இக்கற்கை நெறிக்கு நீங்கள் கட்டணமாகச் செலுத்தும் பணம் ஆசிரியரின் நேரத்தை ஈடு செய்வதற்கும் மொழி வளர்ச்சிப் பணிகளுக்கும் பயன்படும்.
இக்கல்வியின்வழி அடையும் மெய்யறிவு விலையற்றது என்ற வகையில் நாம் குறிப்பிட்ட ஒரு தொகையைக் கட்டணமாகச் சொல்லவில்லை.
வசதியற்ற ஒருவர் இக்கல்வியைப் பெறுவதற்குப் பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் இக்கொள்கையை நாம் கடைப்பிடிக்கிறோம். நடைமுறைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு உளச்சுத்தியோடு உங்களால் இயன்ற தொகையைச் செலுத்துமாறு கோருகிறோம். நீங்கள் பொருளாதாரத் தன்னிறைவு கொண்டவராக இருந்தால் வசதியற்ற ஒருவரின் கற்கைக்குமாகச் சேர்த்து அதிகமாகப் பங்களிக்கலாம்.
எவ்வளவு செலுத்துவது என்று ஒரு முடிவுக்கு வர இயலவில்லை என்றால் கீழ்வரும் விதமாக நீங்கள் ஒரு தொகையை வகுத்துக்கொள்ளலாம்:
உங்கள் ஊரில், நீங்கள் விரும்பும் உணவகத்தில் ஒரு வேளை உணவருந்துவதற்கு ஆகும் தோராயமான செலவு எவ்வளவு என்று எண்ணிப் பாருங்கள்.