2016
2016 பொதுத் தகவல் தொழினுட்பவியல் பரீட்சை 
Sign in to Google to save your progress. Learn more

1. பின்வரும் துவித எண்களில் எது தசம எண் 35 இற்குச் சமவலுவானது

*
1 point

2. பின்வரும் குறியீடுகளில் எது மின்னஞ்சல் முகவரியில் எப்போதும் உள்ளடக்கப்பட வேண்டும்? 

*
1 point

3. பின்வரும் வரிப்படத்தைக் கருதுக.

*
1 point
Captionless Image

4. பின்வரும் பிரயோகப் பொதிகளைக் கருதுக:

         A தரவுத்தளப் பொதிகள்

         B முன்வைப்புப் பொதிகள்

         C விரிதாள் பொதிகள்

மேற்குறித்தவற்றில் எவை தரவுகளைத் தேக்கி வைத்து முறைவழியாக்கப் (process) பயன்படுத்தப்படலாம் ?

*
1 point

5. பின்வருவனவற்றில் எது சீரான வள இடங்காணி (URL) இன் சரியான வடிவமாகும் ?

*
1 point

6. பின்வரும் உருவில் ஒரு வகையான வலை மேலோடியின் (web browser) கருவிப் பட்டையின் (Toolbar) ஒரு பகுதி காணப்படுகின்றது.

*
1 point
Captionless Image

7. பின்வருவனவற்றில் எது நீண்டகாலத்திற்குக் கணினியுடன் பணியாற்றும்போது ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது ?

*
1 point

8. ஒட்டியிராத (non-contiguous) கோப்புகளை ஓட்டியுள்ள (contiguous) கோப்புகளாக மாற்றுவதன் மூலம் ஒரு வன்வட்டின் ஆற்றுகையை உச்ச அளவாக்குவதற்குப் பயன்படுத்தப்படத்தக்க பணிசெயல் முறைமையில் உள்ள பயன்பாட்டுக் கருவி (utility tool) யாது?

*
1 point

9. பின்வரும் வசதிகளில் சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் இருக்கும் வசதிகள் யாவை?

     A எழுத்துச் சரிபார்ப்பியும் நிகண்டும் (Spell  

         Checker and Thesaurus)

    B - பக்கத் திசையமைவு (Page Orientation)

    C - அஞ்சல் ஒன்றிணைப்பு (Mail merge)

*
1 point

10. பின்வரும் தசம எண்களில் எது துவித எண் 10001011 இற்குச் சமவலுவானது? 

1 point
Clear selection

11. இரு வெற்றிடங்கள் உள்ள பின்வரும் கூற்றைக் கருதுக:

இணையம் என்பது ……….. ஆக இருக்கும் அதே வேளை வலை என்பது.....

ஆகும்.

மேற்குறித்த கூற்றில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்குப் பின்வருவனவற்றில் எவை ஒழுங்குமுறையில் அமைந்துள்ள மிகப் பொருத்தமான பதங்கள் ஆகும் ?

*
1 point

12. பின்வரும் கூற்றுகளைக் கருதுக:

A- முறுக்கிணை (Twisted pair) வடங்கள் தரவுகளை ஊடுகடத்தும் ஊடகமாகச் செம்பைப் பயன்படுத்துகின்றன.

B - ஒளியியல் நார் (Optical fibre) வடங்கள் தரவுகளை ஊடுகடத்துவதற்கு ஒளி அலைகளைப் பயன்படுத்துகின்றன.

C - ஒளியியல் நார் வடங்களிலும் பார்க்க முறுக்கிணை வடங்களின் தரவு ஊடுகடத்தல் கதி கூடியதாகும். மேற்குறித்த கூற்றுகளில் எவை சரியானவை ?

*
1 point

13. பின்வரும் சேர்மானங்களில் எது இணையத்தின் சேவைகளை மாத்திரம் காட்டுகின்றது ?

*
1 point

14. ஒரு வெற்றிடமுள்ள பின்வரும் கூற்றைக் கருதுக:

ஒரு தரவுத்தளத்தில் …………….. ஆனது தரவுத் தொகுதியைத் தேக்கி வைப்பதற்கு (store) நிரைகளையும் நிரல்களையும் பயன்படுத்துகின்றது.

மேற்குறித்த கூற்றிலுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பின்வருவனவற்றில் எது மிகப் பொருத்தமான பதமாகும் ? 

*
1 point

*

1 point
Clear selection

15. பின்வருவனவற்றில் எது தரவுத்தள முகாமைத் தொகுதிகளுக்கு (DBMS) உதாரணங்களாகும் ?

*
1 point

16. ஒரு வெற்றிடமுள்ள பின்வரும் கூற்றைக் கருதுக:

தரவுத்தளத்தில் உள்ள உள்ள ஒரு தனி உள்பொருளில் (single entity) தகவல்கள் ……………… என்பதில் அடங்குகின்றன.

மேற்குறித்த கூற்றிலுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பின்வருவனவற்றில் எது மிகப் பொருத்தமான பதமாகும்? 

*
1 point

17.மூன்று அவதானிப்புகளும் இயல்தகு காரணங்களும் பின்வரும் அட்டவணையில் முறையே நிரல் 1 இலும் 2 இலும் சரியான ஒழுங்கிலன்றித் தரப்பட்டுள்ளன.

*
1 point
Captionless Image

18. பின்வரும் கூற்றுகளைக் கருதுக:

A - ஒரு தொலைக் கல்விச் சுற்றாடலில் மாணவர்கள் தமது வீட்டிலிருந்து எந்தவொரு நேரத்திலும் கற்றற் பொருள்களை அடையும் ஆற்றலைக் கொண்டிருக்கும் அதே வேளை பாரம்பரிய வகுப்பறைக் கற்றலில் பங்குபற்ற முடியாதபோது எளிதாக இப்பாடங்களில் பங்குபற்றலாம்.

செல்லிட உத்திகள் போன்ற தற்காலத் தொழினுட்பவியலைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு பயிரிடுவதற்கு கந்த பயிர்கள், பயிர்களின் தற்போதைய விலைகள் போன்ற தகவல்களை அரசாங்கம் வழங்கலாம்.

C - நெடுந்தூரப் புகையிரதங்கள், பேருந்துகள் போன்றவற்றின் பயணச் சீட்டுகளை முன்கூட்டியே பதிவுசெய்வதற்குத் தற்காலத் தொழினுட்பவியலின் மூலம் செல்லிட உத்திகளைப் பயன்படுத்தலாம்.

மேற்குறித்த கூற்றுகளில் எவை மின்சேவைகளுக்கு (e- சேவை) உதாரணங்களாகும் ?

*
1 point

*

1 point
Clear selection

19. பின்வரும் எவ்வழிகளில் ஒரு நச்சுநிரல் உமது கணினிக்கு ஊடுகடத்தப்படலாம் ?

A மின்னஞ்சலினால் அல்லது மின்னஞ்சலின் ஓர் இணைப்பினால்

B - இணையத்திலிருந்து விடயங்களைப் பதிவிறக்கஞ் செய்வதனால்

C பளிச்சீட்டு நினைவகக் (flash memory) கோல் போன்ற கழற்றத்தக்க தேக்ககச் சாதனங்களைப் பொதுவாகப் பயன்படுத்துவதன் மூலம்

*
1 point

20. பின்வரும் கூற்றுகளைக் கருதுக:

A MS-DOS என்பது கட்டளை நிரை இடைமுகத்தைப் (CLI) பயன்டுத்தும் பணிசெயல் முறைமையாகும்.

B இசுறு லினக்ஸ், ஹன்தான லினக்ஸ் என்பன இலங்கையர்களால் தேசிய மயமாக்கப்பட்ட இரு திறந்த பணிசெயல் முறைகளாகும்.

c - மைக்கிரோசொப்ற் வின்டோஸ் என்பது வரைவியல் பயனர் இடைமுகம் (GUI) இல்லாத பணிசெயல் முறைமையாகும்.

மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை

யாவை ?

*
1 point

21.ஓர் ஆவணத்தில் உள்ள பந்திக் குறிகளையும் ஏனைய மறைந்துள்ள வடிவமைப்புக் குறியீடுகளையும் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் பயன்படுத்தப்படும் கருவி யாது ?

*
1 point

22. நீர் ஒரு சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளைப் பயன்படுத்தி இப்போது ஓர் இரு பக்க ஆவணத்தைத் தட்டச்சிட்டுள்ளீரெனக் கருதுக. இச்சந்தர்ப்பத்தில் உமது அச்சுப்பொறியும் தயார் நிலையில் உள்ளதெனக் கொள்க. இவ்வாவணத்தை அச்சிடுவதற்கு மிகவும் உகந்த வழி யாது ?

*
1 point

23. பானு நேற்றுத் தயாரித்த ஓர் ஆவணத்தைப் பதிப்பித்துக்கொண்டு இருக்கின்றார். இக்கோப்பினைச் (ஆவணம்) சரியாகச் சேமித்து (save) வைத்தல் தொடர்பாகக் கீழே தரப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது யாது ?

*
1 point

24. விரிதாள் (spreadsheet) மென்பொருள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானவை யாவை விரிதாள்களில் தரவுகள் நிரைகளாகவும் நிரல்களாகவும் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒரு நிரையினதும் ஒரு நிரலினதும் இடைவெட்டு ஒரு கலம் எனப்படும்.

விரிதாள்களில் தரவுகள் நிரைகளாகவும் நிரல்களாகவும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

B  ஒரு நிரையினதும் ஒரு நிரலினதும் இடைவெட்டு ஒரு கலம் எனப்படும்.

ஒரு பணித்தாளின் ‘Home’அமைவின் கல முகவரி 1A ஆகும்.

*
1 point

25. ஒரு பணித்தாளின் கலப் பெறுமானங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளன.

A1 = 2   B1 = 3  C1 = 4 D1 = 5

=(AI+BI)/CI*DI என்ற சூத்திரம் கலம் B4இல் நுழைக்கப்பட்டுள்ளது. கலம் B4இல் காட்சிப்படுத்தப்படும் பெறுமானம் யாது ?

*
1 point

26. முன்வைப்பு மென்பொருள் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக:

A ஒரு படவில்லைக் காட்சியில் (slide show) சாவி Pஐ அழுத்துவதன்மூலம் முந்திய படவில்லையைப் பார்க்கலாம்.

B 'CTRL + N' சாவிச் சேர்மானத்தைப் பயன்படுத்துவதன்மூலம் ஒரு புதிய படவில்லையைச் செருகலாம்.

C திரை மீது ஒன்றுக்கு மேற்பட்ட படவில்லைகளைப் பார்ப்பதற்குப் படவில்லைத் தெரிவுக் காட்சியைப் (Slide sorter view) பயன்படுத்தலாம்.

மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை   யாவை ?

*
1 point

27. ஒரு பாடசாலையின் அலுவலகத்தின் தினசரிப் பணிகளில் உதவுவதற்காக ஒரு கணினிப் பிரயோக உதவியாளரின் சேவைகளைப் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்வரும் எத்துறையில் பெறப்பட்டுள்ள அனுபவம் ஒரு விண்ணப்பதாரருக்கு உகந்த தகைமையாகும் ?

*
1 point

28. ஒரு கணினியின் எக்கூறு (component) தரவு தொடர்பான செய்பணிகளைச் செய்கின்றது ?

*
1 point

29. இணையத்திற்குப் பிரவேசிப்பதற்குப் பின்வருவனவற்றில் எது அத்தியாவசியமன்று ?

*
1 point

30. பின்வரும் நிகழ்வைக் கருதுக

"ஒரு பொதுக் கணினி ஆய்கூடத்தில் உள்ள ஒரு கணினியில் ஒரு பயனர் X இனால் ஒரு கடவுச்சொல்லின் மூலம் பாதுகாத்துத் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பினுள்ளே வேறொரு பயனர் Y பிரவேசித்து மாற்றஞ் செய்துள்ளார்." மேற்குறித்த நிகழ்வுக்குப் பின்வரும் எது காரணமாக இருக்கலாம் ?

*
1 point

31. 1101101, 101001, 10010 என்னும் துவித எண்களின் இறங்கு வரிசை

*
1 point

32. 1960 களிலிருந்து கணினி வன்பொருள்களின் கிரயம் (cost ) கணிசமான அளவில் குறைந்திருக்கும் அதே வேளை மென்பொருள்களின் கிரயம் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளமையை அபர்ணா அறிந்துள்ளார். அவர் இதற்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

A தொழினுட்ப முன்னேற்றங்கள் வன்பொருளின் கிரயத்தைக் குறைக்கின்றன.

B மென்பொருளின் சிக்கற் தன்மையை அதிகரிக்கச் செய்தல் மென்பொருள் கிரயத்தை அதிகரிக்கச் செய்கின்றது.

மேற்குறித்த காரணங்கள் தொடர்பாகப் பின்வருவனவற்றுள் எதனை ஏற்றுக்கொள்ளலாம் ?

*
1 point

33. பின்வருவனவற்றில் எது தரப்பட்டுள்ள பாய்ச்சற் கோட்டுப்படத்தின் தருக்கத்தை வகைகுறிக்கின்றது ?

*
1 point
Captionless Image

34. பின்வரும் கூற்றுகள் தரப்பட்டுள்ள வரிசையில் நிறைவேற்றப்படும்போது X, Y, Z ஆகியவற்றின் பெறுமானங்கள் யாவை?

*
1 point
Captionless Image

35. ஒரு சமூக ஊடக வலைத்தளத்தில் சந்தித்த ராஜன் என்ற நண்பனைச் சந்திப்பதற்குச் செல்வதாக அருணனிடம் கமல் கூறுகின்றார். ராஜனைச் சந்திப்பதற்கு முன்னர் பின்வரும் விடயங்களைச் செய்யுமாறு கமலிடம் அருண் கேட்கின்றார்.

 A-சமூக ஊடக வலைத்தளத்தில் தரப்பட்டுள்ள ராஜனின் சொந்தத் தகவலைச் செவ்வைபார்க்க.

B- ஒரு சமூக ஊடக வலைத்தளத்தில் சந்தித்த ஒரு புதிய நண்பரைச் சந்திப்பதற்குச் செல்வதாகக் கமலின் பெற்றோருக்கு அறிவிக்க.

C - சந்திப்பதற்காகக் கமலின் வேறொரு நண்பனை வரவழைக்க.

கமலின் சொந்தப் பாதுகாப்புக்காக மேற்குறித்த கூற்றுகளில் எவை நியாயமாகப் பின்பற்றப்படத்தக்கவை ?

*
1 point

36

*
1 point
Captionless Image
 37, 38 ஆகிய வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பின்வரும் செய்நிரல் கூறைக் கருதுக.

37. மேற்குறித்த செய்நிரல் கூறு நிறைவேற்றப்படும்போது 'Num', 'Count' ஆகியவற்றின் பெறுமானங்கள் யாவை ? 

*
1 point

38. தரப்பட்டுள்ள செய்நிரல் கூறில் While தடம் எத்தனை தடவை நிறைவேற்றப்படுகின்றது ?

*
1 point

39. ஒரு குறித்த குறிமுறையில் A தொடக்கம் Z வரையுள்ள நெடுங்கணக்கு வரியுருக்கள் அடுத்துவரும் துவித எண்களாகக் குறிமுறைப்படுத்தப்பட்டுள்ளன. A.ஆனது 1000000 எனக் குறிமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வரியுரு C இற்குச் சமவலுவான துவித எண் யாது ? 

*
1 point

40. ஒரு பணிசெயல் முறைமையில் பயனர் கணக்குகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை ?

A. - ஒவ்வொருவரும் ஒரு பயனர் பெயருடனும் கடவுச்சொல்லுடனும் தனது பயனர் கணக்கிற்குப் பிரவேசிக்கலாம்.

B - பயனர் கணக்கு என்பது பிரவேசிக்கத்தக்க கோப்புகளையும் உறைகளையும் பற்றிக் குறிப்பிடுவதும் கணினியில் விருப்பத்திற்கேற்ப மாற்றப்படத்தக்க அமைப்புகள் (Setting) பற்றிக் குறிப்பிடுவதுமான தகவல் தொகுப்பாகும்.

C-பலருடன் ஒரு கணினியைப் பகிர்ந்து கொள்வதற்குப் பயனர் கணக்கு உம்மை அனுமதிப்பதில்லை.

*
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy