வேத தியானம்
வாசி...விளங்கிக்கொள்...கைப்பிடி
பணியை முழுமையாய் நிறைவேற்றும் விசுவாசம்!
தயாராகவும் உண்மையுள்ளவர்களாகவும் இருங்கள் (லூக்கா 12:35-48)
எமது விசுவாச வாழ்வை உலகத்தார் வெறுப்பார் (அப்போஸ்தலர் 6:8-15)
சதித்திட்டங்கள் - நெகேமியாவின் கதை
தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும்!
விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்! (எசேக்கியேல் 16)
கலாச்சார பழக்கங்களும் கிறிஸ்தவ சபையும் (1 கொரிந்தியர்)
வேதாகமத்தை விளங்கி வெளிப்படுத்தல் (Bible Exposition)
சகோதர ஒற்றுமை! (கொலோசெயர் 4:7-14)
விசுவாசம், நோய், குணமாக்கல்! (யாக்கோபு 5:13-20)
என் ஆத்துமாவே கர்த்தரில் அமர்ந்திரு! (சங்கீதம் 62)
மெய்யான ஞானம்! (யாக்கோபு 3:13-18)
உண்மை மற்றும் ஒப்புரவாக்கல்! ( யோபு 42: 1-9)
மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல்! (பிலி 3: 10-21)
கிறிஸ்துவின் வாசனை! (2 கொரிந்தியர் 2: 14-17)
உடன் அடையாளம், பாவ அறிக்கை, ஜெபம், செயல் (நெகேமியா 1: 4-11)
விசுவாசிகள் ஒருவர் ஒருவரின் தேவைகளை தாங்க வேண்டும் - II கொரி 8
நான் புதிய ஏற்பாடு விசுவாசியா? - புலம்பல் 3:19-27
வெளிச்சம் மற்றும் மகிழ்ச்சி - ஏசாயா 9:2-7
இரு பிரசன்னங்கள் - தீத்து 2:11-14
https://www.youtube.com/watch?v=e009J5kHx7I
"அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்." (கொலோசெயர் 4:17)
கர்த்தர் நமக்குக் கொடுக்கும் ஊழியம், நமது பலத்துக்கும் விருப்பத்திற்கும், நோக்கத்திற்கும் மாறாக இருக்கலாம். கர்த்தர் உனக்கு கொடுத்த பணியை ஏற்றுக் கொள்வாயா?
“ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.” (எபேசியர் 2:10).
அவருடைய பிள்ளைகள் அவருடைய குடும்பத்தில் பிறந்த பின் கர்த்தர் அவர்கள் செய்ய வேண்டிய பணிகளை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்.
எமது சபையில் போதிக்கப்பட்ட செய்தி, கர்த்தரிடமிருந்து நாம் பெற்ற பணியைப் பற்றி சிந்திக்கும்படி நம்மைத் தூண்டியது. நாம் பெற்ற பணியை நிறைவேற்றுவதற்கு நாம் தொடர்ந்து உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா?
எபேசியர் 4:112-13 கூறுகிறது, "பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்." ஊழியம் என்பது அவருடைய மகிமைக்காக மற்றவர்களை சேவிப்பதே.
ஒருவேளை கர்த்தர் உங்களுக்கு கொடுத்த பணியை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஏற்றுக்கொண்டால் அது உங்கள் வசதியான வாழ்வை சிதரடிக்கும்.
ஒருவேளை கர்த்தர் உங்களுக்கு கொடுத்த பணியை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். ஆனால் நீங்கள் எதிர்பார்த்த புகழும் ஆறுதலும் கிடைக்கவில்லை. ஊழியத்தில் நீங்கள் சோர்வடைந்து, நீங்கள் பெற்ற பணியை முழுமையாக செய்யும் உறுதியை இழந்துவிட்டீர்கள்.
“பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காக” அழைக்கப்பட்டாலும், நாம் பணியை விட பதவியில் எமது ஆர்வத்தை வைக்கலாம். அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள் மற்றும் போதகர்கள் போன்ற பதவிகளில் நாம் எம் கவனத்தை செலுத்தலாம். வேத பகுதியின் நோக்கமோ பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் சுவிஷேச பணி.
ஒருவேளை கர்த்தர் உங்களுக்கு கொடுத்த பணியை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். தேவ ஊழியத்தில், நீங்கள் செல்வாக்கையும், புகலையும் பெற்றதினால் நீங்கள் மக்களை முழுமையாக பணிசெய்யும் உறுதியை இழந்திருக்கலாம்.
கொலோசெயர் 4ல், கர்த்தர் தம் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் பணிகளை கொடுக்கிறார். அரிஸ்தர்க்கு, மாற்கு, மற்றும் யுஸ்து ஆகியோர் பவுலுக்கு ஆறுதல் அளித்தனர் (கொலோ 4:10-11). எப்பாப்பிரா தேவாலயங்களுக்காக ஜெபிக்கிறார் (கொலோ 4:12-13). தீகிக்கு, ஒநேசிமு, லூக்கா ஆகியோர் பவுலுடன் சேர்ந்து பணியாற்றுகிறார்கள் (கொலோ 4:7-15). பவுல் சிறையில் இருந்து அவர் பணியை தொடர்ந்து செய்கிறார் (கொலோ 4:18). கர்த்தரிடமிருந்து நீங்கள் பெற்ற பணியை முழுமையாக நிறைவேற்றுங்கள்.
இந்த சிந்தனையை வாசிக்க முதல் தயவு செய்து லூக்கா 12:35-48 வேத பகுதியை கவனித்து வாசிக்கவும்..
இது நமது சபையில் இன்று (Sunday, 28 January 2024) போதிக்கப்பட்டது. உங்களால் முடிந்தால், கீழே உள்ள “link” கை பயன்படுத்தி முழு பிரசங்கத்தையும் ஆங்கிலத்தில் கேளுங்கள்.
இயேசுவின் சீஷர்களான நாம் அனைவரும், அவருக்குச் சிறப்பாகச் சேவை செய்துகொண்டு அவர் திரும்பிவருவதற்காகத் காத்திருக்க வேண்டும். "எஜமானர் வீட்டுக்கு வந்தவுடன் ஊழியர்கள் தயாராக அவருக்குக் காத்திருந்தபடியால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானர் வேலைக்குரிய ஆடைகளைத் தானே அணிந்துகொண்டு ஊழியர்களை மேசையின் அருகே அமரும்படியாகச் சொல்வார். பின்னர், எஜமானரே அவர்களுக்கு உணவைப் பரிமாறுவார்." (லூக்கா 12:37, biblegateway.com, Tamil easy to read version - “ERV-TA”).
இயேசுவின் வருகைக்காக உண்மையாக ஊழியம் செய்து தயாராக காத்திருக்காதவன், திருடர் இயேசுவின் வீட்டுக்குள் நுழைய சந்தர்ப்பம் கொடுப்பான். (லூக்கா 11:39-40)
சபை தலைவர்கள் இயேசு வீட்டின் எஜமான்களாக ஊழியம் செய்கிறார்கள். அவர்கள் இந்த ஊழியத்தை உண்மையாக செய்ய வேண்டும். அவர்கள் செய்யக்கூடாத விஷயங்களை இயேசு சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார். இயேசுவின் ஊழியக்காரரை உங்கள் ஊழியக்காரர்களாகக் கருத வேண்டாம். அவர்களைப் துஷ்பிரயோகம் செய்யவும் வேண்டாம். இயேசுவுக்குச் சொந்தமானவற்றை உங்கள் சுய திருப்திக்காகப் பயன்படுத்த வேண்டாம். (லூக்கா 12:45)
பொய்யான மேய்ப்பர்கள் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி விசுவாசிகளைக் கட்டுப்படுத்தவும் தங்களை வளப்படுத்தவும் முயற்சி செய்யலாம். அவர்களின் நுகர்வும், இச்சைகளும் இந்த வாழ்வுடன் முடியும், அவர்களின் நித்திய முடிவு நன்றாக இருக்காது. "அந்த உழியனுக்குத் தகவலே தெரியாதபோது எஜமானர் வருவார். அந்த ஊழியன் சற்றும் எதிர்பார்த்திராத நேரத்தில் அவர் வருவார். அப்போது அந்த எஜமானர் அந்த ஊழியனைத் தண்டிப்பார். கீழ்ப்படியாத பிற மனிதரோடு இருக்கும்படியாக எஜமானர் அவனையும் அனுப்பிவிடுவார்." (லூக்கா 12:46, ERV-TA)
ஆனால், இயேசுவின் வீட்டில் உண்மையாக ஊழியம் செய்பவனுக்கு இந்த வாக்குறுதியை இயேசு அளிக்கிறார். "எஜமானர் வந்து அந்த ஊழியன் கொடுக்கப்பட்ட வேலையைச் சரிவர செய்துவருவதைப் பார்க்கும்போது, அந்த ஊழியன் மிகவும் மகிழ்ச்சியடைவான். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்க அந்த ஊழியனை எஜமானர் ஏற்படுத்துவார்." (லூக்கா 12:43-44, ERV-TA)
இயேசு கொடுத்த தலைமையை நீங்கள் உங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருப்பவராயிருந்தால், நிறுத்துங்கள் தாமதமின்றி மனந்திரும்புங்கள்.
தேவன் அவர்களுடன் பேசுகிறார் என்று சொல்லி, உங்களைக் கட்டுப்படுத்த முயற்ச்சி செய்கிறவர்களையும், உங்கள் செல்வத்தை நாடுகிறவர்களிலுமிருந்து விலகிச் செல்லுங்கள். வேத வார்த்தையை வாசித்து உண்மையை அறிந்து, மற்ற உண்மையான விசுவாசிகளுடன் வேதத்தைக் கற்று, பரிசுத்த ஆவியின் பலத்தில் கீழ்ப்படிந்து நடங்கள்.
அறிந்து உண்மையில்லாமல் நடப்பவனுக்கும், மற்றும் அறியாமல் தவறாக வழிநடத்தப்படுபவனுக்கும் தண்டனையுண்டு (லூக்கா 12:47-48). ஆகவே, வேத சத்தியத்தை அறிந்து உண்மையான விசுவாசிகளாக இயேசுவின் வருகைக்காக தயாராக காத்திருங்கள்.
பெரேயாவில் பவுல் பாரட்டிய விசுவாசிகளைப் பற்றிய கூறிப்பை கவனிக்கவும். அவர்களின் உதாரணத்தை கைப்பிடிங்கள்.
"அதே இரவில் விசுவாசிகள் பவுலையும் சீலாவையும் பெரேயா எனப்பட்ட மற்றொரு நகரத்திற்கு அனுப்பினர். பெரேயாவில் பவுலும் சீலாவும் யூதர்களின் ஜெப ஆலயத்திற்குச் சென்றனர். தெசலோனிக்கேயின் யூதர்களைக் காட்டிலும் இந்த யூதர்கள் சிறந்தவர்களாக இருந்தனர். பவுலும் சீலாவும் கூறியவற்றை இந்த யூதர்கள் மிகுந்த ஆர்வமுடன் வரவேற்றார்கள். பெரேயாவின் யூதர்கள் ஒவ்வொருநாளும் வேதவாக்கியங்களைக் கற்றார்கள். இக்காரியங்கள் உண்மையானவையா என்று அறிய இந்த யூதர்கள் விரும்பினார்கள். இந்த யூதர்களில் பலர் நம்பிக்கை கொண்டனர். உயர்நிலையிலிருந்த பல கிரேக்கப் பெண்களும் ஆண்களைப் போலவே நம்பிக்கை கொண்டனர். (அப்போஸ்தலர் 17:10-12, ERV-TA)
சபைத் தலைவர்களுக்கு நாம் செவி கொடுப்பது நல்லது, ஆனால் அவர்கள் கூறுவதை வேதத்துடன் ஆராயவும் வேண்டும். கண்மூடித்தனமாக சபைத் தலைவர்களைப் பின்பற்ற வேண்டாம்.
சாலொமோன் இந்த முடிவை அப்பாவித்தனமாக எடுத்திருக்கலாம்.
வாழ்க்கை உபயோகம்: வேதத்தை வாசித்தறிந்து பின்பற்ற நம்மை அர்ப்பணிப்பது முக்கியம். மேலும் வேதத்தை எமக்கு எடுத்துறைத்து பொறுப்பு கூறுகிறவர்களை எம் வாழ்வில் வைத்திருப்பது நல்லது.
கர்த்தர் சாலொமோனுக்கு வழங்கிய அறிவுரையை, மத் 6: 25-33 இல் இயேசு எமக்கும் எடுத்துறைக்கிறார். எதைப்பற்றியும் கவலைப்படாமல், முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும்படி இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார். இயேசு பறவைகளையும் புஸ்பங்களையும் சுட்டிக்காட்டுகிறார், அவை பிழைப்புக்கு கவலைப்படுவதில்லை ஆனாலும், கர்த்தர் அவைகளின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்வது மாத்திரமின்றி சாலொமோனின் மகிமையை விட அவைகளை மகிமையாக உடுத்துகிறார் (மத் 6:28-29).
வாழ்க்கை உபயோகம்: இயேசு எம்மை விசுவாசத்துடன் வாழ அழைக்கிறார். எமது உலக தேவைகளை சந்திப்பதுடன் எமது எல்லாத் தேவைகளையும் வழங்குவார். தேவன் சாலொமோனுக்கும் இந்த வாக்குறுதியை கொடுத்தார். "மேலும், உன் தந்தை தாவீதைப் போல் நீயும் என் வழிகளில் நடந்து, என் நியமங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடித்து வந்தால் உனக்கு நீண்ட ஆயுளையும் வழங்குவேன்" (1 இராஜாக்கள் 3:14). சாலொமோன் தன் சுயநலத்தை நாடாமல், தனது வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கான ஞானத்தை நாடினார். தன் தந்தை தாவீதைப் போல் தேவனின் வழியில் விழகாம நடக்க கேட்டிருந்தால் அவன் எல்லாவற்றையும் பெற்றிருப்பான் (மத் 6:33). இதைத்தான் இயேசு நம்மைச் செய்ய அழைக்கிறார். அவருடைய ராஜ்யத்தையும் நீதியையும் விசுவாசத்துடன் தேட அழைக்கிறார். இந்த முயற்சியில் இயேசு எம்மை பலப்படுத்த வல்லவர், ஏனென்றால் அவர் எம்முடைய பாவங்களுக்கு பலியானார். விசுவாசத்துடன் தாழ்மையுடன் பாவ அறிக்கை செய்வோருக்கு இயேசு பாவமன்னிப்பு வழங்கி நீதிமான்களாக தேவனிடம் நிலைநாட்டுகிறார். மன்னிக்கப்பட்ட நீதிமான்களில் தேவ பரிசுத்த ஆவி தங்கி, தேவ வழியில் நடக்க உதவுவார். இந்த பூலோக வாழ்வில் மாம்சம், எம்மில் வாழும் தேவ ஆவிக்கு கீழ்ப்படியாமல் தாவீது ராஜாவைப் போல் பாவம் செய்யலாம். இவ்வேளைகளில் பரிசுத்த ஆவிக்கு தாழ்மையுடன் செவிகோடுத்து பாவ அறிக்கை செய்து மனம் திரும்புங்கள். உலகத்தார் எம்மை கண்டிக்கலாம் ஆனால் இயேசு எம்மை மன்னித்து வழிநடத்துவார். இயேசுவின் கிருபையால் எமக்கு சாலொமோனுக்கு வழங்கப்பட்ட வரத்துக்கு மேலான வரம் வழங்கப்பட்டுள்ளது.
எமது விசுவாச வாழ்வை உலகத்தார் வெறுப்பார் (அப்போஸ்தலர் 6:8-15)
"ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்." - அப் 6:8
இந்த வசனத்தை தொடர்ந்து நல்ல சம்பவங்கள் வர எதிர்பார்ப்போம், ஆனால் தொடர்வதோ உலக மக்களின் மனித சுபாவத்தை வெளிப்படுத்தும் கதை.
1. உலகத்து மக்கள் தமது சுய நலத்துக்காக ஒன்று கூடுவார்கள் (அப் 6:9)
லிபர்த்தீனர் (விடுதலை பெற்ற அடிமைகள்) தமது சுய நலத்துக்கு முதலிடம் கொடுத்து ஒரு தனி யூத சபையை ஆரம்பித்து தேவனை வழிபட்டனர். ஒப்பிட்டு பாருங்கள், அப்போஸ்தலர்கள் தங்கள் சமூகத்தில் எழும் பிரிவினையை சுவிசேஷத்திக்கும் ஜெபத்திக்கும் முதலிடம் கொடுத்து தீர்த்தனர் (அப் 6:1-6).
இன்றும் சுய நலத்துக்காக சபைகள் பிரியவதை நாம் காணலாம். போதகர்களும் கண்காணிகளும், சுதந்திரமான பொறுப்புக்கூறல் இல்லாமல், தமது மகிமைக்கு பிரிந்து செல்ல முடிவு செய்யலாம். காலப்போக்கில் உண்மை வெளிப்படும்.
2. உலகத்து மக்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிற விசுவாசிகளை எதிர்க்க ஒன்று கூடுவார்கள் (அப் 6:10-14)
உலக மக்கள் ஸ்தேவானை தாக்கினாகள். இதை எப்படி சாதித்தார்கள், "இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தினர்"; "ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டனர்"; "பொய்ச்சாட்சிகளை கொண்டு வந்து நிறுத்தினர்" (அப் 6:11-13).
இதைப் பற்றி பவுல் 2 தீமோ 4:3-4 ல் எச்சரித்தார், "ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்." இன்றும் கிறிஸ்துவை கீழ்ப்படிகிறவர்கள் இதை எதிர்பார்களாம்.
3. உலகத்து மக்கள் கிறிஸ்துவின் சந்நிதானம் விசுவாசிகளில் காண மாட்டார்கள் (அப் 6:15)
உலக மக்களின் தாக்குதலாள் சோர்வடைய வேண்டாம், கிறிஸ்துவின் அமைதி மற்றும் பிரசன்னத்தில் தங்கி நிலை நில். "உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்" (சங் 37:6). உலக மக்க இதை காணமாட்டார்கள், பதிலாக உலகத்தார் செழித்து பரம்புவதை காண்பார்கள் (சங் 37:35). தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தில் திடம் கொள், "நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர். பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார். நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்" (சங் 5:4-7).
நெகேமியா பாபிலோனின் அரசில் உயர் பதவியை விட்டு, எருசலேமின் சுவர்களைக் கட்ட சென்றார். நெகேமியாவை அழைத்த தேவன் அவனை பலப்படுத்தி வழிநடுத்துகிறார் (நெகே 1-3). தேவன் எம்மை வழிநடத்தும்போது நாம் எதிர்ப்பை எதிர்பார்க்கலாம். நெகேமியா எவ்வாறன எதிர்ப்பை அனுபவித்தார், அதை எப்படி கையாண்டார் என்பதை எமக்கு எடுத்துரைக்கிறார்.
(1) நெகேமியாவின் எதிரிகள் அவர் எதிர்பார்த்தவர்கள் அல்ல
நெகேமியாவின் எதிரிகள் யூதாவின் தேசாதிபதிகள் - சன்பல்லாத் மற்றும் தொபியா (நெகே 2:9-10). இவர்கள் கர்த்தரை அறிந்து அவரை வழிபடுகிறவர்கள். நெகேமியாவின் அழைப்பை அவர்கள் எரிச்சலுடன் எதிர்த்தனர். நெகேமியாவைப் போல், இன்றும் தேவனின் வழிநடத்தலைப் பின்பற்ற நாம் முற்படும்போது, எம்முடைய சொந்தக்காரரே எம்மை எதிர்க்கலாம். இயேசு இதை சீஷத்துவத்தின் எதிர்ப்பார்ப்பு என்று விளக்கினார் - லூக்கா 14:25-33.
(2) நெகேமியாவின் எதிரிகள் வெறுப்பினால் உந்தப்பட்டனர்
வைராக்கியமும் விரோதமும் சகல துற்செயல்களுக்கு வழி கொடுக்கும் (யாக் 3: 14-16). நெகேமியாவை தடுக்க நெகேமியாவின் எதிரிகள் புறஜாதிகளுடன் உறவுகளை பலப்படுத்துகிறார்கள் (சமாரியர்கள், அராபியர்கள், அம்மோனியர்கள் மற்றும் அஸ்தோத்தியர் அல்லது பிலிஸ்தியர்கள்) - (நெகே 4:2; 7-8). நெகேமியாவோ ஜெபத்தில் கர்த்தருக்கு தன் வின்னப்பத்தை கொண்டு வருகிறார் (நெகே 4:9).
(3) நெகேமியாவின் எதிரிகள் சதித்திட்டங்களில் ஈடுபடுகிறார்கள்
நெகேமியாவின் விரோதிகளின் திட்டங்களை கர்த்தர் முறியடிக்கிறார் (நெகே 4:15). அவர்கள் நெகேமியாவை சந்திக்க கேட்கிறார்கள் (நெகே 6:2). அவர்கள் செய்த தவறுகளை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை, மனந்திரும்பவில்லை, தவறுகளை திருத்த முயற்சிகவில்லை. அவர்கள் பொல்லாப்பு செய்ய திட்டமிடுகிறார்கள் என்பதை நெகேமியா உணர்ந்தார் (நெகே 6:2). நெகேமியாவை பயமுறுத்த கட்டுக்கதைகளை உறுவாக்குகிறார்கள்.
- நெகேமியா அவர்களுடன் ஒத்துழைக்கவில்லை (நெகே 2:20)
- நெகேமியா அவர்கள் பேச கூப்பிடும் அழைப்பை மறுக்கிறார் (நெகே 6:3-4)
- நெகேமியா அவர்களின் பொய்யை சுட்டிக் காட்டுகிறார் (நெகே 6:5-9)
சுயநலத்துக்காக பலர் எம்மை விரோதிக்கிறவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள் (நெகே 6: 17-19). ஆனால், எம்மை சத்தியத்தில் உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து, பொறுப்புக்கூற கர்த்தர் சிலரை எழுப்புவார்.
நெகேமியா தனது நற்கிரிகைகளை ஜெபத்தில் கர்த்தரிடம் ஒப்படைத்தார் (நெகே 5:19; நெகே 13:14; நெகே 13:22; நெகே 13:31). நாமும் எமது செயல்களை கர்த்தருக்கு ஒப்படைத்து சோர்ந்து போகாமல் சத்தியத்தில் மனித பயமின்றி கர்த்தரின் அழைப்பில் நிலை நிப்போம்.
தீர்க்கதரிசியின் பதவி மோசேயுடன் தொடங்கியது.
(கர்த்தர் மோசேயிடம் பேசினார்) "நான் உன்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்புவேன். அந்தத் தீர்க்கதரிசி அவர்களின் சொந்த ஜனங்களில் ஒருவனாக இருப்பான். நான் அவன் பேசவேண்டியதை எல்லாம் அவனுக்குச் சொல்லுவேன். அதை அவன் அந்த ஜனங்களிடம் சொல்லுவான். நான் அவனுக்கு கட்டளையிட்டதையெல்லாம் அவன் அந்த ஜனங்களுக்குக் கூறுவான். அந்தத் தீர்க்கதரிசி எனக்காகப் பேசுவான். அவன் அப்படி எனக்காகப் பேசும்போதும், என்னுடையக் கட்டளைகளைக் கூறும்போதும், யாராவது அதைக் கேட்க மறுத்தால், நான் அந்த நபரைத் தண்டிப்பேன்’ என்று கூறினார். ஆனால் நான் உங்களிடம் சொல்லும்படி சொல்லாத சிலவற்றை ஒரு தீர்க்கதரிசி கூறலாம். அதுமட்டுமின்றி, அந்தத் தீர்க்கதரிசி நான் தேவனுக்காகப் பேசுகிறேன் என்று சொல்லலாம். அப்படி ஏதும் நடந்தால் பின் அந்தத் தீர்க்கதரிசி கொல்லப்பட வேண்டும். ஒரு தீர்க்கதரிசி பொய்த் தெய்வங்களுக்காகப் பேச வந்திருக்கலாம். அப்படிப்பட்ட தீர்க்கதரிசி கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்." (உபா 18:18-20, TAERV)
ஒரு தீர்க்கதரிசி தேவவனால் நியமிக்கப்படுகிறார் என்பதை இப்பகுதியிலிருந்து நாம் காண்கிறோம். அவர்கள் சுயமாக நியமிக்கப்படவில்லை. ஒரு தீர்க்கதரிசி கர்த்தரிடமிருந்து கேட்டதை மட்டுமே பேசுகிறார். ஒரு தீர்க்கதரிசியின் வார்த்தை வேதம் - அதாவது தேவனின் வார்த்தை.
கடந்த காலத்தில் தேவன், தீர்க்கதரிசிகள் மூலம் நமது மக்களிடம் பேசியிருக்கிறார். அவர், பல வேறுபட்ட வழிகளிலும் பல சமயங்களிலும் பேசினார். இப்போது இந்த இறுதி நாட்களில் மீண்டும் தேவன் நம்மோடு பேசியிருக்கிறார். அவர் தன் குமாரன் மூலம் நம்மோடு பேசி இருக்கிறார். அவர் தன் குமாரன் மூலமாக இந்த முழு உலகையும் படைத்தார். எல்லாவற்றிற்கும் உரிமையாளராக தேவன் தன் குமாரனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.(எபிரேயர் 1:1-2, TAERV)
தேவகுமாரன் வருகையுடன் தீர்க்கதரிசிகளின் நியமனம் நிறுத்தப்பட்டதை இந்த பத்தியிலிருந்து நாம் காண்கிறோம். நற்செய்தியை அறிவிக்க இயேசு அப்போஸ்தலர்களை நியமித்தார். ஒரு அப்போஸ்தலன் இயேசுவின் பூலோக வாழ்க்கைக்கு சாட்சி. யூத மக்களுக்கு நற்செய்தியை கொண்டுசெல்ல பன்னிருவரில் ஒருவனான யூதாஸுக்குப் பதிலாக மத்தியா நியமிக்கப்பட்டான். (அப்போஸ்தலர் 1:21-26)
புறஜாதிகளுக்கு நற்செய்தியை அறிவிக்க, கிறிஸ்துவால் பவுல் நியமிக்கப்பட்டான். 1 கொரிந்தியர் 15:5-10 பவுல் தன்னை வழக்கத்திற்கு மாறாக பிறந்தவர் என்று விவரிக்கிறார். கலாத்தியர் 1-2 இல் பவுல் இந்த நியமிப்பை முழுமையாக விளக்கினார். பவுலின் நியமிப்பை மற்ற அப்போஸ்தலர்கள் ஏற்றுக்கொண்டனர் (கலா 2:7-9). மேலும், பேதுரு பவுலின் எழுத்தை வேதமாக உறுதிப்படுத்தினார் (2 பேதுரு 3:15-16). பேதுரு பவுலின் கண்டிப்பையும் ஏற்றுக்கொண்டார் (கலா 2:14). இயேசுவின் நியமிப்பு அந்த காலத்தவர்களுக்கு மாத்திரமல்ல அவருடைய சபையானவர்களான எமக்கும் தான். அந்த நியமிப்பின் பலனை நாம் வேதத்தை வாசிக்கும் பொழுது தினமும் பெற்றுக்கொள்கிறோம். சபையின் தேவைக்கு இன்றும் இயேசு ஊழியக்காரர்களை நியமிக்கிறார். இயேசுவின் நியமிப்பு வேதத்துடன் இணங்க வேண்டும். அக்காலத்து சபையாருக்கு எழுதப்பட்ட கடிதத்தை இக்காலத்தார் இந்த விளக்கத்துடன் புரிந்து கொள்ள வேண்டும் (1 கொரிந்தியர் 12:27-31; எபேசியர் 4:11 - 13)
வேதத்தின்படி தீர்க்கதரிசி மற்றும் அப்போஸ்தலன் நியதிமிப்பு பவுலுடன் தீர்வடைந்திற்று. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, மேல் கூறப்பட்டபடி தீர்க்கதரிசிகள் தேவகுமாரன் வரும் வரை வேதத்தை எமக்கு எடுத்துரைத்தனர், அப்போஸ்தலர் இயேசுவின் சாட்சிகளாக வேதத்தை எமக்கு எடுத்துரைத்தனர். இரண்டு, இவ்வெளிப்படுத்தல் வேதத்தின் கடைசி புத்தகத்துடன் மூடப்பட்டுள்ளது (வெளி. 22:18-20).
தீர்க்கதரிசிகளாகவும், அப்போஸ்தலர்களாகவும் நியமிக்கப்பட்டவர்கள், இயேசு திரும்பும் வரை திருச்சபைக்கு சேவை செய்யும் வேதத்தை நமக்குத் தந்திருக்கிறார்கள். இந்தப் பதவிகளுக்கும் நியமனங்களுக்கும் இன்று உரிமை கோருபவர்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.
எசேக்கியேல் 16, தேவனுக்கும் இஸ்ரவேல் தேசத்துக்கும் இடையான உடன்படிக்கையைப் பற்றியது. இஸ்ரவேல் துரோகம் செய்தாலும், உடன்படிக்கையைக் பூர்த்தி செய்வார் என்று தேவன் உறுதியளிக்கிறார் (எசேக் 16:59-63). இஸ்ரவேல் தேசத்தின் நடத்தை, எமது மனித இருதயத்தை வெளிப்படுத்துகிறது. கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:
(i) நன்றியுணர்வு (எசேக் 16:1-22)
இஸ்ரவேலர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் (எசேக் 16:1-14). ஆனாலும் அவர்கள் இதை ஒப்புக்கொள்ளவும் இல்லை நன்றியுணர்வு காட்டவும் இல்லை. பிறர் செய்யும் உதவிகளை நினைவுகூராமல் நன்றியில்லாமல் நடப்பதை நாம் மனித உறவுகளிலும் காணலாம். இத்தகைய நடத்தை ஒரு நபரின் இருதயத்தை வெளிப்படுத்துகிறது.
நன்றியுடன் நினைவு கூறாமல் இருப்பதின் வேர் பெருமை. இஸ்ரவேல்லைக் கூறித்து கர்த்தர் கூறுகிறார், "..உன் இளமையில் ஆடையின்றித் திறந்த மேனியாய் உன் இரத்தத்தில் புரண்டு கொண்டு இருந்த நாள்களை நீ நினைத்துப் பார்க்கவில்லை." (எசேக் 16:22, 43). பெருமை மற்றவர்கள் எமக்கு செய்யும் நன்மைகளை மறுக்கச் செய்கிறது. மேலும், இஸ்ரவேலைப் பற்றி கர்த்தர் கூறுகிறார், "நீயோ உன் அழகில் நம்பிக்கை வைத்து, உன் புகழைப் பணயமாக வைத்து.." (எசேக் 16:15).
(ii)கெட்ட உறவுகளைப் பெருகப்பண்ணல் (எசேக் 16:23-34)
இஸ்ரவேலர்கள் தேவனின் அன்பை நிராகரித்த மனசாட்சியை எளிதாக்க பிழையான உறவுகளின் மூலம் திருப்தியை நாடினர். மனித உறவுகளில் கூட, உண்மையாக அன்புள்ளவர்களின் அன்பை பெருமையுள்ளோர் நிராகரிக்கும்போது, அவர்கள் தங்கள் மனசாட்சியை எளிதாக்க பல பிழையான உறவுகளை வளர்க்க முயர்ச்சி எடுப்பார்கள். ஆனால் இவ்வாரன உறவுகள் அவர்கள் தேடும் திருப்தியை கொடுக்காது. இஸ்ரவேலைப் பற்றி கர்த்தர் கூறுகிறார், "இன்னும் நிறைவடையாமல் நீ அசீரியரின் புதல்வருடன் வேசித்தனம் செய்தாய். அவர்களுடன் விபசாரம் செய்தும் உன் ஆசை அடங்கவில்லை. ஆகையால், வாணிக நாடாகிய கல்தேயாவுடன் நீ மிகுதியாய் வேசித்தனம் செய்தாய்; அப்பொழுதும் உன் மோகம் தீரவில்லை." (எசேக் 16:18-29).
தேவனின் கோபத்தை தூண்ட, இஸ்ரவேல் மக்கள் செயல்பட்டார்கள் (எசேக் 16:26). மனித உறவுகளிலும், பெருமையுள்ளோர் அவர்களை உண்மையாக நேசிப்பவர்களின் கோபி த்தை தூண்ட, பிழையான உறவுகளை பெருக்குவதை நாம் காணலாம். இஸ்ரவேலைப் பற்றி ஆண்டவர் கூறுகிறார்: “எல்லா விலைமாதரும் ஊதியம் பெறுவர். நீயோ உன் காதலர் அனைவர்க்கும் ஊதியம் தருகின்றாய்! நாற்றிசையினின்றும் உன்னுடம் விபசாரம் செய்ய வருவோர்க்குக் கையூட்டு அளிக்கின்றாய். எனவே, உன் வேசித்தொழிலில் கூட நீ பிற பெண்களினின்று வேறு பட்டியிருக்கிறாய். கூடா ஒழுக்கத்திற்கு உன்னை யாரும் தூண்டுவதில்லை. நீயே பிறர்க்கு ஊதியம் தருகிறாய்; நீ யாரிடமும் பெறுவதில்லை. இது வன்றோ உன் பண்பாடு!" (எசேக் 16:33-34)
நன்றியின்மை மற்றும் மோசமான உறவுகளை வளர்பதை எமது சமூதாயம் பிழையாக காணாது. ஏனெனில் இந்த மோசமான உறவுகள் வற்புருத்தல் இன்றி ஒருவர் ஒருவரின் சுயநலத்துக்காக வளக்கப்பட்ட உறவுகள். ஆனால் கர்த்தர் இருதயத்தை காண்பவர். இஸ்ரவேலைப் பற்றி கர்த்தர் கூறுகிறார், "வெட்கங்கெட்ட விலைமகளின் செயல்களையெல்லாம் உன் இதயத்தின் காமத்தால் செய்தாயன்றோ!" (எசேக் 16:30). பரிசுத்த ஆவியானவர் ஒரு காம இருதயத்தை குற்றம் ஏற்று மனந்திரும்பும் இடத்துக்கு கொண்டு வரக் கூடியவர். பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளை, மனந்திரும்பாத 'காம இதயத்திலிருந்து' பாதுகாக்கவும், கர்த்தரின் சித்தத்தை சாதிக்கக் கூடியவர். ஆகவே, இப்புத்தாண்டில் பயப்படாமல், "விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்; ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்." (நீதிமொழிகள் 4:23)
சகல வேத கூறிப்புகளும் திருவிவிலியத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
வேதாகமத்தை விளங்கி வெளிப்படுத்தல் (Bible Exposition) வழிமுறைகளை இப்பகுதில் உபயோகிப்போம்.
(1) வரலாற்று சூழல் (historic context)
500 கிமு ஆண்டிலிருந்தே கொரிந் ஒரு முக்கியமான கிரேக்க நகரமாக இருந்தது. இரு கிரேக்க பிரதேசங்களை இனைக்கும் 4 mile அகலமுள்ள நிலத்தில் கொரிந் நகரம் அமையும் (Isthmus). இலங்கையில் ஆனையிறவு (Elephant pass) ல் இவ்வாரான ஒரு மிகக் குறுகிய நிலத்தை காண்கிறோம். கொரிந் அமையும் குறுகிய நிலத்தின் ஒரு பக்கம் Ionian கடல், இக்கடலை கடந்து ரோம தலை நகரமான இத்தாலியை சென்றடையலாம். மற்ற பக்கம் Aegean கடல், இதை கடந்து ஆசியா மைனருக்கு சென்றடையலாம். ஆகவே பொருளாதாரத்திற்கு கொரிந் ஒரு முக்கியமான நகரமாக இருந்தது. இதுமற்றும் அல்ல, இந்நகரத்தில் அன்பு, அழகு, மற்றும் இன்பத்தின் தெய்வம் Aphrodite யை வணங்கும் கோவில் இருந்தது. இக்கோவிலில் ஆயிரத்துக்கு கூடிய மகளீர் தேவதாசிகளாக (கோவில் விபச்சாரிகள்) பணி ஆற்றினார்கள். அந்த கலாச்சாரத்தில் கோவில் விபச்சாரத்தை சமுதாயம் ஏற்றுக்கொண்டது ஆகவே இதில் அவர்கள் பிழை காணவில்லை. இதனால் கோவில் ஒரு பிரம்பலம் பெற்ற செளகரியமான கோவிலாக விளங்கிற்று.
கி.மு 146ல் ரோமர் கிரேக்க யுத்தத்தில் இந்நகரம் ரோமரால் முற்றாக சீரழிக்கப்பட்டு நகர மக்கள் அடிமைகளாக எடுத்துச்செல்லப்பட்டனர். ஆனால் மறுபடியும் கி.மு 44ல் ஜூலியஸ் சீசர் இந்நகரத்தை ஒரு ரோம நகரமாக கட்டி எழுப்பினார். பழைய கலாச்சார பழக்கங்களும் புதிய ரோம கலாச்சார பழக்கங்களும் கொரிந்திய கலாச்சாரமாக பவுலின் காலத்தில் காணக்கூடியதாக இருந்தது. அவற்றில் சில குறிப்பிடக்கூடிய சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கங்கள்:
(a) Aphrodite கோவில் விபச்சார தேவதாசிகளின் சேவைகளை பெற்றுக்கொள்ளல்.
b) Isis வழிபாடு, மற்றும் Mithras வழிபாடு - பக்தர்கள் மாயத்திற்கும் ஞான சிறப்பு வெளிப்படுத்தலுக்கும் முக்கியம் கொடுத்தனர்.
d) பிறனாட்டு தத்துவங்களையும் (Philosophies), புதிய சிந்தனைகளையும் அறிவதும், அதனால் தங்களை மற்றவர்களினின்று உயர்திக்கொள்ள, உயர்வர்கத்து மக்கள் விரும்பினர்.
e) சமுதாய பிரிவு பெரிதாக இருந்தது. சிலர், பலரை தம் சுயநலத்திற்காக தாழ்மையான சூழ்நிலைகளில் வைத்துக் கொண்டனர். பவுலின் காலத்தில், ஏறக்குறைய 200,000 பொது மக்களும், 500,000 அடிமைகளும் காணப்பட்டனர்.
f)பொது மக்கள் இடையில் தகராருகள் ஏற்பட்டபோது அவர்களில் யாரவது வழக்கு போட்டு நீதிபதி முன் சென்று நீதி பெற்றுக்கொள்ளலாம். இதை அவர்கள் சமுதாய முன்னேற்றமாக கருதினார்கள்.
(2) உரையின் சூழல் (textual context)
பவுல் இக்கடிதம் எழுதிய காலத்தில் (கி.பி.50) கொரிந்திய காலச்சாரத்தில் காணப்பட்ட சில பிழையான பழக்கங்கள் சபையிலும் பொறுத்துக்கொள்ளப்பட்டன: சமுதாய பிரிவுகள், ஞானத்துக்கு முக்கியம் அளித்தல், மர்மத்துக்கு முக்கியம் அளித்தல், சபை உள் விபசார நடத்தை, விக்கிரகங்களை வழிபடும் பழக்கங்கள். மற்றும் நீதி பெற்றுக்கொள்ள சுவிஷேச சத்தியத்திற்கு கீழ்படிந்து கிறீஸ்தவ மூப்பர்களுக்கு அடங்கி நடப்பதை விட, நீதிபதிகளிடம் சென்று நீதியை பெற்றுக் கொள்வதே ஒரு முன்னேறிய சமுதாயத்தின் வழிமுறையாக கருதினார்கள்.
பவுல் காலாச்சார பாவ பழக்கங்கள் சபையுள் நுழைந்த காரணத்தால் தாமதம் இல்லாமல் இந்த கடிதத்தை எழுதுகிறார். தான் நிச்சயமாக அங்கு போக இருந்தாலும் இக்கடிதத்தை எழுதுகிறார்(1 கொரிந்தியர் 16:5). இது முதலாவது கடிதமாக நாம் காண்கிறோம், ஆனாலும் இதற்கு முன்பும் ஒரு கடிதத்தை பவுல் எழுதியுள்ளார் (1 கொரிந்தியர் 5:9). இது ஒரு உட்சாகப்படுத்தும் கடிதம் அல்ல. இது ஒரு கண்டிக்கும் கடிதமும் ((I கொரிந்தியர் 3:1), மாற்றம் வலியுறுத்தும் கடிதமும் ((I கொரிந்தியர் 7:10-11, 27), கஷ்டமான முடிவுகளை ய் எடுக்கச் சொல்லும் கடிதமாகவும் காணப்படுகிறது((I கொரிந்தியர் 5:13).
(3) சூழல் மயமாக்கல் (contextualization)
வேதாகமத்தின் சத்தியத்தை சரியாக விளங்கி எமது வாழ்க்கை சூழ்நிலையில் பயன்படுத்த, சில வேத வாசிப்பு வழிமுறைகளை கையாள வேண்டும். இது ஆங்கிலத்தில் Expository Bible study என்று குறிப்பிடப்படும். இம்முறைகள்:
நாம் ஒரு வேதப் பகுதியை வாசித்து, உடனடியாக அந்த பகுதியை எம்மை பின்பற்றுகிறவர்களின் சூழ்நிலையில் உபயோகிக்க விரும்பலாம். அது அவர்களுக்கு உதவியாகவும் இருக்கலாம், அவர்கள் எம்மை பொற்றி பாராட்டி எம்மை கூடுதலாக பின்பற்றலாம். நேர கால கட்டுப்பாடுகளாலோ, சுயநல நோக்கத்துக்காகவோ, வேதாகமத்தின் சத்தியங்களை தவராக எடுத்துரைக்க வேண்டாம். உங்களை பின்பற்றுகிறவர்களின் ஆத்துமாக்களுக்கு, கணக்கு கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள் (எபிரெயர் 13:17). ஆகவே, மேல் குறிக்கப்பட்ட முறைகளை சரியான வரிசையில் நாம் கையாள வேண்டும். வேதாகமத்தின் சத்தியத்தை எடுத்துரைக்கும் போது, இந்த மூன்று முறைகளின் மூலம் எப்படி சத்தியத்தை விளங்கிக் கொண்டீர்கள் என்பதை எடுதுரைங்கள். இதில் வரும் பயன், உங்களை பின்பற்றுகிறவர்கள்:
(a) கிறிஸ்துவின் வார்த்தைக்கு முதலிடம் கொடுத்து, உலக கருத்துகளால் ஏமாறமாட்டார்கள். (அப்போஸ்தலர் 17:11)
(b) வேதத்தை எப்படி தாமாகவே வாசித்து விளங்கிக் கொள்ள கற்றுக்கொள்வார்கள். (அப்போஸ்தலர் 17:11)
(c) ஒருவரையொருவர் (உங்களையும்) சத்தியத்தில் உற்சாகப்படுத்தி, திருத்துவார்கள் -. (II தீமோத்தேயு 3:16-17)
“இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” சங்கீதம் 133:1
கொலோசெயருக்கு பவுல் எழுதிய கடிதத்தில் இந்த உண்மையைக் காண்கிறோம். மிகவும் வித்தியாசமான மற்றும் பொருந்தாத மக்களை, தம் நோக்கத்திற்காக நன்றாக ஒன்றிணைந்து செயல்பட இயேசு கொண்டுவருகிறார். இதில் நற்செய்தியின் வல்லமையைக் காண்கிறோம்.
வாழ்க்கைப் பயன்பாடு
வெவ்வேறு இன மற்றும் சமூகப் பின்னணியில் உள்ளவர்களை இயேசு தனது சகோதரர்களாகவும், தமக்காக ஒற்றுமையாகப் பணியாற்றவும் அழைக்கிறார்.
எங்கள் பிறந்த குடும்பம் மற்றும் சமூகத்தார் விசுவாசத்தில் முதிர்ச்சியடைந்து, சுவிசேஷத்தை உண்மையாகப் பற்றிக்கொள்ளும்போது, எமக்கு பலனாக இருப்பார்கள். சில நேரங்களில் இதை அனுபவிக்க நாம் ஜெபித்து காத்திருக்க வேண்டியதாக இருக்கலாம். சில சமயங்களில் அவர்கள் உலகை நேசித்து எமக்கு தீமைசெய்யலாம் (பவுல் கொலோசெயர் 4:14 இல் குறிப்பிட்ட தேமா (Demas) பின்னர் உலக ஆசைவைத்து பவுலை விட்டுப் பிரிகிறார் - 2 தீமோத்தேயு 4:10 ).
எனினும் நாம் தனியாக ஊழியம் செய்யக்கூடாது. நாம் மற்றவர்களுடன் ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும். உங்கள் சகோதரர்களை விசுவாசத்தில் வளர ஒவ்வொரு முயற்சியும் செய்யுங்கள், அவர்களை ஊழியத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள், அவர்களை தேற்றுங்கள்.
உலகத்துடனான ஐக்கியம் கிறிஸ்தவ அன்பின் ஆதாரம் என்று சாத்தான் நம்மை ஏமாற்றுவான். நீங்கள் இயேசுவின் உண்மையான சீஷர்களுடன் ஒற்றுமையாக செயல்பட்டு நற்செய்தியின் வல்லமைக்கு சாட்சியாக இருங்கள்.
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.” - யோவான் 13:35
எங்கள் குடும்பத்தார் 1984 இல் இலங்கையை விட்டு வெளியேறினர், இன வன்முறையைத் தொடர்ந்து, பல நடுத்தர வர்க்க தமிழ் பொதுமக்கள், அவர்களை தாய்நாடு பாதுகாக்காது என்று உணர்ந்து, நாட்டை விட்டு வெளியேறினர். ஒரு புதிய நிலத்தில் அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் பெற்றோம். பிறந்த மண்ணின் மீதுள்ள கரிசனை குன்றிப்போயிற்று.
2009 இல், இராணுவ தீர்வு பற்றிய செய்தி வெளிவந்தது, படுமோசமான நடவடிக்கைகள் பற்றிய செயதிகள் வெளிவந்தது. நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களை நாம் தனிப்பட்ட முறையில் அறியாவிட்டாலும், எமது தாய்நாட்டின் மீதும், மக்களின் மீதும் இரக்கமும் அன்பும் உண்டாயிற்று. சேர்ந்து ஒரு மனமாக ஜெபிக்க கிறிஸ்தவ தாய்நாட்டாரை தேடினோம். நெகேமியா அனுபவித்ததை நாங்கள் அனுபவித்தோம் (நெகேமியா 1:4-7), ஒற்றுமையுடன் ஜெபிக்க பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு பாரத்தை கொடுத்தார்.
நான் ஜெபித்தபோது, கர்த்தர் குறிப்பாக எனக்கு ஒரு வார்த்தையைக் 2009ல் கொடுத்தார். இதை நான் தீர்க்கதரிசனமாக ஏற்றுக்கொண்டேன். இவ்வார்த்தை இடம் பெயர்ந்த இஸ்ரவேல் மக்களுக்கு கூறப்படுகின்றது. "கர்த்தர் உன் துக்கத்தையும், உன் தத்தளிப்பையும், நீ அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும் அக்காலத்திலே,நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது:" (ஏசாயா 14:3-4a)
தொடர்ந்து வாசிக்கும்போது இவ்வார்த்தை மிகவும் பொருந்தமாக இருந்தது. மேலும் கர்த்தர் நம் தேசத்திலும் இதே நிலையைக் கண்டார் என்பதை உறுதிப்படுத்துவது போல் தோன்றியது, மேலும் அவருடைய நீதி வரப்போகிறது என்பதை கண்டேன்.
"உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து: இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து, உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள். ஜாதிகளுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள். நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் உடுப்பைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டாய். நீ அவர்களோடே அடக்கம்பண்ணப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை. அவன் புத்திரர் எழும்பி தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, உலகத்தைப் பட்டணங்களால் நிரப்பாதபடிக்கு, அவர்கள் பிதாக்களுடைய அக்கிரமத்தினிமித்தம் அவர்களைக் கொலைசெய்ய ஆயத்தம்பண்ணுங்கள்." (ஏசாயா 14:16-21)
சகோதரர்களே, நீங்கள் நீதிக்காக ஒற்றுமையாக நிற்கும்போது உண்மையாகவும் பொறுமையாகவும் இருங்கள். கர்த்தர் தம்முடைய திட்டங்களை விசுவாசிகளுக்கு வெளிப்படுத்துகிறார், அவருடைய நேரத்தில் நீதியை நிலைநாட்டுவார்.
யாக்கோபின் கடிதம் விசுவாசிகளுக்கு எழுதப்பட்ட கடிதம். விசுவாசிகள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது என்ன செய்ய வேண்டும்?
a) எமது சபை மூப்பர்களை ஜெபிக்க அழைக்க வேண்டும். சபை மூப்பர்களின் தலைமையை ஏற்று நடப்பது விசுவாசியின் அழைப்பு. (யாக்கோபு 5:14)
b) எமது சபையில் பொறுப்புக்கூறும் உறவுகள் இருக்க வேண்டும் - சீஷத்துவ உறவு. சிலவேளை, நோய் பாவத்தின் காரணமாக இருக்கலாம். அப்படியானால், பரிசுத்த ஆவியானவர் அதை விசவாசிக்கு உ ணர்த்தி, இயேசுவிற்கு மாத்திரம் அன்றி நாம் தப்பு செய்த சிலருக்கும் அறிக்கையிட ஏவலாம். இயேசுவின் இலவச மன்னிப்பை பெற்றுக்கொள்ள உண்மையான பாவ அறிக்கை முக்கியம் (யாக்கோபு 5:16). இந்த வசனத்தை நாம் தவராக விளங்கிக் கொள்ள வாய்ப்புண்டு: (i) பாவ அறிக்கையை ஒரு பழக்கமாக்கி, இயேசுவின் மன்னிப்பை சபை மூப்பர்களிடம் பெற்றுக்கொள்ள முயர்ச்சிக்களாம்; (ii) பாவம்தான் வியாதிக்கு காரணம் என்று சபை தலைவர்கள் தீர்மானித்து நோய் வாய்ப்பட்ட விசுவாசியை தண்டிக்கலாம்.
விசுவாசிகளும், தேவாலய மூப்பர்களும், விசுவாசத்துடன் ஜெபிக்கும்படி கேட்கப்படுகிறார்கள். கர்த்தரின் சித்தம் எமக்குத் தெரியாது. விசுவாசிகளின் ஜெபம் பிரகாரமாக வியாதிப்பட்ட விசுவாசியை கர்த்தர் இரட்சித்து எழுப்புவார் என்பது கர்த்தரின் சத்தியம் (யாக்கோபு 5:15). எம்மால் சிந்தித்துக்கூட பார்க்க முடியாததை கர்த்தரால் செய்ய முடியும் (யாக்கோபு 5:17-18).
நாம் விசுவாசத்துடன் ஜெபிக்கும்போது, சரீர குணமாக்கலோ மற்றும் / அல்லது ஆன்மீக குணமாக்கலோ, எமது உண்மையான தேவைபடியும், கர்த்தரின் சித்தம்படியும், கர்த்தரின் மகிமைபடியும் பலன் அடைவோம் (யாக்கோபு 5:15, 19-20). இந்த வாழ்க்கையின் சூழ்நிலைகளின் மூலம், தேவன் அவருடைய நித்திய இரட்சிப்பின்நோக்கத்தை அடைவார். ஆகவே, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் ஜெபிக்க அழைக்கப்பட்டுள்ளோம் (யாக்கோபு 5:13-14)
(1) தாவீதின் சூழ்நிலை
“நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள். அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேச விரும்புகிறார்கள்; தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள்." (சங்கீதம் 62: 3-4)
தாவீது பலரால் தாக்கப்படுகிறார். அவரை தாழ்த்துவதே அவர்களின் நோக்கம். அவர்களின் வெறுப்பு ஆழமானது, தாவீதை வீழ்த்த அர்த்தமற்ற பொய்களை பரப்புவார்கள். போலியான பேச்சும் நடத்தையும் அவர்களில் காணப்படுகிறது.
(2) தாவீதின் நடத்தை
“தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை." (சங்கீதம் 62: 1-2)
கர்த்தருக்காக காத்திருக்கும் கஷ்டத்தை தாவீது அனுபவித்தார். வசனங்கள் 5 மற்றும் 6 இல், தாவீது அவர் ஆத்துமாவுக்கு "கர்த்தருக்காக காத்திரு" என்ற சத்தியத்தை நினைவூட்டுகிறார். வசனம் 1 மற்றும் 5 இல் பயன்படுத்தப்பட்டுள்ள எபிரேய வார்த்தையின் அர்த்தம், கர்த்தருக்காக அமைதியாக காத்திருப்பதே. இதுபோன்ற தீங்குகளை எதிர்கொள்கிறீர்களா? இவ் சூழ்நிலையில் நாம் எப்படி அமைதியாக கர்த்தரில் காத்திருக்க முடியும்?
(i) அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றுங்கள் (சங்கீதம் 62:8)
நாம் அனுபவிக்கும் அநீதிகளை கர்த்தரிடன் கொண்டு வந்து ஊற்ற வேண்டும். பெரும்பாலும் நாம் எதிர்மாறாகச் செய்கிறோம், மற்றவர்களிடம் எம் இருதயத்தை ஊற்றுகிறோம். கர்த்தருக்கு எம் இருதயத்தின் நோவை எடுத்துரைப்பது தவராக காணலாம்.
(ii) கஷ்டத்தை மேற்கொல்ல உலக பலனை நாட வேண்டாம் (சங்கீதம் 62: 9-10)
மற்றவர்களின் பார்வையில் நம் நிலையை உயர்த்துவதன் மூலமோ எமது செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதன் மூலமோ எதிரிகளை மேற்கொள்ளும் முயர்ச்சியில் ஈடுபட வேண்டாம். உலக பதவியும் செல்வாக்கும் நிலைநிக்கும் காரியங்கள் அல்ல.
(iii) சத்தியத்தில் நிலைத்திருங்கள் (சங்கீதம் 62: 11-12)
கர்த்தருடைய வார்த்தை உறுதியானது மற்றும் மாறாதது. இது வேதத்தில் மீண்டும் மீண்டும் காணப்படுகிறது - “தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்." அநீதியில் ஈடுபடுவோர் வெற்றி பெற மாட்டார்கள், ஏனென்றால் வல்லமை தேவனுக்கு சொந்தமானது. தேவன் நீதி வழங்குவார், எம்மை வெறுப்பவர்கள் மனந்திரும்பினால் அவர் கிருபை காட்டுவார் இல்லாவிட்டால் அவர்கள் செய்கைகளின் பலனை பெற்றுக்கொள்வார்கள்.
"என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு"
இக்கடிதத்தை சபையில் இருப்பவர்களுக்கு யாக்கோபு எழுதுகிறார். ஏனெனில் சிலர் உலக ஞானத்தில் நடக்கிறார்கள், மற்றும் சிலர் பரம ஞானத்தால் நடக்கிறார்கள். யாக்கோபு இந்த இரு ஞானங்களை வேறுபடுத்தி, நாம் எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை நமக்கு அறிவுறுத்துகிறார்.
(1) உலக ஞானம்
உலக ஞானம் சபையில் காணப்படலாம் மற்றும் போற்றப்படலாம். வசனங்கள் 14, 16 ல் வைராக்கியம் மற்றும் விரோதம் என்று மொழி பெயர்க்கப்படும் கிரேக்க சொற்கள், நாம் வைராக்கியத்துடன் எம் சுயநலத்தை நாடும் அர்தமாகும். எம் சுயநலமத்தில் நாம் வைராக்கியமாய் இருப்பது ஒரு தப்பான காரியமாக உலகம் காணது. பெரும்பாலும் தங்கள் சுயநலத்தில் ஆர்வமுள்ளவர்கள், மிகவும் நல்லவர்களாகவும், உலகத்தால் மதிக்கப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இது உலகின் சிந்தனையுடன் பொருந்தும்.
உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள் - யாக்கோபு 3:14.
உலக ஞானிகள் தங்களைப் பெருமை பாராட்டிக் கொள்வார்கள். அவர்கள் மற்றவர்களைப் பாராட்ட மாட்டார்கள் அல்லது மற்றவர்கள் அவர்களுக்கு எப்படி உதவினார்கள் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உலக அறிவில் உண்மையை மறைத்து நடப்பார்கள், பொய்கார்ர்களாக காணப்பட மாட்டார்கள்,. சுயநலத்தை அடைவதற்கான வைராக்கியத்தில் இவர்கள் கலகமும் சகல துர்ச்செய்கைகளையும் நியாயப்படுத்துவார்கள், ஏனெனில் அது ‘லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.’ (யாக்கோபு 3:15-16)
(2) பரம ஞானம்
பரம ஞானம் இவ்வுலக ஞானம் அல்ல. பரம ஞானம் உலகின் சிந்தனையுடனும், உலக வழிகளுடனும் பொருந்தாது. பூமியின் ஞானிகளுக்கு இது அர்த்தமற்றதாக தோன்றும்.
உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். - யாக்கோபு 3:13.
சாந்தத்துடன் நல்ல நடத்தை யாணோரை உலகத்தார் துஷ்பிரயோகம் செய்வார்கள். மேலும் உலக மக்கள் ஒன்றுசேர்ந்து அவர்களை தூஷிக்களாம் (1 பேதுரு 4:4). ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் பரம ஞானத்தில் நிலைத்திருக்க அழைக்கப்படுகிரார்கள். பரம ஞானத்தின் நடை, "சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது." (யாக்கோபு 3:17). இவை இயற்கையாக நம்மிடம் இருக்கும் குணம் அல்ல. உலகம் எம் மனித சுபாவத்தை குற்றம் சாட்டி கேலி செய்யும் போது, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர் பாரபட்சமின்றி விடாமுயற்சியுடன் இரக்கம் காட்டுவார்கள்.
நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது. - யாக்கோபு 3:18. கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே சாமாதானத்தை விதைத்து அறுவடை செய்வார்கள். தேவனுடன் சமாதானமும், அவர்களுடைய இருதயத்தில் சமாதானமும் காணப்படும். இந்த பூமியின் ஞானத்தில் நடப்பவர்கள் இந்த சாமாதானத்தை அனுபவிக்க மாட்டார்கள், மாறாக அவர்கள் தவறான செயல்களால் கலகத்தை விதைப்பார்கள் (யாக்கோபு 3:16). அவர்கள் உலகத்தாருடன் ஒரு மனமாக செயல்படுவதால் அதை சமாதான ஐக்கியம் என்று நியாயப்படுத்துவார்கள்.
"ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்" - கலாத்தியர் 5: 1
கலாத்தியர் 5 -ஐ முழுதாக வாசித்து, சந்தர்ப்பத்தை பார்த்து பகுதியை விளங்கிக்கொள்வோம்.
பவுல் இரண்டு வித அடிமைத்தனத்தை இப்பகுதியில் விவரிக்கிறார்.
முதலாவது, மத தலைவர்கள் எம்மை உட்படுத்தும் அடிமைத்தனம். கட்டளைகள், சட்டங்கள், மரபுகளால் செயல்படுத்தப்படும் அடிமைத்தனம். நாம் விரும்பி இந்த அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்கிறோம் ஏனெனில் இது எமக்கு நீதிமானாக உணர்வு பெற உதவுகின்றது (கலாத்தியர் 5: 2-12).
இரண்டாவது, எமது சுய நலத்தை நாடும் அடிமைத்தனம். மற்றவர்களை உண்மையாக நேசிக்க மாட்டோம் (கலாத்தியர் 5: 13-15), ஆனால் நற் செயல்கள் மூலம் எம்மை நியாயப்படுத்திக்கொள்ள முயலுவோம்.
எங்கள் இதயங்களை நாம் ஆராய பவுல் சவால் தருகிறார்:
"கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: 'உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.'" - யோபு 42: 7
யோபுவின் மேல் அன்பு கூரிய மூன்று நண்பர்கள் மேல் கர்த்தரின் கோபம் எரிகிறது. இவர்கள் யோபுவின் துன்பத்தைப் பற்றி கேள்விப்பட்டபோது, தங்கள் ஊர்களை விட்டு பிரயானம் செய்து யோபுவுடன் இருக்க வந்தவர்கள் (யோபு 2: 11-13).
யோபு சொர்வடைந்து பேசும் வார்த்தைகளை அவர்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில், அவர்கள் யோபுவை ஊக்குவித்தனர், ஆனால் யோபு தொடர்ந்து தன்னை கண்டித்து பேசும் பொழுது, நண்பர்கள் கர்த்தரின் சார்பாக பேசினார்கள். கர்த்தருடன் யோபுவை ஒப்புரவாக்கும் நல்ல நோக்கம் அவர்களுக்கு இருந்தது. இதை அடைவதற்கு, அவர்கள் உண்மையை சற்று பிழையாக வர்ணித்தனர் மற்றும் அவர்களின் அறியாமையை ஒப்புக் கொள்ளவில்லை. எனவே கர்த்தர் கூறுகிறார், "என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை."
ஒப்புரவாக்கல் ஒரு உன்னத நோக்கம். இதன் உச்ச நிறைவேற்றலை மனிதரை கர்த்தருடன் ஒப்புரவாக்கலில் காண்கிறோம். இப்பணியை நாம் பயம் மற்றும் நடுக்க உணர்வுடன் அணுக வேண்டும் (எபிரேயர் 13:17). பிரிவுபட்ட மக்களிடையில் நாம் ஈடுபடும் ஒவ்வொரு முயற்சியும் இந்தச் அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.
சமீப காலங்களில், "உண்மை மற்றும் ஒப்புரவாக்கல்" இன சமூகங்களுக்கிடையில் சமாதானம் அடைய ஒரே வழி என ஒப்புக்கொள்ளப்படுகிறது. சமாதானத்தில் முன்னேறுவதே நோக்கமாகிறது. உண்மை தேவை என்பதை உலகோர் உணர்ந்தாலும், சமாதான நோக்கத்தை அடைய உண்மையை சற்று மறைத்து, முழு உண்மையை கண்டறியும் வழிகளை மேற்கொள்ளாமல் இருக்கலாம். நோக்கம் உண்மையை மீறக்கூடாது.
"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்" (யோவான் 8:32). உண்மை மனந்திரும்புதலுக்கும் மன்னிப்புக்கும் வழிவகுக்கிறது. மனந்திரும்புதலில் மூன்று காரியங்களை காண்கிறோம்: (1) பிழையை ஒப்புக்கொள்வது; (2) பிழையால் வந்த விளைவுகளுக்காக உணர்ந்து வருத்தப்படுவது; மற்றும், (3) பிழையை சீர்படுத்தும் நடபடிக்கைகளை எடுப்பது. தங்களுக்கு நேர்ந்த தவறை ஏற்கெனவே மன்னித்து, உறவுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஒருவரால் மட்டுமே மனந்திரும்புகிரவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். உண்மை இல்லாமல், மனந்திரும்புதல் மற்றும் மன்னிப்பு மூலம் வரும் ஒப்புரவை நாம் காண மாட்டோம்.
யோபு பணிவுடன் கர்த்தர் வார்த்தைக்கு செவிசாய்த்தார். அவருடைய கஷ்ட சூழ்நிலையின் மூலம் உண்மைகளை கற்றுக்கொண்டு மனந்திரும்பினார் (யோபு 42: 1-6). யோபின் நண்பர்கள் யோபை கர்த்தருடன் ஒப்புரவாக்க விரும்பினார்கள், ஆனால் ஒப்புரவு அடைய வேண்டியோர் அவர்களே. நண்பர்களுக்காக வேண்டிக் கொள்ள கர்த்தர் யோபுவை நியமிக்கிறார் (போபு 42: 8-9). பெரும்பாலும் துன்பத்தின் மூலம் தான், நாம் ஒப்புரவு ஊழியத்திற்கு தகுதியான பாத்திரங்களாகிறோம் (2 கொரி 5: 11-21).
ஆண்டவரே, நான் ஒப்புரவாக்கல் ஊழியத்தில் ஈடுபட என்னை தாழ்மையான மனம் திரும்பும் சுபாவத்தில் வழிநடத்தும்.
கிறிஸ்துவில் தேறினவர்கள் தங்கள் பூலோக வாழ்க்கையை ஒரே குறிக்கொளுடன் வாழ அழைக்கப்படுகிறார்கள், "மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல்!" (வசனம் 11). அவர்கள் முற்றும் தேறினவர்கள் அல்ல, ஆனாலும் கிறிஸ்து தங்களை பிடித்துக் கொண்டார் என்பதை தாழ்ம்மையுடன் அறிக்கை செய்வார்கள் (வசனம் 12). அவர்கள்: (i) பின்னானவைகளை மறந்து, அதனால் கண்டிக்கப்படார் (வசனம் 13); (ii) ஏற்கனவே எவ்வளவு தேறி இருக்கிறார்கள் என்று அறிந்து, உலகோரால் கண்டிக்கப்படார் (வசனம் 14-16); மற்றும் (iii) நல்ல முன்மாதிரிகளாக தேறிய விசுவாசிகளைப் பின்பற்றுவார்கள் (வசனம் 17) .
சபைகளிலும் கிறிஸ்துவின் சிலுவையின் எதிரிகளாக நடக்கும் பலரை, காணளாம். அவர்களை எவ்வாறு அடையாளம் காணுவது (வசனம் 17-19):
(1) அவர்களின் தேவன் வயிறு
அவர்கள் சாப்பிடுவதற்காக வாழ்கிறார்கள், ஆகவே தங்கள் வயிற்றை நிரப்ப தவறான காரியங்களை செய்வார்கள். உதாரணமாக, மற்றவர்களிடமிருந்து சாப்பாடு பெற அவர்கள் அப்பாவிகளாக நடிக்கிறார்கள். உண்மையான தேவை இல்லை, சாப்பாட்டை நன்றியில்லாமல் பெற்றுக்கொண்டு மனசாட்சியில்லாமல் வீனாக்குவார்கள்.
(2) வெட்கப்பட வேண்டிய காரியத்தில் மகிமை படுவார்கள்
அவர்களின் மனசாட்சி வெட்கக்கேடான செயல்களால் பாதிக்கப்படுவதில்லை, மாறாக அவர்கள் சதித்திட்டங்களில் பெருமைப்படுவார்கள். விசுவாசிகளின் வீழ்ச்சியில் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
(3) பூமிக்குரிய காரியங்களை விரும்புவார்கள்
அவர்கள் உடைமைகளை நாடுகிறார்கள். இந்த உடைமைகளில் தங்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள்.
கிறிஸ்துவின் வல்லமையால் "மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாக" இவவுளகில் பாடுகளை அனுபவிங்கள் (வசனங்கள் 10, 21).
ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். "(சங்கீதம் 73:23)
கர்த்தரின் வார்த்தையின் சத்தியத்தில், நாம் துன்ப சூழ்நிலையிலும் சாட்சியாக வாழ வேண்டும் (சங்கீதம் 73: 21-22). எம்மை சரியாக வழிநடத்த நாம் வேதத்தை அறிந்து உணர வேண்டும். நாம் தேவனுடைய பரிசுத்த ஸ்தலம் (1 கொரிந்தியர் 3:16), தேவ ஆவி எம் இருதயத்தின் கண்களை திறக்க வேண்டும் (சங்கீதம் 73: 16-17).
சங்கீதக்காரன், "ஆனாலும்" என்று சொல்வது ஏன்? சங்கீதக்காரர் எச்சரிக்கை எழுப்புகிறார், “இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்”(சங்கீதம் 73:12). சங்கீதக்காரர் கிறிஸ்தவர்களை எச்சரிக்கிறார், தள்ளாடாமல் இருங்கள் (சங்கீதம் 73: 2-3), ஏனென்றால்:
(1) தீயவர்களின் வாழ்க்கை எம்மை கவரலாம் (சங்கீதம் 73: 3-6)
பூமியில் செழிப்புப்பான வாழ்க்கையை கண்டு அதை நாம் விரும்பலாம். நல்வாழ்வு துன்மார்க்கத்தை மறைக்கலாம்.
(2) தீயவர்களின் செயல்கள் எம்மை உள் இழுக்கலாம் (சங்கீதம் 73: 6-8)
தீயவர்களின் செயல்கள் தன்னம்பிக்கையால் தூண்டப்படுகின்றன. சங்கீதக்காரர் இவர்களை வீம்புக்காரர் மற்றும் இறுமாப்புள்ளோர் என்கிறார். மற்றவர்களை வீழ்த்த அவர்கள் தவறான செயல்களை செய்கிறார்கள் (சங்கீதம் 73: 6-7). சீர்க்கெட்டுப் போய் பேச்சினால் மற்றவர்களை அவர்கள் திட்டத்திற்குள் இழுப்பார்கள் (சங்கீதம் 73: 8).
(3) தீயவர்களின் எம்மை சுவிசேத்தின் நற்செய்தியில் இருந்து விலக வைக்கலாம் (சங்கீதம் 73: 9-11)
துன்மார்க்கர் மக்களை தங்களை நோக்கி இழுப்பார்கள். அவர்கள் தேவனின் சித்தத்தை அறிந்திருப்பதாகக் கூறுவார்கள். பலர் அவர்களைப் பின்பற்றுவார்கள். அவர்கள் வேத வார்த்தைக்கு அடிபணியாமல், வேத வார்த்தைக்கு மேல் தங்களை உயர்த்திக் கொள்ளும் பொய்யான தீர்க்கதரிசிகள்.
ஆனாலும், நீங்கலோ விசுவாசத்தில் நிலைத்திருங்கள். ஏனென்றால் கர்த்தரே உங்கள் பலன். பூமியில் எமக்கு நீதி கிடைக்காமல் போகலாம், ஆனால் விசுவாசிகளுக்கு பரலோகத்தில் ஆதரவு உண்டு (சங்கீதம் 73:25). நாம் பூமியில் ஏழையாகவும் ஆதரவற்றவர்களாகவும் இருக்கலாம், ஆனால் நித்தியத்தில் நமக்கு மகிமை நிச்சயம் (சங்கீதம் 73:24). எங்களுடைய பேச்சை அசட்டை செய்வோருக்கு எமது விசுவாச வாழ்கை சாட்சியாக இருக்கும். (சங்கீதம் 73:15, 27-28).
கிறிஸ்து அவரது சீஷர்களான எம்மை வெற்றி ஊர்வலத்தில் நடத்துகிறார். எமது பேச்சு, எழுத்து, மற்றும் செயல்களை ஒரு நறுமணமான வாசனையாக ஆக்குகிறார். தனது பேச்சு, கடிதங்கள், மற்றும் செயல்கள், கிறிஸ்துவின் அறிவை யாவருக்கும் வெளிப்படுத்தும் என்பதை அப்போஸ்தலர் பவுல் உணர்ந்தார். (2 கொரிந்தியர் 2:14)
கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களின் வாசனை இருகாரியங்களை சாதிக்கும்: (a) மனந்திரும்பாமல் நடப்பவர்களை கண்டிக்கும், "மரண வாசனை"; அல்லது (b) மனந்திரும்பி நடப்பவர்களுக்கு, உறுதி நிச்சயமான "ஜீவவாசனை". (2 கொரிந்தியர் 2: 15-16)
சத்தியத்துக்கு கீழ்ப்படியும் சீஷர்களின் பேச்சு மற்றும் செயல்பாடுகளினால் இயேசுவின் வாசனை பரம்பும். (2 கொரிந்தியர் 2:17)
அப்போஸ்தலர் பவுலின் வாழ்க்கை உதாரணத்தை பார்ப்போம். பவுலுக்கும் கொரிந்திய சபை நபர்களுக்கும் இடையிலான உறவில் மூன்று குறிப்பிடத்தக்க காரியங்கள்: பொறுப்புக்கூறல்; அன்பு; மற்றும் மன்னிப்பு.
(1) பொறுப்புக்கூறல்: சபையில் தீயவர்கள் இருப்பதை அப்போஸ்தலர் பவுல் மறுதலிக்கவில்லை. அது மாத்திரமல்ல, தீயவர்களின் தீமையை சுட்டிக்காட்டி பொறுப்புக்கூறினார். இந்த மிகவும் தீவிர உதாரணத்தில், தீய நபரை சபை ஐக்கியத்திலிருந்து புறம்பாக்கவும் சொல்கிறார் (1 கொரி 5: 9-13). இன்று நமது சபைளில் இந்த மாதிரி பொறுப்புக்கூறலை நாம் காண்பது அரிது. சபையில் உள்ள அனைவரும் பொதுவாக நல்லவர்கள் என்று நாம் நம்புகிறோம். தவறுகளை பொறுத்துக்கொள்ள, அன்பு மற்றும் மன்னிப்பு என்னும் வார்த்தைகளுக்கு தவரான அர்தம் திரிக்கிறோம். இது தவறு. இப்படியான நடைமுறை கிறிஸ்துவின் வாசனையை வெளிப்படுத்தாது.
(2) அன்பு: பவுலின் செயல்கள் அன்பினால் தூண்டப்பட்டன. பொறுப்புக்கூறல் பவுலுக்கு துக்கமேற்படுத்தும் ஒரு வேதனையான செயல். ஆனால் தீய நபர் மீதான அன்பின் காரணமாக பவுல் இந்த துக்கத்தை ஏற்றுக்கொண்டார். சத்தியத்தில் பொறுப்புக்கூறல் மட்டுமே தீய நபர் மனந்திரும்ப வழிவகுத்து, உண்மையான மகிழ்ச்சியைத் தரும் என்பதை பவுல் உணர்ந்தார். (2 கொரிந்தியர் 2: 1-4)
(3) மன்னிப்பு: பவுலின் செயல்கள் தீய நபர் மீதான அன்பால் தூண்டப்படுகின்றது. ஆகவே, பொறுப்புக்கூறலால் வரும் துக்கத்திற்கு உறவு கொண்டு ஆறுதல் அளிக்க பவுல் விரும்புகிறார். பவுலின் உள்ளத்தில் கோபமோ கசப்போ இல்லை. கிறிஸ்தவ ஐக்கியம் மீண்டும் நிலை பெற மன்னிப்பு அவசியம். பாவத்தின் காரணமாக உடைந்துபோன ஐக்கியத்தை மனந்திரும்புதலின் மூலம் மட்டுமே மீட்டெடுக்க முடியும் (2 கொரி 2: 2, 5). பொறுப்புக்கூறப்பட்டவர்கள் எமது நடத்தையால் இறுமாப்பு அடைந்து மனம் திரும்பாமல் பொவதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. ஆனாலும், மனந்திரும்புதல் இல்லாமல், தீய நபர் மன்னிப்பை அனுபவிக்க மாட்டார் என்பதையும் நாம் அறிய வேண்டும். தீய நபர் பேச்சில் நன்றாக பேசினாலும், மனம் திரும்பாவிட்டால் அவர் செயல்கள் இறுமாப்பிலிருந்து விளையும் தீய செயல்களாக காணப்படும். (1 கொரி 4: 18-19)
கர்தாவே, நான் தீயவர்களுக்கு பொறுப்புக்கூறலால் வரும் வேதனையையும் துக்கத்தையும் சகித்து, பேச்சிலும் செயலிலும் கிறிஸ்துவின் வாசனையாக இருக்க என்னை சத்தியத்தில் வழிநடத்தும். இயேசுவே உமது தூய அன்பிலும் உண்மையான மன்னிப்பான உள்ளத்திலும் என்னை செம்மைப்படுத்தும். என் உள்ளம் இறுமாப்படையாமல், தாழ்மையுடன் என் வாழ்வில் உள்ள தீங்குகளை உணர்ந்து மனம் திரும்ப என்னை வழிநடத்தும்.
இயேசு தனது சீஷர்களை அனுப்புகிறார். நாமும் அவருடைய சீஷர் கள், அவர் எம்மையும் அப்படியே அனுப்புகிறார். அனுப்புவதற்கு முன், இயேசு தனது சீஷர்களுக்கு அதிகாரம் அளிக்கிறார்(மத்தேயு 10: 1). இயேசுவின் சீஷர்கள் மட்டுமே இயேசுவால் அனுப்பப்பட்டனர். இயேசுவின் சீஷர்கள் தங்கள் பாவங்களை அறிக்கை செய்து மனந்திரும்பி இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தவர்கள். சீஷர்கள் மாத்திரமே இயேசுவின் அதிகாரத்தை பெற முடியும். பலர் நல்ல மற்றும் பயனுள்ள விஷயங்களை செய்ய முடியும், ஆனால் இயேசுவின் சீஷர்களால் மட்டுமே நித்தியத்திற்கு பயனுள்ள விஷயங்களை செய்ய முடியும்.
இயேசுவின் சீஷர்கள் இரண்டு காரியங்களைச் செய்ய அனுப்பப்படுகிறார்கள். முதல், இயேசுவின் நித்திய ராஜ்யத்தைப் பற்றிய உண்மையை அறிவிக்க அனுப்பப்படுகிறார்கள் (மத்தேயு 10: 7). இரண்டு, இயேசுவின் சக்தியால், அடிமைத்தனத்தில் தவிக்கும் மக்களுக்கு சுதந்திரம் அளிக்கிறார்கள் (மத்தேயு 10: 8).
கீழ்படியும் சீஷர்கள் துன்புறுத்தப்படுவார்கள் (மத்தேயு 10: 16-24). மக்கள் அவர்களைப் பற்றி பொய் பேசுவார்கள், பொய் சாட்சி கொடுப்பார்கள். பயப்படுவதற்கு காரணம் இருக்கும், ஆனால் பயப்பட வேண்டாம் என்று இயேசு சொல்கிறார். ஏனென்றால் உண்மையை இயேசு, சரியான நேரத்தில் சரியான முறையில், வெளிப்படுத்தவார் (மத்தேயு 10: 26-31).
சீஷர்கள் சகல துன்பங்களையும் ஏன் சகித்து சேவிக்க அனுப்பப்படுகிறார்கள்? ஏனேன்றால் இயேசு மட்டுமே நமது இரட்சிப்பு, இந்த விசுவாசம் சீஷர்களை ஏவுகிறது, ஒவ்வொரு நபரும் இயேசுவில் விசுவாசம் வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்(மத்தேயு 10: 32-33). இயேசுவில் விசுவாசத்தின் நித்திய பலனை அறிந்தோர், உலகஷ்டங்களை அனுபவித்து நிலை நிப்பார்கள். சீஷர்களை ஆசிர்வதிப்போர் நித்திய ஆசிர்வாதங்களை பெறுவார்கள் (மத்தேயு 10: 40-42).
சீஷனின் ஜெயம்
ஆண்டவரே, ஒரு உண்மையான சீடனாக என் சொந்த குடும்பத்திலும் சமூகத்திலும் நிலைத்திருக்க எனக்கு உதவும் (மத்தேயு 10: 6). ஓநாய்களின் தாக்கலில் இருந்தும் (மத்தேயு 10:16), பொய் சாட்சி கொடுத்து என்னை வீழ்த்த முயற்ச்சிப்போரில் இருந்தும் (மத்தேயு 10:28) என்னை காப்பாற்றும். உம் உறுதியான அன்பிலும் உண்மையிலும் நான் ஓய்வெடுக்கிறேன். "என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.." - நெகேமியா 13: 31
நெகேமியா எருசலேமிலிருந்து செய்தி பெற்று மக்களுடன் முழுமையாக உடன் அடையாளம் செய்கிறார். இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, ஏனெனில் நெகேமியா பாபிலோனில் உயர் பதவியை வகிக்கிறார் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் வாழ்கிறார். தேவ சித்தத்தை மக்களுக்கு நிறைவேற்ற பரிசுத்த ஆவியானவர் நெகேமியாவை வழிநடத்துகிறார். பரிசுத்த ஆவியின் வழிநடத்தல் இன் குறிப்புகள்:
பரிசுத்த ஆவியின் வழிநடத்தலால் நெகேமியா எருசலேம் மக்களுடன் உடன் அடையாளம் காணக்கூடியவராக இருக்கிறார். இது போலித்தனமாக காணப்டலாம். ஆனால் நெகேமியாவின் உடன் அடையாளம் மிகவும் உண்மையானது. அவர் அழுது துக்கித்து, தேவனிடம் உபவாசத்துடனும் ஜெபத்துடனும் வருகிறார். பரிசுத்த அவியானவர் எம்மை எமது சுய வலிமையில் பிரச்சனையை தீர்க்க வழிநடத்த மாட்டார், அவர் எம்மை தேவனிடம் முதல் கொண்டு வருவார்.
பரிசுத்த ஆவி எம்மை பாவ அறிக்கையில் வழிநடத்துவார். அவதானியுங்கள், நெகேமியா தன்னை புறம்பாக்கி மக்களின் சார்பாக பாவ அறிக்கை செய்யவில்லை. வேத சத்தியத்தை உணர்ந்து, தேவநீதியை ஒப்புக் கொண்டு, நெகேமியா பாவ அறிக்கை செய்கிறார்.
உடன் அடைவாளமூடாகவும், பாவ அறிக்கை மூலமும் பரிசுத்த ஆவி நெகேமியாவை மக்கள் சார்பாக வேண்டுதல் செய்யக்கூடிய வராக்குகிறார். பரலோகத்தில் கிறஸ்து இதை சதாகாலமும் செய்கிறார் (எபிரேயர் 7:25). பூலோகத்தில் கிறிஸ்துவின் சீஷர்களை தேவ சித்தத்தில் பங்குபெற பரிசுத்த ஆவி வழிநடத்துகிறார்.
தேவ சித்தத்தில் நடப்பது ஜெபத்துடன் முடிவதில்லை. பரிசுத்த ஆவி நெகேமியாவை செயல்பாட்டில் வழிநடத்துவதை நெகேமியா புத்தகத்தில் காண்கிறோம். இது ஒரு கஷ்டமான அழைப்பு. நெகேமியா அவருடைய உலகப் பிரகாரமான பதவியையும், பாதுகாப்பையும், செளரீகத்தையும் கைவிடுகிறார். தேவ சித்தத்தில் நடக்க முடிவெடுத்த நெகேமியா, "என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்" என்ற வார்த்தைகளால் தனது புத்தகத்தை முடிக்கிகிறார்.
யாருக்காக உங்கள் உள்ளம் பாரமாக இருக்கிறது? உங்கள் பாரத்தை கிறிஸ்துவிடம் கொண்டு வந்து, பரிசுத்த ஆவியானவர் உங்களை உடன் அடையாளம், பாவ அறிக்கை, ஜெபம், செயல்பாட்டில் அவர்களுக்காக உங்களை வழிநடத்துவார். நாம் பாரமாக இருப்போருக்கு இரக்கம் காட்டவும், அவர்களின் மீட்புக்காக இடைவெளியில் நிற்கவும், தேவன் எம்மை பயன்படுத்த அற்பணிப்போம்.
இறைவா! எங்கள் மனித இயல்பு செய்ய விரும்பாததை செய்ய உங்கள் ஆவியால் எங்களை உதவும்.
கோவிட்-19 நிலவரத்தால் சில இடங்களில் தேவைகள் மிகுதியாகிவுள்ளது. இந்த தேவைகளை பூர்த்தி செய்ய இயேசு அவருடைய விசுவாசிகளை எழுப்புவார். தேவைகளை பூர்த்தி செய்ய சமுதாயம் சந்தர்ப்பத்தை கைப்பெற்றும். ஆனாலும், பொறுப்புடன் உதவுவதற்கு இயேசு அவருடைய விசுவாசிகளை சீஷத்துவத்தில் வழிநடத்துவார். சபை செய்ய வேண்டிய காரியத்தை கிறிஸ்தவ பொறுப்பின்றி சமுதாவ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்(NGOs) செய்கின்றன.
ஒருவரை ஒருவர் அறியாத விசுவாசிகளை கர்த்தர் அவருடைய மகிமைக்கு ஒன்றினைப்பார். நாம் பொறுப்புடன் உதவும் முறையை 2 கொரிந்தியர் 8 ம் அதிகாரத்தில் காண்கிறோம்.
அப்போஸ்தலர் பவுலின் குறிப்பு, “கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.” - 2 கொரிந்தியர் 8:21
தேவ வார்த்தையை புரிந்து கொள்ள நாம் அறிஞர்களாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை, சிறு குழந்தைகளைப் போல தாழ்மையுள்ளவன் கண்களை பரிசுத்த ஆவியானவர் திறப்பார் (மத்தேயு 11:25).
பழைய ஏற்பாடு பெரும்பாலும் எபிரேய மொழியில் எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு பெரும்பாலும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. ஆதலால் தமிழ் மொழிபெயர்பிலிருந்து உண்மையான அர்த்தத்தை விளங்கிக் கொள்வது சில சமயங்களில் கடினமாக இருக்கும்.
ஆகவே, தேவ வார்த்தையை ஜெபத்துடன் பணிவுடனும் திறக்கவும். வேத வார்த்தையை புரிந்து கீழ்படிந்து வாழ நாம் மற்ற கிறிஸ்தவர்களுடன் ஒன்று கூடி உரையாடும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். (I கொரிந்தியர் 14:26; எபிரேயர் 10:25; அப்போஸ்தலர் 17:11)
உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வது நமது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் பார்ப்போம்.
பரிசுத்த வேதாகமத்தில் புலம்பல் 3.22 கூறுவது, “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.”
ஆனால் நாம் எபிரேய வார்த்தையை நேரடியாக மொழி பெயர்த்தால் கிடைப்பது," தேவனின் கருணையால் அழிந்து போகாமல் இருக்கிறோம் ஏனேனில் அவர் (ஆழமான மென்மையான சகோதர) இரக்கத்தில் எம்மை கைவிடாமல் இருக்கிறார்.”
கடந்த காலத்தில் நாம் பெற்றுக்கொண்ட இரக்கத்தை நினைவு கூறவும், தினமும் நாம் அனுபவிக்கும் இரக்கத்திற்கு ஸ்தோத்திரம் உள்ளவர்களாக இருக்கவும் அழைக்கிறது. (புலம்பல் 3:19-23)
கிருபை என்னும் வார்த்தையை இப்பகுதியில் நாம் காணவில்லை. ஆனால், புலம்பல் 3:26 கூறுகிறது, “கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.” எபிரேய வார்த்தையும் அப்படியே கூறுகிறது.
தேவ இரக்கத்தால் நாம் நியாயமாக அடைய வேண்டிய விளைவை அடையாமல் நல்விளைவுகளை பெற்றுக்கொள்கிறோம். தேவ கிருபையால் நாம் எதிர்பார்க்கக் கூடாத நித்திய சலாக்கங்களை பெற்றுக்கொள்கிறோம்.
கிருபை பெற்றவர்கள் இயேசுவுக்கு அவர்களுடைய பூலோக வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்வார்கள் (புதிய ஏற்பாடு விசுவாசிகள்). இரக்க எதிர்பார்ப்பில் வாழ்வோர் அடுத்த அற்புதத்தின் எதிர்பார்ப்பில் வாழ்கிறார்கள் (பழைய ஏற்பாடு விசுவாசிகள்). கிருபையின் ஸ்தோத்திரத்தில் வாழ்வோர் தேவ சத்தியத்தில் நிலை நின்று நீண்ட பொறுமையுடன் கஷ்டங்களை சகிப்பார்கள்.
நான் புதிய ஏற்பாடு விசுவாசியா?
இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள். - ஏசாயா 9:2-3
மகிழ்ச்சி, புகழ் அல்லது அதிர்ஷ்டத்தின் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. மகிழ்ச்சியின் அடிப்படை வேத வார்த்தை, வேத வார்த்தையின் வெளிச்சத்தில் நாம் நடப்பதே மகிழ்ச்சி. ஏசாயா தீர்க்கதரிசனம் கூறியது போல, கிறிஸ்துவின் மூலம், வெளிச்சம் உலகிற்கு வந்துவிட்டது. அந்த ஒளி என் வாழ்வில் காணப்படுகிறதா?
மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர். - ஏசாயா 9:4
உலகம் நமது நல்வாழ்வுக்கு வழி அமைக்கிறது. தேவாலயத்திற்குள் கூட அது செழிப்பு சுவிசேஷங்களுக்கும், நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்ட ஆலோசனைகளுக்கும் வழிவகுத்துள்ளது. மக்கள் தங்கள் நல்வாழ்வையும், இன்பத்தையும் தேடுகிறார்கள். விசுவாசத்துடன் வேத வார்த்தையை கீழ்ப்படிகிறவர்கள் சோர்ந்து போய் மனிதத்தன்மையில் தவறும் போது அவர்களை நாம் தாக்காமல் உற்சாகப்படுத்த வேண்டும். நாம் நிலைநிக்க வேத வார்த்தை உறுதியளிக்கிறது, "அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும். ” ஏசாயா 9: 5
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும். - ஏசாயா 9:6-7
நல் உறவு விளைவை அடைய தலைவர்கள் நியாயத்தையும் நீதியையும் தவிர்க்கலாம். வேத வார்த்தை இந்த அநியாய உலகில் விடாமுயற்சியுடன், தேவ சத்தியத்தின் வெளிச்சத்தில் எம்மை நியாயத்துடனும் நீதியுடனும் நடக்க அழைக்கிறது.
மேல் காணும் பந்தியை, ஏசாயா கிறிஸ்துவின் முதல் வருகையுடன் தொடங்குகிறார், ஆனால் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையுடன் முடிக்கிறார். இந்த இரண்டிற்கும் இடையில் நாம் தேவநீதி இவ்வுலகில் வர காத்திருக்கும் பருவம். வேத வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து காத்திருக்கும் மக்களை நாங்கள் காத்திருக்க ஊக்குவிக்கிறோமா, அல்லது துன்பத்தைத் தவிர்த்து நல்வாழ்வைத் தேடுவதற்கும் நாங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறோமா?
( தீத்து 2 : 11 )
கிருபையினால் நாம் பெரும் முதலாம் பிரசன்னம் இரட்சிப்பு. இது சிலருக்கு அல்ல, எல்லா மனிதருக்கும் அளிக்கப்பட்ட இரட்சிப்பு. நாம் இரட்சிப்பை எம் முயற்சி மூலம் அடைய முடியாது. பல சமயங்கள் இரட்சிப்பை
அப்படி அடையும் போலி எதிர்பார்ப்பில் மக்களை கவர்ச்சி செய்து அடிமையாக்குகிறது. இவ் வேதப்பகுதியில் உண்மையை காண்கிறோம், தேவ கிருபையால் இரட்சிப்பு அளிக்கப்படுகிறது.
நாம் சுய முயற்சி மூலம் இரட்சிப்பை அடைய முடியாது, ஆனால் இரட்சிக்கப்பட்டவர் வாழ்க்கை மாற்றத்தை இவ்வுலகத்திலே நாம் காணக்கூடியதாக இருக்கும்.
கிருபையினால் இரட்சிக்கப்பட்டு இவ்வுலகத்திலே பக்தி வைராக்கியத்துடன் வாழ்கிறவர்கள் இரண்டாம் பிரசன்னத்தின் எதிர்பார்ப்பில் வாழலாம்.
வேத வசனத்தை நாம் ஒவ்வொருவரும் அவதானித்து வாசித்தால், அதன் உண்மைகளை அறிந்து தேவ கிருபையால் வரும் வாழ்க்கை மாற்றத்தை நாம் தேவ ஆவியின் பலனில் காணலாம்.
பழிவாங்கும் போதனையை மக்கள் எங்கே கேட்டார்கள்? தங்கள் தலைவர்கள் பழைய ஏற்பாட்டை தவறாக விளக்கப்படுத்துவதைக் கேட்டார்கள்.தலைவர்கள் தேவ வார்த்தையை முறுக்கி, நீதியை நம் கையில் எடுத்துக் கொள்ளச் சொல்லலாம். யாத்திராகமம் 21:24; லேவியராகமம் 24:20; மற்றும் உபாகமம் 19:21, நீதிபதிகள் பூமியில் தேவ நீதி மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது. நாங்கள் நீதிபதிகளாக இருக்கக்கூடாது. நாங்கள் எங்கள் சொந்த நீதிபதிகளை நியமிக்க கூடாது.
இயேசுவின் போதனை எமக்கு முட்டால் தனமாக தோன்றலாம்.இயேசுவின் சீஷர்கள் அநீதியை கண்டும் காணதவர்களாய் இருக்கக் கூடாது. ஆனால் அநீதியை அநீதியுடன் எதிர்க்கக் கூடாது. தேவன் அவருடைய நேரத்தில் அநீதியை தண்டிப்பார். கிறிஸ்தவர்கள் ஆகிய நாம், இதை வேதத்தில் இருந்து அறிவோம்.
ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார். - பிரசங்கி 12:14
நியமிக்கப்பட்ட அதிகாரிகளால், இரங்க மின்றி, பூமியில் மக்கள் நியாயமாக தீர்ப்பளிக்கப்படும் போது, தீர்ப்பளிக்கப்பட்ட நபரும் சமூகமும் மனந்திரும்பி கடவுளின் தீர்ப்பில் இருந்து விடுபடலாம்.
உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும். - உபாகமம் 19:21
இயேசு அவரது சீஷர்களை தேவ கிருபைக்கு சாட்சி கொடுக்க அழைக்கிறார். நாம் அநீதியை சகிக்கும் பொழுது, தேவ நீதிக்கு சாட்சி கொடுக்க விரும்புகிறோம். ஆனால் நாம் கிறிஸ்துவின் மூலம் கிருபை பெற்றவர்களாய் இருக்கிறோம், நீதி பெற்றவர்கள் அல்ல. ஆகவே, கிருபைக்கே சாட்சி கொடுக்கக் கூடியவர்களாய் இருக்கிறோம்.
தேவ வார்த்தையை நம்புகிறவர்களாய் நாம் வாழ்கிறோமா, அல்லது எமது பலனாள் வாழ்கிறோமா? கிறிஸ்து தம்மை பின்பற்றுபவர்களை சட்டத்தை மீறுவதற்கு அழைக்கவில்லை. இந்த அநீதியான உலகில் அவருடைய வார்த்தையின் உண்மைக்கு சாட்சியாக இருக்க நம்மை அழைக்கிறார். நாம் எம் சமுதாயத்தின் மனசாட்சியாக இருக்க வேண்டும், இதனால் எம் குடும்பத்தார், நண்பர், சமுதாயமே உணர்ந்து மனம் திரும்பும் சந்தர்ப்பம் உண்டு.