இணைய வழிப் பயிற்சி
எண்ணும் எழுத்தும் �2024 - 2025�கணக்கு
வகுப்புகள்: 1, 2 & 3�பருவம் - 2
நாம் காண இருப்பவை…
முழுமையான வளர்ச்சியை நோக்கி…
முழுமையான வளர்ச்சியை நோக்கி…
திட்டமிடல் (THB & WB)
முறையான பயிற்சி (Classroom Learning & Practice)
முழுமையான வளர்ச்சி
உருவாக்கப்பட்டுள்ள THB மற்றும் WB ஆகியவற்றை
சரியான முறையில் வகுப்பறையில் பயன்படுத்தி கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள திட்டமிடுதல்.
கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள்
கணக்கு - ஆசிரியர் கையேடு 2024-25 பருவம் -2
கணக்கு ஆசிரியர் கையேட்டில் என்னென்ன இடம்பெற்றுள்ளன?
அறிவியல், சமூகவியல் செயல்பாடுகள்
பொருளடக்கம்
ஒரு கட்டகத்தில் என்னென்ன இடம்பெற்று இருக்கும்?
நாம் புதிய பாடப்பகுதியை அறிமுகப்படுத்தும் பொழுது அந்தப் பாடப்பகுதி சார்ந்த ஆர்வத்தைத் தூண்டுவதற்காகவும் அப்பாடப்பகுதி வாழ்க்கையுடன் எவ்வாறெல்லாம் தொடர்புகொண்டுள்ளது என்பதை கூறும் பகுதியே நுழையும் முன் ஆகும்.
ஆசிரியர் ஒரு கணித கருத்தினை நேரடியாக அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக ஒரு கணித செயல்பாட்டினை நிகழ்த்தி அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் வாயிலாக அதே கணிதக் கருத்தை மாணவர்கள் மனதில் இருந்து உருவாக்கச் செய்யும் பகுதியே கருத்துருவாக்க தருணம் ஆகும். கணிதக் கருத்தானது மாணவர்களின் மனதில் இருந்தே உதிக்கும் பொழுது அது அவர்களுடைய கருத்தாகிறது.
மாணவர்கள் கற்றுக்கொண்ட அல்லது ஏற்கெனவே அறிந்த ஒரு கணிதப் பாடப்பொருளைச் செய்து பார்த்து உறுதிப்படுத்தும் அல்லது வலுவூட்டும் பகுதியே கற்றலின் தருணம் பகுதியாகும்
இரண்டாம் பருவத்தில் உள்ள கற்றல் விளைவுகளை முழுமையாக அடையச் செய்ய நாம் எவ்வாறு திட்டமிடலாம்?
வகுப்பறைத் திட்டமிடல்
ஒவ்வொரு கட்டகத்தில் இறுதியிலும் கொடுக்கப்பட்டுள்ள இது நம் நேரம் செயல்பாட்டினை ஒவ்வொரு ஆசிரியரும் தமது வகுப்பறைச் சூழல் மற்றும் மாணவர்களின் தேவைக்கேற்ப திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். இது முழுக்க முழுக்க ஆசிரியர் – மாணவர்களுக்கான செயல்பாட்டுப் பகுதி ஆகும்.
ஆசிரியர் கையேடு - கட்டகம் 1 செயல்பாடு -2 இல் உள்ள இந்த செயல்பாட்டினை பல்வகுப்பு நிலை மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்கலாம்?
இதே போல ஒவ்வொரு செயல்பாட்டினையும் கற்பிக்கும் முன்னர் முன்கூட்டியே திட்டமிட்டு , அந்த செயல்பாட்டின் தேவை, எந்த நிலை மாணவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்? போன்றவற்றை கருத்தில் கொள்வது சிறப்பான அடைவினை மாணவர்களிடம் ஏற்படுத்தும்.
கட்டகம் 1 ஐக் கையாளும் போது மலர்நிலை மாணவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்?
கட்டகம் 1 ஆனது அரும்பு மற்றும் மொட்டு நிலை மாணவர்களுக்கானது.
மலர் நிலை மாணவர்களைப் பொருத்தமட்டில் இந்த பாடப்பகுதி முன்னரே அறிமுகப்படுத்தப்பட்ட பகுதியாகும்.
எனவே இப்பாடப்பகுதியை நடத்தும் பொழுது மலர்நிலை மாணவர்களுக்கு ஒவ்வொரு செயல்பாட்டின் குறிப்பிட்ட கற்றல் விளைவினை நினைவுபடுத்தி பயிற்சி நூல் செயல்பாடுகளை மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.
அரும்பு மற்றும் மலர் நிலை மாணவர்களுக்கு மட்டுமே உரிய கட்டகம் 5 ஐ நடத்தும் பொழுது மொட்டு நிலை மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும்?
கட்டகத்தின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பின் படி மொட்டு நிலை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
மலர் நிலை மாணவர்களுக்கு மட்டுமே உரிய கட்டகம் 6 ஐ நடத்தும் பொழுது அரும்பு மற்றும் மொட்டுநிலை மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும்?
பயிற்சி நூல்
பயிற்சி நூல் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?
அறிவியல், சமூகவியல் செயல்பாடுகள்
பாடல்கள்
என்னென்ன மதிப்பீடுகள் உள்ளன?
நன்றி