பாடசாலை நிர்வாகி / தலைமை ஆசிரியர்:
வணக்கம்.
எதிர்காலத்தில் அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் மேம்படுத்தப்பட்ட தமிழ் பாடத்திட்டத்துடன் இணைந்து பயணிப்பீர்கள் என நம்புகின்றோம். இதன் அடிப்படையில் கீழ்க்காணும் தரவுகளை வழங்கி உதவுமாறு வேண்டுகிறோம். மேலும் நாங்கள் உங்கள் பாடசாலை நிர்வாகத்தில் தலையிட மாட்டோம் என்பதை இங்கு உறுதி செய்து கொள்வதுடன், உங்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் எம்மால் இயன்றவரை செய்து தருவோம். இது தமிழ் மக்களின் மொழி பண்பாடு தாயக கல்வி மேம்பாடு போன்ற வற்றை முன்னெடுக்கும் பொது அமைப்பாக உங்கள் எல்லோரின் ஆலோசனை பங்களிப்புடன் செயல்படும். இத்துடன் உங்கள் பாடசாலையில் இருந்து இரண்டு நபர்களை தமிழ் மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணியில் (AD Tamil) அதன் பண்புக்கு அமைவாக உறுப்பினராக இணைத்துக் கொள்வதுடன் இவர்கள்/நீங்கள் AD Tamil இன் நிர்வாக அதிகாரியை தெரிவு செய்யும் அல்லது நிர்வாக அதிகாரியாக உரித்துடையவர் ஆகிறீர்கள்.
- நிர்வாகம்.
தமிழ் மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணி.