1 of 8

பதினொன்றாம் வகுப்புதமிழ்

இயல்-6 உரைநடை உலகம்

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

2 of 8

நாட்குறிப்பு

  • தனிமனிதரின் அன்றாட நிகழ்வுகளின் பதிவு
  • டைரி –டைரியம்(இலத்தீன்)- டைஸ் என்ற சொல்லிலிருந்து உருவானது.
  • நாட்குறிப்புகளின் முன்னோடி கிரேக்கக் குறிப்பேடு (EPHEMERIDES )ஆகும்.
  • பாபர் காலம்முதல், நாட்குறிப்பு எழுதப்பட்டது.
  • ஔரங்கசீப் காலத்தில் நாட்குறிப்பு தடை செய்யப்பட்டது.
  • 1498-வாஸ்கோடகாமா நாட்குறிப்பு ஆல்வாரோ வெல்லோ என்பவரால் பதிவானது

3 of 8

ஆனந்தரங்கர்

  • 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
  • பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் ஆளுநரின் மொழிபெயர்ப்பாளர்.
  • இவரது நாட்குறிப்பு 25 ஆண்டுகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது.
  • தந்தையின் பெயர் திருவேங்கடம்.
  • 1709 மார்ச் 30இல் சென்னையில் பிறந்தார்

4 of 8

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

  • பிரெஞ்சு ஆளுநரின் துவிபாஷியாகப் பணிபுரிந்தார்.
  • ஆண்டு, திங்கள், நாள், கிழமை, நேரம், நிகழ்விடம் ஆகியன இக்குறிப்பில் இடம்பெற்றிருக்கும்.
  • இக்குறிப்பு 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

5 of 8

நாட்குறிப்பில் அரசியல் செய்திகள்

  • 10-09-1736ஆம் நாள் பிரஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையைப் பெற்றார்.
  • 1846இல் பிரஞ்சு கப்பல் தளபதி லெபூர்தொனே சென்னையைக் கைப்பற்றினார்.
  • ஆம்பூர் போர்- தஞ்சை முற்றுகை, இராபர்ட் கிளைவ் படையெடுப்பு, புதுச்சேரி முற்றுகை ஆகிய விரிவான குறிப்புகள் உள்ளன.
  • 1758 லல்லி என்பாரின் சென்னை முற்றுகை தோல்வியில் முடிந்தது

6 of 8

சமுதாயக் குறிப்புகள்

  • 11-06-1939இல் ஆளுநர் துய்மா பிறப்பித்த ஆணையில் சுகாதாரச் செய்தி இடம்பெற்றுள்ளது.
  • வீதிகளில் காலைக்கடன் கழிப்பவருக்கு 6பணம் தண்டம் விதிக்கப்பட்டது.
  • மரணதண்டனை, காதறுத்தல், சாட்டையடி, கிடங்கில் போடுதல் போன்ற தண்டனைகள் வழக்கில் இருந்தன.
  • ஐரோப்பியக் கப்பல் இந்தியா வர 6திங்கள் ஆனது
  • தரகர் வர்த்தகர் ஒப்பந்தம் அதற்கான ரசீதுகள் பற்றிய குறிப்புகள் உண்டு.

7 of 8

நாணயக் குறிப்புகள்

  • 10-09-1736 அன்று நாணயம் அச்சிடும் ஆணையை பல்லக்கில் கொண்டுவந்தனர். 21பீரங்கிகள் முழங்கின.
  • 8மாற்றுக்குக் குறைவான நாணயங்கள் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • புதுச்சேரி பிறை வராகன் – சென்னை நட்சத்திர வராகன் –வட்ட வராகன்- பரங்கிப்பேட்டை வராகன்- ஆரணி வராகன் ஆகியன பற்றிய குறிப்புகள் உள்ளன.

8 of 8

நாட்குறிப்பின் இறுதி

  • 1754ஆம் ஆண்டு புதுச்சேரியில் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் விவரிக்கப்படுகின்றன.
  • இங்கிலாந்து பிரஞ்சுப் போர்- கப்பல் போக்குவரத்துத் தடை- புதுச்சேரி வணிக பாதிப்பு- கப்பலை எதிர்பார்த்த மக்களின் மனநிலை
  • அவரது இறுதிக்காலத்தில் 1760 பிப்ரவரியில் ஆங்கிலேயர் புதுச்சேரி பகுதிகளைக்கைப்பற்றினர்.
  • 12-01-1761இல் புதுச்சேரி மீது பீரங்கி குண்டுகள் விழுந்தன. அதே நேரத்தில் ஆனந்தரங்கர் மறைந்தார்.
  • புதுச்சேரி முற்றுகை குறித்த முடிவுகள் நாட்குறிப்பில் இல்லை