விலையில்லா பாடபுத்தகங்கள் 2016-17

      தமிழக அரசால் அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பாடபுத்தகம் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.2012 13ஆம் ஆண்டு முதல் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு மற்றும் முப்பருவமுறை அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து பள்ளிகளில்தமிழ்வழி, ஆங்கிலவழி மற்றும் இதர மொழி வழியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ்ரகளுக்கு பருவம் I, பருவம் II, பருவம் III, என முப்பருவ முறையிலும் மற்றும் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் முழு  ஆண்டுக்குமான விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கப்படுகின்றது.மாணவர்களுக்கு இப்புத்தகங்கள் ஒவ்வொரு கல்வி ஆண்டும்/பருவமும் பள்ளி தொடங்கும் நாளிலே வழங்கப்பட்டுவருகிறது.இப்பள்ளி மாணவிகளுக்கு 2016-17 ஆம் ஆண்டுக்கான பாடபுத்தகங்கள் 1694 பேர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வகுப்பு

பயனாளிகள் எண்ணிக்கை

6

136

7

137

8

174

9

229

10

269

11

343

12

406

மொத்தம்

1694