Published using Google Docs
நவக்ரஹ ஸ்லோகம் / Navagraha Slokam in Tamil
Updated automatically every 5 minutes

நவக்ரஹ ஸ்லோகம்

1.        சீலமாய் வாழச் சிரருள்  புரியும் ஞாலம் புகழும், ஞாயீறே போற்றி

சூரியா போற்றி.. சுதந்திரா போற்றி,

விரியா போற்றி, வினைகள் களைவாய்

2.        எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி

திருவருள் தருவாய் சந்திரா போற்றி.. சத்குரு போற்றி,

சங்கடம்  தீர்ப்பாய் சதுரா போற்றி

3.        சிறப்புருமணியே செவ்வாய் தேவே

குறையில்லாதருள்வாய் குணமுடன் வாழ

மங்கலச்செவ்வாய் மலரடிபோற்றி

அங்கரகனே அவதிகள் நீக்கு

4.        இதமுற வாழ இன்னல்கள் நீக்கு

புதபாகவானே பொன்னடி போற்றி

பதந்தருள்வாய் பண்ணொலியானே  

உதவியே அருளும் உத்தமா போற்றி

5.        குணமிகு வியாழக் குரு பகவானே

மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்

ப்ரஹஸ்பதி வியாழக் பரகுரு நேசா

க்ரஹதோஷ மின்றிக் கடாக்ஷித்தருள்வாய்

6.        சுக்கிரமுர்த்தி சுப மிகயீவாய்

வக்கிரமின்றி வரமிகத் தருவாய்

வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே

அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே

7.        சங்கடம் தீர்க்கும் சனி பகவானே

மங்களம் பொங்க மனமைத்தருள்வாய்

சச்சரவின்றிச் சாகா நெறியில்

இச்சகம் வாழ இன்னருள் தா தா

8.        அரவெனும் ராகு அய்யனே போற்றி

கரவா தருள்வாய் கஷ்டங்கள் நிக்கி

ஆக அருள் புரி அனைத்திலும்  வெற்றி

ராகுக் கனியே ரம்மியா போற்றி

9        கேதுத் தேவே கீர்த்தித்திருவே

பாதம் போற்றி பாவம் தீர்ப்பாய்

வாதம் வம்பு வழக்குகள் இன்றி

கேதுத்  தேவே கேண்மையாய் ரக்ஷி