Google படிவங்கள்

முறைகேட்டின் வகை:

நிர்வாண படங்கள் குறித்த எங்கள் கொள்கை

நிர்வாணம், பாலியல் நடவடிக்கைகளைக் கொண்ட படம் அல்லது பிற வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்தைப் பகிர்வது அல்லது வெளியிடுவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். வணிகரீதியான ஆபாசப் படங்கள் கொண்ட தளத்துக்கு அழைத்துச்செல்லும் உள்ளடக்கம் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை, தகாப்புணர்ச்சி அல்லது விலங்குடன் புணர்வது ஆகியவற்றை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

குழந்தைகளைத் தவறாக வழிநடத்தும் உள்ளடக்கத்தைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அதாவது, பயனர் எவரேனும் குழந்தையின் பாலுணர்வைத் தூண்டும் உள்ளடக்கத்தைப் பகிர்வதாக அல்லது வெளியிடுவதாகக் கண்டறிந்தால், அவருடைய கணக்குகளை நிறுத்துவோம். சட்ட அமலாக்கத்திடம் உள்ளடக்கத்தைப் பற்றியும், அதன் உரிமையாளர் பற்றியும் புகாரளிப்போம்.

குழந்தைகள் மீது பாலியல் இச்சையைத் தூண்டக்கூடிய வகையிலான உள்ளடக்கத்தைப் பகிர அல்லது வெளியிட நாங்கள் அனுமதிப்பதில்லை.