பதினெண்கீழ்க்கணக்கு-
1.திருக்குறள் 2.நாலடியார் 3.நான்மணிக்கடிகை
4.இன்னா நாற்பது 5. இனியவை நாற்பது 6.திரிகடுகம்
7.ஆசாரக்கோவை 8.பழமொழி 9.சிறுபஞ்சமூலம்
10.ஏலாதி 11.முதுமொழிக்காஞ்சி 12.ஐந்திணை ஐம்பது
13.திணைமொழி ஐம்பது 14.ஐந்திணை எழுபது
15.திணைமாலை நூற்றைம்பது 16.கைந்நிலை
17.கார்நாற்பது 18.களவழிநாற்பது.
வெண்பா
“ நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்
பால் கடுகம் கோவை பழமொழி – மாமூலம்
இந்நிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு”
ஐந்து சிறிய வேர்கள்
1.
1.கண்டங்கத்தரி
2.சிறுவழுதுணை
3.சிறுமல்லி
4.பெருமல்லி
5.நெருஞ்சி
பெருமல்லி
கண்டங்கத்திரி
நெருஞ்சி
சிறுவழுதுணை
இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது. அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கிநல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.
காரியாசான்
சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்
மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.
காரி என்பது இயற்பெயர்.
ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த
பெயர்.
மீக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.
நுழையும் முன்
யார் இவர்கள் தெரியுமா?
சாதனைக்கு வயது தடையன்று
கலீலியோ –அடுத்து ....?
10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார்.
11 ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி”பாரதி” என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார்.
15 ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் விக்டர் ஹியூகோ.
16 ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப்படையில் தளபதியானவர் மாவீரன் அலெக்ஸாண்டர்.
17 ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் அறிவியலாளர் கலீலியோ.
சிறுபஞ்சமூலம்
அறிவுடையார் தாமே உணர்வர்
“ பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு.
- காரியாசான்.
பாடலின் பொருள்
பாடலின் பொருள்
எடுத்துக்காட்டு உவமையணி
எடுத்துக்காட்டு உவமையணி
உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் அமைந்து உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி ஆகும்.
சொல்லும் பொருளும்
1.மூவாது – முதுமை அடையாமல்
2.நாறுவ -- முளைப்பு
3.தாவா -- கெடாதிருத்தல்.
இலக்கணக்குறிப்பு
1.அறிவார்,வல்லார் – வினையாலணையும் பெயர்கள்
2.விதையாமை,உரையாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்கள்.
பகுபத உறுப்பிலக்கணம்
உரையாமை= உரை + ய் +ஆ +மை
உரை – பகுதி
ய் – சந்தி
ஆ– எதிர்மறை இடைநிலை
மை – தொழிற்பெயர் விகுதி
காய்க்கும் = காய் + க் + க் + உம்
காய்– பகுதி
க் – சந்தி
க் --- எதிர்கால இடைநிலை
உம் – பெயரெச்ச விகுதி
வினாக்கள்
வினாக்கள்
நன்றி� வணக்கம்
ஆக்கம்
ஞா.கலியமூர்த்தி M.A. B.Ed.M.Phil.
தமிழ்த்துறைத்தலைவர்,
ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி , பெண்ணாடம்.
திட்டக்குடி (வட்டம்),கடலூர் மாவட்டம்.