Paper 6
புலமைப்பரிசில் முன்னாயத்த பரீட்சை
Sign in to Google to save your progress. Learn more
Name *
1. 3500 மில்லிலீற்றர் கொள்ளவுள்ள பாத்திரத்தில் 1200   மில்லிலீற்றர் நீர் உண்டு. அப்பாத்திரத்திற்கு இன்னும் 3 லீற்றர் நீர் ஊற்றினால்  அப்பாத்திரத்தில் இருந்து நிரம்பி வெளியேறும் நீரின் அளவு *
5 points
2. ஒரு பிள்ளைக்கு 5 பிஸ்கட்டுக்கள் வீதம்  32 பிள்ளைகளுக்கு தேவையான பிஸ்கட்டுக்கள் எத்தனை *
5 points
3. ஒரு வருடத்தில் 30 தினங்களைக் கொண்ட மாதங்களை முறைப்படி எழுதுக   *
5 points
4. வகுப்பறை ஒன்றில் 3 கதிரைகளைக் கொண்ட 14 வரிசைகளும், 4 கதிரைகளைக் கொண்ட 6 வரிசைகளும் உண்டு. அவ்வரிசையில் உள்ள மொத்த கதிரைகள் எத்தனை ? *
5 points
5. புத்தக அலுமாரி ஒன்றில் ஒரு தட்டில் 12 புத்தகங்கள் வைக்கலாம் எனின், 672 புத்தகங்களை வைப்பதற்கு எத்தனை தட்டுக்கள் தேவை? *
5 points
6. மூன்று சவர்க்காரக் கட்டிகளை வாங்கும் போது ஒன்று இலவசமாக வழங்கப்படும். 60 சவர்க்காரக் கட்டிகளை வாங்கும் போது எத்தனை இலவசமாக  கிடைக்கும்? *
5 points
7. ஒரு மோட்டார் வண்டியில்  4 பேர் பயணம் செய்ய முடியும். 36 பேர் பயணிக்க  எத்தனை மோட்டார் வண்டிகள் தேவை? *
5 points
8. உபசரிப்பிற்காக 900ml குளிர்பானம் கொண்டுவரப்பட்டது. அதில் 672ml குளிர்பானம் பருகிய பின்பு எஞ்சிய பானத்தின் அளவு யாது? *
5 points
9. 12 பென்சில்களைக் கொண்ட 4 பெட்டிகளும், 60 பென்சில்களைக் கொண்ட 3 பெட்டிகளும் உண்டு எனின், ஏழு பெட்டிகளில் உள்ள பென்சில்கள் எத்தனை? *
5 points
10. ஒருவருக்கு 3 புத்தகம் வீதம் 438 புத்தகங்களை எத்தனை பேருக்கு பங்கிடலாம் ? *
5 points
11. புத்தகசாலை ஒன்றில் 866 தமிழ் புத்தகங்களும், 68 ஆங்கில புத்தகங்களும் உண்டு எனின், புத்தகசாலையில் உள்ள மொத்த புத்தகங்கள் எத்தனை? *
5 points
12. நோயாளி ஒருவருக்கு 6 மணித்தியாலங்களுக்கு ஒருமுறை மருந்து அருந்துமாறு கூறப்பட்டது. மு.ப 6.00 மணிக்கு முதல் முறை மருந்து அருந்தினார் எனின், மூன்றாவது முறை எத்தனை மணிக்கு மருந்தை  அருந்துவார்? *
5 points
13. 2 வில்லைகள் வீதம் ஒரு நாளைக்கு மூன்று முறை பாவிக்குமாறு 30 வில்லைகள் வழங்கப்பட்டன எனின், அது எத்தனை நாட்களுக்குப் போதுமானது? *
5 points
14. 5kg பூசணிக்காயில் 2kg 350g  வெட்டியெடுக்கப்பட்டால்  எஞ்சிய  பூசணிக்காயின் நிறை யாது?                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         *
5 points
15. 132 மாங்காய்களில் கால் பகுதி பழுதடைந்தது எனின், பழுதடையாத மாங்காய்கள்  எத்தனை? *
5 points
16. சுஜாதா வித்தியாலயத்தில் உள்ள மாணவர்களை விடவும் 2325 மாணவர்கள் கூடுதலாக ராகுல வித்தியாலயத்தில் உள்ளனர். ராகுல வித்தியாலயத்தில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கை 3516 எனின், இரண்டு பாடசாலைகளிலும் உள்ள  மாணவர்களின் மொத்த எண்ணிக்கை யாது? *
5 points
17. மிளகாய்த்தூள் 150g இன் விலை ரூ52.50 ஆகும் எனின், ஒரு kg மிளகாய்த்தூளின் விலை யாது? *
5 points
18. பிள்ளையினதும், புத்தகப்பையினதும் நிறை 45kg ஆகும். புத்தகப்பையின் நிறை 12kg எனின், பிள்ளையின் நிறை யாது? *
5 points
19. வேலி ஒன்றின் 5m இடைவெளிக்கொன்றாக 15 கொங்கிறீற் தூண்கள் நடப்பட்டது எனின், முதலாவது தூணிலிருந்து கடைசி தூண் வரையிலான தூரம் யாது? *
5 points
20. 492 மாம்பழங்கள் 6 பெட்டிகளில் சமமாக பொதி செய்யப்பட்டால், ஒரு பெட்டியிலுள்ள மாம்பழங்கள் எத்தனை *
5 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy