கருத்துக்கணிப்பு: வீட்டுப்பணியாளர்கள் பற்றிய முதலாளிகளின் பார்வை
இந்தக் கருத்துக்கணிப்பு கொழும்பில் அமைந்துள்ள இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தினால் (ICES) நடாத்தப்படுகின்றது. ICES என்பது இனத்துவம், அடையாள அரசியல், மனித உரிமைகள், அபிவிருத்தி மற்றும் பால் நிலை ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தும் இலங்கையிலுள்ள ஒரு ஆய்வு நிலையமாகும். இவ்விடயங்கள் தொடர்பான புரிதலை ஆழமாக்குதல் மூலம் நீதியான மற்றும் அமைதியான சமூகமொன்றிற்கான களநிலைமையை ஏற்படுத்திக்கொடுத்தலே ICES இனுடைய நோக்கமாகும்.

வீட்டுப்பணியாளர் ஒருவரின் முதலாளி என்ற வகையிலேயே நீங்கள் இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கெடுக்க வேண்டப்பட்டுள்ளீர்கள். இலங்கையில் வீட்டுப்பணியாளர்கள் தொடர்பான பரந்த ஆய்வொன்றின் ஒரு பகுதியாகவே இந்தக் கருத்துக்கணிப்பு இடம்பெறுகின்றது. வீட்டுப்பணியாளர்களின் வேலைசார் நிலைமைகள் மற்றும் வேதனம் வழங்கப்படுகின்ற வீட்டுப்பணி மீதான பணிக்கமர்த்துவர்களின் மனப்பாங்கு ஆகியவை உள்ளடங்கலாக இலங்கையில் வீட்டுப்பணியாளர்களின் பொதுவான நிலைமையை புரிந்துகொள்வதற்கு இவ் ஆய்வு முனைகின்றது.

இவ் ஆய்வில் பங்கெடுக்க உங்களது சம்மதத்தை வெளிப்படுத்துவதற்கு முன்னர் கீழுள்ளவற்றை வாசிக்கவும்.

இவ் ஆய்வில் பங்கெடுக்க உங்களுக்கு சம்மதமென்றால் 10 - 15 நிமிடங்கள் வரை செலவிடும் அநாமதேய இணையத்தள கருத்துக்கணிப்பில் உங்கள் தகவல்களை வழங்க கோரப்படுவீர்கள்.
இந்த ஆய்வு மூலம் பெறப்படும் தரவுகள் ஆய்வு வெளியீட்டுக்களிலும் அளிக்கைகளிலும் பாவிக்கப்படலாம். இந்த ஆய்வில் பங்கெடுப்பதால் ஏதாவதொரு பாதிப்போ நன்மையோ விளையுமொன்றோ அல்லது நஷ்டஈடு வழங்கப்படுமென்றோ எதிர்பார்க்கப்படவில்லை.
உங்களது உள்ளீடுகளின் அநாமதேயம் பேணப்படும். இந்த ஆய்வின் இரண்டாம் பகுதியில் (நேர்காணலும் குழுக் கலந்துரையாடல்களும்) நீங்கள் பங்கெடுக்க விரும்பினால் உங்களது தொடர்பு விபரங்கள் கோரப்படும். உங்களது தொடர்பு விபரங்கள் ஆய்வில் பயன்படுத்தப்படவோ வெளியிடப்படவோ மாட்டாது. அவை ஆய்வின் அடுத்த பகுதி தொடர்பாக உங்களை தொடர்புகொள்ள மட்டுமே பயன்படுத்தப்படும்.

இந்த ஆய்வில் பங்கெடுப்பது தொடர்பான முடிவு முற்றும் முழுதாக உங்களது தன்னிச்சையான முடிவாகும். இந்த ஆய்வு நிறைவடைவதற்கு முன்னால் எந்தவேளையிலும் நீங்கள் இந்த ஆய்விலிருந்து விலகிக்கொள்ளலாம். ஆய்வுச்செயன்முறையின் எந்தப் படிநிலையிலும் இந்த ஆய்விலிருந்து விலகிக்கொள்வதற்கான முழு உரிமையும் உங்களுக்கு உள்ளது. இந்த ஆய்வில் உங்களது பங்கேற்பு அநாமதேயமானது அதனால் உங்களது பதில்களை சமர்ப்பித்ததன் பின்னர் பதில்களை மீளப்பெறுவது சாத்தியமற்றதாகும். இந்த ஆய்வு தொடர்பாக கேள்விகளை கேட்பதற்கும் அவற்றிற்கு ஆய்வாளரிடம் இருந்து பதில்களை பெற்றுக்கொள்வதற்கும் உங்களுக்கு உரிமையுண்டு. இவ் ஆய்வு தொடர்பாக உங்களுக்கு மேலதிகமாக கேள்விகள் ஏதும் இருப்பின் தொடர்புகளுக்கு: ஆன்மேரி டி சில்வா - annemari.ices@gmail.com நீங்கள் இந்த ஆவணத்தின் பிரதியொன்றை பேண விரும்பின் இந்தப் பக்கத்தை அச்சிட்டோ சேமித்தோ வைத்துக்கொள்ளவும். நீங்கள் ஆய்வாளரிடம் பிரதியொன்றை கோரவும் முடியும்.

நீங்கள் மேலுள்ளவற்றை வாசித்து புரிந்துகொண்டு இந்த ஆய்வில் பங்கெடுக்க சுயேட்சையாக முன்வருகிறீர்களா? *
Next
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Additional Terms