Published using Google Docs
Welcome to http://www.thirunarayan.com/Nammalwar's Thiruvaimozhi Commentary in Tamil- compiled from Dravidaveda
Updated automatically every 5 minutes

ACKNOWLEDGEMENTS

This document has been created as a thanksgiving to Mr.Vasudevan (my classmate in B.A.-Vaishnavism of Madras Univesity). Mr. Vasudevan had seen me writing examination of BA during 2007-2008 and had remembered me on June 28, 2011 and wanted me to give him the commentary of Nammalwar’s Thiruvaimozhi. So from August 30, 2011 onwards, I have been continuously searching for ways to convert the Nalayira Divya Prabhandham Commentary available on Dravidaveda website. I tried Adobe Acrobat Professional but it could not convert the tamil scripts into pdf. Accidentally (by the grace of Lord Srimannarayana), I came to know about the publishing aspect of Google Docs, which I had been using for over six months.  I thank GOOGLE for providing this feature wherein I can covert any text into pdf without actually investing heavily in software. This has given me an opportunity to link all Poorvacharya documents in my website http://www.thirunarayan.com. Thank you Mr.Vasudevan. If not for you, I would not have chanced upon this opportunity of rendering some service to Srivaishnavas.

Velukkudi Krishnan Swamy says

My mentor Mr.Vasudevan.V          (Adiyen)                  (P.B.Annangaracharya Swamy- related to

   My maternal Aunt- she is from Mudaliyandan family)

uyarvu aRa      uyar nalam*    udaiyavan       yavan avan*
Higher than the highest good - it's posessor - who    He
mayarvu aRa           madhi nalam*             aruLinan    yavan avan*
Remover of ignorance, giver of true knowledge, and grace - who    He
ayarvu aRum        amarargaL*           athipathi            yavan  avan*
Remebering always -the liberated souls- their Supreme Lord - who    He
thuyaraRu                 sudar adi*          thozhuthezhu                             enmananE! (2)        1.1.1
The Dispeller of sadness, with luminous feet: prostrate before them and get uplifted - Oh my mind

Oh my mind! you attain salvation by
prostrating at the bright shining Lotus Feet of the One,- the
unparalleled one, who has got everything that is GREAT in Him-  
who has blessed me with gnAnam and Bhakthi which destroys my  
"agnAnam" (ignorance and wrong knowldege) completely- who
is the Chief of immortal dEvAs."

உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்

மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்

துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.

 

பதவுரை

என் மனனே

-

எனது மனமே!

உயர்வு அற

-

(தன்னைப் பார்க்கிலும்) உயர்த்தி இல்லதாபடி

உயர்

-

உயர்ந்த

நலம்

-

(ஆனந்தம் முதலிய) கல்யாண குணங்களை.

உடையவன்

-

(சுயமாக) உடையனானவன்

யவனவன்

-

யாவனொருவனோ

மயர்வு அற

-

அஜ்ஞானம் நசிக்கும்படி

மதிநலம்

-

ஞானத்தையும் பக்தியையும்

அருளினள்

-

(அடியேனுக்குக்) கிருபை பண்ணினவன்

யவனவன்

-

யாவனொருவனோ.

அயர்வு அறும்

-

மறப்பு இல்லாத

அமரர்கள்

-

நித்யஸூரிகளுக்கு

அதிபதி யவன்

-

ஸ்வாமி யாவனொருவனோ

அவன்

-

அந்த எம்பெருமானது

துயர் அறு சுடர் அடி

-

துயர் அறப் பெற்ற சோதிமயமான திருவடிகளை

தொழுது

-

வணங்கி

எழு

-

நீ கடைத்தேறக்கடவை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதில், மஹோபகாரங்களைத் தமக்குச் செய்தருளின எம்பெருமானுடைய திருவடிகளைத் தொழுது மேன்மை பெறும்படியாக ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார்.

புறமதத்தவருடைய கொள்கைப்படி எம்பெருமான் நிர்க்குணனல்லன் ஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்கிற வேதாந்த ஸித்தாந்தத்தை முதலடியிலே வெளியிட்டருளுகிறார். இதனால், எம்பெருமான் தனது திருக்கல்யாண குணங்களைக் காட்டி இவ்வாழ்வாரை ஈடுபடுத்திக் கொண்டமை விளங்கும்.

குணங்களுக்குத் தோற்று அடிமைப்படுதல் என்றும் ஸ்வரூபமாகவே அடிமைப்பட்டிருந்தல் என்றும் இருவகைப்பட்டுள்ளதான அடிமையில் குணப்ரயுக்தமான அடிமையிற்காட்டிலும் ஸ்வரூபப்ரயுக்தமான அடிமையே சிறக்குமென்பது ஸம்ப்ரதாய ஸாரார்த்தமாயினும், ஆழ்வார் தம்மை எம்பெருமான் அகப்படுத்திக் கொண்டது திருக்குணங்களைக் கொண்டாதலால் தாம் இழிந்த துறையை முதலிலே பேசுகிறாரென்க. ஸ்வரூப ப்ரயுக்தமான அடிமையும் ஆழ்வார்க்குக் குறைவற்றதென்னுமிடம் “ஆகிலுங் கொடியவென்னஞ்ச மவனென்றே கிடக்கு மெல்லே” என்ற பாசுரத்தால் வெளியிடப்படுகின்றமை காண்க.

ஸ்வரூப ப்ரயுக்தமான அடிமை இயற்கையிலேயே இருக்கச் செய்தேயும் சேஷியானவன் கல்யாணகுணங்கட்கும் கொள்கலமாயிருப்பதனால் இக்குணங்களும் அடிமைக்கு ஓர் உபாதியாக அமைகின்றன வென்றுணர்க. ஸ்ரீராமபிரானுடைய வநவாஸ ஸமயத்திலே அத்ரிபகவானுடைய ஆச்ரமத்தில் பெருமாள் எழுந்தருளி மஹர்ஷியை அநுவர்த்தித்திருந்தபின்பு அவருடைய தேவியான அநஸூயையைப் பிராட்டி அநுவர்த்தித்திருக்கிறவளவிலே, அவள் பிராட்டியைப் பார்த்து ‘உற்றாரையும் செல்வத்தையும் விட்டுப் பெருமாள் பின்னே காட்டுக்குவந்த விது தைவ யோகத்தாலே உமக்கு நன்றாகக்கூடிற்று; நகரத்திலிருக்கிலுமாம். காட்டிலிருக்கிலுழாம்; பெண்டிர்க்குத் தெய்வம் பார்த்தாவே கிடீர். நீர் இப்படியே எப்போதும் பெருமாள் விஷயத்திலே அனுகூலித்திருக்கக் கடவீர்’ என்று சொல்ல; பிராட்டி வெட்கமடைந்து கவிழ்தலையிட்டிருந்து ‘எனக்குப் பெருமாள் பக்கலில் அநுராகம் ஸ்வரூபமாகவே உண்டாயிருக்கச் செய்தே அவர் தாம் குணங்களிற் சிறந்தவராகையாலே என்னுடைய அநுராகத்தை குணப்ரயுக்தமாக நாட்டார் நினைக்கக் கூடும்; எப்போதாவது ஒரு ஸமயம் அவரைக் குணங்களைவிட்டுப் பிரித்துக்காட்டக் கூடுமாகில் அப்போது என்னுடைய அநுராகம் ஸ்வரூபப்ரயுக்தமேயன்றி குணப்ரயுக்தமல்ல என்பது நன்கு விளங்க அவகாசமுண்டாகும்; அப்படி ஒருநொடிப்பொழுதும் காட்ட முடியாதபடி அவர் எப்பொழுதும் ஸமஸ்தகல்யாணகுணாம்ருதஸாகரமாக இருப்பதால் நான் அவர் பக்கல் இருக்குமிருப்பை அறிவிக்கப் பெறுகிறிலேன்; அவர் குணஹீநருமாய் விரூபருமா யிருந்தபோதிலும் நான் அவர்பக்கல் இப்படியே காணுமிருப்பேன்’ என்றாள் என்பது ப்ரஸித்தம். இளையபெருமாள் திருவடியோடே தம்மைப்பற்றிச் சொல்லிக் கொள்ளும்போது “அஹமஸ்யாவரோ ப்ராதா குணைர் தாஸ்ய முபாகத:” என்று பெருமாளுடைய திருவுள்ளத்தாலே நான் அவர்க்கு உடன் பிறந்தவனாகிறேன் என்னுடைய கருத்தினால் குணங்கட்குத் தோற்று அவர்க்கு அடிமைப்பட்டவன் நான் என்றதும் இங்கு நினைக்கத்தக்கது.

உபநிஷத்துப்போலே பகவத்குணத்தை அளவிடப்புகுந்து பின்வாங்கிப் பரிபவப்படாமல் ஆழ்வார் “உயர்வறவுயர் நலமுடையவன்” என்று அழகாகப் பேசி முடித்தனரென்ப.

உயர்வு பெற உயர்நலம்- உயர்ந்தவையென்று பேர்பெற்ற மற்ற வஸ்துக்கள் எல்லாவற்றினுடையவும் உயர்த்தி உண்மையன்றென்னும்படியும் தன்னுயர்த்தியே சாச்வதமாகும்படியும் உயர்ந்த கல்யாணகுணங்களை யுடையவன் என்றதாயிற்று.

இனி, உயர்வு என்று (உயவு என்னுஞ் சொல்லுக்கே வருத்தமென்ற பொருளுண்டென்றும் உயர்வு என்பதற்கு அப்பொருளில்லையென்றும் சிலர் கூறுவர்: பூருவாச்சாரியர்களின் வியாக்கியானங்களில் இவர்த்தமுள்ளது) வருத்தத்திற்குப் பேருண்டாதலால், வருத்தமில்லாமல் உயர்த்தி பெற்றனவான குணங்களையுடையவன் என்றலுமொன்று. மற்றையோர்க்கு ஒரு உயர்த்தியுண்டாக வேண்டுமானால் மிக்க வருத்தத்தாலன்றி உண்டாகமாட்டாது; “யுககோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ: புநஸ் த்ரைலோக்யதாத்ருத்வம்.

ப்ராப்தவாதி சச்ரும.” என்று - நான்முகக்கடவுள் பல்லாயிரம் யுகங்கள் விஷ்ணுவை ஆராதிதித்து ஸித்தி பெற்றானென்று சொல்லிற்று; பரமசிவன் முதலிய ஒவ்வொரு கடவுளரும் இங்ஙனமே வருத்தப்பட்டு ஸித்தி பெற்றமை வேத வேதாங்கங்களிற் கூறப்பட்டுள்ளது. அவர்களைப் போலன்றிக்கே எம்பெருமானது குணோத்கர்ஷம். எந்த ஆயாஸத்தாலுமன்றி இயற்கையாகவே அமைந்ததாயிற்று.

ஆளவந்தார் முதலிய நம் ஆசாரியார்கள் எம்பெருமானுடைய குணசாலித்வத்தை அருளிச்செய்யுமிடங்களில் “ஸ்வரபரவிகாவதிகாதிசயாஸங்க்யேய கல்யாண குணகண:” என்றருளிச்செய்வது காண்க. இதில் ‘ஸவாபாவிக’ என்றது - வருத்தமின்றி இயற்கையாகவே அமைந்த என்றபடி.

“உயர்வறவுயர்குண முடையவன்” என்னாதே ‘நலமுடையவன் என் கையாலே அவனது திருக்குணங்கள் முழுதும் பரம போக்யம் என்னுமிடம் பெறப்படும். நன்மையே உருவெடுத்திருக்கும்போலே. நலம் என்பது பால்பகா அஃறிணைப் பெறராதலால் பன்மைப்பொருள்பட்டு குணஸமூஹங்களைச் சொல்லக்கடவது ஆனந்தகுணமொன்றையே சொல்வதாகவுங் கொள்வர்; அப்போது மறற் குணங்கட்கும் உபலக்ஷணமாகிறது. ஆநந்தாவஹமான விபூதியையுடையவன் என்றலுமொன்று; காரியத்தைச் சொல்லும் சப்தத்தினால் காரணத்தை லக்ஷிக்கிற முறைமையின் காரியமான ஆனந்தத்தைச் சொல்லுகிற நல மென்னுஞ் சொல் காரணமாகன விபூதியை லக்ஷிக்கக் குறையில்லையென்க. இரட்டுற மொழிதலால் உயர்வறவுயர்ந்த திருக்குணங்களையும் விபூதியையு முடையவன் என்றும் முதலடிக்குப் பொருள் கொள்ளத்தகும்.

கூரத்தாழ்வான் இம் முதலடியிலே மிகவும் ஈடுபட்டிருப்பராம்: ‘எம்பெருமானுக்குக் குணமில்லை. விபூதியில்லை’ என்கிற குத்ருஷ்டியகளின் மிடற்றைப் பிடித்தாற்போல உபக்ரமத்தில்தானே

உயர்வறவுயர்நலமுடையவன் என்ற அழகு என்னே! என்று உருகிப்போவராம்.

மயர்வுஅற மதிநலமருளினன் = அடியோடு ஞானமே இல்லாமையும் ஒன்றை வேறொன்றாக அறிகையும், அதுவோ இதுவோவென்று ஸந்தேஹங் கொள்ளுதலும், தெரிந்ததை மறந் தொழிகையுமாகிற இவையெல்லாம்  மயர்வு எனப்படும்; அது அறும்படியாக ஜ்ஞாத பக்திகளிரண்டையும் தமக்குத் தந்தருளினபடியைக் கூறினர். மதிநலம் என்பதை ‘நலம்மதி’ எனக்கொண்டு ‘நல்ல ஞானத்தையருளினன்’ எனவும் பொருள் கூறுவர்; முளைக்கும்போதே வயிரம்பற்றி முளைக்கும் பதார்த்தம்போல உபக்ரமமே பக்திதசையாகப்பெற்ற ஞானம் என்றபடி.

‘எனக்கு அருளினன்’ என்ற வேண்டாவோ? எனக்கென்பதை ஏன் விட்டார்? என்னில்; எம்பெருமானுடைய விஷயீகாரம் பெறுதற்கு முன்பு தம்மை அஸத்கல்பராக (இல்லாதவராக) நினைத்திருக்கின்றமையால் ‘மயர்வறமதிநல மருளினன்’ என்பதற்கு முன்னே ‘எனக்கு’ என்று ஸ்வஸ்த்தையைக் கூறத் திருவுள்ளம் பற்றிலர் என்பர். துயரறு சுடரடி தொழுது என்ற பிறகே தம்மை உளராத நினைத்தார்ப்போலும். அதன் பிறகேயன்றோ என் என்று தமது ஸத்தையை வெளியிட்டுக்கொண்டார்.

“மயர்வறமதிநலமருளினன்’ என்ற இரண்டாமடியால், இத்தலையில் நினைவின்றியேயிருக்க, தானேவந்து அருளினன் என்றார். அங்ஙனம் தானாகவே வந்து அருளினவன் தன்னருள் கொள்வாரில்லாத ஒருவனோ’ என்ன; அவனருளையே எதிர்பார்த்திருப்பார் ஒருநாடாகவுளர் என்கிறார் மூன்றாமடியால்.

அயர்வறமமரர்களதிபதி = அயர்வாவது மறுப்பு; அது ஒருநாளுமில்லாதவர்களான நித்யஸூரிகளுக்கு நியாமகன் என்க.

துயரறு சுடரடி = அடியார்களுடைய துக்கங்களையெல்லாம் போக்கி அதனால் ஒளிபெற்று விளங்குகின்ற திருவடி என்று எம்பெருமானார்க்கு முந்தின முதலிகள் நிர்வஹிக்கும்படி; அதாவது - துயரறுக்குஞ் சுடரடி என்று கொண்டார்கள். அங்ஙனன்றியே எம்பெருமானார் ‘துயரறுக்குஞ் சுடரடி’ என்று பொருள் நிர்வஹிப்பராம். உன்ன சொல்வடிவத்திற்கு ஏற்ற பொருள் இதுவேயாகும். அதாவது - அடியார்கள் துயர்தீர, தான் துயர் தீர்ந்தானாயிருக்கை. எம்பெருமான் பரது:க்கது:க்கியாகையால் ஆச்ரிதருடையச் து:க்க நிவர்த்தியைத் தன்னுடைய து:க்க நிவ்ருத்தியாகக் கொள்ளுமியல்வினன் என்பதாம்.

:ழ = அதோகதியடைவதைத் தவிர்த்து உயர்கதியடைந்திடு என்றவாறு உஜ்ஜீவித்துப்போ என்றதாயிற்று.

இப் பிரபந்தத்தில் நிரூக்கப்படுகிற தத்துவ ஹித புருஷார்த்தங்களைச் சுருங்கச் சொல்லுகிறது இப்பாசுரம். திருமாலே பரதத்துவமென்றும் அவனது அடி தொழுகையே பரமஹிதமென்றும், (தத்க்ரதுந்யாயத்தாலே) அதனை ப்ராபிக்கையே புருஷார்த்தமென்றும் சொல்லிற்றாகிறது.

பிரபந்தம் இடையூறின்றி முடிவதற்காகப் பிரபந்தாரம்பத்தில் இயற்றப்பட வேண்டிய இஷ்ட தேவதாநமஸ்காரம் முதலான மங்களமும் சுடரடிதொழுதொழு என்பதனால் இயற்றப்பட்டதென்றுணர்க.

இப்பாட்டில், யவனவன் என்பதை ஒரே சொல்வடிவாகக்கொண்டு பொருளுரைக்கப்பட்டது. (வடமொழியில் ‘யோஸௌ என்பதுபோல இதனைக் கொள்க.) அன்றியும், யவன்- யாவனொருவன், அவன்- அவனுடைய என்று முதல் மூன்றடிகளிலும்பொருள் கூறி ஒவ்வொரு அடியோடும் ‘தொழுதெழென்மனனே!’ என்று கூட்டி மூன்று வாக்கியமாகவும் போஜித்துப் பொருள் கூறுவர். உயர்வறவுயர்நல முடையவன் யவன், அவன் சுயரறு சுடரடி தொழுதெழு; மயர்வற மதிநலமருளினன் யவன் அவன்  துயரறு சுடரடி தொழுதெழு- என்றிப்படி மூன்று வாக்கியமாகிறது. இதுவன்றி, (முதலடியில்) யவன்- யாவனொருவனோ, அவன் அவளினன் என்றும், (இரண்டாமடியில்) யவன் - அப்படி அருளினவன் யாவனோ, அவன் அதிபதி என்றும், (மூன்றாமடியில்) யவன்- அப்படி அதிபதியானவன் யாவனோ, அவன்- அவனுடைய, அடி தொழுது எழு நின்றிப்படி வாக்யைக வாக்யமாகவும் யோஜிப்பதுண்டு. (வாக்யைக வாக்யம்- பல சிறு வாக்கியங்கள் உள்ளடக்கிய மஹாவாக்யம்.) யவனவன் என்னுமிடங்களில் யாவன் என்பது யவன் எனக் குறுகியுள்ளது. “நெஞ்சினால் நினைப்பான் யவன்”(திருவாய்மொழி 3-6-9) ‘பயிலுந் திருவுடையார் யவரேலுமவர் கண்டீர்” (திருவாய்மொழி 3-7-1))  விண்ணுங் கடந்தும் பரப்பால்மிக்கு மற்றெம்பால் யவர்க்கும்” (திருவிருத்தம் 43) என்றவிடங்களிலும் இவ்வாறே. இங்கே யாவினா எஞ்சாமைப் பொருளது. “ஆவோயவர், யாவர்க்கும் என்றுள்ள பாடங்களை மறுத்து எகர முதலதாகப் பாடங்கொள்ள வேணுமென்று சிலர் வற்புறுத்துவர்; அது அஸம்பிரதாயம். ஏட்டுப்பிரதிகளிலெல்லாம் யகர முதலான பாடமே காண்கிறது; ‘ஆலோடல்லது யகர முதலாது” (தொல்காப்பிய்ம் எழுத்ததிகாரம் மொழிமரபு 32.) என்ற விதிக்குக் கதியில்லை யோவெனின்; அச் சூத்திரவிதி இயற்கை மொழிக்கேயன்றிச் செய்யுளில் வேண்டுழிக் குறுக்கல் பெற்ற மொழிக்கு விலக்காகாது என்று கற்றுணர்ந்த பெரியோர் கூறுவர்.

இப்பாட்டில், முதலடியால் கல்யாண குணமுடைமையும், இரண்டாமடியால் அவற்றுள் முக்கியமான காருண்யமும், மூன்றாமடியால் நித்யவிபூதியாட்சியும், நான்காமடியால் திருமேனியுடைமையும் அருளிச் செய்ததனால் இப்பாசுரம் முழுதும் குத்ருஷ்டிகட்குக் கழுத்துப்பிடியாமென்ப.

ஸ்ரீஹஸ்திசைல சகரோஜ்ஜ்வல பாரிஜாதனான பேரருளானனுடைய திருவடிகளைத் (திருவேங்கடமுடையான் திருவடிகளைப் பூவார்கழல்களென்றும், அழகிய மணவாளன் திருவடிகளைப் பொதுநின்ற பொன்னங்கழல் என்றும், திருப்பொலிந்த சேவடி என்றும் வழங்குதல் போல.) துயரறு சுடரடி என வ்யவஹரித்தல் ஸம்ப்ரதாயமாதலால் இப்பாசுரம் தேவப்பெருமாளை நோக்கியதென்று பெரியோர் பணிப்பர்.

 

English Translation

Arise, O heart, worship the feet of the one, who is higher than the highest good, who is the Lord of the ever-wakeful celestials, who dispels all doubt and grants pure knowledge.

mananakamalamaRa* malarmisai ezhutharum*
mananuNar vaLavilan,* poRiyuNar vavaiyilan*
inanuNar, muzhunNalam,* ethirnNikazh kazhivinum*
inanilan enanuyir,* miku narai ilanE.        1.1.2

"My "uyir" (AntharyAmi) is He, who is- incomprehensible  even by
those yOgis, who are able to control their desire(lust), anger arising
in their minds,- immeasurable by the fullest capacities of five sense
organs, - has got such attributes and character, - who
has got no one equal to Him at all times (past, present and the
future)- who has got none greater than Him."

மனனக மலமற மலர்மிசை யெழுதரும்

மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்

இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்

இனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே.

 

பதவுரை

மனனகம்

-

மனத்திலேயிருக்கிற

மலம் அற

-

(காமம் கோபம் முதலிய) தீக்குணங்கள் கழியக் கழிய (அதனால்)

மலர்

-

மலர்ந்ததாகி

மிசை எழ தரும்

-

மேலே மேலே விருத்தியடைகிற

மனன் உணர்வு

-

மாநஸ ஜ்ஞான மென்கிற யோக வுணர்ச்சியால்

அளவிலன்

-

அளவிடப்படாதவனும்

பொறி உணர்வு

-

(மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும்) வெளியிந்திரியங்களின் ஞானத்தினால் அளவிடப்படாத’வனுமாய்

இனன்

-

இப்படிப்பட்டவனும்

முழு உணர் நலம்

-

பரிபூர்ண ஞானானந்த ஸ்வரூபியும்

எதிர் நிகழ் கழிவினும்

-

எதிர்காலம் நிகழ்காலம் இறந்தகாலம் என்ற மூன்று காலங்களிலும்

இவன் இலன்

-

ஒப்பு இல்லாதவனும்

மிகுநரை இலன்

-

மேற்பட்டவ ரில்லாதவனுமா யிருப்பவன்

என் நன் உயிர்

-

எனக்கு நல்ல ஆத்மா.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் இவ்வாழ்வாரை வசப்படுத்திக்கொண்டது தனது திருக்கல்யாண குணங்களைக் காட்டி யாதலால் அக்குணங்களிலே முற்படி இழிந்து பேசினார். அக்குணங்கள் ஸ்வரூபத்தைப் பற்றி நிற்குமேயொழிய நிராச்ரயமாய் நில்லாது; ஆகவே அக்குணங்களுக்கு ஆச்ரயமான ஸ்வரூபத்தை அவள் அவன் என்று கீழ்ப்பாட்டிலேயே ப்ரஸ்தாவித்தார். அந்த திவ்ய ஸ்வரூபமானது சித்து அசித்து என்கிற இரண்டு தத்துவங்களிற்காட்டிலும் விலக்ஷணமாயிருக்கிறபடியை இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.

“மனனகமலமற மலர் மிசையெழுதரும் மனனுணர்வளவிலன்” என்னுமளவால் ஜீவாத்மஸ்வரூபத்திற்காட்டிலும் பரமாத்மஸ்வரூபம் விலக்ஷணம் எனப்படுகிறது. “பொறியுணர்வலையிலன்” என்று ஜடப்பொருள்களிற்காட்டில் விலக்ஷணம் எனப்படுகிறது ஞானமும் ஆனந்தமுமே வடிவெடுத்ததாயும், முக்காலங்களிலும் ஒப்புயர்வற்றதாயுமிருக்கிற அந்த பரமாதம் ஸ்வரூபம் அடியேனுக்குத் தாரகமாயுமிரா நின்றது என்கிறார் பின்னடிகளில். என்னுயிர் என்றதையும் ஒரு விசேஷணமாகக் கொண்டு அப்படிப்பட்டவனது சுடரடி தொழுதெழன்மனனே!- என்று முன்பாட்டோடே கூட்டிப் பொருளுரைத்துக் கொள்வதுமுண்டு.

சிற என்றதை ‘அற அற’ என்று இரட்டித்துக் கொள்க. ‘சிரமமாக ஒழிய என்பது பொருள். மன்னகமலம் = ‘காமா கிரோதச்ச லோபச்ச ஹர்ஷோ மாநோ மதோ த்ருதி:- விஷாதச் சாஷ்டமா: ப்ரோக்த: இத்யேதே மநஸோ மகா:” என்று சொல்லப்பட்ட காமம் குரோதம் முதலிய துர்க்குணங்கள் படிப்படியாகக் கழிந்து கொண்டேவர, அதனால் மனவுணர்சசியானது விகாஸம் பெற்று மேன்மேலுங் கொழுந்துவிட்டுக் கிளர்ந்து வரும். (அப்படிப்பட்ட மாநஸஜ்ஞாநத்தாலே ஜீவாத்மா உணரப்படுவன்; எம்பெருமானோவெனில் அப்படி உணரப்படமாட்டான் என்க.

(மனன் அகம்) அகம் - ஏழாம் வேற்றுமையுருபு; மநஸ்ஸிலே என்றபடி மனனுணர்வு- மாநஸஜ்ஞானம்; (அதனாலே) அளவு- பரிச்சேதித்தல்; அதை யுடையவன் ஜீவாத்மா; அஃதில்லாதவன் எம்பெருமான் என்க. இங்ஙனன்றியே, மனனுணர்வு என்பதற்கே மனத்தினாலுணரப்படும் ஜீவாத்மா’ என்று பொருள் கொண்டு, அதனளவல்லாதவன் எம்பெருமான் என்றும், பொறியுணர்வவை என்பதற்கு- கண் முதலிய இந்திரியங்களால் உணரப்படும் பொருள்கள் என்றுபொருள் கொண்டு அவைபோலல்லாதவன் எம்பெருமான் என்றும் உரைப்பர்.

பகவத் ஸ்வரூபமானது சேதநாசேதந ஸ்வரூபங்களிற் காட்டில் விலக்ஷணம் என்று சொல்லவேணுமானால் ‘ஜீவாத்மாவைப்போலல்ல; ஜடப்பொருள் போலல்ல’ என்றிப்படி (எளிதாக)ச் சொல்லலாமே; அங்ஙனம் சொல்லாமல் “மன்னகமலமற” என்று தொடங்கி ‘ஜீவாத்மா மாநஸஜ் ஞானத்திற்கு விஷயமாகவல்லவன், ஜடப் பொருள் பாஹ்ய இந்திரியங்களுக்கு விஷயமாகவற்று’ என்கிற விஷயங்கள் சொல்லப்படுவதற்குக் காரணம் ஏதென்னில்; உலகத்திற் சில பதார்த்தங்களுக்குப் பரஸ்பர வைலக்ஷண்யம் குறையற்றிருக்கச் செய்தேயும் ஏதாவது ஒரு ப்ரகாரத்தாலே ஸாம்யமும் சொல்லக்கூடியதாயிருக்கும்; காண்மின்; பொன்னும் கரியும் ஒன்றோடொன்று நெடுவாகி பெற்றிருக்கச் செய்தேயும், பொன்னைக் காண்கிற கண்ணே பொன்னேயுங் காணாநின்றது என்று இப்படியால் ஒரு ஸாம்யமும் சொல்லக் கூடியதாயிருக்குமே; அப்படிப்பட்ட ஸாம்யமாவது எம்பெருமானுக்கு சேதநாசேதநங்களோடு உண்டோவென்னில் அதுவுமில்லை. யென்கைக்காக ஜீவாத்மாவை கிரஹிக்கிற இந்திரியம் இன்னதென்றும் ஜடப் பொருள்களை க்ரஹிக்கிற இந்திரியங்கள் இன்னவையென்றும் கூறப்பட்டதென்க.

இங்ஙனம் சொல்லக்கூடுமோ? எம்பெருமான் பாஹ்ய இந்திரியங்களாலே க்ரஹிக்கக்கூடியவனல்லனாயினும் அழுக்கற்ற மனத்தினால் க்ரஹிக்கக்கூடியவனாக ஓதப்பட்டிருக்கின்றானே, அதற்கு மாறாக “மனனுணர்வளவிலன்” என்னக்கூடுமோ? என்னில்; கூடும். எம்பெருமான் விசுத்தமான மனத்தினால் க்ரஹிக்கக்கூடியவன் என்று ப்ரமாணங்கள் சொன்னதற்குக் கருத்து யாதெனில்; ‘எம்பெருமான் அப்படிப்பட்டவனெல்லன், அவ்வளவனல்லன்’ என்றிப்படி அறியக்கூடியவன் என்று சொல்லுவதேயாம். ஆதலால் அந்த: காரணத்தினால் ஜீவாத்மா க்ரஹிக்கப்படுவதற்கும் பரமாத்மா கிரஹிக்கப்படுவதற்கும் நெடுவாசியுண்டென்க.

எம்பெருமான் அடியோடு ஞானத்திற்கே விஷயமல்லன் என்று சொல்லி விட்டால் ஆகாசத்தாமரை, மலடிமகன், முயற்கொம்பு முதலிய வஸ்துக்கள்போல் எம்பெருமானும் ஒரு அஸத்பதார்த்தம் (இல்லாத பொருள்) என்று சொன்னதாக முடியுமாதலால், அப்படிப்பட்ட துச்சத்வசங்கை எம்பெருமானிடத்து உண்டாகாமைக்காக விசுத்தமான அந்த: காரணத்தினால் க்ரஹிக்கக்கூடியவனாகச் சொல்லிற்றேயன்றி, உண்மையில் அணுத்ரவ்யமான ஜீவாத்மா க்ரஹிக்கப்படுவதுபோல் விபுத்ரவ்யமான பரமாத்மா க்ரஹிக்கப்பட முடியாதென்ப.

இனன் = இப்படிப்பட்டவன் முன்னடிகளிற் சொன்ன தன்மைகளையே உட்கொண்டு ‘இப்படிப்பட்டவன்’ என்று அநுபாஷிக்கிறபடி முன்பு சொல்லப்பட்டதையே மீண்டும் அநுபாஷணஞ் செய்தல் ஈடுபாட்டின் மிகுதியை வளக்கும்.

உணர் முழுநலம் = உணர் என்றது உணர்வு என்றபடி: (ஞானம்) என்க. நலம்- ஆந்தம். முழு என்றதை இரண்டனோடுங் கூட்டுக. கட்டடங்க ஞானமுமாய் கட்டடங்க ஆனந்தமுமாயிருக்குமென்றவாறு. பரமாத்ம ஸ்வரூபத்தில் ப்ரகாசமல்லாததும் அநுகூலமல்லாததுமான பாகமே கிடையாதென்றதாயிற்று. ஆனந்தமும் ஞான விசேஷமே யாதலால் ஒன்றைச் சொன்னாலே போதுமே; ஆனந்தம் ஞானம் என்ற இரண்டையுஞ் சொல்லத் தேவையில்லையே  யென்னில்; அப்போது இனன் என்றதற்கு ‘உபமானம்’ என்று பொருள்கொண்டு, நேராகத் தன்னை அறிய முடியாமையாலே எப்போதும் உபமானத்தினாலேயே அறியப்படுவதான முழுநலமாயிருக்கும் என்று உரைத்துக்கொள்ளலாம். உபநிஷத்து “யுதாஸைந்தவகந” என்று ஓர் உபமானத்தையிட்டேயன்றோ பரப்ரஹ்ம ஸ்வரூபத்தை நிரூபிப்பது. ஆழ்வார் தாமும் “கடிசேர் நாற்றத்துள்ளாலை யின் பத்துன் பக்கழிநேர்மை. ஒடியாவின்பப் பெருமையோன்” (திருவாய்மொழி: 8-8-2) என்று ஓர் உபமானத்தையிட்டு நிரூபிக்கின்றமை காண்க.

நம் தர்சனத்தில், சித்து அசித்து ஈச்வரன் என்ற மூன்று தத்துவமே உள்ளது. ஈச்வரன் மற்றை யிரண்டு தத்துவங்களிற் காட்டில் விலக்ஷணன் என்பது முன்னடிகளிலேயே வியக்தமாகக் சொல்லப்பட்டிருக்க, ‘எதிர்நிகழ்கழிவினும் இன்னிலன்’ என்று மூன்று காலங்களிலும் ஒப்பில்லாதவன் என்று மறுபடியும் சொல்வதற்குப் பயன் ஏன்? என்னில்; கேண்மின்; ஸாதாமிய த்ருஷ்டாந்தமென்னும் வைதர்மிய த்ருஷ்டாந்தம் என்றும் த்ருஷ்டாந்தம் இருவகைப்படும். அவனைப்போல் இவனிருக்கிறான். என்று அந்வயமுகத்தாலே ஒப்புச் சொல்லுகை ஸாதர்மிய த்ருஷ்டாந்தம்; அவன் எப்படி அயோக்கியனாயிருக்கிறானோ அப்படி இவன் அயோக்யனல்லன்’ என்று வ்யதிரேகமுகத்தாலே சொல்லுகை வைதர்மிய த்ருஷ்டாந்தம். இப்பாட்டின் முன்னடிகளால் எம்பெருமானுக்கு ஸாதர்மிய த்ருஷ்டாந்தமில்லையென்றது, ‘இனனிலன்’ என்பதால் வைதர்மிய த்ருஷ்டாந்தமும் இல்லை யென்னப்படுகிறது. சேதநாசேதநங்களைப்போல எம்பெருமானும் இந்திரிய க்ராஹ்யன், என்னக்கூடுமானால் அப்போது ஸாதார்மிய த்ருஷ்டாந்தமுண்டாகும்; அங்ஙனல்லன் என்று சொல்லப்பட்டமையால் ஸாதர்மிய த்ருஷ்டாந்தமில்லையென்று முன்னடிகளிற் சொல்லிற்றாயிற்று. இனி, ‘எம்பெருமான் அவைபோலல்லன்’ என்று சொல்லுகிற முகத்தால் வைதர்மிய த்ருஷ்டாந்த ஸம்பாவமாவது எம்பெருமானுக்குச் சொல்லக்கூடுமோவென்று விமர்சித்துப் பார்த்து அதுவுமில்லை யென்கிறது இனனிலன் என்பது.

இப்படிச் சொல்லும்பக்ஷத்தில் எம்பெருமான் சேதநாசேதநங்கள் போலல்லன் என்றுஞ்சொல்ல முடியாது, என்பதாகத் தேறுகின்றது; ஆகவே ‘எம்பெருமான் சேநாசேதநங்களைப் போன்றவன், என்று முன்னடிகட்கு முரணாக ஸ்தாபிக்கப்பட்டாகிறதே என்று சிலர் சங்கிக்கலாம்; அப்படியல்ல. வைதர்மிய த்ருஷ்டாந்தமில்லையென்று சொல்வதன் கருத்து யாதெனில்; ‘வஸிஷ்டன் சண்டாளனைப் போலல்ல’ என்று ஒருவன் சொன்னால், ‘சீ சீ, அப்படிச் சொல்லாதே’ என்று ஒருவன் அதனை மறுத்துச் சொன்னானாகில்’ வஸிஷ்டர் சண்டாளனைப்போன்றவர்தாம்’ என்று ஸ்தாபிப்பதா அதன் கருத்து? அல்ல; எடுத்துக்கழிக்கவும் தகாத ஒரு ஹேயவஸ்துவோடே ஸர்வோத்க்ருஷ்ட வஸ்துவுக்கு ஸாமன்யம் உண்டென்கையும் ஸாம்யம் இல்லையென்கையும் இரண்டும் இகழ்வாம்; ஸாம்யப்ரஸக்தியேயில்லாத வஸ்துவேடே ஸாம்யத்தை மறுப்பதும் தகாததேயாம்.

இவ்வளவு அர்த்தங்களையுஞ் சுருக்கி ஒன்பதினாயிரப்படியிலே நஞ்சீயர் அருளிச்செய்கிறார்- “அவனோடு ஒவ்வாதென்று சொல்லுகைக்கும் ஸத்ருசமாயிருப்பதொரு பதார்த்தத்தையுடையனல்லன் என்கிறது”  என்று.

இங்ஙனேயாகில், “கார்வண்ணந் திருமேனி கண்ணும்வாயும் கைத்தலமுமடியிணையுங் கமலவண்ணம்” என்றும் “நீலமேகநிபம்” என்றும் இப்படியே பலரும் பல த்ருஷ்டாந்தங்களைக் கொண்டு எம்பெருமானை வருணிப்பது சேருமோ? எனில்; சேராதுதான்; நெஞ்சில் ஒருபடியாகப் பதிவதற்காக ஏதோ சில உபமானங்களைக் கூட்டிச் சொல்லுகிறதேயொழின, உண்மையில், பரஞ்சோதிக்கு ஸர்வாத்மநாவிஸத்ருசமான வஸ்துக்களை உவமை கூறுதலும் இகழ்வேயா மென்பதை இவ்வாழ்வார் தாமே மேலே “ஓட்டுரைத் திவ்வுலகுக்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும், பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ!” என்று ஸ்பஷ்ட்மாகவே அருளிச்செய்கிறார்.

இன்னுணர் முழுநலம் என்பதற்கு “நேராகத் தன்னை அறிய முடியாமையாலே எப்போதும் உபமானந்தாலேயே அறியப்படுவதான முழுநலமாயிருக்கும்” என்றும் ஒருபொருள் கொள்ளலாமென்று மூன்றாமடியில் சொல்லிவைத்து, நான்காமடியில் வந்து இன்னிலன் (உமானமற்றவன்) என்று சொல்லுவது நேர்விரோதமன்றோ வென்று சிலருடைய நெஞ்சு குழம்பியே கிடக்கும். இதற்கு நாம் என் செய்வோம்! ஏதாவதொரு உபமானத்தையிட்டுப் புகழ்ந்தாலன்றி வஸ்துஸ்வரூபம் தெரிய மாட்டாதாகையாலே உபமானத்தைக்கொண்டே உணரவேண்டியதாயுமிரா நினறாது; உபமானத்துக்கு அர்ஹமான வஸ்து எதுவுமில்லை என்கிற உண்மைப் பொருளை மறையாதே வெளியிட வேண்டியதாயுமிரா நின்றது: ஆகையாலே இந்த விரோதம் அபரிஹார்யமாய் ஸஹ்யமாகக் கடவது.  இதனை எதுபோலக் கொள்ள வேணுமென்றால்- “எனதாவி தந்தொழிந்தேன் இனி மீள்வதென்பதுண்டே” என்று ஆத்மஸமர்ப்பணம் பண்ணி “எனத தாவியார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே” என்று அதனை உடனே மறுத்துக் கூறுமிடத்து ஆத்மஸமர்ப்பணம் பண்ணவும் வேணும் ஐயோ! அநியாயமாகப் பண்ணினோமே! என்று அநுதாபப்படவும் வேணும்’ என்று சாஸ்த்ரார்த்தம் தேறுவதுபோல், எம்பெருமானை உபமானமுகத்தாலே புகழவும் வேணும், உடனே, ஐயோ! விலக்ஷண வஸ்துவுக்கு ஒப்புச்சொல்லி அவத்யத்தை விளைத்தோமே! என்று அநுதாப்படவும் வேணும் என்று சாஸ்திரார்த்தமாகக் கொள்ளத்தக்கது.

மிகுநரைஇலன்= மிகுநர் என்றால் தன்னைப்பார்க்கிலும் மேற்ப்பட்டவர்; எம்பெருமான்தானே ஸர்வஸ்மாத்பரனாகையாலே அவனுக்கு மேற்பட்டார் ஆருமில்லையென்கிறது. அவனுக்கு ஸமானமானவர்களே இல்லை என்ற முடித்தபின்பு. மேற்பட்டாரிருக்கக்கூடுமோ வென்கிற சங்கையே உண்டாக இடமில்லாதிருக்க, “மிகுநரையிலன்’ என்னக்கூடுமோ வெனின்;“ந தத் ஸமச்சாப்யதிகச்ச த்ருச்யதே” என்ற ச்வேதாச்வதர உபநிஷத்தின் சாயையை அடியொற்றிச் சொல்லுகிறபடி. அவ்வுபநிஷத்துதான் அப்படி சொல்லக் கூடுமோவென்னில்; எம்பெருமானுக்கு மேற்ப்பட்டவர்கள் எப்படி அஸம்பாவிதர்களோ அப்படியே ஒத்தாரும் அஸம்பாவிதர்களென்று உபமாநரா ஹித்யத்யத்தைத் திடப்படுத்துவதற்காகவே சொல்லுகிறதென்று நஞ்சீயர் ஒரு வழி காட்டினர்.

முதற்பாட்டில் உயர்வில்லாதவனென்றார்; உயர்வில்லாவிடினும் ஒப்புண்டோ என்று சங்கித்து, ‘மிகுநரையிலேனே’ என்று கொண்டு முன் சொன்ன உயர்வில்லாத ஸர்வேச்வரனைச் சுட்டி, அவன் சேதநாசேதந விலக்ஷணஜ்ஞாநாந்த ஸ்வரூபியாதலால்எதிர் நிகழ்கழிவினும் இனனிலன் ஸமாநனில்லாதவன் என்றார் இப்பாசுரத்தில் என்றுங்கொள்ளலாம். அப்பொழுது, இனன்- இப்படிப்பட்டவனுடைய என்று பொருள்கொண்டு, சுடரடிதொழுதெழென் மன்னே! என்று முன்பாட்டோடே கூட்டிக்கொள்க.

என்னுயிர் என்பதை என் நன் உயர் என்றும், எனன் உயிர் என்றம் இரண்டு வகையாகவும் பிரிக்கலாம்.

மனன் இனன் என்ற விடங்களில் மகரனகரப்போலி அறிக. மனம் என்றாலும் மனன் என்றாலும், இனன் என்றாலும் இனம் என்றாலும் ஒக்குமென்க. இனன் என்பதற்கு இப்படிப்பட்டவனென்று பொருளாகும்போது, இனன் என்று னகர வீற்றதாகவே சொல்வடிவமாகும்.

 

English Translation

He cleanses the heart, makes it blossom and grow, he is beyond the ken of thought, feeling and senses, He is pure consciousness, all goodness, and eternal. He has no peer or superior, he is all our souls.

ilanathu udaiyanithu* ena ninaivariyavan*
nilanidai visumbidai* uruvinan aruvinan*
pulanodu pulanalan,* ozhivilan parantha* an-
nalanudai oruvanai* naNukinam naamE.*        1.1.3

I have already attained that emperumAn.-
who can not say that He has this in Him and He does not have that in
Him- (means He has Everything in Him; yet He is attached to nothing)
such a great attribute He has-
He has entered into the forms of everything in the Universe and in
"viNNagam" (dEva, Brahma, Vikunta lOkam)- at the same time ,He is of
no form .  Like that, even though He has mixed Himself with everything
that can be perceived by sense organs, He still can NOT be perceived
by our senses; _ He has got all that is spread everywhere- the emperumAn-  
who has got such GREAT attributes- I have already attained Him."

இலனது வுடையனி தெனநினை வரியவன்

நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்

புலனொடு புலனலன் , ஒழிவிலன், பரந்த அந்

நலனுடை யொருவனை நணுகினம் நாமே.

 

பதவுரை

அது இலன் (என)

-

அந்தப் பொருள் (தனக்கு) இல்லாதவனென்றும்

இது உடையன் என

-

இந்தப் பொருளையுடையவன் என்றும்

நினைவு அரியவன்

-

நினைப்பதற்கு அருமைப்பட்டவனாகியும்

நிலன் இடை

-

பூமி முதலான (கீழ்) உலகங்களிலும்

விசும்ப

இடை

-

ஆகாசம் முதலான (மேல்) உலகங்களிலும் (உள்ள)

உருவினன்

-

ரூபியான அசேநப் பொருள்களையுடையவனாகியும்

அருவினன்

-

ரூபியல்லாத சேதனர்களையுடையவனாகியும்

புலனொடு

-

விஷயமாகிற பொருள்களோடு (கலந்து நின்றாலும்)

புலன் அலன்

-

(தான்) புலன்களுக்கு விஷயமாகாதவனாகியும்

ஒழிவு இலன் பரந்த

-

எபபொழுதும் எங்கம் வியாபித்திருக்கிற

அ நலன் உடை ஒருவனை

-

முன் சொன்ன கல்யாண குணங்களையுடைய ஒப்பற்ற எம்பெருமானை நாம் கிட்டப்பெற்றோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கல்யாணகுணமுடைமையையும் நித்யவிபூதியாட்சியையும் திவ்யமங்கள் விக்7ஹ முடைமையையும் முதற்பாட்டிலே அநுஸந்தித்து, அவற்றிக்கு ஆச்ரயமான திவ்யாத்மஸ்வரூபத்தின் வைலக்ஷண்யத்தை இரண்டாம் பாட்டிலே அருளிச்செய்து, அவற்றோடே சேர்த்து ஒரு கோர்வையாக அநுபவிக்கத்தக்கதான லீலா விபூதியுடைமையை இப்பாட்டிலே அருளிச் செய்கிறார்.

பரமபோக்யமான கல்யாணகுணம் முதலிவற்றை ஒரு பெரிய திருநாள் போலே அநுபவியாநின்ற  இவர்க்கு அத்யந்த ஹேயமாய் இருள்தருமாஞாலமென்று பெயர்பெற்றதான இந்த லீலாவிபூதியின் ஆட்சியை அனுபவித்தல் ப்ராப்தமாகுமோ? ஞானிகள் அருவருக்கும் படியாயன்றோ இப்பிபூதியிருப்பது; இதனை அநுஸந்திக்க இவர் எங்ஙனேயிழந்தார்? என்று சங்கை பிறக்கக்கூடும்; இவ்விபூதி இருள் தருமாஞாலமாயிருந்தாலும் ஆழ்வார் மயர்வற மதிநலமருளப் பெற்ற வராகையாலே அந்த ஞானவிளக்கத்தினார் இவ்வபூதியின் இழிவை நோக்காது இதெல்லாம் எம்பெருமானுடைய ஆட்சியின்கீழ் அமைந்தது’ என்று கொண்டு ததீயத் வாகாரத்தைவிட்டுப் பார்க்குமவரான பின்பு அவனுடைய ஐச்வரியங்களையெல்லாம் ஒன்று விடாமல் அநுபவிக்கிற அடைவிலே இதனையும் அநுபவிக்கிறார் என்று கொள்க.

இங்கே ஈடு முப்பதாறாயிரப்படி யருளிச்செயல்:- “ராஜாக்களுக்கு நாடெங்கம் செல்லா நிற்கச்செய்தே மஹிஷிகளும் தாங்களுமாகச் சில பூந்தோட்டங்களைக் கடநீர் வார்த்து ஆக்குவது அழிப்பதாய் லீலாரஸ மநுபவிபக்குமாபோலே ‘திருவிண்ணகர்ச் சேர்ந்தபிராண் பெய்தகாவுகண்டீர் பெருந்தேவுடை மூவுலகு’ என்கிறபடியே ஸர்வேச்வரனும் பெரிய பிராட்டி யாருமாகக் கடாக்ஷித்தபோது உண்டாய் இல்லையாகில் அவர்களுக்கு லீலாரஸ விஷயாமயிருக்கிற லீலாவிபூதியை அனுபவிக்கிறார்” என்று.

இலன் அது, உடையன் இது - என நினைவு அரியவன்- ‘இவனுக்கு இது இல்லை என்றம் நினைக்கமுடியாது; ‘இவனுக்கு அது உண்டு’ என்றும் நினைக்கமுடியாது- ‘இவனுக்கு அது இல்லை’ என்று நினைக்குமிடத்துக் குறைவுபாடு ஏற்படுமாகையாலே அப்படி நினைக்கக் கூடாதாயினும் ‘இவனுக்கு அது உண்டு’ என்று நினைப்பதற்குத் தடை என்ன! என்னில், ‘இராமனுக்கு வியாகரணம் தெரியும்’ என்றால் அவனுக்கு மீமாம்ஸை தெரியாது தர்க்கம் தெரியாது, வியாகரணமொன்றுதான் தெரியும், என்று நினைக்க இடமுண்டாவதுபோல, ஒரு பொருளைச் சுட்டி ‘எம்பெருமான் அதனையுடையன்’ என்றால் ‘அது தவிர மற்ற பொருள்களை அவனுக்கு இல்லை’ என்று தோற்ற இடமுண்டாகிக் குறையாய்த் தலைகட்டுமாதலால் ‘இவனுக்கு அது இல்லை’ என்று சொல்வதோடு ‘இவனுக்கு அது உண்டு’ என்று சொல்வதோடு வாசியற இரண்டும் ஒண்ணாதவையே என்றுணர்க.

ஆனால் எம்பெருமானுடைய ஐச்வரியத்தை எப்படி தான் பேசக்கடவதென்றால் நிலனிடை விசும்பிடை யுருவினனருவினன் என்று பேசவேணுமென்கிறார். வேதபுருஷன் *பதிம்விசய்வஸ்ய* என்று பேசினாப்போலே ஸர்வஸ்வாமி யென்னவேணுமென்க. பூமி முதற்கொண்டு பாதாளம் வரையிலுள்ள கீழுலகங்களிலும், பரமபதந் தவிர பொருள்களும் எத்தனையுண்டோ அவற்றை யெல்லா முடையவன் என்னவேணும். இதில் ‘பரமபதந்தவிர’ என்றதனால் , பரமபதம் எம்பெருமானுடைய ஆட்சிக்கு உட்பட்டதன்றோவென்று சங்கிக்க வேண்டா; லீலாவிபூதிச் செல்வத்தை மாத்திரமே இப்பாட்டில் அருளிசெய்கிறாராகையாலும் நித்ய விபூதிச்செல்வத்தை முதற்பாட்டில் அருளிச்செய்தாராகையாலும்.

உருவினன் அருவினன் - ‘ரூபி’ என்னும் வடசொல் உரு என்றும், ‘அரூபி’ என்னும் வடசொல் அரு என்றும் சிதைந்துகிடக்கிறது.

ஜடப்பொருள்களெல்லாம் ஓரொருவகையான ரூபத்தையுடையனவாகக் காணப்படுதலால் அவை ரூபி யெனப்படும். (ரூபி-ரூபமுடையது.) ஜீவாத்மா உருவமற்றவனாதலால் அரூபி யெனப்படுவான் நிலனிடை விசும்பிடை யுருவினன், நிலனிடை விசும்பிடை யருவினன் என்க. நிலன்- நிலம்; மகரனகரப்போலி.

இப்படி ஸர்வஸ்வாமியான ஸர்வேச்வரன் இந்த லீலாவிபூதியின் ரக்ஷணத்திலே உதாஸீநனாய்க்கொண்டு பரமபதத்திலே போகப்ரவணனாயிருப்பவனல்லன்; இவற்றினுடைய லாபநஷ்டங்களையே தன்னுடைய லாப நஷ்டங்களாகக்கொண்டு, புலப்படும் பதார்த்தங்களெல்லாவற்றிலும் அந்தர்யாமியா யிருப்பவன் என்கிறார் புலனொடு என்று, புலன் என்பது இங்குப் புலன்களாலறியப்படும் பொருள்களுக்காயிற்று. லக்ஷணையென்க. புலப்படுகின்ற ஸகல பதார்த்தங்களோடும் அந்தராத்மாவாயக் கலந்து நின்றானேயாகிலும் என்றபடி. அழுக்கு வஸ்துவோடே உறைகின்ற அரும்பொருளும் அந்த ஸம்பந்தத்தாலே தானும் அழுக்கேறப்பெறுவதுபோல தோஷமே வடிவான பதார்த்ங்களிலே உறைகின்ற எம்பெருமானும் அவற்றின் தோஷங்கள் தன்னிடத்திலே தட்டப்பெற்று ஜடப்பொருள்களைப்போலே பரிணாம சாலியாயும் சேதநரைப்போலே ஸுகதுக்கங்கள் கலசியிருப்பவனாயும் ஆய்விடக்கூடுமோவென்று சங்கைபிறக்கக்கூடுமாதலால் அந்த சங்கையை ஒழித்தருளுகிறார் புலனலன் என்று. புலன்களினுடைய படியையுடையவனல்லன். ஜடப்பொருள் போலே விகாராஸ்பதமல்லன்;: ஒட்டற்று விளங்காநிற்குமவன் என்க.

ஒழிவு இலன் பரந்த- ஒழிவு இல்லதவனாய் வியாபித்த என்கை ஒரு வஸ்துவு மொழியாமல் ஸகல வஸ்துக்களிலும் வியாபித்து என்றாவது ஒருகாலமுமொழியாமலர் ஸர்வகாலங்களிலும் வியாபித்து என்றாவது பொருள் காண்க.

கீழரண்டு பாட்டிலும் சொன்ன குணங்களோடு கூடியிருக்குந்தன்மையை அநுவாதஞ் செய்கிறார். அந்நலனுடையொருவனை என்று. இப்படி பரமவிலக்ஷணனான எம்பெருமானை நாம் கிட்டப்பெற்றோமேயென்ற ஆனந்தம் தோற்ற முடிக்கிறார். நெடுங்காலம் பிறவிக்கடலிலே அழுந்தி எம்பெருமானுடைய கதையின் லாலஸநையையும் அறியாதிருந்த நாம் இப்படி உபயவிபூதியுக்தனாயிருந்துள்ள அவனைப் பூர்ணமாக அநுபவிக்கப்பெற்றோம் என்னும் மகிழ்ச்சி சொல் தொடையிலே விளங்கும்.

அன்றியே, நணுகினம்நாமே! என்று காகுஸ்வரமாகக் கொண்டு, அப்படிப்பட்ட எம்பெருமானை நீசரில் நீசரான நாமோ நணுகினோம்!; நணுகுவதற்கு நமக்கு யோக்யதையில்லா திருக்க நணுகினதுபோல் தோற்றுகிறவிக்கிறது ஒருகால் சித்தப்ரமமாக விருக்குமோ? என்பதாகவும் உரைப்பர்.

 

English Translation

He cannot be thought of as "this" and "not that". He is the sentient and insentient, in high and in low. He is in the senses, but not of them and endless.  Let us seek the good one, he is everywhere.

naam  avan      ivan_   uvan,*             avaL_      ivaL      uvaL               evaL*
we,   that he,  this he and he in between, that she,  this she, she in between and she wherever
thaamavar ivar_         uvar,*              adhu      vidhu    vudhuv        edhu*
those and these people  people in-between,  it there, it here, it in-between and it wherever
veem avai          yivai           yuvai,*      avainNalam,  theenkavai*
persihable things, things here and in-between,  good things, bad things
aamavaiy       aay avaiy      aay* ninRa  avarE.*        1.1.4
future things, past things;   has become; He Himself

The emperumAn is and has become that guy, this guy and the one who is
in between that guy and this guy- that lady, this lady and the one
who is in between that and this lady- those and these people and ones
who are in between them- that and this object and those objects which
are in between them- the one which is a question in our minds; good
things; bad things; past, present and future things; things which
are never permanent and are going to be perished;-

நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்

தாமவரிவருவர், அதுவிது வுதுவெது

வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை

ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே.

 

பதவுரை

நாம்

-

நாம் முதலான தன்மைப் பொருள்களும்

அவன் இவன் உவன்

-

அவன் இவன் உவன் என்கிற ஆண்பால்  சுட்டுப்பொருள்களும்

அவள் இவள் உவள்

-

அவள் இவள் உவள் என்னும் பெண்பால் சுட்டுப் பொருள்களும்

எவள்

-

எவள் என்கிற பெண்பால் வினாப்பொருளும்

தாம்

-

தாம் என்னும் பன்மைப் பொதுப்பொருளும்

அவர் இவர் உவர்

-

அவர் இவர் உவர் என்னும் பலர்பால் சுட்டுப்பொருள்களும்

அது இது உது

-

அது இது உது என்னும் ஒன்றன்பால் சுட்டுப் பொருள்களும்

எது

-

எது என்னும் ஒன்றன்பால் வினாப்பொருளும்

வீம் அவை

-

நசிக்குந்தன்மையுள்ள பொருள்களும்

இவை உவை அவை

-

இவை உவை அவை என்னும் பலவின்பால் சுட்டுப் பொருள்களும்

நலம் அவை

-

நல்ல வஸ்துக்களும்

தீங்கு அவை

-

கெட்ட வஸ்துக்களும்

ஆம் அவை

-

எதிர்காலப் பொருள்களும்

ஆய அவை

-

இறந்தகாலப் பொருள்களும்

ஆய் நின்ற

-

ஆகிநின்ற எல்லாப் பொருள்களும்

அவரே

-

அந்த ஊர்வேச்வரனேயாம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டுமுதல் மேற்பாட்டுக்களெல்லாம் கீழ்ப்பாட்டிற் சொன்ன லீலாவிபூதிச் செல்வத்தைப் பள்ளிப்பன்னி யுரைக்கின்றன. பரம போக்யமான நலமந்தமில்லாதோர் நாடாகிய நித்யவிபூதியை (பரமபதத்தை) விட்டு இருள் தருமா ஞானமாகிய இந்நிலத்தை விசேஷமாக வருணிப்பதேன்! என்னில்; அந்தத் திருநாட்டிலுள்ளவர்கள் அஜ்ஞாநம் அந்யதாஜ்ஞாநம் விபரீதஜ்ஞாநம் அந்யசேஷத்வம் உபாயந்தரபரதவம் உபேயாந்தரபரத்வம் முதலிய குற்றங்குறைகளில் ஒன்றுமின்றியே எம்பெருமான் திருவுள்ளமுகக்குமாறு இருப்பவர்களாகையால் அந்த நாடு திருந்துவதற்காகச் சொல்லவேண்டிய பாசுரம் என்ன இருக்கிறது? ஸர்வாத்மா பரதந்திரமாயிருக்கிற அந்தத் திருநாட்டைப் பற்றிப்பேச வேண்டியதொன்றில்லை. இந்த நாடு அதற்கு எதிர்த்தட்டாயிருக்கையாலே இதைப் பற்றியே பன்னியுரைக்க ப்ரஸக்தியுள்ளது. ஆகவே மேற்கரங்களாலே லீலா விபூதிச் செல்வத்தைப் பரக்க அருளிச் செய்வது பொருத்துமென்க.

எம்பெருமானார் கத்யத்தில் *ஸ்வாதீ தரிவிதசேததாசேதந ஸ்வரூப ஸ்திதிப்ரே வ்ருத்தி பேதம் *என்று அருளிச்செய்வது- இப்பாட்டு முதல்முறையேயுள்ள மூன்று பாசுரங்களிலும் சொல்லுகிற பொருளையே ஸங்க்ரஹித்தபடியாம் ஸகல சேதநாசேதநங்களின் ஸ்வரூபம் எம்பெருமானுடைய அதீதமாயிருக்குமென்பது இப்பாட்டிற் சொல்லுகிறது; அப்படியே அவற்றின் ஸ்திதியும் (ரக்ஷணமும்) அவனதீநமாயிருக்கு மென்பது மேற்பாட்டிற் சொல்லுகிறது. அவற்றின் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவனதீதங்களாயிருக்குமென்பது அதற்கு மேற்பாட்டில் சொல்லுகிறது.

இந்நாட்டிலுள்ள ஸகல பதார்த்தங்களிலுடையவும் ஸ்வரூபம் எம்பெருமானுக்கு அதீநமென்னுமிடம் இப்பாட்டிற் சொல்லுகிறது. இவற்றின் ஸ்வரூபம் அவனதீதமாயிருக்கையாவது என்னென்னில், ஸ்ருஷ்டிகாலத்திலே எம்பெருமான்தானே இவற்றையுண்டாக்கி ஜீவத்வாரா உட்புகுந்து வஸ்துவாகவும் ஒரு பெயருடையதாகவுமாக்கியும், பிறகு பிரளயகாலத்திலே இவற்றையெல்லாம் தன் பக்கலிலே ஸூக்ஷ்ம ரூபமாகக் கிடக்கும் ஏறிட்டுக்கொண்டு தரித்தும் பொருகையாகிற இதுதான் இவற்றின் ஸ்வரூபம் அவநதீநமாயிருத்தலாம்.

உலகத்திலுள்ள ஒவ்வொரு பொருளையும் தனித்தனி யெடுத்துக்கொண்டு இதன் ஸ்வரூபம் அவனதீதம். இதன் ஸ்வரூபம் அவனதீதம். இதன் ஸ்வரூபம் அனைதீநம் என்றிப்படி சொல்லுவதென்றால் இஃது ஒருநாளும் ஓயாத கதையாகும். இங்ஙன்றியே, ஸகல பதார்த்தங்களும் அவனதீதம் என்று ஒரே வார்த்தையாகச் சொல்லி முடித்துவிடலாமே யென்றால் இதில் ஸ்வாரஸ்யமில்லை கேட்போர்க்கு ரஸிக்காது; ஆழ்வார்க்கும் திருப்திபிறவாது. ஆகவே பெருக்கமும் சுருக்கமுமின்றியே பேசியருளுகிறார்.

நாம் என்று தன்மையாக (உத்தமபுருஷனாக)ச் சொல்லிக்கொள்ளப்படுகிற வ்யக்திகளும், அவன் என்று தூரத்திலுள்ளவர்களாகச் சொல்லப்படுகிற ஸாமாந்ய புருஷவ்யக்திகளும், இவன் என்று ஸமீபத்திலுள்ளவர்களாகச் சொல்லப்படுகிற ஸாமாந்திய புருஷவ்யக்திகளும், உவன் என்று- மிக்க தூரத்திலுமல்லாமல் மிக்க ஸமீபத்திலுமல்லாமல் நடுவணுள்ளவர்களாகச் சொல்லப்படுகிற ஸாமாந்ய புருஷவ்யுக்திகளும், அவள்  என்று தூரத்திலுள்ளவர்களாகச் சொல்லப்படுகிற ஸ்த்ரீ வ்யக்திகளும், இவன் என்று ஸமீபத்திலுள்ளவர்களாகச் சொல்லப்படுகிற ஸ்த்ரீ வ்யக்திகளும், உவள் என்று நடுவணுள்ளவர்களாகச் சொல்லப்படுகிற ஸ்தரீவ்யக்திகளும், எவள் என்று வினவப்படுகிற வ்யக்திகளும், அது, இது உது, எது என்னப்படுகிற அஃறிணைப் பொருள்களும் (அதாவது- அசேதநவஸ்துக்களும்). அழியக்கூடிய பொருள்களும், நல்ல பொருள்களும் கெட்ட பொருள்களும், இனி உண்டாகப் போகிற பொருள்களும் கீழ் உண்டாகிக் கழிந்த பொருள்களுமாகிய அனைத்தின் ஸ்வரூபமும் எம்பெருமானுக்கு அதீதம் என்றதாயிற்று.

‘எம்பெருமானுக்கு அதீதம்’ என்று மூலத்தில் இல்லாதிருக்க எவ்விதம் அந்த அர்த்தம் செய்கிறது’ மூலத்தில் அவரே என்றிருப்பதால் ஸகலவஸ்துக்களுக்கும் எம்பெருமானுக்கும் அபேதமேயன்றோ சொல்லப்படுகிறது. ஆகவே அத்வைதாமகச் சொல்லியிருக்க வேறுவகையாகப் பொருள் பணிப்பது; எங்ஙனே! எனில்; கேண்மின்;- மேல் ஏழாம்பாட்டில் “உடன் மிசையுயிரெனக் கருந்தெங்கும் பரந்துளன்’ என்று ஸர்வவஸ்துக்களிலும் எம்பெருமான் அந்தர்யாமியாக இருக்கிறானென்பதை வ்யந்தாமகப் பேசியிருக்கிற படியைக்கொண்டு ஸமத்வயம் காண்க.

இப்பாட்டில் முதலிடியிலுள்ள அவள் இத்யாதிகள் ஜாத்யேகவசனமாகக் கொள்ளத்தக்கன. இரண்டாமடியில் அவர் இத்யாதிகள் பன்மையாக இருக்கும்போது, அவள் இத்யாதியை ஜாத்யேகசவநமாகக் கொள்ளவேண்டிய அவசியமில்லையேயென்னில்; இரண்டாமடியில் அவர் இத்யாதியாகவுள்ள பன்மை வ்யயக்திபஹுத்வத்தைச் சொல்லவந்ததன்று; ‘பூஜாயாம் பஹுவரநம்’ என்பதுண்டாகையால் பூஜ்யத்வத்தை மாத்திரம் காட்ட வந்த பன்மையாகக் கொள்ளத்தக்கது. பூருவர்களின் வியாக்கியானங்களிலும் இங்ஙனமேயுள்ளது. இதைநோக்கி, முதலடியிலுள்ளவை ஸாமாந்ய புருஷ வாசகங்களென்று கொள்ளப்பட்டது. எவள் என்றது பும்லிங்க நிர்த்தேசத்திற்கும் உபலக்ஷணமாகக் கொள்ளத்தக்கது. இங்ஙனமே, வீமவை என்று அழியக்கூடிய பொருள்களைச் சொன்னது அழியாப்பொருள்களுக்கும் உபலக்ஷணமாகும்.  அழியாப்பொருள்களின் ஸ்வரூபமும் எம்பொருமானுடைய அதீநமோ என்கிற சங்கையை ஆழ்வான் ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் *இச்சாத ஏவ* என்கிற ச்லோகத்தால் தீர்த்தருளினர்.

நலம் தீங்கவை - நன்மை தீமை என்று, பண்மை (தர்மத்தை)ச் சொல்லுகிறதாகவுங்கொள்ளலாம். நல்லபொருள் தீயபொருள் என்று பண்பியை (தர்மியை)ச் சொல்லுகிறதாகவும் கொள்ளலாம். ஜாதியோடும் வ்யாக்தியோடும் வாசியறவும், குணத்தோடும் த்ரவியத்தோடும் வாசியறவும், க்ரியையோடும் க்ரியாவத்தோடும் வாசியறவும் எல்லாவற்றின் ஸ்வரூபமும் எம்பெருமானதீதம் என்றதாயிற்று.

ஆமவை என்று எதிர்காலப் பொருள்களையும் ஆயவை என்று இறந்தகாலப் பொருள்களையும் சொன்னதுபோல நிகழ்காலப் பொருள்களையும் சொல்லவேண்டியிருக்கச்சொல்லாது விட்டதேன்? எனில்; நிகழ்காலமென்பது ஒரு நொடிப்பொழுதேயாகும்; இது இறந்த காலத்திலும் எதிர்காலத்திலும் அடங்கிப் போகக்கடவதாதலால் தனிப்பட்டச் சொல்ல வேண்டிய அவசியமில்லையென்பர்.

ஆக இப்பாட்டால், ஆண், பெண், அலி, சிறந்த பொருள்கள், அழியும் பொருள்கள், விவக்ஷணப் பொருள்கள், அவிலக்ஷணப்பொருள்கள், இறந்த காலப்பொருள்கள், எதிர்காலப் பொருள்கள் என்று சில வகைகளாலே இந்த லீலா விபூதியிலுள்ள ஸகல பதார்த்தங்களையும் நிர்த்தேசித்து, இவற்றின் ஸ்வரூபம் எம்பெருமானந்தீநமென்று அருளிச்செய்தாராயிற்று.

 

English Translation

He stands as the "he" there' here and in between the 'she' there, here in between and wherever the things that are –here, there, in between and wherever –he is their good, bad, indifferent, their past and their future.

 

 

avaravar thamathamathu* aRivaRi vakaivakai*
avaravar iRaiyavar* ena adi adaivargaL*
avaravar iRaiyavar* kuRaivilar iRaiyavar*
avaravar vidhivazhi* adaiya ninRanarE.        1.1.5

Those gnAnis, who, with their knowledge and bhakti  understand their
Gods as "The One, who has no second"  and surrender at Those Gods' feet.
Such Gods bless and give everything to Their devotees and satify them .
Not due to their powers; but due to the Grace and mercy of Sriman
NarayaNan who is present in those Gods as antharyAmi in their Hearts. "

அவரவர் தமதம தறிவறி வகைவகை

அவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள்

அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்

அவரவ விதிவழி யடையநின் றனரே.

 

பதவுரை

அவர் அவர்

-

அந்தந்த அதிகாரிகள்

தம தமது

-

தங்கள் தங்களுடைய

அறிவு

-

ஞானத்தாலே

அறி

-

அறியப்படுகிற

வகை வகை

-

பலபல படிகளாலே

அவரவர்

-

அந்தந்த தெய்வங்களை

இறையவர் என

-

ஸ்வாமிகளென்றெண்ணி

அடி அடைவர் தன்

-

ஆச்ரயிப்பர்கள்;

அவரவர் இறையவர்

-

அந்தந்த அதிகாரிகளால் தொழப்படுகிற தெய்வங்கள்

குறைவு இலர்

-

அவரவர்கள் விரும்பின பலன்களைக் கொடுப்பதில் குறையற்றனவே; (எதனாலே என்னில்)

இறையவர்

-

ஸர்வஸ்வாமியான ஸ்ரீமந் நாராயணன்

அவரவர்

-

அந்தந்த அதிகாரிகள்

விதி வழி

-

தங்கள் தங்கள் அத்ருஷ்டாநுஸாரமாக

அடைய

-

பலன்பெறும்படியாக

நின்றனர்

-

அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாக எழுந்தருளியுள்ளான். (அதனாலே காண்மின்.)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸகல பதார்த்தங்களினுடையவும் ஸ்வரூபம் எம்பெருமான் தீநமென்று கீழ்ப்பாட்டிற் சொல்லிற்று; ஸ்வரூபம்போலவே ஸ்த்திதியும் (அதாவது- ரக்ஷணமும் எம்பெருமானதீநமே என்கிறது இப்பாட்டில். இவ்வுலகில் ரக்ஷகர்களென்று பேர் சுமப்பவர்கள் பலவகைப்பட்டிராநின்றனர். ஒருவன் ஒரு வீட்டுக்கு மாத்திரம் ரக்ஷகனென்றிருப்பன்; ஒருவன் ஒரு க்ராமத்துக்காக ரக்ஷகனென்றிருப்பன்; ஒரு நாட்டுக்காக ரக்ஷக்னென்றிருப்பன்;  ஒருவன் மூவுலகுக்கு ரக்ஷகனென்றிருப்பன் ஒருவன் பதினாலுலகுக்கு ரக்ஷ்கனாயிருப்பன், ஆகவிப்படிப்பட்ட அவரவர்கள் ரக்ஷகரென்னும்படி நிற்பது அந்த வ்யக்திகளில் எம்பெருமான் அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலத் தனையேயன்றி, இவனுடைய அநுப்ரவேசமின்றி ஒருவராலும் ஒரு ரக்ஷணமும் பண்ண முடியாது என்பது ஸகல சாஸ்த்ரங்களிலும் முறையிடப்பட்டுள்ளது. *ந ஸம்பதாம்ஸமாஹாரே விபதாம் விதிவர்த்ததே- ஸமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம் விதர் புருஷோத்தாம், *ஸம்பத்துக்களைச் சேமித்துக் கொடுப்பதிலும் ஆபத்துக்களைத் தவிர்த்தொழிப்பதிலும் எம்பெருமானுக்கன்றி மற்றொருவற்கும் சக்தியில்லை என்று சொல்லிற்கு. இதனை இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.

உலகத்திலுள்ள சேதநர்கள் ஸாத்விகராகவும் ராஜஸராகவும் தாமஸராகமுள்ளார்கள். சுத்த ஸாத்விகராயிருப்பவர்கள் “உன்னித்து மற்றொரு தெய்வந்தொழாள் அவனையல்லார்” “களைவாய் துன்பம் களைகண்மற்றிலேன்” என்னுமாபோலே எம்பெருமானையன்றி மற்றொரு தெய்வத்தையும் தொழாதவர்களாயும் ஒரு பிரயோஜனத்தையும் விரும்பாதவர்களாயு மிருப்பார்கள்; அன்னவர்களைப் பற்றி இங்குச் சொல்லவேண்டியதொன்றுமில்லை. மற்ற குணங்கட்கு வசப்பட்டவர்கள் ஆரோக்யம், ஐச்வரியம், ஸத்தாநம் முதலிய க்ஷுத்ரபலன்களை விரும்பினவர்களாய், அப்படிப்பட்ட பலன்களையும் நேர்கொடு நேரே எம்பெருமானிடத்துச் சென்று விரும்புதலின்றியே தாம் தாம் அபிமானித்திருக்கிற தெய்வங்கள் பக்கலிலே விரும்புபவர்களாயிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களைக் குறிக்கிறார் அவரவர் என்று.

தமதமது அறிவு- ஒவ்வொரு சேதநருடையவும் ஞானம் ஒவ்வொரு விதமாயிருக்குமன்றோ. இங்கு ஞானமென்று ருசியைச் சொல்லுகிறது. தங்கள் தங்களுடைய ருசியினாலேயென்றபடி. ஒருவனுக்கு ஸவர்க்க போகத்திலே ருசியுண்டாகும்; மற்றொருவனுக்கு இஹலோக போகங்களிலே ருசியுண்டாகும். இன்னொருவனுக்கு இன்னொன்றிலே ருசியுண்டாகும்; ஆகவே அதிகாரிகள் பல வகைப்பட்டிருக்கிறாப்போலவே அவர்களுடைய ருசிகளும் பலவகைப்பட்டிருக்கும் தமதமது என்கிற இரட்டிப்பால் அந்த ருசி பேதங்கள் காட்டப்படுகின்றன.  அப்படிப்பட்ட ருசிபேதங்களினால்; அறி- அறியப்பட்ட, வகை வகை- சேதநர்கள் பல வகைப்பட்டிருக்கிறாப்போலவும் அவர்களுடைய ருசிகள் பலவகைப்பட்டிருக்கிறாப்போலவும் அவர்கள் கோலின பலன்களுக்காக அனுட்டிக்கும் ஸாதானங்களும் பலவகைப்பட்டிருக்குமே:- ‘வகைவகை’ என்ற இரட்டிப்பால் அது சொல்லப்படுகிறது. சிலர் த்யானத்தினாலும், சிலர் யஜ்ஞங்களினாலும், சிலர் அர்ச்சனையினாலும், சிலர் திருநாமஸங்கீர்த்தநங்களினாலும், சிலர் அபிஷேகத்தினாலும் ஆகவிப்படி வெவ்வேறுபட்ட வகைகளாலே தெய்வங்களை வழிபடுகிறவர்களன்றோ. அந்த வகைகளெல்லாம் இங்குக் குறிக்கொள்ளத்தக்கன. அப்படிப்பட்ட உபாயங்களைக் கொண்டு

அவரவர் இறையவரென அடியடைவர்கள்- முதலடியிலுள்ள ‘அவரவர்’ என்றது வழிபடுகின்ற சேதநர்களைச் சொல்லிற்று; இவ்வடியிலுள்ள ‘அவரவர்’ என்பது வழிபாடு செய்யப்படுகிற பலபல தெய்வங்களைக் குறிக்கின்றது. இந்திரனென்றும் சந்திரனென்றும் சிவனென்றும் பிரமனென்றும் காளியென்றும் ஐயனென்றும் அம்மனென்றும் இப்படி உரைக்கப்படுகின்ற நாமபேதங்களைத் திருவுள்ளம்பற்றி அவரவர் என்கிறார். இறையவரென- ‘இறையவர் என்கிற வாசகம் ஸ்ரீமந்நாராயணனுக்கே அஸாதாரணமாயினும், பிரதிபத்தி செய்கிற சேதநர்களின் அபிமானத்தயடியொற்றி (அவர்களது கருத்தாலே) இறையவர் என்கிறார்; ஒவ்வொரு தெய்வத்தை ஸ்வாமியாகக் கொள்வர் என்றவாறு.

“தொழுது மாமவர் நீர்சுடர் தூபங்கொண்டு, எழுதுமென்னுமிது மிகை என்கிறபடியே தொழுது எழுவதுதானும் மிகையாம்படியான பகவத் விஷயத்திலே வாஸநை பண்ணிப் போருகின்ற ஆழ்வார் திருவாக்கிலே அடியடைவர்கள் என்கிற வாசகமேயாய்த்து வரக்கூடியது.

அவரவரியறையவர் குறைவிலர் - அவரவர்களுடைய இறையவர் என்றாவது உரைக்கலாம். முதற்பொருளில், ஆச்ரயிப்பவர்களான அந்தந்த சேதநர்களினால் போற்றப்பட்ட தெய்வங்கள் என்றபடி, குறைவிலர்- தம்மை அடுத்தவர்கட்கு வேண்டிய பலன்களையளிப்பதில் தகுதியுடையார் என்றபடி. ஆனால், அத் தெய்வங்கள் தாமாகவே பலனளிப்பதில்லை; எம்பெருமான் தங்களிடத்தில் அநுப்ரவேசித்திருப்பதனால்தான் தாங்கள் பலனளிக்கத் திறமை பெறுகிறார்களென்கிறார் வாக்ய சேஷத்தினால் (அவரவர் விதிவழியடைய இறையவர் நின்றனர்) என்று அந்வயிப்பது.

ஈடு முப்பத்தாறாயிரப்படியில் இங்கே “ஐயன்பாழியிலானை போர்க்கு உரித்தாமன்றாயிற்று அவ்வோ தேவதாமாத்ரங்களுக்கு பலப்ரதாநசக்தியுள்ளது” என்று ஸ்ரீஸூக்தியுள்ளது; இதன் கருத்தாவது- பிடாரி கோவில்களின் வாசலில் குயவன் செய்த பெரிய பெரிய யானை குதிரைகள் நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் அவை போர்செய்யமாட்டா; ஒழுங்காக அங்கு நிற்குமத்தனையேயன்றி ஒரு காரியமும் செய்யமுடியா; அதுபோலவே தேவதாந்தாரங்களும் என்றபடி. (ஐயன் பாழி - சாஸ்தா என்கிற தெய்வத்தின் கோவில் என்க. ஆனை- யானை குதிரை முதலானவை. போர்க்கு உரித்தரமன்று- யுத்தஞ்செய்ய உபயோகப்படுமேயானால் என்றவாறு.)

ஆக இப்பாட்டால் சொல்லிற்றாயிற்று என்னெனில்; உலகத்தில் நடக்கிற ரக்ஷணத் தொழில் யாவும் எம்பெருமானுடையதே. அக்னி, இந்திரன், சிவன், பிரமன் முதலிய இதர தெய்வங்களைக்குறித்து அவரவர்கள் வழிபாடுகள் செய்து தாம் தாம் கோலின் பலன்களைப் பெறுவதாகக் கண்டாலும் அதுவும் எம்பெருமான்றானே அத்தெய்வங்களுக்கு உள்ளீடாக இருந்து நடத்துகிற ரக்ஷணமேயன்றி அத்தெய்வங்களே ஸ்வதந்திரமாகச் செய்துவிடுகிற ரக்ஷணமன்று என்றதாயிற்று.

 

English Translation

Let each one offer worship as he deems fit, and each one shall attain his god's feet. For our Lord, who stands above these! gods accepts the offerings made to the and bids them deliver the fruit.

ninRanar irunthanar* kidanthanar thirinthanar*
ninRilar irunthilar* kidanthilar thirinthilar*
enRumor iyalvinar* enanNinai variyavar*
enRumor iyalvodu* ninRa_venthidarE.        1.1.6

Those who are standing, sitting, lying down; those who are NOT standing;
NOT sitting and NOT lying down- all of them are directed and guided by
Him; Such as He can not be thought of as one who is of same kind of form
and nature at all times;  At the same time He has got same kind of
GREATNESS and ATTRIBUTES at all times; such as He, due to our vairAgyam
(determination), has become mine

நின்றனரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்*

நின்றிலரிருந்திலர் கிடந்திலர்திரிந்திலர்*

என்றுமோரியல்வினர் எனநினைவரியவர்*

என்றுமோரியல்வொடு நின்றவெந்திடரே.

 

பதவுரை

நின்றனர்

-

நிற்பவர்கள்

இருந்தனர்

-

இருப்பவர்கள்

கிடந்தனர்

-

கிடப்பவர்கள்

திரிந்தனர்

-

திரிபவர்கள் (ஆக இப்படிப்பட்டவர்களினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதலாகிற ப்ரவ்ருத்திகளெல்லாம் அப்பெருமானுடைய அதீநமே)

நின்றிலர்

-

நில்லாதவர்கள்

இருந்திலர்

-

இராதவர்கள்

கிடந்திலர்

-

கிடவாதவர்கள்

திரிந்திலர்

-

திரியாதவர்கள் (ஆக இப்படிப்பட்டவர்களினுடைய நில்லாமை இராமை கிடவாமை திரியாமையாகிற நிவ்ருத்திகளெல்லாமும் அப்பெருமானுடைய அதீநமே.)

என்றும்

-

எப்போதும்

ஓர் இயல்வினர் என் நினைவு அரியவர்

-

ஒரேவிதமான இயற்கையையுடையவரென்று நினைக்க முடியாதவரும் (அவரே) (அவர்தாம் யாவரென்னில்;)

என்றும்

-

எப்போதும்

ஓர்இயல்வொடு நின்ற

-

ஒரேவிதமான இயற்கையோடு கூடியிருக்கின்றவராய்

எம் திடர்

-

திடமான பிரமாணத்தினால் ஸித்தாமன நம்முடையவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- லீலாவிபூதியின் ஸ்வரூபமும் ரக்ஷணமும் எம்பெருமானுடைய அதீநமென்பது கீழிரண்டு பாசுரங்களில் அருளிச்செய்யப்பட்டது; அதனுடைய ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவனுடைய அதீநமே யென்கிறது இப்பாட்டில். இதில் முதலடியில் ப்ரவ்ருத்திகளைச் சொல்லுகிறது; இரண்டாமடியில் நிவ்ருத்திகளைச் சொல்லுகிறது.

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் - நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் என்கிற காரியங்களைச் செய்கின்ற புருஷர்களைச் சொல்லுகிற சொற்கள் இவையாயினும் புருஷர்கள் வரையில் விவக்ஷிக்க வேண்டிய அவசியம் இங்கு இல்லை. கீழ் நாலாம்பாட்டிலேயே உலகத்திலுள்ள ஸகல வ்யக்திகளினுடையவும் ஸ்வரூபம் எம்பெருமானுடைய அதீநம் என்பது சொல்லப்பட்டு விட்டபடியால் அதனையே ஈண்டுஞ் சொல்வதாகக் கொள்ளில் பயனில்லை; அபூர்வமான பொருளே இங்குக் கூறப்பட்டதாக வேண்டும். ஆகவே நின்றனர் இத்யாதிக்கு நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் என்கிற தொழில்கள் மாத்திரமே இங்குப் பொருளாக அமையும். இங்ஙனமே இரண்டாமடியிலும் நின்றிலர் இத்யாதிக்கு- நில்லாமை இராமை கிடவாமை திரியாமை என்பவைகளே பொருளாகப் பொருந்தும். மூலத்தில் தர்மிவாசகசப்தம் இருக்கச் செய்தேயும் தர்மியை விட்டு தர்மத்தை மாத்திரம் பொருள்கொள்ளுமிகு ஸம்ஸ்கிருத சாஸ்திர மரியாதைக்கு மிகவுமிணங்கினதேயாகும்: எங்ஙனேயென்னில்:-

அருணயா பிங்காக்ஷ்யா க்ரீனாதி* என்று வேதத்திலுள்ளது. யஜ்ஞத்திற்காக ஸோமம் ஸம்பாதிக்க வேண்டுமென்றும் அதனை விலைகொடுத்து வாங்கவேணுமேயன்றி வேறுவகையால் ஸம்பாதிக்கலாகாதென்றும் சொல்லி வருகிற பிரகரணத்திலே அந்த வாக்கியம் (யஜுர்வேதம்- ஆறாவது காண்டம் முதல் ப்ரச்நம் 45-வது பஞ்சாதி.) உள்ளது. சிவந்ததாயும் பொன்வர்ணமான கண்களையுடைத்தாயுமிருக்கின்ற பசுவை விலையாகக்கொடுத்து ஸோமம் வாங்க வேண்டியது என்பது இதன் பொருள். பசுவை விலையாகக் கொடுத்து ஸோமம் வாங்க வேண்டியது என்பது இதன் பொருள். இவ்விடத்தில், இரண்டு விசேஷணங்களோடு கூடின விசேஷ்யமான பசுவாகிற வ்யக்தி மூலத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் அதில் நோக்கில்லை பசுவைக்கொண்டுதான் ஸோமம் வாங்க வேண்டுமென்பது ஏற்கனவே கீழ்வாக்கியங்களிலும் இதர விதிவாக்கியங்களிம் ஸித்தித்துவிட்டபடியால் இங்கே விசேஷ்யமான அம்சத்தில் நோக்கு இன்றியே விசேஷணமான அம்சத்தில் மாத்திரமே நோக்கு என்று கொள்ளவேணும்: இப்படியே சாஸ்திரஜ்ஞர்கள் கொண்டிருக்கிறார்கள். அதாவது ‘சிவப்பு நிறமுடையபசு, என்கிறவரையில் இங்கு விதேயமல்ல; சிவப்பு நிறம் என்பதுமாத்திரமே இங்கு விதேயம் என்று கொண்டார்கள்.

மற்றோரிடமுங் காண்மின் :- *லோஹிதோஷ்ணீஷா ருத்விஜ: ப்ராசாந்தி* என்பதாக ஓதப்பட்டுள்ளது; அபிசார கருமத்தில் ருத்விக்குக்கள் சிவந்த தலைப்பாகையுடையவர்களாயிருத்தல் வேண்டுமென்று சொல்லிற்கு. தலைப்பாகையோடுகூடியிருக்க வண்டுமென்பது ஏற்கெனவே வேறு பிரமானத்தினால் கிடைத்திருப்பதால் அந்தத் தலைப்பாகையில் சிவப்பு மாத்திரமே இங்கு விதிவிஷயம் என்று கொண்டார்கள். ஆக இப்படிப்பட்ட வழியாகவே இப்பாசுரத்திலும் விசேஷ்யாம்சத்தைத் தவிர்த்து விசேஷணம்சத்தில் மாத்திரமே (அதாவது நிற்றல் இருத்தல், கிடத்தல், திரிதல்; நில்லாமை இராமை கிடவாமை திரியாமை என்கிற ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அம்சங்களில் மாத்திரமே) நோக்காகக் கொள்வது ஆவச்யகமும் பொருத்தமுடையதுமாம்.

நின்றனர் இத்யாதிக்கு நிற்றல் முதலியவற்றைப் பொருளாகக் கொண்டாலும் அந்த நிற்றல் முதலியவை எம்பெருமானுடைய ஸங்கல்பாதீநமென்பது மூலத்தில் சொல்லிற்றில்லையே யென்னில்; நன்கு சொல்லிற்று எங்ஙனேயென்னில்; நின்றனர் (முதலிய யாவரும்) எம். திடர்’ என்று மூலத்திலுள்ளதன்றோ? திடர் என்றது திடமான பிரமாணமாகிய வேதத்தினால் ஸித்திக்கும் எம்பெருமான் என்றபடி நின்றனர் முதலான யாவரும் எம்பெருமான்’ என்று ஸாமாநாதிகரண்யத்தாற் சொல்லுகிறவிதற்குக் கருத்து ‘எம்பெருமானுக்கு அதீநம்’ என்று சொல்லுமதுவேயாம்.

இங்கே ஒரு சங்கை:- பிரவ்ருத்திரூபமான காரியங்களெல்லாம் எம்பெருமானுடைய ஸங்கல்பாதீநம் என்பதில் தட்டில்லை; நிவ்ருத்தியும் அவனுடைய அதீநம் என்று ஏதுக்கு இசையவேண்டும்? ஒரு வியாபாரமுமற்றிருக்கையாகிற நிவ்ருத்தி ஸ்வயமாகவே யுள்ளதன்றோ? உயர வீசி யெறியப்படுங் கல்லானது தன்னடையே கீழே விழாநின்றால் அந்த நிவ்ருத்தியும் பகவத் ஸங்கல்பாதீநமென்று கொள்ளவேணுமோ? என்று. இந்த சங்கைக்கு எம்பார் அருளிச்செய்த ஸமாதானமாவது:- ‘ஸ்வர்க்கத்தில் நின்றும் விழுகிற த்ரிசங்குவை சக்திமாந்நிற்கச் சொல்ல நிற்கவேண்டிற்றுக் கண்டாயே; அப்படியே நிவ்ருத்திக்கும் அவன் வேணுங்காண்’ என்றருளிச் செய்தாராம்.

என்றும் ஓரியல்வினரென நினைவரியவர்- எம்பெருமானுடைய படிகள் பலபலவாகையாலே எத்தனைநாள் ஆராய்ந்தாலும் இன்னபடிப்பட்ட ஸ்வபாவத்தையுடைவனென்று நெஞ்சால் நினைக்கவுங்கூட முடியாதவனெம்பெருமான். “ என்று மோரியல்வினரென நினைவரியவர்” என்று சொல்லிவைத்து உடனே “என்றுமோரியல் வொடுநின்ற” என்றுரைத்தது பொருந்துமா எனில்; கேண்மின்: * என்று மோரியல்வினரென நினைவரியவர் என்று சொல்லப்பட்ட இயல்பு என்றைக்கும் ஒருப்பட்டிப்பட்டிருக்குமென்பதே ஈற்றடியின் கருத்தாம்.

திடர் - த்ருடமான வேதப்ரமாணத்தினால் ஸித்திப்பவர் என்றபடி. எம்பெருமான் அப்படி ஸித்திப்பது வைதிகோத்தமராகிய தமக்குப் பரமலாபம் என்பது போன்ற “எம்திடர்” என்கிறார்.

 

English Translation

Our Lord is eternally one, unchanging ? standing, sitting, lying or walking; not, standing, not sitting, not lying, not walking; forever the same, forever not the same.

thidavisum perivaLi* neernNilam ivaimisai*
padar_poruL muzhuvathumaay* avai avaithoRum*
udalmisai uyirenak* karanthenkum paranthuLan*
sudarmiku suruthiyuL* ivaiyanda suranE.        1.1.7

The sturdy agAyam, fire, wind, water and the earth,(Pancha bhoothangaL)
with those, He has become one Himself with everything that is in those
pancha bhoothangaL; In each of those everything, He has hidden Himself as
its life . Like that He has entered and spread everywhere and in everything
like the light that spreads everywhere; Such a GREAT Emperumaan at the
end of cycle, (yugam), He takes and unites everything back to Him."

திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை

படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்

உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்

சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே.

 

பதவுரை

திடம்

-

உறுதியான

விசும்பு

-

ஆகாசமென்ன

எரி

-

அக்நியென்ன

வளி

-

வாயுவென்ன

நீர்

-

ஜலமென்ன

நிலம்

-

பூமியென்ன

அவை அவை தொறும்

-

அந்தந்த பதார்த்தங்களெல்லாவற்றிலும்

உடல் மிசை உயிர் என்

-

சரீரத்தில் ஆத்மா வியாபிப்பதுபோல

கரந்து

-

மறைந்து

எங்கும் பரந்து

-

உள்ளிலும் வெளியிலும் வியாபித்து

இவைமிசை

-

ஆகிய இவற்றை ஆதாரமாகக் கொண்டு

படர்பொருள் முழுவதும் ஆய்

-

படர்ந்த பதார்த்தங்கள் யாவும் தானம்படி அவற்றுக்கு உபாதாநமாய் (அவற்றை உண்டாக்கி)

சுடர்மிகு சுருதியுள் உளன்

-

தேசுபொலிந்த வேதத்தில் உள்ளவனான எம்பெருமான்

இவை உண்ட சுரன்

-

(ஸம்ஹார காலத்தில்) இவற்றையெல்லாம் தன் பக்கலிலேயாக்கிக் கொள்ளும் தேவனாவான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘கிழ்ப்பாசுரங்களில் எல்லாப் பொருள்கட்கும் எம்பெருமானே நியாமகன்  என்று சொல்ல வேண்டியிருக்க அங்ஙனம் சொல்லாமல்’ எல்லாம் எம்பெருமானே’ என்று (ஸமாநாதிகரணமாகச்) சொல்லியிருப்பதால் அத்வைதாபிப்ராயம்போல் தோன்றக்கூடுமன்றோ? உண்மையில் அப்படியில்லை. ஸகல சேதநாசேதநங்களும் சரீரமாய் எம்பெருமான் ஸகலாந்தர்யாமித்வேத சரீரியாய் நிற்றலால் இப்படிப்பட்ட சரீர சரீரிபாவ ஸம்பந்தத்தைப் பற்றவே ஐக்கியம் சொல்லப்பட்டதென்று நிரூபிக்கிறது இப்பாசுரம். விசிஷ்டாத்வைதக் கோட்பாட்டை இப்பாட்டு ஸாரமாக எடுத்துரைக்கின்றது என்றுணர்க.

திடவிசும்பு என்று தொடங்கி முழுவதுமாய் என்னுமளவும்- பஞ்சபூதமடியா கவுண்டாகின்ற ஸகல பதார்த்தங்களுக்கும் எம்பெருமானே உபாதாநகாரணம் என்று சொல்லுகிறது. ஆகாசம் அக்நி வாயு ஜலம் பூமி என்கிற ஐந்து பூதங்களின் காரியப்பொருளாக விரிகின்ற தேவமநுஷ்யாதி ஸகல பதார்த்தங்களையும் உண்டாக்கி என்றபடி முதலிலுள்ள திடம் என்னும் அடைமொழி ஆகாசமொன்றில் மாத்திரம் அந்வயிப்பதாகவுமாம்; மேலுள்ள நீலமீறான - பூதங்களிலும் அந்வயிப்பதாகவுமாம். காரியங்கள் அழிந்துபோனாலும் காரணங்களான பூதங்கள் சிறிது காலமளவும் அழியாதிருத்தல் பற்றித் திடமென்று பூதங்களை விசேஷிப்பதாகக் கொள்கை. இது ஆகாசத்திற்கு மாத்திரம் விசேடணமென்று கொள்ளில், ஆகாசமானது மற்றுள்ள பூதங்களுக்கு முன்னே யுண்டாகி அவை யழிந்தாலும் சிலநாள் நிலற்கக் கடவதாகையாலே திடமென்றதென்க. அன்றியும் லோகநாயகிகன் முதலான சிலர் ‘ஆகாசந்தவிர நான்கே பூதங்கள்’ என்று கொள்ளுகிறபடியால் அக்கொள்கையைக் கண்டித்து ஆகாசம் திடாகவுண்டென்று காட்டுகிறபடியுமாம்.

முழுவதுமாக்கி என்னாதே ஆய் உன்றது- *பஹுஸ்யாம் ப்ரஜாயேய* என்கிற உபநிஷத்தின் சாயையை அடியொற்றி யென்ப.

அவையவைதோறும் உடன்மிசை உயிரெனக்கரந்து எங்கும் பரந்துள்ள- உண்டான ஒவ்வொரு பொருளிலும் சரீரத்தில் ஆத்மா உறையுமாபோலே மறைந்திருந்து எல்லாவற்றிலும் தனித்தனியே குறைவற வியாபித்திருக்குமெம்பெருமான் (உடன்மிசை உயிரென) நம்முடைய சரீரத்துக்கு ஆத்ம தாரகனாய் நியாயமகனாய் சேஷியாயிருப்பதுபோல அந்த சரீராத்மாக்களுக்கு எம்பெருமான்தான் தாரகனாய் நியாமகனாய் சேஷியாயிருக்குமென்றபடி. கரந்து என்றது ஒருவர்க்குத் தெரியாமல் என்றபடி எங்கும் பரந்து என்றது உள்ளும் புறமும் வியாபித்து என்றபடி.

ஆழ்வார் தாம் இப்படி நிஷ்கர்ஷித்து அருளிச்செய்கிற விஷயத்திற்கு மூலப்ரமானம் வேதமே யென்று காட்டுகிறார் உளன் சுடர் மிகு சுருதியுள் என்று.

இவையுண்ட சுரன்- கீழ்ப் பாசுரங்களில் ஜகத்தினுடைய ஸ்ருஷ்டி ஸ்திதிகள் எம்பெருமானுடைய அதீனமென்று சொல்லிற்று; ஸம்ஹாரமும் அவ்வெம்பெருமானுடைய செயலே யென்கிறது இதனால். பிரளயகாலத்திலே எம்பெருமான் ஸகலலோகங்களையும் தனது திருவற்றிலே வைத்தடக்கி ஆலந்தளிரிலே பள்ளி கொள்வதாக நூற்கொள்கை.

 

English Translation

The Lord of the Vedas who swallowed the Universe is manifest as Fire, Earth, Water, sky and Air.  He is there in all the things made of these, hidden, like life in the body, everywhere.

suraraRi varunNilai* viNmudhal muzhuvathum*
varan muthalaayavai* muzhuthunda paraparan*
puramoru moonReriththu* amararkku aRiviyanthu*
aranayan ena* _ulakazhiththamaith thuLanE.        1.1.8

ParamporuL, the one who can NOT be even known by devAs,(celestial ones);
who is the cause of all that is created and is the consumer of everything
by eating and keeping them in His body at the end of cosmic cycle; who
takes the form of RudhrA and burns; who takes the form of brahmaa and
created the Universe and gives gnAnam to dEvAs; Like that He enters
into Rudran and Brahman as their antharAtmA

சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்

வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்

புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து

அரனயன் எனவுல கழித்தமைத் துளனே.

 

பதவுரை

சுரர் அறிவு அரு நிலை

-

(பிரமன் முதலிய) தேவர்களுக்கும் அறிவொண்ணாத நிலைமையை உடைத்தான்

விண் முதல் முழுவதும்

-

மூலப்ரக்ருதி முதலாகவுள்ள ஸகலவஸ்துக்களுக்கும்

வரன் முதல் ஆய்

-

சிறநத் காரண பூதனாய் (அவற்றையெல்லாம் படைத்தவனாயும்)

அவை முழுது உண்ட

-

அவற்றையெல்லாம் (பிரளயகாலத்தில்) திருவயிற்றிலே வைத்து நோக்குபவனாயுமுள்ள

பரபரன்

-

பரம்புருஷன்

அரன் என

-

ருத்ரமூர்த்தியின் உரவத்தைத் தரித்தவனாகி

ஒரு மூன்று புரம் எரித்து

-

இணையில்லாத திருபுரங்களைத் தறித்தும்

உலகு அழித்து

-

உலகங்களை அழித்தல் செய்தும்

அயன் என

-

நான் முகக்கடவுள் என்னும் படியாக நின்று

அமரர்க்கு

-

தேவர்களுக்கு

அறிவு இயந்தும்

-

ஞானத்தைக் கொடுத்தும்

அலகு அமைத்து

-

உலகங்களைப்படைத்தல் செய்தும்

உளன்

-

அவர்களுக்குள்ளே ஆத்மா வாயிருக்குமவன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வேதாந்தங்களில் ஸித்திப்பவனும் எம்பெருமானேயென்றும் அனைத்துக்கும் ஆத்மாவாய் நிற்பவனும் அவனேயென்றும் உலகத்தில் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை நடத்துகிறவனும் அவனேயென்றும் கீழ்ப்பாசுரங்களில் அருளிச் செய்த ஆழ்வாரைநோக்கிச் சிலர் ‘இப்படி எல்லாப் பெருமைகளையும் ஒருவன் தலையிலேயே ஏற்றிச் சொல்லிவிடலாமோ? பிரமன் சிவன் முதலான தேவர்களும் சிலசில அரியபெரிய காரியங்களை நடத்திப்போருவதாக ப்ராமணங்களில் விளங்கா. நின்றதே; சிவபிரான் த்ரிபுரஸம்ஹாரமாகிற மிகப்பெரிய அருந்தொழிலை நடத்தினதென்றும் ஸகலலோகத்தின் ஸம்ஹாரத்தொழிலுக்கு அதிகாரியாயிருக்கின்றானென்றும் பிரமனும் தேவர்களுக்கெல்லாம் ஜ்ஞாநப்ரதானம் பண்ணினானென்றும் லோகஸ்ருஷ்டியை நடத்திப் போருகிறா னென்றும் பிரமாணங்களால் நன்கு விளங்கும்போது எல்லாப் பெருமைகளையும் விஷ்ஸணுவாகிற ஒரு வ்யக்தியின் மேலேயே ஏறிட்டுச் சொன்னால் பக்ஷபாதத்தாலே சொல்லுகிறதாக ஆகுமே’ என்று கூற, அவர்களுக்குத் தெயிவு பிறக்குமாறு அருளிச் செய்யும் பாசுரம் இது.

முன்னடிகளில் ஸ்ருஷ்டியையும் ஸம்ஹாரத்தையும் பேசியிருப்பதன் கருத்து- இந்த இரண்டு தொழில்களையும் பிரமனுக்கும் சிவனுக்கும் அஸாதாரணமாகச் சிலர் நினைப்பதால் அந்த நினைவைக் குலைப்பதற்குத் தம்முடைய ஸித்தாந்தத்தை ஸ்தாபித்துச் சொல்லுகிறபடி ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களென்னும் மூன்று காரியங்களில் ரக்ஷணமாகிற ஸ்திதி என்னும் காரியம் மாத்திரம் எம்பெருமானுடையது, மற்ற இரண்டு காரியம் ப்ரஹ்மருக்ரர்களினுடையது என்று பலர் நினைத்திருப்பர்கள்; அன்னவர்களுடைய நினைவின்படி ரக்ஷணத்தொழில் எம்பெருமானுடையதே என்பதில் விவாத மொன்றுமில்லாமையால் பிரதிபக்ஷிகளாலும் அங்கீகரிக்கப்பட்ட அவ்விஷயத்தை மீண்டும் நாம் எடுத்து ஸ்தாபிக்க வேண்டிய அவசியமில்லை யென்றும் விவாதாஸ்பதமான மற்ற இரண்டு காரியங்களைப் பற்றியே இங்கு உண்மையைப்பேசவேண்டுமென்றும் திருவுள்ளம் பற்றி ஆழ்வார் அவ்விரண்டையுமே இப்பாட்டில் பிரஸ்தாவித்து உண்மை யுணர்த்துகின்றாரென்று உணர்க.

கஸ்மிந் நுகலு ஆகாச ஓதச்ச ப்ரோதச்ச என்கிற உபநிஷத்வாக்யத்தில் ஆகாச சப்தத்தினால் ப்ரக்ருதியைக் கொல்லுகிறதாக வேதாந்திகளின் ஸித்தாந்தம். அந்த ரீதியில் இங்கு வீண் என்கிற ஆகாசவாசக சப்தமும் ப்ரக்ருதி வாசகமாகும் என்று ஆசார்யர்கள் நிர்வஹித்தருளினர். இனி, விண் என்கிற இச்சொல் பூதங்களிலொன்றாகிய ஆகாசத்தையே சொல்லுகிற தென்பாருமுளர். *ஆகாசரத் வாயு: வாயோரக்தி:* என்ற ஆகாசமடியாக ஸ்ருஷ்டிக்கிரமம் சொல்லுகிற ஒரு புடையும் வேதாந்தங்களிலுள்ளதனால் அதற்கிணங்கும்.

அவைமுழுதுண்டபரபரன் = ம்ருத்யு முதலானவர்களுக்கு ஏகதேச ஸம்ஹாரகத்வமே உள்ளது. ஸம்ஹார கர்த்தாக்களையுமுட்பட ஸம்ஹரிக்கவல்ல ப்ராத்பரன் எம்பெருமானேயாவன்.

அமரர்க்கும் அறிவியந்து = நான்முகன் தேவர்கட்கு ஞானமளித்ததாக ஒரு ப்ரஸித்தியுண்டு. அதனையும் நிரூபித்துப் பார்க்குமளவில், ச்வேதாச்வதர உபநிஷத்தில் எம்பெருமானே நான்முகனைத் தனது திருநாபிக்கமலத்தில் தோற்றுவித்து அவனுக்கு வேதோபதேச முகத்தால் ஞானமுமூட்டினதாக ஓதிக்கிடக்கையாலே பிரமன் செய்த ஜ்ஞான ப்ரதானமும் எம்பெருமானதீனமாகவேயிருக்குமாயிற்று.

சுரரறிவருநிலைவிண் முதல் முழுவதும் வரன்முதலாய் அவைமுழுதுண்ட பரபரன் அரனெனப் புரமொருமூன்றெரித்து அலகு அழித்து, அயனென அமரர்க்கு அறிவியந்து உலகு அமைத்துளன்- என்று அந்வய க்ரமமாயிற்று.

 

English Translation

Though He is every where, He cannot be seen, even by the gods. He is the first cause, the almighty, who swallowed all.  He burnt the three cities, and granted wisdom to the gods, He is Brahma the creator, and Siva the destroyer too.

uLanenil uLan_avan* uruvam_ivvuruvugaL*
uLanalanenil, avan* aruvamivvaruvugaL*
uLanena ilanena* ivaiguNa mudaimaiyil*
uLan_iru thakaimaiyodu* ozhivilan paranthE.        1.1.9

He exists" means He exists (for theists); He does not exist also
implies He exists; - He has got such attributes and nature which
can be described as existent as well as non-existent;  He takes
the forms as well as NO Forms; With such sthoola sareeram and
sookshuma sareeram, He exists and is spread EVERYWHERE."

உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்

உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்

உளனென விலனென விவைகுண முடைமையில்

உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே.

 

பதவுரை

உளன் எனில்

-

ஈச்வனுண்டென்று (வைதிகர்கள் சொல்லுகிறாப்போலே) சொன்னாலும்

உளன் அலன் எனில்

-

ஈச்வரனில்லையென்று (நாஸ்திகர்களின்படியே) சொன்னாலும்

உளன்

-

ஈச்வரனுண்டென்பதாகவே தேறும்;

அவன் உருவம் அவன் அருவம்

-

அப்பெருமானுக்கு ஸ்தூல சரீரங்களும் ஸூக்ஷ்ம சரீரங்களுமாம்;

இரு தகைமையோடு

-

இரண்டு தன்மையோடும் (அதாவது ரூபியும் அரூபியுமான ஸ்தூல ஸூக்ஷ்ம ப்ரபஞ்சங்களை வடிவாகக் கொண்டு)

உளன் என இலன் என்

-

உளனென்றும் இலனென்றுஞ் சொல்லப்படுகிற

இவை குணம் உடைமையின்

-

அஸ்திந்வ நாஸ்தித்வங்களை ப்ரகாரமாகவுடையனாகுந் தன்மையினாலே

இவ்வுருவுகள் இவ்வருவுகள்

-

உருவமுடையனவாயும் உருவமில்லாதனவாயுமிருக்கின்ற உலகப் பொருள்கள் யாவும்

ஒழிவு இலன் பரந்து உளன்

-

எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலுமுள்ளவனாகவே ஸித்திப்பன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டால் ஸர்வ சூந்யவாதி நிரஸிக்கப்படுகிறான். ப்ரஹ்மஸூத்ரம் இரண்டாவது அத்யாயம் இரண்டாவது பாதத்தில் *ஸர்வதாநுபபத்தேச்ச* என்கிற ஸூத்ரத்தின் ஸ்ரீபாஷ்யத்தில் பாஷ்யக்காரர் சூந்யவாதத்தைக் கண்டித்திருப்பது பெரும்பாலும் இப்பாசுரத்தின் நடையை உட்கொண்டேயாம்.

உளளெனில உளன் = ‘ஈச்வரன் இல்லை’ என்கிற நிரீச்வரவாதம் இப்பாட்டில் நிரஸிக்கப்படுகிறதாக விளங்குகின்றதேயன்றி ஸர்வசூன்யவாதம் நிரஸிக்கப்படுவதாக விளங்கவில்லையே என்று சிலர் சங்கிப்பர்கள். உண்மையில் ஸர்வசூந்யவாதியே இப்பாட்டில் நிராகரிக்கப்படுகிறான். ஸர்வமும் சூந்யமென்கிற வாதத்தில் ஈச்வரனுடைய சூந்யத்வமும் அடங்கினதாதலால் அதை நிரஸித்து ‘ஈச்வரனுளன்’ என்று ஸ்தாபிக்கப்பட்டுவிட்டால் ஈச்வரன் தானும் விபூதியுக்தனாகவே தேறுவானாதலால் அம்முகத்தாலே ஸகலமுமுள்ளதாக ஸ்தாபிக்கப்பட்டுவிடுகிறதென்பது ஆழ்வார் திருவுள்ளமாகக் காண்கிறது. ஒரு மனிதன் உளனாக ஏற்படும்போது செவி வாய் கண் மூக்குடல் முதலான உறுப்புகளோடு கூடியே ஏற்படுவதுபோல, எம்பெருமானுளனென்று ஏற்படுமிடத்தும் சேதநங்களாகிற சரீரத்தோடு கூடியே ஏற்படவேண்டுதலால் எம்பெருமானுடைய உண்மையை ஸாதிக்குமளவே ஸர்வ சூந்யவாத கண்டனத்திற்குப் போதுமாயிற்று.

இல்லை என்று சொல்லுகிற வாதியை நோக்கி “உளனெனிலுளன்” என்று ஆழ்வாரருளிச் செய்வது எப்படிக்கூடும்? உளன் என்கிற பேச்சு அந்த வாதியின் வாயில் இல்லாதிருக்க உளனெனில் என்கைக்கு என்ன ப்ரஸக்தி? என்று சங்கை பிறக்கலாம். கேண்மின்; ‘ஈச்வரனுளன்’ என்று சொன்னால் எப்படி ஈச்வரனுடைய உண்மையைத் தேறுமோ அப்படியே ‘ஈச்வரன் உளனலன்’ என்றாலும் ஈச்வரனுடைய உண்மையே தேறும் என்று காட்டுவதற்கே ஆழ்வார் இங்ஙனமருளிச்செய்தவாறு. வைதிகர்களான நாங்கள் உளன் என்கிற சொல்லாலே ஈச்வரனுடைய உண்மையை ஸாதிக்கிறோம்; அந்த உண்மையையே இலன் என்கிற சொல்லாலே நீ ஸாதித்தாயாகிறாய் என்று நிரூபிக்கிறபடி.

(உளனெனில் அவனுருவம் இவ்வுருவுகள்; உளனலனெனில் அவனருவமிவ்வருவுகள்.) ஈச்வரனுக்கு உளனாயிருக்குந் தன்மையாவது ஸ்தூலரூபத்தோடுகூடிய சேதநாசேத்நங்களைச் சரீரமாகவுடையனாயிருக்குந் தன்மையேயாம். இனி, இலனாயிருக்குந் தன்மையாவது ஸூக்ஷ்மரூபத்தோடு கூடிய சேதநாசேதநங்களைச் சரீரமாகவுடையனா யிருக்குந்தன்மையேயாம். உபநிஷத்தில் *அஸத் வா இத மக்ர ஆஸீத்* என்று ஓதப்பட்டுள்ள இடங்களில் ஸூக்ஷ்மசிதசித் சரீரகத்வமே அஸதத்வம் என்று நிர்ணயிக்கப்படுவதாகத் தேறுதலால் அதனை அடியொற்றி ஆழ்வார் உள்ளனவெனில் அவனருவமிவ்வருவுகள் என்றருளிச்செய்தாரென்க. ‘ஈச்வரனுண்டு என்றால் ஸ்தூலரூப ப்ரபஞ்ச விசிஷ்டத்வம் விவக்ஷிதம்; ‘ஈச்வரனில்லை’ என்றால் ஸூக்ஷ்மரூப ப்ரபஞ்ச விசிஷ்டத்வம் விக்ஷிதம்; ‘ஈச்வரனில்லை’ என்றால் ஸூக்ஷ்மருப ப்ரபஞ்ச விசிஷ்டத்வம் விசக்ஷிதம்; ஆக இவ்விரண்டு வகைதவிர அடியோடு சூந்யத்வமென்பது எவ்வழியாலும் ஏற்படாதென்றதாயிற்று.

பின்னடிகளின் கருத்தாவது உளன் என்ற ப்ரதிஜ்ஞையாலே உண்மை ஏற்படுகிறது; இலன் என்ற ப்ரதிஜ்ஞையாலே இன்மை ஏற்படுகிறது. உண்மையாவது அஸ்தித்வம்; இன்மையாவது நாஸ்தித்வம்: இவ்விரண்டு தருமங்களும் ஒரு பொருளை ஆச்ரயித்தேயிருக்க வேண்டுதலால் நாங்கள் சொல்லுகிற அஸ்தித்வத்திற்கு ஆச்ரயமாகவும், நீ சொல்லுகிற நாஸ்தித்வத்திற்கு ஆச்ரயமாகவும் ஒரு வஸ்து தேறும்? என்று ஆக்ஷேபிக்க முடியாது; ஏதோவொரு வஸ்துவைச் சுட்டித்தானே நாஸ்தி யென்னவேண்டும்; அப்படி நாஸ்தி என்று நீ சொல்லுகிற வஸ்து எது? என்று கேட்டால் அப்போது அதனை நீ நிரூபித்தேயாக வேண்டுமே; ஆனது பற்றியே நாஸ்தித்வத்திற்கு ஆசரயமாகவும் வஸ்துவினுண்மை ஸித்தித்தே தீருமென்கிறோம். அப்படி ஸித்திக்குமாதலால் ஸர்வதேச ஸர்வகால வ்யாபியான எம்பெருமான் ஸவிபூதிகனாய் ஸித்தித்தானாயிற்று என்றதாம்.

 

English Translation

Would you say he is, then he is, and all this is him. Say he is not, then too he is, as the formless spirit in all. With the twin qualities of being and non-being, he pervades all things and places forever.

paranthathaN paravaiyuL* neerdhoRum parandhuLan*
parantha _aNdamithena:* nilavisum pozhivaRa*
karantha silidanthoRum* idanthikazh poruLthoRum*
karanthenkum paranthuLan:* ivaiyunda karanE.        1.1.10

Emperumaan exists and is in each atom of water droplet of the Ocean
which spreads everywhere as if the atom itself is and spreads the
entire cosmic universe; Like that, He fills entirely even in the
MINUTEST Microcosmic particles and their atoms; With such nature He
exists and at the END, He takes back everything back to Him and stays
put as THE ONLY SOLID ONE

பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன்

பரந்தஅ ண்டமிதென நிலவிசும் பொழிவற

கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்

கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே.

 

பதவுரை

பரந்த

-

எங்கும் வியாபித்த

தண் பரவையுள்

-

குளிர்ந்த கடலினுள்

நீர் தொறும்

-

ஜலபரமாணுதோறும்

பரந்த அண்டம்

-

விஸ்தாரமான இவ்வண்டத்திலிருக்குமா போலே

இது என பரத்து உளன்

-

நெருக்குண்ணாமல் இருப்பவனாய் (இப்படி)

நிலம்

-

பூமியிலும்

விசும்பு

-

மேலுலகங்களிலும்

ஒழிவு அற

-

ஒன்றொழியாமே

கரந்த சில் இடம் தொறும்

-

அதிஸூக்ஷ்மமாய் அற்பமான இடங்கள் தோறும்

இடம்

-

அவ்வவ்விடஙக்ளிலே

திகழ்

-

விளங்காநின்ற

பொருள் தொறும்

-

ஆத்மவஸ்துக்கள்தோறும்

கரந்து

-

(வ்யாப்யவஸ்துக்களும் அறியாதபடி) மறைந்து

எங்கும் பரந்து உளன்

-

எல்லாவிடங்களிலும் வியாபித்திராநின்றான் (யாவரெனில்;)

இவை உண்ட கரன்

-

இவ்வஸ்துக்களை ஸம்ஹார தசையிலும் தனக்குள்ளேயடக்கி, தான் ஸ்திரமாயிருக்குமெம் பெருமான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (பரந்தண்பரவையுள்) பரத்துவத்தைப் பேசுவதான இப்பதிகத்தில் ஸ்ரீமந்நாராயணனுக்கே பரத்வமுள்ளதாக ஸ்தாபித்தல் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலுள்ளது. அந்த நாராயணத் திருநாமத்தை மேற்பதிபகங்களிலே ஸ்பஷ்டமாகப் பேசியருளுகிற ஆழ்வார் இந்தப் பதிகத்திலே ஒருவாறு மறைத்தே காட்டினார். கீழ் ஏழாம்பாட்டில் “சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே” என்றது முக்கியமாக நாராயண திருநாமத்தைத் திருவுள்ளம் பற்றியேயாமென்பது ஸம்பிரதாயம் சுருதியென்றால் வேதம்; மிகுசுருதி யென்றால் வேதாந்தமாகிய உபநிஷத்து சுடர் மிகு சுருதியென்றால் நாராயாணாநுவாகம். ஆகவே நாராயணாநுவாக ஸித்தனான எம்பெருமானுக்கே இப்பதிகத்தில் பரத்துவம் பேசப்பட்டதென்பது குறிக் கொள்ளத்தக்கது. ஸர்வவ்யாபகத்வமே நாராயண நாமத்தின் தேர்ந்த பொருளாதலால் அதனை இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.

பரந்து குளிர்ந்திருந்துள்ள கடலில் நீர்த்திவலைகள்தோறும் வியாபித்திரர் நின்றான் என்று முதலடியில் கூறினார். சாந்தோக்ய உபநிஷத்தில் சாண்டில்யவித்யையில் *ஏஷமஆத்மா அந்தர்ஹருதயே ஜ்யாயாந் ப்ருதிவ்யா: ஜ்யாயாநந்தரிக்ஷாத் ஜ்யாயாந் திவோ ஜ்யாயாநேப்யோ லேகேப்ய* என்று மிகப் பெரியதாக ஓதப்பட்டுள்ள பரம்பொருள் நீர்த்திவலையிலே வியாபியாநின்றால் அவகாசம் அற்பமாகி நெருக்குப்பட்டிருக்குமோவென்ன அப்படிப்பட்ட வருத்தமில்லையென்று ஸ்யாப்தியின் ஸௌகரியத்தை இரண்டாமடியாற் கூறுகின்றார் (ஓர் அண்டத்தை) ஸ்ருஷ்டித்து (அதிலே ஏகாசியை) வைத்தால் எப்படியிருக்குமோ அப்படி அஸங்கு சிதமாகவே வயாப்தியுள்ளதென்றவாறு.

இப்படி ஜலபரமாணுக்களிலே வியாபித்துவிடுமிவ்வளவோயோவென்ன; நில விசும்பொழிவற என்று பூமியிலும் ஆகாசத்திலும் அப்படியே யென்கிறார். ஸகல பதார்ததங்களிலும் வியாப்தியுண்டென்று சொன்னபடி. அதனையே பின்னடிகளில் விவரிக்கின்றார். (கரந்தசிலிடந்தொறும் இத்யாதியால்.) இமையோடு இமைபொருந்தும் போதைக் காற்றிலே முடியும்படியான ஸூக்ஷ்மமான அல்ப சரீரங்கள்தோறும் அந்தந்த சரீரங்களிலே ஜ்ஞாநாநந்த லக்ஷணமாய் கொண்டு விளங்காநின்ற ஆத்மாக்கள்தோறும், யார்க்கும் தெரியாதபடி வியாபித்திருக்கும்.

ஜீவாத்மாவானவன் சரீரத்திலே வியாபித்திருப்பது ஞானத்தினாலேயன்றி ஸ்வரூபத்தாலேயென்று; பரமாத்மா அங்ங்னன்றியே ஸ்வரூபத்தாலே எங்கும் வியாபித்திராநின்றானென்க.

இப்படி சொல்லப்க்கூடுமோ? ஜீவஸ்வரூபமோ அணுவாக ஓதப்பட்டது; பரமாத்ம ஸவரூபமோ விபுவாக ஓதப்பட்டது. அஸவஸ்துவினுள்ளே விபுவான வஸ்து குறையற வியாபித்திருக்குமென்றால் இது எங்ஙனே ஸம்பாவிதம்? என், இவையுண்டகரனே என்பது இதற்கு ஸமாதானம் போலுள்ளது. “சிறுவடிவைக் கொண்டு பெரியவற்றையெல்லாம் தன் வயிற்றிலே வைத்தால் *தாழ்குழலார் வைத்த தயிருண்டபொன்வயிறு, இவ்வேழுலகமுண்டு மிடமுடைந்தால்* என்கிறபடியே பின்னையும் அவ்வயிறே இடமுடைத்தாம்படி யிருக்கவல்ல ஸர்வசக்தி சிறியவற்றிலே குறைவற இருக்கமாட்டானோ என்கிறார்” என்பது ஈடு.

கரன் = வடசொல்லிகாரம்; திடமாகவுள்ளவன் என்றபடி: திடமான பிரமாணமாகிய வேத வேதாந்தங்களில் ஸித்தன் என்றவாறு.

 

English Translation

He who swallowed all, reclines in the cool ocean, resides in every drop, the Universe itself, complete on Earth and in the sky, hidden everywhere, in every atom and cell continuously, forever.

karavisum perivaLi* neernNilam ivaimisai*
varanavil thiRalvali* aLipoRaiyaay nNinRa*
paran_adi mEl* kurukoorch sadagOpan_sol*
niral niRai aayiraththu* ivaipaththum veedE. (2)        1.1.11

ParamporuL- the one who has become and is the sound, burning capacity,
strength, coolness and the endurance/patience- the attributes of the
pancha bhoothangaL (respectively aagaayam, fire, air, water, earth);
His Lotus feet are the topic of  pasurams of kurugoor sadagopan
- which are rich in meanings and in literary sense- the ten pAsurams
of these full 1000 pAsurams can give mOksham (to all of us, dear ones!)

கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை

வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற

பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்

நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே.

 

பதவுரை

கரம்

-

திடமான

விசும்பு

-

ஆகாசமென்ன

எரி

-

அக்னியென்ன

வளி

-

வாயுவென்ன

நீர்

-

ஜலமென்ன

நிலம்

-

பூமியென்ன (ஆகிய)

இவை மிசை

-

இவற்றின்மீதுள்ள (இவற்றிற்கு ஸ்வபாவங்களாயுள்ள)

வரன்

-

சிறந்த

நவில்

-

சப்தமென்ன

திறல்

-

(கொளுத்தும்) சக்தி யென்ன

வலி

-

(எதையும் தூக்கவல்ல) பலமென்ன

அளி

-

குளிர்ச்சியென்ன

பொறை

-

எதையும் பொறுத்துக் கொண்டிருப்பதாகிற க்ஷமையென்ன

ஆய் நின்ற

-

ஆகிய இத்தருமங்களெல்லாம் தன்வசமாயிருக்கப்பெற்ற

பரன்

-

ஸர்வேச்வரனுடைய

அடிமேல்

-

திருவடிவிஷயமாக

குருகூர் சடகோபன் சொல்

-

திருநகரியில் திருவவதரித்த நம்மாழ்வார் அருளிச்செய்த

நிரல் நிறை

-

சப்தபூர்த்தியும் அர்த்தபூர்த்தியுங்கொண்ட

ஆயிரத்து

-

ஆயிரம் பாசுரங்களிலே

இவை பத்தும்

-

இப்பத்துப்பாசுரமும்

வீடு

-

மோக்ஷபிராபகம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பதிகம் கற்பார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டுகிறது இது இவை பத்தும்வீடே யென்றது இப்பத்துப் பாசுரமும் வீடாகிய மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைத் தரவல்லது என்றபடி.

பரணடிமேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆயிரத்தில் இப்பத்தும் வீடளிக்குமென்க. பரனுக்கு அடைமொழியாய் நிற்பன முன்னிரண்டடிகள், முதலடியில் ஐந்து பூதங்கள் சொல்லப்படுகின்றன. இரண்டாமடியில் அந்தப் பூதங்களின் குணங்கள் முறையே சொல்லப்படுகின்றன.

1. விசும்பு - ஆகாசம்; அதன் குணம் - நவில்- சப்தம்

2. எரி- அக்நி; அதன் குணம்- திறல்- தஹநசக்தி

3. வளி - வாயு; அதன் குணம் - வலி - மிடுக்கு.

4. நீர் - ஜலம், அதன் குணம்- அளி- குளிர்ச்சி.

5. நிலம் - பூமி; அதன் குணம் - பொறை- க்ஷமை  என்று உணர்க.

இவையாய்நின்ற பரன் என்றது- இப்படிப்பட்ட பூதங்களையும் அவற்றின் குணங்களையும் உண்டாக்கி அவையெல்லாம் தானிட்ட வழக்காம்படி யிராநின்ற பரமபுருஷன் என்றபடி, பஞ்சபூதங்களையும் அவற்றின் குணங்களையும் சொன்து மற்றுமுள்ள தத்துவங்களையுஞ் சொன்னபடியாய் லீலாவிபூதி முழுவதையுஞ் சொல்லிற்றாகி, நித்ய விபூதிக்கும் அது உபலக்ஷணமாகி, ஆக உபயவிபூதி நீர்வாஹகனாயிருக்கிற பரம புருஷனென்றதாயிற்று.

குருகூர் = *குருகா என்னும் வடசொல் குருகையென ஐயீறாயிற்று. ஆழ்வார் திருநகரி வடமொழியில் ‘குருகாபுரி’ என வழங்கப்பட்டது. அதுவே தமிழில் குருகூரென வழங்கலாயிற்று.

ஆழ்வார் தாமே* குருகூர்ச்சடகோபன்சொன்ன* என்று பிறர்போலக் கூறினது கவிஸம்ப்ரதாயம் பக்தி தலையெடுத்துத் திவ்யப் பிரபந்தங்களை அருளிச்செய்கிற ஆழ்வார் தமது திருநாமத்தை நிர்தேசித்துக் கொள்வது- பின்புள்ளார் ஆதரித்துப் பரிக்ரஹித்தற் பொருட்டாம்.

நிரனிறையாயிரத்து என்றவிடத்து ஈடு முப்பத்தாறாயிரப்படி ஸ்ரீஸூக்திகள் காண்மிண்:- “நிரல்நிறை என்னுதல், நிரன்நிறை என்னுதல், நிரல் நிறை என்றபோது சப்தங்களும் நிறை என்னுதல் நிரல் நிறை என்றபோது சப்தங்களும் நிறைந்து அர்த்தங்களும் புஷ்கலமாயிருக்கை. நிரன் நிறை என்றபோது நேரே நிறுத்தப்படுகை. லக்ஷணங்களிற் குறையாமே எழுத்துஞ்சொல்லும் பொருளு மந்தாதியும் க்ரமத்திலே நிறுத்தப்படுகை” என்று.

ஆயிரம் = ஆயிரம் பாசுரம் பாடவெணுமென்று ஆழ்வார் ஸங்கல்பஞ்செய்து கொண்டு அருளிச்செய்யப்புகலில்லை. *மயர்வற மதிநலமருளப் பெற்றவராகையாலே ஆயிரம் பாசுரங்கள் தம் திருவாக்கிலே அவதரிக்குமென்றுணர்ந்து அருளிச் செய்தபடி. எம்பெருமான் விஷயத்திலே ஆயிரம்பாசுரம் பேசியல்லது தரிக்கமாட்டாத தம்முடைய நிலைமையைக்கொண்டு அருளிச்செய்தபடியாகவுமாம்.

 

English Translation

The decad of the thousand songs by Kurugur Satakopan on the Lord who exists in Fire, Earth, Water, sky and Air, subtly as heat, mass, coolness strength and sound, offers liberation to those who recite it.

veedumin muRRavum* veeduseythu* ummuyir
veedudai yaaNnidai* veeduseymminE. (2)        1.2.1

Leave all attachments to the worldly things. Then after leaving them,
hand over your "athmaa" to the "empiraan" (my Lord) who owns moksha
lOkam, parama padam

வீடுமின் முற்றவும்--வீடுசெய்து உம்முயிர்

வீடுடை யானிடை--வீடுசெய்ம்மினே.

 

பதவுரை

முற்றவும்

-

(பஜந விரோதியான ஸாத்ய ஸாதனங்கள்) எல்லாவற்றையும்

விடுமின்

-

விட்டுவிடுங்கள்;

வீடு செய்து

-

அப்படிவிட்டு,

உம் உயி

-

உங்களுடை ஆத்ம ஸ்துவை

வீடு உடையான் இடை

-

மோக்ஷ நிர்வாஹகனான ஸ்வாமியிடத்திலே

வீடு செய்ய மின்

-

ஸமர்ப்பியுங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானைத் தவிர்ந்த மற்றெல்லா விஷயங்களையும் விட்டு எம்பெருமானது திருவடிகளிலே ஆத்மாவை ஸமர்ப்பியுங்கோளென்கிறார். “முற்றவும் வீடுமின்” என்று அடைவேசொல்லாயிருக்க, அப்படிச்சொல்லாமல், தொடங்கும்போதே வீடுமின் என்பானென் னென்னில்; ஒரு சிறு குழந்தை கையிலே ஒரு பாம்பைப் பிடித்துக்கொண்டு கிடந்தால் ‘போடு, போடு’ என்று சொல்லி, பிறகு பாம்பு’ என்னுமாபோலேயும், ஒருவன் வீட்டினுள்ளே கிடந்து உறங்காநிற்க வெளியிலே நெருப்புப்பற்றி எரியாநின்றால் ‘புறப்படு, புறப்படு’ என்று கோஷித்துவிட்டுப் பிறகு ‘நெருப்பு’ என்னுமாபோலேயும் முந்துற, விடுங்கோளென்கிறார்.

எதை விடுவதென்ன, முற்றவும் என்கிறார். அஹங்கார மமகாரங்களாலே தூஷிக்கப்பட்டவற்றிலே சிலவற்றை வைத்துக்கொண்டு சிலவற்றை விடுவதென்பது கூடாதே; முழுவதையும் விடவேண்டுமாதலால் முற்றவும் என்கிறார்.

உம் உயிர் வீடுடையானிடை = இதற்குப் பலபடியாகவும் பொருளுரைக்கலாம் உங்களுடைய உயிரையும் அதற்கு வீடாகிய சரீரத்தையும் தனக்குச் சரீரமாகவுடையனான பகவானிடத்தில் என்னலாம்; உங்களுடைய உயிரை வீடாகவுடையவான எம்பெருமானிடத்தில் என்னலாம். உம் உயிர்- உங்களாத்மாவை, வீடு- விடுதமிடத்தில், உடையானிடை- ஸ்வாமியிடத்தே. வீடு செய்மின்- என்னலாம் வீடுடையானிடை- வீடாகிய பரமபதத்தையுடையவனான எம்பெருமானிடத்தில், உம்முயிர் வீடு செய்மின் என்னலாம்.

“அநித்யமான சரீரத்திற்கு ஒரு நன்மை தேடிக்கொள்ளச் சொல்லுகிறேனல்லேன், நித்யமான ஆத்மவஸ்துவுக்கன்றோ நானொரு நன்மை தேடிக்கொள்ளச்சொல்லுகிறது” என்ற கருத்தும், “என் உயிர்க்கா நான் நன்மை தேடச் சொல்லுகிறேன், உங்கள் உயிர்க்கன்றோ” என்ற கருத்தும் ‘உம்முயிர்’ என்பதில் தோன்றும்.

‘வீடு செய்மினே’ என்றும் ‘வீடு இசைமினே’ என்றும் இரண்டு பாடல்களும் வியாக்யானங்களில் பரிக்ரஹிக்கப்பட்டுள்ளன; ‘வீடு இசைமினே’ என்றது- வீட இசையுங்கோள் என்றபடி. விட வேண்டியவற்றை விடாமற்போனாலும் விடவேணுமேன்கிற அபேக்ஷையையாவது நெஞ்சிற் கொள்ளுங்கோள் என்றவாறு. அபிமுக்யம் காட்டுகிறவளவிலேயே பரம ஸந்தோஷமடையுமியல்வினனான எம்பெருமானுக்கு இந்த சேதநன் விஷ்யாந்தரங்களை அறிவிடுவதிற்காட்டிலும், விட இசைவதுதானும் மகிழ்ச்சிக்குறுப்பாகும் என்க.

 

English Translation

Give up everything, surrender your soul to the Maker, and accept his protection.

minnin nilaiyila* mannuyir aakkaigaL*
ennu midaththu* iRai unnumin neerE.        1.2.2

the bodies which house the "athmaa" are like a flicker, last lesser
time than lighting and are not all permanent- Think and say that
and then you think of the Ever-permanent, Emperumaan

மின்னின் நிலையில--மன்னுயி ராக்கைகள்

என்னு மிடத்து இறை--உன்னுமின் நீரே.

 

பதவுரை

உயிர் மன்னு

-

ஆத்மா பொருந்தி வர்த்திக்கிற

ஆக்கைகள்

-

சரீரங்கள்

மின்னின்

-

மின்னலைக்காட்டிலும்

நிலையில்

-

நிலையுடையனவல்ல;

என்னும் இடத்து

-

என்று சொல்லுமளவில்

நீரே

-

நீங்களே

இறை

-

சிறிது

உன்னுமின்

-

ஆராய்ச்சி பண்ணிக் பாருங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானைத் தவிர்த்த மற்ற விஷயங்களை விட்டு அவன் பக்கலிலே ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணப் பாருங்கொள் என்றார் கீழ்ப்பாட்டில்; அதுகேட்டவர்கள் ‘இது எங்ஙனே ஸாத்யமாகும்? நெடுநாளான வாஸநை பண்ணித் தொடர்ந்துவருகிற விஷயங்களை விட முடியுமோ? என்ன அவற்றின் குற்றங்குறைகளைக் காணவே நன்கு விடலாமென்கிறார் இப்பாட்டில்.

‘உயிர்மன்னு ஆக்கைகள் மின்னின்னிலையில’ என்றும் அந்வயிக்கலாம் ‘மன் உயிர் ஆக்கைகள் மின்னின்னிலையில’ என்றும் அந்வயிக்கலாம். ஆத்மாக்கள் விஷயபோகங்களுக்கு ஆயதனமாகப் பற்றியிருக்கிற சரீரங்களானவை மின்னல் போலவுங்கூட நிலத்திராதவை என்றும், நித்யர்களான ஆத்மாக்கள் கொண்ட சரீரங்களானவை- என்றும் முறையே உரைத்துக்கொள்க. மின்னின் = மின்னல்போல; மின்னலைக்காட்டிலும்.

என்னுமிடத்து இறையுன்னுமின்நீரே = இந்த வியத்தை நீங்களே ஆராய்ந்து பார்க்கலாமே; இதற்காக ஒரு ஆசார்யோபதேசம் வேணுமோ? என்றவாறு.

பன்னீராயிர வுரையின்படிக்குப் பின்னடிகளின் கருத்தாவது- மின்னின்னிலையில் மன்னுயிராக்கைகள் என்று சொல்லும்படியாதலால் நீங்கள் இறை - ஸ்வாமியை, உன்னுமின் - மநநம் பண்ணுங்கோள் என்பதாம்.

 

English Translation

Fleetier than lightning, is the life of the body. Ponder a while on this matter yourself.

neernNumathu enRivai* vErmuthal maayththu* iRai
sErmin uyirkku* athan nErnNiRai yillE.        1.2.3

yours, you- such ahankaara, mamakaaram- Remove them from right at
the root level and surrender to the Emperumaan. There is no equal
and better action than that for the "athmaa".

நீர்நும தென்றிவை, வேர்முதல் மாய்த்து இறை

சேர்மின் உயிர்க்கு அதனேர்நிறை யில்லே.

 

பதவுரை

நீர் நுமது என்ற இவை

-

அஹங்கார மமகாரங்களாகிற இவற்றை

வேர் முதல் மாய்த்து

-

(ருசி வாஸநைகளாகிற) பக்க வேரோடே முதலறுத்து

இறை

-

ஸ்வாமியை

சேர்மின்

-

அடையுங்கள்;

உயிர்க்கும்

-

ஆத்மாவுக்கு

அதன் நேர்

-

அதனோடு ஒத்து

நிறை இல்

-

பூர்த்தி இல்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- விட வேண்டிய வஸ்துக்கள் பலபல கிடப்பதால் அவற்றையெல்லாம் தனித்தனியே எடுத்துரைத்தல் பெரும்பாடாகுமாதலால் விட வேண்டியவற்றைச் சுரங்க அருளிச்செய்கிறாரிதில். (*அநாத்மந்யாத்ம புத்திர் அஸ்வே ஸ்வமிதி யாமதி: அவித்யாதருஸம்பூதிபீஜமேதத் த்விதா ஸ்திதம்*) என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திற் சொல்லப்பட்டது. இதைத் திருவுள்ளம் பற்றியே ஆழ்வார் ‘நீர்நுமதென்றிவை வேர்முதல்” என்றார். இங்கு ‘நான் எனதென்றிவை’ என்றோ ‘நாம் நமதென்றிவை’ என்றோ இருக்க வேண்டும்; அப்படி யிருந்தால்தான் அஹங்கார மமகாரங்களுக்குப் பர்யாயமாகும்: ஆழ்வார் அப்படி யருளிச்செய்யாது நீர் நுமது என்றது:- அநுவாதரீதியாலுங்கூட அஹங்கார மமகார ஸ்பர்சம் தமக்குக்கூடாதென்ற கருத்தினாலென்க. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்- “நான் எனது தம்வாக்காலே சொல்ல மாட்டாரே,  நாக்கு வேம் என்று.”

 

English Translation

Uproot all thoughts of you and yours. Merge with the Lord, there is no greater fulfillment.

illathum uLLathum* allathu avanuru*
ellaiyil anNnNalam* pulkupaRRaRRE.        1.2.4

That Emperumaan's form is there as well as NOT there; That form is a
kinda infinite and unlimited Divine Bliss and pErAnandham. Hence,
remove and put aside the desires for other worldly things and embrace
and hug Emperumaan (tightly).

இல்லது முள்ளதும் அல்ல தவனுரு

எல்லையி லந்நலம் புல்குபற் றற்றே.

 

பதவுரை

அவன் உரு

-

அந்தப் பெருமானுடைய ஸ்வரூபமானது,

இல்லதும் அல்லது

-

விகாராஸ்பதமாகையாலே அஸத்து என்னப்படுமதான அசேதநத்தின்படியை யுடையதுமன்று

உள்ளதும் அல்லது

-

ஸத்து என்னப்படுபவனான ஜீவாத்மாவின் படியையுடையதுமன்று;

எல்லை இல்

-

எல்லையில்லாத

அ நலம்

-

அப்படிப்படட் ஆநந்த ஸ்வரூபியாயிருக்கும்; (ஆதலால்)

பற்று அற்று

-

ஹேய விஷய ஸங்கத்தை விட்டு

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- புல்கு- (அப்பெருமானை) ஆச்ரயிக்க

விடவேண்டிய விஷயத்தின் தோஷ மிகுதியை இரண்டாம் பாட்டிலருளிச் செய்தார்; பற்ற வேண்டிய பகவத் விஷயத்தின் நன்மை மிகுதியை இப்பாட்டிலருளிச் செய்கிறார். அவனுக்கு உள்ளதுமல்லது இல்லதுமல்லது =நம்முடைய ஸித்தாந்தத்தில் எல்லாம் உள்ள வஸ்துக்களேயன்றி இல்லாத வஸ்து ஒன்றுமேயில்லையே; அப்படியிருக்க இல்லது என்பதேன்? எனில்; கேண்மின்: இங்கே இல்லது என்பதற்கு: ‘அடியோடு இல்லாதது’ என்றாவது ‘பொய்யானது’ என்றாவது பொருளில்லை; ‘அழியுந்தன்மையுடையது’ என்று பொருள். உள்ளது என்றது அழியாத பொருள் என்றபடி அசித்தையும் சித்தையும் சொன்னவாறு. ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் இரண்டாவது அம்சத்தில் பன்னிரண்டாவது அத்யாயத்தில் *ஜ்யோதீம்ஷி விஷ்ணுர்புவநாதி விஷ்ணு வநாதி விஷ்ணு: கியோ திசச்ச, நத்யஸ் ஸமுத்ராச் ச ஸ ஏவ ஸர்வம் யதஸ்தி யந்நாஸ்தி ச விப்ரவர்ய* என்றுள்ள ச்லோகத்தில் அஸ்தி சப்தத்தாலே சித்தையும் நாஸ்தி சப்தத்தாலே அசித்தையும் சொல்லியிருக்கையாலும், தைத்திரீய உபநிஷத்தில் *ஸத்யஞ்சாந்ருதஞ்ச ஸத்யமபவத்* என்ற விடத்து ஸத்ய சப்தத்தாலே சித்தையும் அந்ருத சப்தத்தால் அசித்தையும் சொல்லி யிருக்கையாலும் அவற்றை அடியொற்றி ஆழ்வாரும் உள்ளது இல்லது என்ற சப்தங்களினால் சித்தையும்  அசித்தையும் குறித்தனர்.

இனி உள்ளது - உள்ளேயிருப்பது (சரீரத்தினுள்ளேயிருப்பது) என்று பொருளாய் ஆத்மாவைச் சொல்லிற்றாகி. இல்லது - (இல்- வீடு) வீடாகவுள்ளது. (அத்மாவுக்கு இருப்பிடமாகவுள்ளது) என்று பொருளாய் உடலைச் சொல்லிற்றாகி ஆக இவ்வழியாலே சித்தையும் அசித்தையும் சொல்லிற்றாகவுங் கொள்ளலாமென்பர். பரமாத்மாவினுடைய ஸ்வரூபம் நேதந அசேதந விலக்ஷணம் என்கை.

ஆனால் பரமாத்ப ஸ்வரூபம் எங்ஙனே யிருக்குமென்ன, எல்லையிலந்தலம் என்கிறது. எல்லையில்லாத ஆந்தமயமாயிருக்குமென்றவாறு. அப்படிப்பட்ட பரம பொருளை, பற்றற்றே புல்கு = *புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸநையோடே விட்டே பற்றவேணும். புல்கு என்னும் ஏவலொருமைவினை முற்றுக்குச் சேர விளி வருவித்துக் கொள்க. நாட்டை நோக்கிச் சொல்வதாகக் கூறுப.

 

English Translation

The Lord is beyond being and non-being, Cutting all attachments, attain that infinite good.

 

aRRathupaRRenil* uRRathu veedu_uyir*
seRRathu mannuRil* aRRiRai paRRE.        1.2.5

If the attachments to worldly matters are removed, atmA can get mOksham.
Hate that mOksham too, and deisre and opt for Bhagavadh vishayam and
service and kainkaryam to emperumaan and get attached to Him

அற்றது பற்றெனில் உற்றது வீடுஉயிர்

செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே.

 

பதவுரை

பற்று அற்றது எனில்

-

விஷயாந்தரஸங்கம் அற்றொழிந்தது என்னுமளவிலேயே

உயிர்

-

ஆத்துமா

வீடு உற்றது

-

மோக்ஷத்தைப் பெற்றானாவன்; (கைவல்ய மோக்ஷமுண்டாகும்;)

அது

-

அந்தக் கைவல்ய மோக்ஷத்தை

சேற்று

-

வெறுத்து

மன்ன உறில்

-

நிலைநிற்கும்படி பகவத் விஷயத்தைக் கிட்டப் பார்க்கில்

அற்று

-

(ஆச்ரயிக்கும்போதே) எம்பெருமானுக்கென்றே அற்றுத் தீர்ந்து

இறை

-

அந்த எம்பெருமானை

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

பற்று பற்றுக.

***- எம்பெருமானை பற்றுதற்கு இடையூறாகக் கைவல்ய மோக்ஷத்தில் நகையுண்டாகக் கூடியதாதலால் அந்த இடையூதன்னை விலக்கிக் கொள்ளுமாறு உபதேசித்தருளுகிறாரிப்பாட்டில்.

உலகத்தில் அவரவர்களது ருசியின்படி விருப்பங்கள் பலவகைப்படும். இஹலோகத்திற்குப் பரிபூர்ண ஐச்வரியத்தையே சிலர் விரும்புவர்; தேவேந்திர பட்டத்தில் விருப்பமுள்ளவர்வகள் இவ்வுலகச் செல்வங்களிற் கண்வையார். நான்முகக் கடவுளது பதவியை விரும்புமவர் இந்திரபதவியிற் கண்வையார். ஆத்மாநுபவமாகிற கைவல்ய மோக்ஷத்தில் விருப்ப முடையார் கீழ்ச்சொன்னவற்றிற் கண்வையார் *உயர்வறவுயர்நலமுடையனாய் அயர்வறுமமரர்களதிபதியாய் *திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டனாக எம்பெருமானிடத்திலே பற்றுடையார் இவை யித்தனையிலும் கண்வையார். ஆகவே கைவல்ய மோக்ஷத்தில் கண்வைக்க வேண்டாமென்று நியமிக்கிறது இதில்.

பற்று அற்றதெனில் = ப்ரக்ருதியிலும் ப்ராக்ருதங்களிலுமுண்டான பற்று ஒழிந்த மாத்திரத்திலே என்றபடி. உயிர்வீடு உற்றது = ஆத்மாநுபவமாகிற மோக்ஷம் வந்து புகுந்ததாயிடும். கைவல்ய மோக்ஷத்திலே இச்சைபிறக்கும் என்றவாறு. ‘மறுபடியும் பிறத்தல் இறத்தலாகிய துன்பங்கள் உண்டாகாதபடியிருந்தால் போதுமானது’ என்கிற இவ்வளவையே ஆசைப்பட்டு அதற்காகக் கைவல்யமோக்ஷத்தளவிலே த்ருப்திபெறதலாகிற ஒரு நிலைமை நேரும் என்றபடி, விலக்ஷணமான ஞானத்தையும் ஸ்வரூபத்தையும் உடைத்தான ஜீவாத்மாவாகிய வஸ்துவுக்கு அசித் ஸம்பந்தமேயன்றோ மறைவை உண்டுபண்ணிக்கொண்டிருந்தது; அப்படிப்படட் அசித் ஸம்ஸர்க்கம் கழிந்தவாறே ஆத்மஸ்வரூபம் பிரகாசிக்கும் அதுதான் நித்யமாயும் ஜ்ஞாநாநந்த ஸ்வரூபியாயுமிருக்கையாலே ‘இத்தகையத்தான ஆத்மவஸ்துவையே அனுபவித்துக்கொண்டிருக்கலாமே’ என்ற ஆசை பிறக்கும்படி நேர்ந்துவிடுமென்க. அது செற்று = அதில் விருப்பமற்று என்றபடி மண்ணுறில் = மன்ன- உறில், மன்னவுறில் என்று புணர வேண்டுமிடத்து மன்னுறில் என்றானது தொகுத்தல். ‘அதற்கு மேலும் ஒரு புருஷார்த்தமுண்டு’ என்று ஆசைப்பட்டு அப்பால் போகவேண்டிய தொன்றில்லாதபடி ஒப்புயர்வற்ற புருஷார்த்தமாகிய பகவத்ப்ராப்திலக்ஷணமோக்ஷணத்தைப் பெற வேண்டியிருக்கில் என்றபடி.

அற்று என்பதிலுள்ள வினையெச்ச விகுதியைப் பிரித்தெடுத்து பற்று என்பதனோடு கூட்டி, பற்று என்பதிலுள்ள ஏவல் விகுதியைப் பிரித்தெடுத்து அற்று என்பதில் கூடடி“, ‘பற்று அறு’ என்றாக்கி, இறையைப்பற்றிக் கைவல்ய மோக்ஷருசியை அறு என்பதாகவு முரைப்பர்.

 

English Translation

When all attachments cease, the soul becomes free, So seek the eternal Lord and cut all attachments.

paRRilan eesanum* muRRavum ninRanan*
paRRilaiyaay* avan muRRiladankE.        1.2.6

Emperumaan has got no attachments; He exists everywhere in its full
entirety. Hence, you do not get attached to any other thing and immerse
yourself in ALL kinds of kaikanaryams and all sorts of service to Emperumaan.

பற்றில னீசனும் முற்றவும் நின்றனன்

பற்றிலை யாய் அவன் முற்றி லடங்கே.

 

பதவுரை

ஈசனும்

-

எம்பெருமானும்

பற்றிலன்

-

ஆச்ரிதர்களோடு பொருந்தியிருப்பதையே இயல்வாக உடையனாய்

முற்றவும்

-

தாரகம் போஷகம் போக்யம் என்னும்படியான ஸகல ஸ்துவுமாகவும்

நின்றனன்

-

இரா நின்றான்: (ஒலோகமே!)

பற்றிலை ஆய்

-

எம்பெருமானோடு பொருந்தியிருப்பதையே இயல்வாகவுடைத்தாய்

அவன்

-

அப்பெருமானுடைய

முற்றில்

-

ஸகலகைங்கரியங்களிலும்

அடங்கு

-

அந்வயிப்பது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வீர்! புறம்புள்ளவற்றைவிட்டுப் பரமபுருஷனைப் பற்றும்படி உபதேசிக்கிறீர்; அவன்தான் ஸர்வேச்வரனன்றோ? நமக்கு அவன் முகந்தருவானோவென்று ஸம்ஸாரிகள் சங்கிப்பதாகக்கொண்டு, எம்பெருமானை அப்படி நினைக்கலாமோ? ஈச்வரத்வம் வந்தேறி யென்னும்படி ஸௌசீல்யமே வடிவாயிருப்பவனன்றோ அவன் என்று ஸமாதாநம் பண்ணுகிறாரிதில்.

ஈசனும் பற்றிலன் = ‘எம்பெருமான் பற்றில்லாதவன்’ என்றும் பொருள்கொள்ளலாம்படியிருக்கும்: ஆனால் பூருவாசாரியர்கள் அப்பொருளைக் கொண்டிலர்; “ஸர்வேச்வரனேயாகிலும் ஆச்ரிதரெல்லார் பக்கலரிலுமொக்க ஸ்நேஹ ஸ்வபாவனாயிருக்கும்.” என்று ஆறாயிரப்படியிலே திருக்குருகைப்பிரான் பிள்ளானருளிச் செய்தது நோக்கத்தக்கது. பற்றிலானென்பது பற்றிலனென்று குறுகிக்கிடக்கிறதென்பர். பற்றொடுகூடி யுள்ளவனென்றபடி ஆச்ரிதர்களுடன் புரையறக் கலந்து பழகுவதையே இயல்வாகவுடையவனென்கை.

ஈசனும் = ஈச்வரனாயிருக்குந் தன்மையாகிற மேன்மையுங்கூட இல்லாவிடில் அந்த சீலகுணம் நிறம் பெறமாட்டாதன்றோ. பரத்துவமுள்ள விடத்தே காணப்படும் ஸௌப்பியமேயன்றோ போற்றத்தக்கதாகும். காஷ்டலோஷ்டங்கள் மிகவும் எளியனவாயிருக்கின்றனவென்றால் யாது பயன்? ஒன்றுமில்லை. ஆகவே மேன்மை கிடைக்குமிடத்தேயுள்ள நீர்மையே பாராட்டுதற்குரியது. இதற்காகவே எம்பெருமானிடத்தில் மேன்மை குடிபுகுந்ததேயன்றி, அதுகண்டு நாம் அஞ்சுவதற்காகவன்று.

முற்றவும் நின்றனன் = ஸகலவித பந்துவுமாகவும், தாரக போஷக போக்ய வஸ்துக்களெல்லாமாகவும், அறிவு ஒழுக்கம் ஜாதி முதலியவற்றாற் ஏற்றத்தாழ்வு பெரிதுமுடைய எவ்வகுப்பினர்க்கும் ஒருங்கே ஆச்ரயணீயனாகவும் நின்றான்.

பற்றிலையாய் = ‘பற்றிலன்’ என்பதன் முன்னிலையிது. அச் சொல்லுக்குக் கொண்டபொருளை இச்சொல்லுக்குங் கொள்ளத்தக்கது. அவன் உன்னிடத்தில் பற்றுவைத்திருப்பது போலவே நீயும் அவனித்துப் பற்றுடையனாய் என்றபடி, அவன் முற்றில் அடங்கு = அவனுடையதான எல்லாவற்றிலும்- ஸகலவித கைங்கரியங்களிலும் ஊன்றியிருக்கக்கடவை என்றபடி.

இப்பாசுரத்திற்கு பட்டர் அருளிச் செய்யும்படி யொன்றுண்டு; அதாவது ஈசனம்- ஷாட்குண் பரிபூர்ணனான் ஸ்ரீவைகுண்ட நிலயனான எம்பெருமானும், பற்றிலன்- அங்குள்ள நித்யமுக்தர்களிடத்துப் பற்று இல்லாதவனாய், முற்றவும் நின்றனன்- இன்று ஆச்ரயிக்கிற ஸம்ஸாரிகளிடத்திலேயே பரிபூர்ணமான காதல் கொண்டிராநின்றான். பற்றிலையாய் - ஹேய விஷயங்களிலே நீ வைத்திருக்கிற பற்றை விட்டவனாகி, அவன் முற்றிலடங்கு- அவனையே எல்லாமாகப் பற்றுவாயாக என்று. உலகத்தை விளித்துச் சொல்லுகிறபடி.

 

English Translation

The Lord has no attachment. He exists everywhere. Become freed of attachments and merge with him fully.

adankezhil sampaththu* adankakkandu* eesan
adankezhil aqthenRu* adankuka uLLE.        1.2.7

Barge right into that Bhagavdh vibhoothi (the Divine Wealth) and see that
Bhagavadh vibhoothi which is exquisitely beautiful in all respects
and consider that the entire Wealth belong to His

அடங்கெழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்

அடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே..

 

பதவுரை

அடங்கு எழில்

-

முற்றிலும் அழகியதான

சம்பத்து அடங்க

-

(எம்பெருமானுடைய) விபூதியை எல்லாம்

கண்டு

-

பார்த்து

அடங்க

-

அதெல்லாம்

ஈசனஃது

-

எம்பெருமானுடையதான

எழில் என்று

-

ஸம்பத்து என்று துணிந்து

உள்ளே

-

அந்தப்பகவத் விபூதிக்குள்ளேயே

அடங்குக

-

சொருகிப்போவது

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில், எம்பெருமான் அடியார்களோடு புரையேறக் கலந்து பழகுவதையே இயல்வாகவுடையவனென்றார்; அவன் அப்படியிருந்தாலும், உண்மையில் அளவிடமுடியாத உபயவிபூதிச் செல்வத்தையுடையவனாயிருக்கையாலும் நாம் மிகப் புல்லியராயிருக்கையாலும் அவனோடு நமக்குச் சேர்த்தி எளிதாயிராதே; கடலிலே புகுந்த ஒரு துரும்பானது அலைமேல் அலையாகத் தள்ளுண்டுவந்து கரையில் சேருகிறார்போலே அப்பெருமானது ஐச்வரிய அலைகள் நம்மைத் தள்ளிவிடமாட்டாவோ? அம்மானாழிப்பிரானவனெவ்விடத்தான் யானார்” என்று பின்வாங்கப் பண்ணுமே! என்று ஒரு சங்கையுண்டானக, அதற்குப் பரிஹார மருளுகிறார்போலும் இப்பாசுரத்தினால்: அப்பெருமானது ஐச்வர்யம் அளவற்ற தென்பது உண்மையே; அப்படிப்பட்ட ஐச்வரியமெல்லாம் நமது நாதனுடைய ஐச்வரியமன்றோ என்று அநுஸந்தித்து நாமும் அந்த ஐச்வரியத்தினுள் அந்தர்பவிக்கவும் பெற்றால் பின் வாங்க ப்ரஸகதி யிராதென்கிறார். எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள உறவை உணரவே கூச்சம் குலையும் என்பது இப்பாட்டுக்குத்  தேர்ந்த கருத்தாம். ஸம்பந்தவுணர்ச்சி உண்டாகுமத்தனையே போதுமென்கை.

நிருபாதிக பிதாவாகிய ஸ்ரீமந்நாராயணனுடைய “உன்றன்னோடுறவேல் நமக்கு இங்கொழிக்க வொழியாது” என்னும்படியாக உறவின் உறுதியை உற்று நோக்கி, ஈச்வரன் “த்வம் மே” (நீ எனக்கு உரியவன்) எனில், “அஹம் மே” (நான் எனக்கே உரியேன்) என்னும் விவாதத்தை விட்டொழித்தால் அப்பெருமானது செல்வ மிகுதியைக் கண்டு சிறிதும் கூசநேரிடாதென்க.

ராஜகுமாரன் ஒரு அழகிய தோட்டத்தைக்கண்டு உள்ளே புகநினைத்தும் கட்டுங்காவலுமா யிருந்தது கண்டு அஞ்சி நிற்கு மளவில் “இஃது உன் தகப்பனது தோட்டங்காண்” என்னவே நினத்தபடி புகுந்து திளைத்துப் பரிமாறலாமன்றோ; அதுபோலக் கொள்க. அடங்க எழில்; தொகுத்தல் விகாரம். சம்பத்து - ஸம்பத் என்ற வடசொல் விகாரம்.

ஈசனடங்கெழிலஃதென்று - ‘அஃதடங்க ஈசனெழிலென்று’ என அந்வயித்துக் கொள்ளவேணும். அஃதெல்லாம் நமது ஸ்வாமியானவனுடைய ஸம்பத்து என்று அனுஸந்தித்து என்றபடி.

உள்ளே அடங்குக=எம்பெருமானது விபூதியினுள்ளே தானு மொருவனாக அடங்கப் பார்க்கவேணும். அதற்கு வெளிப்பட்டால் விநாசமே பலிக்கும். அதனுட்பட்டு விட்டால் கூசவேண்டி அவசியமேயில்லை யென்க.

 

English Translation

Look at the Vast wealth of radiance all around. Know that all these are his, and merge into him.

uLLam urai seyal* uLLa immoonRaiyum*
uLLik keduththu* iRai yuLLilodunkE.        1.2.8

Mind, Speech and Action- Weigh and analyse all these three things and
remove any attachment of all these to "other worldly" things and get
cuddled into Emperumaan

உள்ள முரைசெயல் உள்ளவிம் மூன்றையும்

உள்ளிக் கெடுத்து இறை யுள்ளிலொ டுங்கே..

 

பதவுரை

உள்ளம்

-

நெஞ்சு என்றும்

உரை

-

வாக்கு என்றும்

செயல்

-

உடல் என்றம்

உள்ள

-

ஏற்கெனவே யுள்ள

இம்மூன்றையும்

-

இந்த மூன்று உறுப்புக்களையும்

உள்ளி

-

ஆராய்ந்துபார்த்து

கெடுத்து

-

அவற்றிற்குள்ள விஷயாந்தரப்பற்றைத் தவிர்த்து

இறை உள்ளில்

-

எம்பெருமான்பக்கலிலே

ஒடுங்கு

-

அந்வயிப்பது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என்ன உபகரணங்களைக்கொண்டு எம்பெருமானுக்கு அடிமை செய்வது? என்ன. புதிதாக ஸம்பாதிக்கவேண்டாமல் ஏற்கனவே அமைந்திருந்துள்ள மனமொழி மெய்கள் மூன்றையும் ‘இவை எம்பெருமானுக்கு அடிமைசெய்வதற்குறுப்பாகவே கண்டவை’ என்று அனுஸந்தித்து, புறம்பண்டான விஷயங்ளில் நின்றும் மீட்டு எம்பெருமான் பக்கலிலே ஊன்றவைப்பதென்கிறாரிப்பாட்டில்.

ஒடுங்கு என்பதை தன்வினையாகவும் பிறவினையில் வந்த தன்வினையாகவுங் கொள்வர். நீங்கள் ஒடுங்கவேணுமென்றும் உங்கள் உறுப்புக்களை ஒடுங்கச்செய்ய வேணுமென்றும் முறையே பொருள்காண்க. ஒடுங்குதல் அந்வயித்தல்.

 

English Translation

Go to the source of thought, word and deed. Direct them to him, and merge yourself too.

odunka avaNnkaN* odunkalum ellaam*
vidum; pinnum aakkai* vidumpozhuthu eNNE.        1.2.9

If you get yourself cuddled into the thinking of Emperumaan, then only,
attachement to "other" things will go away. (Once that is done), then,
anticipate (eagerly) for the day when you are going to get out of this body.

ஒடுங்க அவன்கண் ஒடுங்கலு மெல்லாம்

விடும்பின்னு மாக்கை விடும்பொழு தெண்ணே.

 

பதவுரை

அவன் கண்

-

அந்த எம்பெருமான் பக்கலிலே

ஒடுங்க

-

அந்வயிக்கவே

எல்லாம்  ஒடுங்கலும்

-

(ஆத்மாவை) ஒடுங்கப் பண்ணுவதான அவித்யை முதலானவை யெல்லாம்

விடும்

-

விட்டு நீங்கும்:

பின்னும்

-

அதற்குப்பிறகு

ஆக்கை விடும் பொழுது

-

சரீரம் தொலையும் நாளை

எண்

-

எதிர்பார்த்திருப்பது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானோடு நமக்குள்ள உறவின் உணர்ச்சி யுண்டாகவே கூசாமல் அணுகலாமென்றார் ஏழம்பாட்டில். அவன் தன்விஷயத்தில் உபயோகப் படுத்துவதற்காகவே தந்தருளின உறுப்புகளை அவன் விஷயத்திலேயே உபயோகப்படுத்து மத்தனையே வேண்டுவது என்றார் எட்டாம்பாட்டில்; இவற்றைக்கேட்ட உலகர்கள் ‘ஆழ்வீர்! நாங்கள் ஸ்வாதந்திரியம் பாராட்டி அதனால் பகவத் விஷயத்தில் ஊற்றமற்றிருக்கின்றோமல்லோம்; எம்பெருமானுடைய போக்யதையை அறியாமலிருக்களோமல்லோம்: அப்ராப்தங்களான விஷயாந்தரங்களை விட்டு ப்ராப்தனான அவனையே பஜிக்கவேணுமென்னும் விருப்பம் மிகவுடையோமாயினும் பஜிக்க வொட்டாத பிரோதிகள் கனக்க உண்டாயிரப்பதனாலன்றோ நாங்கள் பஜியாமலிருக்கிறோம்’ என்ன; நீங்கள் அவனைக் கிட்டவே அந்த விரோதிகளெல்லாம் உடனே விட்டு நீங்குமென்கிறாரிப்பாட்டில்.

 

English Translation

When thus directed, all obstacies will vanish, Then wall for the moment of shedding the body.

eNperukku anNnNalaththu* oNporuL eeRila*
vaNpugazh naaraNan* thiNkazhal sErE.            1.2.10

When you start thinking of His GuNAs , they keep on expanding and increasing.
He has all Great JeevAthmaas in Him; He has the endless, innumerable kalyANa
GuNAs; He is Sriman NARAYANAN. Hold Sriman Narayanan's Thiruvadi which never
desert His bhaktaaLs.

எண்பெருக் கந்நலத்து ஒண்பொரு ளீறில

வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே.

 

பதவுரை

எண் பெருக்கு

-

எண்ணிக்கை பெருகிக் கொண்டேயிருக்கும்படி அளவிறந்த

அ நலத்து

-

அப்படிப்பட்ட ஞானம் முதலிய குணங்களையுடைய

ஒண் பொருள்

-

சிறந்த பொருளாகிய ஜீவாத்மவர்க்கத்தையும்

ஈறு இல

-

முடிவில்லாத

வண் புகழ்

-

திருக்கல்யாண குணங்களையும் உடையனான

நாரணன்

-

நாராயணனுடைய

திண் கழல்

-

(அடியாரை ஒருநாளும்) கைவிடகில்லாத திருவடிகளை

சேர்

-

ஆச்ரயிப்பது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழே ஆழ்வார் உபதேசித்தபடியே யெல்லாங்கேட்ட  ஸம்ஸாரிகள் “ஆழ்வீர் அப்படியே செய்வோம்; எம்பெருமானைப் பஜிப்போம்; பஜநத்திற்கு ஆலம்பனமாக ஒரு மந்த்ரம் வேணுமே அது என்ன மந்த்ரம்?’ என்ன, அந்த மந்த்ரம் இன்னதென்று தெரிவித்தருளுகிறாரிப்பாட்டில் நாராயணத் திருநாமத்தின் பொருளை அனுஸந்தானஞ் செய்து கொண்டே அத்திருநாமத்தை வெளியிட்டருளுகின்றார் காண்மின்.

இப்பாசுரம் திருமந்த்ரார்த்தம் என்னமிடம் ஆழ்வானுடைய இதிஹாஸத்தினால் நன்கு விளங்கும்; அது வருமாறு:- அழகியமணவாளனுடைய அநுகிரஹத்தினால் ஆழ்வானுக்கு இரண்டு திருக்குமாரர்கள் திருவவதரிக்க, ஆழ்வான் அக்குமாரர்கட்கு நாமகரணம் முதலியன செய்வித்தற்கு உடையவர் கடவரென்று எண்ணித் தாம் ஒன்றுஞ் செய்யாதிருக்க, நம்பெருமாள் திருவருளால் ஆழ்வானுக்கு உபய குமாரர்கள் அதித்ததாகப் பெருமகிழ்ச்சி கொண்டிருந்த ஸ்ரீபாஷ்யகாரர் அக்குழந்தைகள் பிறந்த பதினோரா நாளிலே சிஷய வர்க்கத்ததுடன் ஆழ்வான் திருமாளிகைக் கெழுந்தருளித் தமது பிரதான சிஷ்யர்களில் ஒருவரான எம்பாரை நோக்கிக் ‘குழந்தைகளை எடுத்துக்கொண்டு வாரும்’ என்ன, அவர் அங்ஙனமே பிரபன்ன குலக்கொழுந்தான அக்குழந்தைகளை எடுத்துவரும்போது த்ருஷ்டி தோஷாதிகள் தாங்காதபடி ரக்ஷையாக த்வயமென்னும் மந்த்ரரத்னத்தை அநுஸந்தித்து வாழ்த்திக் கொண்டே வந்து குழந்தைகளை எம்பெருமானாருக்குக் காட்டினார். அவர் மிக்க களிப்புடனே ஆனந்தக் கண்ணீர் துளிக்கத்  தம் திருக்கண்களால் குளிரக் கடாக்ஷிக்கும்போது அத்தெய்விக சிசுக்களின் தேஜோ விசேஷத்தைக்கண்டு வியப்புக்கொண்டு ‘எம்பாரே! இக்குழந்தைகளிடம் த்வயம் பரிமளிக்கின்றேதே, அங்ஙனம் ஆகுமாறு என்செய்தீர்?’ என்று வினவ; எம்பார் ‘குழந்தைகட்கு காப்பாக த்வாயாநுஸந்தானஞ் செய்துகொண்டு வந்தேன்’ என்று சொல்ல, உடையவர் அப்படி எம்பார் காப்பிட்டதற்கு உகந்து அவரைப்பார்த்து ‘நீர் இக்குழந்தைகள் உய்யும்வகையை நாடிச் செய்தற்கு முற்பட்டீராதலால் இவர்கட்கு நீரே ஆசார்யாகக் கடவீர்’ என்ற நியமித்துவிட்டார். இக்குமாரரிருவர்க்கும் ஒருகால் கூரத்தாழ்வான் திருவாய்மொழிப்பொருள் சொல்லிவரும் போது,  எண்பெருக்கந்நலத்து இத்தயாதியான இந்தப்பாசுரம் வந்தவளவிலே இது திருமந்திரார்த்தத்தை விவரிக்கிறதாதலாலும் மந்த்ரார்த்தம் ஆசார்யரிடத்திலேயே கேட்டறியவேண்டியதாதலாலும் அதனை அவர்கட்குச் சொல்லாது நிறுத்தி ‘இதனை உங்கள் ஆசார்யர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கள்’ என்று சொல்ல, அதனை விரைவில் அறிந்துகொள்ளவேணு மென்னும் அவாவினால் உடனே அவர்கள் எழுந்து தங்கள் ஆசார்யரான எம்பார் எழுந்தருயியிருக்குமிடத்தைக் குறித்துப் போகவுக்கவளவில், ஆழ்வான் யாக்கை நிலையாமயைத் திருவுற்றத்திற் கொண்டு அவர்களை யழைத்து, ‘இன்னபோது இன்னாரிப்பர் இன்னார் போவாரென்று தெரியாது, ஆதலால் இருந்துகேளுங்கள்’ என்று திருமந்திரத்தைச் சொல்லி இப்பாட்டின் பொருளையும் விவரித்து, இப் பாசுரத்தைத் திருமந்திரத்தின் அர்த்தமாக நினைத்திருங்கள்’ என்று பணித்தருளினார் - என்பதாம்.

ஈறிலான ஆத்மாக்களையும் ஈறிலவான கல்யாணகுணங்களை யுமுடையனாகையாயிற்று நாராயணனாகையாவது. அப்படிப்பட்ட நாராயணனுடைய திண்கழர்சேர் = அடியவர்களை ஒரு நாறுங் கைவிட மாட்டாத திருவடிகளைச் சேருங்கள் என்றவாறு. இப்பாட்டில் விளி வருவித்துக்கொள்வது.

 

English Translation

Unite with the feet of the glorious Narayana, Lord of countless virtues.  Lord of incomparable good.

sErththadath* theNnkuru koorch chadagOpan sol*
seerththodai aayiraththu* Orththa_ippaththE. (2)        1.2.11

Thse ten pAsurams out of 1000 Pasurams have got all that is Great and have been
sung ("aruLiya") by NammAzhwAr, who is born in Thirukkurugoor where beautiful
ponds exist

சேர்த்தடத் தென்குரு கூர்ச்ட கோபன்சொல்

சீர்த்தொடை யாயிரத்து ஓர்த்தவிப் பத்தே.

 

பதவுரை

சேர் தடம்

-

செறிந்த தடாகங்களையுடைய

தென் சுருகூர் சடகோபன் சொல்

-

திருநகரியில் அவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த

சீர் தொடை

-

கவியுறுப்புக்களெல்லாம் நன்கு அமையப்பெற்ற

ஆயிரத்து

-

ஆயிரத்தினுள்ளே

இ பத்து

-

இப்பத்துப் பாசுரமும்

ஓர்த்த

-

ஆராய்ந்து சொல்லப்பட்டது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருவாய்மொழி வாய்வந்தபடி சொல்லிற்றன்று, சேதநருடை ஹிதத்துக்கீடாக ஆராய்நது சொல்லபட்டதென்று நிகமனஞ் செய்கிற பாசுரம் இது.

சேர்த்தடத் தென் குருகூர்சடகோபன்சொல் = இங்கு ஈடு முப்பத்தாறாயிரப்படியில் “சேர்த்தடம் என்கிற வித்தைச் சேர்தடமாக்கி” என்றருளிச் செய்யப்பட்டுள்ளது. இலக்கணப்படிக்குச் சேர்தடமென்று இயல்பாகவே யிருக்கவேண்டுமல்லது சேர்த்தடமென்ற தகரவொற்று மிகவேண்டிய அவசியமில்லை; ஆனாலும் மற்ற மூன்றடிகளிலும் இதே ஸ்தானத்தில் வல்லொற்றுமிக்கிருப்பதனால் அதற்கிணங்க முதலடியிலும் மிக்கது; சொற்செறிவு அங்ஙனமிருந்தாலும் பொருட் சேர்த்திக்கு ஏற்பத் தகர வொற்று இன்றியே கொள்க என்கிறார் நம்பிள்ளை.

பாட்டின் முதலிலுள்ள சேர் என்பதை வினைமுற்றாகவுங் கொள்ளலாம். இப்பத்தே சேர் - இப்பத்துப்பாட்டையும் சேருங்கள், (அதாவது) அனுஸந்தானஞ் செய்யுங்கள் என்றபடி, முதற்பாட்டில் வீடுமின் என்ற பன்மைக்குச்சேர இங்கும் பன்மையாகவே பொருள்கொள்ள வுரியது.

 

English Translation

This decad of the thousand are the considered words bySatakapan Kurugur, surrounded by watere fields.

paththudai adiyavarkku eLiyavan;* piRargaLukku ariya
viththakan* malarmagaLvirumpum* nNam arumpeRal adigaL*
maththuRu kadaiveNNey* kaLavinil uravidaiyaap pundu*
eththiRam, uralinOdu* iNaindhirunthu Enkiya eLivE! (2)        1.3.1

Emperumaan is sowlabhyan (simple) for His bhakthAs; For others He is a real rarity
and is capable of achieving both such contradicting natures at the same time; The
emperumaan a rarity- the one who is the beloved of Sri Mahalakshmi sitting on
the Lotus- is so SIMPLE  and SOWLABHYAN to get tied down to "ural" close to his
chest innocently for His stealing butter(veNNai) which YasOdhA (His mother) had
churned; What a GREAT SOWLABHYAN He is and How simple He is!
(I am not saying; AzhwAr says!)

பத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரிய

வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு

எத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே.

 

பதவுரை

பத்து உடை

-

பக்தியையுடைய

அடியவர்க்கு

-

அடியார்களுக்கு

எளியவன்

-

ஸுலபனாயும்

பிறர்களுக்கு

-

மற்றையோர்களுக்கு

அரிய

-

துர்லபனாயுமிருக்கிற

வித்தகன்

-

ஆச்சரியபூதனும்,

மலர் மகள் விரும்பும்

-

பெரியபிராட்டியார் விரும்புதற் கீடானவனும்

பெறல் அரு

-

பெறுதற்கு அரியனுமான

நம் அடிகள்

-

நமது ஸ்வாமி

மத்து உறு கடை வெண்ணெய் களவினில்

-

(யசோதைப்பிராட்டி) மத்தையுறுத்திக் கடைகின்ற வெண்ணெயினுடைய களவில்

உரம் இடை

-

மார்வினிடையிலே

ஆப்புண்டு

-

கட்டுண்டி

உரலினோடு  இணைந்திருந்து

-

உரலோடு பொருந்தி இருந்து

ஏங்கிய

-

ஏங்கியிருந்த

எளிவு

-

எளிமைக்குணம்

எத்திறம்

-

எப்படிப்பட்டது!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய ஸௌலப்யம் நன்கு விளங்கினது அவதாரங்களிலாதலால் அப்படிப்பட்ட அவதாரங்களுள்ளும் நீர்மைக்கு எல்லையான க்ருஷ்ணாவதாரத்திலே யிழிந்து, அதிலேயும் பரத்வத்தோடு ஸமமாகச் சொல்லக் வடிய நிலைகளிற் செல்லாதே, வெண்ணெய் களவுகண்டு கட்டுண்டு வருந்தியேங்கி நின்ற நிலையிலே யகப்பட்டு இப்படியும் ஒரு எளிமைக்குணமுண்டோவென்று ஈடுபடுகிறார்.

பத்துடையடியவர்க்கு எளியவன்- “முற்ற முதிர்ந்த பக்தியையுடையார்க்கு எளியன்” என்றுரைப்பது ஆழ்வார்க்கு விவக்ஷிதமாயிராது· தன் பக்கலில் சிறிது ஆசை வைத்தவர்களையும் தான் விடமாட்டாமலிருக்கிறான்’ என்று சொல்லுவதே ஏற்றதாகும். ஆகவே, அத்வேமாத்திரமே இங்குப் பத்து என்னுஞ்சொல்லுக்குப் பொருளாகவுரியதாம்.

எளியவனாயிருக்குந்தன்மை எல்லாரிடத்துங் காட்டப்பட்டால் அனர்த்தமாகுமே! உகந்தவர்கட்கு மாத்திரம் எளியனாய், உகவாதார்க்கு அருமைப்பட்டவனநாயிருந்தால்தானே அன்பர் தேறியிருக்க முடியும்; அதற்காக அருளிச் செய்கிறார் பிறர்களுக்கு அரிய வித்தகன் என்று. எம்பெருமானையே உபாயகமாகக் கொள்ளாமல் பிறிதொன்றை உபாயமாகக் கொள்ளுமவர்கள் இங்குப் பிறர்களாவார்; அன்வர்கட்கு அருமைப்பட்டிருத்தலாகிற ஆச்சரியத்திற்கு ஆஸ்பதன் எம்பெருமான் என்கை. என்ன ஆச்சரியமென்னில்; யசோதைப்பிராட்டி முதலானார்க்கு விதேயனாயிருந்த நிலைதன்னிலேயே பூதனை, சகடம், மருதம் முதலியவற்றிற்கு அணுகவுமொண்ணாதிருந்தமை காண்க.

மலர்மகள் விரும்பும் அரும்பெறல் நம் அடிகள் = தாமரை மலரிலே பிறந்து அதனையே இருப்பிடாக வுடையவளாயிருந்த பிராட்டி அங்கே அடிக்கொதித்து அதனைவிட்டு ‘அகலகில்லேனிறையுமென்று அவர்மேன்மங்கை யுறைமார்பா” என்கிறபடியே திருமார்பை விரும்பி விடாதேயிருக்கப் பெற்ற பெருமான்.

முதல் திருவாய்மொழியில் “உளன் சுடர்மிகு சுருதியுள்” என்று ஆழ்வார் ஏகாந்தமாகக் காட்டின லக்ஷ்மீஸம்பந்தம் இப்பாட்டில் நன்கு வெளியிடப்பட்டதாயிற்று.

முதலடியில் “பத்துடை யடியவர்க்கெளியவன்” என்று சொன்ன பக்த புராதீனத்வமானது பின்னடிகளில் உபபாதிக்கப்படுகிறது. மத்துறு கடை வெண்ணெய் என்று தொடங்கி.

யசோதைப்பிராட்டி மத்தையுறுத்தித் தயிர் கடையும்போது அவளது நிழலிலேயொதுங்கியிருந்து களவு வழியிலே வெண்ணெயை அள்ளி அமுது செய்ய, கையோடே பிடியுண்டு உரலோடே மார்வை நெருக்கிக் கட்டியிட்டு வைக்கப் பெற்று அழுது ஏங்கிநின்ற நிலைமை என்னே! என்று கரைக்கின்றாராழ்வார்.

‘உரலினோடிணைந்திருந்தேங்கிய வெளிவு எத்திறம்?’ என்று சொல்லிக் கொண்டே ஆழ்வார் மோஹித்துவிட்டாரென்பது “த்வாமந்யகோபக்ருஹகவ்யமுஷம் யசோதா குர்வி த்வதீயமவமாநமம்ருஷ்யமாணா, ப்ரேம்ணாத தாமபரிணாமஜுஷா பபந்த தாத்ருக் ந தே சரிதமார்யஜனா ஸஹந்தே” என்ற அதிமானுஷ்ஸ்தவ ஸ்ரீஸூக்தியில் ஈற்றடியால் வெளியிடப்பட்டது. கூரத்தாழ்வானால்,  ஆசார்யஹ்ருதயத்திலும் “மூவாறுமாஸம் மோஹித்து” என்றருளிச் செய்யப்பட்டது.

 

English Translation

The Lord is easy to reach by devote through love.  His feet are hard to get for others, even Lotus-dame Lakshmi Oh, how easily he was caught and bound to the mortar, pleading, for stealing butter from the milkmaid's churning pail.

eLivarum iyalvinan* nilaivaram pilapala piRappaay*
oLivaru muzhunNalam* muthalila kEdila veedaam*
theLitharum nilaimaiyathu ozhivilan* muzhuvathum; iRaiyOn*
aLivarum aruLinOdu* akaththanan puRaththanaNn amainthE.        1.3.2

Emperumaan has got such sowlabhya GuNA as His nature; He has taken "avataarams"
which can not be categorized as one type or one trend/nature; He is enriched with
bright nature and has ALL kalyANa gunas which have no beginning and no end; He is
equipped with the capacity of granting mOksha Gnanam at all times;- Such a GREAT
merciful Lord, stays at the BhagavatOttamALs' Hearts willingly at all times and is
NOT AT ALL APPROACHABLE for those who do not have bhakti for Him."

எளிவரு மியல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய்,

ஒளிவரு முழு நலம் முதலில கேடில வீடாம்,

தெளிதரும் நிலைமைய தொழிவிலன் முழுவதும், மிறையோன்,

அளிவரு மருளினோ டகத்தனன், புறத்தன னமைந்தே..

 

பதவுரை

நிலை வரம்பு இல பல  பிறப்பு ஆய்

-

ஒரு நிலையும் ஒரு நியதியும் இல்லாத பலவகைப் பிறப்பையுடையனாய்

முதல் இல கேடு இல முழு நலம்

-

முதலுமில்லாமல் முடிவுமில்லாமலிருக்கின்ற கல்யாண குணங்களெல்லாம்

ஒளி வரும்

-

ஒளிமல்கும்படியான

எளி வரும் இயல்பினன்

-

ஸௌலப்யத்தையே இயல்வாக வுடையனாய்

வீடு ஆம் தெளி தரு நிலைமை அது முழுவதும்

-

மோக்ஷமாகிற தெளிவைத் தருதலாகிற அந்த நிலைமையை முழுவதும்

ஒழிவு இலன்

-

எப்போதும் உடையவனான

இறையோன்

-

ஸ்வாமியானவன்

அளிவரும் அருளினோடு அமைந்து

-

அளித்த கிருபையோடே கூடி

அகத்தனன்

-

(அடியவர்க்கு) அந்தரங்கனாய்

புறந்தனன்

-

(மற்றையோர்க்கு) அணுகத்தகாதவனாயிருப்பன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீமதுரகவிகள் முதலான ஸத்துக்களடங்கலும் மோஹிதரான ஆழ்வாரைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். திருவாய்மொழியை அநுபவிக்கப் பிறந்த மஹான்களின் பாக்கியத்தினால் மோஹங் கழிந்து தெளிவுபெற்ற ஆழ்வார் ப்ரஸ்துதமான ஸௌலப்ய குணத்தை விசேஷித்து அருளிச் செய்யத் தொடங்குகிறாரிதில்.

எளிவருமியல்லினன் = கீழ்ப்பாட்டில் “பத்துடை யடியவர்க்கும் எளியவன்” என்று ஸ்நேஹிகளுக்கு ஸுலபனாயிருப்பன் என்று சொன்னது தகுதியன்றென்று திருவுள்ளம் பற்றி எளிமைதானே ஸ்வரூபமாயிருக்குமென்கிறது.

நிலைவரம்பில பலபிறப்பாய் = நிலையில்லாதனவும் வரம்பில்லாதனவுமான பலவகைப்பட்ட அவதாரங்களைச் செய்யபவனென்றபடி, இன்ன யோநியில் தான் பிறப்பதென்று ஒரு ஸ்யவஸ்தை கொள்ளாமலே ‘நிலையில’ என்றது; இன்ன சேஷ்டி தந்தான் செய்வது என்று ஒரு வ்யவஸ்தை கொள்ளாமையாலே ‘வரம்பில’ என்றது - என்று பூர்வாசார்யர்கள் நிர்வஹித்தார்களாம். பட்டர் ‘நிலையில’ என்பதற்கே அவ்விரண்டு பொருளையுங்கொண்டு, இனி ‘வரம்பில’ என்பதற்கு- வரம்பில்லாமையாவது. “அவதரித்து எளியனாய் நின்ற நிலைதன்னிலே பரத்வந்தோற்ற நின்றாலும் நிற்கையாம்” என்று அருளிச் செய்வராம். எங்ஙனே யென்னில், அர்ஜுனனுக்குச் சாரதியாய் நின்று தாழ நிற்கச் செய்தேயும் விச்வரூபத்தக் காட்டினபடியும். சிவபிரான் பக்கல் புத்தீரவரம் வேண்டிப்போகா நிற்கச் செய்தே கண்டாகர்ணனுக்கு முக்தியளித்தபடியும் ஏழுபிராயத்திலே கோவர்த்தனமலையைக் குடையாகவெடுத்தபடியும் முதலானவை நோக்கப்படின், ஒன்றிலும் ஒரு நியதியில்லை, லக்ஷிப்பதற்கு உறுப்பாகுமத்தனையே வேண்டுவது என்ற திருவுள்ளம் விளங்கும்.

பலபிறப்பாயொளிவரு முழுநலம் = பிறக்கப் பிறக்க நாம் புகரழிந்து வாரா நின்றோம்; அங்னல்லாமல் எம்பெருமான் பிறக்கப் பிறக்கக் கல்யாணகுணங்கள் மிகவும் புகர்பெற்ற விளங்குமாயிற்று. *ஸ உச்ரேயாத் பவதி ஜாயமாந:* என்று வேதமும் ஓதிற்று; ஸா (பகவாத்) ஜாயமாநஸ்ஸத் ச்ரேயாதேவ பவதி) என்றபடி. கருமமடியாகப் பிறந்தாலன்றோ பிறக்கப் பிறக்கப் புகார் அழிவது: அநுக்ரஹமடியாக வருகிற அவதாரமாதலால் ஔஜ்ஜவல்யம் மிக்கிருக்குமென்க.

முதலில் கேடில = ஒரு நாளில் தோன்றி ஒருநாள்வரையிலே முடியுமவையல்லாமல் நித்ய ஸித்த குணங்கள் என்றவாறு.

வீடு ஆம் தெளி தருநிலைமையது முழுவதும் ஒழிவிலன் = வீடு - மோக்ஷம்; அதுவாகிற தெளிவைத் தந்தருளுமியல்வு என்றைக்கு மொருபடிப்பட்டிருக்கப் பெற்றவன் என்கை. இதனால் மோக்ஷப்ரதத்வ  மென்கிற குணம் சொல்லப்பட்டதாயிற்று. இக்குணம் கீழே முழுநலம் என்றதிலேயே அடங்கக்கூடுமாயினும்  , இது சிறந்த குணமாதலால் தனிப்படச் சொல்லலாயிற்று.

தெளிவு என்னுஞ்சொல் தெளி என்று குறைந்து கிடக்கின்றது. பரமபதத்தைத் ‘தெளிவிசும்பு’ என்றே வழங்குவர். தெளிவே வடிவெடுத்திருக்குமிடமாதல் அறிக. இந்த லீலாவிபூதி கலக்கத்திற்கே ஏற்பட்டதுபோல அந்த நித்யவிபூதி தெளிவுக்கே ஏற்பட்ட தென்றவாறு.

அருளுக்கு அளிவருதலாவது நிர்ஹேதுகத்வமாம். பாண்டவர் போல்வார்க்குக் கையாளாயிருக்கையும் துரியோதனாதியர்க்கு ஆளிட்டுவிடுகையும் ஈற்றடிக்கு விஷயம்.

 

English Translation

Heedless of places and context, he appears in countless forms.  His radiant fullness is beginning less and endless. Forever providing the ambrosial experience of liberation, he exists with cool grace within and without.

amaivudai aRanNeRi* muzhuvathum uyarvaRa uyarnthu*
amaivudai muthalkedal* odividaiyaRa nNilamathuvaam*
amaivudai amararum* yaavaiyum yaavarum thaanaam*
amaivudai naaraNan* maayaiyai aRipavar yaarE?        1.3.3

Equipped with such Great dharma (virtues) which are not inferior to any other dharma-
such all time Greats who possess the duty to create, destroy etc., like brahma, sivan,
and all other dEvAs, all chEtanAs (sentinents) and achEtanAs (non-sentinents); The One
who has become one and all and becomes all by Himself; Who knows the "avataara rahasyam"
(secret and concept of His avataars)?- Absolutely NO ONE KNOWS.

அமைவுடை யறநெறி முழுவது முயர்வற வுயர்ந்த,

அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்,

அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம,

அமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே?

 

பதவுரை

அமைவு உடை

-

நல்ல பலபரிபாகத்தையுடைத்தான

அறம் நெறி முழுவதும்

-

தருமமார்க்கம் எல்லாவற்றாலும்

உயர்வு அற உயர்ந்து

-

இதற்கு மேல் உயர்த்தியில்லை என்னும்படியாக மிகவுமுயர்ந்தவர்களாகி

அற

-

மிகவும்

நிலம் அது ஆம்

-

கைவந்திருக்கப் பெறுவதாகிற

அமைவு உடை

-

சதிரையுடையரான

அமரரும்

-

பிரமன் முதலிய தேவர்களும்

யாவையும்

-

எல்லா அசேதனங்களும்

அமைவு உடை

-

(ஆச்சரியப்படத்தகுந்த அமைதியையுடைய

முதல் ஸ்ருஷ்டியென்ன

கெடல்

-

ஸம்ஹாரமென்ன

யாவரும்

-

எல்லாச் சேதனர்களும்

தான் ஆம்

-

தானேயாம்படியான

அமைவு உடை

-

பொருத்தம் பொருந்திய

நாரணன்

-

நாராயணனுடைய

மாயையை

-

அவதார ரஹஸ்யத்தை

யாரே அறிபவர்

-

ஆர் தாம் அறியவல்லார்? (ஆருமில்லை)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய அவதாரஹஸ்யம் ஒருவர்க்கும் அறியவொண்ணாததென்கிறது இப்பாட்டில். முதலடியில் அமைவுடை யென்று தொடங்கி, மூன்றாமடியில் அமைவுடை என்னுமளவும் அமரர்க்கு (விசேக்ஷகுணம்) அடைமொழி.

அமைவுடையறநெறி முழுவது முயர்வறவுயர்ந்து = ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களுக்குக் கடவரான பிரமன் முதலிய அமரர்கள் என்றும் இடையூறென்றுமிக்கி ஸபலங்களாக தருமங்கள் எல்லாவற்றாலும் மேற்பட்டவர்களாம்.

அவர்கள் இன்னமும் எப்படிப்பட்டவர்களென்னில்; அமைவுடை முதல் கெடல் ஓடி விடையறநிலம துவாரமமைவுடையர் = முதல் என்று ஸ்ருஷ்டியைச் சொல்லுகிறது; கெடல் என்று ஸம்ஹாரத்தைச் சொல்லுகிறது. ஓடிவிடை என்பது ‘இடையொடிவு’ என்றாகி அவாந்தரஸம்ஹாரத்தைச் சொல்லுகிறது. ஆகிய இக்காரியங்கள், அற - மிகவும், நிலமதுவாம் அமைவுடை = கைவந்திருக்கும் பூர்த்தியை யுடையார் என்றபடி.

அமரரும் யாவையும் தானாமவையுடை நாரணன் = கீழ்ச்சொன்ன கடவுளர்களென்ன, ஸகல அசேதநப் பொருள்களென்ன, மற்றுமுள்ள ஸகல சேதனப்பொருள்களென்ன, ஆகிய எல்லாம் தான் என்கிற சொல்லுக்குள்ளே அடங்கும்படியான அமைதியையுடையனாய், இதுபற்றியே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவனான எம்பெருமானுடைய என்றபடி.

மாயையையறிபவர்யாரே? =  இப்படிப்பட்ட எம்பெருமானுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் அறியப்போகாதென்றவாறு. மாயையென்று ஆச்சரியமாய், தனக்குப் புத்திர ப்ராயர்களான தசரத வஸுதேவாதிகளைத் தனக்குத் தந்தையராகக் கொண்டு, அவர்கள் என்மகனென்று அபிமானிக்கும்படி வந்து பிறந்த ஆச்சரியத்தை ஆரும் அறியகில்லார் என்று முறைப்ப.

யாரே அறிபவர்? = நித்யஸூரிகள் பரத்வாநுபவத்திலே போதுபோக்கு கையாலே இதனை அறியார்கள்; ஸம்ஸாரிகள் உண்டியே உடையே உகந்தோடு மலர்களாகையாலே அறியார்கள்; ஸம்ஸாரிகள் உண்டியே உடையே உகந்தோடு மலர்களாகையாலே அறியார்கள்; மயர்வற மதிநலமருளப் பெற்ற ஆழ்வார்களோ மோஹித்துக் கிடப்பர்கள்; ஆகையாலே ஒருவருமறியார்கள்.

 

English Translation

Who can comprehend the wonders of Narayana? He bears the highest good of Vedic sacrifice. Forever the creates, destroys, and plays between the two. He contains the gods, and the livin and the lifeless.

yaarum Or nilaimaiyanena* aRivariya emperumaan*
yaarum Or nilaimaiyanena* aRiveLiya emperumaan*
pErum Oraayiram* piRapala udaiya emperumaan*
pErum Or uruvamum* uLathillai ilathillai piNakkE.        1.3.4

My Emperumaan- Even a Great Gnani can not say firmly that He has one nature; At the
same time Even a fool (like me!) can easily say He is of this form and nature;
such a simple Lord; The names the forms are so many thousands for Him; "He does
not have one name and one form". claims many who do not love Him most; "Not that;
He is of this name and form only"- claims those who are His bhakthAs- and their
arguments will continue for ever and ever"

யாருமோர் நிலைமைய னெனவறி வரிய வெம்பெருமான்,

யாருமோர் நிலைமைய னெனவறி வெளியவெம் பெருமான்,

பேருமோ ராயிரம் பிறபல வுடையவெம் பெருமான்,

பேருமோ ருருவமு முளதில்லை யிலதில்லை பிணக்கே.

 

பதவுரை

பேரும்

-

(விக்ரஹத்தைப் பற்றின) திருநாமங்களும்

பிற

-

(அந்தத் திருநாமங்களுக்கேற்ற) விக்ரஹங்களும்

பல ஆயிரம் உடைய

-

அனேகமாயிரம் உடையனாய்க் கொண்டு தொற்றி

எம்பெருமான்

-

எமக்கு நாதனானவனாய்,

யாரும்

-

எப்படிப்பட்ட ஞானிகளுக்கும்

ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான்

-

ஒரு படியையுடையவன் என்று அறுதியிட வொண்ணாத பெருமானாய்.

யாரும்

-

(அன்பர்களாகில்) அறிவில்லாதவர்களானார்க்கும்.

ஓர் நிலைமையன் என் அறிவு எளிய எம்பெருமான்

-

ஒரு படிப்பட்டவனென்று அறியக்கூடிய பெருமானான பகவானுக்கு

ஓர் பேரும்

-

ஒரு பேரும்

ஓர் உருவமும்

-

ஒரு ரூபமும்

உளது இல்லை

-

உண்டாயிருப்பதில்லையென்று (பிரதிகூர்க்கும்)

இலது இல்லை

-

இல்லையாய் இருப்பதில்லையென்று (அநுகூலர்க்கும்)

பிணக்கே

-

நித்ய விவாதமாயேயிருக்கும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய திவ்யாவதாரங்கள் ஒருவர்க்கும் அறியப் போகாதோவென்ன, அடியவர்க்கு எளிதில் அறியக் கூடியவையாய் மற்றையோர்க்குச் சிறிதும் அறியப்போகாதவனாயிருக்குமென்கிறாரிதில்.

யாரும் ஓர் நிலைமையனென அறிவு அரிய எம்பெருமான் = எவ்வளவேனும் அதிசயித்த ஞானத்தையுடையரேலும் அப்படிப்பட்டவர்களும் தமது முயற்சியாலே காண விரும்பினால் இன்னபடிப்பட்டிருப்பதொரு ஸ்வபாவத்தையுடையவனென்று அறியவொண்ணாத எம்பெருமான்- எம்பெருமானுடைய நிர்ஹேதுகவிஷயீகாரத்திற்கு இலக்காகப் பெறாதவர்கள் எவ்வளவு சீரியராயினும் எம்பெருமானது நிலைமையை ஒரு ஸ்தூலாகாரமாகவும் அறியகில்லாராய்க்கிடப்பரென்றபடி.

யாருமோர் நிலைமையனென அறிவு எளிய எம்பெருமான் = பிறப்பாலும் செய்கையாலும் ஞானத்தாலும் எத்தனை தாழ்ந்தவர்களாகிலும் தன்னுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு இலக்காகப் பெற்றவர்களாகில் அன்னவர்களாலே எளிதிலறியக்கூடிய படிகளையுடையனாயிருப்பன்.

பேருமோராயிரம் = அநபவிக்குமடியர்க்கு இழிந்துவிடமெல்லாம் துறையாம்படி பல்லாயிரந் திருநாமங்களையுடையனாயிருப்பன். ஆயிரமென்றது அநேக பர்யாயம். பிறபலவுடைய எம்பெருமான் = இங்குப் ‘பிற’ என்பது திய்வமங்கள விக்ரஹத்தை நோக்கியது. நாமத்திற்கும் ரூபத்திற்கும் எங்கும் ஒரு சேத்தியுண்டாகையாலே இங்ஙனே பொருள் கொள்ளுதல் பொருந்தும். “பேருமோருருவமும்” என்ற ஈற்றடியுங் காண்க. திருநாமவாச்யங்களாலும் தன் இச்சையாலே பரிக்ரஹிக்கப்படுமவைகளாயுமுள்ள பலபல திருவுருவங்களையுடையானென்றவாறு.

பேரும் ஓருருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே= இதற்குப் பலபடியாகப் பொருள் கொள்ளலாம். ‘பேதம் ஓருருவமும் உளது. இலதில்லை. பிணக்கு இல்லை’ என்று மூன்று வாக்கியமாகக் கொண்டு- அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு விலக்ஷணமான நாமங்களும் ரூபங்களும் உண்டு; இல்லையென்பது கிடையாது; ஆகையால் சாஸ்திர விச்வாஸசாலிகளுக்கு விவாதமில்லை- என்பதாக ஒரு யோஜநை. அன்றியே, பேரும் ஓர் உருவமும் உளதில்லை = (எம்பெருமான் பக்கலில் அன்பு இல்லாதார்க்கு) ஒரு திருநாமமும் ஒரு விக்ரஹமும் உண்டாயிருப்பதில்லை (என்று தோற்றியிருக்கும்); இலதில்லை - (எம்பெருமான் பக்கலில் அன்புடையார்க்கு) அந்த நாம ரூபங்கள் உண்டாகியே தோற்றம், பிணக்கே- அன்புடையார்க்கு அன்பிலாதார்க்கும் இப்படி விவாதமாகியே யிருக்கும் என்றுமாம். மற்றும் பலவகைகளும் காண்க.

 

English Translation

My Lord is hard to see as the changeless one.  My Lord is easy to see as the changeless one.  My Lord bears a thousand names and forms.  My Lord is opposed to name and form, being and non-being.

piNakkaRa aRuvakaich chamayamum* neRiyuLLi uraiththa*
kaNakkaRu nalaththanan* anthamil aadhiyam bagavan*
vaNakkudaith thavanNeRi* vazhinNinRu puRanNeRi kaLaikattu*
uNakkumin, pasaiyaRa!* avanudai uNarvu koNduNarndhE.        1.3.5

Emperumaan gave us the vEdhas and their ways; He is full of kalyANa guNAs; He is the
primordial Lord who has no end; He is equipped with beautiful Great GnAnam; - Follow
the respected Bhakti way for Him and leave all "other" ways; Realise the Gnanam which
He has granted us; and get rid of the poorva vaasanAs (praaraptha karmaas).

பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த,

கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்,

வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு,

உணக்குமின் பசையற அவனுடை, யுணர்வுகொண் டுணர்ந்தே.

 

பதவுரை

அறு வகை சமயமும் பிணக்கு அற

-

ஆறுவகைப்பட்ட மதங்களும் (வைதிகமார்க்கத்தோடு) பிணக்கம் ஒழியும்படி.

நெறி

-

வேதமார்க்கத்தை

உள்ளி

-

ஆராய்ந்து

உரைத்த

-

அருளிச் செய்த

கணக்கு அறு நலத்தனன்

-

எண்ணிறந்த கல்யாண குணங்களையுடையவனும்

அந்தமில் ஆகி

-

முடிவில்லாத முதல்வனும்

அம் பகவன்

-

அழகன குணங்களை யுடையவனுமான எம்பெருமானது

வணக்கு உடை

-

வணக்கத்தையுடைய

தவம் நெறி

-

பக்தி (அல்லது) ப்ரபத்தி ஆகிற

வழிநின்று

-

மார்க்கத்தில் நின்று

புறம்நெறிகளை

-

வேறு மார்க்கங்களாகிற களையை

கட்டு

-

பறித்து

அவனுடைய உணர்வு கொண்டு

-

அவனளித்த கீதையைக்கொண்டு

உணர்ந்து

-

உணர்ச்சி பெற்று

பசையற

-

வாஸநாரூபமான பற்றும் அறும்படி

உணக்குமின்

-

உலர்த்திவிடுங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘ஆச்ரயிக்கத் தக்கவனான எம்பெருமான் எளியனென்பது அறிந்தோம்; அன்னவனை ஆச்ரயிக்கும் வழி என்ன?’ என்று ஸம்ஸாரிகள் கேட்பதாகக் கொண்டு, அவன் கீதையிலே அருளிச் செய்துவைத்த பக்திமார்க்கத்தாலே அவனை ஆச்ரயியுங்கோள் என்கிறார்.

அறுவகைச் சமயமும் பிணக்கு அற நெயி உள்ளிரைத்த = ஸாங்கியம், யோகம் காணாதம். பௌத்தம், ஜைனம், பாசுபதம் என்ற ஆறுவகைப்பட்ட சமயங்களும் வைதிக சமயத்தோடு பிணக்கங்கொண்டிருக்கும்; அந்தப் பிணக்கம் தீருமாறு வேத மார்க்கத்தை ஆராய்ந்து அருளிச் செய்தவனும் எண்ணிறந்த திருக்கல்யாணகுணங்களையுடையவனும் ஒருநாளும் முடிவில்லாத ஜகத்காரணபூதனும் ‘பகவாத்’ என்று அஸாதாரணமான திருநாமத்தையுடையவனுமான எம்பெருமான் திறமான பக்தியோகத்திலே நின்று பிராகிருதவிஷயங்களாகிய களையைக்கடிந்து அவற்றின் ஸங்கத்தையும் விடுங்கோள், எங்ஙனே விடுவதென்னில் அவனருளிச் செய்த கீதையாலே அவனையுணர்ந்து புறம்புண்டான பற்றுக்களை யெல்லாம் விடுவது என்றவாறு.

ஸாங்கமான ஸகலவேதங்களுக்கும் தானே பொருள் என்பதை ஸ்ரீகீதையிலே அருளிச் செய்கையாலே அறு சமயக் கொள்கைகள் அவத்யமென்று கழியுண்டனவாயிற்று. கீதை அவதரியாவிடில் அறுசமயங்களுக்கும் வைதிகசமயத்திற்கும் பரஸ்பரம் ஏற்பட்ட பிணக்கு அறாதேயிருக்கும்; வைதிகமார்க்கத்தை நிலை நிறுத்தி கீதை அவதரித்துவிட்டபடியாலே அந்தப் பிணக்கு அற்றதென்க.

பசை அற உணனக்குமின் = கீதையில் இரண்டாவது அத்யாயத்தில் (59) “விஷயாவிவார்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:- ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே’ என்று ஓதப்பட்டது காண்க.

இதெல்லாம் எதுகொண்டு என்ன, அவனுடைய வுணர்வுகொண்டு என்கிறார். இவ்விடத்தில் உணர்வு எனகிறது உணர்வுக்கு உறுப்பான கீதையை, கீதாசாஸ்திரத்தைக் கொண்டு தெரிந்துகொண்டு பசையற வுணக்குமின் என்க.

 

English Translation

Accept the method of the Vedas, and know him through realisation, He is the Lord without end, and beginning of all, spoken of therein.  Give up all doubt and cut as under your attachments, for he resolves the conflicts in the six schools of thought.

uNarnthuNarnNthizhinthakanRu* uyarnthuruviyantha inNnNilaimai*
uNarnthuNarnthuNarilum* iRainNilai uNarvarithu uirgaaL!*
uNarnthuNarnNthuraiththuraiththu* ariyayaNnaranennum ivarai*
uNarnthuNarnNthuraiththuraiththu* iRainchumin manappattathonRE.        1.3.6

Think; Think and try to find out; the one which spans everywhere and is in every being
- the Athmaa- Even if you get to know the nature of this athmaa through your ears;
your eyes; your minds, you can not get to know the nature of sarvEswaran.  In spite
of that, Oh People!, Thirumaal, Brahman, Sivan- Think of them always and try to express
in many ways and concentrate on THE ONE whom you think as "sarvEswaran" whom you are
able to appreciate wholeheartedly; Keep talking about His glories again and again and
prostrate to Him" (Wait, sisters and brothers, Go to the next pAsuram where AzhwAr
has given his verdict on who the "sarvEswaran" is).

உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந்நிலைமை,

உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலையுணர்வரி துயிர்காள்,

உணர்ந்துணர்ந் துரைத்துரைத் தரியய னரனென்னுமிவரை,

உணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே.

 

பதவுரை

உணர்ந்து உணர்ந்து

-

உணர்வையே இயற்கையாகவுடையானாகி

இழிந்து அகன்று உயர்ந்து

-

(அந்த உணர்வு அகண்ட மாகையாலே) பத்துத் திக்கிலும் வியாபித்து

உரு வியந்த

-

ஜடப் பொருளில் நின்றும் வேறுபட்டிருக்கிற

இ நிலைமை

-

இந்த ஆத்மாவின் ஸ்வரூபத்தை

உணர்ந்து

-

கேள்வியாலே அறிந்து

உணர்ந்து

-

மநநத்தினாலே அறிந்து

உணரிலும்

-

யோகாத்தாலே ப்ரத்யக்ஷமாக அறிந்தாலும்

இறைநிலை உணர்வு

-

ஸர்வேச்வரனுடைய நிலைமையை அறிவதாவது

அரிது

-

அருமையாயிருக்கின்றது; (ஆயினும்;)

உயிர்கான்

-

சேதநர்களே!

அரி அயன் அரன் என்னும் இவரை

-

விஷ்ணு பிரமன் ருத்ரன் என்று சொல்லப்படுகிற இவர்களை

உணர்ந்து உணர்ந்து

-

(ஒவ்வொருவருடையவும்) குணம் முதலியவற்றைக் கொண்டு பலகாலும் ஆராய்ந்து.

உரைத்து உரைத்து

-

(அதற்கு இணங்கப்) ப்ரமாணங்களை வ்யவஹரித்துப் பார்த்து

மனப்பட்டது ஒன்று

-

உங்கள் மனதில் ஈச்வரனாகத் தோன்றின ஒரு பொருளை

உணர்ந்து உணர்ந்து

-

பலகாலும் அநுஸந்தித்து

உரைத்து உரைத்து

-

(அப்பொருளின் மந்திரம் திருநாமம் முதலியவற்றைப்) பலகாலும் சொல்லி

இறைஞ்சுமின்

-

உபாஸியுங்கோள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸம்ஸாரிகள் ஆழ்வாரை நோக்கி “ஆழ்வீர்! அவதாரத்திலே ஆச்ரயிக்கும்படி சொல்லா நின்றீர்; “மத்யே விரிஞ்சகிரிசம் ப்ரமாவதார:” (ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்- உத்தரசதகம்.) என்கிறபடியே,பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே அவதரித்து நிற்கிற நிலையாயிருந்தது முதலவதாரம்; அதில் மூவரும் ஒரு திகரானவர்போலத் தோற்றியிராநின்றார்கள்; அம்மூவரும் முக்கியர்களேயோ? அல்லது மூவரிலே ஒருவன் முக்கியவனோ! அல்லது மூவர்க்கு மப்பால் ஒருவன் முக்கியனோ? என்று எங்களால் ஆராய்ந்து அறுதியிடப் போகாமையாலே ஆச்ரயிப்பதிலே ஒரு ஆலோசனை உண்டாயிற்று; அதனை நீக்கி ஆச்ரயணீய வஸ்துவை நிர்ஷ்கர்ஷித்துத் தரவேணுமே நாங்கள் ஆச்ரயிக்கும்படி” என்று விஜ்ஞாபிக்க, த்ரிமூர்த்திஸாம்ய ப்ரமத்தைப் பரிஹரிக்குமடைவிலே அருளிச் செய்கிற பாசுரம் இது.

ஜீவாத்மஸ்வரூபத்தை ஒருபடி ஸாக்ஷாத்ரிக்கப் பெற்றாலும் பரமாத்ம ஸ்வரூபம் அறுதியிடவரிது என்கிறார் முன்னடிகளால்.

ஜீவாத்மஸ்வரூபம் எப்படிப்பட்டதென்னில்; உணர்ந்துணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த = ஞானமாத்திரஸ்வரூபமன்றியே ஞானத்திற்கு ஆச்ரயமாயிருக்கும்படியை ‘உணர்த்துணர்ந்து’ என்பதனால் அருளிச் செய்தபடி ‘இழிந்து அகன்று உயர்ந்து என்பதனால் ஸர்வ வயாப்தி சொல்லப்படுகிறது; ஜீவஸ்வரூபம் அணுவானதாயினும் தர்மபூத ஜ்ஞானத்வாரா வ்யாப்தி உண்டாதலால் இங்ஙனமருளிச் செய்க் குறையில்லை என்க. இங்கே ஈடு; - “இச்சேதனன் தான் அணுபரிமாணனாயிருக்கச் செய்தேயும், ஈச்வரன் ஸ்வரூபத்தாலே எங்கும் வியாபித்திருக்குமா போலே ஜ்நானத்தாலே எங்கும் வ்யாபித்திருக்குமென்கிறது” என்பதாம். இழிந்து என்பதனால் கீழ் நிலங்களில் வியாப்தியும், அகன்று என்பதனால் நடுநிலஙக்ளில் வியாப்தியும் உயர்ந்து என்பதனால் மேல் நிலங்களில் வியாப்தியும் சொல்லுகையாலே ஸர்வப்யாப்தி சொல்லிற்றாயிற்று.

உருவியந்த என்பதனால் தேஹத்திற்காட்டிலும் விலக்ஷணன் என்னுமிடம் சொல்லப்பட்டது. உரு என்று ரூபவத்தான அசேத நவஸ்துஸமுதாயத்தைச் சொல்லுகிறது. வியந்த என்றும் பிரிக்கலாம் இயந்த என்றும் பிரிக்கலாம்; பொருள் ஒன்றே.

ஆக இப்படிப்பட்டதான இந்நிலைமை உணர்ந்துணர்ந்து உணரிலும் = ஆத்மாவினுடைய ஸ்வரூபத்தை ச்ரவணம் மநநம் முதலியவற்றால் ஸாக்ஷாத்கரிக்கக் கூடினாலும்- தேஹாதிரிக்தமாயிருக்கிற ஆத்மாவின் ஸ்வரூபத்தை யோகசாஸ்திரத்திற் சொல்லுகிற க்ரமத்தாலே யிழிந்து வருந்தி ஓருவகையாய் அறிந்தானானாலும் என்றபடி.

உயிர்காள்! இறைநிலை உணர்வரிது = சேதனர்களே! ஸர்வேச்வரன் பிரமருத்திரர்களுக்கு அந்தராத்மாவாய் அவர்களைச் சரீரமாகக் கொண்டு தான் சரீரியாய் நிற்கிற நிலை அறியமுடியாததென்கை.

‘இறைநிலை உணர்வரிது’ என்று சொல்லிவிடலாகுமோ? அல்பஜ்ஞர்களான எங்களால் அறியமுடியாதென்பது உண்மையே; அறிந்தவர்களில் தலைவரான தேவரீர் நிஷ்கர்ஷித்து அருளிச் செய்தால் நாங்கள் அறிந்து கொள்ளத் தடையில்லையே என்ன; மத்யஸ்த த்ருஷ்டியாலே ஆராய்ந்து பார்க்கும்படி அருளிச் செய்கிறார் அரியயனரனென்னுமிவரை உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து இத்யாதி. நாராயணனென்றும் நான்முகமெனன்றும் ருத்ரனென்று முள்ள மூன்று மூர்த்திகளின் ஸ்வரூபத்தையும் ஸ்வபாவத்தையும் ஆராய்ந்து பாருங்கோள்; அந்த ஸ்வரூபவஸ்வ பாவங்களைத் தெரிவிக்கின்ற பிரமாணங்களையும் ஒருவர்க்கொருவர் சொல்லிப் பாருங்கோள்; ஒருவன் படைப்பவாய் இருவர் படைக்கப்படுமவர்களாய், ஒருவன் ஸாத்விகனாய் இருவர் ராஜஸதாமஸர்களாய்ப் புலப்படுமவர்கள். அங்ஙனம் புலப்படுமவர்களில் நிஷ்பக்ஷபாதமாய் எந்தத் தெய்வம் உங்கள் நெஞ்சில் சிறந்ததாகத் தோன்றுகின்றதோ அதனை நீங்களே நிஷ்கர்ஷித்துப் பற்றுதல் நன்று என்றாராயிற்று.

 

English Translation

O People! Even if you raalise your nature as different from your body, -formless, sons length, breadth or height, -the Lord is not attained.   Praise him who is spoken of as Brahma, Vishnu and Siva, he is the Lord dwelling in your heart.

onRenappalavena* aRivarum vadivinuL ninRa*
nanRezhil naaraNan* naanmukan aranennum ivarai*
onRanNum manaththuvaiththu* uLLinNum irupasai aRuththu*
nanRena nalancheyvathu* avanidai nammudai naaLE.        1.3.7

The Supreme God is one and He is incomprehensible for all; He is equipped with Great
kalyANa guNAs; Think and analyse of the three NarayaNan, Brahman and Sivan without
getting attached to any of them; Think of Their nature, Their attributes and guNAs,
and Their capacities; compare Their attributes and Their capacities; - remove your
iswara bhuddhi on two of them and concentrate on the Only One, Sriman NarayaNan and
offer your bhakti to only Him for the Rest of your Life fully saying "this is the
only useful action that I can do".

ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற,

நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை,

ஒன்றநும் மனத்து வைத் துள்ளிநும் இருபசை யறுத்து,

நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே.

 

பதவுரை

ஒன்று என

-

ஒன்றென்றும்

பல என

-

பலதென்றும் (அதாவது

ஒருவர் பிரதானனென்றும் பலர் பிரதானனென்றும்)

அறிவு அரு

-

அறிதற்கு அரிதான

வடிவினுள்

-

உருவுக்குள்ளே

நின்ற

-

நிலைத்திருக்கிற

நன்று

-

விலக்ஷணமான

எழில்

-

கல்யாண குணங்களாலே பிரகாசிக்கிற

நாரணன்

-

ஸ்ரீமந்நாராயணன்

நான்முகன்

-

பிரமன்

அரன்

-

ருத்ரன்

என்னும் இவரை

-

என்கிற இத்தெய்வங்களை

ஒன்ற

-

மத்யஸ்தத்ருஷ்டியாக

நும் மனத்து வைத்து

-

உங்களது நெஞ்சில் வைத்து

உள்ளி

-

(அவர்களை ஸ்வரூபஸ்வ பாவங்களை ப்ராமணங்கொண்டு) ஆராய்ந்து

நும்

-

உங்களுக்குண்டான

இரு சபை அறுத்து

-

இருவர் திறத்திலாகம் ஈச்வரபுத்தியை யொழித்து

அவனிடை

-

அந்த நன்றெழில் நாராயணன் பக்கலிலே

நம்முடை

-

நம்முடைய

நாள்

-

வாழ்நாளில்

நன்று என

-

நன்றாக

நலம் செய்வது

-

பக்தி பண்ணுதற்கு உரியது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆராய வேண்டியபடியை விசதமாகவுபதேசித்து விரைவாக ஆச்ரயியுங்கோளென்கிறாரிப்பாட்டில்.

ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற = அரி அயன் அரன் என்கிற மூன்று மூர்த்திகள் பிரதானவர்களாய், மூவர்க்கும் மூன்று சரீரங்களிலும் ஒரு ஆத்மாவே உள்ளானோ? அன்றியே, மூன்றிலும் மூன்று சேதநர் தனித்தனி புகுந்து நிற்கின்றனரே? என்று ஸந்தேஹம்வரின் நிர்ணயம் பெற முடியாதபடி யிருக்கின்ற வடிவையுடையவரான நாராயணன் நான்முகன் அரன் என்கிற மும்மூர்த்திகளையும் நிஷ்பக்ஷ பாதமாக நெஞ்சிலேகொண்டு ஆராய்ந்து பார்க்கவேணும்; அங்ஙனம் பார்த்தவாறே அவற்றுள் ஒரு மூர்த்தியை முக்கியமாகவும் மற்ற இரு மூர்த்திகள் அமுக்கியமாகவும் புலப்படும்; அப்போது, அவ்விரு மூர்த்திகளின் பக்கலிலே நம்முடைய வாழ்நாளில் விரைவாக அநந்யப்ரயோஜநமான பக்தியைச் செலுத்தப்பார்ப்பது என்றாராயிற்று.

மூன்றாமடியில், ஒன்ற என்றது நிஷ்பக்ஷாபாதமாக என்றபடி. ஆராய்வதற்கு முன்னே விஷ்ணுவுக்கே சிறப்பு வேணுமென்றாவது, மற்ற இருவர்க்கே சிறப்பு வேணுமென்றாவது ஆக்ரஹம்கொள்ளாமல் பிரமாணகதியின்படியே எங்ஙனம் தேறுகின்றதோ அங்ஙனம் கொள்வதே கடமையென்று தேறி என்பது கருத்து. இருசபையறுத்து = இரு மூர்த்திகளிலேயுள்ள பசையை யறுத்து என்றபடி.

 

English Translation

He pervades all forms, eluding count as one or as many.  He is the radiant Narayana, the four-faced Brahma and Siva.   Hold him in your hearts with steady devotion, shed all desires and serve him alone, that is the only good.


நாளு நின் றடு நமபழ மையங் கொடுவினையுடனே

மாளும், ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி,

நாளூநந் திருவுடை யடிகள்தம் நலங் கழல் வணங்கி,

மாளுமோ ரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே.

 

பதவுரை

மனனகம்

-

மனத்திலுண்டான

மல் அற

-

(மும்மூர்த்திகளும் ஸமமாவர் என்னும் விப்ரதி பத்தியாகிற) அழுக்கு ஒழியும்படி

கழுவி

-

விவேகத்தாலே பரிசுத்தப்படுத்தி

நாளும்

-

நாள்தோறும்

நம்

-

நமக்கென்றே உரிய

திரு உடை அடிகள் தம்

-

திருமகள் கொழுநனான ஸ்வாமியினுடைய

நலம் கழல்

-

அழகிய திருவடிகளை

வணங்கி

-

ஆச்ரயிக்க

நாளும் நின்று

-

எப்போதும் விடாது நின்று

அடும் நம

-

வருந்துகின்ற நாமறிந்தே

பழமை அம் கொடு

-

பழமையாகிய மிகவுங்

வினை உடனே மாளும்

-

கொடிய பாபங்கள்  ஆச்ரயித்தவுடனே தொலையும்;

ஓர் குறைவு இல்லை

-

ஒரு குறைவுமுண்டாகாது; (இப்படி ஆச்ரயிக்குமிடத்தில்)

மாளும் ஓர் இடத்திலும்

-

சரீரத்தை விடுகிற காலத்திலும்

வணக்கொடு

-

வணக்கத்தோடு

மாள்வது

-

முடிவது

வலம்

-

நன்று.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “நன்றென நலஞ்செய்வதனிடை” என்றருளிச் செய்ததைக் கேட்ட ஸம்ஸாரிகள், அநாதிகாலமாக நாங்கள் பண்ணிக் கூடு பூரித்துக் கிடக்கிற ப்ரபல கருமங்கள் பிரதிபந்தமாயிருக்க நாங்கள் எப்படி எம்பெருமானை ஆச்ரயிக்க முடியும்? அன்றியும் எங்களுடைய வாழ்நாள் வெகுவாய்க் கழிந்து ஒழிந்ததாகையாலே இனி ஆச்ரயிக்க நாள் தானுமில்லையே! என்ன, அவர்களுக்கு உத்தரம்போல் அருளிச் செய்யும் பாசுரம் இது. நீங்கள் செய்து கிடக்கிற பாவங்களை நினைத்து அஞ்சவேண்டா; நீங்கள் எம்பெருமானை ஆச்ரயிப்பதாக முயன்றவளவிலே விரோதி கருமங்களடங்கலும் தொலைந்துபோம்; அவற்றைத் தொலைக்கப் பிராட்டி  ஸந்நிதாநமுண்டுகாணும்; வாழந்õள் பெரும்பாலுங் கழிந்தொழிந்ததே யென்றிருக்கவும் வேண்டா; நீங்கள் தண்டுகாலாவூன்றித்தள்ளி நடக்கும்போதாகிலும் அக்கோலோடே சாய்ந்தால் அது தானும் ஒரு நமஸ்காரமாகக் கணக்கிடப்பெறலாகும் என்றார்.

“மனனகமலமறக்கழுவி நாளும் நம் திருவுடையடிகள் தம் நலங்கழல் வணங்க, நாளும் நின்றடுநமபழமை யங்கொடுவினையுடனேமாளும், ஓர் குறைவில்லை; மாளுமோரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே” என்று அந்வயிப்பது.

இப்பாட்டின் முதலடிக்குச் சார்பாக அறியவேண்டிய தோந்தப் பொருள் கேண்மின்:- ப்ரஹ்மவித்யையை உணர்ந்த அதிகாரிக்கு அவ்வித்யையின் மஹிமையினால் உத்தரபூர்வபாபங்களின் அச்லேஷ விநாசங்கள் கூடும். ஏனெனில் வித்யா மஹிமையை விவரிக்கப் பிறந்த *ஏவம்விதி பாபம் கர்ம நச்லிஷ்யதே* *ஏவம் ஹாஸ்ய ஸர்வ பாம்மாந: *நாராபுக்தம் க்ஷயதே கர்* (கரும பலன் அநுபவித்தேயறவேணும்) என்கிற சாஸ்திரத்தோடு விரோதிக்கின்றதே யென்னில், விரோதமொன்றுமில்லை; விஷயபேதங் கொண்டு இரண்டு சாஸ்திரங்களையும் பொருந்தவிடத்தட்டில்லை. இனி விஷயபேதம் எவ்வாறெனில், “கருமபலன் அநுபவித்தே அறவேணும்’ என்கிற சாஸ்திரம்- கருமங்கள் பலன் தருவதில் திண்ணிய சக்தியுடையன எனக் கூறுதலை விஷயமாகவுடையது. *ஏவம் ஹாஸ்ய ஸர்வ பாப்மாந ப்ரதூயந்தே* இத்யாதிச்ருதிகள் ப்ரஹ்மவித்யை ப்ராசீநபாபங்களுக்குள்ள பலப்ரதாந நக்தியை நாசஞ்செய்வதிலும் பவிஷ்யத் பாபங்களுக்குள்ள பலப்ரதாந சக்தி உத்பத்தியைத் தடைசெய்வதிலும் வல்லமையுள்ளதெனக் கூறுதலை விஷயமாகவுடையன, ஆகையால் இரண்டிற்கும் விஷயம் வேறுபட்டதாயிற்று. அக்நிக்கு தாஹ ஸாமர்த்தியத்தையும் ஜலத்திற்கு தாஹநிவாரண ஸாமர்த்தியத்தையும் கூறுகின்ற இரண்டு பிரமாணங்கள் விஷய பேதத்தாலே அவித்தமாவதுபோல இதனைக் கொள்க.

இப்பாட்டின் முதன் மூன்றடிகட்குச் சந்தையாக “த்வதங்க்ரிமுத்திச்ய கதாபீ கோநசித யதா ததாவாபி ஸக்ருத் க்ருதோஞ்சலி:, ததைவ முஷ்ணாக்யசு பாந்தயசேஷதா: சுபாதி புஷ்ணாதி ஜாது ஹீயதே” என்ற ஆளவந்தார் ஸ்தோத்ரரரத்ந ஸ்ரீஸூக்தி அநுஸந்திக்கவுரியது.

மூன்றாமடியின் முடிவில், வணங்கி என்றது எச்சத்திரிபாய் வணங்கவென்றபடி. வணங்கின் என்ற பாடத்தில் இங்ஙனங்கொள்ளவேண்டிய அருமையில்லையாயினும் அது பாடமன்று.

மூன்றாமடிக்கு ஒரு ஸம்வாதமருளிச் செய்கிறார் நம்பிள்ளை; அதாவது- “ஸர்வேச்வரனை ஆச்ரயித்தானாகில் அவன் பலப்ரதனாகிறான், பிராட்டியைப் புருஷகாரமாகப் பற்ற வேண்டுகிறதென்? என்று நஞ்சீயர் பட்டரைக்கேட்க, *நாளுநந் திருவுடையடிகள்தம் நலங்கழல் வணங்கி யென்று, அவள் முன்னாக ஆச்ரயிக்க வேணுமென்னாநின்றது கண்டீரே! என்று அருளிச்செய்து, அவனை ஆச்ரயிக்குமிடத்தில் இவன் குற்றம் பாராதே தன்னிழலிலே இவனைவைத்து அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்குமவள் முன்னாகப் பற்றவேணும் என்றருளிச்செய்தார்” என்பதாம்.

நலங்கழல் = பிராட்டி புருஷகாரமாகப் பற்றினாருடைய குற்றங்களைக் கணிசியாதே கைக்கொள்ளவல்ல திருவடிகள் என்றவாறு. இதுவாயிற்றுத் திருவடிகட்கு நன்மை.

மாளுமோரிடத்திலும் வணக்கொடு மாள்வதுவலமே = இராவணன் “த்விதா பஜ்யேமப்யேவம் ந நமேயம் து கஸ்யசித்” என்றான்; நான் உடல் பிளந்து செத்துப் போகும்படி நேர்ந்தாலும் சரீரம் இருதுண்டாகப் பிளவுற்றுக் குறுக்கே விழுமத்தனையொழிய அப்போதும் ஒருவனை வணங்கினாப்போல் விழமாட்டேன்’ என்றான். அப்படிப்பட்ட விருத்தஸங்கல்ப மின்றியே, சாகிறபோதாவது தலை கவிழ்ந்து சாவப்பெற்றால் நன்று என்கிறாராழ்வார்.

 

English Translation

Let us purge our hearts free from desires, and worship the radiant feet of the Lord, spouse of Lakshmi.  Our past karmas will vanish, and we shall not want, Even if death comes, we shall die humbly and well.

naaLum ninRadunNamapazhamai* aNGkodu vinaiyudanE
maaLum* Or kuRaivillai;* mananaka malamaRak kazhuvi*
naaLum nNam thiruvudai adigaLtham* nalankazhal vaNanki*
maaLum Oridaththilum* vaNakkodu maaLvathu valamE.        1.3.8

If you remove the dirt of considering all three of them are equal, - consider logically
and purify your mind by praying  and prostrating to the Lotus Feet of emperumaan who is
the Lord of Sri Mahalakshmi, then, the worst grandest, deadliest old sins that have been
accrued over the ages for so many births will go away immediately; Then you  will have
no grievances; Then even when you are on your death bed, you will think of Him.