Please read the petition below and fill in the form to endorse it.
கீழே உள்ள மனுவைப் படித்துவிட்டு, அதற்கு ஆதரவு தெரிவிக்கப் படிவத்தை நிரப்பவும்.
09.10.2026
To
Thiru C. Joseph Vijay,
Hon’ble Chief Minister of Tamil Nadu.
Respected Chief Minister,
We, the undersigned people of Tamil Nadu, express our solidarity with the victims and survivors of child sexual abuse in the GEM Granites–Veeramani POCSO cases and welcome the Government’s decision to pursue the case through an all-woman Special Investigation Team.
This case is a test of whether our justice system can protect children and ensure that those responsible are held accountable, regardless of their power, influence or position. We urge the Government to ensure that the investigation and prosecution are fair, expeditious, survivor-centred and free from fear or favour, while addressing the systemic failures that allow child sexual abuse to persist and remain hidden.
We urge the Government to:
1. Ensure a complete and time-bound investigation and prosecution
Provide the SIT with all necessary forensic, digital and legal support for a thorough investigation culminating in watertight chargesheets covering every victim, survivor and every person involved in the offences. Spare no effort to fully unearth the criminal conspiracy angle and indict all police personnel and other state officials who conspired to cover up the serial child abuse racket. Their actions being part and parcel of the main crime, immediately name them as co-accused persons in the relevant FIRs and subject them to the full force of the criminal justice system. Ensure a speedy POCSO trial with an experienced Special Public Prosecutor and no avoidable delays.
2. Order an independent judicial inquiry into the earlier closure attempt
Take steps to institute a credible, independent judicial inquiry into the entire chain of events from 2024 to 2026, by which concerted attempts were made to first bury the crimes and then to kill legal action. Let the inquiry examine who was responsible, what induced them to fail in their lawful duties as well as conscientious obligations, and how money, influence, intimidation or other extraneous factors played a role in the gross abuse of official authority and powers. Based on the inquiry findings, fix accountability irrespective of official rank or political affiliation. Launch departmental disciplinary action where applicable, side by side with the criminal investigation they will face from the SIT.
3. Guarantee protection, care and rehabilitation for every survivor
Protect the identity and privacy of victims, survivors and witnesses; provide security and witness protection where required, along with trauma-informed counselling, medical care, support persons, interim monetary compensation and continued educational support. Facilitate victim liaison and informed legal participation/representation of survivors and victims with utmost sensitivity, so that those directly injured the most are heard at every single stage of the criminal justice process.
4. Create a safe and confidential pathway for reporting of other sexual crimes related to GEM Veeramani
Establish and widely publicise a confidential mechanism for victims, survivors, witnesses and others with relevant information to approach trained women officers and counsellors safely, without exposure, shaming or retraumatisation.
5. Constitute a multi-stakeholder Advisory Committee to review and strengthen the POCSO justice system, build a culture of child safety, abuse prevention and accountability
Form an Advisory Committee where civil society, child-rights experts and survivor/victim-advocates are represented, to democratically review and evolve a framework for improving POCSO Act implementation, child support mechanisms, social education & sensitisation, institutional accountability and various other preventive and deterrent measures affecting children’s rights and welfare.
Our Appeal
The survivors were children when they were harmed. They have already waited too long.
We urge the Government to ensure swift justice, full accountability and protection for every child, irrespective of the power or influence of the accused.
We seek a meeting with the Hon’ble Chief Minister or his representatives and a written response on the action proposed on these demands.
For justice. For accountability. For every child.
Citizens Collective
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்குகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து
தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பொதுமக்களின் மனு
09.10.2026
பெறுநர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள்
மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு,
தமிழ்நாட்டு மக்களாகிய நாங்கள், ஜெம் கிரானைட்ஸ்–வீரமணியின் மீதான போக்சோ வழக்குகளில் குழந்தைப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அதிலிருந்து மீண்டு வாழ்பவர்களுக்கும் எங்கள் முழு ஆதரவைத் தெரிவித்து, அவர்களுடன் துணைநிற்கிறோம். முழுவதும் பெண் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மூலம் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த அரசு எடுத்துள்ள முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.
குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் அதிகாரம், செல்வாக்கு, பதவி என எது இருந்தாலும், நம் நீதி அமைப்பு அவர்களைக் குற்றத்திற்குப் பொறுப்பேற்கச்செய்து, குழந்தைகளைப் பாதுகாக்கமுடியுமா என்பதற்கான சோதனையே இந்த வழக்கு. இந்த வழக்குகளின் புலனாய்வும் விசாரணையும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் பாதிப்பிலிருந்து மீண்டவர்களையே மையமாகக் கொண்டு, நியாயமானதாக, விரைவாக, அச்சமின்றி, சார்பின்றி நடைபெறுவதை அரசு உறுதிசெய்யவேண்டுமென்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில், குழந்தைப் பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நிகழவும், மறைக்கப்படவும் வழிவகுக்கும் அமைப்புரீதியான தோல்விகளையும் அரசு களையவேண்டும்.
அரசிடம் நாங்கள் வலியுறுத்துபவை:
1. முழுமையான, காலவரையறைக்குட்பட்ட புலனாய்வையும் வழக்கு நடத்துவதையும் உறுதிசெய்தல்
புலனாய்வுக்குத் தேவையான அனைத்துத் தடயவியல், டிஜிட்டல், சட்ட உதவிகளையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு வழங்கிடவேண்டும். அதன்மூலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும், மீண்டு வாழும் ஒவ்வொருவரையும், குற்றங்களில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் உள்ளடக்கிய, தெளிவான குற்றப்பத்திரிகைகளுக்கு வழிவகுக்கவேண்டும்.. குற்றச் சதி என்கிற கோணத்தை முழுமையாக வெளிக்கொணரத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும். தொடர்ச்சியாக நடந்த குழந்தை வன்கொடுமைக் கும்பலின் குற்றங்களை மூடிமறைக்கச் சதிசெய்த அனைத்துக் காவல் துறையினர் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்படவேண்டும். அவர்களின் செயல்களை முதன்மைக் குற்றத்திலிருந்து பிரிக்கமுடியாது என்பதால், தொடர்புடைய முதல் தகவல் அறிக்கைகளில் அவர்களை உடனடியாக இணைக் குற்றவாளிகளாகச் சேர்த்து, குற்றவியல் நீதி அமைப்பின் முன் நிறுத்தவேண்டும். அனுபவம் வாய்ந்த சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமித்து, தாமதமின்றி போக்சோ வழக்கு விசாரணை விரைவாக நடைபெறுவதை உறுதிசெய்யவேண்டும்.
2. வழக்கை முடித்துவைக்க நடந்த முந்தைய முயற்சி குறித்து சுதந்திரமான நீதி விசாரணைக்கு உத்தரவிடுதல்
2024 முதல் 2026 வரை, முதலில் குற்றங்களை மறைக்கவும், பின்னர் சட்ட நடவடிக்கையையே முடக்கவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் தொடர்ச்சியை ஆராய, நம்பகமான, சுதந்திரமான நீதி விசாரணையை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த விசாரணையில் இதற்கு யார் பொறுப்பு, சட்டப்பூர்வக் கடமைகளிலும் பொறுப்புகளிலும் அவர்கள் தவறியதற்கு எது தூண்டுதலாக இருந்தது, அரசு அதிகாரமும் பதவியும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதில் பணம், செல்வாக்கு, மிரட்டல் அல்லது பிற புறக்காரணிகளின் பங்கு என்ன, போன்றவற்றை ஆராயவேண்டும். விசாரணை முடிவுகளின் அடிப்படையில், பதவியையோ, அரசியல் சார்பையோ புறந்தள்ளி, பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவேண்டும். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் குற்றவியல் புலனாய்வை அவர்கள் எதிர்கொள்ளும் அதே நேரத்தில், துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும்.
3. பாதிப்பிலிருந்து மீண்ட ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்கான உத்தரவாதம்
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், மீண்டு வாழ்பவர்கள், சாட்சிகள் ஆகியோரின் அடையாளத்தையும் தனியுரிமையையும் பாதுகாக்கவேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதோடு, புரிதலுடன்கூடிய உளவியல் ஆலோசனை, மருத்துவப் பராமரிப்பு, தகுந்த நபர்களின் ஆதரவு, இடைக்கால நிதி இழப்பீடு, தொடர் கல்வி உதவி ஆகியவற்றையும் வழங்கவேண்டும். நேரடியாக மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களின் குரல் குற்றவியல் நீதிச் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் கேட்கப்படவேண்டும். அதற்கு பாதிக்கப்பட்டவர்களுடனான தொடர்பை ஒருங்கிணைப்பதையும், பாதிக்கப்பட்டவர்களும் மீண்டு வாழ்பவர்களும் தகவலறிந்து சட்ட நடைமுறையில் பங்கேற்பதையும் பிரதிநிதித்துவம் பெறுவதையும் மிகுந்த நுண்ணுணர்வுடன் உறுதிசெய்யவேண்டும்.
4. ஜெம் வீரமணி தொடர்பான பிற பாலியல் குற்றங்களைப் புகார்செய்ய பாதுகாப்பான, ரகசியம் காக்க கூடிய வழியை உருவாக்குதல்
பாதிக்கப்பட்டவர்கள், மீண்டு வாழ்பவர்கள், சாட்சிகள், இவ்வழக்குகளுடன் தொடர்புடைய தகவல் வைத்திருப்பவர்கள் ஆகியோர் தங்கள் அடையாளம் வெளிப்படாமலும், அவமானப்படுத்தப்படாமலும், மன அதிர்ச்சிக்கு உள்ளாகாமலும், பயிற்சிபெற்ற பெண் அதிகாரிகளையும் ஆலோசகர்களையும் பாதுகாப்பாக அணுகக்கூடிய ரகசிய அமைப்பொன்றை உருவாக்கி, அதைப் பரவலாக அறிவிக்கவேண்டும்.
5. போக்சோ நீதி அமைப்பை மறுஆய்வுசெய்து வலுப்படுத்தவும், குழந்தைப்பாதுகாப்பு, வன்கொடுமைத்தடுப்பு, பொறுப்புக்கூறல் போன்றவற்றை உறுதிசெய்யவும், பல்தரப்பு ஆலோசனைக் குழுவை அமைத்தல்
போக்சோ சட்டச் செயலாக்கம், குழந்தைகளுக்கான ஆதரவு அமைப்புகள், சமூகக் கல்வி மற்றும் விழிப்புணர்வு, நிறுவனப் பொறுப்புக்கூறல், குழந்தைகளின் உரிமைகளையும் நலனையும் பாதிக்கும் பிற முன்தடுப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை ஜனநாயக முறையில் மறுஆய்வு செய்து உருவாக்க, சிவில் சமூகம், குழந்தை உரிமை வல்லுநர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் மீண்டு வாழ்பவர்களுக்காகவும் குரல்கொடுப்பவர்கள் ஆகியோருக்குப் பிரதிநிதித்துவமுள்ள ஆலோசனைக் குழுவொன்றை அமைக்கவேண்டும்.
எங்கள் வேண்டுகோள்
இன்று மீண்டு வாழும் இவர்கள், பாதிப்புக்குள்ளானபோது குழந்தைகளாக இருந்தனர். அவர்கள் ஏற்கெனவே நீண்டகாலம் காத்திருந்துவிட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் அதிகாரமோ செல்வாக்கோ எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தைக்கும் விரைவான நீதி, முழுமையான பொறுப்புக்கூறல், பாதுகாப்பு ஆகியவற்றை அரசு உறுதிசெய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மாண்புமிகு முதலமைச்சரையோ அவரது பிரதிநிதிகளையோ சந்திக்கும் வாய்ப்பையும் இந்தக் கோரிக்கைகள்மீது மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமான பதிலையும் நாங்கள் கோருகிறோம்.
நீதிக்காக. பொறுப்புக்கூறலுக்காக. ஒவ்வொரு குழந்தைக்காகவும்.
குடிமக்களின் கூட்டமைப்பு