மேல் மாகாண நில பயன்பாட்டுத் திட்டமிடலில் நகர்ப்புற விவசாயத்தை ஒருங்கிணைத்தல் தொடர்பான பொது கருத்து ஆய்வு
நீங்கள் இலங்கையின் மேல் மாகாணத்தில் வசிப்பவராயின் அல்லது நிறுவனங்களை/வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பவராயின் இந்த ஆய்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

COVID-19 தொற்றுநோயின் பாதிப்பு மற்றும் நிலவும் காலநிலை பிரச்சினைகள் என்பன உலகளாவிய உணவு விநியோகத்தில் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழலில், மேல் மாகாணத்திற்கான நில பயன்பாட்டுத் திட்டமிடலில் நகர்ப்புற விவசாயத்தை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பதை நாங்கள் ஆய்வு செய்கின்றோம்.

இதற்காக, உங்கள் வீடுகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், வணிக தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், பயன்படுத்தப்படாத வெற்று நிலங்கள் என்பவற்றில் உள்ள மேலதிக இடங்களில் பயிரிடுதல் தொடர்பான உங்களது தற்போதைய அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இலங்கை நகர அபிவிருத்தி சபையுடன் இணைந்து ஸ்ரீ ஜயவர்தனப்புர பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடத்தின் நில மேலாண்மை மற்றும் மதிப்பீட்டுக் கல்விப் பிரிவின் ஆதனத்துறை ஆய்வுகளுக்கான மையம் (CRES) இந்த ஆய்வினை மேற்கொள்கின்றது.

வேறு தகவல்கள்:

1. வினாக்கொத்தினை நிரப்ப 05 முதல் 10 நிமிடங்கள் மாத்திரமே எடுக்கும்.

2. வினாக்கொத்திற்கு 15.06.2020 வரை பதிலளிக்க இயலும்.

3. நீங்கள் வழங்கும் தகவல்கள் மேல் மாகாணத்தின் நில பயன்பாட்டுக் கொள்கையாக்திற்கு பயன்படுத்தப்படும் என்பதால் தயவுசெய்து வினாக்கொத்திற்கு கவனமாக பதிலளிக்கவும்.

4.கண்டிப்பாக உங்கள் பதில்கள் இரகசியமாக பேணப்படும். ஆய்வு முடிவுகள் மொத்தமாக வெளியிடப்படும், இதனால் பதிலளித்தவர்கள் அனைவரும் அநாமதேயமாக இருப்பார்கள்.

5. COVID-19 பரவல் காரணமாக, கூகுல் படிவத்தின் மூலம் மட்டுமே வினாக்கொத்திற்கான பதில்களை சேகரிக்கின்றோம். எவ்வாறாயினும், நாட்டின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் உங்களை வேறு வழிகளில் (உ.ம்: சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உதவியுடன் வீடுகளிற்கு வருகை தருதல்) தொடர்புகொள்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

தொடர்புகளுக்கு:
பணிப்பாளர்,
ஆதனத்துறை ஆய்வுகளுக்கான மையம் (CRES),
நில மேலாண்மை மற்றும் மதிப்பீட்டுக் கல்விப் பிரிவு,
முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடம்,
ஸ்ரீ ஜயவர்தனப்புர பல்கலைக்கழகம்,
இலங்கை.

தொ.பேசி : +94112802004 (அலுவலகம்)

வினாக்கொத்து தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு cres@sjp.ac.lk இற்கு
மின்னஞ்சல் அனுப்புங்கள்.
Next
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy