Published using Google Docs
வெண்முரசு தகவல்கள்
Updated automatically every 5 minutes

முதற்கனல் 1 - http://www.jeyamohan.in/43820

ஆதியில் இருள் நாகத்தின் வடிவிலிருந்தது. நாகம் - நான் இல்லை என அதற்குப்பொருள்.

நாகத்தின் இச்சை ஆதித்யனாகவும் சந்திரனாகவும் தோன்றியது.

நாகத்திலிருந்து பிறந்தவர்கள்:

  1. கரியநிறமான நாகத்தின் பெயர் தட்ச பிரஜாபதி. இமையாத கண்கள் கொண்டவன் என்று பொருள். ராஜஸ குணம் கொண்டது.
  2. வெண்ணிறமான நாகத்தின் பெயர் மரீசி பிரஜாபதி. வெண்ணிற ஒளி என்று அவனுக்குப் பெயர். சத்வ குணம் கொண்டது.

இந்த இருவரில் இருந்து தான் திசைகள் உருவாகி வந்தன.

மரீசி காலத்தை உணர ஆரம்பித்த பின் ஆறு சகோதரர்கள் தன்னிலிருந்து

ஒவ்வொரு காலத்துக்கும் ஒன்று என உருவாக்கிக் கொண்டான்.

அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியன், வசிஷ்டன், புலஹன், கிருது

அந்த ஏழு சகோதரர்களின் தவத்தில் பிறந்தவள் வீரணி. அவளின் இன்னொரு பெயர் அஸிக்னி. அவளை தட்சன் மணந்து கொண்டான்.

தட்சனிலும் அஸிக்னியிலும் இருந்து பிறந்தவயே,

தேவ குலங்கள், அசுர கணங்கள்,  மனிதர்களும் மிருகங்களும் பறவைகளும் புழு பூச்சிகளும்.

அவர்கள் வாழ்வதற்காக ஏழு விண்ணகங்களும் ஏழு பாதாளங்களும் உருவாகிவந்தன.

தட்ச பிரஜாபதிக்கு பிறந்த அறுபது மகள்களில் ஒருத்தியின் பெயர் கத்ரு. அவளை மரீசியின் மைந்தனான கஸ்யபன் மணம் புரிந்துகொண்டான். அவள்தான் நாகர்குலத்தின் ஆதியன்னை.

விண்ணை ஆள்பவன் சேஷன்.

பாதாளத்தை ஆள்பவன் வாசுகி.

மண்ணை ஆள்பவன் தட்சகன்.

தட்சகனின் வம்சத்தில் வந்த காலகனின் மகள் மானசாதேவி. பிற பெயர்கள் - ஜகல்கௌரி, சித்தயோகினி, நாகபாகினி.

 ஆஸ்திகன்: தாய் மானசாதேவி, தந்தை ஜரத்காரு முனிவர்

முதற்கனல் 2 - http://www.jeyamohan.in/43838

ஆண் ஆபரணங்கள்:

ஜனமேஜயன். மனைவி - வபுஷ்டை

தம்பிகள்- சுதசேனர், உக்ரசேனர், பீமசேனர்

ஆஸ்திகனின் பயணப் பாதை:

வேசர தேசம் - (இன்றைய தெலுங்கானாவின் கிருஷ்ணா நதியை ஒட்டிய பகுதி) - நர்மதை - விந்திய மலை - அங்க தேசம் (இன்றைய ஜார்கண்ட்) - மகதம் (பீகார்) - அஸ்தினபுரி

 

முதற்கனல் 3 - http://www.jeyamohan.in/43847

அர்ஜுனனின் மைந்தன் அபிமன்யு -  மனைவி உத்தரை

பரீட்சித்தின் மைந்தர்கள்- னமேஜயன், சுருதசேனன், உக்ரசேனன், பீமசேனன்

குருவம்சத்தின் ஐம்பத்திரண்டாவது தலைமுறையைச்சேர்ந்த ஜனமேஜயன்.

முதற்கனல் 4 - http://www.jeyamohan.in/43860

வேள்வி பொருட்கள்:

கல்லடுக்கி அமைக்கப்பட்ட வேள்விக்குளம்

நெய்

சமித்துகள்

அரணிக்கட்டை

பலாசவிறகு

ஆலமர விழுது

நாய்களின் தெய்வம் - சரமை

வேள்வி பதவிகள்:

ஹோதாக்கள்,

ரித்விக்குகள்

உப ஹோதாக்கள்

கார்மிகர்கள்

சியவன முறை:

நால்வகை வேதங்களில் அதர்வத்தை முதன்மையாக்கி, பூதயாகங்களை முதல்முறைமையாகக் கொண்டு, யோகானுஷ்டானங்கள் வழியாக பிரம்மத்தை அணுகும் சியவன முறை தென்மேற்குத் திராவிடத்திலும் வங்கத்திலும் மட்டுமே தழைத்திருந்தது.

பூதயாக ஆகுதிகள்:

எளியவையும் அரியவையுமான நீரும், இலைகளும், மலர்களும் முதல்கட்டத்தில் நெருப்புக்கு அளிக்கப்பட்டன.

அரியவையும் இன்றியமையாதவையுமான நெய்யும், உணவும், ஆடைகளும் அதன்பின்னர் அவியாக பொழியப்பட்டன.

அதன்பின் அரியவையும், அற்பமானவையும், மாமன்னர்கள் படைதிரட்டி ஒருவரையொருவர் கொன்றுகுவிக்கக் காரணமாக அமைந்தவையுமான நவமணிகள் அவியிடப்பட்டன.

பூதயாகத்திற்கென நவத்துவாரங்களையும் மூடி முறைப்படி கொல்லப்பட்ட மானின் இறைச்சியும், பன்றியின் இறைச்சியும், பசுங்கன்றின் இறைச்சியும் அவியாக்கப்பட்டன.சத்வ, தமோ, ரஜோ குணம் கொண்ட அவை விண்ணாளும் தேவர்களுக்கு உணவாயின.

பாதாளமூர்த்திகளுக்கு காகங்களும், நீர்த்தவளைகளும், தேரட்டைகளும், மீன்களும் அவியாக்கப்பட்டன.

முதற்கனல் 5 - http://www.jeyamohan.in/43885

ஏழு சிரஞ்சீவிள்

மாபலி - கொடையால் அழிவின்மை கொண்டார்

அனுமன் - பணிவால்

விபீஷணன் - நம்பிக்கையால்

பரசுராமன் - சினத்தால்

கிருபர் - குரோதத்தால்

அஸ்வத்தாமா - பழியால்

வியாசர் - கற்பனையால்

பராசர முனிவரின் மைந்தர் - கிருஷ்ண துவைபாயனர் வியாசர்

மூவகை குணங்கள்:

சத்வ குணம்,

ரஜோ  குணம்,

தமோ குணம்

முதற்கனல் 6 - http://www.jeyamohan.in/43926

இசை வாத்தியங்கள்:

  1. கைத்தாளம்
  2. முழவு
  3. கிணைப்பறை
  4. சல்லரி
  5. சங்கு
  6. மணி
  7. நந்துனி
  8. பல்லியம்
  9. கொம்பு
  10. பெருமுழவு
  11. பெரும் பறை
  12. முரசு

அஸ்தினாபுரியின் அரசர்களின் வம்ச வரிசை:

பிரம்மன், அத்ரி, சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன், ஹஸ்தி, அஜமீடன், ருக்‌ஷன், சம்வரணன், குரு, ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி,ருக்‌ஷன்,பீமன், பிரதீபன், சந்தனு

முதற்கனல் 7 - http://www.jeyamohan.in/43944

சத்யவதி - அஸ்தினபுரியின் பேரரசி, சந்தனுவின் மனைவி.

சத்யவதியின் தாய் - அத்ரிகை, யமுனையின் ஆழத்திலுறைந்த பேரன்னையின் மகள்களில் ஒருத்தி.

சத்யவதியின் தந்தை - மச்சபுரி என்ற சிற்றூரை ஆண்ட மீனவர்குலத் தலைவன் சத்யவான். பத்து மீனவக்குலங்களுக்குத் தலைவனாக ஆனபின்னர் அவன் தசராஜன் என்று பெயர் பெற்றான்

தாமரை முகமும் உருண்ட கைகளும் திரண்ட தோள்களும் கொண்ட பத்மினிகள், வாழைக்கூம்பு முகமும் நீண்ட கைகளும் மெலிந்த தோள்களும் கொண்ட சித்ரிணிகள்,

சங்குமுகமும் சிறிய கைகளும் நெகிழ்ந்த தோள்களும் கொண்ட சங்கினிகள், யானை மதம் கொண்ட ஹஸ்தினிகள்.

பெண்னின் ஏழு பருவ நிலைகள்:

முதற்கனல் 8 - http://www.jeyamohan.in/44003

பீஷ்மர்:

தந்தை : சந்தனு

பிற பெயர்கள் -  தேவவிரதன், பிதாமகர்

பராசரமுனிவர் - கைலாயமலைச்சரிவில் பீதவனத்தில் தங்கி தவமியற்றிய பராசரர் புலஸ்திய மாமுனிவரின் ஆசியின்படி பாரதவர்ஷத்தின் அனைத்துப் புராணங்களையும் ஒருங்கிணைத்து ஒற்றைப்பெருநூலாக யாக்கத் தொடங்கினார். - புராணசம்ஹிதை

 கிருஷ்ண துவைபாயனர் வியாசர்:

        தாய் : மச்சகந்தி(சத்யவதி)

        தந்தை : பராசரமுனிவர்

கருநிறம் கொண்டிருந்ததால் கிருஷ்ணன் என்றழைத்தனர். தீவில் பிறந்தவனாதலால் துவைபாயனன் என்றனர்.

முதற்கனல் 9 - http://www.jeyamohan.in/44015

சந்தங்கள்:

அங்கே வேதநாதம் கேட்டுப்பழகிய சோலைக்குயில்கள் காயத்ரி சந்தத்திலும், மைனாக்கள் அனுஷ்டுப்பிலும்,

வானம்பாடிகள் திருஷ்டுப்பிலும்,

நாகணவாய்கள் உஷ்ணுக்கிலும்,

நாரைகள் ஜகதியிலும்

சிபி:

வம்ச வரிசை: சந்திரவம்சம்

பிரம்மன், அத்ரி, சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஷ், நகுஷன், யயாதி, அனுத்ருஹ்யன், சபாநரன், காலநரன், சிருஞ்சயன், உசீநரன்

நகரம் - சந்திரபுரி

முதற்கனல் 10 - http://www.jeyamohan.in/44027

பிரசூதி - பொன்னிற உடல்கொண்ட நாகம், தட்சனின் மனைவி. அவளுக்கு தட்சனில் பிறந்த மகள்கள். அவளுடைய ஒவ்வொரு பாவமும் மகளாக பிறந்தன.

கவனமும், அவசரமும், துயரமும், கற்பனையும், வளமும், ஊக்கமும், மங்கலமும், அறிவும், நாணமும், வடிவமும், அமைதியும், அருளும், மண்புகழும், விண்புகழும், பரவசமும், நினைவும், பிரியமும், பொறுமையும், ஆற்றலும், நிறைவும், தாய்மையும், பசியும், சுவையும் இருபத்துமூன்று பெண்களாயின.

சிரத்தா, த்ருதி, துஷ்டி, மேதா, புஷ்டி, கிரியா, லட்சுமி, புத்தி, லஜ்ஜா, வபுஸ், சாந்தி, ஸித்தி, கீர்த்தி, கியாதி, ஸம்பூதி, ஸ்மிருதி, பிரீதி, க்ஷமா, ஊர்ஜை, அனசூயை, சந்ததி, ஸ்வாஹா, ஸ்வாதா.

பிரசூதியின் பேரழகைக் கண்டு மனம் கனிந்து ‘தோழி’ என அவளை உணர்ந்து அளித்த முத்தம் ஸதி என்னும் அழகிய பெண்மகவாகியது. இருபத்துநான்கு மகள்களிருந்தும் அவளையே தாட்சாயணி என்று அவன் அழைத்தான்.

தட்சனுடைய மகள்களை தர்மன், பிருகு, மரீசி, அங்கிரஸ், புலஸ்தியன், புலஹன், கிருது, அத்ரி, வசிஷ்டன், அக்னி என்னும் தேவர்களும் முனிவர்களும் கொண்டனர்.

பதினான்குலகங்களையும் ஒருதுளியால் வெல்லும் விஷம் கொண்டவன் எவனோ அவனே தாட்சாயணியை மணக்கவேண்டுமென என்று தட்சன் பிரம்மனிடம் வரம் பெற்றான்.

தாட்சாயணியின் தவத்தால் சிவன் அவளை காந்தர்வ மணம் புரிந்துகொண்டார்.

பட்டிலும், மலரிலும், இசையிலும், கவிதையிலும், நீரிலும், ஒளியிலும் இருந்த விருப்பங்களை எல்லாம் ஒவ்வொன்றாக அணைத்துக்கொண்டு நோன்புநோற்றாள்.

சிவன் கையில் இருப்பவை:

நாகபிரஜாபதியான தட்சன் பிரகஸ்பதீ ஸவனம் என்னும் மாபெரும் பூதயாகத்தை நடத்தினான். பிரஜாபதிகளனைவரையும் மகிழ்விக்கும் அந்த யாகத்தில் மண்ணிலுள்ள அத்தனை விதைகளும் படைக்கப்பட்டன. அத்தனை உயிர்களின் முட்டைகளும் கருக்களும் அவியாக்கப்பட்டன.

முதற்கனல் 11 - http://www.jeyamohan.in/44044

காசி நாட்டு மன்னன் பீமதேவர்

மனைவி : புராவதி

மகள்கள்:

பாரதத்தின் சில நாடுகள்:

  1. அங்கம்
  2. வங்கம்
  3. கலிங்கம்
  4. மாளவம்
  5. மாகதம்
  6. கேகயம்
  7. கோசலம்
  8.  கொங்கணம்
  9. சோழம்
  10. பாண்டியம்

சால்வர் ஆளும் சௌபநகரம் கங்கைக்கரையில் இன்றிருக்கும் நாடுகளில் வலிமையானது.சேதிநாட்டரசர் தமகோஷன் அவரது நெருங்கியநண்பர் என்கிறார்கள்.

சால்வன் அம்பையின் காதலன்.

காசி மன்னர்களின் வம்ச வரிசை:

 ”விஷ்ணுவிலிருந்து பிரம்மன் பிறந்தான். பிரம்மனிலிருந்து அத்ரி முனிவர் பிறந்தார். அத்ரியிலிருந்து சந்திரனும் சந்திரனிலிருந்து புதனும் புதனிலிருந்து புரூரவஸும் பிறந்தனர். ஆயுஷ், ஆனேனஸ், பிரதிக்‌ஷத்ரன், சிருஞ்சயன், ஜயன், விஜயன், கிருதி, ஹரியஸ்வன், சகதேவன், நதீனன், ஜயசேனன், சம்கிருதி, ஷத்ரதர்மன், சுஹோத்ரன், சலன், ஆர்ஷ்டிசேனன் என்னும் பெருமைமிக்க அரசர் வரிசையில் பிறந்த மாமன்னன் காசனை வணங்குவோம். காசனின் மைந்தர்களின் நாடு என்ற பொருளிலேயே இந்தப் புனிதபூமி காசி என்றழைக்கப்படுகிறது.”

“தீர்க்கதபஸ், தன்வந்திரி, கேதுமான், பீமரதன் என்னும் காசிமன்னர்களின் குலத்தில் உதித்த மாமன்னன் திவோதாசரை வணங்குவோம். அழியாப்புகழ்கொண்ட இந்த மண்ணுக்கு அவரே முதுதந்தையென்றறிக! அதிதிக்வான் என்று முனிவர் புகழும்படி விருந்தோம்பல் கொண்டிருந்தவர் அவர். கும்பகமுனிவரின் தீச்சொல்லால் காசிமண்ணில் பஞ்சம் வந்தபோது கடுந்தவம் செய்து விஸ்வநாதனை இங்கே குடியேற்றியவர் அவர். அவரது வம்சத்தில் வந்தவர் மாமன்னர் பீமதேவர். திவோதாசரிலிருந்து திவ்யாதிதி, திவ்யாதிதியில் இருந்து பிரதிசத்ரன் பிறந்தான். ஜயன், நதீனன், சலன், சுதேவன், பீமரதன், கேதுமான் எனத் தொடரும் அழியாப்பெருங்குலத்திற்கு இன்று அரசர் பீமதேவர் என்றறியட்டும் இந்த அவை!”

காசியின் தெய்வமான விசும்புக்கதிபனையும் அகல்விழியன்னையையும் வணங்குகிறேன். காவல்தெய்வமான கரியநாய் வடிவம்கொண்ட தேவனை வணங்குகிறேன்.

எழுபத்திரண்டு ராகங்களிலும் அவற்றின் இணைராகங்களிலும் துணைராகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்

எண்வகை சுயம்வரம் முறைகள்:

  1. பிரம்மம்,
  2. ஆர்ஷம்,
  3. பிரஜாபத்யம்,
  4. தெய்வம்,
  5. காந்தர்வம்,
  6. ஆசுரம்,
  7. ராட்சசம்,
  8. பைசாசம்

ஷத்ரியர்களுக்கு உகந்த சுயம்வர முறை பிரஜாபத்யம்

காசிநாட்டின் பெருங்குடிகளின் தலைவரான பிருஹதத்தன் எழுந்து வந்து பொன்னாலான மீனையும் படகையும் மலர்களுடன் வைத்து மன்னனிடம் அளித்தார்.

முதற்கனல் 13 - http://www.jeyamohan.in/44113

மூதன்னை கத்ருவுக்கு அம்பை, தீர்க்கசியாமை, சாரதை, காளி, சித்தேஸ்வரி, யோகீஸ்வரி, சாந்தை, கனகி, முக்தை, மூலத்வனி என ஆயிரம் அழகிய பெயர்கள் உண்டு. சர்ப்பராஜனாகிய வாசுகி அவள் மைந்தன் என்றறிக. அவனுக்கு காளன், சியாமன், ருத்ரன், சலன் என்று ஆயிரம் பெயர்கள் உண்டு. அவனே பாதாளத்தின் அதிபன். மகாமேருக்களை உடல்செதில்களாகக் கொண்ட விராடரூபன்.

பிங்கலநிறம் கொண்ட கூந்தலும் கரிய உடலும் கொண்ட மிருத்யு தேவியின் புதல்விகளான

பாற்கடலை கடைந்த போது வெளிவந்தவை -

முதற்கனல் 17    http://www.jeyamohan.in/44261

சில அன்னையர் தெய்வங்கள்:

பாய்கலைப்பாவை புறங்காட்டில் நின்றதைக் கண்டவன் நான்!

படுகளக்காளி மலைச்சரிவில் எழுந்ததைக் கண்டவன் நான்!

எரிகண்ணுடைய திரயம்பிகை

வெண்பல் நகை அணிந்த சாமுண்டி

முழவென ஒலிக்கும் கங்காளி!

சண்டி,

பிரசண்டி,

திரிதண்டி!

அண்டங்களை அழிக்கும் அம்பிகை!

ஒன்பது அன்னையர் - நவகாளி?

சைலஜை, பிரம்மை, சந்திரகந்தை, கூஷ்மாண்டை, ஸ்கந்தை, கார்த்யாயினி, காலராத்ரி, சித்திதாத்ரி, மகாகௌரி

முதற்கனல் 21    http://www.jeyamohan.in/44415

மகிஷன் சகோதரர்கள் சிலர்

முதற்கனல் 22 http://www.jeyamohan.in/44352

நால்வகைக் குடிகள்:

முதற்கனல் 23 - http://www.jeyamohan.in/44443

உடலின் ஏழு ஆற்றல் சக்கரங்கள்

  1. மூலாதாரம் - காமம், ஊக்கம், ஆற்றலின் மூலம் (அளவைப்பதி)
  2. சுவாதிஷ்டானம் - அன்னத்தை அனலாக்கும்
  3. மணிபூரகம் - காற்றை உயிராக மாற்றும்
  4. அநாகதம் - குருதியை வெம்மையாக்கும்
  5. விசுத்தி
  6. ஆக்கினை
  7. சகஸ்ரம்

http://www.jeyamohan.in/44443

http://www.jeyamohan.in/58206

முதற்கனல் 24    http://www.jeyamohan.in/44469

நகை மணிகள்:

முதற்கனல் 11 http://www.jeyamohan.in/44044 விஸ்வநாதனும் காலபைரவனும் ஆளும் புனிதமான நிலம் இது.

முதற்கனல் 26    http://www.jeyamohan.in/44537

பொன்னிறத்தாள் சாவித்ரிக்கு பிரியமானவை:

முதற்கனல் 39    http://www.jeyamohan.in/45259

பீஷ்மரின் ஏழு மூத்த சகோதரர்கள்

முதற்கனல் 31    http://www.jeyamohan.in/44674

பிரபஞ்சத்தைப் படைப்பதற்காக பிரம்மன் பதினாறு பிரஜாபதிகளை படைத்தார்.

  1. கர்த்தமன்,
  2. விக்ரீதன்,
  3. சேஷன்,
  4. சம்ஸ்ரயன்,
  5. ஸ்தாணு,
  6. மரீசி,
  7. அத்ரி,
  8. கிருது,
  9. புலஸ்தியன்,
  10. அங்கிரஸ்,
  11. பிரசேதஸ்,
  12. புலஹன்,
  13. தட்சன்,
  14. விவஸ்வான்,
  15. அரிஷ்டநேமி,
  16. கஸ்யபன்

வான் நெருப்பான அங்கிரஸில் இருந்து செந்நிறச்சுவாலை பிரஹஸ்பதியாகவும் நீலச்சுவாலை உதத்யனாகவும் பிறந்தது.

பருப்பொருளனைத்தையும் உண்ண வேண்டுமென்ற அவாவை தன்னுள் இருந்து எடுத்து உதத்யன் ஒரு பெண்ணாக்கினார். அவளை மமதா என்றழைத்தார்.

மமதா - பேரவா என்று பொருள்.

மமதாவில் உதத்யனுக்கும் இருள் பிறந்தது.

தண்டகாரண்யத்தில் பத்ரை என்னும் முனிபத்தினியின் வயிற்றில் கண்ணற்ற குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு தீர்க்கதமஸ் என அவர்கள் பெயரிட்டனர். அவரில் இருந்து அங்கன், வங்கன், கலிங்கன், புண்டரன், சுங்கன் என ஐந்து மன்னர்குலங்கள் பிறந்தன.

முதற்கனல் 18    http://www.jeyamohan.in/44270

தாமரைக்குள் இருக்கும் காயின் மென்மையும் வண்ணமும் கொண்ட கங்காதேவியின் முன்னால் ஆயுதங்களுடன் செல்லமுடியாதென்பதனால் அதற்கான தருணம் நோக்கி அவளறியாமல் பின் தொடர்ந்தார்.

முதற்கனல் 32    http://www.jeyamohan.in/44720

துருவனும் பூமியும்:

வடமுனையில் என்றும் மாறாமலிருக்கும் விண்மீன் துருவன்.

துருவனின் மைந்தன் சிஷ்டி.

சிஷ்டியின் மைந்தன் ரிபு.

ரிபுவின் வம்சத்தில் பிறந்த சாக்‌ஷுகனின் மைந்தன் மனு.

மனுவின் மைந்தன் குரு, குரு அங்கனைப்பெற்றான்.

அங்கன் வேனனைப்பெற்றான்.

வேனனின் மைந்தன் பிருது என்றறியப்பட்டான்.

பிருதுவே பூமியை அரசனாக நின்று ஆண்டிருந்தான்.

அவனுடைய கண்களின் ஒளியில் பூமிதேவி வாழ்ந்திருந்தாள். பிருதுவின் மகளான அவளை தேவர்கள் பிருத்வி என்றழைத்தனர்.

முதற்கனல் 37 http://www.jeyamohan.in/45029 

பாஞ்சாலத்தின் ஐம்பெரும் குலங்கள்:

சோமக குலமும் சிருஞ்சயகுலமும் முரண்பட்டுப் பிரிந்தபோது பாஞ்சாலம் இருநாடுகளாகியது.

தட்சிண பாஞ்சாலம் - தலைநகரம் காம்பில்யம். அதை சிருஞ்சயகுலத்து பிருஷதன் ஆண்டுவந்தான்.

உத்தரபாஞ்சாலம் - தலைநகரம் சத்ராவதி. சோமகவம்சத்து சோமகசேனன் ஆண்டுவந்தான்.

முதற்கனல் 46 http://www.jeyamohan.in/45459

கதை போர் தாக்குதல் முறைகள்

இடப்பக்கம் குனிந்து வாமனமிதமாகவும் வலப்பக்கம் குனிந்து தட்சிணமிதமாகவும் மாறி மாறி முடிவில்லாது தாக்கிக் கொண்டிருந்தோம்.

முதற்கனல் 41    http://www.jeyamohan.in/45314

சில அரச பதவிகள்

முதற்கனல் 47    http://www.jeyamohan.in/45499

அத்ரி சந்திரன் புதன் புரூரவஸ் ஆயுஷ் நகுஷன் என வரும் குலவரிசையில்

நகுஷனுக்கும் அசோகசுந்தரிக்கும் பிறந்தவர்கள் அறுவர்:

  1. யதி,
  2. யயாதி,
  3. சம்யாதி,
  4.  யாயாதி,
  5. யயதி,
  6. துருவன்.

முதற்கனல் 50    http://www.jeyamohan.in/45576

ஒன்பது யோகங்கள்:

  1. முதல் யோகம் திருஷ்டம்
  2. இரண்டாம் யோகம் சுவாசம்
  3. மூன்றாம் யோகம் சும்பனம்
  4. நான்காம் யோகம் தம்ஸம்
  5. ஐந்தாம் யோகம் ஸ்பர்சம்
  6. ஆறாம் யோகம் ஆலிங்கனம்
  7. ஏழாம் யோகம் மந்திரணம்
  8. எட்டாம் யோகம் போகம்
  9. ஒன்பதாம் யோகம் லயம்

தட்சனும் தட்சகியும் இணைந்து பிறந்து வந்த நாகங்கள்:

வாசுகியின் குலத்தில் பிறந்த:

கோடிசன், மானசன், பூர்ணன், சலன், பாலன், ஹலீமகன், பிச்சலன், கௌணபன், சக்ரன், காலவேகன், பிரகாலனன், ஹிரண்யபாஹு, சரணன், சக்‌ஷகன், காலதந்தகன் ஆகிய பெருநாகங்கள் பிறந்து வானுக்கு அப்பால் நின்ற பேராலமரத்தின் விழுதுகள் போல ஆடின.

தட்சனின் குலத்தைச் சேர்ந்த:

புச்சாண்டகன், மண்டலகன், பிண்டசேக்தா, ரபேணகன், உச்சிகன், சரபன், பங்கன், பில்லதேஜஸ், விரோஹணன், சிலி, சலகரன், மூகன், சுகுமாரன், பிரவேபனன், முத்கரன், சிசுரோமான், சுரோமன், மஹாகனு போன்ற மாநாகங்கள் காட்டுக்கு அடியில் நிறைந்த வேர்பரப்பு போல செறிந்தாடின.

ஐராவத குலத்தில் பிறந்த:

பாராவதன், பாரியாத்ரன், பாண்டாரன், ஹரிணன், கிருசன், விஹங்கன், சரபன், மோதன், பிரமோதன், ஸம்ஹதாபனன் போன்ற பொன்னிறநாகங்கள் விராடவடிவம்கொண்ட சிவனின் சடைக்கற்றைகள் என நெளிந்தாடின.

கௌரவ்ய குலத்தில் பிறந்த:

ஏரகன், குண்டலன், வேணி, வேணீஸ்கந்தன், குமாரகன், காகுகன், ஸ்ருங்கபேரன், துர்த்தகன், பிராதன், ராதகன் போன்ற நாகங்கள் விண்வெளி நீர்வெளிமேல் ஏவிய கோடிஅம்புகள் போல எழுந்தன.

திருதராஷ்டிர குலத்தில் பிறந்த:

சங்குகர்ணன், பிடாரகன், குடாரமுகன், சேசகன், பூர்ணாங்கதன், பூர்ணமுகன், பிரஹாசன், சகுனி, தரி, அமாஹடன், காமடகன், சுசேஷணன், மானசன், அவ்யபன், அஷ்டாவக்ரன், கோமலகன், ஸ்வசனன், மௌனவேபகன், பைரவன், முண்டவேதாங்கன், பிசங்கன், உதபாரான், இஷபன், வேகவான், பிண்டாரகன், மகாரஹனு, ரக்தாங்கதன், சர்வசாரங்கன், சம்ருத்தன், படவாசகன், வராஹகன், வீரணகன், சுசித்ரன், சித்ரவேகிகன், பராசரன், தருணகன், மணி, ஸ்கந்தன், ஆருணி ஆகிய நாகங்கள் முடிவிலியைத் துழாவும் இருளின் விரல்கள் என வானில் நெளிந்தன.

மழைப்பாடல் 20

பத்து மங்கலப்பொருட்கள்:

  1. வலம்புரிச்சங்கு,
  2. ஒற்றைமுனை உருத்திரவிழிக்காய், (ருத்திராட்சம்)
  3. மஞ்சள் பட்டு,
  4. மலைத்தேன்,
  5. மஞ்சள்மலர்,
  6. ஏடு,
  7. ஆயுதம்,
  8. பொன்,
  9. நெய்தீபம்,
  10. மண்

http://www.jeyamohan.in/46211

வண்ணக்கடல் – 10 http://www.jeyamohan.in/56190

கௌரவர் நூற்றுவர் -

துரியோதனன், துச்சாதனன், துச்சகன், துச்சலன், ஜலகந்தன், சமன், சகன், விந்தன், அனுவிந்தன், துர்தர்ஷன், சுபாகு, துர்பிரதர்ஷணன், துர்மர்ஷணன், துர்முகன், துர்கர்ணன், கர்ணன், விகர்ணன், சலன், சத்வன், சுலோசனன், சித்ரன், உபசித்ரன், சித்ராக்ஷன், சாருசித்ரன், சராசனன், துர்மதன், துர்விகாகன், விவித்சு, விகடானனன், ஊர்ணநாபன், சுநாபன், நந்தன், உபநந்தன், சித்ரபாணன், சித்ரவர்மன், சுவர்மன், துர்விமோசன், அயோபாகு, மகாபாகு, சித்ராங்கன், சித்ரகுண்டலன், பீமவேகன், பீமபலன், வாலகி, பலவர்தனன், உக்ராயுதன், சுஷேணன், குந்ததாரன், மகாதரன், சித்ராயுதன் என்னும் ஐம்பது மைந்தர்களும் மூத்தகணத்தவர் எனப்பட்டனர்.

நிஷங்கி, பாசி, விருந்தாரகன், திருடவர்மா, திருதக்ஷத்ரன், சோமகீர்த்தி, அனூதரன், திருதசந்தன், ஜராசந்தன், சத்யசந்தன், சதாசுவாக், உக்ரசிரவஸ், உக்ரசேனன், சேனானி, துஷ்பராஜயன், அபராஜிதன், குண்டசாயி, விசாலாக்ஷன், துராதாரன், திருதஹஸ்தன், சுஹஸ்தன், வாதவேகன், சுவர்ச்சஸ், ஆதித்யகேது, பகுயாசி, நாகதத்தன், உக்ரசாயி, கவசீ, கிருதனன், கண்டி, பீமவிக்ரமன், தனுர்த்தரன், வீரபாகு, அலோலுபன், அபயன், திருதகர்மன், திருதரதாசிரயன், அனாதிருஷ்யன், குண்டபேதி, விராவீ, சித்ரகுண்டலன், பிரமதன், அப்ரமாதி, தீர்க்கரோமன், சுவீரியவான், தீர்க்கபாகு, சுவர்மா, காஞ்சனதுவஜன், குண்டாசி, விரஜஸ் என்னும் ஐம்பதுபேரும் இளைய கணத்தவர் எனப்பட்டனர்

கௌரவர்களில் பிறந்த ஒரே பெண் குழந்தை - துச்சளை

https://archive.org/stream/puranicencyclopa00maniuoft#page/399/mode/1up

காந்தார தொல்குலத்து ஆறன்னையர்:

  1. மரு,
  2. இருணை,
  3. ஃபூர்ணி,
  4. காமலை,
  5. கிலை,
  6. ஆரண்யை

வண்ணக்கடல் – 23 http://www.jeyamohan.in/56630

கார்த்தவீரியனின் மைந்தர்கள்:

கார்த்தவீரியன் பன்னிரு மனைவிகளை மணந்து அவர்களில் நூறு மைந்தர்களைப்பெற்றான்.

நிர்மதன், ரோசனன், சங்கு, உக்ரதன், துந்துபி, துருவன், சுபார்சி, சத்ருஜித், கிரௌஞ்சன், சாந்தன், நிர்த்தயன், அந்தகன், ஆகிருதி, விமலன், தீரன், நீரோகன், பாகுதி, தமன், அதரி, விடூரன், சௌம்யன், மனஸ்வி, புஷ்கலன், புசன், தருணன், ரிஷபன், ரூக்ஷன், சத்யகன், சுபலன், பலி, உக்ரேஷ்டன், உக்ரகர்மன், சத்யசேனன், துராசதன், வீரதன்வா, தீர்க்கபாகு, அகம்பனன், சுபாகு, தீர்க்காக்ஷன், வர்த்துளாக்ஷன், சாருதம்ஷ்டிரன், கோத்ரவான், மகோஜவன், ஊர்த்துவபாகு, குரோதன், சத்யகீர்த்தி, துஷ்பிரதர்ஷணன், சத்யசந்தன், மகாசேனன், சுலோசனன் என்னும் முதல் கணத்தவர் வாமஹேகயர்கள் எனப்பட்டனர்.

ரக்தநேத்ரன், வக்ர தம்ஷ்டிரன், சுதம்ஷ்டிரன், க்ஷத்ரவர்மன், மனோனுகன், தூம்ரகேசன், பிங்கலோசனன், அவியங்கன், ஜடிலன், வேணுமான், சானு, பாசபாணி, அனுத்ததன், துரந்தன், கபிலன், சம்பு, அனந்தன், விஸ்வகன், உதாரன், கிருதி, ஷத்ரஜித், தர்மி, வியாஹ்ரன், ஹோஷன், அத்புதன், புரஞ்சயன், சாரணன், வாக்மி, வீரன், ரதி, கோவிஹ்வலன், சங்கிராமஜித், சுபர்வா, நாரதன், சத்யகேது, சதானீகன், திருதாயுதன், சித்ரதன்வா, ஜயத்சேனன், விரூபாக்ஷன், பீமகர்மன், சத்ருதாபனன், சித்ரசேனன், துராதர்ஷன், விடூரதன், சூரன், சூரசேனன், தீஷணன், மது, ஜயதுவஜன் என்னும் இரண்டாம் கணத்தவர் தட்சிணஹேகயர் எனப்பட்டனர்.

வண்ணக்கடல் 60 - http://www.jeyamohan.in/57847

அசுரமன்னர்கள்:

ஹிரண்யாக்‌ஷன், ஹிரண்யகசிபு, பிரஹலாதன், சம்லாதன், அனுஹ்லாதன், சாகி, பாஷ்கலன், விரோசனன், கும்பன், நிகும்பன், பலி, பாணன், மகாகாளன், விப்ரசித்தி, சம்பரன், நமுசி, புலோமா, விஸ்ருதன், அசிலோமன், கேசி, துர்ஜயன், அயசிரஸ், அஸ்வசிரஸ், அஸ்வன், சங்கு, மகாபலன், கர்கன், மூர்த்தா, வேகவான், கேதுமான், ஸ்வர்பானு, அஸ்வபதி, விருஷபர்வன், அசகன், அஸ்வக்ரீவன், சூக்‌ஷமன், துகுண்டன், ஏகபாத், ஏகசக்ரன், விரூபாக்‌ஷன், ஹராகரன், சந்திரன், குபடன், கபடன், பரன், சரபன், சலபன், சூரியன், சந்திரமஸ்

வெண்முகில் நகரம் 23 - http://www.jeyamohan.in/71029

பால்ஹிகரின் மைந்தர் உருவாக்கிய பத்து நாடுகள்:

  1. மாத்ரம்,
  2. சௌவீரம்,
  3. பூர்வபாலம்,
  4. சகம்,
  5. யவனம்,
  6. துஷாரம்,
  7. கரபஞ்சகம்,
  8. கலாதம்,
  9. குக்குடம்,
  10. துவாரபாலம்

இவற்றில் முதல் ஆறும் ஷத்ரிய நாடுகள். இறுதி நான்கும் குலக்குழு ஆட்சிமுறை கொண்டவை.

பால்ஹிகர் → சுகேது → அக்னிதத்தர் → தேவதத்தர் →  சோமதத்தர் → பூரிசிரவஸ்.

வெண்முகில் நகரம் 24 - http://www.jeyamohan.in/71073

பால்ஹிகநாட்டுக்கு மழைமுகில்கள் வராமல் காக்கும் பதினொரு மூதன்னையர் (மலைகள்):

  1. தூமவதி,
  2. ஷீரவதி,
  3. பிரக்யாவதி,
  4. பாஷ்பபிந்து,
  5. சக்ராவதி,
  6. சீலாவதி,
  7. உக்ரபிந்து,
  8. ஸ்தம்பபாலிகை,
  9. சிரவணிகை,
  10. சூக்‌ஷ்மபிந்து,
  11. திசாசக்ரம்.

வெண்முகில் நகரம் 26 - http://www.jeyamohan.in/71125

பால்ஹிக நாடு: அரசர் சோமதத்தர், அரசி சுதுத்ரி

மகன்கள்                 : ஃபூரி, சலன், பூரிசிரவஸ்

மகள்                 : சித்ரிகை

மத்ர நாடு        : அரசர் சல்லியர், அரசி விப்ரலதை

மகன்கள்        : ருக்மாங்கதன், ருக்மரதன்

இளவல்        : உத்தரமத்ரத்தின் அரசர் தியுதிமான்.

 அவர் மனைவி பிரசேனை, மகள் விஜயை.

வெண்முகில் நகரம் 28 - http://www.jeyamohan.in/71248

ஹஸ்திகை        : பால்ஹிகரின் புதிய மனைவி.

பிரேமை                : பூரிசிரவசின் துணைவி, ஹஸ்திகையின்

  தமையன் மகள்.

விப்ரை                : ஹஸ்திகையின் தாய். அவளின் ஏழு

 மைந்தர்களில் முதல்மைந்தனின் மகள் பிரேமை.

வெண்முகில் நகரம் 31 - http://www.jeyamohan.in/72123

சௌவீர நாடு                : அரசர் சுமித்ரர்.

சகநாடு                        : அரசர் பிரதீபன்.

கலாதநாடு                : குடித்தலைவர் சுக்ரர்.

துவாரபால நாடு        : குடித்தலைவர் துங்கர்.

வெண்முகில் நகரம் 32 - http://www.jeyamohan.in/72157

திரௌபதி மணத்தன்னேற்பு விழாவின்பின் துரியோதனன் தசசக்கரத்தில் தங்கியிருந்தான். கங்கைக்கு அருகே உள்ள குன்றின் மேல் அமைந்தது.

சர்ப்பதம்சம் என்று ஒரு முள் இருக்கிறது. மிகமிகச்சிறியது. பூமுள்போல. அது யானையின் கால்களில் குத்தினால் கண்டுபிடிக்கவோ அகற்றவோ முடியாது. ஆனால் யானையின் கால்கள் மெல்லமெல்ல புண்ணாகி சீழ்கட்டும். யானை மரத்தில் சாய்ந்து நின்று காடதிர சின்னம் விளித்து வலியில் கூவிக்கூவி இறக்கும்.

வெண்முகில் நகரம் 40 - http://www.jeyamohan.in/72717

மதுவனம்: அரசர் காவுகர், சூரசேனரின் இரண்டாவது மைந்தர்.

மதுரா: அரசர் வசுதேவர், சூரசேனரின் பதிமூன்றாவது மைந்தர்.

உத்தரமதுராபுரி: அரசர் தேவாலர், தேவகரின் மூத்தமைந்தர். உதவியாக தேவாலரின் இளையோர் உபதேவரும் சுதேவரும்.

கோகுலமும் 18 ஊர்களும்: அரசர் நந்தகோபர், உதவியாக விதுரரின் மூத்தமைந்தர் சுசரிதர்.

சாத்யகியின் வம்சவரிசை:

ஹேகயகுல மன்னர் கார்த்தவீரியனின் வழிவந்தவர் மது. மது → விருஷ்ணி → யுதாஜித் → ஸினி → சுகதி. சுகதியின் வழியில் நக்தர், ஜயர், உபஜயர், குனி, அனமித்ரர், பிரஸ்னி. பிரஸ்னியின் இருமைந்தர் ஸ்வல்கரும் சித்ரரதரும். ஸ்வல்கர் → அக்ரூரர் → தேவகர். சித்ரரதர் → சத்யகர் → யுயுதானன். யுயுதானன் சத்யகரின் மகனாதலால் சாத்யகி ஆனான். அவன் யமுனைக்கரையின் ரிஷபவனத்தைச் சேர்ந்தவன்.

துவாரகையிலிருந்து பத்துகாத தொலைவில் உள்ளது குரங்கசாகரம். அதிலிருந்த நீர் துவாரகையின் குடிநீர்த் தேவைக்குப் பயன்பட்டது. அங்கு கலக்கும் கோமதி ஆற்றைத் துவாரகைக்குத் திருப்ப கிருஷ்ணர் முயல்கிறார்.

வராலத குலம்: தட்சிண மாளாவத்தின் மலைக்குடிகளுள் ஒன்று.

வெண்முகில் நகரம் 43 - http://www.jeyamohan.in/72823

கூர்ஜரநாடு        : தலைநகர் தேவபாலநகரி, அரசர் சக்ரதனுஸ்.

சிந்துநாடு        : தலைநகர் மூலத்தானநகரி, அரசர் ஜயத்ரதன்.

பாஞ்சால இளவரசர் பன்னிருவர்:

சித்ரகேது (பட்டத்து இளவரசன்), சுமித்ரன், ரிஷபன், யுதாமன்யு, விரிகன், பாஞ்சால்யன், சுரதன், உத்தமௌஜன், சத்ருஞ்ஜயன், ஜனமேஜயன், துவஜசேனன், திருஷ்டத்யும்னன்.

கருணர்: பாஞ்சாலத்தின் பேரமைச்சர்

ரிஷபர்: பாஞ்சாலத்தின் படைத்தலைவர்

ஏழரைப்பொன் யானை எழுந்தருளல்: பாஞ்சாலர்களின் தொன்மையான வரவேற்பு முறை. முழுமங்கலம் நிகழும்போது மட்டுமே செய்யவேண்டியது.

வெண்முகில் நகரம் 44 - http://www.jeyamohan.in/72934

பன்னிரண்டு மலைமங்கலப்பொருட்கள்: கொம்பரக்கு, கோரோசனை, புனுகு, குங்கிலியம், வைரம், சந்தனம், அகில், யானைத்தந்தம், புலிப்பல், கூழாங்கல், மலைச்சுனை நீர், தேன்.

ஏழு மனைமங்கலப்பொருட்கள்: அரிசி, மலர், சுடர், ஆடி, நிறைகலம், மணி, பட்டு.

ஐந்து அரசமங்கலங்கள்: வெண்குடை, கவரி, செங்கோல், வாள், மணிமுடி.

ஐம்பேராயம்:

  1. நால்வேதமோதும் நான்கு குலங்களைச் சேர்ந்த வைதிகர்
  2. செல்வம் செய்தி முறைமை என முத்தொழிலாற்றும் மூன்று அமைச்சர்கள்
  3. குலத்தலைவர்கள்
  4. தேர் யானை காலாள் புரவி எனும் நால்வகைப்படையின் நான்குதலைவர்கள்
  5. உளவு கணிப்பு காவல் என்னும் முத்தொழிலாற்றும் மூன்று ஒற்றர்குழுக்களின் தலைவர்கள்

ஷத்ரியர்களின் உண்டாட்டுகளின் ஒடுக்குநெறிகள்:

உணவை இடக்கையால் தொடலாகாது, விரல்கள் வாயைத் தொடலாகாது, கட்டைவிரலில் உணவு படக்கூடாது, உண்ணும்போது உடலோசைகள் எதுவும் எழலாகாது, உணவை முறைமை மீறி ஒன்றுடன் ஒன்று கலந்துகொள்ளலாகாது, உணவுப்பொருள் கலத்துக்கு வெளியே சிந்தலாகாது, கலங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டலாகாது, ஊனுணவுக்குப்பின் கள்ளருந்தலாகாது, பிறிதொருவர் கலத்தை நோக்கலாகாது.

ஷத்ரியர்களின் உண்டாட்டுகளின் செலுத்துநெறிகள்:

அனைவரும் ஒரே உணவையே உண்ணவேண்டும், உணவை ஏழுமுறை மெல்லவேண்டும், அனைவரும் இணைந்து எழவேண்டும்.

வெண்முகில் நகரம் 45 - http://www.jeyamohan.in/73006

தேவபாகசிரௌதார்சரின் கதை ஐதரேய பிராமணத்தில் உள்ளது. தேவபாகசிரௌதார்சர் தைத்ரிய குருமரபின் தொல்முனிவர் சுருதரின் ஒரே மைந்தர். அவர் காலத்தில் வேதம் பிறந்த ஐதரேயம், கைகௌஷிதகம், தளவகரம், சௌனகம், தைத்ரியம் என்னும் ஐந்து தூய காடுகளில் வைதிகர் கூடி வேதத்தை முற்றோதும் வழக்கம் உருவாகியது.

வேள்விப்பசுவின் கருநிறக் கால்களில் வாயுவும், வெண்ணிற வயிற்றில் வருணனும், செந்நிற நாவில் அனலோனும், கொம்புகளில் யமனும், அமுதூறும் மடியில் சோமனும், விழியில் இந்திரனும், நெற்றியில் சூரியனும், முகத்தில் பிரம்மனும், இதயத்தில் சிவனும், பின்பக்கத்தில் விஷ்ணுவும், யோனியில் திருவும் வாழ்கின்றனர்.

பெருவைதிகரான பத்ருவுக்கும் கன்றுமேய்த்த மலைமகள் ஒருத்திக்கும் பிறந்த கிரிஜன் வேள்விப்பசுவைப் பங்கிடும் முறையை தேவபாகசிரௌதார்சரிடம் கற்கிறான்.

வெண்முகில் நகரம் 50 - http://www.jeyamohan.in/73094

அஸ்தினபுரியின் அரசப்பொறுப்புகளில் இருப்போர்:

வெண்முகில் நகரம் 53 - http://www.jeyamohan.in/73320

வெண்முகில் நகரம் 54 - http://www.jeyamohan.in/73355

முடிதுறப்பவன் மூன்று அடிப்படைகளில் அதை செய்யமுடியும்.

  1. துறவுபூண்டு காடேகும்பொருட்டு முடிதுறப்பது உத்தமம்.
  2. உடல்நலமில்லாமல் முடிதுறப்பது அநிவார்யம்.
  3. அச்சத்தாலோ ஐயத்தாலோ முடிதுறப்பது அதமம்.

வெண்முகில் நகரம் 58 - http://www.jeyamohan.in/73425

வசுமதியோடு (காந்தாரி) திருதராஷ்டிரர் மணந்த‌ காந்தார இளவரசியர் பதின்மர்: சத்யசேனை, சத்யவிரதை, சுதேஷ்ணை, சம்ஹிதை, தேஸ்ரவை, சுஸ்ரவை, நிகுதி, சுபை, சம்படை, தசார்ணை. அணங்கு பீடித்தவள் சம்படை.

தேட வேண்டியவை: