தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனவும், கோயில்கள், பள்ளிக்கூடங்கள், கடைவீதிகள், மருத்துவமனைகள் என பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட முன்னுரிமை வழங்கப்படும், அதற்கான கணக்கெடுப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அந்தவகையில், உங்கள் ஊர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக உள்ள டாஸ்மாக் கடைகளைக் குறிப்பிடவும். உங்கள் கருத்துக்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
1. கீழே கேட்கப்பட்டுள்ள மாவட்டம்,
சட்டமன்ற தொகுதி , கடை இருக்கும் இடம், கடை எண் முதலிய தகவல்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு அவசியம் தேவை!
2. இது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் ஜூனியர் விகடன் இதழ், விகடன்.காம் உள்ளிட்டவற்றில் செய்திகளாக பதியப்படும்!