Jc.V.KARUNAKARAN
NATIONAL TRAINER IN SOFT SKILLS
HEAD MASTER
GOVT. HR. SEC. SCHOOL,
ALATHUR - 614 901
Cell : 9751549872 / 9865063458
WELCOME
நகர்புற உள்ளாட்சி தேர்தல்
வாக்குச் சாவடி தலைமை அலுவலருக்கான கடமைகள்
1.வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு தேர்தல் நடத்துதல் மற்றும் அதற்கான விதிமுறைகளை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்
2. வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள், பலவகையான பட்டன்கள் மற்றும் மின்சக்தி இயக்கக் கருவிகள் (SWITCH) பயன்பாடுகளை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்
3. வாக்குச்சாவடி தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டவுடன் குழுவில் உள்ள அனைத்து அலுவலர்களுடன் அறிமுகம் செய்துகொண்டு தொடர்ந்து தொடர்பு கொள்ளல் வேண்டும்
4. தேர்தல் நடத்தும் அலுவலரது அனைத்து அறிவுரைகளையும் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்
5. வாக்குச் சாவடி அமைந்துள்ள இடம், அங்கு சென்று திரும்பி வருவதற்குரிய பயண வழித்தடம் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்
6. அனைத்து ஒத்திகை மற்றும் பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்
7. தேர்தல் நடத்துவதற்குரிய அனைத்து பொருட்களையும் சரிபார்த்து பெற்று வைத்துக்கொள்ள வேண்டும்
8.வாக்குச் சாவடியின் அமைப்பை செயல் படுத்துதல்
அ) வாக்களிப்பதில் ரகசியம் காத்தல்
ஆ) வாக்காளர்களின் வரிசையை ஒழுங்கமைத்தல்
இ) வெளிப்புற தலையீடு இல்லாமல் வாக்குப் பதிவு செயல் முறை அமைத்தல்
9. வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன் முகவர்களிடம் EVM –ன் நம்பகத்தன்மையை உறுதி செய்தல், மாதிரி வாக்குப் பதிவு நடத்தி உண்மைத் தன்மையை விளக்குதல்
10. EVM-ல், கட்டுப்பாட்டுக் கருவியில் (CONTROL UNIT) தாள் முத்திரை பொருத்துதல், ஒட்டுத்தாள் முத்திரை , சிறப்பு அட்டை பொருத்துதல் ஆகியன முடித்து மூடி முத்திரையிட்டு பாதுகாத்தல்
11. தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப் பட்டபடி சரியான நேரத்தில் வாக்குப்பதிவினை தொடங்குதல்
12. வாக்குப் பதிவு தொடங்கும் போது EVM செயல்முறை விளக்கம், வாக்காளர் பட்டியல், வாக்கா ளர் பதிவேடு குறித்து உரிய படிவத்தில் பூர்த்தி செய்து வருகை புரிந்துள்ள வேட்பாளர் அல்லது முகவரிடம் கையொப்பம் பெறவேண்டும்.
13. வாக்காளர் அடையாளம் குறித்து முதலாம் வாக்குப் பதிவு அலுவலர் முறையாக பரிசீலிக்க வேண்டும். அலுவல் சார்பற்ற (UNOFFICIAL) அடையாள சீட்டுக்களை ஏற்றுக்கொண்டு வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது.
14. ஒரு வாக்காளர் குறித்த பதிவினை வாக்காளர் பட்டியலில் அடையாளம் கண்டவுடன் அவரது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்க வேண்டும்
15. வாக்குச் சாவடியில் இருந்து வாக்காளர் வெளியேறும்போது அவரது இடது கை ஆட்காட்டி விரலில் வைக்கப்பட்ட மை காய்ந்துள்ளதையும், மை வைக்கப் பட்டமைக்கான அடையாளம் ஏற்பட்டுள்ளதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
16. வாக்காளர் அடியாளம் காணப்பட்டவுடன் குறியீட்டு வாக்காளர் பட்டியல் (MARKED COPY OF ELECTORAL ROLL) அடிக்கோடிட வேண்டும். மேலும் பெண்வாக்காளர் எனில் இடது புறம் ஒரு டிக் இடவேண்டும்.
17. குறியீட்டு வாக்காளர் பட்டியலில் (MARKED COPY OF ELECTORAL ROLL) உள்ளவாறு தொடர் எண் (பெயர் எழுதக்கூடாது) வாக்காளர் பதிவேடுகளில் –படிவம் 21 குறிக்கப்படல் வேண்டும்
18. வாக்களிக்க அனுமதிப்பதற்கு முன் வாக்காளரின் கையொப்பம் அல்லது இடது கை பெரு விரல் ரேகையினை வாக்காளர் பதிவேட்டில் (form-21, Register of electors) பெற வேண்டும். வாக்காளர் கையொப்பம் அல்லது இடது கை பெரு விரல் ரேகையினை வைக்க மறுத்தால் அவரை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது . அந்த இடத்தில் வாக்களிக்க மறுத்துவிட்டார் என எழுதி வாக்குச் சாவடி தலைமை அலுவலர் கையொப்பமிட வேண்டும்.
19. வாக்காளரின் கையொப்பம் அல்லது இடது கை பெரு விரல் ரேகையினை வாக்காளர் பதிவேட்டில் (form-21, Register of electors) பெற்றவுடன், வாக்காளர்பதிவேட்டில் உள்ள வரிசை எண், வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது தொடர் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வாக்காளர் துண்டு சீட்டு (voter slip)வழங்க வேண்டும் .
20. வாக்காளர்பதிவேட்டில் உள்ள வரிசை எண் அடிப்படையில் வழங்கப்பட்ட துண்டுச்சீட்டின் வரிசை எண் அடிப்படையில்தான் வாக்காளார்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.
21. அவ்வப்பொழுது நிகழும் நிகழ்வுகளை வாக்குச் சாவடி தலைமை அலுவலர் குறிப்பேட்டில் (PRESIDING OFFICER’S DIARY) பதிவு செய்திடல் வேண்டும்
22. உறுதியான மனநிலையுடனும், பாரபட்சமின்றியும் செயலாற்றி வாக்குச்சாவடியினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து வாக்குப்பதிவினை அமைதியாக நல்ல முறையில் நடத்திட வேண்டும்
23. வாக்குப் பதிவு எந்த காரணத்திற்காக தாமதமாக தொடங்கப்பட்டிருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வாக்குப் பதிவினை முடித்திடல் வேண்டும். வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் (5 மணிக்கு) வரும் வாக்காளர்களுக்கு இறுதியில் இருந்து துண்டுச்சீட்டில் டோக்கன் வழங்க வேண்டும்.
24.வாக்குப்பதிவு முடியும்போது பதிவான வாக்குகளின் எண்ணிக்கை குறித்த கணக்கை (Accounts of Recorded vote) படிவம்-23-ல் பகுதி-1-ல் தயார் செய்திடல் வேண்டும். மேற்படி கணக்கின் பிரதிகளை வாக்குச்சவடி முகவர்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டதற்கான உறுதிமொழியினை நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் வழங்க வேண்டும்
25. வாக்குப் பதிவு முடிவுற்றதும் வாக்குபதிவு இயந்திரம், தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்கள் முறைப்படி மூடி முத்திரையிடப்பட்டு பாதுகாக்க வேண்டும். வேட்பாளர் /முகவர் விரும்பினால் அவர்களது முத்திரையை வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஆவணங்களின் மீது வைக்க அனுமதிக்கலாம்.
26. வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் அனைத்து தேர்தல் ஆவணங்களையும் முறையாக மூடி முத்திரையிட்டு பாதுகாப்பாக சம்பந்தப்பட்ட அலுவலரிடம் உரிய சான்றின் பேரில் ஒப்படைத்திட வேண்டும்.
27. குழுவில் உள்ள ஓவ்வொருவரும் EVM இயக்க தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தாள் முத்திரை (paper seal), ஒட்டுத்தாள் முத்திரை(strip seal), சிறப்பு அட்டை(special tag), முகவரிச்சீட்டு(address tag) ஆகியன பொருத்தும்முறை ஆகியவற்றையும் குழுவில் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
வாக்குப் பதிவு இயந்திரம் சரிபார்த்தல்
1. கட்டுப்பாட்டு கருவி (control unit)மற்றும் வாக்குப்பதிவு கருவிகள் (balloting unit) உங்கள் வாக்குச்சாவடிக்கு உரியதுதான என சரிபார்த்து கொள்ளுங்கள்
2.கட்டுப்பாட்டுக் கருவியின் வேட்பாளர் அமைப்புப் பிரிவு (candidate set section) நன்கு முத்திரையிடப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
3.கட்டுப்பாட்டு கருவியில் முன்கலம்(battery) செயல்பாட்டில் உள்ளதா என்பதை ON செய்து சரிபார்த்து கொண்டு பின்னர் OFF செய்து வைக்க வேண்டும்
4.வாக்குப் பதிவு கருவிகளின் எண்ணிக்கை விவரம்
NO. OF BALLOTING UNITS
NO. OF CANDIDATES | NO. OF BALLOTING UNITS |
2-16 | 1 |
17-32 | 2 |
33-48 | 3 |
49-64 | 4 |
4.வாக்குப் பதிவு கருவியில் (BALLOTING UNITS) வேட்பாளர் எண்ணிக்கைக்கு கூடுதலாக உள்ள பொத்தான்கள் ம்றைக்கப் பட்டிருக்க வேண்டும்
5.வாக்குப்பதிவு கருவியில் 2 இடங்களில் முத்திரையிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் முகவரி அட்டை உறுதியாக இணைக்கப் பட்டிருக்க வேண்டும்.
வாக்குப்பதிவு பொருட்களை சரிபார்த்தல்
1. இரண்டு அழியா மை குப்பிகள் போதுமான அளவுடன் வழங்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவேண்டும்
2. வாக்காளர்ப் பட்டியல் அனைத்தும் ஒரேமாதிரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்
3. வாக்காளர்ப் பட்டியல் அனைத்தும் உங்கள் பகுதிக்கு உரியதுதானா, முழுமையாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள்
4. இணைப்பு பட்டியலில் சேர்க்கை, நீக்கம், திருத்தங்கள் சரியாக இருக்கின்றனவா எனபதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.
5. வாக்காளர்ப் பட்டியலில் வரிசை எண் விடுபடாமல் தொடர்ச்சியாக உள்ளதா எனபதை சரிபார்த்துகொள்ள வேண்டும்.
6.ஆய்விற்குரிய வாக்குச்சீட்டுக்களை (tendered ballot papers) வாங்கும்பொழுது உங்கள் வாக்குச்சாவடிக்கு உரியதுதானா? பழுது இல்லாமல் இருக்கிறதா? வரிசை எண்கள் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
7. வழங்கப்பட்டுள்ள EVM அல்லது வாக்குப்பதிவு பொருட்களில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது பழுது இருப்பின் உடனடியாக மண்டல அலுவலர் அல்லது தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரியப்படுத்தவேண்டும்.
8. வேட்பாளர் மற்றும் வாக்குசாவடி முகவர்களின் மாதிரி கையொப்பங்களை சரிபார்த்து பெற்றுக்கொண்டு முகவர் நியமனக் கடிதத்தில் உள்ள கையொப்பத்துடன் ஒப்பிட்டு சரிபார்த்து கொள்ள வேண்டும்.
8. வேட்பாளர் மற்றும் வாக்குசாவடி முகவர்களின் மாதிரி கையொப்பங்களை சரிபார்த்து பெற்றுக்கொண்டு முகவர் நியமனக் கடிதத்தில் உள்ள கையொப்பத்துடன் ஒப்பிட்டு சரிபார்த்து கொள்ள வேண்டும்.
வாக்குச்சாவடி அமைப்பு
1. வாக்குச்சாவடி இருக்கும் இடமறிந்து உங்கள் குழுவினருடன் தொடர்பு கொண்டு அனைவரும் சரியான நேரத்திற்கு சென்றடைய வேண்டும்.
2.
2. வாக்குச்சாவடி இருக்கும் இடமறிந்து உங்கள் குழுவினருடன் வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் நண்பகல் 12 மணிக்குள் அந்த இடத்தை சென்றடைய வேண்டும்.
3. வாக்குப்பதிவு அலுவலர் யாரேனும் பணிக்கு வராத நிலையில் அந்த விவரத்தை உடனடியாக மண்டல அலுவலருக்கு தெரிவித்து மாற்று அலுவலரை நியமனம் செய்ய முறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்
4.வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்ற அலுவலர்களுக்கு முறையாக பணிகளை பகிர்ந்தளிக்க வேண்டும். வாக்குச் சாவடியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் வாக்குச்சாவடியின் தலைமை அலுவலரே பொறுப்பு.
5. வாக்குச்சாவடியை தயார் செய்தல்
6.பர்தா அணிந்த பெண் வாக்களர்கள் வருப்பொது அவர்களை அடையாளம் காணுதல், அழியா மை வைத்தல் போன்ற பணிகளை கவன்முடன் மேற்கொள்ள வேண்டும்.
7. ஒரே கட்டடத்தில் நிறைய வாக்குச்சாவடிகள் இருப்பின் பிரித்து அறியும் வகையில் இடைவெளிவிட்டு தடுப்புகள் அமைத்து குழப்பமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
8. தலைவரின் படங்கள், தேர்தல் வாசகங்கள், சின்னங்கள் ஏதும் இல்லாமல் பதுகாத்துக் கொள்ள வேண்டும்.
9. தனியார் கட்டடத்தில் உங்கள் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருப்பின் கட்டட உரிமையாளர் அல்லது அவரது உறவினர் உள்ளே வராத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும்.
10. வாக்குச் சாவடிக்கு வெளியில் வாக்குச்சாவடிக்கு சம்பந்தப்பட்ட வார்டு, அதாவது எந்தப் பகுதி வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்ற விவர அறிவிப்பு வைக்க வேண்டும்.
11. போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரும் சின்னமும் அடங்கிய சுவரொட்டி ஒட்டி வைக்க வேண்டும்
12. வாக்குப்பதிவு அடைப்பு பகுதி (voting comportment) முறையாக அமைக்கப்படல் வேண்டும்.
வாக்குப்பதிவு அலுவலர்களின் பொறுப்புகள்
POLLING OFFICER – 1
அ) வாக்காளரை அடையாளம் காணல்
ஆ)குறியீட்டு வாக்காளர் பட்டியலில் குறியிடுதல்
இ)வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்தல்
ஈ) துண்டு சீட்டு வழங்குதல்
2. இரண்டாம் வாக்குப் பதிவு அலுவலர்
POLLING OFFICER – 2
ஆழியாத மை வைத்தல்
3. இரண்டாம் வாக்குப் பதிவு அலுவலர்
POLLING OFFICER – 3
அ) கட்டுப்பாட்டு கருவியை இயக்குதல்
ஆ) வாக்காளர் வாக்குப் பதிவு செய்ததை பீப் ஒலி கொண்டு உறுதி செய்தல்
வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் பல்வேறு வகையான பணிகள்
Jc.V.KARUNAKARAN
NATIONAL TRAINER IN SOFT SKILLS
HEAD MASTER
GOVT. HR. SEC. SCHOOL,
ALATHUR - 614 901
Cell : 9751549872 / 9865063458
THANK YOU