தற்போதைய கருக்கலைப்பு சட்டமுன்வரைவை நான் ஆதரிக்கிறேன்
இலங்கை அமைச்சரவையானது பின்வரும் இரண்டு சந்தர்ப்பங்களில் கருக்கலைப்பை அனுமதிப்பதன் ஊடாக கருக்கலைப்பு சட்டத்தில் ஏற்படுத்தவுள்ள திருத்தங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.

1. கடுமையான ஊனக்குறைபாட்டினால் இறக்கக் கூடிய ஒரு கருவை தாய் சுமக்கும் போது
2. பாலியல் வன்புணர்வு காரணமாக ஒரு பெண் கருத்தரிக்கும் போது

இந்த சட்டத்திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், சகல கட்சிகளையும் சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தத் திருத்ததை ஆதரிக்குமாறும் நாம் கேட்டுக் கொள்கிறோம். தற்போது உள்ள கருக்கலைப்பு சட்டம், ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே கருக்கலைப்பை அனுமதிக்கின்றது.

இந்தச் சட்டம் பாரிய இடைவெளியைக் கொண்டுள்ளதுடன் சில போது 12 வயதையுடைய சிறுமிகள் உட்பட பாலியல் வன்புணர்வு மற்றும் இரத்த உறவுகளுக்கு இடையிலான பாலியல் உறவினால் கருத்தரிக்கும் பெண்கள் முழு கர்ப்பக் காலத்துக்கும் முகம் கொடுக்க திணிக்கின்றது. பாலியல் வன்புணர்வினால் மற்றும் உறவுகளுக்கு இடையிலான பாலியல் உறவினால் பாதிக்கப்படும் பெண்கள் முகம் கொடுக்கும் உடல் மற்றும் உள ரீதியான தாக்கம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று மட்டுமன்றி, சமத்துவ உரிமைகளைக் கொண்டாடும் நம் இலங்கையின் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரான ஒன்றாகும். இலங்கையில் தம் தந்தையினால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் சிறுமிகள், தமது உடன்பிறப்பை முழு கர்ப்ப காலத்திற்கும் சுமக்க வற்புறுத்தப்படக் கூடாது.

பாரிய ஊனக் குறைபாட்டினால் இறக்கக்கூடிய ஒரு பிள்ளையை வளர்க்கும் போது குடும்பங்கள் முகம் கொடுக்கும் சுகாதார பிரச்சினைகள், பொருளாதார சிக்கல்கள், மற்றும் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் குறைபாடுகள் போன்றன அதிகமாக கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. சமூக-பொருளாதார யதார்த்தங்கள் இலங்கையில் உள்ள பலரை தேவையான ஆதரவையும், பராமரிப்பையும் பெற்றுக் கொள்வதில் இருந்தும் தடுக்கின்றது. இதனால், மரணத்தை ஏற்படுத்தக்கூடிய ஊனக் குறைப்பாட்டை கொண்ட நபர்கள், தமக்கு உள்ள குறுகிய கால கட்டத்தை, மிக குறைந்த வாழ்க்கை தரத்துடன் வாழ்கின்றனர்.
இலங்கையில் தினமும் 700க்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள் நடைபெறுவதாக தெரிவிக்கும் அறிக்கைகள், நம் நாட்டின் யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன. இவற்றுள் அநேகமான கருக்கலைப்புகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரமற்ற நிலைமைகளில் செய்யப்படுவதனால், நஞ்சாக்கக் கூடிய கருக்கலைப்புகள், மலட்டுத்தன்மை போன்ற கடுமையான உடல்நல சிக்கல்களுக்கும் சில போது மரணத்திற்கும் வழிவகுக்கின்றன. குடும்ப சுகாதார பிரிவின்படி 2012ஆம் ஆண்டில் , இலங்கையில் தாய்மார் மரணிப்பதற்கான காரணிகளில் 3வது இடத்திலுள்ள முக்கியமான காரணம் நஞ்சாக்கக் கூடிய கருக்கலைப்புகளினால் மரணிப்பதாகும்.
கருவொன்றை கலைப்பது என்பது ஒழுக்கம் பற்றிய ஒரு கேள்வி அல்ல. இது கர்ப்ப காலத்தை தொடர்வதா இல்லையா என ஒரு பெண் மற்றும் சிறுமிக்கு அது தொடர்பாக தகவல்கள் சொல்லப்பட்ட பின்னர் அது தொடர்பில் முடிவெடுக்க அவர்களுக்கு இருக்கும் உரிமை பற்றியதாகும். எனவே திருத்தங்களை உள்வாங்கி தற்போது உள்ள கருக்கலைப்பு சட்டத்தை விரிவாக்கி சட்டமாக்க, தமக்குரிய பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்துவதன் மூலம், சுகாதார அமைச்சுக்கும், அரசாங்கத்திற்கும் தேவையான ஆதரவை வழங்குமாறு நாம் அனைத்து பிரஜைகளிடமும் கேட்டுக் கொள்கிறோம்.

உங்கள் பெயரை குறிப்பிடுவதன் மூலம் கையொப்பமிடவும் *
Your answer
Submit
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service