மாணவர்களுக்கான வினாக்கொத்து
இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தரஉத்தரவாதத்தில் மாணவ ஈடுபாடு
எப்பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களே பிரதான பங்குதாரர்கள் ஆவர். ஆகவே உங்கள் பல்கலைக்கழகத்தின் தரமேம்பாட்டில் பங்கெடுப்பது உங்கள் ஒவ்வொருவருடையதும் உரிமை மற்றும் பொறுப்பு ஆகும். இத்துடன் பட்டதாரிகளின் வேலையின்மையைக் குறைத்து நாட்டைப் பொருளாதார அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்வதற்கும் தரநிர்ணயச் செயற்பாட்டில் உயிர்ப்பான மாணவ ஈடுபாடு இன்றியமையாத ஒன்றாகும்.
ஆதலினாலே தயவுகூர்ந்து இதை ஒரு அரியவாய்ப்பாகக் கருதி இவ்வினாக்கொத்திற்கு உங்களின் நேர்மையான மற்றும் கவனமாக கருத்திற்கொள்ளப்பட்ட பதில்களை வழங்குவதன் மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தரஉத்தரவாதச் சபைக்கு, இக்கணக்கெடுப்பை வெற்றிகரமாக கொண்டுநடாத்த உங்களாலான உதவியைத் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இத்தேசிய கணக்கெடுப்பின் பெறுபேறுகளை ஒவ்வொரு அரச பல்கலைக்கழகத்தினதும் தரஉத்தரவாதத்தில் மாணவ ஈடுபட்டை மேலும் வலுச்சேர்ப்பதற்கான உத்திகளைக் கண்டறிவதற்காகவும் மற்றும் உருவாக்குவதற்காகவும் பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.
உங்களுடைய பதில்கள் அநாமதேயமாகவும் மற்றும் இரகசியமாகவும் பேணப்படும்.
இவ்வினாக்கொத்தைப் பூர்த்தி செய்ய 10 நிமிடங்களே தேவைப்படும்.