1 of 20

தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பழக்கங்கள்�����

முனைவர் பால. சிவகடாட்சம் Ph.D. (London, UK)

2 of 20

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்

முரமுரென வேபுளித்த மோரும் - திறமுடனே

புல்வேளுர்ப் பூதன் புரிந்துவிருந் திட்டான்ஈ(து)

எல்லா வுலகும் பெறும்.

3 of 20

தவிடுநீக்காத முழுத்தானியங்களாக உவுக்குப் பயன்படும் வரகு, குரக்கன், தினை, சாமை, கம்பு போன்ற சிறுதானியங்கள் நெல்லரிசிச் சோற்றிலும் பார்க்க ஆரோக்கியமானவை. குறிப்பாக நீரிழிவு நோய் ஏற்படாமல் இவை தவிர்க்கின்றன.

பல்வேறு நாடுகளில் தண்ணீர்ப் பஞ்சம் காணப்படும் நிலையில் பயிர்ச்செய்கைக்குக் கூடுதலான நீர்த்தேவைப்படும் நெல் போன்ற பயிர்களுக்குப் பதிலாக குரக்கன் வரகு போன்ற சிறுதானியங்களைப் பயிரிட்டு உண்பதன் மூலம் பலரைப் பட்டினியில் இருந்தும் காப்பாற்றமுடியும்.

4 of 20

வரகு Proso millet (Panicum miliaceum)

5 of 20

கத்தரிக்காய்/ வழுதுணங்காய் � Brinjal (Solanum melongena)

Nasunin (antiogenic properties)

  • புற்றுக்கலங்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லப் புற்றுக்களால் இரத்தக் குழாய்கள் தோற்றுவிக்கப் படுகின்றன.

  • இத்தகைய குழாய்கள் உருவாவதைத் தடுக்கும் குணங்கள் (antiangiogenic properties) கத்தரிக்காய்க்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாகக் கத்தரிக்காயின் தோலில் உள்ள ‘நாசுனின்’ (nasunin) என்னும் ஒட்சியெதிர்ப்புப் பொருள் கத்தரிக்காயின் இந்தக்குணத்துக்குப் பிரதான காரணமாக உள்ளது.

கத்தரிக்காயும் நல்லெண்ணையும்

  • கத்தரிக்காயை எண்ணெயில் வதக்கிச் செய்யும் பிரட்டல்கறி சுவை மிகுந்தது. ஏனினும் கத்தரிக்காய் அவியலுடன் வெங்காயம் நல்லெண்ணை சேர்த்துச் சாப்பிடுவது நல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள். பருவமடைந்த சிறுமிக்குக் கத்தரிக்காயுடன் நல்லெண்ணை சேர்த்து சாப்பிட வைக்கும் எமது முன்னோரின் வழக்கத்தையும் இவ்விடத்தில் நினைவு கூருகின்றேன்.

6 of 20

Eggplant (Solanum melongena)கத்தரிக்காய் (வழுதுணங்காய்)

7 of 20

�வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரென வேபுளித்த மோரும்

  • மோர் தயிர் என்பவற்றில் Probiotic எனப்படும் ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் நிறைய உண்டு. எங்களது சமிபாட்டுத் தொகுதிக்குப் பாதுகாப்பும் ஆரோக்கியமும் வழங்குகின்றன இந்த உணவுகள்.

  • ஔவையாரின் பாடலை இப்போது மீளவும் பார்ப்போமானால் மலிவானதும் எளிதில் கிடைக்கக் கூடியதும் பாதுகாப்பானதாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருவதாகவும் இருக்கும் எமது பாரம்பரிய உணவுகளான வரகரிசி போன்ற சிறுதானியங்கள், கத்தரிக்காய் போன்ற குறைத்த செலவில் பெறப்படும் காய்கறிகள் மற்றும் மோர், தயிர் என்பவை இன்றைய காலகட்டத்துக்கும் ஏற்ற நல்லுணவுகள் என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

8 of 20

நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் சுவையூட்டிகளான மஞ்சள், மிளகு, உள்ளி, சீரகம், வெந்தயம், கொத்தமல்லி, இஞ்சி, புளி கறுவா, ஏலக்காய். சாதிக்காய், கராம்பு, என்பன எமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கின்றன என்பது இன்று விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உண்மை.

இவையனைத்துமே அளவறிந்து உண்ணவேண்டியவை. அளவுக்கு மிஞ்சினால் அவை விரும்பத்தகாத பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியன. இதனால்தான் கறிசமைக்கும்போது இவற்றை சிறிய அளவில் கறியில் சேர்த்துவிடுகின்றோம்.

9 of 20

 ����மஞ்சள் (Turmeric)

நாம் கறியில் சேர்த்துக் கொள்ளும் மஞ்சளின் முக்கியமான உள்ளடக்கம் குகுர்மின் (cucurmin) என்னும் இரசாயனப் பொருளாகும்.

இந்த இரசாயனம் அல்சைமர் என்னும் மறதி வியாதிக்கு மருந்தாக அறியப்பட்டுள்ளது.

மஞ்சளை மிளகுடன் சேர்த்து எடுக்கும்போது மஞ்சளின் பிரதான இரசாயனம் அகத்துறிஞ்சப்படுவது பல மடங்கு அதிகரிப்பதாக அறியப்பட்டுள்ளது.

10 of 20

 மிளகு (Black pepper)

மிளகின் பிரதான உள்ளடக்கமான பைபெரீன் (piperine) என்னும் இரசாயனம் நோயெதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கின்றது.

மிளகுக்குடிநீர் தடுமலுக்குச் சிறந்ததொரு மருந்தாகும்.

மிளகு வயிற்றில் உள்ள ஹைட்றோக்குளோரிக் அமிலத்தின் சுரப்பை ஊக்குவிப்பதன் மூலம் புரதச் சமிபாட்டுக்கு உதவுகின்றது.

இன்சுலின் சுரப்பை ஊக்குவிப்பதன் மூலம் சர்க்கரைவியாதிக்காரருக்கும் பயன் தரக்கூடியது.

11 of 20

நற்சீரகம் (Cumin) பெருஞ்சீரகம் (Fennel)

12 of 20

நற்சீரகமும் பெருஞ்சீரகமும்

  • சீரகம் (Cumin)

  • சீரகம் வயிற்றோட்டம், மற்றும் நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. கொழுப்பைக் குறைக்க உதவுகிறது, எடை இழப்புக்கு உதவுகிறது.

  • கர்ப்பமாக இருக்கும் அல்லது கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் சீரகம் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சீரகம் இரத்தம் உறைதலைக் குறைக்கிறது

  •  பெருஞ்சீரகம் (Fennel)
  • பெருஞ்சீரகத்தைத் தமிழ்நாட்டவர் சோம்பு என்கிறார்கள். பெருஞ்சீரகச் செடியின் அனைத்து பகுதிகளிலும் சக்தி வாய்ந்த ஒட்சியெதிரிகள் (antioxidants) நிறைந்துள்ளன.
  • இதன் உள்ளடக்கங்களான குளோரோஜெனிக் அமிலம், லிமோனீன் மற்றும் குர்செடின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவன. இதன் எஸ்ட்ரோஜெனிக் பண்புகள், மாதவிலக்கின்போது ஏற்படும் வலியின்போதும் மாதவிடாய் நின்றபின் ஏற்படும் அறிகுறிகளில் இருந்தும் நிவாரணம் பெற உதவுகின்றன.

13 of 20

Fennel Leaf

14 of 20

வெந்தயம் (Fenugreek)

வெந்தயம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக்குறைக்கும். இதிலுள்ள கலக்ரோமன்னன் என்னும் இரசாயனம் உணவில் உள்ள சீனி இரத்தத்துள் உறிஞ்சப்படுவதைக் குறைக்கின்றது. அளவுக்கு மீறிய வெந்தயம் இரத்தத்தில் உள்ள சீனியின் அளவை மிகவும் குறைத்துவிடும். நீரிழிவுக்கு மருந்து எடுப்போர் வெந்தயம் எடுப்பதற்குமுன் குடும்ப வைத்தியரிடம் இது பற்றிப்பேசவேண்டும்.

மாதவிலக்கின்போது ஏற்படக்கூடிய வலியைக் குறைக்கும் இரசாயனங்கள் வெந்தயத்தில் உள்ளன. கர்ப்பிணிப் பெண்கள் வெந்தயம் எடுத்துக்கொள்ளக் கூடாது. இது பிரசவவலியைத் தூண்டிவிடும்.

15 of 20

இஞ்சி (Ginger)

வாந்தியைக் குறைப்பதில் இஞ்சி பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாகக் கர்ப்பிணிப்பெண்களுக்கு ஏற்படும் வாந்தியைக் குறைப்பதற்கு இஞ்சி பெரிதும் உதவுகின்றது. இஞ்சி சமிபாட்டை ஊக்குவிக்கின்றது. வாத நோவுகளைக் குறைக்கவும் இஞ்சி பயன்படுகின்றது. இஞ்சியைப் பெரியவர்கள் தினமும் உட்கொள்ளலாம். ஆனால் குழந்தைகளுக்கு வயிற்றுவலியை ஏற்படுத்தக்கூடியது. எனவே குழந்தைகளால் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பெரியவர்கள் தினமும் காலையில் 1 தேக்கரண்டி துருவிய இஞ்சியை 50 மில்லி சுத்தமான எலுமிச்சைச் சாறுடன் சேர்த்துக் குடிப்பது நல்லது.

16 of 20

கொத்தமல்லி� Coriander

கொத்தமல்லியில் ஒட்சியெதிரிகள் (antioxidants) உள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் நாள்பட்ட நோய்களின் அபாயங்களைக் குறைக்கிறது. கொத்தமல்லி டெர்பினீன், குர்செடின் மற்றும் டோகோபெரோல் போன்ற தாவர இரசாயனங்களைக் கொண்டுள்ளது. அவை புற்றுநோய் எதிர்ப்பு, நரம்பியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன.

17 of 20

பழப்புளி Tamarind

புளி நல்ல இரைப்பை குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. புளியில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதில் உள்ள அதிக நார்ச்சத்து குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.

புளி வயிற்றுப் புண்களைத் தடுக்க உதவுகிறது. இதய சிக்கல்களின் அபாயத்தைக் புளி குறைக்க உதவுகிறது. புளி இரும்புச்சத்துக்கான நல்ல ஆதாரமாகவும் உள்ளது.

18 of 20

மிளகாய்

19 of 20

மிளகாய்

  • பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியமக்களுக்கும் இலங்கைமக்களுக்கும் மிளகாயை அறிமுகப்படுத்தியவர்கள் போர்த்துக்கேயரே ஆவர். மிளகுக்குப்பதிலாகக் கறியில் சேர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு காயாக இருந்தமையால் இதற்கு ‘மிளகாய்’ என்று பெயர் வைத்தனர் தமிழர்கள். மிகவிரைவில் தெற்கு ஆசிய மற்றும் கிழக்கு ஆசிய மக்கள் மத்தியில் கறிக்கு இன்றியமையாத சுவையூட்டியாக மிளகாய் இடம்பிடித்துவிட்டது.

  • வெப்பமான காலநிலையை உடைய நாடுகளில் வாழும் மக்களே மிளகாயை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதை அவதானிக்கலாம். இதற்கு ஒரு காரணம் உண்டு. மிளகாயின் சூட்டுத்தன்மை (காரம்) உட்கொண்டதும் உடலில் எரிவு உணர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இதன் விளவாக எச்சிலும் வியர்வையும் அதிகரிக்கின்றன. வயிற்றிலும் கடலிலும் சமிபாட்டுச் சுரப்புக்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. உணவு துரிதமாகச் சமிபாடு அடைகின்றது. இரத்தச் சுற்றோட்டம் அதிகரித்து உடலில் சூட்டுணர்வு பரவுவதன் மூலம் வியர்வை அதிகரிக்கிறது. இந்த வியர்வை ஆவியாகும்போது உடல் உண்மையில் குளிர்ச்சி அடைகிறது.

20 of 20

இலங்கைத் தமிழர் இறைச்சிக்குழம்பு, மீன்குழம்பு போன்றவை சமைக்கும்போது மிளகு, கொத்தமல்லி, சீரகம், பெருஞ்சீரகம், இஞ்சி, மஞ்சள், வெந்தயம் புளி என்பவற்றைத் தனித்தனியாகவோ அல்லது கலவையாகவோ கறியுடன் சேர்த்துக்கொள்வதை அவதானிக்கலாம். இப்பொருட்கள் ஒவ்வொன்றும் சுவைக்காக மட்டுமன்றி இவற்றின் மருத்துவகுணத்துக்காகவும் சேர்த்துக்கொள்ளப்படுவதை அனுபவ வாயிலாகவும் ஆய்வுகள் மூலமாகவும் உறுதிப்படுத்தமுடியும்.