1 of 37

குடிமையியல் பாடம் 1 இந்திய அரசியலமைப்பு

  • சிறுவினாக்கள்

2 of 37

அரசியலமைப்பு என்றால் என்ன?

  • ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக்
  • கொள்கைகளைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு எனப்படும். இது ஒரு நாட்டு முன்னேற்றத்தின் அச்சாணி போன்றது

3 of 37

குடியுரிமை என்பதன் பொருள் என்ன?

  • சிட்டிசன் எனும் சொல் சிவிஸ் என்னும் லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது
  • இதன் பொருள் ஒரு நகர அரசில் வசிப்பவர் என்பதைக் குறிக்கும்.
  • ஒரு நாட்டின் நகர அரசில் வாழ்வதற்கான உரிமை குடியுரிமை எனப்படும்.

4 of 37

இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக

  1. சமத்துவ உரிமை
  2. சுதந்திர உரிமை
  3. சுரண்டலுக்கு எதிரான உரிமை
  4. சமய சார்பு உரிமை
  5. கல்வி, கலாச்சார உரிமை
  6. அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணும் உரிமை

5 of 37

நீதிப்பேராணை (Writ)என்றால் என்ன?

  • நீதிப்பேராணை
  • நீதிமன்ற முத்திரையுடன் நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும். நீதிமன்றம் சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய வெளியிடப்படும் ஆவணமாகும்

6 of 37

தேசிய அவசர நிலை என்றால் என்ன?

  • போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு ஆயுதமேந்திய கிளர்ச்சி உடனடி ஆபத்து ஏற்பட்டால் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 352 கீழ் அவசர நிலையை அறிவிக்கலாம்.
  • வெளிப்புற அவசரநிலை :
  • வெளிநாட்டு ஆக்கிரமிப்பின் போது
  • உள்நாட்டு அவசர நிலை:
  • ஆயுதமேந்திய கிளர்ச்சிகள் நடக்கும்போது

7 of 37

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மூன்று தலைப்புகளில் பட்டியலிடுக

  • சட்டமன்ற உறவுகள
  • நிர்வாக உறவுகள்
  • நிதி சார்ந்த உறவுகள்

8 of 37

  • பாடம்-2 நடுவண் அரசு

9 of 37

இந்திய குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

  • குடியரசுத்தலைவர் ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாசார பிரதிநிதித்துவத்தின்படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • வாக்களர் குழுமம் என்பது மக்களவை உறுப்பினர்கள்,மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கியது

10 of 37

இந்தியாவில் செம்மொழிகள் எவை?

  • 6 மொழிகள் செம்மொழிகள் தகுதியைப் பெற்றுள்ளன
  • தமிழ் 2004
  • சமஸ்கிருதம் 2005
  • தெலுங்கு 2008
  • கன்னடம் 2008
  • மலையாளம் 2013
  • ஒடியா 2014

11 of 37

நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகள் இன் படி இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?

  1. காபினெட் அல்லது ஆட்சிக்குழு அமைச்சர்கள்
  2. இராஜாங்க அமைச்சர்கள்
  3. இணை அமைச்சர்கள்

12 of 37

உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?

  • இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • உயர்நீதிமன்ற நீதிபதியாக 5 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும்.
  • உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள்வழக்கறிஞராகப் பணியாற்றி இருக்க வேண்டும் .
  • குடியரசுத்தலைவர் பார்வையில் சிறப்புமிக்க சட்ட வல்லுநராக இருத்தல் வேண்டும்.

13 of 37

நிதி மசோதா குறிப்பு வரைக

  • அரசின் திட்டங்கள் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் வருமான வரியில் மாற்றங்கள் – புதிய திட்ட ஒதுக்கீடுகள் –புதிய அறிவிப்புகள் கொண்டு வருவதற்கான மசோதா நிதி மசோதா எனப்படும் .
  • நிதி மசோதாவில் திருத்தம் செய்யவோ அல்லது நிராகரிக்கவோ மாநிலங்களவைக்கு அதிகாரம் இல்லை.
  • மக்களவையில் மட்டுமே நிதி மசோதாவினை அறிமுகப்படுத்த முடியும்.
  • இம் மசோதா மாநிலங்களவையில் ஒப்புதலுடன் சட்டமாக மாறும். 14 நாட்களுக்குள் மக்களவை ஒப்புதல் அளிக்கவில்லை எனில் ஒப்புதல் பெறாமலே சட்டம் ஆகிவிடும்.

14 of 37

இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் இன் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினை பட்டியலிடுக

  • இந்திய அரசிற்கு சட்ட விவகாரங்கள் மீது ஆலோசனை வழங்குபவர்.
  • இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை உள்ளவர்.
  • நாடாளுமன்ற இரு அவைகளிலும் பேசுவதற்கும் பங்கேற்பதற்கும் உரிமை உள்ளவர்

15 of 37

  • பாடம்-3 மாநில அரசு

16 of 37

மாநில ஆளுநரின் முக்கியத்துவம் யாது?

  • மாநில நிர்வாகத்தின் அரசியல் அமைப்புத் தலைவர் ஆளுநர் ஆவார்
  • மாநில ஆளுநரின் பெயரில் மாநில நிர்வாகம் செயல்படுகிறது.
  • பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருக்கிறார்.
  • ஆனால் நிர்வாக சூழலின் காரணமாக ஒரு மாநிலத்தின் ஆளுநர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராகவும் நியமிக்கப்படலாம்

17 of 37

ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன?

  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
  • நாடாளுமன்ற உறுப்பினராக இருத்தல் கூடாது.
  • சட்டமன்ற உறுப்பினராக இருத்தல் கூடாது .
  • லாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது

18 of 37

உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதி வரையறை அதிகாரங்கள் யாவை?

  • சென்னை மும்பை கொல்கத்தா நீதிமன்றங்களில் தங்களுக்கான அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன.
  • மற்ற நீதிமன்றங்கள் பெரும்பாலும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களை மட்டுமே பெற்றுள்ளன.
  • முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் ,உயில், திருமணம் சார்ந்த வழக்குகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சார்ந்தவைகள் மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களைப் பெற்றுள்ளன.

19 of 37

உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீவிர் புரிந்து கொண்டது என்ன?

  • தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளை உயர் நீதிமன்றங்களில் இருந்து வரும் மேல்முறையீட்டு வழக்குகளில் விசாரிக்கின்றன.
  • நாட்டின் ராணுவ தீர்ப்பாயங்களின் கீழ் வரும் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இவைகளுக்கு அதிகாரம் இல்லை

20 of 37

  • பாடம்-4
  • வெளியுறவுக் கொள்கை

21 of 37

வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன?

  • ஒரு நாடு தனது வெளியுறவு விவகாரங்களின் மூலம் தனது தேசிய நலன்களைப் பாதுகாத்து மேம்படுத்துதல்.
  • இரு தரப்பு மற்றும் பல தரப்பு உறவுகளை பேணவும் வடிவமைக்கப்பட்ட கொள்கையை வெளியுறவுக் கொள்கை எனப்படும்

22 of 37

இந்தியாவின் அணுசக்திக் கொள்கையை விவரி

  • இந்தியா எப்போதும் படைவலிமை குறைப்பை வலியுறுத்தி வருகிறது
  • 1974 மற்றும் 1998 அணுசக்தி சோதனைகள் போர் திறமை சார்ந்த நடவடிக்கைகளுக்காகவே செய்யப்பட்டவையாகும்.
  • இந்தியாவின் அணு கொள்கையின் இரண்டு மையக் கருத்துக்கள்:
  • முதலில் பயன்படுத்துவதில்லை குறைந்தபட்ச நம்பகமான தற்காப்புத் திறன்
  • அணு ஆயுதத்தை போர் தாக்குதலுக்குப் பயன்படுத்துவதில்லை என்பதோடு ஒரு அணு ஆயுதமற்ற நாட்டிற்கு எதிராக பயன்படுத்துவதில்லை என இந்தியா தீர்மானித்துள்ளது

23 of 37

வேறுபடுத்துக : உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளிநாட்டு கொள்கை

உள்நாட்டுக் கொள்கை

  • உள்நாட்டு கொள்கை என்பது ஒரு நாடு தனது நாட்டிற்கு உள்ளான விவகாரங்கள் தொடர்பாகக் கொண்டுள்ள கொள்கையாகும்.
  • இது உள் விவகாரங்கள் ,சமூக நலம், சுகாதாரம், கல்வி, குடிமையியல் உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் சமூக பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சட்டங்களை உள்ளடக்கியது.

வெளிநாட்டுக் கொள்கை

  • வெளிநாட்டுக் கொள்கை என்பது ஒரு நாடு பிற நாடுகளுடன் கொண்டுள்ள விவகாரங்கள் தொடர்பானதாகும்.
  • வணிகம் ,அரச தந்திரம் ,தடுப்பு நடவடிக்கைகள் ,பாதுகாப்பு ,உளவுத்துறை மற்றும் உலகளாவிய சூழல் ஆகிய வகைகளைக் கொண்டது வெளியுறவுக்கொள்கை

24 of 37

பஞ்சசீலக் கொள்கைகளில் ஏதேனும் நான்கினைப் பட்டியலிடுக

  • ஒவ்வொரு நாட்டின் எல்லையையும் இறையாண்மையையும் மதித்தல்.
  • பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை.
  • பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்
  • அமைதியாக சேர்ந்து இருத்தல்

25 of 37

இந்திய அணி சேரா கொள்கையை தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் என்ன?

  • நீண்ட காலமாக காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளில் பொருளாதார மேம்பாடு தொடர்பாக கடுமையான சூழலை எதிர்கொண்டன.
  • அப்போது சோவியத் யூனியன் (ரஷ்யா)-அமெரிக்க ஐக்கிய நாடுகள்என இரு முகாம்கள் பிரிந்தன.
  • இவை ஆப்பிரிக்கா ,ஆசிய நாடுகள் மீது தங்களது செல்வாக்கை ,செலுத்துவதை
  • நேரு எதிர்த்தார்.
  • ஆகவே புதிதாக அணிசேரா இயக்கம் என்ற கொள்கையை இந்தியா தேர்ந்தெடுத்தது.

26 of 37

சார்க் உறுப்பு நாடுகளப் பட்டியலிடுக

  • ஆப்கானிஸ்தான்
  • பாகிஸ்தான்
  • இந்தியா
  • நேபாளம்
  • பூட்டான்
  • வங்காளதேசம்
  • இலங்கை
  • மாலத்தீவுகள்

27 of 37

அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?

  • இந்தியாவின் - ஜவகர்லால் நேரு
  • யூகோஸ்லேவியா - டிட்டோ
  • எகிப்தின் - நாசர்
  • இந்தோனேசியாவின் - சுகர்னோ
  • கானாவின் - குவாமே நிக்ருமா

28 of 37

வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களை குறிப்பிடுக

  • உடன்படிக்கைகள்
  • தூதுவர்களை நியமித்தல்
  • சர்வதேச வணிகம்
  • நிர்வாக ஒப்பந்தங்கள்
  • வெளிநாட்டு உதவி
  • ஆயுதப்படைகள்

29 of 37

  • பாடம் 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

30 of 37

இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக

  • வடமேற்கில் - பாகிஸ்தான் மற்றும்
  • ஆப்கானிஸ்தான்
  • வடக்கில் - சீனா, நேபாளம், பூட்டான்
  • கிழக்கில் - வங்காள தேசம்
  • தூர கிழக்கில் -மியான்மர்
  • தென் கிழக்கில் - இலங்கை
  • தென்மேற்கில் -மாலத்தீவு

31 of 37

போர் திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (SPA)பற்றிய சிறுகுறிப்பு வரைக

  • இந்தியா ஆப்கானிஸ்தான் உறவு போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் மூலம் வலிமை பெற்றுள்ளது.
  • இந்த ஒப்பந்தம் ஆப்கானிஸ்தானில் உட்கட்டமைப்பை மறு சீரமைத்தல்,வேளாண்மை, நீர் ,கல்வி , சுகாதாரம், வரியில்லா சந்தை வசதி போன்ற துறைகளில் ஒத்துழைப்பு அளிக்கின்றது.

32 of 37

பிரிக்ஸ்(BRICS )உறுப்பு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக

  • பிரேசில்
  • ரஷ்யா
  • இந்தியா
  • சீனா
  • தென் ஆப்பிரிக்கா

33 of 37

கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவீர் அறிவது என்ன?

  • நம் இந்தியாவின் கொல்கத்தாவில் மியான்மரில் உள்ள சிட்வேயுடன் இணைப்பதற்காக கொண்டுவரப்பட்டது.
  • சாலை, நதி, துறைமுகம் ,சரக்கு போக்குவரத்து, போன்ற பன்முக மாதிரி திட்டத்தை இந்தியா உருவாக்கியது
  • தென் கடலில் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்காக கொல்கத்தா நகரை ஹோசிமின் உடன் இணைக்கும் நோக்கம் கொண்ட ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது

34 of 37

சபஹர் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக

  • இந்தியா ,ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட முக்கூட்டு ஒப்பந்தமே சபஹார் ஒப்பந்தமாகும்.
  • மூன்று நாடுகளிலும் போக்குவரத்து வழித்தடங்கள் ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் ஆசிய மற்றும் ஆப்கானிஸ்தான் சந்தைகளை அணுக இந்தியா ஒரு நுழைவு வாயிலாக இருக்கும்.

35 of 37

இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் ஐந்து உலகளாவிய குழுக்களைப் பட்டியலிடுக

  • பிரிக்ஸ்
  • ஐநாசபை
  • ஒபேக் ( OPEC)
  • சார்க்
  • ஜி-20

36 of 37

ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனத்தின் (JIM) பங்கு என்ன?

  • உற்பத்தித்துறையில் உற்பத்தி மற்றும் திறன் இந்தியா திட்டங்களில் பங்களிக்கவும் ஜப்பானிய உற்பத்தி திறன்களை வழங்கி இந்தியாவின் உற்பத்தி தொழில்துறை தரத்தை மேம்படுத்தவும் 30000 இந்திய மக்களுக்குப் பயிற்சி வழங்க ஜப்பான்- இந்தியா உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
  • 2017 ஆம் ஆண்டு குஜராத், கர்நாடகம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் ஜப்பான்_ இந்தியா (JIM)உற்பத்தி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது

37 of 37

சிலைடு தயாரிப்பு:

சி.ராமராஜ் M.A.,B.ed.,TTC .,

ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா

சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி, பெரியநாயக்கன்பாளையம்.

கோவை - 20