Special Project for COVID 19
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கற்ற தேர்ச்சிகளை மீள்வலியுறுத்தும் வகையிலும், பரீட்சைக்கு தயார்படுத்தும் வகையிலும் மாணவர்களுக்கு நிகழ்நிலைப் பயிற்சிகளை வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகமானது கணினி வள நிலையமூடாக நடாத்தி வருகிறது.
எமது வலய மாணவர்கள் தங்கள் பெயரினை தட்டச்சிட்டு பாடசாலையை தெரிவு செய்தல் வேண்டும். பின் வலயத்தையும், Northern Province என்பதையும் தெரிவு செய்தல் வேண்டும்.
எனைய மாணவர்கள் பெயரினை தட்டச்சிட்டு பாடசாலை, வலயம் ஆகிய பகுதிகளில் others எனவும் தெரிவு செய்து பயிற்சியை ஆரம்பிக்கவும்.
நிகழ்நிலைப்பயிற்சி தொழிற்படு நிலையில் இருக்கும் காலத்தில் எமது மாணவர்கள் அனைவரும் இதனை செய்து பார்த்தல் வேண்டும். புள்ளிகள் இங்கு முதன்மைப்படுத்தப்படாது. ஆனால் உங்கள் வருகை முக்கியமானது. உங்கள் பாடசாலை ஆசிரியர்களுக்கு உங்கள் பயிற்சி விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்.