"AI-யைப் பற்றி ஒருபோதும் கேள்விப்படாத ஒரு மாணவன், AI ஆல் இயங்கும் உலகத்தில் வாழப் போகிறார்."
AI உலகத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது — ஆனால் பல மாணவர்களுக்கு இதைப் புரிந்துகொள்ள வாய்ப்பு இல்லை.
அதனால் தான், "எல்லோருக்கும் AI" என்ற புத்தகத்தை தமிழில், எளிய மற்றும் விளக்கமான முறையில்
உருவாக்கி
, ஏழாம் வகுப்பு மற்றும் அதற்கு மேலான மாணவர்களுக்கு அச்சிட்டு இலவசமாக வழங்க முயற்சி செய்கிறோம்.
அச்சிட்டு இலவசமாக வழங்க முயற்சிக்கிறோம் என்பதை நாம் தெளிவாக வரையறுக்க விரும்புகிறோம். அச்சிடப்பட்ட பிரதிகள் நாம் இணையத் தொழில் நுட்ப வசதி இல்லாத, கணணி, மொபைல் பாவனை மூலம் கற்றல் இல்லாத பின் தங்கிய பிரதேசங்களுக்கு விநியோகிப்பதாக முடிவெடுத்துள்ளோம். கணணி வசதியும், மொபைல் பாவனையும் கற்றலில் செயற்படுத்துபவர்கள் கீழ்வரும் இணைய இணைப்புகளில் PDF ஆகவும் இணையத்தளத்திலும் நூலைப் பாவிக்கலாம்.
இணையத்தளம் : https://book1.ai2all.org/
PDF பிரதி: https://book1.ai2all.org/Ellorukkum-AI-book-1.pdf
எமது நோக்கம் தமிழில் கல்வி பயிலும் சிறுவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய எண்ணத்தை விதைப்பதற்கு! விதைக்கும் விதை முளைத்தால் மரமாகும் இல்லாவிடில் உரமாகும் என்ற உண்மையின் படி சிறுவயதில் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறிவினை, இப்படி ஒன்று இருக்கிறது என்பதை அறிமுகப்படுத்துவது எமது கடமையாகும். இந்தக் கடமையில் ஒரு பங்காக அனைவரும் தரவிறக்கிக் கொள்ள PDF பிரதி வெளியிட்டுள்ளோம்.
📕 முதலில் இந்த இணைப்பில் சென்று புத்தகத்தைப் படிக்கும் படி வேண்டுகிறோம்: https://book1.ai2all.org/ .
இந்த மின்னூல் பிரதி கணனி, கைத்தொலைபேசி வசதி உள்ளவர்கள் மாத்திரமே பயன் படுத்த முடியும். அப்படி வசதி இல்லாத கிராமப்புற பிள்ளைகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காதல்லவா? அதற்கு என்ன வழி?
இதற்கு சிருஷ்டி தன்னுடைய பங்காக முதலில் 1000 பிரதிகளை தனது மாணவர்களின் பங்களிப்புடன் அச்சிடுகிறது.
இந்த 1000 பிரதிகளை எப்படி விநியோகிக்க விரும்புகிறது? வெறுமனே அச்சிட்டு அவற்றை நிகழ்வாக நாமும் நூல் வெளியிடும் என்ற ஒரு திட்டமாக இதை நடை முறைப்படுத்த விரும்பவில்லை. நாம் செயற்கை நுண்ணறிவு எதிர்கால சந்ததிக்கு அவசியம் என்ற இந்த எண்ணத்தை மாணவர்கள் மனதில் விதைக்க விரும்பும் நல்லாசிரியர்கள், ஆலோசகர்களுடன் இணைந்து இந்த இலக்கை வரவேற்பு மாணவர் மனதிற்கு கொண்டு செல்லும் உயர்ந்த உள்ளங்களுக்கு உதவுபவர்களாக இருக்க விரும்புகிறோம்.
நீங்களும் அத்தகைய ஒருவராக இருந்தால் இந்த திட்டத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.
நீங்கள் ஏழாம் வகுப்பிற்கு மேல் தமிழ் மொழி மூலம் பயிலும் மாணவர்களுக்கு இந்த நூல்களை வி நியோகிக்கலாம். எப்படி இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவீர்கள் என்பதற்கான கீழ்வரும் விபரங்களை எமக்குத் தெரிவியுங்கள்.
உங்களுக்கான பிரதிகளை அனுப்பி வைப்போம்!
1000 பிரதிகளே அச்சிட எம்மிடம் நிதியுள்ளதால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுப்ப முடியாமல் போகலாம்!
இத்திட்டம் இலங்கைக்கு மட்டுமே. மற்றைய நாடுகளில் நீங்களே அச்சிட்டு விநியோகிக்கலாம்.