அனைவருக்கும் வணக்கம்
போதைப் பொருட்கள் – வகைகள் , தாக்கம்
போதைப் பொருள்:
“சட்டவிரோதமான மருந்துகளைப் பயன்படுத்தல் அல்லது மருத்துவர் பரிந்துரை செய்த மருந்துகளை தீங்கு தரும் வகையில் பயன்படுத்தல் அல்லது கடையில் வாங்கும் மருந்துகளை அவற்றில் குறிப்பிட்டுள்ள நோக்கங்களுக்காக அல்லாமல் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தல் அல்லது அறிவுறுத்தப்பட்ட அளவுகளுக்கு அல்லது முறைகளுக்கு மாறாக பயன்படுத்தல்"
---மெட்லைனின் மருத்துவ கலைக்களஞ்சியம்
குழந்தைகள் பெரும்பாலும் பயன்படுத்தும் போதைப் பொருள்கள் - மாத்திரைகளின் பெயர்:
புகையிலையின் பெயர்:
மதுவின் பெயர்:
உறிஞ்சு பொருள்களின் பெயர்:
ஊசிகளின் பெயர்:
இதர போதைப் பொருள்கள்:
போதை மருந்து வகைகள்
1.Depressants: (மன அழுத்தம் தருபவை)
2.Stimulants: (ஊக்கிகள்)
3.மனமயக்கத்தை ஏற்படுத்தும் பொருள்கள் (Hallucinogens)
Depressants: (மன அழுத்தம் தருபவை):
மூளையின் செயல்பாட்டை குறைப்பதன் மூலம் எண்ண அலைகளை குறைக்கிறது. மந்தமான ஒரு அமைதியான நிலைக்கு நம்மை தள்ளுகிறது. நாம் பதட்டம் குறைந்து ரிலாக்ஸ் ஆக இருப்பது போல் உணர்வோம். மூளை வேலை செய்வதை இவை குறைப்பதால் மற்ற முக்கிய மூளை தொடர்பான பணிகளும் மந்தம் ஆகின்றன. உதாரணம்: மதுபானங்கள்
பக்க விளைவுகள்:-
மயக்கம்.குழப்பம். தெளிவற்ற பேச்சு• கவனமின்மை• காய்ச்சல். ஒருங்கிணைப்பு இல்லாமை
Stimulants: (ஊக்கிகள்):-
மூளையின் செயல்பாடுகளை வேகமாகத் தூண்டுபவை. எடுத்துக்காட்டு: கொகைன், ஆம்பிடமின்ஸ். இவை நமக்கு போதை தரும் வேதிப்பொருளை அதிகரிக்கிறது. பரவசமான உணர்வைத் தருகிறது. இந்த உணர்வுக்கு ஆட்பட்டு நாம் இத்தகைய போதைப் பொருட்களை உட்கொள்வதற்கு அடிமையாகிறோம்.
பக்க விளைவுகள்:
இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. உடல் சூடு அதிகரிக்கிறது.ரத்த அழுத்தம் உயர்கிறது. பசியின்மை உணர்வு * தூங்குவதில் சிரமம்
மனமயக்கத்தை ஏற்படுத்தும் பொருள்கள் (Hallucinogens): இதை உட்கொள்பவர்கள், பார்ப்பது கேட்பது எல்லாம் அவர்களுக்கு வினோதமாக இருக்கும் அவர்கள் நடந்து கொள்வதும் வினோதமாக இருக்கும். கெனாபிஸ் மற்றும் கிஸ்டாகிஸ் மருந்துகளை அதிக அளவில் உட்கொள்ளும் போது இந்த உணர்வு கிடைக்கிறது.
பக்க விளைவுகள்:.
பசியின்மை. அதிகமாக பேசுவதுசிரிப்பது வியர்வை .உளவியல் ரீதியாக தூண்டுபவை: உணர்ச்சிகளை குலைப்பவை (கேட்டல்,வாசனை, உணர்தல்) எடுத்துக்காட்டு: எல்எஸ்டி, கீட்டாமைன், பென்சிகிளைடின்.
போதை பொருட்களை பயன்படுத்தும் முறைகள்
போதை பழக்கத்தைத் தூண்டும் காரணிகள்
ஆர்வம்:
சிகரெட், மது, கஞ்சாவைப் பற்றி நண்பர்கள் கூறும் தகவல்களை அடிப்படையாக்க் கொண்டு வளரிளம் பருவத்தினர் அதன்பால் ஈர்க்கப்படுகின்றனர். அதில் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியால் போதைப் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள்.
பிறரிடமிருந்து கற்றுக்கொள்வது:
குடும்ப உறுப்பினர்கள் திரைப்பட ஹீரோக்கள், நண்பர்கள் என மற்றவர்களைப் பார்த்து பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுதல்.
சுயவிருப்பம்:
போதைப் பொருள்கள் ஏற்படுத்தும் விளைவுகள் தெரியாமல், நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கவும், கொண்டாட்டங்களுக்காகவும் போதையின்பால் ஈர்க்கப்படுதல்
மகிழ்ச்சிக்காக:
போதைப் பழக்கத்தை நண்பர்களாக்கிக் கொள்கிறார்கள். தங்களூக்கான பிரச்சனைகளை எதிர்கொள்ள இயலாதவர்களும் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள்.
பிற காரணிகள்:
போதைப் பொருளைப் பயன்படுத்தியதற்கு ஆதாரம்
உடல் சார்ந்த அறிகுறிகள்:
நடத்தையில் மாற்றங்கள்:
நடைமுறை அறிகுறிகள்:
சட்டங்கள்:-
பிரிவு 77 🡪 இளஞ்சிறார் நீதி சட்டம்:-
குழந்தைக்கு போதைப் பொருளைக் கொடுப்பவர்களுக்குத் தண்டனை அளிக்கிறது.
பிரிவு 78 🡪 போதைப்பொருள்களை விற்பனை செய்வது,
விற்பனைக்குக் கொண்டு செல்வது அல்லது கடத்துவது,
போன்ற செயல்களுக்குக் குழந்தைகளைப் பயன்படுத்துவது
பிரிவு 6 🡪
🡪சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களைக் கல்வி நிலையங்களைச் சுற்றி சிறுவர்களிடம் விற்பதையும்
🡪சிறுவர்கள் விற்பதையும் தடை செய்கிறது.
சமூகப் பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட போதைப் பொருள் பழக்க மீட்பு இல்லங்கள்:-
எண் 483/ 2 கே.கே.நகர், வ.உ.சி. நகர் வழி ஆலப்பாக்கம் பஞ்சாயத்து, செங்கல்பட்டு 603 111
2. குழந்தைகளுக்கான போதைப் பழக்க மீட்பு மையம், 4 202 சக்தி நகர் (கிரீன் பார்க் பள்ளி அருகே). கருப்பட்டிபாளையம், தும்மங்குறிச்சி சாலை, நாமக்கல் 637 003. தொடர்புக்கு: 81480 39073
3. மாவட்டத் தலைநகரில் உள்ள அரசாங்க மருத்துவமனையிலும், மனநலத்தைப் பாதுகாப்பதற்கு என்று ஒரு துறை உண்டு. அதில் 'சாடிலைட் மனநல மருத்துவர்' என்று ஒருவர் இருப்பார். அவரிடம் வளர் இளம் பருவத்தினரை அழைத்துச் செல்லலாம்.
தயாரித்து வழங்கியவர்
திரு. Dr. M.V.வாசுதேவன்.M.Sc; M.A; M.A;
M.S;M.Ed; M.Phil
தலைமையாசிரியர்,
அரசு மேல் நிலைப் பள்ளி,
ஶ்ரீமதுரை.
நன்றி