொருட்கு முயறல். | அறநெறியின் தன்மையோடு இல்வாழ்க்கை வாழ்பவனே வாழ்வு முயற்சியில் ஈடுபடுவாருள் எல்லாம் தலைசிறந்தவன் ஆவான் | இயல்பாகக் குடும்ப வாழ்வு வாழ்பவன் முன்னேற முயல்வார்எல்லாரினும் சிறந்தவன். | இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. | அறநெறியில் இல்வாழ்க்கை வாழ்பவன், பிற வழிகளில் வாழ்பவர்களை விடவும் தலை சிறந்தவனாவான். | இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் - முறைப்படி இல்லறவாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன்; முயல்வாருள் எல்லாம் தலை - பற்றறுக்க முயலும் துறவு நெறியார் எல்லாருள்ளும் தலைமையானவனாம். முற்றத்துறந்தார் யாரென மக்களால் அறியப் படாமையின், 'முயல்வாருளெல்லாம்' என்றும், இருவகை யறத்தார்க்கும் உதவியே வீடு பெறுதலின் 'தலை' என்றுங் கூறினார். என்பான் என்னும் செய்வினை வாய்பாட்டுச் சொல் செயப்பாட்டு வினைப்பொருளது. | பொருள்: இயல்பினான் இல் வாழ்க்கை வாழ்பவன் என்பான்- (இல் வாழ்க் கைக்குரிய) இயல்போடு (கூடி) இல் வாழ்க்கையை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன், முயல்வாருள் எல்லாம் தலை ‡ (வீட்டுப் பேற்றை அடைய) முயல்பவரு ளெல்லாம் முதன்மையானவன். அகலம்: ‘ஆன்’ என்னும் உருபு ‘ஓடு’ என்னும் பொருளில் வந்தது. தாமத்தர் பாடம் ‘என்ப’. மற்றை நால்வர் பாடம் ‘என்பான்’. கருத்து: இயல்பினான் இல்வாழ்வான் வீட்டுப் பேற்றை அடைய முயல்வாருள் முதன்மையானவன். | இல்லறத்திற்குரிய இயல்புகளுடனே இல்வாழ்க்கை நடத்துபவன், ஆசைகளை அடக்கிவாழும் துறவிகள் எல்லோரினும் மேலானவன். | இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் மேலான வாழ்வு பெறவேண்டுமென்று முயற்சி செய்கின்றவர்கள் எல்லாருள்ளும் முதன்மையானவன் என்பது இக்குறட்கருத்து. | இல்வாழ்க்கையில் ஈடுபட்டவனே முயன்று வெற்றி பெறுபவனாவான். | இயல்பாகக் குடும்ப வாழ்வு வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் நல்வாழ்வு பெறவேண்டுமென்று முயற்சி செய்கின்றவர்கள் எல்லாருள்ளும் முதன்மையானவன். | |||||||
49 | இல்வாழ்க்கை | 48 | ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து | ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து | ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. | ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து | ஆற்றின் ஒழக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. | Straight in virtue, right in living Make men brighter than monks praying. | Others it sets upon their way, itself from virtue ne'er declines; Than stern ascetics' pains such life domestic brighter shines. | The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance. | The householder dedicated to duty and to aiding ascetics on their path of penance endures more than they do. | தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப்பெருமையுடையதாகும். | மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது. | மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும். | இல்லறக் கடமைகளில் ஈடுபட்டுத் துறவியரைத் தவவழியிற் செல்ல உதவுபவன் அத்துறவியரிலும் அதிகம் சகித்துக் கொள்கிறான். | ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து. (பசி முதலிய இடையூறு நீக்கலின் 'ஆற்றின் ஒழுக்கி' என்றார். 'நோற்பார்' என்பது ஆகுபெயர்.நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், 'நோற்பாரின் நோன்மையுடைத்து' என்றார்.). | பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின் பாலொழுகும் இல்வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து. ஒழுகப் பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல். இது தவத்தினும் வலியுடைத்தென்றது. | பிறரையும் அறநெறிப்படி நடக்கச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை வாழ்வதானது, தவசியரின் நோன்பை விட வலிமையானது ஆகும் | பிறரை நெறிப்படுத்தித் தானும் நெறிநிற்கும் இல்வாழ்வேதவத்தினும் ஆற்றல் உடையது. | ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. | பிறரை அறவழியில் செலுத்தி, தானும் அவ்வழியில் சென்று வாழும் இல்லறத்தானின் வாழ்க்கை துறவற வாழ்க்கையை விடச் சாலச் சிறந்ததாகும். | ஆற்றின் ஒழுக்கி - தவஞ்செய்வாரைத் தவநெறியில் ஒழுகச் செய்து; அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தானும் தன் அறத்தினின்று தவறாத, இல்லறவாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத்தவஞ் செய்வார் நிலையினும் மிகுந்த பொறைத் திறனை யுடையது. பசி தகை முதலிய இடையூற்றை நீக்கலின் 'ஆற்றினொழுக்கி' என்றார். இல்வாழ்வான் தன்மை அவன் வாழ்க்கைமேல் ஏற்றிக் கூறப்பட்டது. இல்லறத்தையுங் காத்துத் தவநெறியையும் ஊக்குவது, தவநெறியை மட்டுங் காப்பதினும் வலிமையுடைத்தாயிற்று. நோற்பார் என்பது ஆகுபொருட்சொல். | பொருள்: ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல் வாழ்க்கை ‡ (ஏனைய நிலையினரை அவரவர்) நெறியின்கண்ணே நடாத்துவித்து இல்லறத்தில் தவறாத இல் வாழ்க்கை, நோற்றலின் நோன்மை உடைத்து - தவ மிழைத்தலைப் போல மேம்பாடு உடையது. அகலம்: நிலையை ‘ஆசிரமம்’ எனவும், நிலையினனை ‘ஆசிரமி’ எனவும் வடநூலார் கூறுவர். அவர் ஆசிரமங்களைப் பிரமச்சரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம் என நான்காகவும், அவ்வாசிரமிகளை முறையே பிரமச்சாரி, கிருகத்தன், வானப்பிரத்தன், சந்நியாசி எனவும் கூறுவர். பிரமச்சாரி-மாணவன். கிருகத்தன்‡இல்வாழ்வான். வானப்பிரத்தன் ‡ மனையாளோ டாயினும், தனித்தாயினும் வனத்திற் சென்று தவம் புரிவோன். சந்நியாசி‡ துறவி. மாணவன் நிலையினை இல் வாழ்க்கையில் அடக்கியும், தவம் புரிவோன் நிலையினைத் துறவில் அடக்கியும் நிலையினை இல் வாழ்க்கை, துறவு என இரண்டாகவும் அந் நிலையினரை முறையே இல்வாழ்வான், துறவி எனவும் தமிழ் நூலார் கூறுவர். நடாத்து வித்தலாவது, அவருக்கு உண்டி முதலியன உதவி, அவர் தம் நெறியில் தளராது செல்லும்படி செய்தல். மணக்குடவர் பாடம் ‘நோற்றலின்’. மற்றை உரையாசிரியர் நால்வர் பாடம் ‘நோற்பாரின்’. ‘நோற்றலின்’ என்பது தொடை யின்பம் பயத்தலானும், இல் வாழ்க்கை என்பது போல ஒரு செயலைக் குறிக்கின்றமையானும், ‘நோற்றலின்’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப் பட்டது. கருத்து: இல் வாழ்க்கை துறவினைப் போலவே மேம்பாடு உடையது. | தவம் செய்வோரை நன்னெறியிலே நடத்திச் சென்று அறத்தினின்றும் நீங்காத இல்லறம், நோன்பு நோற்றுத் தவம் செய்வோரது நிலைமையையும் விடப் பெருமையினை உடையதாகும். | பிறரை நெறியில் நடத்தித் தானும் அறநெறி பிறழாது ஒழுகுவானது இல்வாழ்க்கை, தவம் செய்வார் நிலையினைவிட நோன்மை கொண்டது என்பது இக்குறட்கருத்து. | இல்வாழ்க்கையே ஒரு நோன்புதான். | பிறரை நெறிப்படுத்தித் தானும் அறநெறி பிறழாது ஒழுகுவானது இல்வாழ்க்கை தவச்சிறப்பினும் மேலானது. | |||||||
50 | இல்வாழ்க்கை | 49 | அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று | அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. | அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. | அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று | அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. | Home-life and virtue, are the same; Which spotless monkhood too can claim. | The life domestic rightly bears true virtue's name; That other too, if blameless found, due praise may claim. | The marriage state is truly called virtue. The other state is also good, if others do not reproach it. | Domestic life is rightly called virtue. The monastic path, rightly lived beyond blame, is likewise good. | பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும். | அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது. | அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும். | அறவாழ்வு என்பது இல்லற வாழ்வினையே. அதுபோல் துறவறமும் பிறர் பழிப்பில்லதாயின் நல்லதேயாம். | அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை - இருவகை அறத்தினும் நூல்களான் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - ஏனைத் துறவறமோ எனின், அதுவும் பிறனால் பழிக்கப்படுவது இல்லையாயின், அவ்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று. (ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இதனால் பிரிக்கப்பட்டது துறவறம் ஆதலின், 'அஃது' என்னும் சுட்டுப்பெயர் அதன் மேல் நின்றது. 'பிறன் பழிப்பது' என்றது கூடாவொழுக்கத்தை. துறவறம் மனத்தையும் பொறிகளையும் ஒறுத்து அடக்கவல்ல அருமையுடைத்தாய வழியே, அவற்றை ஒறுக்க வேண்டாது ஐம்புல இன்பங்கள் ஆரத்துய்க்கும் மென்மையுடைய இல்வாழ்க்கையோடு அறம் என ஒருங்கு எண்ணப்படுவது என்றவாறு ஆயிற்று. இவை நான்கு பாட்டானும் இல்நிலையே பயனுடைத்து என இதன் சிறப்புக் கூறப்பட்டது.). | அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே. அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப்படுவதொன்றை யுடைத்தல்லவாயின். பழிக்கப்படுவதென்றது இழிகுலத்தாளாகிய மனையாளை. இனி வாழ்க்கைத் துணைநலங் கூறுகின்றாராகலின், இது கூறப்பட்டது. | அறம் என்று சான்றோரால் சொல்லப்பட்டது யாதெனில், இல்வாழ்க்கையே; அதுவும் பிறன் பழித்துப் பேசுவதில்லையானால் சிறப்பாகும் | அறமென்று உறுதிப்பட்டது குடும்ப வாழ்வே; துறவும் பழியில்லாவிட்டால் அறமாகும். | அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. | அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது இல்லற வாழ்க்கையே. அதுவே பிறரால் பழிக்கப்படாமல் விளக்கினால் மேலும் நன்மையாகும். | அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை - இரு வகை யறத்துள்ளும் அறம் என்று தமிழ் நூல்களாற் சிறப்பித்துச் சொல்லப்பெற்றது இல்லறமே; அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - அவ்வில்லறமும் பிறராற் பழிக்கப்படாத தூய்மையுடைத்தாயின் மிக நன்றாம். பிரிநிலையேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. அஃது என்னுஞ் சுட்டுப் பெயர், முற்குறிக்கப் பெற்ற இல்லறத்தைச் சுட்டுமேயன்றி அதற்கு மறுதலையானதும் ஓரிடத்துங் குறிக்கப் பெறாததுமான துறவறத்தைச் சுட்டாது. மேலும், துறவறமும் நல்லதே யென்று கூறின், அது 'அறனெனப் பட்டது இல்வாழ்க்கையே' என்னும் பிரிநிலைத்தேற்றக் கூற்றின் வலிமையைக் கெடுத்து முன்னுக்குப் பின் முரணாதல் காண்க. "இல்லற மல்லது நல்லற மன்று" என்னும் ஒளவையார் கூற்றையும் நோக்குக. பிறன்பழிக்கும் இல்வாழ்க்கை விருந்தோம்பாமையாலும் பிறனில் விழைவாலும் வரைவின் மகளிர் தொடர்பாலும் பிறவற்றாலும் நேர்வதாம். | பொருள்: அறன் எனப்பட்டது இல் வாழ்க்கையே ‡ அறம் என்று சிறப்பித்து (நூல்களால்) சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று ‡ துறவும் மற்றொருவன் பழிப்பதற்கு ஏதுவாகிய கூடா வொழுக்கம் இல்லையாயின் அறமாம். அகலம்: ‘எனப்பட்டதே’ என்பதினின்று ‘ஏகார’த்தைப் பிரித்து ‘இல் வாழ்க்கை’ என்பதனோடு சேர்த்துப் பொருள் உரைக்கப் பட்டது. அது பிரிநிலைக்கண் வந்தது. ஈண்டுக் கூறப்படாது சேய்மையின்கண் கூறப்படுதலானும், ஆண்டு ‘உலகம் பழித்த தொழித்து விடின்’ என்று கூறப் படுதலானும், அஃது என்பதற்குத் துறவு என்று பொருள் உரைக்கப்பட்டது. உலகம் பழித்தது ஒழியாவிடின், துறவு அறம் எனப்படுதற்குரிய பெருமையுடைய தன்று என்றவாறு. ‘வீழ்நாள் படாஅமை’ என்னும் தொடக்கத்துக் குறளில் அறத்தை நன்று எனக் கூறியிருத்தல் காண்க. கருத்து: இல் வாழ்க்கையே அறம் ; கூடா வொழுக்கம் இல்லையேல், துறவும் அறமாம். | ஆறாம் என்று சிறப்பித்துக் கூறப்படுவது இல்லறமேயாகும். மற்றைய துறவறமோ என்றால், அதுவும் பிறனால் பழிப்புக்கு இடமின்றி இருக்குமேயானால், நல்லதாகும். | அறம் என்பதே இல்வாழ்க்கைதான்; அதுவும் பிறரால் பழிக்கப்படுவது இல்லையாயின் நல்லது என்பது இக்குறட்கருத்து. | வாழ்வாங்கு வாழ இல்வாழ்க்கையே ஏற்றது. | அறனென்று உறுதிப்பட்டது குடும்ப வாழ்வே; அதுவும் பிறரால் பழிக்கப்படாதவாறு அமைந்தால் நல்லது | |||||||
51 | இல்வாழ்க்கை | 50 | வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் | வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் | வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். | வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் | வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். | He is a man of divine worth Who lives in ideal home on earth. | Who shares domestic life, by household virtues graced, Shall, mid the Gods, in heaven who dwell, be placed. | He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven. | He who rightly pursues the householder’s life here on Earth will be rightfully placed among the Gods there in Heaven. | தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில்வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்துமதிக்கப்படுவான். | மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான். | உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான். | இல்வாழ்வை இம் மண்ணில் நலம்பட நடத்துபவர் விண்ணில் வாழுந் தேவருக்குச் சமமாகப் போற்றப்படுவார். | வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன் - இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்- வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும். பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ், அதனை இறுதிக்கண் கூறுப. (அதி.24.புகழ்). | இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு. | உலகத்துள் வாழும் நெறிப்படியே வாழ்பவன், வானகத்தே வாழும் தெய்வத்துள் ஒருவனாகக் கருதி நன்கு மதிக்கப்படுவான் | உலகத்தில் மணந்து முறையாக வாழ்பவன் மேலுலகத் தேவராகமதிக்கப்படுவான். | வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். | உலகில் வாழ வேண்டிய அறநெறிப்படி வாழ்பவன் வானுலகத்தில் வாழும் தேவர்களுள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான். | வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - இவ்வுலகத்தில் இல்லறத்து வாழும் முறைப்படி வாழ்கின்றவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - இவ்வுலகத்தானேயாயினும் வானுலகிலுள்ள தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான். இல்லறவாழ்க்கையில் தூய்மையாக வாழ்பவன் மக்களுட் சிறந்தவனாக இருப்பனாதலாலும், இம்மையிற் செய்த நல்வினைப் பயனை மறுமையில் தேவனாகித் தேவருலகத்தில் நுகர்வான் என்னும் நம்பிக்கையினாலும், 'வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். தெய்வம் என்றது வகுப்பொருமை. | பொருள்: வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்-பூவுலகத்துள் (இல் வாழ்வான்) வாழ வேண்டிய படி வாழ்பவன், வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் ‡ வானுலகத்தில் வாழும் தேவருள் (ஒருவனாக) மதிக்கப்படுவான். அகலம்: அவ்வாறு வாழ்பவன் இறந்த பின்னர் வானுலகத்தில் தேவனாய் வாழ்வன் என்று உரைப்பினும் அமையும், கொழுநனைப் பேணிய பெண்டிர் இறந்த பின்னர் வானுலகத்தில் பெருஞ்சிறப்புப் பெறுவர் என்று ஆசிரியர் அடுத்த அதிகாரத்திற் கூறுகின்றமையால். கருத்து: இல் வாழ்க்கையை ஒழுங்காக நடாத்துகின்றவன் தேவனாவான். | இவ்வுலகில் இல்லறத்தினை நடத்தி வாழவேண்டிய முறையில் வாழ்பவன் வானத்தில் வாழ்கின்ற தெய்வங்களுள் ஒன்றாக வைத்து மதிக்கப்படுவான். | உலகத்திலே வாழும் முறைப்படி இல்வாழ்க்கை வாழ்பவன் வானுலகத்திலுள்ள தேவர்களில் ஒருவராக எண்ணப்படுவான் என்பது இக்குறட்கருத்து. | இல்வாழ்க்கை வாழ்வான் தெய்வமாகவும் உயரலாம். | வாழும் முறைப்படி இவ்வுலகில் வாழ்பவன் மேலுலகத் தேவராக மதிக்கப்படுவான். | |||||||
52 | வாழ்க்கைத் துணைநலம் | 51 | மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை | மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தன் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை | மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. | மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கை_துணை | மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. | A good housewife befits the house, Spending with thrift the mate's resource. | As doth the house beseem, she shows her wifely dignity; As doth her husband's wealth befit, she spends: helpmeet is she. | She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state. | She is the helpful wife who possesses the fullness of domestic virtues and spends within her husband’s means. | இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள். | பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி. | இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள். | மனை ஒழுக்க நெறியில் நிறைவுடையவளாய் கணவன் வருவாய்க்குத் தகச் செலவு செய்பவளே அவனுக்கு வாய்த்த வாழ்க்கைத் துணையாவாள். | மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்; வாழ்க்கைத் துணை- அதற்குத்துணை. (நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது.). | தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள் இல்வாழ்க்கைத் துணையாவள். | இல்வாழ்வுக்குத் தகுந்த சிறந்த பண்பு உடையவளாகித் தன்னை மணந்தவனின் வளமைக்குத் தகுந்தபடி நடப்பவளே, சிறந்த வாழ்க்கைத் துணைவியாவாள் | வாழ்க்கைத்துணை யார்? குடும்பப் பண்பினள்; கணவன்வருவாய்க் கேற்ப வாழ்பவள். | மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. | இரக்க குணம் பொருந்தி, கணவனின் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்து இல்லற வாழ்க்கையை நடத்துபவளே உண்மையான மனைவி ஆவாள். | மனைத்தக்க மாண்பு உடையளாகி - இல்லறத்திற் கேற்ற நற்குண நற்செய்கைகள் உடையவளாய்; தற்கொண்டான் வளத்தக்காள் - தன்னை மணந்து கொண்ட கணவனின் வருவாய்க்குத் தக்கவாறு வாழ்க்கை நடத்துபவள்; வாழ்க்கைத் துணை-அவனுக்குச் சிறந்த வாழ்க்கைத் துணையாம். நற்குணங்களாவன, கணவனையும் பிறக்கும் மக்களையும் பேணுதலும் அன்பாக விருந்தோம்புதலும் துறவியரைப் போற்றுதலும் இரப்போர்க்கு ஈதலும் முதலியன, நற்செய்கைகளாவன, அறுசுவை யுண்டிகளைச் சுவையாகச் சமைத்தலும் வீட்டையும் பொருள்களையும் பாதுகாத்துக் கொள்ளுதலும் அக்கம் பக்கத்தாரொடு நட்பாயிருத்தலும் கணவன் உத்தரவின்றி வீட்டைவிட்டு வெளியேறாமையும் முதலியன. | மனையறத்திருக்குத் தகுந்த நற்குண நற்செய்கையான சிறப்பின்னையுடையவளாகித் தன்னைத் கொண்டவனது வரவுக்குத் தகுந்தபடி வாழ்பவளே வாழ்க்கைத் துணைவியாவாள். | இல்லறத்துக்குரிய உயர்ந்த பண்புடையவளாய் ஆகி, தன்னை மனைவியாகக் கொண்டவனுடைய வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையவள் வாழ்க்கைத் துணையாவாள் என்பது இக்குறட்கருத்து. | வாழ்க்கைத்துணை நலத்தின் இலக்கணம் கூறுவது. | இல்லறத்துக்கு ஏற்ற பண்புடையவளாய் ஆகித் தன்னை மனைவியாகக் கொண்டவனது பொருள்நிலைக்குத் தக்க குடும்பம் நடத்துபவள் வாழ்க்கைத் துணையாவாள். | ||||||||
53 | வாழ்க்கைத் துணைநலம் | 52 | மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் | மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின் வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் | மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். | மணை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை எனை மாட்சித்து ஆயினும் இல் | மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். | Bright is home when wife is chaste. If not all greatness is but waste. | If household excellence be wanting in the wife, Howe'er with splendour lived, all worthless is the life. | If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing. | Family life, however full, remains empty if the wife lacks the lofty culture of the home. | நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது. | நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே. | இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை. | குடும்பத்து உயர்பண்புகள் மனைவியிடம் இல்லையேல் வேறு சிறப்பு இருப்பினும் அது வெற்று வாழ்க்கையேயாம். | மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று. ('இல்' என்றார் பயன்படாமையின்.). | குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம். | இல்வாழ்வுக்கான சிறப்புகள் அனைத்தும் மனைவியிடம் இல்லையானால், அந்த இல்வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பிருந்தாலும் அது வாழ்வு ஆகாது | வீட்டுப்பண்பு மனைவியிடத்து இல்லையானால் வாழ்வில்பிறநலம் இருந்தும் பயனில்லை | மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். | இல்வாழ்க்கைக்கு உரிய நற்பண்பு மனைவியிடம் இல்லையானால் ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை. | மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள் ஒருவனுடைய மனைவியிடத்தில் இல்லாவிடின்; வாழ்க்கை எனைமாட்சித்தாயினும் இல் - அவனது இல்வாழ்க்கை வேறு செல்வத்திலும் அதிகாரத்திலும் எத்துணைச் சிறந்ததாயினும் சிறப்புடையதாகாது. 'இல்' என்றது பயனின்மையை, "ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே". என்னும் பழமொழி இங்குக் கவனிக்கத் தக்கது. | இல்லறத்திற்கேற்ற சிறப்பு மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்இல் வாழ்க்கை செல்வம் முதலிய வேறு வகைகளில் எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் பயனுடையதில்லையாகும். | குடும்பத்துக்கு ஏற்ற பண்புநலன்கள் இல்லாளிடம் இல்லாது போனால், இல்வாழ்க்கையானது பிற பெருமைகள் எவை இருந்தாலும் ஒன்றும் இல்லை என்பது இக்குறட்கருத்து. | எது இருக்கிறதோ இல்லையோ மனைவியிடம் இல்லறத்திற்கேற்ற பண்புகள் இருந்தே ஆகவேண்டும் என்னும் வாழ்க்கைத்துணை நலம் பாடல். | இல்லறத்துக்குரிய பண்புகள் மனைவியிடம் இல்லாவிடின், இல்வாழ்க்கையில் வேறுவகையில் எவ்வளவு சிறப்புற்றிருந்தாலும் ஒன்றுமில்லை. | ||||||||
54 | வாழ்க்கைத் துணைநலம் | 53 | இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென் இல்லவள் மாணாக் கடை | இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதுஎன் இல்லவள் மாணாக் கடை | இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை. | இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் இல்லவள் மாணா-கடை | இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை. | What is rare when wife is good. What can be there when she is bad? | There is no lack within the house, where wife in worth excels, There is no luck with the house, where wife dishonoured dwells. | If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ? | What does a man lack if his wife is worthy? And what does he possess if she is lacking worth? | நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது. | நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?. | மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?. | மனையாள் குணநல மாண்புடையவளாயின் கணவனுக்கு இல்லாதது எது? அவள் மதிப்பிற் குன்றின் அவனிடம் உள்ளது எது? | இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் - ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என் - அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது? ('மாண்பு' எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.). | ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால் எல்லாமிலனேயாயினும் இல்லாதது யாது? மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது?. | இல்லாள் சிறந்தவளானால் இல்லாதது என்பது என்ன? இல்லவள் சிறந்தவள் அல்லாதபோது உள்ளதுதான் என்ன? | மனைவிக்குப் பண்பிருப்பின் எது இல்லை மனைவிக்குப்பண்பில்லை எனின் எது உண்டு? | இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? | மனைவி நற்குணம் பொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் பொருந்திய மனைவி அமைந்தால் வாழ்க்கை பயனற்றதாகும். | மணவை சிறப்புடையவளாக இருந்துவிட்டால் அவ் இல்வாழ்க்கையில் இல்லாத தொன்றுமில்லை. அவளை மனைக்குரிய சிறப்பு இல்லாதவளாகி விட்டால் இல்லறத்தில் உள்ளது ஒன்றுமில்லை. | இல்லாள் மாண்பு உடையவளாயிருந்தால் இல்லறத்தில் இல்லாதாது என்று ஒன்றுமில்லை; இல்லாள் பெருமைக் குணங்கள் அற்றவளாய் இருந்தால், இல்லத்தில் உள்ளது ஒன்றுமில்லை என்பது இக்குறட்கருத்து. | மனைவியே இல்லத்தின் பெருமை என்று வாழ்க்கைத்துணை நலம் கூறும் குறள். | மனைவி நற்பண்பே உருவாகத் திகழ்வாளாயின் இல்லத்தில் இல்லாதது என்ன? அவள் பண்பில்லாதவள் ஆயின் அங்கு உள்ளது என்ன? | |||||||||
55 | வாழ்க்கைத் துணைநலம் | 54 | பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின் | பெண்ணின் பெரும்தக்க யாஉளகற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின். | பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். | பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும் திண்மை உண்டாக பெறின் | பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். | What greater fortune is for men Than a constant chaste woman? | If women might of chastity retain, What choicer treasure doth the world contain? | What is more excellent than a wife, if she possess the stability of chastity ? | What is more majestic than a woman who preserves the prodigious strength of chastity? | கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது? | கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?. | இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?. | வியத்தகு கற்பெனும் திண்மை பேணும் பெண்ணிலும் உன்னதமானது எது? | பெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின். (கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.). | பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள? கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின். | கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால், அந்தப் பெண்ணை விடப் பெருமை மிக்கவை உலகில் யாவை உள்? ஒன்றுமில்லை | கற்புத்திண்மை செறிவாக இருப்பின் ஆணுக்கு மனைவியினும்நற்பேறு உண்டா? | பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். | கற்பு நெறியுடைய பெண் ஒருவனுக்கு மனைவியாக வாய்த்தால் அதை விடச் சிறந்த பெருமை அவனுக்கு வேறு இல்லை. | பெண்ணின் பெருந்தக்க யா உள ஒருவன் இவ்வுலகத்திற் பெறக்கூடிய பொருள்களுள் மனைவியினுஞ் சிறந்த தகுதியுடையவை வேறு எவை உள்ளன? ; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் -அவளிடத்திற் கற்பு என்னும் கலங்கா நிலைமை மட்டும் அமைந்திருக்குமாயின். கற்பு என்பது கற்போல் உறுதியான இருபாலிடைக் காதற் பண்பு. கல் -கற்பு. "கற்பு றுத்திய கற்புடை யாடனை" என்று கம்பரும் (அயோத்தி. நகர்நீங்கு. 19) கூறுதல் காண்க. அது மணப்பருவம் வரை தோன்றாதிருந்து பின்பு ஒருவரையே காதலிப்பது; இருபாற்கும் பொதுவானது. ஆதலின், மனைவியையன்றி அணங்கையும் நோக்காத ஆண்கற்பும் கணவனையன்றிக் காவலனையும் நோக்காத பெண்கற்பும் எனக்கற்பு இருதிறப்பட்டதாம். இங்குக் கூறியது பெண்கற்பு என அறிக. இன்னும் இதன் விளக்கத்தைக் கற்பியலிற் காண்க. கற்புடை மனைவியால் அறம்பொருளின்பப் பேற்றுடன் வாழ் நாளும் நீடிப்பதால், பெண்ணிற் பெருந்ததக்க யாவுள? என்றார். உண்டாகப் பெறின் என்பது உண்டாதலின் அருமை குறித்து நின்றது. | கற்பு என்னும் கலங்காமையாகிய மனத்திண்மை இருந்துவிட்டால் பெண்மைவிட உயர்வான (மேம்பட்ட) பொருள்கள் யாவை உள?. | பெண்ணிலும் பெருமை மிக்கன எவை உள்ளன? கற்பென்னும் திண்மை பெற்றிருந்தால் என்பது இக்குறட்கருத்து. | கணவன்கடந்த காமம் நினையாத பெண் மிக்க பெருமைக்குரியவள் என்று வாழ்க்கைத்துணை நலம் கூறும் குறள். | கற்பு என்னும் உறுதிப்பாடு கொண்ட மனைவியினும் மேம்பட்டன எவை உள்ளன? | ||||||||
56 | வாழ்க்கைத் துணைநலம் | 55 | தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை | தெய்வம் தொழாஅள் கொழுநன்தொழுது எழுவாள் பெய்எனப் பெய்யும் மழை. | தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. | தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய் என பெய்யும் மழை | தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை | Her spouse before God who adores, Is like rain that at request pours. | No God adoring , low she bends before her lord; Then rising, serves: the rain falls instant at her word! | If she, who does not worship God, but who rising worships her husband, say, “let it rain, “ it will rain. | Even the rains will fall at her command who upon rising worships not God, but her husband. | கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சிநடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக்கொள்பவளாவாள். | பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும். | வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும். | வேறு கடவுளையன்றி கணவனையே வணங்கித் துயிலெழும் பெண்ணின் ஆணைக்கு மேகமும் அடங்கி உடன் மழை பொழியும். | தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.). | தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும். | தெய்வம் தொழாதவளாய்த் தன் கொழுநனையே தொழுது துயிலெழுகின்ற கற்புடையவள் ‘பெய்’ என்றால், மழையும் பெய்யும் | தெய்வத்தை வணங்காது கணவனை வணங்குபவள்பெய்யென்றால் மழையும் பெய்யுமே. | தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. | கடவுளை வணங்காமல் கணவனையே தெய்வமாக எண்ணி, காலையில் எழுந்து அவனைத் தொழுது வருபவள் ‘பெய்‘ என்றால் மழையும் பெய்யும். | தெய்வம் தொழான் - தான் மணக்கு முன்பு தொழுதுவந்த சிறு தெய்வமாகிய இல்லுறை தெய்வத்தைத் தொழாது; கொழுநற் றொழுதெழுவாள் - தன் கணவன் பாதங்களையே வைகறையிறுதியில் தொட்டுக் கும்பிட்டெழும் கற்புடை மனைவி பெய் என மழை பெய்யும் - பெய்யென்று சொன்னவுடன் மழை பெய்யும். "அணங்குடை நல்லில்" என்னும் மதுரைக்காஞ்சித் தொடர் (678) இல்லுறை தெய்வத்தைக் குறித்தல் காண்க. சிவனும் திருமாலும் போன்ற பெருந்தேவரைக் கற்புடை மனைவியரும் தத்தம் கணவனாரொடு கூடி வழிபட்டமையை, திருநீலகண்ட நாயனாரின் மனைவியார், மங்கையர்க்கரசியார், காரைக்காலம்மையார் முதலியோர் வாழ்க்கையினின்று அறிந்துகொள்க. "வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது நீணில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு" (சிலப். 18 : 445-7) என்னும் பண்டை நம்பிக்கை, நாளடைவில் "பெய்யெனப் பெய்யும் மழை", "வான்றரு கற்பின் மனையறம்" ( மணி, உஉ : 53 ), "மழைதரும் இவள் ( மணி, உஉ : 13)என்னும் வழக்குக்கட்கு வழிகுத்தது போலும்! ஒருகால் வள்ளுவர் குறள் பண்டைக்காலத்து ஒரு பத்தினிப் பெண் செய்த இறும்பூதை (அற்புதத்தை ) அடிப்படையாகக் கொண்ட தாகவும் இருக்கலாம். இனி, "அனிச்சமும்.........நெருஞ்சிப்பழம்" என்பதைப்போல் உயர்வுநவிற்சியாகக் கொள்ளின் ஒரு குற்றத்திற்கும் இடமில்லை. புரட்சிப் பாவலர் பாரதிதாசனார், "கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழைக்கு ஒப்பாவள்". என்று பொருள் கூறிப் பொருத்தமாக்குவர். தொழா அள் என்பது இசைநிறை யளபெடை. | தெய்வத்தினைத் தொழுதாதவளாகிக் கணவனைத் தொழுது துயில்விட்டு எழுபவள் 'பெய்' என்று சொல்ல மழை பெய்யும். | தெய்வத்தைத் தொழாதவளாய் தன் கணவனையே வணங்கி எழுகின்றவள் 'பொழியட்டும்' என்று சொன்னவுடன் மழை பெய்யும் என்பது இக்குறட்கருத்து. | கணவனை நன்கு மதிக்கும் பெண் பெறும் பேராற்றலைச் சொல்லும் வாழ்க்கைத்துணை நலம் பாடல். | தெய்வம் தொழாமல் கணவனை வணங்கி எழும் பெண் 'பெய்' என்று சொன்னவுடன் மழை பெய்யும். | ||||||||
57 | வாழ்க்கைத் துணைநலம் | 56 | தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தசைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் | தன்காத்துத் தன்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். | தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். | தன் காத்து தன் கொண்டான் பேணி தகை சான்ற சொல் காத்து சோர்வு இலாள் பெண் | தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். | The good wife guards herself from blame, She tends her spouse and brings him fame. | Who gaurds herself, for husband's comfort cares, her household's fame, In perfect wise with sleepless soul preserves,-give her a woman's name. | She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame. | A married woman is one who vigilantly guards herself, cares for her husband and protects their unblemished reputation. | கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு,தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல்இருப்பவள் பெண். | உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி. | கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண். | தன்னைக் காத்துத் தன்னை மணந்தவனைப் பேணி தன் குடும்பத்தின் மாசறு புகழைக் காப்பவளே பெண் எனத்தக்காள். | தன் காத்துத் தன் கொண்டான் பேணி - கற்பினின்றும் வழுவாமல்தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி; தகைசான்ற சொல் காத்து - இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண் - மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள். (தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது.). | தன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி நன்மையமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள். | தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணித் தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாதவளே பெண் | தன்னையும் கணவனையும் புகழையும் போற்றிச் சுறுசுறுப்பாகஇருப்பவளே மனைவி. | தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். | கற்பு நெறியில் தன்னைக் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாமல் வாழ்பவளே சிறந்த பெண்ணாவாள். | தற்காத்து-தன் கற்பையும் உடல்நலத்தையுங் காத்து; தற்கொண்டாற் பேணி - தன் கணவனையும் உண்டி மருந்து முழுக்கு முதலியவற்றாற் பேணி; தகைசான்ற சொல்காத்துதம் - இருவரையும் பற்றிய தகுதிவாய்ந்த உலக மதிப்பையுங் காத்து; சோர்விலாள் - பிறர்க்குச் செய்யும் அறவினைகளிலும் தளர்ச்சியில்லாதவள்; பெண் - இல்லறத்திற்குச் சிறந்த பெண்ணாவாள். | தன்னையும் காத்துக் கொண்டு தன்னைக் கொண்ட கணவனையும் பேணிப் பிறர் கூறும் நற்புகழுரைகளையும் போற்றிக் காத்துச் சோர்வு (இவைகளில் மறதி) இல்லாதவளே மனைவியாவாள். | தன்னைக் காத்து, தன்னைக் கொண்ட கணவன் நலனில் அக்கறை செலுத்தி, நற்பெயர் காத்து, இல்லறக் கடமைகளில் தளர்வு அடையாதவளே நல்ல மனைவியாவாள் என்பது இக்குறட்கருத்து. | இல்வாழ்வின் புகழைக் காக்கும் பொறுப்பு பெரிதும் மனைவியிடம் உள்ளது என்பதைக் கூறும் வாழ்க்கைத்துணை நலம் பாடல். | தன்னைக் காத்து, தன் கணவனது நலனில் அக்கறை செலுத்தி, இருவரது புகழ் காத்து சுறுசுறுப்புடன் இருப்பவளே மனைவியாவாள். | ||||||||
58 | வாழ்க்கைத் துணைநலம் | 57 | சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை | சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. | சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. | சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறை காக்கும் காப்பே தலை | சிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. | Of what avail are watch and ward? Their purity is women's guard. | Of what avail is watch and ward? Honour's a woman's safest guard. | What avails the guard of a prison ? The chi ef guard of a woman is her chastity. | Why do guardians protect women by confinement when her own resolute chastity is a woman’s best protection? | தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும். | இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது. | மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது. | பெண்ணை வீட்டுள் வைத்துக் காப்பதேன்? பெண்ணின் உறுதியான கற்பே அவளுக்குத் தலைசிறந்த காவலாகும். | மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை - அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது. | மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல். | சிறை வைத்துக் காக்கின்ற காவல் என்ன பயனைச் செய்து விடும்? மகளிர், ‘நிறை’ என்னும் பண்பைக் காப்பதே சிறப்பானதாகும் | மனைவியர்க்குக் கற்புக் காவலே காவல்; வீட்டுச் சிறை என்னபயன் செய்யும்? | சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. | மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் முறை என்ன பயனைச் செய்யும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சாலச் சிறந்தது. | சிறைகாக்குங் காப்பு எவன் செய்யும்-பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் அடைத்துவைத்தாற்போற் காக்குங் காவல் என்ன பயன்படும் ?; நிறை காக்கும் காப்பே தலை -அப்பெண்டிரே தங்கள் கற்பினால் தங்களைக் காத்துக் கொள்ளுதலே தலையாய காவலாம். சிறை காப்பாவது இரவும் பகலும் வீட்டைவிட்டு வெளியேறாமற் காவல் செய்தல். நிறை யென்பது மனத்தைக் கற்புநெறியில் நிறுத்துதல். கற்பில்லாத பெண்ணைக் காவல் செய்தல் அரிது என்பது கருத்து. ஏகாரம் பிரிநிலை. | மகளிரைச் சிறைவைத்துக் காத்தல் என்பது என்ன பயனைச் செய்ய முடியும்? நிறையென்னும் கற்பினால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதே தலையான காப்பாகும். | சிறைசெய்து காக்கும் காவல் என்ன செய்யும்? கற்புடைமையைக் கடைப்பிடித்தலே பெண்ணுக்குச் சிறந்த காவல் என்பது இக்குறட்கருத்து. | பெண்ணின் கற்பு அரண் அமைத்துப் பிறரால் காக்க இயலாதது என்னும் வாழ்க்கைத் துணைநலம் பாடல். | சிறையால் காப்பது எப்படி முடியும்? பெண்கள் நிறையால் காப்பதே தலை சிறந்த காவல். | ||||||||
59 | வாழ்க்கைத் துணைநலம் | 58 | பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு | பெற்றால் பெறின்பெறுவர் பெண்டிர் பெரும்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. | பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. | பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு புத்தேளிர் வாழும் உலகு | பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. | Women who win their husbands' heart Shall flourish where the gods resort. | If wife be wholly true to him who gained her as his bride, Great glory gains she in the world where gods bliss abide. | If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish. | A woman deeply devoted to the man who wed her will be worthy of great rewards in the world where Gods delight. | நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும். | பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள். | கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர். | தன்னை மணந்த கணவனில் பக்தி பூண்டவள் தேவர் விரும்பி வாழ் உலகில் பெரும் சிறப்புப் பெறுவதற்காளாவாள். | பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.). | பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர். | பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வாரானால், பெரும் சிறப்புடைய புத்தேளிர் வாழும் உலகினைப் பெறுவார்கள் | கணவனது அன்பைப் பெறும் மனைவியர் மேலுலகிலும்பெருஞ்சிறப்புப் பெறுவர். | பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. | பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செம்மையாகச் செய்வாரானால் பெருஞ் சிறப்புடைய மேல் உலக வாழ்வைப் பெறுவர். | பெண்டிர் பெற்றாற் பெறின் - பெண்டிர் தம் கணவனுக்குத் தொண்டு செய்தலைப் பெறுவாராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ் சிறப்புப் பெறுவர் - தேவர் வாழும் உலகின்கண் அவராற் பெருஞ்சிறப்புச்செய்யப் பெறுவர். தொண்டுசெய்தல் என்பது சொல்லெச்சம். கொண்டானைப் பேணும் பெண்டிர் மண்ணுலகத்தில் மட்டுமன்றி விண்ணுலகத்திலும் சிறப்படைவர் என்பது இதனாற் கூறப்பட்டது. | பெண்டிர் தம்மைக் கொண்ட கணவனை வழிபட்டு வணங்கி வாழ்வாரானால், புத்தேளிர் வாழ்கின்ற உலகத்தில் அவரால் பெருஞ் சிறப்பினைப் பெறுவார்கள். | கணவனைத் தனக்கே உரியவனாகப் பெற்றால் மகளிர் மேலுலகப் பெருஞ்சிறப்புப் பெறுவர் என்பது இக்குறட்கருத்து. | புறம்போகாத கணவனை அடைவது மனைவி பெறும் ஒரு வரம் என்னும் வாழ்க்கைத் துணைநலம் பாடல் | தான் கணவனாகப் பெற்றானைத் தனக்கே உரியவனாகப் பெற்றால் மேலுலகில் பெறக்கூடிய இன்பத்தைப் பெண்டிர் இங்கேயே பெறுவர். | ||||||||
60 | வாழ்க்கைத் துணைநலம் | 59 | புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வவார்முன் ஏறுபோல் பீடு நடை | புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. | புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. | புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன் ஏறு போல் பீடு நடை | புகழ்புரிந்த இல்லிலோர்க்கும் இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. | A cuckold has not the lion-like gait Before his detractors aright. | Who have not spouses that in virtue's praise delight, They lion-like can never walk in scorner's sight. | The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them. | Unless the wife pursues praiseworthy purity, the husband cannot stride before critics like a proud lion. | புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய்விடுவார்கள். | புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை. | புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை. | குடும்பச் சிறப்பைப் போற்றி வாழும் மனைவி இல்லாத கணவன் தன்னை நகையாட விரும்புவார் முன் சிங்கம் போல் வீர நடை போட முடியாது. | புகழ் புரிந்த இல் இலோர்க்கு - புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை - தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை. ('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல்' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.). | புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை. ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை. | புகழைக் காப்பாற்ற விரும்பும் மனைவி இல்லாதவருக்கு, இகழ்ச்சியாகப் பேசுபவர் முன்னே ஏறுபோல் நடக்கும் பெருமித நடையும் இல்லை | மனைவி புகழ் காவாவிடின் பகைவர் முன் காளை போன்ற நடைகணவனுக்கு இராது. | புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. | கற்பில்லாத மனைவியைப் பெற்ற ஒருவனால் செருக்குடன் காளை போன்று நடை போட்டு, பகைவர்கள் முன்னால் செல்ல முடியாது. | புகழ் பரிந்த இல் இல்லோர்க்கு - தனக்கும் தன் கணவனுக்கும் புகழை விரும்பிய மனைவியில்லாதார்க்கு; இகழ்வார்முன் ஏறுபோல் பீடுநடை இல்லை-தம்மைப் பழித்துரைக்கும் பகைவர் முன் ஆணரிமா போல் இறுமாந்து நடக்கும் பெருமித நடையில்லை. பரிந்த என்னும் பெயரெச்சத்தின் அகரம் தொக்கது. ஏறு என்னும் விலங்கின ஆண்பாற் பொதுப் பெயர் நடைச் சிறப்புப்பற்றி இங்கு அரிமாவின் ( சிங்கத்தின் ) ஆண்பாலைக் குறித்தது. கற்புடை மனைவியாற் கணவன் மதிக்கப்படுதலை, "செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ" (புறம். 3 : 6 ), "அறம்பா டிற்றே ஆயிழை கணவ" (புறம். 34 : 7 ) "சேணுறு நல்லிசைச் சேயிழை கணவ" (பதிற். 88 : 36) என்னும் விளிகள் உணர்த்துதல் காண்க. | புகழ்வதற்குரிய மனையாளைப் பெறாத இல்வாழ்வார்களுக்குத் தம்மை இகழ்ந்து பேசும் பகைவர் முன்னே ஆண்சிங்கம் போன்ற பெருமிதமான நடை இல்லை. | புகழ்விரும்பும் இல்லாளை இல்லாதார்க்கு தம்மை இகழ்ந்துரைப்பார்முன் சிங்கம் போல நடக்கும் பெருமித நடை இல்லை என்பது இக்குறட்கருத்து. | வாழ்க்கைத் துணைநலம் சிறப்புற அமையவில்லையென்றால் அவன் குறைபாடு உடையவனே. | புகழ்விரும்பும் இல் இல்லாதார்க்குத் தம்மை இகழ்ந்து பேசும் வேண்டாதவர் முன் சிங்கம் போல நடந்துசெல்லும் பெருமிதமில்லை | ||||||||
61 | வாழ்க்கைத் துணைநலம் | 60 | மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு | மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கள் பேறு. | மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. | மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன் நன் கலம் நன் மக்கள் பேறு | மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு. | An honest wife is home's delight And children good are jewels abright. | The house's 'blessing', men pronounce the house - wife excellent; The gain of blessed childern is its goodly ornament. | The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness. | It is said a worthy wife is the blessing of a home, and good children are its precious ornaments. | குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது. | ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே. | மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர். | தகுந்த மனைவி வீட்டுக்கு மங்கலமாவாள், அவள் வளர்க்கும் குழந்தைகள் விலை மதிக்க முதியாத குடும்ப அணிகலன்களாவர். | மங்கலம் என்ப மனை மாட்சி - ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு - அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை. ('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.). | ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை. | மனைவியின் சிறந்த பண்பே இல்வாழ்வுக்கு மங்கலம்; நல்ல மக்கட்பேறும் உடையதாய் இருத்தல், அதற்கு நல்ல அணிகலன் ஆகும் | மனைவியின் பண்பே குடும்பத்துக்கு மங்கலம்: குழந்தைப் பேறேகுடும்பத்தின் நல்லணி. | மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு. | மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர். நல்ல மக்களைப் பெறுதல் அதற்கு நல்ல அணிகலன் ஆகும். | மனைமாட்சி மங்கலம் - மனைவியின் நற்குண நற்செய்கைச் சிறப்பே இல்லறத்திற்கு மங்கலமாவது; நன்மக்கட்பேறு அதன் நன்கலம் - நல்ல அறிவுடை மக்கட்பேறு அதற்கு அணிகலமாவது; என்ப - என்று கூறுவர் அறிந்தோர். மங்கலமென்பது நெடுநன்மை. அறிந்தோர் என்னும் எழுவாய் எஞ்சி நின்றது. 'மற்று' அசைநிலை; பெயர்மாற்று எனினும் ஒக்கும். இல்லறத்திற்கு அணிகலங் கூறுமுகத்தான் அடுத்த அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது. | மனைவியினுடைய நற்குண நற்செயல்களை இல்லறத்திற்கு மங்கலம் என்று கூறுவர். அந்த மங்கலத்திற்கு நன்மக்கள் பெறுதலை அணிகலம் என்று கூறுவர். | இல்லறத்தின் பெருமையே குடும்பத்துக்குப் பொலிவு தருவது என்று சொல்வர்; மேலும் அப்பெருமைக்கு அழகு சேர்ப்பது நல்ல மக்களை உருவாக்குவது என்பது இக்குறட்கருத்து. | ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணைநலமாய் அமைந்து மனையறம் பேணி மக்களைப் பெறுவது மனைமாட்சி. | இல்லறத்தின் பெருமையே குடும்பத்துக்குப் பொலிவு தருவது என்று சொல்வர்; மேலும் அதற்கு அழகு சேர்ப்பது நல்ல மக்களை உருவாக்கித் தருவது. | ||||||||
62 | மக்கட்பேறு | 61 | பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற | பெறும் அவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவு அறிந்த மக்கள்பேறு அல்ல பிற | பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற. | பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த மக்கள் பேறு அல்ல பிற | பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. | The world no higher bliss bestows Than children virtuous and wise. | Of all that men acquire, we know not any greater gain, Than that which by the birth of learned children men obtain. | Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children. | Of all blessings we know of none greater than the begetting of children endowed with intelligence. | அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை. | அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை. | பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை. | ஒருவனுக்கு அரும் பேறாக வாய்ப்பது அறிவிற் சிறந்த மக்களே அப்பேற்றிலுஞ் சிறந்ததை நாம் அறிந்ததில்லை. | பெறுமவற்றுள் - ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற - அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை - யாம் மதிப்பது இல்லை. ('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், 'அத்துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தால் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.). | ஒருவன் பெறும் பொருள்களுள் அறிவுடைய மக்களைப் பெறுதல் பயன்படுவது: ஒழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்தனவாக யாம் கண்டறிவதில்லை. | பெறுகின்ற செல்வங்களாகிய அவற்றுள், அறிவறிந்த மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்ததாக, பிற எதனையும் யாம் கருதுவதில்லை | அறிவுடைய குழந்தைச் செல்வத்தைத் தவிரப் பிற செல்வங்களையாம் மதிப்பதில்லை. | பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. | பெறுகின்ற செல்வங்களுள்,அறிவுடைய மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்ததாகப் பிற எதையும் நாம் கருதுவதில்லை. | பெறு மவற்றுள்-இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல - அறியத்தக்க நூல்களை அறியக்கூடிய பிள்ளைப்பேறு அல்லாத;பிற - வேறு சிறந்தவற்றை, யாம் அறிவதில்லை - யாம் அறிந்ததில்லை. அறிவு என்பது அறிவைத்தரும் நூலைக் குறித்தலால் கருமிய, (காரிய) வாகுபெயர். அறிந்த என்பது தேற்றம் பற்றிய காலவழுவமைதி. பெற்றோர், பேறுகாலம் என்னும் இருசொற்களும் பிள்ளைப் பேற்றின் தலைமையை எடுத்துக் காட்டும். | ஒருவன் பெறுகின்ற செல்வங்களும் அறிய வேண்டுவனவற்றை அறிதற்குரிய சிறந்த மக்களைப் பெறுவது போன்ற மற்றச் செல்வங்களை யாம் மதிப்பது இல்லை. | பெறும்பேறுகளுள் அறிய வேண்டியவற்றை அறிந்த மக்கட் செல்வம் அல்லாத பிற பேறுகளை யாம் அறியவில்லை என்பது இக்குறட்கருத்து. | நல்லறிவுள்ள புதல்வரைப் பெறுதலை விட சிறந்த பேறு வேறு எதுவுமில்லை | பெறுவதற்குரிய பேறுகளுள் அறிவினால் அறிதற்குரிய மக்கட்பேறு அல்லாத பிற பேறுகளை யாம் அறியவில்லை. | ||||||||
63 | மக்கட்பேறு | 62 | எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் | எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புஉடை மக்கள் பெறின் | எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். | எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா பண்பு உடை மக்கள் பெறின் | எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். | No evil comes and no blemish; Noble sons bring all we wish. | Who children gain, that none reproach, of virtuous worth, No evils touch them, through the sev'n-fold maze of birth. | The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice. | Those who bear children of blameless character will be untouched by evil for seven births. | பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும்தீண்டாது. | பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா. | பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா. | பழி சேராப் பண்பு மிக்க பாலகரைப் பெறுவோர் ஏழு பிறவியிலும் பழி தீண்டப் பெறாதவராவர். | எழுபிறப்பும் தீயவை தீண்டா - வினைவயத்தால் பிறக்கும் பிறப்பு ஏழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா; பழி பிறங்காப் பண்பு உடை மக்கட்பெறின் - பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவான் ஆயின். ('அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணம் ஆகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுவான் ஆயின்' என்றவாறு ஆயிற்று. பிறப்பு ஏழாவன: 'ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம் நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய, பந்தம்ஆம் தேவர் பதினான்கு அயன்படைத்த அந்தம் இல்சீர்த் தாவரம் நாலைந்து' தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர் செய்யும் தான தருமங்கட்கு அவர் நற்குணம் காரணமாகலின், 'பண்பு' என்னும் காரணப் பெயர் காரியத்தின்மேல் நின்றது.). | எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா: ஒரு பிறப்பிலே பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின். | பழிச்சொல் ஏற்படாத நற்பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால், ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் தீவினைப்பயன்களாகிய துன்பங்கள் அணுகா | பழியில்லாப் பண்புக் குழந்தைகளைப் பெற்றால் பெற்றோரைஎப்பிறவியும் தீயவை நெருங்கா. | எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். | மாசற்ற பண்பு நிரம்பிய மக்களைப் பெற்றவருக்கு ஏழு பிறவிகள் வரை தீவினைப் பயன்களாகிய துன்பங்கள் அணுகாது. | பழிபிறங்காப் பண்புஉடை மக்கட்பெறின் - பழிதோன்றாத நற்குணங்களையுடைய மக்களைப் பெறின்; எழுபிறப்பும் தீயவை தீண்டா - பெற்றோரை எழுபிறவி யளவும் துன்பங்கள் அணுகா. பண்பு என்றது பெற்றோரை நோக்கி அறஞ்செய்வதற்கேற்ற நற்குணத்தை பிள்ளைகள் செய்யும் நல்வினையாற் பெற்றோரின் தீவினைதேயும் என்னும் கருத்துப்பற்றி, "எழுபிறப்புந் தீயவை தீண்டா" என்றார். நிலைத்திணை ( தாவரம்) நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மக்கள், தேவர் என்னும் எழுவகைப் பிறப்பினும் தீயவை தீண்டா என்பது, பிறப்பின் வகை பற்றியும் தொகை பற்றியும் பொருந்தாமையின், எழு மக்கட் பிறப்பு என உரைக்கப்பட்டது. இதுவும் ஒருவகை உயர்வு நவிற்சியே. ஏழு என்பது ஒரு நிறை வெண்; ஆதலால் நீண்ட காலத்தைக் குறிப்பது. பிறங்குதல் விளங்குதல். கண்ணோட்டம் அல்லது அச்சம் பற்றி ஒருவரைப் பிறர் பழியாமலுமிருக்க லாமாதலின், "பிறராற் பழிக்கப் படாத" மக்கள் என்பது முற்றும் பொருந்தாது. | பழிக்கப்படாத சிறந்த பண்புடைய மக்களைப் பெருவானானால் அவனுக்கு எழுகின்ற - வருகின்ற - பிறவிகளிலெல்லாம் தீயவை அணுகா. | பழிக்கு ஆளாகிவிடாத பண்புள்ள மக்களைப் பெற்றாரானால், எழு பிறப்புகளிலும் துன்பம் நெருங்கா என்பது இக்குறட்கருத்து. | பழிவராமல் காக்கும் நல்ல புதல்வரைப் பெறுதல் பெற்றோரின் நல்வாழ்வுக்கு உறுதி. | பழிக்கப்படாத பண்புள்ள மக்களைப் பெற்றாருக்கு எழு பிறப்பிலும் துன்பங்கள் நெருங்கா. | ||||||||
64 | மக்கட்பேறு | 63 | தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும் | தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள் தம்தம் வினையால் வரும். | தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும். | தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் தம்தம் வினையான் வரும் | தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். | Children are one's wealth indeed Their wealth is measured by their deed. | Man's children are his fortune, ' say the wise; From each one's deeds his varied fortunes rise. | Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf. | It is said that children are a man’s real wealth, and that this wealth is determined by his deeds. | தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக் கூடியவை. | பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும். | தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும். | குழந்தைகளே ஒருவனுக்கு உண்மையான செல்வமாம் அம்மக்கள் அவரவர் ஊழ் வினைக் கேற்பவே வந்து வாய்ப்பர். | தம் மக்கள் தம் பொருள் என்ப - தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்; அவர் பொருள் தம் தம் வினையான் வரும் - அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான். ('தம்தம் வினை' என்புழித் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை, 'முருகனது குறிஞ்சிநிலம்' என்புழிப் போல உரிமைப் பொருட்கண் வந்தது. பொருள் செய்த மக்களைப் 'பொருள்' என உபசரித்தார். இவை இரண்டு பாட்டானும் நன்மக்களைப் பெற்றார் பெறும் மறுமைப் பயன் கூறப்பட்டது. | தம்முடைய பொருளென்று சொல்லுவர் உலகத்தார் தம்மக்களை: அம்மக்களுடைய பொருள் தத்தமுடைய வினையோடே கூடவருதலான். | ‘தம் பொருள்’ என்று போற்றுதற்கு உரியவர் தம் மக்களேயாவர்; மக்களாகிய அவர்தம் பொருள்கள் எல்லாம் அவரவர் வினைப்பயனால் வந்தடையும் | தம் நல்வினையால் குழந்தைகள் பிறத்தலின் குழந்தைகளேபெற்றோரின் பொருளாவார். | தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். | தம் பொருள் என்று போற்றுவதற்கு உரியவர் தம் மக்களே யாவர். ஏனெனில் அவர்கள் செய்யும் நற்காரியங்களின் பலன் தந்தையை வந்து சேரும். | தம் மக்கள் தம் பொருள் என்ப - தம் மக்களைத் தம் செல்வமென்று பாராட்டுவர் பெற்றோர்; அவர் பொருள் தம்தம் வினையான் வரும் - அம்மக்களின் மகச்செல்வம் அவரவர் வினைக் கேற்றவாறு வரும். இம்மையிலும் மறுமையிலுமாக எதிர்காலத்தில் தம் மக்கள் தமக்குச் செய்யக்கூடிய நன்மையை எள்ளளவும் எதிர்நோக்காதே, அவர்களைக் குழவிப் பருவத்திலும் பிள்ளைப் பருவத்திலும் தம் சிறந்த செல்வமாகப் பாராட்டுவது பெற்றோர் வழக்கம். மக்களைப் பெற்றோரின் உடைமையாகக் குறிக்கும்போதே அவ்வுடைமைகளும் பின்பு பெற்றோரைப்போல உடையோராக மாறும் நிலைமையிருத்தலால், அம்மாறுநிலைத் தொடர்ச்சியைக் காட்டற்கே அவர் பொருள் தந்தம் வினையான் வரும் என்றார். அது கரணிய (காரண)க் கிளவியமாயின், 'தம்வினை யான்வர லான்' என்றே அமைத்திருப்பார். | தம் மக்களைத் தம்முடைய பொருள் என்று அறிந்தோர் கூறுவர். மக்களாகிய அப்பொருள் அவரவர்கள் செய்த வினைப்பயனால் உண்டாவதாகும். | உலகோர் தம்மக்களைத் தம்முடைய உடைமை என்று சொல்வர்; அம்மக்களுடைய செல்வம் அவரவர் செயல்திறனால் வரும் என்பது இக்குறட்கருத்து. | பெற்றோர் சொத்து புதல்வர்; பிள்ளைகளே அவரவர் செல்வத்தை ஈட்டவேண்டும் என்னும் புதல்வரைப் பெறுதல் பாடல். | தம் மக்களைத் தம் உடைமை என்று சொல்வார்கள்; அம்மக்களது செல்வம் அவரவர்தம் வினைமுயற்சியால் பெறப்படும். | ||||||||
65 | மக்கட்பேறு | 64 | அமிர்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் | அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ். | அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். | அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ் | அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். | The food is more than nectar sweet In which one's children hands insert. | Than God's ambrosia sweeter far the food before men laid, In which the little hands of children of their own have play'd. | The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia. | Far sweeter than divine nectar is simple boiled rice stirred by the small hands of one’s own child. | சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங் கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்தஅமிழ்தத்தைவிடச் சுவையான தாகிவிடுகிறது. | தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது. | தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும். | தம் குழந்தைகள் சிறு கையாற் பிசைந்து கூழ் தேவாமிர்தத்தினும் மிக இனியவாகக் கொள்ளப்படும். | அமிழ்தினும் ஆற்ற இனிதே - சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து; தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு. (சிறுகையான் அளாவலாவது, 'இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் - நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல். புறநா.188). | இனிமையுடைத்தாகிய அமிழ்தினும் மிகவினிது, தம்முடைய மக்கள் சிறுகையாலே யளையப்பட்ட கூழ். | தம்முடைய மக்களின் சின்னஞ்சிறு கைகளாலே அளாவப் பெற்றது, மிகவும் எளிமையுடைய கூழேயானாலும், அது பெற்றோருக்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும் | அமிழ்தினும் மிக இனிக்குமே தம் குழந்தைகள் இளங்கையால்கிண்டிய உணவு. | அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். | தம்முடைய மக்களின் சிறு கைகளால் துழாவப் பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும். | தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ் - தம் மக்களின் சிறுகைகளால் துழாவிக் குழைக்கப் பட்ட சோறு; அமிழ்தினும் ஆற்ற இனிதே - பெற்றோர்க்கு அவர்களின் மீதுள்ள காதல் மிகுதியால் தேவருணவினும் மிக இனிமையுடையதாம். தம் என்னும் சொல், பெற்றோரின் உடற்கூறாயிருந்து அவருடம்பினின்றும் வெளிப்பட்ட மக்களின் நெருங்கிய தொடர்பை உணர்த்தும். தேவருண வென்றது மக்களின் குருட்டு நம்பிக்கையான உலக வழக்கைத் தழுவியது. "படைப்புப் பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்து மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே." (புறம். 188) "பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற் றென்னுடைய ரேனு முடையரோ-இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ்செய்யவாய் மக்களையிங் கில்லா தவர்".(நள. கலித்தொடர்.) என்னும் பாக்கள் இங்குக் கவனிக்கத் தக்கன. | தமது மக்கள் சிறு கைகளால் பிசைந்து சோறானது சுவையான அமிழ்தத்தினையும் விட மிகவும் இனிமையானதாக இருக்கும். | தம் குழந்தைகளது சிறுகைகளால் துழாவிய சோறு அமிழ்தினும் மிக இனிது என்பது இக்குறட்கருத்து. | குழந்தைகளின் சிறுகைகளால் உணவருந்துவது புதல்வரைப் பெறுதல் தரும் இன்பம். | அமிழ்தினும் மிக இனிக்குமே தம் குழந்தைகள் சிறு கையால் துழாவித் தரப்பட்ட உணவு. | ||||||||
66 | மக்கட்பேறு | 65 | மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு | மக்கள்மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்றுஅவர் சொல்கேட்டல் இன்பம் செவிக்கு. | மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. | மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர் சொல் கேட்டல் இன்பம் செவிக்கு | மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. | Children's touch delights the body Sweet to ears are their words lovely. | To parent sweet the touch of children dear; Their voice is sweetest music to his ear. | The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear. | The touch of one’s children is a delight to the body, and listening to them chatter is a joy to the ear. | தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும். | பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம். | மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும். | தம் குழந்தைகள் தம் மேனி தீண்டுவது உடற் கின்பம். அவர்கள் மழலைச் சொற் கேட்பது செவிக்கின்பம். | உடற்கு இன்பம் மக்கள்மெய் தீண்டல் - ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல் - செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல். ('மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் 'சொல்' என்றார். 'தீண்டல்', 'கேட்டல்' என்னும் காரணப்பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.). | தம்மக்கள் தமதுடம்பினைச் சார்தல் தம்முடம்பிற் கின்பமாம்: அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாம். | தம் மக்களின் உடம்பைத் தொடுதல் உலகுக்கு இன்பமாகும் | குழந்தை மேனிபடுவது உடலுக்கு இன்பம்; மழலைச் சொல்கேட்பது காதுக்கு இன்பம். | மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. | தம் மக்களின் உடம்பைத் தொடுதல் உடலுக்கு இன்பமாகும். அவர்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு மிகுந்த இன்பமாகும். | மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் - பெற்றோர்க்குத் தம் குழந்தைகளின் உடம்பைத் தொடுதல் தம் உடலுக்கு இன்பம்; அவர் சொல் கேட்டல் செவிக்கு இன்பம் - அவரது மழலைச் சொற்கேட்டல் தம் செவிக்கு இன்பம். 'மற்று' வினைமாற்று. இங்கு இன்பத்திற்குக் கரணியம், பெற்றோரின் காதலொடு குழந்தைகளின் உடம்பு நொய்ம்மையும் குரல் மழலைமையுமாம். | ஒருவனுடைய உடம்புக்கு இன்பமாவது தனது மக்களுடைய உடம்பினைத் தொடுதலாகும். அவர்களுடைய சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பமாகும். | தமது மக்கள் தம் உடம்பைச் சார்தல் உடலுக்கு இன்பம் தரும்; பின்னும் அவர் சொல்லைக் கேட்பது காதுக்கு இன்பம் என்பது இக்குறட்கருத்து. | தளிர்நடைக் குழந்தைகள் பெற்றோரை மெய்சிலிர்க்கவைப்பது பற்றிய புதல்வரைப் பெறுதல் பாடல். | தம் குழந்தைகள் மெய் தீண்டுவது உடம்புக்கு இன்பம்; அவர்களின் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் | ||||||||
67 | மக்கட்பேறு | 66 | குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் | குழல்இனிது யாழ்இனிது என்ப தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர். | குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். | குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலை சொல் கேளாதவர் | குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். | The flute and lute are sweet they say Deaf to baby's babble's lay! | The pipe is sweet', 'the lute is sweet,' by them 't will be averred, Who music of their infants' lisping lips have never heard. | “The pipe is sweet, the lute is sweet,” say those who have not heard the prattle of their own children. | “Sweet are the sounds of the flute and the lute,” say those who have not heard the prattle of their own children. | தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்றுகூறுவார்கள். | பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர். | தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர். | தம் குழந்தைகளின் மழலை மொழி கேட்டு அனுபவியாதவரே புல்லாங் குழலோசையும் யாழ் இசையும் இனியவை என்பர். | குழல் இனிது யாழ் இனிது என்ப - குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்; தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர். ('குழல்', 'யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம். இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப் பயன் கூறப்பட்டது.). | குழலோசை யினிது, யாழோசை யினிதென்று சொல்லுவர் தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர்; கேட்டவர் சொல்லார். | தம் மக்களின் மழலைப் பேச்சைக் கேட்டு இன்புறாதவர்களே, ‘குழலிசை இனியது’, ‘யாழிசை இனியது’ என்று புகழ்ந்து கூறுவார்கள் | தம் குழந்தைகளின் மழலைச்சொல் கேளாதவரே குழலிசையாழிசை இனியது என்பர் | குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். | தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு இன்புறாதவரே,‘ குழனின் இசை இனிது‘, யாழின் இசை இனிது‘ என்றெல்லாம் கூறுவர். | தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - தம் குழந்தைகளின் குதலைச் சொற்களைக் கேட்டறியாதவர்; குழல் இனிது யாழ் இனிது என்ப-புல்லாங்குழலிசை இனிதென்றும் செங்கோட்டியாழிசை இனிதென்றுங் கூறுவர். 'குழல்' 'யாழ்' என்பன ஆகுபெயர். ஈரிசையினும் மழலைச்சொல் இனிதென்பது காதல்பற்றிய உயர்வு நவிற்சியே. செங்கோட்டியாழ் குடத்தின்மேல் போர்க்கப்பட்ட பண்டை வீணை. | தமது குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டறியாதவர்கள் குழலோசையும் யாழோசையும் இனிமையாக இருக்கின்றன என்று கூறுவர். | தம் குழந்தைகளின் மழலைச் சொல் கேளாதவரே குழலிசை இனிது, யாழிசை இனிது என்று சொல்லுவர் என்பது இக்குறட்கருத்து. | தம் பிள்ளைகளின் மழலைச் சொல் பெற்றோர்க்கு இசையாகிறது என்னும் புதல்வரைப் பெறுதல் கவிதை. | குழலிசை இனிது, யாழிசை இனிது என்று சொல்வர் தம் குழந்தைகளின் மழலைச் சொல் கேளாதவர். | ||||||||
68 | மக்கட்பேறு | 67 | தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் | தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். | தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். | தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்ப செயல் | தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். | A father's duty to his son is To seat him in front of the wise. | Sire greatest boon on son confers, who makes him meet, In councils of the wise to fill the highest seat. | The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned. | A father benefits his son best by preparing him to sit at the forefront of learned councils. | தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும். | தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே. | தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும். | தன் மகன் கற்றோர் அவையில் முன்வரிசையில் இருக்கத் தகுந்த கல்விமானாகச் செய்தலே மகனுக்குத் தந்தை செய்யும் கடமையாகும். | தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல். (பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.). | தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம் அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல். | ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் நல்ல உதவி, அவனைக் கற்றோர் அவையிலே முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலே ஆகும் | அவையில் முந்தியிருக்கும்படி அறிவளிப்பதே தந்தை மகனுக்குச்செய்யும் கடமை. | தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். | ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் பெரிய உதவி யாதெனில், அவனைக் கற்றோர் அவையில் முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலேயாகும். | தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை கல்வித் திறமையுள்ள தன் மகனுக்குச் செய்யவேண்டிய நன்மையாவது; அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றோரவையின்கண் முதன்மையாயிருக்குமாறு அவனைச் சிறந்த கல்விமானாக்குதல். மகனைச் செல்வனாக்குவதிலுங் கல்விமானாக்குவது சிறந்தது என்பது கருத்து. 'சான்றோ னாக்குதல தந்தைக்குக் கடனே '. என்றார் பொன்முடியாரும். ( புறம். 312) | தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மை யாதென்றால் கற்றவர் நிறைந்த அவையில் அவரினும் சிறப்புற்று முற்பட்டிருக்குமாறு கல்வியுடையவனாகச் செய்தலாகும். | தந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது, அவையின்கண் முதன்மை பெற்றிருக்கச் செய்தல் என்பது இக்குறட்கருத்து. | நல்ல புதல்வரைப் பெறுதல் குழந்தை வளர்ப்பைப் பொறுத்தும் அமையும். | தந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது, அவையில் முந்தியிருக்கச் செய்தல். | ||||||||
69 | மக்கட்பேறு | 68 | தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது | தம்மில் தம்மக்கள் அறிவுஉடைமை மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் இனிது. | தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. | தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து மன் உயிர்க்கு எல்லாம் இனிது | தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. | With joy the hearts of parents swell To see their children themselves excel. | Their children's wisdom greater than their own confessed, Through the wide world is sweet to every human breast. | That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves. | What pleasure it is to human beings everywhere when their children possess knowledge surpassing their own! | பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அகமகிழ்ச்சி தருவதாகும். | தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது. | தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும். | தம்மிலும் தம்மக்கள் அறிவாளிகளென விளங்குவது கண்டு எம் மக்களும் எங்கும் மகிழ்வர். | தம் மக்கள் அறிவுடைமை - தம் மக்களது அறிவுடைமை; மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் தம்மின் இனிது - பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட்கு எல்லாம் தம்மினும் இனிது ஆம். (ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை. 'மன்னுயிர்' என்றது ஈண்டு அறிவுடையார் மேல் நின்றது. அறிவுடைமை கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது.). | தம்மக்க ளறிவுடையாரானால் அது தம்மினும் உலகத்துயிர்கட்கெல்லாம் இனிதாம். | தம்மைக் காட்டினும், தம் மக்கள் அறிவுடையவராக விளக்கம் பெறுதல், பெற்றோருக்கு மட்டுமல்லாமல், பெரிய உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் இனிமையானது ஆகும் | தம் குழந்தைகளைப் பேரறிவுடையவர் ஆக்குவது பெற்றோர்க்கும்எல்லோர்க்கும் இனியது. | தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. | தம் மக்கள் அறிவுடையவராயிருத்தல் பெற்றோராகிய தங்களுக்கு நம்மை தருவதைவிட இவ்வுலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் மிக்க நன்மையும், மகிழ்ச்சியும் தருவதாகும். | தம்மின் - தம்மினும் மிகுதியாக; தம் மக்கள் அறிவுடைமை - தம் மக்கள் கல்வியறிவுடையராயிருத்தல் ; மாநிலத்து மன் உயிர்க்கொல்லாம் இனிது - பெற்றோராகிய தமக்கு மட்டுமன்றி இம்மண்ணுலகத்துள்ள மற்றெல்லா மக்கட்கும் இன்பந் தருவதாம். மன் = மாந்தன் (OE,OS,OHG man, Skt. மநு). மன்பதை = மக்கட் கூட்டம். மன்னுயிர் என்பது இருபெயரொட்டு. மக்கள் கல்வியறிவில் அவையோரின் மட்டுமன்றிப் பெற்றோரினும் விஞ்சியிருக்கலாமென்பது கருத்து. தந்தையும் கற்றோனாகவும் அவையத்து முந்தியிருப்பவனாகவு மிருக்கலா மாதலால், "தந்தையினும் அவையத்தா ருவப்பர்". என்று பரிமேலழகர் கூறுவது பொருந்தாது. | தமது மக்களுடைய அறிவுடைமையானது தமக்கு உண்டாக்கும் இன்பத்தினைவிட உலகத்து உயிர்களுக்கெல்லாம் இனிமையானதாக இருக்கும். | தமது பிள்ளைகள் தம்மைவிட அறிவுடையர்கள் ஆவது பெரிய நிலவுலகத்து உயிர்களுக்கெல்லாம் இனிமை என்பது இக்குறட்கருத்து. | புதல்வரைப் பெறுதல் அவர் தம்மினும் பொருளுடையர் ஆகவேண்டுமென்பதற்காக அல்லாமல் தம்மைவிட அறிவினராய்ச் செய்வதற்காக இருக்கவேண்டும். | தம்மைவிடத் தம்மக்கள் அறிவுடையவர்களாக விளங்குவது உலகிலுள்ள எல்லா உயிர்களின் பெற்றோர்க்கும் இன்பம் தருவது. | ||||||||
70 | மக்கட்பேறு | 69 | ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் | ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய். | ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். | ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் | ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். | The mother, hearing her son's merit Delights more than when she begot. | When mother hears him named 'fulfill'd of wisdom's lore,' Far greater joy she feels, than when her son she bore. | The mother who hears her son called “a wise man” will rejoice more than she did at his birth. | When a mother hears her son heralded as a good and learned man, her joy exceeds that of his joyous birth. | நல்ல மகனைக் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியைஅந்தத் தாய் அடைவாள். | தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள். | தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள். | தன் மகன் கற்றுத்தேர்ந்து சான்றோனாயினான் எனக்கேட்ட தாய் அவனைப் பெற்ற பொழுதினும் பெரிதும் மகிழ்வாள். | ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் - தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்; தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் - தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய். (கவானின் கண்கண்ட பொது உவகையினும் சால்புடையான் எனக்கேட்ட சிறப்பு உவகை பெரிதாகலின், 'பெரிது உவக்கும்' எனவும், 'பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய்' எனவும் கூறினார். அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது. சான்றோன் என்றற்கு உரியர் அவர் ஆகலின். தாய் உவகைக்கு அளவு இன்மையின் அஃது இதனான் பிரித்துக் கூறப்பட்டது.). | தான்பெற்ற காலத்தினும் மிக மகிழும்; தன்மகனைச் சான்றோனென்று பிறர் சொல்லக் கேட்ட காலத்துத் தாய். | தன் மகனைச் சான்றாளன் என்று பலரும் போற்றுவதைக் கேள்வியுற்ற தாய், அவனைப் பெற்றபொழுதிலும் பெரிதாக மகிழ்வாள் | தன் மகன் வீரன் என்று புகழக்கேட்ட தாய் பெற்றகாலத்திலும்பெருமகிழ்ச்சி அடைவாள். | ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். | தான் பெற்ற மைந்தனை அறிவு, ஒழுக்கங்கள் நிறைந்த சான்றோன் என்று அறிவுடையோர் புகழ்ந்து கூறக்கேட்ட தாய், அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியினும் பெருமகிழ்ச்சி அடைவாள். | தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்-தன் மகனைக் கல்வியறிவு நிறைந்தோனென்று அறிவுடையோர் சொல்லக்கேட்ட தாய்; ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும்-தான் அவனைப் பெற்றெடுத்த பொழுதினும் பெரிது மகிழ்வாள். "ஐயிரு திங்களா யங்கமெலா நொந்துபெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்து" மகிழ்ந்ததினும் சான்றோனெனக் கேட்ட மகிழ்ச்சி சிறந்ததாதலின்,'பெரிதுவக்கும்' என்றார். அறிவுடையோர் என்பது அவாய் நிலையான் வருவிக்கப்பட்டது. காமஞ்செப்பாது கண்டது மொழியும் நடுநிலையுண்மைக் கூற்று அவரதேயாகலின். மனம் மட்டுங் குளிரும் தந்தை மகிழ்ச்சியினும் மனமும் வயிறும் மார்பும் குளிரும் தாய் மகிழ்ச்சி மிகப்பெரிதாகலின் தனித்துக் கூறப்பட்டது. தமிழ மகளிர்க்கு உயர்நிலைக் கல்வி விலக்கப் படாமையாலும் இருபாலர்க்கும் உரிய பொதுச்செய்திகளையும் தலைமைபற்றி ஆண்பாலின்மேல் வைத்துக் கூறுவது மரபாதலாலும்,"தம்மிற்றம் மக்களறிவுடைமை" என்று ஆசிரியரும் பொதுப் படக் கூறியிருப்பதாலும்,"பெண்ணியல்பால் தானாக வறியாமையிற் 'கேட்டதாய்' என்றார்."என்று பரிமேலழகர் கூறியது தவறாம். இனி, ஒளவையார்,காக்கைபாடினியார்,நச்செள்ளையார்,காவற்பெண்டு,குறமகள் இளவெயினி,பூதப்பாண்டியன் தேவியர், பேய்மகள் இளவெயினி, வெண்ணிக்குயத்தியார், வெறிபாடிய காமக்கண்ணியார் முதலிய பண்டைப் புலத்தியரை அவரும் அறிந்திருந்தமையால், அவர் கூற்று நெஞ்சார்ந்த பொய்யுமாம். மகன்மேலுள்ள அன்புப் பெருக்கால் அவனறிவை மிகுத்தெண்ணும் தாய்க்கு நடுநிலையறிஞர் பாராட்டு, முழுநம்பிக்கை யுண்டாக்கும் என்பதே கருத்து. | தன் மகனைக் கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோன் என அறிவுடையோர் சொல்லக் கேட்க தாயானவள் பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியினை விடப் பெருமகிழ்ச்சி அடைவாள். | நற்குண நற்செய்கைகள் நிறைந்தவன் 'சான்றோன்' எனப்படுவான். | தம் மக்களைப் பற்றிய புகழ்ச்சொல் காதில் விழும்போது தாய்க்கு உண்டாகும் இன்பம் புதல்வரைப் பெறுதலினும் மிக்கது. | தன் மகனைப் பண்பு நிறைந்தவன் எனப் பிறர் புகழ்ந்து கூறக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதினும் பெரிது மகிழ்வாள். | ||||||||
71 | மக்கட்பேறு | 70 | மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனுஞ் சொல் | மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என் னோற்றான்கொல் எனும்சொல். | மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல். | மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான்-கொல் எனும் சொல் | மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல். | The son to sire this word is debt "What penance such a son begot!" | To sire, what best requital can by grateful child be done? To make men say, 'what merit gained the father such a son?' | (So to act) that it may be said “by what great penance did his father beget him,” is the benefit which a son should render to his father. | The son’s duty to his father is to make the world ask, “By what great austerities did he merit such a son?” | "ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு", என்று ஒரு மகன் புகழப் படுவதுதான், அவன் தன்னுடையதந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும். | தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே. | மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும். | "இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ இவன் தந்தை?" என உலகம் கேட்கச் செய்வதே மகன் தந்தைக்குச் செய்யும் பெருங் கடமையாகும். | தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி - கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது; இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் - தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல். ('சொல்' லென்பது நிகழ்த்துதலாகிய தன் காரணந்தோன்ற நின்றது.நிகழ்த்துதல் - அங்ஙனஞ் சொல்ல வொழுகல்.இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது). | மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம் இவன் தந்தை என்ன தவஞ்செய்தானென்று உலகத்தார் சொல்லுஞ் சொல்லைப் படைத்தல். இது நெறியினொழுகுவாரை உலகத்தார் புகழ்வாராதலான், மகனும் ஒழுக்கமுடையனாக வேண்டுமென்றது. | மகன், தந்தைக்குச் செய்யும் உதவி ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன நோன்பு செய்தானோ’ என்னும் புகழ்ச் சொல்லே ஆகும் | எத்தவஞ் செய்து பெற்றான் இவன் தந்தை என்று பலர்சொல்லும்படி நடப்பதே மகன் கடமை. | மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல். | மகன் தந்தைக்குச் செய்யும் (கடமை) பிரதியுபகாரம் "இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ” என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லேயாகும். | தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி-தான் பிறந்ததினின்று தன்னை வளர்த்துக் கல்வி கற்கவைத்து, உலகிற் பிழைப்பதற்கு ஒரு தொழிலிற் பயிற்றி, மணஞ் செய்வித்து மனையறம் படுத்தி, தன் தேட்டிலும் ஒரு கூறளித்த தன் தந்தைக்கு, மகன் செய்ய வேண்டிய கைம்மாறாவது; இவன் தந்தை என் நோற்றான்கொல் எனும் சொல்-தன் அறிவாற்றலையும் நற்குண நற்செயல்களையும் கண்டோர், இவன் தந்தை இவ்வருமந்த மகனைப் பெறுதற்கு என்ன கடுந்தவஞ் செய்தானோ என்று வியந்து கூறுஞ்சொல்லை, அவர் வாயினின்று தானாக வரச் செய்தலாம். சொல் என்றது சொல்லை வருவித்தலைக் குறித்தது. 'கொல்' ஐயம் குறித்த இடைச்சொல். தந்தை நெடுங்காலமாகச் செய்த பல்வேறு பெருநன்மைக்கும் மகன் செய்ய வேண்டிய கைம்மாறு ஒரு சொல்லே என்று; ஒருவகை அணிநயம்படக் கூறினார். இதனால், தந்தை செய்த நன்றிக்குச் சரியாக ஈடுசெய்தல் அரிதென்பதும் , தென்புலத்தார் கடனைத் தீர்க்க நன்மக்களைப் பெறுதல் பெற்றோர்தம் விருப்பம்போற் செய்துகொள்ளக்கூடிய செயலன்றென்பதும், பெறப்படும். | மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய உதவி என்னவென்றால், "இப்பிள்ளையைப் பெற இத்தந்தை என்ன நோன்பு நோற்றானோ?" என்று பிறர் சொல்லும் சொல்லினை உண்டாக்குவதாகும். | மகன் தந்தைக்குச் செய்யும் உதவி, இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று சொல்லும்படி நடப்பது என்பது இக்குறட்கருத்து. | மகன் உயர்ந்த நிலை எய்தி நிலைநிற்பதே தந்தை அவனிடம் எதிர்பார்ப்பது என்னும் புதல்வரைப் பெறுதல் பாடல். | தந்தைக்கு மகன் செய்யும் உதவி, 'இவனைப் பெற என்ன நோற்றானோ' என்று உலகோர் சொல்லும்படி நடப்பது. | ||||||||
72 | அன்புடைமை | 71 | அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும் | அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். | அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். | அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன் கணீர் பூசல் தரும் | அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்ணீர் பூசல் தரும். | What bolt can bar true love in fact The trickling tears reveal the heart. | And is there bar that can even love restrain? The tiny tear shall make the lover's secret plain. | Is there any fastening that can shut in love ? Tears of the afectionate will publish the love that is within. | Can any lock keep love confined within, when the loving heart’s tiny tears escape and confess it? | உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளிவாயிலாக அது வெளிப்பட்டு விடும். | அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும். | அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும். | அன்புப் பெருக்கைத் தடுக்கவல்ல அடைப்பு ஏதும் உண்டா? அன்புள்ளத்தில் பனிக்கும் கண்ணீர்த் துளிகள் அதனைக் காட்டிவிடும். | அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ - அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ?; ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் -தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்நின்ற அன்பினை எல்லாரும் அறியத்தூற்றும் ஆதலான். (உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை. கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு எய்தாதாயினும் அனுமான அளவையான் வெளிப்படும் என்பதாம். இதனால் அன்பினது உண்மை கூறப்பட்டது.). | அன்பினை யடைக்குந்தாழுமுளதோ? அன்புடையார் மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும். | அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் எதுவும் உண்டோ? அன்புடையாரின் சிறு கண்ணீரே அவர் அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்திவிடும் | அன்புக்கும் அடைப்பு உண்டோ ? அன்புடையவர் கண்ணரேஉள்ளத்தைக் காட்டிவிடும். | அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். | அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் ஏதேனும் உண்டோ? அன்புடையாரின் சிறிதளவு கண்ணீரே அவர் அன்பைப் பலர் அறிய வெளிப்படுத்திவிடும். | அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - ஒருவரது அன்பிற்கும் அதைப் பிறர் அறியாதவாறு அடைத்துவைக்கும் தாழ்ப்பாள் உளதோ? ஆர்வலர் புன் கண் நீர் பூசல் தரும்-தம்மால் அன்புசெய்யப் பட்டாரது துன்பங்கண்டவிடத்து அன்புடையாரின் துன்புறுங் கண் சிந்தும் நீரே அவருள்ளத்திலுள்ள அன்பை எல்லாரும் அறியப் பறைசாற்றிவிடும். உம்மை சிறப்புப் பற்றியது. புன்கண் புன்கூர்ந்த கண். புன்மை துன்பம். ஆர்வலர் துன்பம் அவர் கண்ணின் மேல் ஏற்றப்பட்டது. இனி, துன்பக்கண்ணீரன்றி நீண்டகாலத்திற்குப்பின் கண்ணன்ன கேளிரைக் காணும்போது சிந்தும் காதற்கண்ணீரும் உண்டென அறிக. | அன்பிற்கு அடைத்து வைக்கப்படுகின்ற தாழ்ப்பாள் இல்லை. அன்பினைப் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்பினைப் பெற்றவரது துன்பத்தினைக் கண்ட போதே வெளிப்படுகின்ற கண்ணீரே அன்புடையவரது உள் நின்ற அன்பினை எல்லோரும் அறியுமாறு காட்டிவிடும். | அன்பினை அடைத்து வைக்கத் தாழும் உளதோ? அன்புசெய்யப்பட்டார் துன்பம் கண்டபோது அன்பால் முதிர்ந்தாரின் கண்ணில் தோன்றும் நீர்ப்பெருக்கே அவர் உள்ளத்தில் கொண்ட அன்பினை ஆரவாரத்துடன் வெளிப்படுத்திவிடும் என்பது இக்குறட்கருத்து. | அன்புசெய்யப்பட்டார் மாட்டு பீறிட்டு வரும் கண்ணீர் அன்புடைமையைச் சொல்லும். | அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் உண்டோ? அன்பிற்குரியாரது துன்பம் கண்டபோது முதிர்ந்த அன்புடையாரின் கண்ணில் தோன்றும் நீரே ஆரவாரத்துடன் தெரிவிக்கும். | ||||||||
73 | அன்புடைமை | 72 | அன்பிலார் எல்லாந் தமக்குரியர்: அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு | அன்பிலார் எல்லாம் தமக்குஉரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு | அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. | அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார் என்பும் உரியர் பிறற்கு | அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. | To selves belong the loveless ones; To oth'rs the loving e'en to bones. | The loveless to themselves belong alone; The loving men are other's to the very bone. | Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others. | The unloving belong only to themselves, but the loving belong to others to their very bones. | அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும்பிறருக்கென எண்ணிடுவர். | அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர். | அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர். | அன்பிலார் தமக்கே உரித்தாவர். அன்புடையோர் தம் எலும்பையும் பிறர்க்கு உரித்தாக்குவர். | அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்; அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர் - அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர். (ஆன் உருபுகளும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. 'என்பு' ஆகு பெயர். என்பும் உரியராதல் 'தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்' (புறநா.43) முதலாயினார் கண்காண்க.). | அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரிமையாக வுடையர்: அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக்கு அங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர். அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று. | அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்; அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர் | அன்பிலார் எல்லாம் தமக்கே கொள்வார்; அன்பினர் உடம்பையும்பிறர்க்கு வழங்குவர் | அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. | அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாக்கிக் கொண்டு வாழும் தன்னலக்காரராய் இருப்பார். அன்புடையவரே தம் உடம்பையும் பிறர் நலத்துக்காக ஈந்து மகிழும் இயல்புடையவராக வாழ்வர். | அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களையுந் தமக்கே பயன்படுத்துவர்; அன்பு உடையார் என்பும் பிறர்க்கு உரியர் - அன்புடையாரோ பிறிதின் கிழமைப்பொருள்களை மட்டுமன்றித் தற்கிழமைப் பொருளாகிய தம் உடம்பையும் பிறர்க்குப் பயன் படுத்துவர். பிரிநிலையேகாரமும், 'உரியர்' என்னும் வினைக்கேற்ற 'எல்லாவற்றாலும்' 'என்பாலும்' என்னும் கருவி வேற்றுமையுருபுகளும் தொக்கன. எலும்பு என்பதன் மரூஉவான 'என்பு' சினையாகுபெயர் . உம்மை சிறப்பும்மை , உடம்பைப் பிறர்க்கு உதவிய அன்பிற்கு, தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவிற்காகத் தன் தசையையும் உடம்பையும் அளித்த செம்பி ( சிபி ) என்னும் சோழ வேந்தன் கதை எடுத்துக் காட்டாகக் கூறப்பெறும். ஆயின், அதனினும் சிறந்த எடுத்துக்காட்டு, தன் தம்பியால் தன் நாடு கொள்ளப்பட்டுக் காட்டிற்போய்த் தங்கியிருந்த குமணன், தன்னைப்பாடிய பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர்க்குத் தன்தலையை வெட்டிக்கொண்டுபோய்த் தன் தம்பியிடங் காட்டிப் பெரும் பொருள் பெறுமாறு தன் வாளைக் கொடுத்ததாகும். இதை, பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் நாடிழந் ததனினு நனியின் னாதென வாள்தந் தனனே தலையெனக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின் என்று (புறம்.165 ) அப்புலவர் பாடியதினின்று அறிந்து கொள்க. இனி, பாரி தன்னையும் பரிசிலர்க்குத்தர அணியமாயிருந்ததும் இத்தகைய செயலாம். "பறம்பு பாடின ரதுவே யறம்பூண்டு பாரியும் பரிசில ரிரப்பின் வாரே னென்னான் அவர்வரை யன்னே". என்று ( புறம்.108 ) கபிலர் பாடியிருத்தல் காண்க. | அன்பில்லாதவர்கள் பிறர்க்குப் பயன்படாமையால் எல்லாப் பொருள்களாலும் தமக்கே உரியவர்கள் ஆவார்கள். அன்புடையவர்கள் தம்முடைய எலும்பினாலும் பிறர்க்கு உரியர் ஆவார்கள். | அன்பு இல்லாதவர்கள் எல்லாவற்றையும் தமக்கு உரியதாக்கிக் கொள்ளுவர்; அன்புடையார் தம் உடம்பாலும் பிறர்க்குப் பயன்படுவர் என்பது இக்குறட்கருத்து. | அன்புடைமை தன்னுயிரையும் கொடுக்கும். | அன்பில்லாதவர் எல்லாவற்றையும் தமக்கே கொள்வர்; அன்புடையார் தம் உடம்பாலும் பிறர்க்குப் பயன்படுவர் | ||||||||
74 | அன்புடைமை | 73 | அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு | அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆர்உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. | அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு. | அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு என்பொடு இயைந்த தொடர்பு | அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. | Soul is encased in frame of bone To taste the life of love alone. | Of precious soul with body's flesh and bone, The union yields one fruit, the life of love alone. | They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth). | They say it is to know union with love that the soul takes union with the body. | உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும். | பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர். | அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர். | அன்பு கலந்த வாழ்வின் பயனை உணர்த்தவே உயிர் உடம்போடிணைந்து வாழ்கின்றது என்பர். | ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப - அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர். (பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; வழக்கு: ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.). | முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை. | அருமையான உயிருக்கு உடம்போடு பொருந்திய தொடர்பானது, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கைக்காகவே என்பர் சான்றோர் | உயிர் உடம்பினைப் பெற்ற தொடர்பு இருவர் அன்புத்தொடர்பால்வந்தது என்பர். | அன்போடு இயைந்த வழக்கென்ப ஆரு'யிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. | உயிரும் உடம்பும் தொடர்பு கொண்டு ஒன்றியிருக்கும் உறவானது, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர். | ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கரிய மக்களுயிர்க்கு உடம்போடு பொருந்திய தொடர்பை;அன்பொடு இயைந்த வழக்கு என்ப - அன்பு செய்தற்கு ஏற்பட்ட நெறியின் பயன் என்று கூறுவர் அறிவுடையோர். வழக்கு என்பது வழங்கும் நெறி, அஃது இங்கு அதன் பயனைக் குறித்தது. ' அன்பு ' ஆகுபெயர். அன்பு செய்தலே மக்கட் பிறப்பின் நோக்கமும் பயனும் என்பது இங்குக் கூறப்பட்டது. | பெறுதற்கரிய மக்களுயிர்க்கு எலும்புடையை உடம்போடு பொருந்திய தொடர்பினை, அன்புடனே பொருந்துவதற்கு வந்த வழியினாலாகிய பயனாகும் என்று அறிந்தோர் கூறுவர். | அரிய உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்பு அன்பின் கூட்டுறவால் உண்டான வாழ்வுநெறி என்பது இக்குறட்கருத்து. | வாழ்வு நெறி அன்புடைமையால் அமைய வேண்டும். | உயிர்க்கும் உடம்பிற்கும் உண்டாகிய தொடர்பு, அன்பின் கூட்டுறவால் வந்தது என்பர். | ||||||||
75 | அன்புடைமை | 74 | அன்புஈனும் ஆர்வம் உடமை: அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு | அன்பு ஈனும் ஆர்வம் உடைமை: அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு | அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு. | அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும் நண்பு என்னும் நாடா சிறப்பு | அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு. | Love yields aspiration and thence Friendship springs up in excellence. | From love fond yearning springs for union sweet of minds; And that the bond of rare excelling friendship binds. | Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship. | Love makes one affectionate toward all, and affection affords the priceless treasure of friendship. | அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும். | குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும். | அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும். | அன்பு எல்லா உயிர்களிடத்தும் நேசத்தை அளிக்கும் அந்நேசம் நட்பு எனும் விலைமதிப்பற்ற செல்வம் தரும். | அன்பு ஆர்வமுடைமை ஈனும் - ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாச்சிறப்பு ஈனும் - அவ்விருப்பமுடைமைதான்.அவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவறந்த சிறப்பினைத் தரும். (உடைமை, உடையனாம் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை 'நாடாச்சிறப்பு' என்றார்.). | அன்பு தரும் ஆர்வமுடைமையை அவ்வார்வமுடைமை தரும். நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பினை. | அன்பானது பிறர்பால் ஆர்வம் உடையவராகும் பண்பைத் தரும் | அன்பு பழகும் விருப்பத்தைத் தரும்; அவ்விருப்பம் புதிய நட்புச்சிறப்பைத் தரும். | அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. | தொடர்புடையவரிடம் கொள்ளும் பற்று, தொடர்பு இல்லாதவரிடமும் விருப்பத்தைத் தரும். அவ்விருப்பம் யாவரும் இவர்க்கு நண்பர் என்று கூறத்தக்க அளவிற்குச் சிறப்பைத் தரும். | அன்பு ஆர்வமுடைமை ஈனும் - உறவினரிடத்துச் செய்யும் அன்பு ஒருவனுக்குப் பிறரிடத்தும் விருப்பத்தை உண்டாக்கும்; அது நண்பு என்னும் நாடாச் சிறப்பு ஈனும் - அது நாளடைவில் எல்லாரையும் நட்பாக்கி எல்லாப் பொருள்களும் எளிதாய்க் கிடைக்கக் கூடிய நல்ல நிலைமையை உண்டு பண்ணும். நாடாமை வருந்தித் தேடாமை | அன்பு என்பது பிறரிடத்தில் செல்லும் ஆர்வம் என்னும் விருப்பத்தினை உண்டாக்கும். ஆர்வம் என்னும் அந்த விருப்பம் நட்பு என்று சொல்லப்படுகின்ற அளவு கடந்த சிறப்பினைக் கொடுக்கும். | அன்பு பழகும் விருப்பத்தைத் தரும்; அது மனிதநேயம் கொண்டவர் என்ற அளவிறந்த பெருமையைத் தரும் என்பது இக்குறட்கருத்து. | அன்புடைமையே மக்களுக்கிடையே உண்டாகும் நட்புத் தொடர்பை வளர்க்கிறது. | அன்பு பழகும் விருப்பத்தைத் தரும்; அவ்விருப்பம் மனிதநேயம் என்னும் மிகுந்த சிறப்பைத் தரும். | ||||||||
76 | அன்புடைமை | 75 | அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்துஞ் சிறப்பு | அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. | அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. | அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு | அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. | The crowning joy of home life flows From peaceful psychic love always. | Sweetness on earth and rarest bliss above, These are the fruits of tranquil life of love. | They say that the felicity which those who, after enjoying the pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the result of their domestic state imbued with love. | They say love’s greatness is this: it yields to good families worldly happiness here and heavenly bliss hereafter. | உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம். | இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர். | உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர். | நற்குடும்பத்தினர்க்கு இம்மை இன்பத்தையும் மறுமை பேரின்பத்தையும் வழங்குவது அன்பே. அன்பின் மேம்பாடு இதுவே என்பர். | அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்; வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு - இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின்பத்தினை. ('வழக்கு' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும் சிறப்பு என்றார்.தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.). | முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை. | இவ்வுலகத்திலே இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர் | உலகத்தில் காதலர்கள் அடையும் சிறப்பு அன்போடு வாழ்ந்ததால்வந்தது என்பர். | அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. | இவ்வுலகில் இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு அவர் அன்புடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயன் என்பர். | வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு - இவ்வுலகத்து இல்லறத்தில் நின்று இன்பம் நுகர்ந்தவர் மறுமையில் தேவருருலகஞ் சென்று அடையும் சிறந்த இன்பத்தை; அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - அவர் முன்பு இங்கு அன்பொடு பொருந்த வாழ்ந்த நெறியின் பயன் என்று சொல்வர் அறிந்தோர். ' வழக்கு ' என்பது ஆகுபொருளது. இல்லறத்தினாலேயே இம்மையில் இவ்வுலக இன்பமும் மறுமையில் விண்ணுலக வின்பமும் பெறுவதற்குக் கரணியமாயிருப்பது அன்பு ஒன்றே என்பது இங்குக் கூறப்பட்டது. | இவ்வுலகில் இல்லறத்தில் இன்பமடைந்து பெறுகின்ற பெருமையினை, அன்பினைப் பெற்றவராகிப் பொருந்திய வழியினாலான பயனேயாகும் என்று அறிந்தோர் கூறுவார்கள். | உலகின்கண் இன்பம் துய்ப்பவர் அடையும் சிறப்பு அன்புடையராய் அமைந்த வாழ்க்கைநெறியின் பயன் என்பர் என்பது இக்குறட்கருத்து. | வாழ்வில் இன்பம் எய்த அன்புடைமையை வழக்காக்குக. | இல்லறத்தில் அன்போடு கூடி வாழ்ந்தோர் இவ்வுலகத்தில் இன்பச் சிறப்பு எய்தினார் என்பர். | ||||||||
77 | அன்புடைமை | 76 | அறத்திற்கே அன்புசார்பு யென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை | அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. | அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. | அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை | அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. | "Love is virtue's friend" say know-nots It helps us against evil plots. | The unwise deem love virtue only can sustain, It also helps the man who evil would restrain. | The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice. | The uninformed say love abides with virtuous souls, unaware that love is also friend to those immersed in vice. | வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாகஇருப்பதாகக் கூறுவார்கள். | அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும். | அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது. | அறத்தொடு வாழும் உயிர்களிடத்தே அன்பு நிலைக்கின்றது என உண்மை உணராதோர் கூறுவர். மறச்செயலில் ஆழ்ந்துள்ளோர்க்கும் அன்பே துணை. | அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் - அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை - ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. (ஒருவன் செய்த பகைமைபற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன் மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின்,மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்பார், 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார். துன்பத்திற்கு யாரே துணையாவார் (குறள் 1299)என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.). | அன்பானது அறஞ்செய்வார்க்கே சார்பாமென்பர் அறியாதார். அவ்வன்பு மறஞ் செய்வார்க்குந் துணையாம். | அறத்திற்கே அன்பு துணையாகும் என்று சொல்பவர் அறியாதவர்; ஆராய்ந்தால் மறச்செய்கைகளுக்கும் அன்பே துணையாயிருக்கும் | அறத்திற்கு மட்டும் அன்பு துணையில்லை; வீரத்திற்கும் அதுவேதுணை. | அறத்திற்கே அன்புசார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. | உண்மை அறியாதவர் சிலர் அன்பு அறத்திற்கே துணையாவது என்பர். அறத்திற்கு மாறானவற்றைப் போக்குவதற்கும் அந்த அன்பே துணையாகும். | அன்பு அறத்திற்கே சார்பு என்ப - அன்பு அறத்திற்கே துணையாவது என்று சிலர் சொல்வர்; அறியார் - அவர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை - அதன் மறுதலையான மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. அறம் மறம் என்பன இங்கு நல் வினை தீவினை என்று பொருள்படும் எதிர்ச் சொற்கள். அன்பு மறத்திற்குத் துணை என்பது, இஞ்சி பித்தத்திற்கு நல்லது என்பது போல்வது. "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்". (158) "இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண நன்னயஞ் செய்து விடல்". (314) என்னுங் குறள்கள் இங்குக் கவனிக்கத்தக்கன. ஒரு பகைவனுக்கு நன்மை செய்தவிடத்து அவன் நாணித் தன் பகைமையைவிட்டு நட்பாவது இயல்பாதலின், "மறத்திற்கு மஃதே துணை" என்றார். ஒருவன் தன் மனைவி மக்கள் மேலுள்ள அன்பினால், அவரைக் காத்தற்குத் தீயவழிகளிலும் பொருள் தேடுதல் உலகத்து நிகழ்தலால், அதனையே மறத்திற்கு மஃதே துணை என்று குறித்தார் என்று உரை கூறுவாருமுளர். அகப்பற்றால் தீமை செய்வது போன்றதே புறப்பற்றால் தீமை செய்வது மாதலானும், தீமைக்குத் துணைசெய்வது அறத்தோடு பொருந்தாமையாலும், அது உரையன்மை அறிக. | அறியாமையில் உள்ளவர்கள் அறத்திற்குத்தான் அன்பு துணையென்று கூறுவர். மறத்தினை (தீ நெறியினை) நீக்குதற்கும் அந்த அன்பே துணையாகும். | அன்பு அறச்செயல்களுக்கே சார்பாகும் என்று அறியாதார் சொல்லுவர்; மறச்செயல்களுக்கும் அவ்வன்பே துணையாக நிற்கிறது என்பது இக்குறட்கருத்து. | உயிர்களின் இயக்கங்கள் அனைத்தும் அன்புடைமை சார்ந்தனவே. | அறம் மட்டும்தான் அன்போடு பொருந்தி நிற்பது என்பவர்கள் அறியாதவர்கள்; மறத்திற்கும் அவ்வன்பே துணையாகும். | ||||||||
78 | அன்புடைமை | 77 | என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பிலதனை அறம் | என்பில் அதனை வெயில்போலக் காயுமே அன்பில் அதனை அறம். | என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். | என்பு இலதனை வெயில் போல காயுமே அன்பு இலதனை அறம் | என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். | Justice burns the loveless form Like solar blaze the boneless worm. | As sun's fierce ray dries up the boneless things, So loveless beings virtue's power to nothing brings. | Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms. | As the blazing sun dries up a boneless worm, so does virtue scorch a loveless being. | அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காத வரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவைவாட்டுவதுபோல இருக்கும். | எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும். | எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். | கொளுத்தும் வெயில் எலும்பில்லா உயிர்களை வாட்டுவது போல அறம் அன்பிலாதவரை வருத்தும். | என்பு இலதனை வெயில் போலக் காயும் - என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்; அன்பு இலதனை அறம் - அன்பில்லாத உயிரை அறக்கடவுள். ('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம் 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம்.அதனைக் காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு 'அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்' (நான்மணி.83) எனப் பிறரும் கூறினார்.). | என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம். | எலும்பில்லாத புழுப்பூச்சிகளை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பில்லாதவனை அறமானது காய்ந்து வருந்தச் செய்யும் | எலும்பில்லாப் புழுவை வெயில் வருத்தும்; அன்பில்லா உயிரைஅறம் வருத்தும். | என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். | எலும்பு இல்லாத உடல் கொண்ட புழுக்கள் முதலியவற்றை வெயில் வறுத்துவது (காய்வது) போல அன்பில்லாத உயிரை அறக்கடவுள் வருத்துவார். | அறம் - அறத் தெய்வம்; அன்பு இலதனை - அன்பில்லாத உயிரை; என்பு இலதனை வெயில் போலக் காயும் - எலும்பில்லாத வுடம்பை வெயில் எரித்தாற் போல் எரிக்கும். எலும்பில்லாத வுடம்பு பூச்சி புழுக்களுடையன. அன்பில்லாதவுயிர் என்றது மக்களுயிரை. வெயில் வந்தபோது எலும்பில்லா வுடம்பு துன்புறுவதுபோல. வினைப்பயன் வந்தபோது அன்பு செய்யா மக்களுயிர் துன்புறும் என்பது. அன்பு செய்யாமையாவது அதற்கு மறுதலையான தீமை செய்தல். "அறம் பிழைத்தோர்க்கு அறங் கூற்ற மாவது" என்றார் இளங்கோவடிகள் (சிலப். பதிகம்.) "அல்லவை செய்வார்க் கறங் கூற்றம்" என்றார் விளம்பிநாகனார் (நான்மணி 83). மக்களை உயிர் என்றது அன்பின்மையாகிய இழிவு பற்றி. | எலும்பு இல்லாத உயிரினங்களை வெயிலானது சுடுவது போல, அன்பில்லாத உயிர்களை அறம் கொடுமைப்படுத்தித் தண்டிக்கும். | எலும்பில்லாததை வெயில் சுடுவது போல அன்பிலாததை அறம் (வருத்தும்) என்பது இக்குறட்கருத்து. | அன்புடைமை இல்லாத உயிர் வாழ்வதற்கு உரிமையற்றது. | எலும்பில்லாததை வெயில் சுடும்; அன்பில்லாததை அறம் வருத்தும் | ||||||||
79 | அன்புடைமை | 78 | அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று | அன்பு அகத்து இல்லாஉயிர் வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று. | அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. | அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண் வற்றல் மரம் தளிர்த்த அற்று | அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. | Life bereft of love is gloom Can sapless tree in desert bloom? | The loveless soul, the very joys of life may know, When flowers, in barren soil, on sapless trees, shall blow. | The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert. | Life without love in the heart is like a sapless tree in a barren desert. | மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலை வானத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது. | மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம். | அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது. | காய்ந்த மரம் பாலைநிலத்தில் தளிர்க்காதது போல உள்ளத்து அன்பிலார் வாழ்க்கை செழிக்காது. | அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை - மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று - வன்பாலின்கண்வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும். ( கூடாது என்பதாம். வன்பால் - வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறிணைப் படர்க்கைப் பெயர்.). | தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும். தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு. | உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலை நிலத்திலே காய்ந்த மரம் தளிர்த்தாற் போல நிலையற்றதாம் | நெஞ்சத்தில் அன்பின்றி வாழ முடியுமா? பாலை நிலத்தில்பட்டமரம் தளிர்க்குமா? | அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. | மனத்தில் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்வது என்பது வலிய பாறை நிலத்தில் ஈரம் வற்றி, உலர்ந்த மரம் தளிர்த்தாற் போன்றதாகும். | அகத்து அன்பு இல்லா உயிர்வாழ்க்கை - உள்ளத்தில் அன்பில்லாத வுயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல்; வன்பாற்கண்வற்றல் மரம் தளிர்த்த அற்று-பாலை நிலத்தின் கண் பட்டுப்போன மரம் தளிர்த்தாற் போலும். நடவாத தென்பதாம். ' வற்றல் ' தொழிலாகு பெயர். ' வற்றன் மரம்' இருபெயரொட்டு அன்னது - அற்று. அன்பில்லா மக்களை உயிர் என்றது இழிவுக் குறிப்பு. | மனத்தில் அன்பில்லாதவரது உயிர்வாழ்க்கை வலிய பாலை நிலத்தில் பட்டுப்போன மரமானது தளிர்த்தது போன்றதாகும். | உள்ளத்தில் அன்பு இல்லாமல் இல்லறவாழ்வு நடாத்துதல் வலிய நிலத்தில் நிற்கின்ற வற்றல் மரம் தளிர்த்தாற் போலும் என்பது இக்குறட்கருத்து. | அன்புடைமை இல்லாதவரது இல்வாழ்வு தத்தளிப்புக்குள்ளாகும். | உள்ளத்தில் அன்பில்லாது உயிர் வாழ்தல் என்பது வன்மையுடைய நிலத்தின்கண் வற்றல் மரம் தளிர்த்தல் போலும். | ||||||||
80 | அன்புடைமை | 79 | புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு | புறத்து உறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு. | புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு. | புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு | புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. | Love is the heart which limbs must move, Or vain the outer parts will prove. | Though every outward part complete, the body's fitly framed; What good, when soul within, of love devoid, lies halt and maimed? | Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member. | What good is a body perfect in outer ways, if inwardly it is impaired by lack of love? | அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்? | தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள். | தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள். | உள்ளத்தில் அன்பின்றிக் களங்கமுற்றிருப்பவர்க்குப் புற உறுப்புக்கள் சிறந்திருப்பினும் பயயென்ன? | யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு - யாக்கை அகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - ஏனைப் புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்.? (புறத்து உறுப்பாவன: இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றால் பயன் இன்மையின் 'எவன் செய்யும்' என்றார். உறுப்புப் போறலின் 'உறுப்பு' எனப்பட்டன 'யாக்கையின் கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும், மனத்தின்கண் உறுப்பு ஆகிய அன்பு இல்லாதார்க்கு' என்று உரைப்பாரும் உளர்.அதற்குஇல்லறத்தோடு யாதும் இயைபு இல்லாமை அறிக. | உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?. | உள்ளத்தின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவருக்கு, கண்ணுக்குத் தெரியும் உடம்பின் பிற உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்? | அன்பாம் உறுப்பு அகத்தில் இல்லையெனின் புறத்துஉறுப்பெல்லாம் இருந்தும் என்ன? | புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. | உடம்பில் உள்ளுறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு வெயிலிலுள்ள மற்ற உறுப்புகளால் எந்தப் பயனும் உண்டாகாது. | யாக்கை யகத்து உறுப்பு அன்புஇலவர்க்கு - இல்லறம் நடத்துவாரின் உடம்புள் நின்று இல்லறத்திற்கு உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - மற்றப் புறத்து நின்று உறுப்பாவன வெல்லாம் அவ்வறஞ் செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்? புறத்துறுப்பாவன இடம் பொரு ளேவல் முதலியன. இது பரிமேலழக ருரையைத் தழுவியது. இனி, மணக்குடவர் பரிதி காளிங்கர் உரைக் கருத்து வருமாறு :- உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலாதவர்க்குப் புறத்துறுப்பாகிய மெய் வாய் கண் மூக்குச் செவியும், மார்பும் தோளும் முகமும் மயிர்முடியும் பிறவும், மரப்பாவை போல் அழகாயிருந்தும் என்ன பயன்? இதுவுங் கொள்ளத் தக்கதே, அகத்துறுப்பாகிய அன்பில்லாதவர்க்குப் புறுத் துறுப்பாகிய ஐம்பொறிகளும் கை கால் முதலிய வினையுறுப்புக்களும் நிறைவாயிருந்தும், அவற்றால் இல்லற நடப்பிற்கு என்ன பயன் என்று வினவற்கிட மிருத்தலால், "அதற்கு இல்லறத்தோடு யாதுமியை பில்லாமை யறிக". என்று பரிமேலழகர் மறுத்துரைப்பது பொருந்தாது. அன்பில்லாத வுடம்பு என்பு தோற்போர்ப் பென்று ஆசிரியரும் அடுத்த குறளிற் கூறுதல் காண்க. | மனத்தின் உறுப்பாகிய அன்பில்லாதவர்களுக்கு மற்றைப் புறத்திலே இருக்கும் உறுப்புக்கள் எல்லாம் அறம் செய்தற்கு என்ன உதவியினைச் செய்யும்?. | 'உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பில்லாதார்க்கு புறத்தே உள்ள உறுப்புக்களெல்லாம் என்ன செய்யும்? என்பது இக்குறட்கருத்து. | இல்லற வாழ்வு மேம்படுதற்கு அன்புடைமை என்ற அகஉறுப்பு இன்றியமையாதது. | உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பு இல்லாதார்க்குப் புறத்து உறுப்புகளெல்லாம் இருந்தும் என்ன? | ||||||||
81 | அன்புடைமை | 80 | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. | அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. | அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. | The seat of life is love alone; Or beings are but skin and bone! | Bodies of loveless men are bony framework clad with skin; Then is the body seat of life, when love resides within. | That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin. | With love enshrined in the heart, one truly lives. Without it, the body is but bones encased in skin. | அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும். | அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும். | அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும். | உள்ளத்தில் அன்பு கொண்டவனே உண்மையில் உயிர் வாழ்பவனாவான். அன்பிலார்க்கு உடம்பு எலும்பை மூடிய வெறும் தோற்பையாம். | அன்பின் வழியது உயிர்நிலை - அன்பு முதலாக அதன் வழிநின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா. (இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின. இவை நான்கு பாட்டானும் அன்பில்வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.). | உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?. | உயிர்நிலை என்பது அன்பின் வழியாக அமைந்ததே; அஃது இல்லாதவருக்கு எலும்பைத் தோலால் போர்த்த உடம்பு மட்டுமேயாகும் | உயிருடைய உடம்பாவது அன்புடைய வாழ்வு அன்பிலார்உடம்புகள் எலும்புத் தோல்கள். | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. | அன்பின் வழி ஒழுகுவாருடைய உடம்புகளே உயிர் நிலைத்து வாழும் உடம்புகளாகும்; அன்பில்லாதவர்க்குரிய உடம்புகள் எலும்பைத் தோலால் போர்த்து மூடி வைத்துள்ள வெற்றுடம்புகளேயாம். | அன்பின் வழியது உயிர்நிலை - அன்பின் வழிப்பட்ட உடம்பே உயிர்நிலை என்று சிறப்பித்துச் சொல்லப் பெறுவது; அஃது இல்லார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ்வன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்புகள் உயிரில்லாது எலும்பைத் தோலாற் போர்த்த போர்ப்புக்களே. அன்பின் வழியது என்பது அன்பு செய்தற்கென்றே ஏற்பட்டது. இதன் விளக்கமே, அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு. என்னுங் குறள். உயிர்நிலை என்பது கதவுநிலை என்பது போன்ற கூட்டுச் சொல். என்புதோற் போர்ப்பு என்றது பிணத்தினும் இழிந்த தென்னுங் குறிப்பினது. | அன்பினைக் கொண்டு அதன் வழியில் நிற்பதே உயிர் இருக்கும் உடம்பாகும். மற்ற அன்பில்லாத உடம்புகள் எலும்பினைத் தோலினாலே போர்த்திக் கொண்டிருப்பனவாகும். உயிர் நின்றன ஆகா. | அன்பின்வழி நிற்பது உயிர்கொண்ட வாழ்வு; அன்பு இல்லாதவர்களது உடம்பு எலும்பைத் தோலால் பொதிந்து வைத்தது என்பது இக்குறட்கருத்து. | உயிர்த் தோற்றம் என்பதே அன்புடைமையின் தோற்றம்தான். | அன்பின் வழி நிற்பது உயிர் வாழ்வு; அன்பு இல்லாதார்க்குள்ள உடம்பு எலும்பினைத் தோலால் போர்த்தியதாகும்.. | ||||||||
82 | விருந்தோம்பல் | 81 | இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு | இருந்து ஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு | இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. | இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு | இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. | Men set up home, toil and earn To tend the guests and do good turn. | All household cares and course of daily life have this in view. Guests to receive with courtesy, and kindly acts to do. | The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality. | The whole purpose of earning wealth and maintaining a home is to provide hospitality to guests. | இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே. | வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம். | வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும். | வீடமைந்து இல்வாழ்வு வாழ்தலும் பொருளீட்டலும் விருந்தினரை உபசரித்துப் பணிபுரிவதற்கேயாம். | இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு. (எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.). | இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக. | இவ்வுலகில் இருந்து, பொருளைப் பேணி, இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவுதலின் பொருட்டே ஆகும் | குடும்பமாக இருந்து சிறந்து வாழ்வதெல்லாம் விருந்து பேணிஉதவி செய்தற்கே. | இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. | மனைவியோடு வீட்டில் இருந்து பொருள்களைக் காப்பாற்றி வாழும் வாழ்க்கையெல்லாம் வந்த விருந்தினரை உபசரித்து அவர்களுக்கு உபகாரம் செய்வதற்காகத்தான். | இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - கணவனும் மனைவிபும் தம் இல்லத்தின்கண் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள்களையும் பேணிக்காத்து வாழ்வதெல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு - விருந்தினரைப் பேணி அவருக்குப் பலவகையிலும் நன்றி (உபகாரம்) செய்தற் பொருட்டே. இக் காலத்திற்போல் உண்டிச் சாலைகளும் தங்கல் விடுதிகளுமில்லாத பண்டைக் காலத்தில், பணம் பெற்றேனும், இல்லறத்தாரையன்றி விருந்தினரைப் பேண ஒருவரு மின்மையின், இல் வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் விருந்தோம்பலே என்றார். ' விருந்து ' பண்பாகு பெயர். | இவ்வாழ்கையில் வாழ்ந்து பொருளினைக் காத்து வாழ்வதெல்லாம் விருந்தினரைப் போற்று உதவி செய்தற் பொருட்டேயாகும். | குடும்பமாக இருந்து சிறந்து வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவிசெய்தற் பொருட்டே என்பது இக்குறட்கருத்து. | இல்லறத்தின் சிறப்பியல் விருந்தோம்பல் என்பதைச் சொல்லும் பாடல். | வீட்டில் தங்கி சிறந்து வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்துபேணி உதவி செய்வதற்கேயாம் | ||||||||
83 | விருந்தோம்பல் | 82 | விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று | விருந்து புறத்தது ஆத்தான் உண்டல் சாவா மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று. | விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. | விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா மருந்து எனினும் வேண்டல்-பாற்று அன்று | விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. | To keep out guests cannot be good Albeit you eat nectar-like food. | Though food of immortality should crown the board, Feasting alone, the guests without unfed, is thing abhorred. | It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality. | When a guest is in the home, it is improper to hoard one’s meal, even if it happens to be the nectar of immortality. | விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்கபண்பாடல்ல. | விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று. | விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று. | விருந்தினர் வீட்டில் இருக்கவும் தன் உணவை மறைத்து உண்ணல் அது சாவா அமிர்தமாயினும் விரும்பத்தக்க முறை ஆகாது. | சாவா மருந்து எனினும் - உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும் ; விருந்து புறத்ததாத் தானுண்டல் - தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்; வேண்டற்பாற்று அன்று - விரும்புதல் முறைமையுடைத்து அன்று.(சாவா மருந்து : சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றியே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும் அதனை ஒழிக' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.). | விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று. | விருந்தாக வந்தவர் வெளியே சென்றிருக்க, தான் மட்டும் உண்ணுதல், சாவா மருந்தாகிய அமிழ்தமே என்றாலும் விரும்பத் தக்கது அன்று | வந்த விருந்து வெளிப்புறம் இருக்க, தனக்குச் சாவாமருந்துகிடைப்பினும் உண்ணல் ஆகாது. | விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. | ஒருவன் தான் உண்பது சாவாமைக்கு காரணமாகிய அமிழ்தமேயானாலும் விருந்துனர் புறத்தே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்ணல் விரும்பத்தக்கது ஆகாது. | சாவா மருந்து எனினும் - உண்ணப் படும் உணவு சாவை நீக்கும் மருந்தே யெனினும்; விருந்து புறத்ததாத் தான் உண்டல் வேண்டற் பாற்று அன்று - விருந்தினரை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டுத் தான் மட்டும் உள்ளிருந்து தனித்துண்டல் விரும்பத்தக்க தன்று. இனி, விருந்தினரை வெளியே வைத்துவிட்டுத் தனித்துண்டல் சாவா மருந்தாகும் என்று சிலர் சொன்னாராயினும், அது செய்யத் தக்கதன்று என வேறோர் உரையுமுளது. அது, "நல்லா றெனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று". என்றாற் போல்வது. சாவா மருந்து சாவாமைக்குக் கரணியமாகிய மருந்து. நோவா மருந்து, மூவா மருந்து, சாவா மருந்து என்னும் மூவகை மருந்துகளுள் சாவா மருந்து தலை சிறந்ததாதலின், உம்மை முற்றும்மை. அதிகமான் ஒளவையார்க்கு அளித்த அருநெல்லிக்கனி பரிசில் போன்றதாதலின், ஈண்டைக்கு எடுத்துக் காட்டாகாது. இனி, விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாம் (சாவையொக்கும்). அங்ஙனம் உண்பது சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று என்றும் பிரித்துப் பொருள் கொள்வர். | வந்த விருந்தினரை இல்லத்தின் புறத்தே இருக்கவைத்துச் சாவியினைத் தராத மருந்தாக இருந்தாலும், தான் மட்டும் சாப்பிடுதல் முறைமையுடையதாகாது. | சாகாமல் இருக்கச் செய்வதான மருந்தேயானாலும், விருந்து தன்இல்லத்துப் புறத்து இருக்கத் தானே உண்பது விரும்பத்தக்கது அல்ல என்பது இக்குறட்கருத்து. | எத்தகைய உணவாயினும் அதை விருந்தினரை விடுத்து உண்ணுதல் கூடாது என்பது விருந்தோம்பல் சிறப்பு. | விருந்து வெளியே இருக்க, தனக்குச் சாவாமருந்து கிடைப்பினும் தான் மட்டும் அதை உண்பது விரும்பத்தக்கது அன்று | ||||||||
84 | விருந்தோம்பல் | 83 | வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று | வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று | வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. | வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று | வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. | Who tends his guests day in and out His life in want never wears out. | Each day he tends the coming guest with kindly care; Painless, unfailing plenty shall his household share. | The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty. | If a man cares daily for those who come to him, his life will never suffer the grievous ruin of poverty. | விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை. | நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை. | தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை. | தினமும் வருவிருந் தோம்புவான் வாழ்க்கை எக்காலத்தும் வறுமையால் துன்புற்று வருந்தாது. | வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை - தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை. (நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.). | நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை. | நாள்தோறும் தன்னை நாடி வரும் விருந்தினரைப் போற்றுகிறவனுடைய இல்வாழ்க்கை துன்பத்தால் பாழ்படுதல் என்றும் இல்லையாகும் | நாளும் வருகின்ற விருந்தைப் போற்றுக வாழ்வு துன்பப்பட்டுஅழியாது. | வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. | தன்பால் வந்த விருந்தினரை நாள்தோறும் போற்றி வருபவனது இல்வாழ்க்கை வறுமைத் துன்பத்தால் வருந்திக் கெடுவதே இல்லை. | வைகலும் வருவிருந்து ஓம்புவான் வாழ்க்கை - நாள்தோறும் தன்னை நோக்கி வருகின்ற விருந்தினரைப் பேணுவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - வறுமையால் துன்புற்றுக்கெடுதல் இல்லை. இது நாட்டு வளத்தையும் இல்லறத்தானின் செல்வநிலையையும் பொறுத்தது. | வந்த விருந்தினரை நாள்தோறும் போற்றுபவனுடைய இல்வாழ்க்கையானது வறுமையால் துன்புற்றுக் கெடுவது இல்லையாகும். | வருகின்ற விருந்தினை நாள்தோறும் பேணுவானது வாழ்க்கை துயருற்று கெட்டுப் போவதில்லை என்பது இக்குறட்கருத்து. | விருந்தோம்பல் செய்வதால் ஒருவன் குறைவுபட்டுப் போவதில்லை எனச் சொல்லும் பாடல். | நாள்தோறும் தம் இல்லம் நோக்கி வருகின்ற விருந்தினரைப் பேணுவானது வாழ்க்கை துன்புற்றுக் கெடுதல் இல்லை | ||||||||
85 | விருந்தோம்பல் | 84 | அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். | அகன்அமர்ந்து செய்யாள் உறையும்முகன் அமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல். | அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந் தோம்புவான் இல். | அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து நல் விருந்து ஓம்புவான் இல் | அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். | The goddess of wealth will gladly rest Where smiles welcome the worthy guest. | With smiling face he entertains each virtuous guest; 'Fortune'with gladsome mind shall in his dwelling rest. | Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests. | Wealth’s Goddess dwells in the hospitable home of those who host guests with a smiling face. | மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள். | இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள். | நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள். | புன்முறுவலுடன் விருந்தினரை உபசரிப்பான் இல்லத்தில் திருமகள் மனமுவந்து என்றும் வாசம் செய்வாள். | செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண். (மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.). | திருவினாள் மனம்பொருந்தி உறையும்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண். இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது. | முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உளமலர்ச்சியோடு திருமகள் அகலாது தங்கியிருப்பாள் | முகம் மலர்ந்து விருந்து செய்பவன் வீட்டில் அகம் மலர்ந்துதிருமகள் தங்கிவிடுவாள். | அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். | நல்ல விருந்தினரை முகமலர்ச்சியோடு போற்றுபவனது இல்லத்தில் திருமகள் மனம் மகிழ்ந்து வாழ்வாள். | முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்-முக மலர்ந்து நல்ல விருந்தினரைப பேணுவானது இல்லத்தின்கண்; செய்யாள் அகன் அமர்ந்து உறையும்-திருமகள் மனமகிழ்ந்து வதிவாள். திருமகள் மனமகிழ்தல் செல்வம் நல்வழியிற் செலவிடப்படுதல் பற்றி. வதிதல்-நிலையாகத் தங்குதல் நல் விருந்தினர்-அறிவும் ஒழுக்கமும் தன்மானமும் உள்ளோர். | முகமலர்ச்சியுடன் தக்க விருந்தினரைப் போற்றுபவனுடைய இல்லத்தில் திருமகள் மனமகிழ்ச்சியுடன் வாழ்ந்திருப்பாள். | முகம் மலர்ந்து நல்ல முறையில் விருந்து செய்வான் இல்லின்கண் திருமகள் மனம் மகிழ்ந்து உறையும் என்பது இக்குறட்கருத்து. | நல்ல விருந்தோம்பல் செய்வான் இருப்பிடம் திருமகள் உறையும் தெய்வீக இல்லமாகும். | முகம் மலர்ந்து நன்றாக விருந்தினரைப் போற்றுபவன் வீட்டில் மனம் மகிழ்ந்து திருமகள் தங்கிவிடுவாள். | ||||||||
86 | விருந்தோம்பல் | 85 | வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். | வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம். | வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். | வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் | வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். | Should his field be sown who first Feeds the guests and eats the rest? | Who first regales his guest, and then himself supplies, O'er all his fields, unsown, shall plenteous harvests rise. | Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ? | If a man eats only after attending to guests’ needs, what further sowing will his fertile fields require? | விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப்பயன்படுத்தாமல் இருப்பானா? | விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?. | விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?. | விருந்தினரை உபசரித்துப் பின் எஞ்சியதைத் திருப்தியுடன் உண்பவனுடைய வயல் விதைக்காமலே பெருவிளைவு தரும். | விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ - வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா. ('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.). | விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ? பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்றவாறு. | விருந்தினரைப் போற்றியபின், எஞ்சியதைத் தான் உண்ணுகிறவனுடைய நிலத்தில், விதையும் விதைக்க வேண்டுமோ? | விருந்து செய்தபின் மிச்சத்தை உண்பவனது நிலத்துக்குவிதைகூட இடவேண்டுமா? | வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். | விருந்தினரை முன்னர் உண்பித்து எஞ்சியதைப் பின்பு தான் உண்டுவாழ்பவனுடைய விளைநிலத்துக்கு வித்திடுதலும் வேண்டுமா? வேண்டா. தானே விளையும். | விருந்து ஒம்பி மிச்சில் மிசைவான் புலம்-முன்பு விருந்தினரை உண்பித்துவிட்டுப் பின்பு மீந்ததைத் தானுண்ணும் வேளாளனது நிலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ-விதை தெளித்தலும் வேண்டுமோ? வேண்டியதில்லை. தானே விளையும் என்பது குறிப்பெச்சம். இஃது இக்காலத்திற்கு இன்மை நவிற்சியாகத் தோன்றலாம். வளமிக்க பண்டைக் காலத்தில், அறுவடை நாளில் வயலிற் சிந்திய மணிகள் களந்தூர்க்கப்படாமலே கிடந்து , அடுத்துப் பெய்த மழையால் முளைத்து வளர்ந்து விளைந்திருக்கலாம். இனி, இக்காலத்தும், வித்தையும் சமைத்து விருந்தினர்க்குப் படைத்த வேளாளனது நிலத்தில் அவனுக்குத் தெரியாமல் இரவோடிரவாக அறவாணனான செல்வன் தன் சொந்த வித்தை விதைக்கலாம். இனி, விருந்தோம்பி மிச்சில் மிசைவான்-விருந்தினரை யுண்பித்துப் பின் மீந்ததை யுண்ணும் இயல்புள்ள வேளாளன்; புலம் வித்து இடலும் வேண்டுமோ- விருந்தோம்பல் முட்டுப் பட்ட விடத்துத் தன் நிலத்தில் விதைக்கு வைத்திருந்ததை விதைக்கவும் விரும்புவானோ? விரும்பான் என்று வேறும் ஒரு பொருள் கொள்வர். இதற்கு இளையான்குடி மாற நாயனார் வரலாறு ஒர் எடுத்துக் காட்டாம். கொல் அசைநிலை. மிச்சில் அடுகலத்தில் அல்லது பெட்டியில் மிஞ்சுவது தூய்மையாயிருப்பது. எச்சில் உண்கலத்தில் அல்லது இலையில் எஞ்சுவது; எச்சிலோடு கூடியது. இவ்வேறுபாடறிக. | விருந்தினரைப் போற்றி உபசரித்து மீதியாக இருப்பதை உண்பவன் நிலத்திற்கு விதை இடுதலும் வேண்டுமோ?. விதைக்கு - (விதைக்க) - வைத்திருப்பதையும் சமைத்து உணவளிப்பான் என்பதாம். | விருந்தினரை உண்பித்து மிஞ்சிய உணவை உண்பவன் நிலத்திற்கு விதையும் தூவ வேண்டுமோ? என்பது இக்குறட்கருத்து. | விருந்தோம்பல் பண்ணிய பயன் பயிரிலே தெரியும். | விருந்தினரைப் பேணிப் பின் மிச்சத்தை உண்பானது நிலத்திற்கு விதைகூட இட வேண்டுமா? | ||||||||
87 | விருந்தோம்பல் | 86 | செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு | செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு | செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு. | செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான் நல் விருந்து வானத்தவர்க்கு | செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு. | Who tends a guest and looks for next Is a welcome guest in heaven's feast. | The guest arrived he tends, the coming guest expects to see; To those in heavenly homes that dwell a welcome guest is he. | He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven. | The host who, caring for guests, watches hopefully for more, will himself be a welcomed guest of those whose home is Heaven. | வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன்எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன்என்று வரவேற்றுப் போற்றுவர். | வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான். | வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான். | செல்லும் விருந்தினரை வழியனுப்பி இன்னும் வரும் விருந்தினரை வரவேற்கக் காத்திருப்பவன் மறுமையில் விண்ணுலகத்தாரின் நல்விருந்தினனாவான். | செல் லிருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் - தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து - மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். ('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.). | வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன். வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை. | செல்லும் விருந்தினரையும் போற்றி, வரும் விருந்தையும் எதிர்பார்த்திருப்பவன், வானத்துத் தேவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான் | வந்தாரைப் போற்றி வருவாரை ஏற்பவன் தேவர்க்கு நல்விருந்துஆவான். | செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு. | இப்பிறவியில் தன்னிடம் வந்த விருந்தினரை உபசரித்து, மேலும் வரக்கூடிய விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன் மறுமையில் தேவனாய் வானுலகில் வாழும் தேவர்க்கும் நல்ல விருந்தினன் ஆவான். | செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்-தன்னிடம் முந்திவந்த விருந்தினரைப் பேணிவிட்டுப் பின்பு பிந்தி வரும் விருந்தினரையும் எதிர்பார்த்து அவரோடு தானுண்ணக் காத்திருப்பான்; வானத்தவர்க்கு நல்விருந்து-மறுமையில் தேவனாகி விண்ணகத்தாரால் சிறந்த விருந்தினனாக ஏற்றுக்கொள்ளப் படுவான். பண்டை வேளாண் மகளிர் தம் பிள்ளைகளை முறையாக விடுத்து வழிப்போக்கரைத் தடுத்துத் தம் வீட்டிற்கு வருவித்து விருந்தோம்பிய செய்தியை, "உரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத் தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப இருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த அவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவிர்" என்னும் சிறுபாணாற்றுப் படைப் பகுதியால் ( 160-165)அறிக | வந்த விருந்தினரைப் போற்றி உபசரித்து அனுப்பி வைத்து, வருகின்ற விருந்தினரை எதிர்நோக்கி அவருடன் உண்ண இருப்பவன் வானத்தவர்க்கு நல்ல விருந்தினனாவான். | தன்னை நாடி வந்த விருந்தைப் பேணி இனி வரப்போகும் விருந்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவன் வானின்கண் வாழும் தேவர்க்கு நல்விருந்து என்பது இக்குறட்கருத்து. | வந்தவனுக்கு உணவு வரப்போகிறவனுக்கு உலை என்று விருந்தோம்பலில் சிறந்தாரைப் பற்றிய பாடல். | வந்த விருந்தைப் பேணி காத்து வரப்போகும் விருந்துக்காகக் காத்திருப்பவன் விண்ணகத்துள்ளார்க்கு நல்ல விருந்தாவான். | ||||||||
88 | விருந்தோம்பல் | 87 | இனைத்துணைத் தென்பதொன் றில்லை: விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன் | இனைத் துணைத்து என்பது ஒன்றுஇல்லை: விருந்தின் துணைத் துணை வேள்விப் பயன் | இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். | இனை துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின் துணை துணை வேள்வி பயன் | இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். | Worth of the guest of quality Is worth of hospitality. | To reckon up the fruit of kindly deeds were all in vain; Their worth is as the worth of guests you entertain. | The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure. | Charity’s merit cannot be measured by gifts given. It is measured by measuring the receiver’s merits. | விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப்பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம். | விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும். | விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும். | விருந்தினருக்கு அளிக்கப்படும் கொடையின் பெறுமதி அதைப் பெறும் விருந்தாளியின் தகுதி கொண்டே கணிக்கப்படும். | வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை - அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. (ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.). | விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை. அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன். | விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவினது என்று கூறத்தக்கது அன்று; அது விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினது ஆகும் | விருந்தின் பயன் இதுவென்று அளக்க முடியாது: விருந்தினர்பெருமையே விருந்தின் பெருமை. | இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். | விருந்தினைப் போற்றுதலால் உண்டாகும் வேள்வியின் பயன் ஓர் அளவினை உடையது அன்று. விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவாக அமையும். | வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை-விருந்தினர்க்குணவு படைத்தலின் பயன் இவ்வளவினது என்று வரையறுத்துச் சொல்லுந் திறத்த தன்று; விருந்தின் துணைத் துணை-விருந்தினரின் தகுதியளவே அதன் அளவாம். வேட்டுச் செய்யும் வினையாகலின் விருந்தோம்பலை வேள்வி என்றார். வேட்டல் விரும்பல். "உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி யிறப்ப நிழற்பயந் தா அங்-கறப்பயனும் தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்". என்பது நாலடியார்(38). | விருந்தோம்பல் என்ற வேள்வியின் பயன் இவ்வளவுதான் என்ற அளவினை உடையதில்லை. அது, விருந்தினரின் தகுதி அளவினையே அளவாகக் கொண்டதாகும். | விருந்தின் பயன் இவ்வளவு என்று சொல்ல முடியாது; விருந்தளவிற்கு விருந்தோம்பலின் பயன் என்பது இக்குறட்கருத்து. | விருந்தோம்பல் பயன் அடைவதற்கு யாருக்கு எப்படியெப்படி விருந்திட வேண்டும் என்ற வகை ஒன்றுமில்லை.என்னும் பாடல் . | விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவு உடையது என்று ஒன்றும் இல்லை. விருந்து உதவும் அளவு பயன். | ||||||||
89 | விருந்தோம்பல் | 88 | பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் | பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் விருந்துஓம்பி வேள்வி தலைப் படாதார் | பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். | பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் | பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். | Who loathe guest-service one day cry: "We toil and store; but life is dry". | With pain they guard thei stores, yet 'All forlorn are we' they'll cry, Who cherish is not their guests, nor kindly help supply. | Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, “we have laboured and laid up wealth and are now without support.” | Those who never sacrifice to care for guests will later lament: “We hoarded wealth, estranged ourselves, now none will care for us.” | செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே எனவருந்துவார்கள். | விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர். | விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர். | விருந்தினருக்குத் தியாகம் என்றுமே செய்யாதோர் "செல்வத்தை மறைத்தோமே, ஏனையோருடன் நட்பிழந்திருந்தோமே, இப்போது எம்மைப் பேணுவாரில்லையே" எனப் பின் வருந்துவர். | பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் - நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் - அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார். ("ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் (நாலடி.280) "ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.). | விருந்தினரைப் போற்றி உபசரிக்க மாட்டாதார், வருந்தியுடம் பொன்றையும் ஓம்பிப் பொருளற்றோமென் றிரப்பர். | பொருளை வருத்தத்தோடு காத்து, அது போய்விட்டபோது ‘தாம் பற்றில்லாதவர்’ என்பவர்கள், விருந்தைப் பேணி அந்த வேள்வியில் ஈடுபடாதவரே யாவர்! | விருந்து என்னும் வேள்வியில் ஈடுபடாதவர் காத்த பொருளையும்இழந்து பின் வருந்துவர். | பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். | விருந்தினரைப் போற்றி அவ்வேள்வியின் பயனை அடையாத அறிவில்லாதவர், பொருளை வீணே காத்து இழந்து ஆதரவற்றவரானோம் என்று பின்னர் வருந்துவர். | விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார்-விருந்தினரைப் பேணி அவர்க்குச் சிறந்த உணவு படைத்தலை மேற்கொள்ளாதார்; பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர்-அவ்வறங்கட்குச் செலவிட வேண்டிய பொருளை நிலையானதென்று மயங்கி வருந்திப் பாதுகாத்தும் பின்பு இழந்துவிட்டதனால், இன்று எமக்கு யாதொரு பற்றுக்கோடும் இல்லையென்று நொந்து கூறாநிற்பர். "ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக் காத்தலு மாங்கே கடுந்துன்பங்-காத்தல் குறைபடிற் றுன்பங் கெடிற்றுன்பந் துன்பக் குறைபதி மற்றைப் பொருள்". (நாலடியார், 280) ஆதலால், நிலையாத பொருள் நிலையும் போதே நிலைத்த பயனைத் தேடிக்கொள்க என்பது இதனாற் கூறப்பட்டது. வேள்வி என்னும் தூய தென்சொல்லாகிய தொழிலாகுபெயர் (ம, தெ. வேள்வி; க. பேளுவெ) விரும்பு என்று பொருள்படும் வேள் என்னும் முதனிலையடிப் பிறந்து, பின்வருமாறு, விரும்பிச் செய்யும் பல்வேறு வினைகளைக் குறிக்கும். 1. திருமணம் "நாமுன்பு தொண்டுகொண்ட வேள்வியில் (பெரியபு. தடுத்தாட். 127). 2. விருந்தினர்க்குப் படைப்பு. வேள்வி தலைப்படாதார் (குறள். 88). 3. தெய்வத்திற்குப் படைப்பு, பூசனை ( பிங் ) வேள்வியி னழகியல் விளம்புவோரும் (பரிபா. 19 : 43). 4. பேய்கட்குப் படைப்பு, களவேள்வி, "பண்ணிதைஇய பயங்கெழு வேள்வியின்" ( அகம். 13: 11) 5. கொடை (பிங்.). ஆரியர் தம் ஆரியக் கொள்கைகளைத் தமிழ்நாட்டிற் பரப்புதற்கும் 'யாகம்' என்னும் கொலை வேள்வியைத் தமிழரிடை எதிர்ப்பின்றிச் செய்தற்கும், தம் கொலை வேள்விக்குக் கடவுள் வேள்வி யென்றும் வேதக்கல்விக்குப் பிரம வேள்வியென்றும் பெயரிட்டு அவற்றொடு பேய்ப்படையலாகிய பூதவேள்வியையும் விருந்தோம்பலாகிய மாந்தன் வேள்வியையும் இறந்த முன்னோர்க்குப் படைத்தலாகிய தென்புலத்தார் வேள்வியையுஞ் சேர்த்து, ஐவகை வேள்வி யென்று தொகுத்துக்கூறி, வேள்வியென்று வருமிடமெல்லாம் ஆரிய வேள்வியை நினைக்குமாறு செய்துவிட்டனர். | நல்ல விருந்தினரைப் பேணி அவ்வேள்விப் பயனை அடையாதவர்கள், பொருளைக் காப்பாற்றி இழந்து இதுபோது பற்றுக்கோடு இல்லையானோம், என்று இரக்கப்பட்டு வருந்துவர். | விருந்தோம்புதல் என்னும் வேள்வியில் ஈடுபடாதவ்ர் பொருளை வருந்திக் காத்து பின் இழந்து ஆதரவற்றோம் என்று சொல்வர் என்பது இக்குறட்கருத்து. | பசியாற்றுதல் என்னும் விருந்தோம்பல் செய்யாமலேயே செல்வம் எல்லாம் தொலைத்து விட்டோமே எனப் பின்னாள் வருந்துபவர் பற்றிய பாடல்./p> | விருந்தோம்பல் வேள்வியில் ஈடுபடாதவர் வருந்திக் காத்த பொருளையும் இழந்தோமே எனச் சொல்வர். | ||||||||
90 | விருந்தோம்பல் | 89 | உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு | உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா மடைமை மடவார்கண் உண்டு. | உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. | உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா மடமை மடவார்-கண் உண்டு | உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. | The man of wealth is poor indeed Whose folly fails the guest to feed. | To turn from guests is penury, though wordly goods abound; 'Tis senseless folly, only with senseless found. | That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid. | The poverty of poverties is having plenty yet shunning guests. Such senselessness is only found in senseless fools. | விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம்பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள். | செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும். | செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும். | பெரும் செல்வமிருந்து விருந்தோம்பல் தவிர்ப்பதே ஏழ்மையுள் ஏழ்மை, அறிவில்லா மூடர்களே அவ்வாறு செய்வர். | உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை -உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு - அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். (உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார்.பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.). | உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம். | பொருள் உடைமையுள்ளும் ‘இல்லாமை’ என்பது, விருந்தோம்பலைப் பேணாத மடமையே; அஃது அறிவற்றவரிடமே உளதாகும் | செல்வத்தில் வறுமை விருந்திடா மடமையாம்; இக்குணம்முழுதும் அறிவிலியிடமே இருக்கும். | உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. | செல்வ நிலையிலும் உள்ள வறுமை என்பது, விருந்தோம்பாத அறியாமையாகும். அது அறிவுடையாரிடம் உண்டாகாது. அறிவிலிகளிடம் மட்டுமே உள்ளதாகும். | உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஒம்பா மடமை-செல்வக் காலத்து வறுமையாவது விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் பேதைமை; மடவார்கண் உண்டு-அது பேதையரிடத்திலேயே உள்ளது. செல்வத்தின் பயனை இழப்பித்து அதை வறுமையாக மாற்றுவதால், பேதமையை வறுமையாகச் சார்த்திக் கூறினார். | பொருள் பெற்றிருந்தும் வறுமை இருப்பது என்பது என்னவென்றால், விருந்தினரைப் போற்றாதிருக்கும் மடமையாகும். அத்தன்மை, அறிவில்லாதவர்களிடத்தில் காணப்படுவதாகும். | செல்வநிலையில் இல்லாமையாவது விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் பேதைமையாம்; அது அறிவிலிகளிடையே உள்ளதாகும் என்பது இக்குறட்கருத்து. | பணம் இருந்தும்விருந்தோம்பல் செய்ய மனம் இல்லையே இந்த முட்டாள்களுக்கு என்னும் பாடல். | செல்வத்தில் வறுமை விருந்தோம்புதலைச் செய்யாத மடமையாம்; அது அறிவிலிகளிடையே இருக்கும் | ||||||||
91 | விருந்தோம்பல் | 90 | மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து | மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து. | மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. | மோப்ப குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்க குழையும் விருந்து | மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. | Anicham smelt withers: like that A wry-faced look withers the guest. | The flower of 'Anicha' withers away, if you but its fragrance inhale; If the face of the host cold welcome convey, the guest's heart within him will fail. | As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away. | The delicate <em>anicham</em> flower withers when merely smelled, but an unwelcome look is enough to wither a guest’s heart. | அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது.அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர். | தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும். | அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார். | அனிச்சம் பூவோ முகந்தாலே வாடும், வரும் விருந்தினரின் மனமோ வெறுப்புடன் நோக்கவே வாடும். | அனிச்சம் மோப்பக் குழையும் - அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது; விருந்து முகம் திரிந்து நோக்கக்குழையும் - விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர். (அனிச்சம் ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.). | எல்லா மலரினும் மெல்லிதாகிய அனிச்சப்பூ மோந்தாலல்லது வாடாது: விருந்தினரை முகந்திரிந்து நோக்க அவர் வாடுவர். இது முகம்நோக்கி யினிமை கூறவேண்டுமென்றது. | அனிச்ச மலர் மோந்தவுடனே வாடிவிடும்; முகம் மாறுபட்டு நோக்கிய உடனே விருந்தினரும் உள்ளம் வாடி விடுவார்கள் | அனிச்சப்பூ மோந்தால் வாடும்; விருந்தோ முகமாறிப் பார்த்தாலேவாடிப் போம். | மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. | அனிச்சமலர் நுகர்ந்த பொழுதே வாடிவிடும். ஆனால், விருந்தினர், முகம், மாறுபட்டுப் பார்க்கிற அளவிலேயே வாடி விடுவர். | அனிச்சம் மோப்பக் குழையும்-இயல்பாக மென்மையாகவுள்ள பூக்களுள்ளும் மிக மென்மையானதாகச் சொல்லப்படும் அனிச்சப் பூவும் மோந்தால் மட்டும் வாடும்; விருந்து முகம் திரிந்து நோக்கக்குழையும்-ஆனால், தன்மானமுள்ள விருந்தினரோ, வீட்டாரின் முகம் வேறுபட்டு நோக்கிய மட்டில் வாடிவிடுவர். 'அனிச்சம்' முதலாகுபெயர். தொட்டு முகந்தால் வாடும் அனிச்ச மலரினும் தொலைவில் முகம் வேறுபட்டு நோக்கிய மட்டில் வாடும் விருந்தினர் மென்மையராதலின், விருந்தோம்புவார் இன் சொற்கும் இன்செயற்கும் முன் இன்முகங் காட்டவேண்டுமென்பது இங்குக் கூறப்பட்டது. | அனிச்ச மலரானது மூக்கில் வைத்து மோந்ததால்தான் வாடுவதாகும். விருந்தினர்கள், முகமானது வேறுபட்டுப் பார்க்கும்போதே வாடிவிடுவர். | அனிச்ச மலர் மோந்தால் வாடும்; முகம் வேறுபட்டுப் பார்க்க விருந்தினர் வாடுவர் என்பது இக்குறட்கருத்து. | இன்முகம் காட்டி வரவேற்பது சிறந்த விருந்தோம்பல் முறையாகும். | அனிச்சப்பூ முகர்ந்த அளவில் வாடும். விருந்தினர் முகம் மாறிப் பார்க்க வாடிவிடுவர். | ||||||||
92 | இனியவை கூறல் | 91 | இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் | இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல். | இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். | இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம் செம் பொருள் கண்டார் வாய் சொல் | இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். | The words of Seers are lovely sweet Merciful and free from deceit. | Pleasant words are words with all prevading love that burn; Words from his guileless mouth who can the very truth discern. | Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous. | Pleasant words, full of tenderness and devoid of deceit, fall from the lips of virtuous men. | ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவேஇன்சொல் எனப்படும். | அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல். | ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும். | உண்மை உணர்ந்த அறவோர் வாயில் மனங் குழைந்து வஞ்சனை இல்லாத இனிய சொற்கள் வரும். | இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். (ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.). | ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ? | செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும் | அன்பும் தூய்மையும் அறமும் உடைய உண்மையாளர் சொல்லேஇன்சொல்லாம். | இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். | செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச்சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்த்தாய், வஞ்சம் இல்லாத்தாய் இருக்கும். | இன்சொல்-இனிய சொல்லாவன; ஈரம் அளைஇ-அன்பு கலந்து; படிறு இலவாம்-வஞ்சனை யில்லாத; செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்-மெய்ப் பொருளையறிந்த சான்றோர் வாய்ச் சொற்கள். 'ஆல்' அசைநிலை. படிறு-பொய். எப்பாலவரும் இயையும் உண்மைப்பொருள் என்றும் மாறாது நேராயிருத்தலின் 'செம்பொருள்' என்றார். 'செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்' என்றது, அவர் வாயினின்று வருஞ்சொற்களெல்லாம் என்றும் இனியனவே என்பதை உணர்த்தற்கு; 'அளைஇ' சொல்லிசை யளபெடை. | அறத்தினை அறிந்தவர்கள், வஞ்சனையிலாதவைகளாகி அன்போடு கலந்து சொல்லுகின்ற சொற்கள், இன்சொற்கள் எனப்படுவதாகும். | இன்சொல்லானது அருளோடு கலந்து வஞ்சனை இல்லாதனவாய் அறம் உணர்ந்தாரது வாய்மை மொழி என்பது இக்குறட்கருத்து. | இனியவைகூறல் என்பது அறம் உணர்ந்தவற்றை மொழிதல். | இனிய சொல்லாவது அருளோடு கலந்து வஞ்சனையில்லாததாய், அறம் உணர்ந்தாருடைய மெய்ம்மை மொழியாம். | ||||||||
93 | இனியவை கூறல் | 92 | அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொல் னாகப் பெறின் | அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். | அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். | அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து இன் சொலன் ஆக பெறின் | அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். | Sweet words from smiling lips dispense More joys than heart's beneficence. | A pleasant word with beaming smile's preferred, Even to gifts with liberal heart conferred. | Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind. | Better than a gift given with a joyous heart are sweet words spoken with a cheerful smile. | முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும். | முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது. | முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும். | மனமகிழ்வுடன் கொடுக்கும் அன்பளிப்புகளிலும் உள்ளக்களிப்புடன் முகம் மலர்ந்து வழங்கும் இன்சொற்களே மிகவும் சிறந்தன. | அகன் அமர்ந்து ஈதலின் நன்று - நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று; முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் - கண்டபொழுதே முகம் இனியனாய் அதனொடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின். (இன்முகத்தோடு கூடிய இன்சொல் ஈதல் போலப் பொருள் வயத்தது அன்றித் தன் வயத்தது ஆயினும், அறநெஞ்சுடையார்க்கு அல்லது இயல்பாக இன்மையின் அதனினும் அரிது என்னும் கருத்தான், 'இன்சொலன் ஆகப் பெறின்' என்றார்.). | மனம் பொருந்திக் கொடுத்தலினும் நன்று: முகம் பொருந்தி இனிமைச்சொல் சொல்ல வல்லவனாயின். | முகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது, அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட நல்லதாகும் | முகமலர்ந்து என்றும் இன்சொற் கூறின் அகமலர்ந்துகொடுப்பதினும் சிறந்தது. | அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். | முக மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப் பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையை விட நல்லதாகும். | முகன் அமர்ந்து இன்சொலனாகப் பெறின்-ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ந்து இனிய சொல்லும் உடையனாகப் பெறின்; அகன் அமர்ந்து ஈதலின் நன்று-அது மனமுவந்து ஒரு பொருளைக் கொடுத்தலினும் சிறந்ததாம். வெறுநோக்கினும் வெறுஞ் சொல்லினும் ஒரு பொருளைக் கொடுத்தலே உண்மையிற் சிறந்ததாயினும், மக்கள் பொதுவாக வெளிக்கோலத்திற்கே வயப்படுவதால், அகமலர்ச்சி வெளிப்படாத கொடையினும் முகமலர்ச்சியோடு கூடிய இன்சொல்லே நல்ல தென்றார். | முகமலர்ச்சியுடன் இனிய சொல்லினனாக இருந்து விட்டால், அத்தன்மை நெஞ்சம் உவந்து ஈகையினைச் செய்வதை விடவும் நல்லதாகும். | முகம் மலர்ந்து இன்சொல் பேசும் இயல்பு உடையனாய் இருக்கப் பெற்றால், உள்ளம் விரும்பிக் கொடுத்தலின் நன்று என்பது இக்குறட்கருத்து. | யாண்டும் இனியவைகூறல் இயல்பைப் பெற்றுக்கொள். | முகம் மலர்ந்து இன்சொல் பேசுபவனாக இருப்பின், அது உள்ளம் மகிழ்ந்து ஒருவனுக்கு ஈதலைக் காட்டிலும் நல்லது. | ||||||||
94 | இனியவை கூறல் | 93 | முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம் | முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொல் இனிதே அறம். | முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். | முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம் இன் சொலினதே அறம் | முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். | Calm face, sweet look, kind words from heart Such is the gracious virtue's part. | With brightly beaming smile, and kindly light of loving eye, And heart sincere, to utter pleasant words is charity. | Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue. | A kindly countenance and sweet words spoken from the heart are virtue’s way. | முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும். | பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும். | முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும். | முகம் மலர்ந்து அன்போடு நோக்கி உளங்கனிய இனிய சொற்களால் உரையாடலே அறம் காட்டும் வழியாகும். | முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் - பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். ('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.). | கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம். | முகத்தோற்றத்தால் விருப்பத்தோடு இனிமையாகப் பார்த்து, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களையும் சொல்லும் அதுவே, அறமாகும் | முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து உள்ளத்தோடு சொல்லுக;அதுவே அறம். | முகத்தான் அமர்ந் துஇனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். | முகமலர்ந்து இனிமையுடன் நோக்கி உள்ளம் கலந்த இனிய சொற்களைக் கூறுவதே அறமாகும். | முகத்தா னமர்ந்தினிது நோக்கி-ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ச்சியோடு விரும்பி இனிதாக நோக்கி அகத்தான் ஆம் இன்சொலினதே அறம்-பின்பு நெருங்கியவிடத்து அக மலர்ச்சியோடு கூடிய இனிய சொற்களைச் சொல்லுதலை யுடையதே அறமாவது. ஒருவரைக் கண்டபொழுதே ஒரு பொருளை யீதல் பொதுவாக இயையாமையின், முதற்கண் இன்முகங் காட்டலும் உடனும் அடுத்தும் இன்சொற் சொல்லுதலும் மக்களைப் பிணித்து மகிழ்விக்குந் தன்மையனவாதலின், விருந்தினரிடத்தும் இம்முறையைக் கையாள்வதே சிறந்ததென்றார். | முகத்தினால் விரும்பி இனிமையாகப் பார்த்து மனத்துடன் பொருந்திய இனிய சொற்களைச் சொல்லுவதில் அமையப் பெற்றதே அறமாகும். | முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து உள்ளன்போடு இனிய சொற்களைச் சொல்லுவது அறமாகும் என்பது இக்குறட்கருத்து. | இனியவைகூறல் ஒரு இனிமையான காட்சியாக்கப்பட்டு வழங்கப் பெறும் பாடல் | முகமலர்ந்து இனிமையாகப் பார்த்து உள்ளன்போடு இன்சொல் இயம்புவதே அறம் | ||||||||
95 | இனியவை கூறல் | 94 | துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு | துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு. | துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. | துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும் இன்புறூஉம் இன் சொலவர்க்கு | துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. | Whose loving words delight each one The woe of want from them is gone. | The men of pleasant speech that gladness-breathe around, Through indigence shall never sorrow's prey be found. | Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech. | Poverty-provoking sorrow will not pursue those who speak joy-producing words to all they meet. | இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு 'நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை. | எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது. | யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும். | காண்போர் எவர்க்கும் மகிழ்விக்கும் சொல் வழங்குவார்க்கு வறுமையால் வரும் துன்பம் சாராது. | யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு - எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும் - துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். (நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' என்றார். 'யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேஆம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.). | துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும். யாவர்மாட்டுங் கூற இன்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு. | எவரிடத்தும் இன்பம் உண்டாகத் தகுந்த இன்சொல்லைப் பேசுபவர்க்கு, துன்பத்தை மிகுதியாக்கும் வறுமையும் இல்லாமற் போகும் | யார்க்கும் இன்பச் சொல்லைச் சொல்லுக; துன்பந்தரும் வறுமைவாராது. | துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. | யாவரிடத்திலும் இன்பத்தை மிகுவிக்கின்ற இன்சொல்லை உடையவருக்குத் துன்பத்தை மிகுவிக்கின்ற வறுமை இல்லாது ஒழியும். | யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு-யாரிடத்தும் இன்புறுத்தும் இன்சொல்லைச் சொல்வார்க்கு; துன்புஉறூஉம் துவ்வாமை இல்லாகும்-துன்புறுத்தும் வறுமை இலதாகும். ' உறூஉம் ' ஈரிடத்தும் பிறவினையான சொல்லிசை யளபெடை 'துவ்வாமை நுகராமை , துய்-து .எல்லாரிடத்தும் இன்சொற் சொல்வார்க்கு எல்லாரும் நண்பரும் அன்பருமாவராதலின் , எல்லாப் பொருளுங் கிடைக்குமென்றும் அதனால் வறுமையிராதென்றும் கூறினார் . வறுமையால் ஐம்புல நுகர்ச்சி கூடாமையின் வறுமையைத் துவ்வாமை யென்றார் . வறியவரைத் ' துவ்வாதவர் ' என்று முன்னரே ( சஉ) கூறியிருத்தல் காண்க . | எல்லோரிடத்திலும் இன்பத்தினை உண்டாக்கும் இனிய சொற்களைச் சொல்லுபவர்களுக்குத் துன்பத்தினை மிகுவிக்கும் வறுமை என்பது இல்லை. | எல்லாரிடத்தும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல் பேசுகின்றவர்களுக்குத் துன்பமுறச் செய்யும் வறுமை இல்லையாம் என்பது இக்குறட்கருத்து. | இனியவைகூறல் ஒருவனை நலிவுறாமல் காக்கும். | எல்லோரிடத்தும் இன்பம் தரும் இன்சொல் கூறுபவர்களுக்குத் துன்பத்தை மிகுவிக்கும் வெறுப்பு இராது. | ||||||||
96 | இனியவை கூறல் | 95 | பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற | பணிவுஉடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணிஅல்ல மற்றுப் பிற. | பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற | பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு அணி அல்ல மற்று பிற | பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. | To be humble and sweet words speak No other jewel do wise men seek. | Humility with pleasant speech to man on earth, Is choice adornment; all besides is nothing worth. | Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments). | Humility and pleasant words are the jewels that adorn a man; there are none other. | அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது. | தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா. | வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல. | பணிவும் இன்சொலும் காட்டுதல் ஒருவர்க்கு அணி, மற்று எவையும் அணியல்ல. | ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் - ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல், பிற அல்ல - அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா. (இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசை நிலை. வேற்றுமை உடைமையான், பிற எனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் 'அல்ல' எனவும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப் பயன் கூறப்பட்டது.). | ஒருவனுக்கு அழகாவது தாழ்ச்சி யுடையனா யினிய சொற்களைக் கூற வல்லவ னாதல்: பிறவாகிய அழகெல்லாம் அழகெனப்படா. இது தாழ்த்துக் கூறவேண்டு மென்பதும் அதனாலாம் பயனுங் கூறிற்று. | பணிவு உடையவனாகவும், இனிதாகச் சொல்பவனாகவும் ஆகுதல், ஒருவனுக்கு அணிகலனாகும்; பிறவெல்லாம் அணிகலன்கள் ஆகா | பணிவும் இன்சொல்லுமே உயிரணிகள்: பிறவெல்லாம்உடலணிகள். | பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. | வணக்கம் உடையவனாகவும், இன்சொல் கூறுவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும். பிறவெல்லாம் உண்மையான அணிகலன்கள் ஆகாது. | ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் - ஒருவனுக்கு அணியாவன அடக்கமுடைமையும் இன்சொலுடைமையுமாம் ; பிற அல்ல - மற்ற பொன்னாலும் மணியாலும் செய்யப்பட்ட அணிகள் அணிகளாகா. பணிவுடைமை இன்முகத்தோடு கூடியதாகலின் இன்சொற்கு உடன் சேர்த்துக் கூறப்படும் இனமாயிற்று . பண்டைக்காலத்தில் ஆடவரும் காதிலும் கழுத்திலும் கையிலும் அணியணிவது பெருவழக்கமாதலின் , 'ஒருவற்கு' என ஆண்பாலாற் குறித்தது தலைமை பற்றியதாகும். அடக்கமுடைமையும் இன்சொலுடைமையும் இருபாற்கும் ஒப்பப் பொதுவேனும் , அணியுடைமை பெண்பாற்குப் போல் ஆண்பாற்குத் தேவையன்று என்பது குறிப்பான் அறியப்படும்.'மற்று' அசைநிலை. | பணிந்து நடத்தலும், இன்சொல்லும் ஆகிய இரண்டும் ஒருவருக்கு அணிகலன்களாகும். மற்றவை அணிகலன்கள் ஆகா. | வணக்கமுடையவனுமாய் இனிய சொல்லினையும் உடையனாதல் ஓருவர்க்கு அணியாகும்; மற்றுள்ள பிறவெல்லாம் அணி ஆகா என்பது இக்குறட்கருத்து. | இனியவைகூறலையும் பணிவுடனே செய்க. | பணிவுடையனாதலும் இனிய சொல்லை இயம்புதலும் ஒருவர்க்கு அணியாகும்; மற்றுள்ள பிறவெல்லாம் அல்ல | ||||||||
97 | இனியவை கூறல் | 96 | அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் | அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் | அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். | அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் | அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். | His sins vanish, his virtues grow Whose fruitful words with sweetness flow. | Who seeks out good, words from his lips of sweetness flow; In him the power of vice declines, and virtues grow. | If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase. | If a man seeks to do good while speaking sweet words, his virtues will wax and his vices will wane. | தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும். | பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும். | பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும். | நற்செயல் நோக்கி இன் சொல் கூறுபவனுக்கு அறம் பெருகும், மறம் தேயும். | நல்லவை நாடி இனிய சொலின் - பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். (தேய்தல் : தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.). | நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும். | நன்மையானவைகளையே விரும்பி, இனிய சொற்களையும், சொல்லி வந்தால், அதனால் பாவங்கள் தேய்ந்து போக, அறம் வளர்ந்து பெருகும் | நல்லவற்றைக் கண்டு இனிமையாகக் கூறின் தீமை தேயும் :அறம் வளரும். | அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். | ஒருவன் தனக்கும் பிறர்க்கும் நன்மை தரும் சொற்களை ஆராய்ந்து இனிமையாக பேச வல்லவனாயின் அவனுக்குப் பாவங்கள் நீங்கப் புண்ணியம் பெருகும். | நல்லவை நாடி இனிய சொலின் - விளைவாற் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை ஆராய்ந்தறிந்து அவற்றைச் செவிக்கினிதாக ஒருவன் சொல்வானாயின் ; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குத் தீவினைப் பயன் குன்ற நல்வினைப் பயன் வளரும் . அறம் நல்வினை ; இங்கு அதன் பயனைக் குறித்தது . அறமல்லாதவை தீவினைகள் . தீவினைகள் தேய்தலாவது தீவினைப் பயன் குன்றல் . நல்வினையும் தீவினையும் ஒளியும் இருளும் போல மறுதலைப் பொருள்களாதலின் , ஒளியின் முன் இருள் கெடுதல் போல நல்வினைப் பயன் முன் தீவினைப் பயன் கெடுமென்றார் . நல்லவற்றைச் சொன்னாலும் அறமாகுமேனும் , அவற்றைக் கடுமையாகச் சொல்லின் கேட்பார் மனம் வருந்தி அவ்வறங் கெடுதலால் , நல்லவற்றையும் இனிதாகச் சொன்னாலன்றி அறமாகாதென்றார் . இதனால் இன்சொல்லின் அறத்தன்மை வலியுறுத்தப் பெற்றது . | பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை ஆராய்ந்தறிந்து இனிமையானவற்றைச் சொல்லுவானானால், அவனுக்குத் தீமைகள் தேய்ந்து அறம் மிகுந்து வளரும். | நன்மை தரும் சொற்களைக் கண்டு ஒருவன் இனிமையாகப் பேசுவானாயின் தீமை தருவன குறைய அறம் வளரும் என்பது இக்குறட்கருத்து. | நல்ல நோக்கத்துடன் இனியவைகூறல் அறமாம். | நல்லவற்றைக் கண்டு இனிமையாகக் கூறினால் தீயவை தேய அறம் வளரும். | ||||||||
98 | இனியவை கூறல் | 97 | நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் | நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் | நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். | நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று பண்பின் தலைப்பிரிய சொல் | நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். | The fruitful courteous kindly words Lead to goodness and graceful deeds. | The words of sterling sense, to rule of right that strict adhere, To virtuous action prompting, blessings yeild in every sphere. | That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world). | Words yield spiritual rewards and moral excellence when they do not wander far from usefulness and agreeableness. | நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும்உண்டாக்கக் கூடியவைகளாகும். | பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும். | பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும். | நன்மை பயப்பதாய் பண்பின் நீங்காச் சொல் தெய்வீக அருளும் தலைசிறந்த அறநிலையும் தரும். | நயன் ஈன்று நன்றி பயக்கும் - ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல். (நீதி: உலகத்தோடு பொருந்துதல். 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.). | பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும் பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல். | பிறர்க்கு நல்ல பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து ஒரு சிறிதும் விலகாத சொற்கள், சொல்வானுக்கும், நன்மை தந்து உபகாரம் செய்யும் | பிறர்க்கு நற்பயன் தரும் உயர் பண்புச்சொல் தனக்கும் நயமும்நலமும் தரும். | நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். | பிறர்க்கு நல்ல பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து ஒரு சிறிதும் விலகாத சொற்கள், சொல்பவனுக்கு இன்பமும் தந்து நன்மையும் பயக்கும். | பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - விளைவாற் பிறர்க்கு நன்மை செய்து இனிமைப் பண்பினின்றும் நீங்காத சொல் ; நயன் ஈன்று நன்றி பயக்கும் - இம்மைக்கு நேர்ப்பாட்டை ( நீதியை ) உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் விளைவிக்கும் . நேர்பாடு என்பது நீதி என்னும் வடசொற்கு நேர்த்தென்சொல் . நேர்மை என்பது நேர்பாட்டையுங் குறிக்கும் பல பொருளொரு சொல் . நேர்பாடு நேர்மையான ஒழுக்கம் . " கோணே நேர்பாடாயிருந்தான் " ( பாரத . சூது .227 ) . ' பண்பு ' என்பது இங்கு அதிகாரத்தால் இனிமைப் பண்பைக் குறித்தது . தலைப்பிரிதல் என்பது தலைக்கூடுதல் என்பதற்கு எதிர் . | நற்பயனைக் கொடுத்து இனிமையான நற்பண்பிலிருந்து நீங்காத இன்சொற்கள் நீதியினையும் அறத்தினையும் கொடுக்கும். | இனிமைப் பயன் தரும் பண்பு நீங்காத சொல்லானது விரும்பப்படுதலை விளைத்து, நன்மைகள் பல உண்டாக்கும் என்பது இக்குறட்கருத்து. | இனியவைகூறல் மிக விரும்பப்படுவது; நன்மைகள் தருவது என்னும் பாடல். | இனிமைப் பயன் தரும் பண்பான சொல்லானது விரும்பப்படுதலை உண்டாக்கி நன்மைகள் விளைக்கும். | ||||||||
99 | இனியவை கூறல் | 98 | சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந் தரும் | சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் | சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இன்மையும் இன்பம் தரும். | சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் | சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். | Kind words free from meanness delight This life on earth and life the next. | Sweet kindly words, from meanness free, delight of heart, In world to come and in this world impart. | Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next. | Sweet speech that is a stranger to pettiness imparts pleasure not only in this life, but in the next. | சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும். | பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும். | பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும். | அற்பகுணம் சிறிதும் சாரா இனிய சொற்கள் இப்பிறவியில் மட்டுமன்றி மறுபிறவியிலும் இன்பம் தரும். | சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.). | புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள் இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும். | சிறுமையான எண்ணங்களில்லாத இனிய சொற்கள், மறுமையிலும் இம்மையிலும் ஒருவனுக்கு இன்பத்தைத் தரும் | சிறுதன்மை இல்லாத இன்சொல் எப்பிறப்பிலும் இன்பம் தரும். | சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். | துன்பத்தைத் தரும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமையிலும் இம்மையிலும் சொல்பவனுக்கு இன்பத்தைத் தரும். | சிறுமையுள் நீங்கிய இன்சொல் - விளைவாலும் பொருளாலும் குரலாலும் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல் ; இம்மையும் மறுமையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையிலும் இன்பம் விளைவிக்கும் . இம்மை இன்பமாவது ஐம்புல நுகர்ச்சி பெற்று நோயற்ற நீடு வாழ்வு . மறுமையின்பமாவது விண்ணுலக வாழ்வு அல்லது மண்ணுலக நற்பதவி . இன்சொல் என்பது இன்செயலையுந் தழுவும் . | பிறர்க்குத் துன்பம் செய்யாத இனிய சொற்கள் மறுமையிலும் இம்மையிலும் இன்பத்தினைக் கொடுப்பதாகும். | சிறுதன்மை இல்லாத இன்சொல் மறுபிறப்பிலும் இப்பிறப்பிலும் இன்பம் தரும் என்பது இக்குறட்கருத்து. | யாருக்கும் மனவருத்தம் தராத இனியவைகூறல் என்றும் இன்பம் தரும். | சிறுதன்மை இல்லாத இன்சொல் மறுமையிலும் இம்மையிலும் இன்பம் தரும். | ||||||||
100 | இனியவை கூறல் | 99 | இன் சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது | இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ வன் சொல் வழங்குவது | இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. | இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ வன் சொல் வழங்குவது | இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. | Who sees the sweets of sweetness here To use harsh words how can he dare? | Who sees the pleasure kindly speech affords, Why makes he use of harsh, repellant words? | Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ? | Why would anyone speak cruel words, having observed the happiness that kind words confer? | இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? | பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?. | இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?. | இன்சொல் இனிமை பயப்பது கண்டும் ஒருவன் கடும் சொல் வழங்குவது ஏனோ? | இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல் - அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி? ('இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.). | இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொலாதலானே அருளொடு பொருந்திக் குற்றமிலவாம். இஃது ஒருவனைக் கடிந்து சொல்லவேண்டு மிடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டுமென்றது. | இனிய சொற்கள் தனக்கு மிகுந்த இன்பத்தைத் தருவதனைக் காண்பவன், வன்சொற்களை வழங்குவது எந்தக் காரணத்தாலோ? | இன்சொல் தனக்கு நலந்தருவதைக் கண்டவன் ஏன் பிறரிடம்கடுஞ்சொற் கூறுகிறான்? | இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது? | இனிய சொல் இன்பம் உண்டாக்குவதை அறிந்தவன் கடுஞ்சொற்களைச் சொல்வது என்ன பயன் கருதியோ தெரிவில்லையே | இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பந் தருதலை நுகர்ந்தறிகின்றவன் ; வன்சொல் வழங்குவது எவனோ - தான் மட்டும் பிறரிடத்தில் வன் சொல்லை ஆள்வது என்ன பயன்கருதியோ ! ' கொல் ' அசைநிலை . ' ஒ ' இரக்கப் பொருளது . " தன்னுயிர் போல் மன்னுயிரை நினைக்க வேண்டும் . " என்பது , இங்கு வற்புறுத்தப் பட்டது . | பிறர் கூறும் இனிய சொற்கள் தனக்கு இன்பத்தினைத் தரும் என்பதைக் கண்ட ஒருவன், பிறரிடம் கடுஞ்சொற்களைச் சொல்லுவது என்ன பயன் கருதி?. | இன்சொற்கள் இன்பம் உண்டாக்குவதை துய்த்து உணர்பவன் கடுஞ்சொற்களைப் பேசுவது எதனாலோ? என்பது இக்குறட்கருத்து. | இனியவை கூறலால் இன்பம் துய்ப்பவன் தானும் இனிய சொல் அல்லவா கூறவேண்டும்! | இனிய சொற்கள் இன்பம் தருதலை உணர்பவன் கடுஞ் சொற்கள வழங்குவது ஏன்? |