COVENANT SUNDAY 2026�5TH July 2026
கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்�எபிரெயர் 9:11
விசுவாச பிரமாணம்
நான், ஆராதனை, ஜெபம், சேவை, வேத வாசிப்பு இவைகளினால் கிருபையில் வளர்ந்து, பரிசுத்த ஆவிக்கு செவிசாய்த்து, எனது வாழ்வில் பரிசுத்தாவியின் வழி நடத்தலுக்குக் கீழ்ப்படிவேன்.��நான், என் வாழ்க்கையின் தரமாக உலகீக மதிப்புகளை ஆக்கிக் கொள்ளாமல் தேவனுடைய இராஜியத்தின் மதிப்புகளையே என் வாழ்க்கைத்தரமாக ஆக்குவேன்.��நான், தகுதியற்ற, சுத்தமற்ற, உண்மையற்ற, புனிதமற்ற, நேர்மையற்ற அல்லது ஒழுக்கமற்ற யாதொன்றும் என் சிந்தனையிலோ, வார்த்தையிலோ அல்லது செயலிலோ ஏற்றுக்கொள்ளாது, என் வாழ்வின் எல்லா பகுதியிலும் கிறிஸ்தவ நேர்மையை காத்துக்கொள்வேன்.
நான், பிறரோடுள்ள எனது எல்லா உறவிலும் கிறிஸ்தவ கொள்கைகளை காத்துக் கொள்வேன். எனது குடும்பத்தினர், அயலகத்தார், தோழர்கள், உடன் இரட்சணிய சேனையார், மற்றும் யார்யாருக்கெல்லாம் நான் பொறுப்புடையவனாயிருக்கிறேனோ அவர்களுக்கும் பரந்த சமூகத்திற்கும் நான் என் கிறிஸ்தவ கொள்கைகளை காத்துக் கொள்வேன்.��நான், திருமண குடும்பவாழ்க்கையின் புனிதத்தன்மையைக் காத்துக் கொள்வேன்.
நான், தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டியவன் என்பதை அறிந்து எனது நேரம், தாலந்துகள், பணம், உடமைகள், எனது சிந்தனை, ஆவியாவற்றிலும் உண்மையுள்ள உக்கிராணக்காரனாய் இருப்பேன் ��நான், சரீரத்தையும், ஆத்துமாவையும் அடிமையாக்குகிற போதைதரும் மதுபானங்கள், புகையிலை, மருத்துவ முறையற்ற நிலையில் போதைப்பொருள் உபயோகித்தல், சூதாட்டம், விபசாரம் மற்றும் ரகசிய சங்கங்களோடு தொடர்பு முதலியவற்றைத் தவிர்ப்பேன். �
நான், தேவன் இரட்சணியசேனையை எழுப்பியதன் நோக்கங்களுக்காக, இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை பகிர்ந்து கொண்டு பிறரை இயேசுவண்டை சேர்க்கும்படியாகவும், அவரது நாமத்தினால் தேவையில் உள்ளவர்களையும், குறையுள்ள நிலையிலிருப்பவர்களையும் கவனிக்கும் நோக்கங்களுக்கு நான் உண்மையுள்ளவனாயிருப்பேன். ��நான், என்னால் முடிந்தவரையிலும் படைஸ்தலத்தின் பணிகளிலும், ஆராதனையிலும், பங்குகொண்டு. இரட்சணிய சேனை உத்தியோகஸ் தர்களுக்கும், சேனையின் உலகளாவிய பணிக்கும் உதவிசெய்யும் விதத்தில் என்னுடைய வருமானத்தில் பெரும்பங்கினைக் கொடுத்து உற்சாகமாய் பங்கெடுப்பேன்.
நான், இரட்சணிய சேனையின் கோட்பாடுகளுக்கும், அதன்�நடைமுறைகளுக்கும், சேனையின் தலைவர்களுக்கும்�உண்மையாயிருந்து, பிரசித்திப்பெறும் வேளையிலும்,�துன்புறுத்தப்படும் வேளையிலும் இரட்சணியத்தின் ஆவியை�காண்பிப்பேன்.
Covenantal Prayer
Father in heaven, �I am no longer my own, but thine. �Put me to what thou wilt, rank me with whom thou wilt. �Put me to doing, put me to suffering. �Let me be employed by thee or laid aside for thee, �exalted for thee or brought low for thee.
Feel free to edit this template for your Corps Meetings
Feel free to edit this template for your Corps Meetings