1 of 7

வர்த்திக்கப் பண்ணுவார் - (நாம்)

குறுகிப் போவதில்லை மகிமைப்படுத்துவார் - (நாம்)

சிறுமை அடைவதில்லை -2

2 of 7

தாங்குவார் உயர்த்துவார்

ஏந்துவார் நம்மை நடத்துவார்

3 of 7

அல்லேலூயா அன்பு தேவன்

அல்லேலூயா இயேசு இராஜன் -2

4 of 7

1. வாழ்விலே என்ன சோகமா

எதிர் காலத்தை குறித்த கலக்கமா

வாக்குத்தத்தங்கள் உன் வாழ்க்கையில்

பலிக்குமா என்ற தயக்கமா - 2

தயங்காதே உன்னை உயர்த்துவார்

கலங்காதே வழி காட்டுவார் -2 - அல்லேலூயா

5 of 7

2. பாவத்தின் பரிகாசத்தால் பரிசுத்ததில் போராட்டமா

எவ்வளவோ போராடியும் - ஜெப

வாழ்க்கையில் என்ன தோல்வியா - 2

சோராதே நன்மை செய்பவர்

திகையாதே ஜெயம் தந்திடுவார் -2 - அல்லேலூயா

6 of 7

3. கடன் பாரத்தால் என்ன கவலையா

குடும்ப சமாதானம் இன்றி வேதனையா

சத்துருவின் தொடர் அம்புகளால்- உன்

இதயத்தில் என்ன காயங்களா -2

சர்வ வல்லவர் இன்று உனக்குள்ளே

சத்துருவோ உன் காலின் கீழே -2 - அல்லேலூயா

7 of 7