குருநாகல் மாவட்டம் சியம்பலாகஸ்கொட்டுவ அந்நூர் அரபுக் கல்லூரி தேசிய மற்றும் சர்வதேச பல்கலைக்கழக அனுமதியை உத்தரவாதப்படுத்தும்இ இரு துறை கலைகளையூம் ஒரே கூரையின் கீழ் தங்கிக் கற்பதற்கான கல்விச் சூழலையூம் நீண்ட கால அனுபவம் வாய்ந்த அரச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரபு மொழி பட்டதாரி ஆசிரியர்களை உள்ளடக்கிய ஆசிரியர் குழாமையூம் கொண்டிருப்பது இக்கல்லூரியின் சிறப்பம்சமாகும்.
மனனப்பிரிவூ 03 வருடங்களும் ஷரீஆப்பிரிவூ 06 வருடங்களுமாக மொத்தம் 9 வருட கலைத் திட்டத்தை கொண்ட எமது பாடத்திட்டம் கீழ்வரும் தகைமைகளை உள்ளடக்கியதாகும்.
1. குர்ஆன் மனனம்
2. கா.பொ.த. சாதாரண தரம்
3. அஹதிய்யா பரீட்சை
4. தர்மாச்சார்ய பாரீட்சை
5. அல் ஆலிம் முதவஸ்ஸிதா
6. அல் ஆலிம் ஸானவிய்யா
7. ஷரீஆ உயர் தரம் (மௌலவி இ ஆலிம்)
8. கா.பொ.த உயர் தரம் (கலை/கணிதம்/விஞ்ஞானபிரிவூகள்)
9. பல்கலைக்கழக நுழைவூக்கான சிறப்புத்தேர்ச்சி
10. தொழில் சார் கல்விஇ கணனி இ தொழிநுட்பம்
நுழைவூக்கான தகைமைகள்
மனனப்பிரிவூ
- கல்வியைத்தொடர்வதற்கான உடல் ஆரோக்கியம் உடையவராயிருத்தல்.
- நற்குணமுடையவராயிருத்தல்.
- அல் குர்ஆனை சரளமாக ஓதுதல்
- 2024 ஜனவரி 31ம் திகதியில் 11 வயதையூடையவராயிருத்தல்.
- 2023 ஆம் ஆண்டு தரம் 05 இல் கற்பவராயிருத்தல்
- 2022 ஆம் ஆண்டு தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
ஷரீஆப்பிரிவூ
- கல்வியைத்தொடர்வதற்கான உடல் ஆரோக்கியம் உடையவராயிருத்தல்.
- நற்குணமுடையவராயிருத்தல்.
- 2024 ஜனவரி 31ம் திகதியில் 14 வயதையூடையவராயிருத்தல்.
- 2023 ஆம் ஆண்டு தரம் 08 இல் கற்றவராயிருத்தல்
- 9ம் ஆண்டு பாடவிதானத்தை தொடர்வதற்கான தகுதியூடையோராயிருத்தல்.
- அல் குர்ஆனை முழுமையாக மனனமிட்டு - மீட்டல் (தௌரா) முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
Contact Details: 0718299932 | www.annoor.lk