“நாட் ஜஸ்ட் எ பீஸ் ஒப் கிளோத்”
டில்லியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பெண் தன் ஊக்குள்ள ரவிக்கயை பயன் படுத்தினாள், அதனால் அவள் தசைகளை கடினமாக இறுகச் செய்யும் டெடனஸ் என்னும் நோயால் இறந்தாள். தொலைவில் உள்ள மலைகளில் அவள் மாட்டு தொழுவத்தில் உறங்குகிறாள், அவள் சமையலறையுள் நுழையக் கூடாது. இன்னும் உலகில் பல இடங்களில் சிறுமிகள் தங்கள் பள்ளிக்கூட படிப்பை பாதியில் நிறுத்துகிறார்கள் ஏனெனில் பயன்படுத்த ஒரு சிறிய துணி இல்லாமல் மாற்ற ஒரு இடம் இல்லாமல். இன்னும் இலட்ச கணக்கானோர் உலகெங்கும் - மண், சாம்பல், காய்ந்த இலைகள் ஏன், பிளாஸ்டிக் கூட பயன்படுத்துகிறார்கள் . அவர்களுக்கு இயற்கை முறையான மாதவிடாய் அடிக்கடி தொல்லையும் குழப்பமும் நிறைந்தவையாக மாறிவிடுகின்றன. மாதவிடாயை சமாளிக்க போதுமான அளவு விழிப்புணர்வும் போதிய வசதிகளும் இல்லாதவையே இதற்கு முக்கிய காரணம் .

ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்னால், ‘Goonj’ ‘கூன்ஜ்’ ( தமிழில் எதிரொலி என்று அர்த்தம் ) “நாட் ஜஸ்ட் எ பீஸ் ஒப் கிளோத்” என்னும் செயல்பாட்டை துவங்கியுள்ளது. மாதவிடாய்க்கு தேவையான பொருட்களை கொடுபதற்கு மட்டும் அல்லாமல் இப்பிரச்சனையை திறப்பதற்கான கருவியாகவும் , வெட்கத்தை நீக்கவும் இதில் தேவையில்லாத அமைதியை உடைபதற்க்காகவும் ஆரம்பித்தது.

“நாட் ஜஸ்ட் எ பீஸ் ஒப் கிளோத் - எ மில்லியன் வோய்சஸ்” ( மாதவிடாய் பிரச்சனைகளை இயல்பு நிலையில் மக்களால் அதிகம் பேசப்படுகின்ற விஷயமாக கொண்டு வர ஒரு தனி முயற்சி) இந்த கணக்கெடுப்பு ஒரு தனிப்பட்ட தகவலை சேகரிக்க அல்ல!! மற்ற கணக்கெடுப்பு போல இதில் கண்டிப்பாக பதிலளிக்கவும் என்ற குறியீடுகளும் இல்லை. நீங்கள் இதை உங்கள் முழு மனதோடு படித்து உண்மையாக பதில் அளிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். உங்கள் அனுபவங்களை பகிர்ந்து, பரப்புங்கள். உங்கள் தோழிகள், நண்பர்கள், உடன் வேலை செய்வோர், உறவினர் என அனைவரையும் இதற்கு குரல் கொடுக்க சொல்லுங்கள்

இன்னும் அடுத்த சில மாதங்களில் நாங்கள் முழுமையாக சேகரிக்கப்பட்ட தகவல்களையும் மற்றும் பல அறிந்த, அறியாத, மறைக்கப்பட்ட உண்மைகளையும் பகிர்ந்து கொள்வோம். உதாரணமாக கண் தெரியாத இளம் பெண்களால் தங்கள் மாதவிடாய் தொடங்கியதை கூட அவர்களால் தெரிந்து கொள்ள முடியாது என்று சிறிது நாள்களுக்கு முன்னால் தான் எங்களுக்கு தெரிந்தது .

கீழே உள்ள படிவத்தை நிரப்பி இதை அச்சு எடுத்து மற்றவர்களிடம் கொடுங்கள். இக்குரலை பரப்ப ஒரு சிறிய முயற்சி செய்வோம். நாட்டின் எல்லை கோடுகள், மதம், ஜாதி, சமுதாயம் ஏழை பணக்காரர், வீட்டு வேலை செய்வோர், பெரிய கோடிஸ்வரர் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் யாராக இருந்தாலும் இதில் பங்கேற்கலாம் இது பேசுவதற்கான நேரம், உணர்ந்து அறிவியுங்கள் இது வெறும் பெண்களை சார்ந்த பிரச்சனை அல்ல … இது ஒரு மனித இனத்தை சார்ந்த பிரச்சனை !!

எதிர்நோக்குடன் ,


அன்ஷு குப்தா ,
நிறுவனர், கூன்ஜ்.

மாதவிடாய் என்பது..
மாதவிடாய் இரத்தம் என்பது
நீங்கள் எப்போதாவது இது எவ்வளவு பெரிய பிரச்சனை என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்து இருக்கீர்களா?
நீங்கள் ?
Next
Never submit passwords through Google Forms.
This form was created inside of Goonj.org. Report Abuse - Terms of Service - Additional Terms